அத்தியாயம் 6

தேவன் பேசியவைகளை வாசிக்கும்போது ஜனங்கள் திகைத்துப் போகிறார்கள், மற்றும் ஆவிக்குரிய உலகில் மனுஷனால் இயலாத ஒரு பெரிய காரியத்தை தேவன் செய்திருக்கிறார் என்றும், அதை நேரடியாக தேவனே நிறைவேற்ற வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். எனவே, மனுகுலத்தின் மீது, தேவன் மீண்டும் ஒருமுறை சகிப்புத்தன்மை கொண்ட வார்த்தைகளைப் பேசுகிறார். அவர்கள் தங்கள் இருதயங்களில் முரண்படுகிறார்கள்: “தேவன் இரக்கம் மற்றும் அன்பு கொண்ட தேவன் அல்ல, அவர் மனுஷனைத் தாக்கி வீழ்த்தும் தேவனாக இருக்கிறார். அவர் ஏன் நம்மிடம் சகிப்புத்தன்மை காட்டுகிறார்? தேவன் மீண்டும் வழிமுறைக்குள் மாறிவிட்டார் என்பதாலா?” இந்தக் கருத்துக்கள், இந்தச் சிந்தனைகள், அவர்களின் இருதயங்களில் நுழையும்போது, அவற்றிற்கெதிராகப் போராடுவதற்கு அவர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். ஆனால் தேவனின் கிரியை சிறிது காலம் சென்ற பிறகு, பரிசுத்த ஆவியானவர் திருச்சபையில் பெரிய கிரியைகளைச் செய்கிறார், எல்லோரும் தங்கள் காரியங்களைச் செய்யத் தொடங்குகிறார்கள், எல்லா ஜனங்களும் தேவனின் வழிமுறைக்குள் பிரவேசிக்கிறார்கள், ஏனெனில், தேவன் சொல்வதிலும், செய்வதிலும், யாரும் பரிபூரணமற்ற எதனையும் பார்க்க இயலாது. துல்லியமாக தேவனின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தவரையில், சிறிதளவு அறிவுகூட எவருக்கும் இல்லை. தேவன் கூறியவாறு: “வானத்தின் கீழுள்ள எல்லாவற்றிலும், என் கரங்களில் இல்லாதவர் யார்? என் வழிநடத்துதலின் படி செயல்படாதவர் யார்?” இருப்பினும், நான் உங்களுக்குச் சில ஆலோசனைகளைச் சொல்கிறேன்: உங்களுக்குத் தெளிவில்லாத காரியங்களில், உங்களில் எவரும் எதுவும் சொல்லவோ, செய்யவோ கூடாது. நான் ஏன் இதைச் சொல்வது உனது விசுவாசத்தை குறைப்பதற்காக அல்ல, மாறாக உனது செயல்களில் தேவனின் வழிநடத்துதலை நீ பின்பற்றுவதற்கு உனக்கு உதவுவதற்கேயாகும். “பரிபூரணமின்மை” பற்றி நான் குறிப்பிட்டதனால், எந்தவொரு காரணத்திற்காகவும், நீ மனம் தளரவோ அல்லது சந்தேகப்படவோ கூடாது; எனது நோக்கம் என்னவென்றால் நீ தேவனின் வார்த்தைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை முக்கியமாக உனக்கு நினைவூட்டுவதேயாகும். “ஆவியானவரின் விஷயங்களைப் பற்றி புலனுணர்வுடன் இருங்கள், மற்றும் என் ஆவி மற்றும் என் இருப்பு, மற்றும் என் வார்த்தை மற்றும் என் இருப்பு ஆகியவற்றைப் பிரிக்க முடியாத முழுமையாகக் கருதும் திறன் கொண்ட என் வார்த்தையில் கவனம் செலுத்துங்கள், இதனால் எல்லா ஜனங்களும் என் முன்னிலையில் என்னைத் திருப்திப்படுத்த முடியும்.” என்று சொல்லும் தேவனின் வார்த்தைகளை வாசிக்கும்போது, ஜனங்கள் மீண்டும் திகைத்துப் போகிறார்கள். நேற்று, தேவனின் எச்சரிக்கும் வார்த்தைகளான, அவரின் சகிப்புத்தன்மை பற்றிய வார்த்தைகளை அவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்—ஆனால் இன்று, தேவன் திடீரென்று ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி பேசுகிறார். என்ன நடக்கிறது? தேவன் பேசும் முறையை ஏன் மாற்றிக்கொண்டே இருக்கிறார்? இவை எல்லாம் பிரிக்கமுடியாத முழுமையாக ஏன் கருதப்பட வேண்டும்? தேவனின் வார்த்தைகள் நடைமுறையானவை அல்ல என்பதாலா? அவருடைய வார்த்தைகளைக் கூர்ந்து படித்த பிறகு, தேவனின் மாம்சமும், அவருடைய ஆவியானவரும் பிரிக்கப்பட்டால், அந்த மாம்சமானது மாம்சத்திற்கேற்ற பண்புகளைக் கொண்ட ஒரு மனித சரீரமாக மாறுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது—இதனை ஜனங்கள் நடமாடும் சவம் என்று குறிப்பிடுகின்றனர். மனுவுருவான மாம்சமானது ஆவியானவரிடமிருந்து வருகிறது: அவர் ஆவியானவரின் உடம்போடு கூடிய உருவமாவார், அவரது வார்த்தையே மாம்சமாகிறது. வேறுவகையில் கூறுவதானால், தேவன் தாமே அந்த மாம்சத்தில் வாழ்கிறார். அவரது ஜீவனிலிருந்து தேவனின் ஆவியானவர் பிரிக்கப்பட்டதன் தீவிரத்தன்மை அவ்வாறானதாகும். இதன் விளைவாக, அவர் மனுஷர் என்று அழைக்கப்பட்டாலும், அவர் மனுகுலத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் மனுஷப் பண்புகளற்றவர், அவர் தேவன் அங்கீகரிக்கும் ஆள்தத்துவமான, தேவனே தம்மையே தரித்துக்கொண்ட ஆள்தத்துவமாக இருக்கிறார். தேவனின் வார்த்தை தேவனின் ஆவியானவருக்கு உருக்கொடுக்கிறது, மேலும், அவரது வார்த்தை மாம்சத்தில் நேரடியாக வெளிப்படுத்தப்படுகிறது—மேலும், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்றும் அவர் மிகவும் நடைமுறையான தேவன் என்பதையும், இவ்வாறு தேவன் இருப்பதை நிரூபித்து, தேவனுக்கு விரோதமான மனிதனின் கலகத்தன்மையின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார் என்பதையும் இது காட்டுகிறது. தேவனை அறிவதற்கான பாதையை ஜனங்களுக்குச் சொன்ன பிறகு, விஷயத்தின் மறுபக்கத்திற்கு திரும்பி, அவர் மீண்டும் தலைப்பை மாற்றுகிறார்.

“அங்குள்ள அனைத்தின் மீதும் நான் கால் பதித்துள்ளேன், அண்டத்தின் பரந்த விரிவாக்கம் முழுவதையும் நான் பார்த்துள்ளேன், மற்றும் மனுஷர்களிடையே உள்ள இனிப்பையும் கசப்பையும் ருசித்துக்கொண்டே, நான் அனைத்து ஜனங்களிடையேயும் நடந்துள்ளேன்.” எளிமையாக இருந்தாலும், இந்த வார்த்தைகளை மனுஷர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. தலைப்பு மாறிவிட்டது, ஆனால் அதன் சாராம்சத்தில், அது அப்படியே உள்ளது: அது இன்னும் மனுவுருவான தேவனை ஜனங்கள் அறிய உதவுகிறது. மனுஷர்களிடையே உள்ள இனிப்பையும் கசப்பையும் ருசித்திருப்பதாக தேவன் ஏன் கூறுகிறார்? அனைத்து ஜனங்களிடையேயும் நடந்துள்ளேன் என்று அவர் ஏன் கூறுகிறார்? தேவன் ஆவியானவர், மற்றும் அவர் மனுஷரூபத்தில் உள்ளவராயும் இருக்கிறார். மனுஷரூபத்தின் வரம்புகளுக்குக் கட்டுப்படாத ஆவியானவர் அங்குள்ள அனைத்தின் மீதும் கால் பதிக்க முடியும், இது ஆவியானவர் அண்டத்தின் பரந்த விரிவாக்கம் முழுவதையும் பார்க்க முடியும், இது, தேவனின் ஆவியானவர் அனைத்து அண்டங்களையும் நிரப்புகிறார், அவர் பூமியின் ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவம் வரை பரவுகிறார், எதுவும் தேவன் தம்முடைய கரத்தால் ஏற்பாடு செய்யப்படாமல் இல்லை மற்றும் தேவனின் அடிச்சுவடுகளைக் காணமுடியாத இடமே இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆவியானவர் மாம்சமாக மாறி மனுஷனாகப் பிறந்தாலும், அந்த ஆவியானவர் இருப்பது அனைத்து மனுஷரின் தேவைகளையும் நிராகரிக்காது; தேவனுடைய ஆள்தத்துவமானவர் சாதாரணமாக மனுஷன் செய்கிறது போலவே உண்பது, தாமாகவே உடுத்திக்கொள்வது, உறங்குவது போன்று சாதாரணமாகவே வசிக்கிறார். ஆயினும், அவரது உள் சாராம்சம் வேறு என்பதால், அவர் பேசுகிற அதே “மனுஷன்” போன்றவர் அல்ல. அவர் என்னதான் மனுஷர்களிடையே துன்பம் அனுபவித்தாலும், அந்தத் துன்பத்தின் காரணமாக அவர் ஆவியானவரைக் கைவிடுவதில்லை. அவர் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும், அந்த ஆசீர்வாதங்களின் காரணமாக அவர் ஆவியானவரை மறப்பதில்லை. ஆவியானவரும் ஆள்தத்துவமானவரும் அமைதியான உறவில் பணிசெய்கிறார்கள். ஆவியானவரையும், ஆள்தத்துவத்தையும் பிரிக்க முடியாது, அல்லது அவர்கள் எப்பொழுதும் பிரிக்கப்பட்டிருக்கவில்லை, ஏனெனில், ஆள்தத்துவம் என்பது ஆவியானவரின் உடம்போடு கூடிய உருவமாகும், அவர் ஆவியானவரிடமிருந்து வருகிறார், அந்த ஆவியானவருக்கு ஓர் உருவமும் உண்டு. இவ்வாறு, எல்லைக்கு அப்பாற்பட்ட நிலை என்பது மாம்சத்தில் உள்ள ஆவியானவருக்கு சாத்தியமற்றதாகும்; அதாவது, ஆவியானவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் செய்ய இயலாதவர், அதாவது, ஆவியானவரால் மனித சரீரத்தை விட்டுப் பிரிந்து செல்ல முடியாது. அவர் மாம்ச சரீரத்தை விட்டு விலகினால், தேவனின் மனுஷரூபமெடுத்தல் என்பது அதன் அனைத்து அர்த்தத்தையும் இழக்கும். ஆவியானவர் மனித சரீரத்தில் முழுமையாக வெளிப்படுத்தப்படும்போது மட்டுமே, நடைமுறை தேவனை மனுஷனால் அறியமுடியும், அப்போதுதான் தேவனின் சித்தம் நிறைவேற்றப்படும். மாம்ச சரீரத்தையும், ஆவியானவரையும் தனித்தனியாக மனுஷனுக்கு அறிமுகப்படுத்திய பின்னரே, மனுஷனின் குருட்டுத்தன்மையையும், கீழ்ப்படியாமையையும் தேவன் சுட்டிக்காட்டுகிறார். “இருப்பினும், மனுஷன் என்னை ஒருபோதும் உண்மையாக அறிந்ததில்லை, என் பயணத்தின்போது ஒருபோதும் அவன் என்னைக் கவனித்ததில்லை.” ஒருபுறம், மாம்ச சரீரத்தில் இரகசியமாக ஒளிந்து கொண்டிருப்பதாக தேவன் கூறுகிறார், ஜனங்கள் பார்க்கும்படியாக எந்தவொரு இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயத்தினையும் ஒருபோதும் அவர் செய்வதில்லை; மறுபுறம், மனுஷன் அவரை அறியவில்லை என்று அவர் புகார் செய்கிறார். இதில் எந்த முரண்பாடும் இல்லை. உண்மையில், விளக்கமான கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த இரண்டு பக்கங்களிலிருந்தும் தேவன் தமது நோக்கங்களை அடைகிறார் என்பதைப் பார்ப்பது சிரமம் அல்ல. தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பிக்க வேண்டுமென்றால், அவர் பெரிய கிரியைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் தன் சொந்த வாயால், வெறுமனே ஜனங்களை மரணத்திற்குச் சபிப்பார், அவர்கள் உடனடியாக மரணமடைவார்கள், இதனால் அனைத்து ஜனங்களும் நம்புவார்கள்—ஆனால் மாம்சமாக மாறுவதில் உள்ள தேவனின் நோக்கத்தை இது அடையவில்லை. உண்மையிலேயே தேவன் இவ்வாறு செயல்பட்டிருந்தால், அவர் இருப்பதை மனுஷனால் ஒருபோதும் உணர்வுபூர்வமாக நம்ப முடிந்திருக்காது. அவர்கள் உண்மையான விசுவாசத்திற்கு தகுதியில்லாதவர்களாக இருந்திருப்பார்கள், மேலும், பிசாசை தேவன் என்று தவறாக நினைத்திருந்திருப்பார்கள். மிக முக்கியமாக, தேவனின் மனநிலையை மனுஷனால் ஒருபோதும் அறிய முடியாது—மற்றும் இது தேவனுடைய ஆள்தத்துவம் மாம்சத்தில் இருப்பதன் முக்கியத்துவத்தின் ஓர் அம்சம் இல்லையா? ஜனங்கள் தேவனை அறிய முடியாதவர்களாக இருந்தால், பின்னர் அந்தக் கற்பனை தேவன், அந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவன், என்னென்றும் மனுஷர்களிடையே ஆதிக்கம் செலுத்தியிருப்பார். மேலும், இதில் ஜனங்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களால் ஆட்கொள்ளப்படமாட்டார்களா? இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், அது சாத்தானாகவோ, ஆதிக்கம் செலுத்தும் பிசாசாகவோ இருக்காதா? “நான் அதிகாரத்தைத் திரும்பப் பெற்றேன் என்று ஏன் சொல்கிறேன்? மனுஷரூபத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்று ஏன் நான் சொல்கிறேன்?” தேவன் மாம்சமாக மாறும் தருணமே, அவர் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் தருணமாகும். மேலும், அது அவருடைய தெய்வீகத்தன்மை நேரடியாகச் செயல்பட வெளிப்படுகிற நேரமும் ஆகும். எல்லா ஜனங்களும் படிப்படியாக நடைமுறை தேவனை அறிந்துகொள்கிறார்கள், இதனால் அவர்களின் இருதயங்களில் சாத்தானுக்கு உள்ள இடத்தை முற்றிலுமாக அகற்றிவிட்டு, அவர்களின் இருதயங்களில் தேவனுக்கு என்று ஆழமான இடத்தைக் கொடுக்கிறார்கள். கடந்த காலத்தில், ஜனங்கள் தங்கள் மனதில், கண்ணுக்குத் தெரியாத மற்றும் கண்ணுக்குப் புலப்படாத தேவனாக, சாத்தானின் சாயலில் தேவனைப் பார்த்தார்கள்; ஆனாலும், அவர் இருப்பதை நம்பினது மட்டுமல்லாமல், பிசாசு பிடித்தவர்களின் அருவருப்பான முகங்கள் போன்ற அனைத்து விதமான அடையாளங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தி, பல இரகசியங்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டவராக அவர்கள் இந்தத் தேவனை நம்பினார்கள். ஜனங்களின் மனதில் இருக்கும் தேவன் தேவனின் சாயல் அல்ல, ஆனால் தேவனைத் தவிர வேறொன்றின் சாயல் என்பதை இது போதுமான அளவு நிரூபிக்கிறது. 0.1 சதவீத ஜனங்களின் இருதயங்களை மட்டுமே ஆட்கொள்ள விரும்புவதாக தேவன் கூறியுள்ளார். இதுவே அவர் மனுஷரிடம் கேட்கும் மிக உயர்ந்த தரநிலையாகும். அவற்றின் மேற்பரப்பில் உள்ளதைத் தாண்டி, இந்த வார்த்தைகளுக்கு ஒரு நடைமுறையான பக்கமும் உள்ளது. அது இவ்வாறு விளக்கப்படாவிட்டால், தேவன் அவைகளைப் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொள்வது போலவும், அவற்றைப் பற்றிய தேவனின் தேவைகள் குறைவாக இருப்பதாகவும் ஜனங்கள் எண்ணியிருந்திருப்பார்கள். இது மனுஷனின் மனநிலையல்லவா?

மேற்கூறியவற்றையும், கீழே உள்ள பேதுருவின் உதாரணத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம், உண்மையில் பேதுரு மற்ற எவரையும்விட தேவனை நன்றாக அறிந்திருந்தான் என்பதை ஒருவர் காண்பார், ஏனெனில், அவனால் கற்பனை தேவனை புறக்கணிக்கவும், நடைமுறை தேவனின் அறிவைப் பின்தொடரவும் முடிந்தது. அவனுடைய பெற்றோர்கள் தேவனை எதிர்த்த பிசாசுகளாக எவ்வாறு இருந்தார்கள் என்பதைப் பற்றி ஏன் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது? பேதுரு தேவனை அவனுடைய இருதயத்தில் பின்தொடரவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. அவனது பெற்றோர்கள் கற்பனை தேவனின் பிரதிநிதிகள்; இதுதான் தேவன் அவர்களைக் குறிப்பிடுவதன் நோக்கமாகும். பெரும்பாலான ஜனங்கள் இந்த உண்மையை அதிகம் கவனிப்பதில்லை. மாறாக, அவர்கள் பேதுருவின் ஜெபங்களில் கவனம் செலுத்துகிறார்கள். சிலருக்கு, பேதுருவின் ஜெபங்கள் எப்பொழுதும் அவர்களின் உதடுகளில் இருக்கும், அவர்கள் மனதில் நிலையாக இருக்கும், ஆனால் அவர்கள் ஒருபோதும் கற்பனை தேவனை பேதுருவின் அறிவோடு ஒப்பிட மாட்டார்கள். பேதுரு ஏன் தன் பெற்றோருக்கு எதிராகத் திரும்பி தேவனின் அறிவைத் தேடினான்? தோல்வியுற்றவர்களின் படிப்பினைகளை கொண்டு, பேதுரு ஏன் தன்னைத் தானே தூண்டினான்? காலங்காலமாக தேவனை நேசித்த அனைவரின் விசுவாசத்தையும் அன்பையும் அவன் ஏன் தன்வயப்படுத்தினான்? எல்லா நேர்மறையான விஷயங்களும் தேவனிடமிருந்து வருகின்றன மற்றும் அவை சாத்தானால் செயல்படுத்தப்படாமல் அவரிடமிருந்து நேரடியாக வெளியிடப்படுகின்றன என்பது பேதுருவிற்குத் தெரியவந்தது. அவன் அறிந்த தேவன் நடைமுறை தேவன் என்பதையும், அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவன் இல்லை என்பதையும் இது காட்டுகிறது. காலங்காலமாக தேவனை நேசித்த அனைவரின் விசுவாசத்தையும் அன்பையும் தன்வயப்படுத்துவதில் பேதுரு கவனம் செலுத்தினான் என்று ஏன் சொல்லப்படுகிறது? எல்லாக் காலங்களிலும் ஜனங்களின் தோல்விக்கு முக்கியக் காரணம், அவர்களிடம் விசுவாசமும் அன்பும் மட்டுமே இருந்தது, ஆனால் அவர்கள் நடைமுறை தேவனை அறிய முடியாதவர்களாக இருந்தனர் என்பதை இதிலிருந்து பார்க்க முடியும். இதன் விளைவாக, அவர்களது விசுவாசம் தெளிவற்றதாகவே இருந்தது. யோபு தேவனை அறிந்தவன் என்று சொல்லாமல், தேவன் ஏன் யோபுவின் விசுவாசத்தைப் பற்றி பலமுறை குறிப்பிடுகிறார், ஏன் யோபு பேதுருவுக்குச் சமமானவன் அல்ல என்று தேவன் கூறுகிறார்? யோபுவின் வார்த்தைகள்—“என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது”—அவன் விசுவாசத்தை மட்டுமே கொண்டிருந்தான் அவனுக்கு தேவனைப் பற்றிய அறிவு இல்லை என்பதையே இது காட்டுகிறது. “பேதுருவுடைய பெற்றோரின் மாறுபட்ட தனிப்பண்பானது என்னுடைய அன்பான இரக்கம் மற்றும் கருணை பற்றிய அதிக அறிவை அவனுக்குக் கொடுத்தது” என்ற வார்த்தைகள் பெரும்பாலான மனுஷர்களிடம் பல கேள்விகளைத் தூண்டும்: தேவனை அறிவதற்கு பேதுருவுக்கு மாறுபட்ட தனிப்பண்பு ஏன் தேவைப்பட்டது? அவனால் ஏன் தேவனை நேரடியாக அறிய முடியாமல் போனது? ஏன் அவன் தேவனின் இரக்கத்தையும் அன்பையும் பற்றியே பேசினான், வேறு எதனையும் குறித்து ஏன் பேசவில்லை? கற்பனை தேவனின் உண்மையற்ற தன்மையை உணர்ந்த பிறகுதான் நடைமுறை தேவனின் அறிவைத் தேடுவது சாத்தியமாகும்; இந்த வார்த்தைகளின் நோக்கமானது, ஜனங்கள் தங்கள் இருதயங்களில் உள்ள கற்பனை தேவனை வெளியேற்ற வைப்பதாகும். சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை, தேவனின் உண்மையான முகத்தை ஜனங்கள் எப்போதும் அறிந்திருந்தனர் என்றால், அவர்களால் சாத்தானின் செயல்களைத் தெளிந்தறிந்திருக்க முடியாது, அதற்கான பொதுவான மனுஷனின் பழமொழி—“மலையைக் கடக்கும்வரை சமதளத்தை ஒருவர் கவனிப்பதில்லை” என்பதாகும்—இது இந்த வார்த்தைகளை பேசுவதில் தேவனின் கருத்தை இது காட்டுகிறது. ஏனெனில், அவர் கூறிய உதாரணத்தின் உண்மைத்தன்மை பற்றிய ஆழமான புரிதலை ஜனங்களுக்கு வழங்க அவர் விரும்புகிறார்; பேதுரு வாழ்ந்த காலம் கிருபையின் காலம் என்பதை நிரூபிக்கும் வகையில், தேவன் வேண்டுமென்றே இரக்கத்தையும், அன்பையும் வலியுறுத்துகிறார். மற்றொரு கண்ணோட்டத்தில், மனுஷனுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் சீர்கேடு செய்து தேவனின் இரக்கம் மற்றும் அன்பை இன்னும் தெளிவாக வேறுபடுத்தி அமைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாத, பிசாசின் அருவருப்பான முகத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.

பேதுருவுடைய உபத்திரவங்களின் உண்மையையும் தேவன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் மற்றும் அவற்றின் உண்மையான சூழ்நிலைகளை விவரிக்கிறார், இது தேவன் இரக்கமும், அன்பும் மட்டும் உடையவர் அல்ல, மகத்துவமும் உக்கிர கோபமும் உடையவர் என்பதையும், சமாதானத்தோடு வாழ்பவர்கள் தேவனின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் வாழவேண்டிய அவசியமில்லை என்பதையும் ஜனங்களுக்கு மேலும் சுட்டிக்காட்டுகிறார். “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” என்ற யோபுவுடைய வார்த்தைகளின் உண்மைத்தன்மைக்கு, பேதுருவின் உபத்திரவங்களுக்குப் பிறகு அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி ஜனங்களிடம் சொல்வது இன்னும் பெரிய ஆதாரமாக இருக்கும். இவ்வாறு, தேவனைப் பற்றிய பேதுருவின் அறிவு முன்னெப்போதும் இல்லாத பகுதிகளை அடைந்தது என்பதும், அவை கடந்தகால ஜனங்களால் ஒருபோதும் அடையப்படாத பகுதிகள் என்பதும், காலங்காலமாக தேவனை நேசித்த அனைவரின் விசுவாசத்தையும் அன்பையும் அவன் ஒருங்கிணைத்ததன் விளைவாக கிடைத்த பலன் என்பதும், கடந்த காலத்தில் தோல்வியுற்றவர்களின் படிப்பினைகளைப் பயன்படுத்தி அவன் தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டான் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்திற்காக, தேவனைப் பற்றிய உண்மையான அறிவை அடையும் அனைவரும் “கனி” என்றழைக்கப்படுகிறார்கள், அதில் பேதுருவும் உள்ளடங்குவான். தேவனிடம் பேதுரு செய்த ஜெபங்கள், உபத்திரவங்களின் போது தேவனைப் பற்றிய அவனது உண்மையான அறிவைக் காட்டுகிறது. இருப்பினும், அதில் உள்ள பின்னடைவு என்னவென்றால், தேவனின் சித்தத்தை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான், அதனால்தான், அவரைப் பற்றிய பேதுருவுடைய அறிவின் அடிப்படையில், “மனுஷருடைய இருதயத்தில் 0.1 சதவிகிதத்தை மட்டுமே அடைய வேண்டும்” என்று தேவன் கேட்டுக் கொண்டார். தேவனை நன்கு அறிந்த மனுஷனான பேதுருகூட தேவனின் சித்தத்தைத் துல்லியமாக உள்வாங்க முடியவில்லை என்பதால் தேவனை அறியும் திறன் மனுஷர்களுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது, ஏனெனில் அவர்கள் சாத்தானால் மிகவும் சீர்கெட்டுள்ளார்கள்; இதன்மூலம் அனைத்து ஜனங்களாலும் மனுஷனின் சாராம்சத்தை அறிந்து கொள்ள முடியும். தேவனை அறிந்துகொள்ளும் திறன் ஜனங்களுக்கு இல்லாதது மற்றும் சாத்தானால் அவர்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டுள்ளது ஆகிய இந்த இரண்டு முன்நிபந்தனைகளும் தேவனின் மாபெரும் வல்லமைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்கிறது, ஏனெனில், தேவன் வார்த்தைகளால் மட்டுமே கிரியை செய்கிறார், அவர் எந்த முயற்சியையும் மேற்கொள்வதில்லை, இதனால் அவர் ஜனங்களின் இருதயங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தை எடுத்துக் கொள்கிறார். ஆனால், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு ஜனங்கள் அந்த 0.1 சதவீதத்தை மட்டும் ஏன் அடைய வேண்டும்? மனுஷனிடம் இத்திறனை உருவாக்காத தேவனால் இதை விளக்க முடியும். இத்திறன் இல்லாத நிலையில், மனுஷன் தேவனைப் பற்றிய 100 சதவீத அறிவை அடைந்தால், பின்னர், தேவனின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு பகல் போல் தெளிவாக இருக்கும்—மேலும், மனுஷனின் உள்ளார்ந்த இயல்பினால், உடனடியாக ஜனங்கள் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள், அவர்கள் எழுந்து நின்று அவரை வெளிப்படையாக எதிர்ப்பார்கள், அவ்வாறுதான் சாத்தானும் விழுந்தது. எனவே, அவர் ஏற்கனவே அவர்களை முழுமையாகப் பிரித்துப் பகுப்பாய்வு செய்துள்ளார் என்பதாலும், அவர்களது பலம் மற்றும் பலவீனம் வரை அவர்களைப் பற்றிய அனைத்தும் அவருக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரியும் என்ற காரணத்தினாலும், தேவன் ஒருபோதும் ஜனங்களைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. அப்படியானால், மனுஷனின் சுபாவம் அவருக்கு எவ்வளவு கண்கூடாக தெரிகிறது? தேவன் ஒருபோதும் தவறு செய்யமாட்டார், அவர் தமது பேச்சுகளின் வார்த்தைகளை மிகத்துல்லியமாகத் தேர்ந்தெடுக்கிறார். இவ்வாறு, பேதுருவுக்கு தேவனின் சித்தத்தைப் பற்றிய துல்லியமான புரிதல் இல்லாததற்கும், அவன் தேவனைப் பற்றிய மிகப்பெரிய அறிவைக் கொண்டிருப்பதற்கும் இடையே எந்தவித முரண்பாடும் இல்லை; மேலும், இரண்டும் முற்றிலும் தொடர்பில்லாதவையாகும். இது தேவன் அவனை உதாரணமாகக் குறிப்பிட்டார் என்பதற்காக, பேதுருவின் மீது ஜனங்களின் கவனத்தைச் செலுத்துவதற்காக அல்ல. பேதுருவால் அறிய முடிந்த அளவுக்கு, யோபு போன்ற ஒருவனால் ஏன் தேவனை அறிய முடியவில்லை? மனுஷனால் இதை அடைய முடியும் என்றும், இருப்பினும் அது தேவனுடைய மாபெரும் வல்லமையால் என்றும் அவர் ஏன் சொல்ல வேண்டும்? ஜனங்கள் உண்மையிலேயே இயல்பாகவே நல்லவர்களா? இதை ஜனங்கள் அறிந்துகொள்வது எளிதல்ல; நான் இதைப் பற்றிப் பேசவில்லை என்றால், இதன் உள்ளான முக்கியத்துவத்தை யாரும் உணரமாட்டார்கள். தேவனுடன் ஒத்துழைக்கும் விசுவாசத்தை ஜனங்கள் பெறுவதற்காக, அவர்களுக்கு நுண்ணறிவை வழங்குவதே இந்த வார்த்தைகளின் நோக்கமாகும். அப்போதுதான், தேவனால் மனுஷனின் ஒத்துழைப்புடன் கிரியை செய்ய முடியும். ஆவிக்குரிய உலகில் உள்ள உண்மையான நிலை இதுவேயாகும், மேலும் இது மனுஷனால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாததாகும். ஜனங்களின் இருதயங்களில் உள்ள சாத்தானின் இடத்தை நீக்கி, அதற்குப் பதிலாக தேவனுக்கு அந்த இடத்தைக் கொடுப்பது—சாத்தானின் தாக்குதலை முறியடித்தல் என்று இதற்குப் பொருளாகும், மற்றும் இவ்வாறுதான் கிறிஸ்து பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார் என்று சொல்ல முடியும், இவ்வாறுதான் பூமியில் உள்ள ராஜ்யங்கள் கிறிஸ்துவின் ராஜ்யங்களாக மாறிவிட்டன என்று கூறமுடியும்.

இந்தக் கட்டத்தில், பல ஆயிரம் ஆண்டுகளாகப் பேதுரு ஓர் எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் இருந்தான் என்று குறிப்பிடுதல் அவன் ஓர் எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் இருந்தான் என்றும் வெறுமனே சொல்வதற்கு அல்ல; இந்த வார்த்தைகள் ஆவிக்குரிய உலகில் நடத்தப்படும் யுத்தத்தின் பிரதிபலிப்பாகும். மனுஷனை முழுமையாக விழுங்கிவிடலாம், அதன் மூலம் தேவன் உலகத்தை அழித்து, அவருடைய சாட்சிகளை இழக்கச் செய்யலாம் என்ற வீண் நம்பிக்கையில், இத்தனை காலமும், சாத்தான் மனுஷனுக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தேவன் கூறியிருக்கிறார், “மனுஷருடைய இருதயத்தில் மிகச்சிறிய நிலையை நான் எடுப்பதற்கேதுவாக, முதலில் ஒரு மாதிரியை நான் உருவாக்குவேன். இந்தக் கட்டத்தில், மனிதன் என்னைப் பிரியப்படுத்தவோ அல்லது முழுமையாக அறியவோ மாட்டான்; இருப்பினும், என்னுடைய மாபெரும் வல்லமையின் காரணமாக மனுஷர்களால் எனக்கு முழுமையாகக் கீழ்படிய முடியும், மற்றும் எனக்கு எதிராக கலகம் செய்வதை நிறுத்திவிடுவார்கள், மற்றும் சாத்தானை வீழ்த்துவதற்கு இந்த உதாரணத்தை நான் பயன்படுத்துவேன். அதாவது, மனுஷன் மீது சாத்தான் செலுத்திவரும் அனைத்து வல்லமைகளையும் அடக்குவதற்கு, நான் ஆக்கிரமித்துள்ள மனுஷனுடைய இருதயத்தின் 0.1 சதவீதத்தை நான் பயன்படுத்துவேன்.” எனவே, மனுக்குலம் முழுவதும் பின்பற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்ற ஒரு முன்வடிவாக இருக்கும் வகையில் இன்று பேதுருவை ஓர் உதாரணமாக தேவன் குறிப்பிடுகிறார். ஆரம்ப பத்தியுடன் இணைத்துப் பார்த்தால், ஆவிக்குரிய உலகில் உள்ள நிலைமையைப் பற்றி தேவன் சொன்னவற்றின் உண்மைத்தன்மையை இது நிரூபிக்கிறது. “இன்று கடந்தகாலத்தைப் போல் இல்லை: சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து ஒருபோதும் பார்த்திராத காரியங்களை நான் செய்வேன், காலங்காலமாக ஒருபோதும் கேள்விப்படாத வார்த்தைகளைப் பேசுவேன், ஏனெனில், அனைத்து ஜனங்களும் என்னை மாம்சத்தில் அறிந்துகொள்ளும்படி கேட்கிறேன்.” தேவன் இன்று தம் வார்த்தைகளின்படி செயல்படத் தொடங்கியுள்ளார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. வெளியில் நடப்பதை மட்டுமே ஜனங்களால் பார்க்க முடியும், உண்மையில் ஆவிக்குரிய உலகில் என்ன நடக்கிறது என்பதை அவர்களால் பார்க்க முடியாது, எனவே தேவன் நேரடியாகக் கூறுகிறார், “இவை என்னுடைய நிர்வகித்தலின் படிநிலைகள், ஆனால் மனுஷனுக்கு இதனுடைய அறிவு சிறிதளவுகூட இல்லை. நான் வெளிப்படையாகப் பேசினாலும், ஜனங்கள் மனம் குழம்பியே இருக்கிறார்கள்; அதனை அவர்கள் புரிந்துகொள்வது கடினம். இது மனுஷனின் தாழ்மை நிலையல்லவா?” இந்த வார்த்தைகளுக்குள் வார்த்தைகள் உள்ளன: மேலே விவரிக்கப்பட்டதைப் போல, ஆவிக்குரிய உலகில் ஒரு யுத்தம் நடக்கிறது என்று அவர்கள் விளக்குகிறார்கள்.

பேதுருவின் கதையைப் பற்றிய அவரது சுருக்கமான விளக்கத்திற்குப் பிறகும், தேவனின் சித்தம் முழுமையாக நிறைவேறவில்லை, எனவே, பேதுருவின் விஷயங்களைப் பற்றி, தேவன் மனுஷரிடம் பின்வருமாறு கோரிக்கை வைக்கிறார்: “பேரண்டம் மற்றும் ஆகாயவிரிவு முழுவதும், பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றிலும், பூமியிலும் பரலோகத்திலும் உள்ள சகலமும் என் இறுதிக் கட்டக் கிரியைக்குத் தங்கள் அனைத்து முயற்சியையும் தருகின்றன. நிச்சயமாக, சாத்தானின் சக்திகள் கட்டளைக்கிணங்க, நீங்கள் பார்வையாளர்களாக இருக்க விரும்பவில்லை, அல்லவா?” பேதுருவின் அறிவைப் பற்றி படித்த பிறகு, ஜனங்கள் மிகுந்த தெளிவைப் பெற்றிருக்கிறார்கள், மேலும் பயனுள்ள வகையில் இருப்பதற்காக, தேவன் ஜனங்களுக்கு அவர்களின் வரம்புமீறிய ஒழுக்கக்கேடு, கட்டுப்பாடின்மை, மற்றும் தேவனைப் பற்றிய அறிவின்மை ஆகியவற்றின் விளைவைக் காட்டுகிறார்; மேலும், ஆவிக்குரிய உலகில் நடக்கும் யுத்தத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மீண்டும் ஒருமுறை மிகத்துல்லியமாக அவர் மனுஷனிடம் கூறுகிறார். இதனால்தான் ஜனங்கள் சாத்தானால் பீடிக்கப்படாமல் அதிக விழிப்புடன் இருக்கிறார்கள். மேலும், இம்முறை ஜனங்கள் வீழ்ந்தால், அவர்கள் இம்முறை இரட்சிக்கப்பட்டது போல் தேவனால் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை அது தெளிவாக்குகிறது. மொத்தத்தில், மனுஷனை இரட்சிக்கும் தேவனின் நோக்கம் உண்மையிலேயே நிறைவேற்றப்படும் வகையில், இந்த எச்சரிக்கைகள் தேவனின் வார்த்தைகள் பற்றிய மனுஷனின் அபிப்பிராயத்தை ஆழமாக்குகின்றன, ஜனங்கள் தேவனின் இரக்கத்தின்மீது மிகவும் மதிப்பு கொள்ளச் செய்கின்றன, மற்றும் தேவனுடைய எச்சரிக்கையின் வார்த்தைகளை மனதில் வைத்திருக்கச் செய்கின்றன.

முந்தைய: அத்தியாயம் 5

அடுத்த: பேதுருவின் வாழ்க்கை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக