அத்தியாயம் 20

பரிசுத்த ஆவியானவருடைய கிரியை வேகமாக முன்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது, உங்களை முற்றிலும் புதிய உலகத்திற்குள் கொண்டு வருகிறது, அதாவது ராஜ்யத்தின் வாழ்க்கையின் யதார்த்தம் உங்கள் முன் தோன்றியிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் சொன்ன வார்த்தைகள் உன் உள்ளத்தின் ஆழத்தை நேரடியாக வெளிப்படுத்தின, மேலும் ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் முன் காட்சி தோன்றிக்கொண்டிருக்கின்றன. நீதியின் மீது பசியும் தாகமும் உள்ளவர்கள் மற்றும் கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் நிச்சயமாகவே சீயோனில் மீந்திருந்து புதிய எருசலேமில் தங்குவார்கள்; அவர்கள் என்னுடன் சேர்ந்து இருக்கும்போது, நிச்சயமாகவே மகிமையையும் கனத்தையும் பெறுவார்கள் மற்றும் அழகான ஆசீர்வாதங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். ஆவிக்குரிய உலகில் நீங்கள் இதுவரைப் பார்த்திராத சில மறைபொருட்கள் தற்போது உள்ளன, ஏனென்றால், உங்கள் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படவில்லை. எல்லா விஷயங்களும் முற்றிலும் அற்புதமானவை; அற்புதங்கள் மற்றும் அதிசயங்கள், மற்றும் ஜனங்கள் நினைத்துக் கூடப் பார்க்காத விஷயங்கள், படிப்படியாக வந்தடையும். சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய மாபெரும் அற்புதங்களைக் காண்பிப்பார், இதனால் பிரபஞ்சமும் பூமியின் எல்லைகளும் மற்றும் எல்லா தேசங்களும் எல்லா ஜனங்களும் தங்கள் சொந்தக் கண்களால் அவற்றைப் பார்க்க முடியும், மேலும் எனது மகத்துவம், நீதி மற்றும் சர்வவல்லமை எங்கு இருக்கிறது என்பதையும் பார்க்க முடியும். நாளானது சமீபித்திருக்கிறது! இது மிகவும் முக்கியமான தருணம்: நீங்கள் பின்வாங்கிவிடுவீர்களா அல்லது ஒருபோதும் திரும்பிப் பார்க்காமல், இறுதிவரை விடாமுயற்சியுடன் இருப்பீர்களா? எந்தவொரு நபரையோ, நிகழ்வையோ அல்லது பொருளையோ பார்க்க வேண்டாம்; உலகத்தையோ, உங்கள் கணவர்களையோ, உங்கள் குழந்தைகளையோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய உங்கள் சந்தேகங்களையோ பார்க்காதீர்கள். என் அன்பையும் இரக்கத்தையும் பாருங்கள், உங்களை ஆதாயப்படுத்திக்கொள்ள நான் எத்தகைய விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறேன் என்பதோடு கூட நான் எப்படிப்பட்டவராக இருக்கிறேன் என்பதையும் பாருங்கள். இந்த விஷயங்கள் உங்களை ஊக்குவிக்கப் போதுமானவையாக இருக்கும்.

காலம் மிகவும் சமீபித்திருக்கிறது, என் சித்தம் எல்லாவற்றிலும் துரிதமாய் நிறைவேற வேண்டும். என் நாமத்தில் இருப்பவர்களை நான் கைவிடமாட்டேன்; நான் உங்கள் அனைவரையும் மகிமைக்குள் கொண்டு வருவேன். இருப்பினும், இப்பொழுது பார்க்கும்போது, இது ஒரு முக்கியமான தருணம்; அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாதவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் புலம்புவார்கள் மற்றும் வருத்தப்படுவார்கள், ஆனாலும், இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்கள் ஏற்கனவே தாமதமாகியிருக்கும். இப்போது, திருச்சபையைக் கட்ட முடியுமா மற்றும் நீங்கள் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய முடியுமா இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு உங்களது வளர்ச்சிகள் ஒரு நடைமுறை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உண்மையில், உன் கீழ்ப்படிதலானது நீ இணங்கண்டு தெரிந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றாகும்; உன்னால் ஒரு நபருக்குக் கீழ்ப்படிய முடிந்தாலும், மற்றொருவருக்குக் கீழ்ப்படிவது உனக்குக் கடினமாக உள்ளது. உண்மையிலேயே, நீங்கள் மனுஷீகக் கருத்துக்களை நம்பியிருக்கும் போது, நீங்கள் கீழ்ப்படிதலுடன் இருக்க வாய்ப்பே இல்லை. இருப்பினும், தேவனுடைய எண்ணங்கள் எப்பொழுதும் மனுஷனுடைய எண்ணங்களை மிஞ்சுகிறதாய் இருக்கின்றன! கிறிஸ்து மரணபரியந்தம் கீழ்ப்படிந்து, சிலுவையில் மரித்தார். அவர் எந்த நிலைமைகளையும் எந்தக் காரணங்களையும் பற்றி எதுவும் கூறவில்லை; அது தம்முடைய பிதாவின் சித்தமாக இருந்தபடியால், அவர் மனமுவந்து கீழ்ப்படிந்தார். உன் கீழ்ப்படிதலின் தற்போதைய நிலை மிகவும் குறைவானதாகவே உள்ளது. நான் உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன், கீழ்ப்படிதல் என்பது ஜனங்களுக்குக் கீழ்ப்படிவது அல்ல. மாறாக, பரிசுத்த ஆவியானவரின் செயலுக்கும் தேவனுக்கும் கீழ்ப்படிவதாகும். என் வார்த்தைகள் உங்களைப் புதுப்பித்து, உங்களை உள்ளிருந்து மாற்றுகின்றன. அவை இல்லையென்றால், யாருக்கு யார் கீழ்ப்படிவார்கள்? நீங்கள் அனைவரும் மற்றவர்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள். நீங்கள் நேரத்தை செலவு செய்து கீழ்ப்படிதல் என்றால் என்ன, கீழ்ப்படிதலுள்ள ஜீவிதத்தை நீங்கள் எவ்வாறு ஜீவிக்க முடியும் என்பவற்றைக் குறித்து சிந்திக்க வேண்டும். நீங்கள் எனக்கு முன்பாக வர வேண்டும் மற்றும் இந்த விஷயத்தைக் குறித்து கலந்துரையாட வேண்டும். படிப்படியாக நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். இதன் மூலம் உங்களுக்குள் இருக்கும் கருத்துகளையும் விருப்பங்களையும் விட்டுவிடுவீர்கள். நான் விஷயங்களைச் செய்யும் இந்த வழியை ஜனங்கள் முழுமையாகப் புரிந்துகொள்வது கடினமாகும். இது ஜனங்கள் எந்தெந்த வழிகளில் நல்லவர்களாக அல்லது திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது அல்ல; நான் தேவனுடைய சர்வவல்லமையை வெளிப்படுத்த மிகவும் அறியாமையில் உள்ளவர்களையும் மிகவும் அற்பமானவைகளையும் கூட பயன்படுத்துகிறேன், அதே நேரத்தில் சில ஜனங்களுடைய எண்ணங்கள், கருத்துகள் மற்றும் விருப்பங்களை மாற்றியமைக்கிறேன். தேவனுடைய கிரியைகள் மிகவும் அதிசயமானவை; அவை மனித மனதின் புரிந்துகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டவை!

நீ உண்மையில் எனக்காகச் சாட்சி பகரும் ஒருவனாக மாற விரும்பினால், நீ சத்தியத்தை முற்றிலும் தூய முறையில் பெற வேண்டும், தவறான முறையில் அல்ல. எனது வார்த்தைகளைக் கைக்கொள்ளுவதில் நீ அதிக கவனம் செலுத்த வேண்டும், மேலும் உனது வாழ்க்கையை விரைவாகப் பக்குவமடையச் செய்ய நாட வேண்டும். விலைமதிப்பற்ற பொருட்களைத் தேடி அலைய வேண்டாம்; உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அவைகளால் எந்தப் பயனும் இல்லை. உங்கள் வாழ்க்கை முதிர்ச்சியடைந்தவுடன் மட்டுமே நீங்கள் கட்டி எழுப்பப்பட முடியும்; அப்போதுதான் நீங்கள் ராஜ்யத்திற்குள் அழைத்துக்கொண்டு வரப்பட முடியும்—இது மறுக்க முடியாததாகும். நான் உன்னுடன் இன்னும் சிலவற்றைப் பேச விரும்புகிறேன்; நான் உனக்கு அநேக விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன், ஆனால் உண்மையில் நீ எவ்வளவு புரிந்துகொள்கிறாய்? நான் சொல்வதில் எவ்வளவு உன் வாழ்க்கையில் யதார்த்தமாகி இருக்கிறது? நான் சொல்வதில் எந்த அளவிற்கு நீ வாழ்ந்து காட்டுகிறாய்? மூங்கில் கூடையால் தண்ணீரை இறைக்க முயற்சிக்காதே; நீ இறுதியில் வெறுமையை மட்டுமே அல்லாமல் வேறு எதையும் அடைய மாட்டாய். மற்றவர்கள் மிக எளிதாக உண்மையான பலன்களைப் பெற்றுள்ளனர்; நீ பெற்றிருக்கிறாயா? நீ நிராயுதபாணியாகவும் ஆயுதங்களைக் கொண்டு செல்லாமலும் இருந்தால் உன்னால் சாத்தானை ஜெயிக்க முடியுமா? உன்னுடைய வாழ்க்கையில் எனது வார்த்தைகளை நீ அதிகம் சார்ந்திருக்க வேண்டும், ஏனெனில், அவை தற்காப்புக்கான சிறந்த ஆயுதங்களாகும். நீ இவைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்: என்னுடைய வார்த்தைகளை உன்னுடைய சுயமாக எடுத்துக்கொள்ளாதே; நீ அவைகளைப் புரிந்து கொள்ளாமலும், நீ அவைகளைத் தேடாமலும், நீ அவைகளைக் கண்டுபிடிக்கவோ அல்லது அவைகளைப் பற்றி என்னுடன் பேசவோ முயற்சிக்காமலும் இருந்து, அதற்கு மாறாக, சுய திருப்தி மற்றும் தன்நிறைவுடன் இருப்பாயானால், நீ இழப்பைச் சந்திப்பாய். இப்போதே நீ இந்தப் பாடத்திலிருந்து கற்றுக்கொண்டு, நீ உன் சுயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய சொந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய மற்றவர்களின் பலத்தை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். வெறுமனே நீ விரும்புவதையெல்லாம் செய்ய வேண்டாம். காலம் எந்த மனுஷனுக்காகவும் காத்திருப்பதில்லை. உன் சகோதர சகோதரிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது; அவர்கள் அனைவரும் மாற்றத்தை அனுபவிக்கிறார்கள் மற்றும் நாள்தோறும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உன்னுடைய சகோதர சகோதரிகளின் பெலன் அதிகரிக்கிறது, இது ஒரு மிகப்பெரிய விஷயமாகும்! இறுதி எல்லைக் கோட்டிற்கு விரைந்து செல்; யாரும் யாருக்கும் உதவ முடியாது. என்னுடன் ஒத்துழைக்க உன் சொந்த உள்ளான முயற்சிகளை மேற்கொள். தரிசனங்களைப் பெற்றிருப்பவர்கள், முன்னோக்கிச் செல்வதற்கான வழியைப் பெற்றிருப்பவர்கள், மனம் தளராதவர்கள், எப்பொழுதும் முன்னோக்கிப் பார்ப்பவர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி ஜெயங்கொள்பவர்களாய் இருப்பதற்கான உறுதியைப் பெற்றிருக்கிறார்கள். இது ஒரு முக்கியமான தருணம். மனமுடைந்துபோகாமலும் சோர்வடையாமலும் இருக்கும்படிக்கு உறுதிப்படுத்திக் கொள்; நீ எல்லாவற்றிலும் முன்னோக்கிப் பார்க்க வேண்டும், பின்வாங்க வேண்டாம். நீ எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும், எல்லாப் பிணைப்புகளையும் கைவிட்டுவிட்டு, உன் முழு பலத்துடன் பின்தொடர வேண்டும். உன்னில் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும், நீ இறுதிவரை விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்; இதுவே நீ புகழப்படத்தக்கவனாக மாறுவதற்கான ஒரே வழியாகும்.

முந்தைய: அத்தியாயம் 19

அடுத்த: அத்தியாயம் 21

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக