அத்தியாயம் 40

நான் வானத்தைக் கீழே கொண்டுவரப் போகிறேன் என்பது போல ஜனங்கள் எனது ஒவ்வொரு அசைவின் மீதும் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் என் செயல்கள் அவர்களுக்கு முற்றிலும் புரிந்துகொள்ள முடியாததாக இருப்பது போல, எனது செயல்களால் அவர்கள் எப்போதும் மனக்குழப்பமடைந்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவர்கள் என்னிடமிருந்து அவர்களது குறிப்பை எடுத்துக்கொள்கிறார்கள், அவர்கள் பரலோகத்துக்கு இடறலுண்டாக்குவார்கள் அதனால் “சாவுக்கேதுவானவர்களின் உலகில்” தள்ளப்படுவார்கள் என்று மிகவும் பயப்படுகிறார்கள். நான் ஜனங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் சோதித்துப் பார்க்கவோ அல்லது அவர்களின் குறைபாடுகளை எனது கிரியையின் இலக்காகக் கொள்ளவோ முயற்சி செய்வதில்லை, இந்த நேரத்தில், அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள், மேலும் என்னை நம்பியிருப்பதற்கு வருகிறார்கள். நான் மனுஷருக்குக் கொடுக்கும்போது, ஜனங்கள் தங்கள் சொந்த உயிரை நேசிப்பது போல் என்னை நேசிக்கிறார்கள், ஆனால் நான் அவர்களிடம் பொருட்களைக் கேட்கும்போது, அவர்கள் என்னை ஒதுக்கித் தள்ளுகிறார்கள். இது ஏன்? மனுஷ உலகின் “நியாயத்தையும் பகுத்தறிவையும்” அவர்களால் நடைமுறைக்குக் கொண்டுவர முடியாதா? நான் ஏன் மீண்டும் மீண்டும் ஜனங்களிடம் இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கிறேன்? என்னிடம் எதுவும் இல்லை என்பதுதான் உண்மையா? ஜனங்கள் என்னை ஒரு பிச்சைக்காரனைப் போல நடத்துகிறார்கள். நான் அவர்களிடம் பொருட்களைக் கேட்கும்போது, நான் “அனுபவிப்பதற்காக” அவர்கள் தங்களிடம் உள்ள “எஞ்சியவற்றை” எனக்காக ஏந்தி வருகிறார்கள், மேலும் அவர்கள் என்மீது விசேஷக் கவனம் செலுத்துவதாகவும்கூட சொல்கிறார்கள். நான் அவர்களின் அருவருப்பான முகங்களையும் விசித்திரமான நிலைகளையும் பார்க்கிறேன், நான் மீண்டும் ஒருமுறை மனுஷனை விட்டு விலகுகிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளில், ஜனங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள், மேலும் நான் அவர்களுக்கு மறுத்ததை மீண்டும் ஒருமுறை திரும்ப எடுத்துக்கொண்டு, என் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். “நான் மனுஷருக்காக அதிக நேரத்தைச் செலவழித்திருக்கிறேன் மற்றும் ஒரு பெரிய விலைக்கிரயத்தைக் கொடுத்திருக்கிறேன்—ஆனால் இந்த நேரத்தில், அறியப்படாத ஒரு காரணத்திற்காக, மக்களின் மனச்சாட்சிகள் எப்போதும் அவற்றின் அசல் செயல்பாட்டைச் செய்ய இயலாது இருக்கின்றன.” இதன் விளைவாக, எதிர்காலச் சந்ததியினருக்கு “மேற்கோளாகச்” செயல்பட இந்தத் “தொடர்ந்து நீடிக்கும் சந்தேகத்தை” “இரகசிய வார்த்தைகளில்” நான் பட்டியலிடுகிறேன், ஏனெனில் இவை ஜனங்களின் “உழைப்பால்” பிறந்த “அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள்”; அவற்றை நான் எப்படிச் சாதாரணமாக நீக்க முடியும்? இது ஜனங்களின் நல்ல நோக்கங்களைச் “தோல்வியடையச் செய்யாதா”? எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்கு ஒரு மனசாட்சி இருக்கிறது, அதனால் நான் மனுஷருடன் தந்திரமான, சதி செய்யும் செயல்களில் ஈடுபடுவதில்லை—என் செயல்கள் அப்படித்தானே இருக்கின்றன? இது மனுஷரால் பேசப்படும் “நேர்மையும் நியாயமும்” அல்லவா? மனுஷர்களிடையே, நான் இன்றுவரை இடைவிடாமல் கிரியை செய்து வந்திருக்கிறேன். இன்று உள்ளது போன்ற காலங்களின் வருகை மூலமாகக்கூட, ஜனங்கள் இன்னும் என்னை அறியவில்லை, அவர்கள் இன்னும் என்னை ஓர் அந்நியனைப் போலவே நடத்துகிறார்கள், மேலும் நான் அவர்களை “இறுதிமுடிவுக்கு” அழைத்துச் சென்றுள்ளதால் என் மீது அதிகமான வெறுப்பையும்கூட வளர்த்திருக்கிறார்கள். இந்த நேரத்தில், அவர்களின் இதயங்களில் உள்ள அன்பு ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து நீண்ட காலமாகிவிட்டது. நான் பெருமை பேசவுமில்லை, நான் மனுஷனை இழிவுபடுத்தவுமில்லை. என்னால் மனுஷனை நித்தியமாக நேசிக்க முடியும், நித்தியத்திற்கும் என்னால் அவனை வெறுக்கவும் கூட முடியும், இது ஒருபோதும் மாறாது, ஏனென்றால் என்னிடம் விடாமுயற்சி உள்ளது. ஆயினும்கூட, மனுஷருக்கு இந்த விடாமுயற்சி இல்லை, என்னிடம் அவன் எப்போதும் அடிக்கடி நிலை மாறுகிறான், நான் என் வாயைத் திறக்கும் போது மட்டும் அவன் என்மீது சற்றே கவனம் செலுத்துகிறான், நான் என் வாயை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை என்றால், அவன் விரைவில் பெரிய உலகத்தின் அலைகளுக்கு மத்தியில் தொலைந்து போகிறான். ஆகவே, நான் இதை மற்றொரு முதுமொழியாக இப்படிச் சுருக்கிக்கொள்கிறேன்: ஜனங்களுக்கு விடாமுயற்சி இல்லை, இதனால் அவர்களால் என் இருதயத்தைப் பூர்த்தி செய்ய இயலவில்லை.

ஜனங்கள் கனவு காணும் போது, என் கைகளில் “மரணத்தின் வாசனையைப்” பரப்பிக்கொண்டு உலக நாடுகளில் மனுஷர்களிடையே பயணிக்கிறேன். உடனடியாக எல்லா ஜனங்களும் உயிர்சக்தியைப் பின்னால் விட்டுவிட்டு மனுஷ வாழ்க்கையின் அடுத்த அடுக்குக்குள் நுழைகிறார்கள். மனுஷர்கள் மத்தியில், இனி எந்த உயிர் வாழும் ஜீவனையும் காண முடியாது, எல்லா இடங்களிலும் பிணங்கள் சிதறிக்கிடக்கின்றன, உயிர்சக்தியால் நிரப்பப்பட்டவை உடனடியாக ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிடுகின்றன, சடலங்களின் மூச்சைத் திணற வைக்கும் வாசனை நிலம் முழுவதும் பரவுகிறது. நான் உடனடியாக என் முகத்தை மூடிக்கொண்டு மனுஷனை விட்டு வெளியேறுகிறேன், ஏனென்றால் நான் அடுத்த கட்ட கிரியையைத் தொடங்குகிறேன், உயிருடன் வந்தவர்களுக்கு வாழ ஓர் இடத்தைக் கொடுத்து, அனைத்து ஜனங்களையும் ஒரு சிறந்த நிலத்தில் வாழ வைக்கிறேன். இது ஆசீர்வதிக்கப்பட்ட நிலம்—துக்கமும் பெருமூச்சும் இல்லாத நிலம்—இது மனுஷனுக்காக நான் ஆயத்தம் செய்தது. பள்ளத்தாக்கில் உள்ள நீரூற்றுகளிலிருந்து வடியும் நீர் கீழே வரைக்கும் தெளிவாக உள்ளது, அது இடைவிடாமல் பாய்கிறது மற்றும் ஒருபோதும் வறண்டு போகாது; ஜனங்கள் தேவனுடன் இணக்கமாக வாழ்கிறார்கள், பறவைகள் பாடுகின்றன, மென்மையான தென்றல் காற்று மற்றும் வெதுவெதுப்பான சூரிய ஒளிக்கு மத்தியில், வானம் பூமி இரண்டும் ஓய்வாக இருக்கின்றன. இன்று இங்கு அனைத்து ஜனங்களின் சடலங்களும் அலங்கோலமாகக் கிடக்கின்றன. ஜனங்களுக்குத் தெரியாமல், நான் என் கைகளில் உள்ள கொள்ளைநோயை விடுகிறேன், மேலும் மனுஷரின் உடல்கள் தலை முதல் கால் வரை சதையின் சுவடுகள் இல்லாமல் சிதைந்து போகின்றன, நான் மனுஷரை விட்டு வெகுதூரம் செல்கிறேன். இனி ஒருபோதும் நான் மனுஷருடன் ஒன்றுசேர மாட்டேன், இனி ஒருபோதும் மனுஷருக்கு மத்தியில் வரமாட்டேன், ஏனென்றால் எனது முழு நிர்வாகத்தின் இறுதிக் கட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது, மேலும் மீண்டும் ஒருமுறை நான் மனுஷகுலத்தைச் சிருஷ்டிக்க மாட்டேன், மீண்டும் மனுஷர் சொல்வதைக் காது கொடுத்து கேட்க மாட்டேன். என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைப் படித்த பிறகு, ஜனங்கள் அனைவரும் நம்பிக்கையை இழக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் இறக்க விரும்பவில்லை—ஆனால் “உயிருடன் வரவேண்டும்” என்பதற்காக யார்தான் “இறக்கமாட்டார்கள்”? அவர்களை உயிருடன் வரச் செய்யும் மந்திரம் என்னிடம் இல்லை என்று நான் சொன்னால், அவர்கள் வலியால் கதறி அழுகிறார்கள்; உண்மையில், நான் சிருஷ்டிகராக இருந்தாலும், மனுஷர்களை இறக்கச் செய்யும் சக்தி மட்டுமே என்னிடம் உள்ளது, மேலும் அவர்களை உயிருடன் வரச் செய்யும் திறன் எனக்கு இல்லை. இதற்காக, நான் மனுஷரிடம் மன்னிப்பு கேட்கிறேன். எனவே, நான் மனுஷரிடம் முன்கூட்டியே சொன்னேன், “நான் அவனுக்குச் செலுத்த முடியாத கடனைக் கொண்டிருக்கிறேன்”—ஆனாலும் நான் கண்ணியமாக இருப்பதாக அவன் நினைத்தான். இன்று, உண்மைகள் தெரிந்துள்ள நிலையிலும், நான் இன்னும் இதைச் சொல்கிறேன். நான் பேசும் போது உண்மைகளுக்குத் எதிராகப் பேச மாட்டேன். அவர்களின் எண்ணங்களில், நான் பேசுவதற்குப் பல வழிகள் இருப்பதாக ஜனங்கள் நம்புகிறார்கள், அதனால் அவர்கள் எப்பொழுதும் நான் கொடுக்கும் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு வேறு எதையாவது எதிர்பார்க்கிறார்கள். இவை மனுஷரின் தவறான உந்துதல்கள் அல்லவா? இந்தச் சூழ்நிலையில்தான், மனுஷன் என்னை உண்மையாக நேசிக்கவில்லை என்று “தைரியமாகச்” சொல்லத் துணிகிறேன். நான் மனசாட்சியைப் புறக்கணித்து உண்மைகளைச் சிதைக்க மாட்டேன், ஏனென்றால் நான் ஜனங்களை அவர்களின் இலட்சிய தேசத்துக்கு அழைத்துச் செல்ல மாட்டேன்; இறுதியில், என் கிரியை முடிந்ததும், நான் அவர்களை மரண தேசத்திற்கு அழைத்துச் செல்வேன். எனவே ஜனங்கள் என்னைப் பற்றிக் குறை கூறாமல் இருப்பது நல்லது. இது ஏனென்றால் ஜனங்கள் என்னை “நேசிக்கிறார்கள்” இல்லையா? இது ஏனென்றால், ஆசீர்வாதத்திற்கான அவர்களின் ஆசை மிகவும் வலுவாக இருப்பதால், அல்லவா? ஜனங்கள் ஆசீர்வாதத்தைத் தேட விரும்பவில்லை என்றால், எப்படி இந்தத் “துரதிர்ஷ்டம்” அங்கே இருக்கும்? பல ஆண்டுகளாக ஜனங்கள் என்னைப் பின்தொடர்ந்ததால், அவர்களுக்கு என் மீதுள்ள “விசுவாசம்” காரணமாக, எந்தப் பங்களிப்பையும் ஒருபோதும் செய்யாவிட்டாலும் கூடக் கடுமையாக உழைத்ததால், “இரகசிய அறையில்” என்ன நடக்கிறது என்பதை நான் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறேன்: இன்று, எனது பணி இன்னும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டவில்லை, மேலும் ஜனங்கள் இன்னும் நெருப்புக் குழிக்குள் தள்ளப்படவில்லை என்பதால், அவர்களால் முடிந்தவரை விரைவாக வெளியேறுமாறு நான் அவர்களுக்கு அறிவுறுத்துகிறேன்—எஞ்சியிருக்கும் அனைவரும் துரதிர்ஷ்டத்தையும் குறைந்த அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்க வாய்ப்புள்ளது, அவர்களால் அப்போதும் கடைசியில் மரணத்தை தவிர்க்க முடியாது. நான் அவர்களுக்காக “ஐசுவரியத்திற்கான கதவை” அகலமாகத் திறக்கிறேன்; வெளியேற விருப்பம் உள்ளவர்கள், தங்களால் இயன்றவரை சீக்கிரம் சுதந்திரமாக வெளியில் செல்ல வேண்டும்—அவர்கள் சிட்சை வரும் வரை காத்திருந்தால், அது மிகவும் தாமதமாகிவிடும். இந்த வார்த்தைகள் கேலி செய்வதற்காகச் சொல்லப்படவில்லை—அவை சத்தியமான உண்மைகள். என் வார்த்தைகள் நல்ல மனசாட்சியுடன் மனுஷரிடம் உச்சரிக்கப்படுகின்றன, நீங்கள் இப்போது செல்லவில்லை என்றால், நீங்கள் எப்போது செல்வீர்கள்? உண்மையிலேயே ஜனங்களால் என் வார்த்தைகளை நம்ப முடிகிறதா?

மனுஷரின் தலைவிதியைப் பற்றி நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை; நான் ஜனங்களால் கட்டுப்படுத்தப்படாமல் வெறுமனே எனது சொந்தச் சித்தத்தைப் பின்பற்றுகிறேன். அவர்களின் பயத்தின் காரணமாக நான் எப்படி என் கையை விலக்கிக் கொள்ள முடியும்? எனது நிர்வாகத் திட்டம் முழுவதிலும், மனுஷரின் அனுபவங்களுக்காக நான் எந்தக் கூடுதல் ஏற்பாடுகளையும் செய்ததில்லை. வெறுமனே எனது அசல் திட்டத்தின்படி மாத்திரமே நான் செயல்படுகிறேன். கடந்த காலத்தில், ஜனங்கள் எனக்காகத் தங்களையே “அர்ப்பணித்தார்கள்”, நான் அவர்களிடம் அனலாகவோ குளிராகவோ இருக்கவில்லை. இன்று, அவர்கள் எனக்காகத் தங்களைத் “தியாகம்” செய்துள்ளனர், நான் அவர்களிடம் அனலாகவோ குளிராகவோ இருக்கவில்லை. நான் கவலைப்படாமல் இருக்கவில்லை ஏனென்றால், ஜனங்கள் எனக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்கிறார்கள், நான் மிகப்பெரிய மகிழ்ச்சியில் மூழ்கவில்லை, ஆனால் எனது திட்டத்தின்படி அவர்களைத் தொடர்ந்து மரணதண்டனை மைதானத்திற்கு அனுப்புவதைத் தொடர்கிறேன். ஒப்புதல் வாக்குமூலத்தின் போது அவர்களின் மனப்பான்மையை நான் கவனிப்பதில்லை—எனது பனி போல உறைந்த, குளிர்ந்த இருதயம் மனுஷரின் இருதயங்களால் எவ்வாறு தொடப்பட முடியும்? மனுக்குலத்தின் மத்தியில் உள்ள உணர்வுப்பூர்வமான விலங்குகளில் நானும் ஒருவனா? நான் உணர்ச்சியற்றவன் என்று பலமுறை ஜனங்களுக்கு நினைவூட்டியிருக்கிறேன், ஆனால் நான் கண்ணியமாக மட்டுமே இருக்கிறேன் என்று நம்பி அவர்கள் வெறுமனே புன்னகைக்கிறார்கள். “மனுக்குலத்தின் வாழ்வுக்கான தத்துவங்களை நான் அறியாதவன்” என்று நான் சொன்னேன், ஆனால் ஜனங்கள் ஒருபோதும் அப்படி நினைக்கவில்லை, நான் பேசும் வழிமுறைகள் மிகப்பல என்று சொன்னார்கள். மனுஷனைப் பற்றிய இந்தக் கருத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனங்களிடம் என்ன தொனியில், எந்த வகையில் பேச வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை—அதனால், வேறு வழியின்றி, என்னால் வெளிப்படையாக மட்டுமே பேச முடிகிறது. என்னால் வேறு என்ன செய்ய முடியும்? ஜனங்கள் பேசும் வழிமுறைகள் ஏராளம்—“உணர்ச்சிகளை நம்பாமல், நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அவர்கள் சொல்கிறார்கள் இது பல வருடங்களாக அவர்கள் கூக்குரலிடும் கோஷம், ஆனால் அவர்களால் அவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்பச் செயல்பட முடிவதில்லை. அவர்களின் வார்த்தைகள் வெறுமையாக உள்ளன—எனவே “அவர்களின் வார்த்தைகளும் செய்து முடிக்கும் காரியங்களும் ஒரே நேரத்தில் நிகழும்” வல்லமை ஜனங்களுக்கு இல்லை என்று நான் சொல்கிறேன். ஜனங்கள் தங்கள் இருதயங்களில் இப்படிச் செயல்படுவது என்னோடு போட்டி போடுவதாக நம்புகிறார்கள்—இருப்பினும் அவர்களின் போட்டியில் எனக்கு விருப்பமில்லை, அதைப் பார்த்து நான் சலித்துப்போய் விட்டேன். ஜனங்கள் ஏன் எப்போதும் தங்களுக்கு உணவளிப்பவருக்கு எதிராகத் திரும்புகிறார்கள்? நான் மனுஷருக்கு மிகக் குறைவாகக் கொடுத்திருக்கிறேனா? ஜனங்கள் ஏன் எப்போதும் என் முதுகுக்குப் பின்னால் சாத்தானை இரகசியமாக வழிபடுகிறார்கள்? அவர்கள் எனக்காகக் காரியங்களைச் செய்வது போலவும், நான் கொடுக்கும் மாதச் சம்பளம் அவர்களின் வாழ்க்கைச் செலவுகளுக்குப் போதாதது போலவும் இருக்கிறது, அதனால்தான் அவர்கள் தங்கள் ஊதியத்தை இரட்டிப்பாக்க வேலை நேரத்திற்கு வெளியே வேறு வேலையைத் தேடுகிறார்கள்—ஏனென்றால் ஜனங்களின் செலவுகள் மிகவும் அதிகம், மேலும் அவர்களுக்கு எப்படித் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்று தெரியவில்லை என்பது போலத் தெரிகிறது. அது உண்மையாகவே அப்படி இருந்தால், நான் அவர்களை எனது “தொழிற்சாலையை” விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்கிறேன். நீண்ட காலத்திற்கு முன்பே, எனக்காக ஊழியம் செய்வதால் எந்த விசேஷமான கவனிப்பும் இருக்காது என்பதை நான் மனுஷருக்கு விளக்கினேன்: விதிவிலக்கு இல்லாமல், நான் ஜனங்களை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துகிறேன், “கடினமாக வேலை செய்யுங்கள், அதிகமாகப் பெறுங்கள், குறைவாக வேலை செய்யுங்கள், குறைவாகப் பெறுங்கள், மற்றும் எந்த வேலையும் செய்யாதீர்கள், எதையும் பெறாதீர்கள்” என்ற முறையைப் பின்பற்றுகிறேன். நான் பேசும்போது, நான் எதையும் பிடித்து வைப்பதில்லை; எனது “தொழிற்சாலை விதிகள்” மிகவும் கண்டிப்பானவை என்று யாராவது நம்பினால், அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும், ஊருக்குச் செல்ல அவர்களின் “கட்டணத்தை” நான் செலுத்துவேன். அப்படிப்பட்டவர்களைக் கையாள்வதில் நான் “கடுமை காட்டாமல்” இருக்கிறேன், அவர்களை இருக்கும்படி நான் கட்டாயப்படுத்துவதில்லை. இந்த எண்ணிலடங்கா ஜனங்கள் மத்தியில், என் இருதயத்திற்குப் பிரியமான ஒரு “வேலைக்காரனை” என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையா? ஜனங்கள் என்னைக் குறைத்து மதிப்பிடக்கூடாது! ஜனங்கள் இன்னும் எனக்குக் கீழ்ப்படியாமல், வேறு எங்கும் “வேலைவாய்ப்பைத்” தேட விரும்பினால், நான் அவர்களை வற்புறுத்த மாட்டேன்—நான் அதை வரவேற்பேன், எனக்கு வேறு வழியில்லை! என்னிடம் அதிகமான “விதிகளும் கட்டுப்பாடுகளும்” இருப்பதால்தான் இப்படி இருக்கிறது அல்லவா?

மே 8, 1992

முந்தைய: அத்தியாயம் 39

அடுத்த: அத்தியாயம் 41

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக