அத்தியாயம் 24 மற்றும் 25

கவனமாக வாசிக்கவில்லையெனில், இந்த இரண்டு நாட்களின் வார்த்தைகளில் எதையும் கண்டறிவதற்கு சாத்தியமில்லை; உண்மையில், அவைகள் ஒரே நாளில் பேசப்பட்டிருக்க வேண்டும், ஆனால் தேவன் அவைகளை இரண்டு நாட்களாய்ப் பிரித்தார். அதாவது, இந்த இரண்டு நாட்களின் வார்த்தைகள் ஒரு முழுமையை உருவாக்குகின்றன, ஆனால் அவற்றை ஜனங்கள் ஏற்றுக்கொள்வதை எளிதாக்குவதற்காக, தேவன் ஜனங்களுக்கு சுவாசிக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்க, இரண்டு நாட்களுக்கென அவற்றைப் பிரித்தார். மனுஷன் மீதான தேவனுடைய அக்கறை இப்படிப்பட்டதாகும். தேவனுடைய எல்லா கிரியைகளிலும், எல்லா ஜனங்களும் தங்கள் சொந்த இடத்தில் தங்கள் செயல்பாடுகளையும் கடமைகளையும் செய்கிறார்கள். ஒரு தேவதூதனுடைய ஆவியை உடைய ஜனங்கள் ஒத்துழைப்பதோடு மட்டுமல்ல; சாத்தானின் எல்லா ஆவிகளும் செய்வது போல் பிசாசின் ஆவியை உடையவர்களும் “ஒத்துழைக்கிறார்கள்”. தேவனுடைய வார்த்தைகளில் தேவனுடைய சித்தம் மற்றும் மனுஷனிடம் வைக்கப்படும் அவரது கோரிக்கைகள் காணப்படுகின்றன. “என் தண்டனை எல்லா ஜனங்கள்மீதும் விழுகின்றது, ஆனாலும் அது எல்லா ஜனங்களிடமிருந்தும் தொலைவிலும் உள்ளது. ஒவ்வொரு நபரின் முழு ஜீவிதமும் என்மீது ஏற்பட்டுள்ள அன்பினாலும் வெறுப்பினாலும் நிறைந்திருக்கிறது” என்ற இந்த வார்த்தைகள் ஜனங்கள் அவரைப் பற்றிய அறிவைப் பெறச் செய்வதற்காக, தேவன் எல்லா ஜனங்களையும் பயமுறுத்துவதற்குச் சிட்சையைப் பயன்படுத்துகிறார் என்பதைக் காட்டுகிறது. சாத்தானின் சீர்கேடு மற்றும் தேவதூதர்களின் பலவீனம் ஆகியவற்றின் காரணமாக, தேவன் ஜனங்களைச் சிட்சிக்க வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறார், ஆட்சிமுறை ஆணைகளை அல்ல. சிருஷ்டிப்பின் காலத்திலிருந்து இன்று வரை, தேவதூதர்களையும் மற்றும் அனைத்து ஜனங்களையும் பற்றிய தேவனுடைய கிரியையின் கொள்கை இதுதான். தேவதூதர்கள் தேவனுடையவர்கள் என்பதால், ஒரு நாள் அவர்கள் நிச்சயமாக தேவன் தம்முடைய ராஜ்யத்தின் ஜனங்களாக மாறுவார்கள், மேலும் தேவனால் பராமரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவார்கள். இதற்கிடையில், மற்ற அனைவரும் வகைக்கு ஏற்றபடி வகைப்படுத்தப்படுவார்கள். சாத்தானின் பல்வேறு வகையான பொல்லாத ஆவிகள் அனைத்தும் தண்டிக்கப்படும், மேலும் ஆவிகள் இல்லாத அனைவரும் தேவனுடைய புத்திரர்கள் மற்றும் ஜனங்களால் ஆளப்படுவார்கள். தேவனுடைய திட்டம் இதுவேயாகும். எனவே, தேவன் ஒருமுறை இவ்வாறு கூறினார், “எனது நாளின் வருகை உண்மையில் மனுஷன் மரிப்பதின் தருணமா? என் ராஜ்யம் உருவாகும் நேரத்தில் என்னால் உண்மையில் மனுஷனை அழிக்க முடியுமா?” இவை இரண்டும் எளிய கேள்விகள் என்றாலும், அவை முழு மனுஷகுலத்தின் இலக்குக்கான தேவனுடைய ஏற்பாடுகளாய் இருக்கின்றன. தேவன் வரும்போது, அதுவே, “பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஜனங்கள் சிலுவையில் தலைகீழாக அறையப்படு கிறார்கள்” நேரமாக இருக்கும். சிட்சையைப் பயன்படுத்தி, தேவன் இருப்பதை அறியச் செய்வதே தேவன் எல்லா ஜனங்களுக்கும் மத்தியில் தோன்றியதன் நோக்கமாகும். ஏனென்றால், தேவன் பூமியில் இறங்கி வரும் காலமானது கடைசி காலமாகவும், பூமியில் உள்ள நாடுகள் மகா கொந்தளிப்பிலும் இருக்கும் நேரமாகவும் இருக்கும், எனவே தேவன் கூறுகிறார், “நான் பூமிக்கு வரும்போது, அதை இருள் மூடியிருக்கிறது, மனுஷன் ‘அயர்ந்த நித்திரைக்கொள்ளுகிறான்.’” இன்று, மனுவுருவான தேவனைப் பற்றி அறியும் திறன் கொண்டவர்கள் ஒரு சிலரே உள்ளனர், கிட்டத்தட்ட யாரும் இல்லை. இப்போது கடைசிக் காலம் என்பதால், நடைமுறை தேவனை யாரும் ஒருபோதும் உண்மையிலேயே அறிந்திருக்கவில்லை, மேலும் தேவனைப் பற்றிய மேலோட்டமான அறிவை மட்டுமே ஜனங்கள் பெற்றிருக்கிறார்கள். இதன் காரணமாகவே ஜனங்கள் வேதனை நிறைந்த சுத்திகரிப்புக்கு மத்தியில் வாழ்கின்றனர். ஜனங்கள் சுத்திகரிப்பை விட்டு வெளியேறும்போது, அதுவும் அவர்கள் தண்டிக்கப்படத் தொடங்கும் போது, அதுவே தேவன் எல்லா ஜனங்களுக்கும் தோன்றும் நேரமாகும், அதனால் அவர்கள் அவரை தனிப்பட்ட முறையில் பார்க்க முடியும். மனுவுருவான தேவனின் நிமித்தமாக, ஜனங்கள் பேரழிவில் விழுந்து தங்களைத் தாங்களே வெளியேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்—இது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு தேவன் கொடுத்த தண்டனை, இதுவே அவருடைய ஆட்சிமுறை ஆணையாகும். வசந்த காலத்தின் உஷ்ணம் வந்து பூக்கள் மலரும் போது, வானத்தின் கீழ் அனைத்தும் பசுமையான நிறத்தில் மூடப்பட்டு, பூமியில் உள்ள அனைத்தும் சரியான இடத்தில் இருக்கும் போது, எல்லா ஜனங்களும் பொருட்களும் படிப்படியாக தேவனுடைய தண்டனைக்குள் பிரவேசிக்கும், அந்த நேரத்தில் பூமியின் மீதான தேவனுடைய அனைத்து கிரியைகளும் முடிவடையும். தேவன் இனி பூமியில் கிரியை செய்யவோ ஜீவிக்கவோ மாட்டார், ஏனென்றால் தேவனுடைய மகத்தான கிரியை நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்தக் குறுகிய காலத்திற்கு ஜனங்கள் தங்கள் மாம்சத்தை ஒதுக்கி வைக்க முடியாதவர்களாய் இருக்கிறார்களா? மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையே உள்ள அன்பை எத்தகைய விஷயங்களால் பிரிக்க முடியும்? மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையிலான அன்பை யாரால் பிரிக்க முடியும்? அது பெற்றோர்களா, கணவர்களா, சகோதரிகளா, மனைவிகளா அல்லது வேதனை நிறைந்த சுத்திகரிப்பா? மனசாட்சியின் உணர்வுகளால் மனுஷனுக்குள் இருக்கும் தேவனுடைய சாயலை அழிக்க முடியுமா? ஒருவருக்கொருவர் மீதான ஜனங்களது கடன்பட்ட நிலையும் செயல்களும் அவர்களின் சொந்தச் செயலா? அவற்றை மனுஷனால் சரி செய்ய முடியுமா? யாரால் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும்? ஜனங்கள் தங்களைத் தாங்களே போஷிக்க முடியுமா? வாழ்க்கையில் வலிமையானவர்கள் யார்? யாரால் என்னை விட்டுவிட்டுத் தனித்து வாழ முடியும்? எல்லா ஜனங்களும் தங்களைத் தாங்களே பரிசோதித்தறியும் கிரியையைச் செய்ய வேண்டும் என்று தேவன் ஏன் மீண்டும் மீண்டும் கேட்கிறார்? “யாருடைய கஷ்டங்கள் அவர்களது கைகளாலேயே ஏற்பாடு செய்யப்பட்டவை?” என்று தேவன் ஏன் கூறுகிறார்.

தற்போது, பிரபஞ்சம் முழுவதும் இருண்ட இரவாக உள்ளது, மற்றும் ஜனங்கள் உணர்வில்லாமலும் மந்த புத்தியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் கடிகாரத்தின் முட்கள் எப்போதும் முன்னோக்கி நகர்கின்றன, நிமிடங்கள் மற்றும் நொடிகள் நிற்பதில்லை, மேலும் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை சுற்றுவது வேகமெடுக்கிறது. அவர்களின் உணர்வுகளில், நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஜனங்கள் நம்புகிறார்கள்; அவர்களின் கடைசி நாள் அவர்கள் கண் முன்னே இருப்பது போல் உள்ளது. ஜனங்கள் தங்களுடைய சொந்த மரண நேரத்திற்காக எல்லாவற்றையும் இடைவிடாமல் ஆயத்தப்படுத்துகிறார்கள், அதனால் அது அவர்களின் மரணத்தின் போது ஒரு நோக்கத்தை நிறைவேற்றும்; இல்லாவிட்டால் அவர்கள் வீணாக வாழ்ந்திருப்பார்கள். அது வருத்தப்பட வேண்டியதாக இருக்காதா? தேவன் உலகை நிர்மூலமாக்கும் போது, அவர் நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து தொடங்குகிறார், அதிலிருந்து ஆட்சி மாற்றங்கள் நிகழ்கின்றன; இவ்வாறு, தேவன் பிரபஞ்சம் முழுவதும் ஜனங்களுடைய சேவையை ஒன்றுதிரட்டுகிறார். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டு கிடக்கும் தேசம் ஒரு காட்சி மண்டலமாக இருக்கிறது. ஏனென்றால், உள்ளாக, அது சுக்குநூறாகி இருக்கிறது, அதன் உள்நாட்டு விவகாரங்கள் குழப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன, எல்லோரும் தற்காப்பு வேலையில் ஈடுபடுகிறார்கள், தப்பி சந்திரனுக்குச் செல்லத் தயாராகிறார்கள்—ஆனால், ஜனங்கள் “தங்கள் சொந்தக் கசப்பான கோப்பையிலிருந்து மட்டுமே பானம் பண்ணுவார்கள்” என்று தேவன் சொன்னது போல, அவர்களால் எப்படி தேவன் தம்முடைய கரத்தின் ஆளுகையிலிருந்து தப்பிக்க முடியும்? தேவன் பூமியை விட்டுப் பிரிந்து செல்லும் போது, அதுவே துல்லியமாக உள்நாட்டுப் போரின் நேரமாக இருக்கிறது; சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டில் தேவன் தொடர்ந்து இருக்க மாட்டார், பூமியில் அவருடைய கிரியையை உடனடியாக முடிப்பார். நேரம் பறந்து செல்கிறது, அதில் கொஞ்சம் கூட மீதி இல்லை என்று சொல்லலாம். தேவனுடைய வார்த்தைகளின் தொனியில் இருந்து, தேவன் ஏற்கனவே பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரின் இலக்கையும் பற்றி பேசியுள்ளார் என்பதையும், மீதமுள்ளவர்களுக்கு அவர் சொல்வதற்கென்று வேறு எதுவும் இல்லை என்பதையும் காணலாம். இதைத்தான் தேவன் மனுஷனுக்கு வெளிப்படுத்துகிறார். மனுஷனை சிருஷ்டிப்பதில் தேவனுடைய நோக்கத்தின் காரணமாகவே அவர், “என் பார்வையில், மனுஷனே எல்லாவற்றிற்கும் அதிபதி. நான் அவனுக்குச் சிறிய அளவிலான அதிகாரத்தை வழங்கவில்லை, பூமியிலுள்ள எல்லாவற்றையும் நிர்வகிக்க அனுமதிக்கிறேன்—மலைகள் மீதுள்ள புல், காடுகளில் இருக்கும் மிருகங்கள் மற்றும் தண்ணீரில் உள்ள மீன்கள் என எல்லாவற்றையும்” என்று கூறுகிறார். தேவன் மனுஷனைச் சிருஷ்டித்தபோது, மனுஷன் எல்லாவற்றுக்கும் எஜமானனாக இருப்பான் என்று அவர் முன்னறிவித்தார்—ஆனாலும் மனுஷன் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டான், அதனால் அவன் விரும்பியபடி வாழ முடியவில்லை. இது இன்றைய உலகத்திற்கு வழிவகுத்தது, இதில் ஜனங்கள் மிருகங்களிலிருந்து எந்தவிதத்திலும் வேறுபட்டவர்களாக இல்லை, “மனுஷனின் முழு ஜீவிதமும் வேதனையாகவும் அவசரமாகவும், வெறுமையுடன் இணைந்த வேடிக்கையாகவும் இருக்கிறது” இதன் விளைவாக, மலைகள் ஆறுகளுடன் கலந்திருக்கின்றன. மனுஷனுடைய வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லாததாலும், மனுஷனைச் சிருஷ்டிப்பதில் தேவனுடைய நோக்கம் இதுவல்ல என்பதாலும், உலகம் முழுவதும் கொந்தளிப்படைந்திருக்கிறது. தேவன் முழு பிரபஞ்சத்தையும் ஒழுங்கமைக்கும்போது, எல்லா ஜனங்களும் அதிகாரப்பூர்வமாக மனுஷீக வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்குவார்கள், அப்போதுதான் அவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கத் தொடங்கும். ஜனங்கள் தேவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள், மேலும் அவர்கள் எல்லாவற்றுக்கும் முன்பாக அதிகாரப்பூர்வமாக அவர்களது எஜமானராகத் தோன்றுவார்கள்; அவர்கள் பூமியில் தேவனுடைய வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வார்கள், இனி தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டார்கள், மாறாக அவருக்குக் கீழ்ப்படிவார்கள். ஆனால், இன்றைய ஜனங்கள் அதிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர். அவர்கள் எப்பொழுதும் செய்வது எல்லாம் தேவன் மூலமாகத் “தங்கள் சட்டைப் பைகளை நிரப்புவதுதான்”, எனவே தேவன் “மனுஷன் மீது நான் செய்யும் கிரியையால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லையா?” போன்ற தொடர் கேள்விகளைக் கேட்கிறார். தேவன் இந்தக் கேள்விகளைக் கேட்கவில்லை என்றால், எதுவும் நடக்காது; ஆனால் அவர் இதுபோன்ற விஷயங்களைக் கேட்கும்போது, சிலரால் உறுதியாக நிற்க முடியவில்லை, ஏனென்றால், அவர்களின் மனசாட்சியில் உறுத்தல் இருக்கிறது, மேலும் அவர்கள் முழுவதும் தேவனுக்காக அல்ல, மாறாக, தங்களுக்காகவே இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் வெறுமை காணப்படுகிறது; எனவே, இந்த ஜனங்களும், “ஒவ்வொரு மதத்தின் ஜனங்களும், சமூகத்தின் ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு பிரிவினரும் பூமியில் உள்ள வெறுமையை அறிவார்கள், அவர்கள் அனைவரும் என்னைத் தேடுகிறார்கள், என் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.” அவர் வெறுமையான பழைய சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படிக்கு, எல்லா ஜனங்களும் தேவனுடைய வருகைக்காக ஏங்குகிறார்கள், ஆனாலும் அவர்கள் பேரழிவில் விழுந்துவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். முழு மத உலகமும் உடனடியாகப் பாழடைந்து, அனைவராலும் புறக்கணிக்கப்படும்; அவர்களுக்கு யதார்த்தம் இல்லை, மேலும் தேவன் மீதான அவர்களின் விசுவாசம் தெளிவற்றதும் குறைவானதுமாக இருக்கிறது என்பதை அவர்கள் உணருவார்கள். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவில் உள்ள ஜனங்களும் கலைந்து செல்வார்கள், மேலும் ஒவ்வொரு தேசமும் மதப்பிரிவுகளும் கொந்தளிப்பில் விழத் தொடங்கும். மொத்தத்தில், எல்லாவற்றின் ஒழுங்குமுறையும் உடைக்கப்படும், அனைத்தும் அதன் இயல்பான தன்மையை இழக்கும், மேலும் ஜனங்களும் கூட தங்கள் உண்மையான முகங்களை வெளிப்படுத்துவார்கள். எனவே, தேவன் கூறுகிறார், “நான் மனுஷனிடம் பலமுறை கூக்குரலிடுகிறேன், ஆனாலும் யாராவது இரக்கத்தை உணர்கிறார்களா? யாராவது மனுஷராக இருக்கும் தன்மையுடன் ஜீவித்திருக்கிறார்களா? மனுஷன் மாம்சத்தில் வாழலாம், ஆனால் அவன் மனுஷனாக இருக்கும் தன்மை இல்லாமல் இருக்கிறான். அவன் மிருக ராஜ்யத்தில் பிறந்தானா?” மனுஷர்கள் மத்தியிலும் மாற்றம் ஏற்படுகிறது, இந்த மாற்றத்தின் காரணமாக, ஒவ்வொருவரும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றனர். இது கடைசி நாட்களின் போதான தேவனுடைய கிரியையாகும், இது கடைசி நாட்களின் கிரியையால் அடையப்பட வேண்டிய விளைவாகும். தேவன் மனுஷனின் சாராம்சத்தைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேசுகிறார், இதனால் அவருடைய கிரியையின் முடிவு நெருங்கி வருகிறது என்றும், மேலும் தேவன் ஜனங்களிடமிருந்து அதிகம் மறைந்திருக்கிறார் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது, இது அவர்களை மிகவும் குழப்பமடையச் செய்கிறது. எவ்வளவு குறைவாக ஜனங்கள் தேவனுடைய சித்தத்தை உணர்கிறார்களோ, அவ்வளவு குறைவாகவே, கடைசி நாட்களின் தேவனுடைய கிரியைக்கு கவனம் செலுத்துகிறார்கள்; இது அவர்கள் குறுக்கிடுவதைத் தடுக்கிறது, இதனால் யாரும் கவனம் செலுத்தாத போது தேவன் அவர் செய்ய நினைக்கும் கிரியையைச் செய்கிறார். இது காலங்காலமாக தேவனுடைய கிரியையின் ஒரு கொள்கையாகும். ஜனங்களுடைய பலவீனங்களை அவர் கருத்தில் கொள்ளவில்லை எனில், அது தேவனுடைய தெய்வீகத்தன்மை மிகவும் வெளிப்படையாக இருப்பதைக் காட்டுகிறது, எனவே தேவனுடைய நாள் சமீபித்திருக்கிறது.

முந்தைய: அத்தியாயம் 22 மற்றும் 23

அடுத்த: அத்தியாயம் 26

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக