அத்தியாயம் 89

எனது நோக்கங்களுக்கு ஏற்ப அனைத்தையும் செய்வது எளிதல்ல. இது பாசாங்குக்காக உங்களைக் கட்டாயப்படுத்துவது அல்ல; மாறாக, நான் உலகத்தை சிருஷ்டிப்பதற்கு முன்பு எனது பண்புகளை உனக்கு அளித்தேனா என்பதைப் பொறுத்தது. இவை அனைத்தும் என்னைப் பொறுத்தது. அவை மனிதர்களால் நிறைவேற்றக்கூடியவை அல்ல. நான் யாரை நேசிக்க விரும்புகிறேனோ அவர்களை நான் நேசிக்கிறேன், நான் யாரை முதற்பேறான குமாரன் என்று சொல்லுகிறேனோ, அவனே நிச்சயமாக முதற்பேறான குமாரன். அதுவே மிகச் சரியானது! நீ அதைப் பொய்யாக்க விரும்பலாம், ஆனால் அவ்வாறு செய்வது வீணானது! நீ என்னவாக இருக்கிறாய் என்பதற்காக உன்னை என்னால் அடையாளம் காண முடியாது என்று நீ நினைக்கிறாயா? எனக்கு முன்னால் மட்டும் நீ சில நல்ல நடத்தைகளை வெளிப்படுத்தினால் போதுமா? அது அவ்வளவு எளிமையானதா? அது கண்டிப்பாக அப்படி இல்லை; எனது வாக்குத்தத்தங்களை நீங்கள் பெற்றிருக்க வேண்டும், மேலும் என்னால் நீங்கள் முன்குறிக்கப்பட்டிருக்க வேண்டும். என் முதுகுக்குப் பின்னால் நீ செய்வது என்ன என்பது எனக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா? நீ துன்மார்க்கன்! நீ எனக்கு செய்யும் ஊழியம் முடிந்ததும், அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்கு விரைந்து செல்! நான் அருவருக்கிறேன்; உன்னைப் பார்த்தாலே எனக்கு வெறுப்பு உண்டாகிறது. எனக்காக ஊழியம் செய்பவர்கள், எனக்காகத் தங்களையே விசுவாசமாக அர்ப்பணிக்காதவர்கள், ஒழுக்கங்கெட்டவர்கள், கட்டுப்பாடற்றவர்கள், என்னுடைய நோக்கங்களைப் புரிந்து கொள்ள முடியாத அனைவரும்—உங்கள் ஊழியம் முடிந்தவுடன், விரைவாக என் பார்வையிலிருந்து அகன்று செல்லுங்கள்! இல்லையெனில், நான் உன்னை அகற்றிவிடுவேன்! இவர்கள் இனி எனது வீட்டில் (அதாவது, திருச்சபை) ஒரு கணம் கூட இருக்கக் கூடாது. எனது நாமத்துக்கு நிந்தை வராமலும், எனது கீர்த்தியைக் கெடுக்காமலும் இருக்க அவர்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேற வேண்டும். இந்த ஜனங்கள் அனைவரும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததிகள்; இவர்கள் எனது நிர்வகித்தலை இடையூறு செய்வதற்காக சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தினால் அனுப்பப்பட்டனர். இவர்கள் என் கிரியைக்குத் தொந்தரவு செய்ய வஞ்சகத்தில் தேர்ந்தவர்கள். என் குமாரனே! நீ இதன் வழியாகப் பார்க்க வேண்டும்! அப்படிப்பட்டவர்களுடன் ஐக்கியம் கொள்ளாதே. இந்த வகையான ஜனங்களை நீ பார்க்கும்போது, அவர்களின் பொறிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அவர்களிடமிருந்து சீக்கிரமாக விலகிச் செல்; அது உன் வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும்! கவனமின்றிப் பேசுபவர்கள், சிந்திக்காமல் செயல்படுபவர்கள், கேலி செய்து சிரிப்பவர்கள், அற்பமான அரட்டைகளில் ஈடுபடுபவர்களை நான் மிகவும் வெறுக்கிறேன். அப்படிப்பட்ட ஜனங்கள் யாரும் எனக்கு வேண்டாம்; அவர்கள் அனைவரும் சாத்தானின் இனத்தைச் சேர்ந்தவர்கள்! இவர்கள் காரணமே இல்லாமல் கிண்டல் செய்கிறார்கள். இந்த உயிரினங்கள் என்ன? இவர்கள் முட்டாள்தனமாகப் பேசி தறிகெட்டுத் திரிகிறார்கள். அவர்களுக்கு இன்னும் அவமானமாக இல்லையா? உண்மையில், இந்த வகையான நபர்கள் மிகக் குறைவான மதிப்புடையவர்கள், நான் நீண்ட காலமாக அவர்களைக் கவனித்து அவர்களை விலக்கிவிட்டேன். நான் செய்திருக்கவில்லையென்றால், அவர்கள் ஏன் எனது தண்டித்துத் திருத்தலுக்கு உட்படாமல் திரும்பத் திரும்ப முட்டாள்தனமாக பேசுகிறார்கள்? இவர்கள் உண்மையிலேயே சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததிகள்! இப்போது, இந்த விஷயங்களை நான் ஒவ்வொன்றாக அகற்றத் தொடங்கி விட்டேன். நான் சாத்தானின் சந்ததிகளை எனது முதற்பேறான குமாரர்களாகவும், எனது குமாரர்களாகவும், எனது ஜனங்களாகவும் பயன்படுத்தலாமா? அப்படியானால் நான் குழப்பமடைய மாட்டேனா? கண்டிப்பாக நான் அப்படி செய்ய மாட்டேன். இதைப் பற்றிய தெளிவானப் புரிதல் உங்களுக்கு உள்ளதா?

இன்று நீங்கள் சந்திக்கும் அனைத்தும், நல்லதோ அல்லது கெட்டதோ, அனைத்தும் எனது ஞானமானக் கைகளால் ஏற்பாடு செய்யப்பட்டது; அனைத்தும் என்னால் திட்டமிடப்பட்டு என் கட்டுப்பாட்டில் உள்ளன. இது நிச்சயமாக மனுக்குலத்தால் எளிதில் நிறைவேற்றக்கூடிய ஒன்றல்ல. சிலர் இன்னும் என்னைப் பற்றிக் கவலைப்பட்டுப் பதட்டத்தோடு இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உண்மையிலேயே கவலைப்பட தேவையில்லை! அவர்கள் தங்கள் முக்கியப் பணியைப் புறக்கணிக்கிறார்கள், ஆவிக்குள் நுழைய முற்படாமல், அவர்கள் இன்னும் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறுவதையே விரும்புகிறார்கள். அவர்கள் வீணானதில் நம்பிக்கையாக இருக்கிறார்கள்! அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை, எனினும் இன்னும் எனது சித்தத்தை நிறைவேற்ற விரும்புகிறார்கள்! நீங்கள் என் சார்பாகக் கவலைப்படுகிறீர்கள், ஆனால் நான் கவலைப்படவில்லை. நீ எதைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? எனக்கான உனது கிரியை கடமைக்காகச் செய்யப்படுகிறது, மேலும் நீ அப்பட்டமாகப் பொய் சொல்கிறாய். நான் உனக்குச் சொல்லுகிறேன்! இந்தத் தருணத்தில் இருந்து, உங்களைப் போன்றவர்களை என் வீட்டை விட்டு விரட்டுவேன். அப்படிப்பட்டவர்கள் என் வீட்டில் எனக்கு ஊழியம் செய்யத் தகுதியற்றவர்கள். அவர்கள் தங்கள் செயல்களால் என்னை நிந்திக்கிறதால் நான் அவர்களை வெறுக்கிறேன். “எனக்கு எதிரான தூஷணம் மன்னிக்க முடியாத பாவம்” என்று கூறப்பட்டபோது, இது யாரைக் குறிக்கிறது? இதைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா? இது போன்ற ஒரு நபர் ஏற்கனவே இந்தப் பாவத்தை செய்திருந்தாலும், பிரச்சனை இன்னும் தீவிரமாகவில்லை என்று நம்புகிறான். உண்மையில், இந்தக் குழப்பமான நபர் குருடாகவும் அறிவில்லாமலும் இருக்கிறான், மற்றும் அவனது ஆவி முடக்கப்பட்டும் இருக்கிறான்! நான் உன்னை அகற்றி விடுவேன்! (இது எனக்குச் சாத்தானின் சோதனையாக இருப்பதால், நான் அதை மிகவும் வெறுக்கிறேன், மேலும் இந்த விஷயம் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டு, ஒவ்வொரு முறையும் என்னைக் கோபப்படுத்துகிறது. என்னால் என் கோபத்தை அடக்க முடியாது, யாராலும் அதைத் தடுக்க முடியாது. நேரம் இன்னும் வரவில்லை, இல்லையெனில் நான் அந்த நபரை நீண்ட காலத்துக்கு முன்பே சமாளித்திருப்பேன்!) (இது தற்போது, வெளிநாட்டினர் சீனாவிற்குள் கூட்டமாக வருவார்கள் என்பதை இன்னும் நம்பாதவர்கள் பலர் உள்ளனர் என்ற உண்மையைப் பற்றியது; இப்போதும் அவர்கள் இன்னும் நம்பாதது, என் கோபத்தைக் கிண்டி கொதிக்க வைக்கிறது.)

என் வீட்டிற்குள், என் இருதயத்திற்கு ஏற்றவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்? அதாவது, சிருஷ்டிப்புக்கு முன், என் வீட்டில் என்றென்றும் இருப்பதற்காக எந்த மாதிரியான ஜனங்களை நான் முன்குறித்தேன்? உங்களுக்குத் தெரியுமா? நான் எந்த மாதிரியான ஜனங்களை நேசிக்கிறேன், எந்த மாதிரியான ஜனங்களை வெறுக்கிறேன் என்று நீங்கள் யோசித்ததுண்டா? என் வீடு என்னைப் போன்ற ஒரே சிந்தை கொண்டவர்களுக்கானது, மேலும் என்னுடன் மகிழ்ச்சியான தருணங்களையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொள்பவர்களுக்கானது—வேறுவிதமாகக் கூறினால், ஆசீர்வாதம் மற்றும் கஷ்டம் இரண்டிலும் பங்கு கொள்பவர்களுக்கானது. இந்த ஜனங்கள் அனைவராலும் நான் நேசிப்பதை நேசிக்கவும், நான் வெறுப்பதை வெறுக்கவும் முடியும். நான் வெறுப்பதை அவர்களால் கைவிட முடியும். அவர்களிடம் புசிக்கக் கூடாது என்று நான் சொன்னால், அவர்கள் எனது நோக்கங்களைத் திருப்திப்படுத்த தங்கள் வயிற்றைப் பட்டினி போடத் தயாராக இருக்கிறார்கள். இந்த மாதிரியான நபர் எனக்கு விசுவாசமாக இருப்பதற்கும், எனக்காக தங்களையே அர்ப்பணிப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள், மேலும் என்னுடைய கடினமான முயற்சிகளுக்காக அக்கறை காட்டவும், எனக்காக எப்போதும் கடினமாக உழைக்கவும் முடியும். எனவே, அத்தகையவர்களுக்கு, நான் முதற்பேறான குமாரர்களின் அந்தஸ்தை வழங்குகிறேன், என்னிடம் உள்ள அனைத்தையும் அவர்களுக்குக் கொடுக்கிறேன்: எல்லா திருச்சபைகளையும் வழிநடத்தும் திறன் என்னிடம் உள்ளது, இதை நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன்; என்னிடம் ஞானம் இருக்கிறது, இதையும் நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன்; சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக என்னால் வேதனையை அனுபவிக்க முடியும், மேலும் இந்த ஜனங்ளுக்கு நான் மனஉறுதியை அளித்து, அவர்கள் என் பொருட்டு எல்லாவற்றையும் சகிக்கச் செய்ய முடியும்; என்னிடம் நல்ல பண்புகள் உள்ளன, நான் அவர்களுக்கு இவற்றைக் கொடுப்பேன், அவர்களை என்னைப் போலவே, சிறிதும் வித்தியாசம் இல்லாமல் உருவாக்குவேன், அதனால் மற்றவர்கள் இந்த ஜனங்களைப் பார்க்கும்போது என்னைப் பார்ப்பார்கள். இப்போது, இவர்களை எனது முழுமையான தெய்வீகத்தன்மையின் ஒரு அம்சத்தின்படி வாழ வைப்பதற்கு, எனது முழுமையான தெய்வீகத்தன்மையை இவர்களுக்குள் வைக்கிறேன், இதனால் இவர்கள் என்னை முழுமையாக வெளிப்படுத்த முடியும்; இதுதான் எனது நோக்கம். வெளிப்புறமான காரியங்களில் என்னைப் போல இருக்க முயலாதீர்கள் (என்னைப் போலவே புசிப்பது, அல்லது என்னைப் போலவே ஆடைகளை அணிவது); அதெல்லாம் பயனற்றது, நீங்கள் அப்படிப்பட்ட காரியங்களை நாடினால், உங்களை நீங்களே அழித்துக் கொள்ளத்தான் செய்வீர்கள். ஏனென்றால், வெளிப்புறமாக என்னைப் பின்பற்ற முற்படுபவர்கள் சாத்தானின் கையாட்கள், மேலும் அந்த வகையான முயற்சி சாத்தானின் திட்டமாகும்; அது சாத்தானின் லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது. நீ என்னைப் போலவே இருக்க விரும்புகிறாய், ஆனால் நீ தகுதியானவனா? உன்னைக் காலால் நசுக்கிக் கொன்று விடுவேன்! எனது கிரியை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது. விரைவாக, எனது அடிச்சுவடுகளைப் பின்பற்று!

முந்தைய: அத்தியாயம் 88

அடுத்த: அத்தியாயம் 90

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக