அத்தியாயம் 43
நான் உங்களுக்கு நினைவுபடுத்தவில்லையா? பயப்பட வேண்டாம்; நீங்கள் என் பேச்சைக் கேட்பதில்லை, நீங்கள் இப்படிப்பட்ட சிந்தனையற்ற மனுஷர்களாய் இருக்கிறீர்கள்! நீங்கள் எப்போது என் இருதயத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாவீர்கள்? ஒவ்வொரு நாளும் புதிய வெளிச்சம் காணப்படுகிறது, ஒவ்வொரு நாளும் புதிய ஒளி காணப்படுகிறது. அதை எத்தனை முறை உங்களுக்காகப் பற்றிக் கொண்டீர்கள்? நானே உங்களுக்குச் சொல்லவில்லையா? சீண்டப்பட்டால் மட்டுமே நகரும் பூச்சிகளைப் போல, நீங்கள் இன்னும் செயலற்ற நிலையில் காணப்படுகிறீர்கள், என்னுடன் ஒத்துழைக்கவும், என் பாரத்தைக் கருத்தில் கொள்ளவும் உங்களால் முன்முயற்சி எடுக்க முடிவதில்லை. உங்கள் அனைவரது கலகலப்பான மற்றும் அழகான புன்னகையையும், என் குமாரர்களின் சுறுசுறுப்பான மற்றும் கலகலப்பான நடத்தையையும் நான் பார்க்க விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியாது. மாறாக, நீங்கள் மதியீனராக—அற்பமானவர்களாகவும் மற்றும் முட்டாள்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் தேடுவதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும். தைரியமாகப் பின்தொடருங்கள்! உங்கள் இருதயங்களைத் திறந்து, உங்களுக்குள் என்னை வாழ விடுங்கள். எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருங்கள்! திருச்சபையில் உள்ள சிலர் ஜனங்களை ஏமாற்றுகிறார்கள், மேலும் இந்த வார்த்தைகளுக்கு நீங்கள் எப்போதும் அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும், இல்லையென்றால், உங்கள் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும். எனக்காக எழுந்து நின்று பேச உனக்குத் தைரியம் இருக்கும் வரை—உறுதியுடன் இரு, அவை எல்லாவற்றின் பாரங்களையும் நான் சுமப்பேன், மேலும் நான் உனக்கு அதிகாரம் அளிப்பேன்! நீ என் இருதயத்தைத் திருப்திப்படுத்தும் வரை, நான் எப்போதும் என் புன்னகையையும் என் சித்தத்தையும் உனக்குக் காட்டுவேன். உனக்கு வலுவான முதுகெலும்பு இருக்கும் வரை மற்றும் ஆண் பிள்ளையின் மனநிலையை வெளிப்படுத்தும் வரை, நான் உன்னை ஆதரிப்பேன் மற்றும் உன்னை ஒரு முக்கியமான நிலையில் வைப்பேன். நீ என் முன் வரும்போது, எனக்கு அருகில் நெருங்கி வா. உன்னால் பேச முடியவில்லை என்றால் பயப்பட வேண்டாம். நீ தேடுகிற இருதயத்தைப் பெற்றிருக்கும் வரையில், நான் உனக்கு வார்த்தைகளைத் தருவேன். இனிமையாகத் தொனிக்கும் வார்த்தைகள் எனக்குத் தேவையில்லை, உன் முகஸ்துதியும் எனக்குத் தேவையில்லை; இத்தகைய விஷயத்தை நான் மிகவும் வெறுக்கிறேன். இம்மாதிரியான நபர்களின் மீது தான் நான் அதிகம் முகம் சுளிக்கிறேன். அவர்கள் என் கண்ணில் உள்ள துரும்பைப் போலவும், என் மாம்சத்தில் உள்ள முள்ளைப் போலவும் அகற்றப்பட வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். இல்லையெனில், என் குமாரர்கள் எனக்காக அதிகாரத்தை உபயோகப்படுத்த முடியாது, மேலும் அவர்கள் திணறடிக்கும் கட்டுப்பாட்டிற்கு உட்படுவார்கள். நான் ஏன் வந்திருக்கிறேன்? நான் என் குமாரர்களை ஆதரிக்கவும் ஊக்கப்படுத்தவும் வந்திருக்கிறேன், அதனால் அவர்களின் அடக்குமுறை, கொடுமைப்படுத்துதல், இரக்கமற்ற மனநிலை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் நாட்கள் என்றென்றும் மறைந்துவிடும்!
தைரியமாக இரு. நான் எப்போதும் உன்னுடன் சஞ்சரிப்பேன், உன்னுடன் வாழ்வேன், உன்னுடன் பேசுவேன் மற்றும் உன்னுடன் செயல்படுவேன். பயப்படாதே. பேசுவதற்குத் தயங்காதே. நீங்கள் எப்போதும் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும், பயப்படுகிறவர்களாகவும் இருக்கிறீர்கள். திருச்சபையைக் கட்டுவதில் எந்த பயனும் இல்லாதவர்கள் அகற்றப்பட வேண்டும். இதில் திருச்சபையில் உள்ள, சரியான நிலையில் இல்லாதவர்களும் மற்றும் என் வார்த்தைகளுக்கு ஏற்றபடி செயல்பட முடியாதவர்களும் அடங்குவர், உங்களுடைய அவிசுவாசியான தாயும் தந்தையும் கூடத்தான். நான் அப்படிப்பட்ட காரியங்களை விரும்புவதில்லை. அவை ஒழிக்கப்பட வேண்டும், ஒன்று கூட மீதம் இருக்கக்கூடாது. உன் கைகள் மற்றும் கால்களில் உள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு. உன் சொந்த நோக்கங்களை நீ சோதித்தறியும் வரையிலும், அவை ஆதாயம் மற்றும் இழப்பு, புகழ் மற்றும் செல்வம் ஆகிவற்றைக் குறித்து அல்லது தனிப்பட்ட உறவுகளையும் பற்றிக் கவலைப்படாதவரையிலும், நான் உனக்குத் துணையாக இருப்பேன், விஷயங்களை உனக்குச் சுட்டிக்காட்டி எல்லா நேரங்களிலும் உனக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்குவேன்.
ஆ, என் குமாரர்களே! நான் என்ன சொல்ல வேண்டும்? நான் இவற்றைச் சொன்னாலும், நீங்கள் இன்னும் என் இருதயத்தைக் கருத்தில் கொள்வதில்லை, இன்னும் நீங்கள் மிகவும் பயந்தவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் எதைக் குறித்துப் பயப்படுகிறீர்கள்? நீங்கள் ஏன் இன்னும் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள்? நான் உங்களை விடுவித்திருக்கிறேன், ஆனால் நீங்கள் இன்னும் விடுதலையைப் பெற்றிருக்கவில்லை. இது ஏன்? என்னுடன் அதிகமாகத் தொடர்பு கொள், நான் உனக்குச் சொல்லுவேன். என்னைச் சோதிக்க வேண்டாம். நான் உண்மையானவர். என்னில் எதுவும் பாசாங்கு இல்லை; அனைத்தும் உண்மையானது! நான் சொல்வது மெய்யானதாக இருக்கிறது. நான் என் வார்த்தையில் பின்வாங்க மாட்டேன்.