அத்தியாயம் 40

தேவனைப் பொறுத்தவரை, மனுஷன் அவரது கைப்பிடியில் ஒரு விளையாட்டுப் பொருளைப் போன்றவன், அவரது கைகளில் கையால் இழுக்கப்படும் நூடுல்ஸ் போன்றவன், தேவன் விரும்பியபடி மெல்லியதாகவோ அல்லது தடிமனானதாகவோ, அவர் விரும்பியபடி செய்யமுடியும். ஒரு பெண் சந்தையில் இருந்து வாங்கிய பாரசீகப் பூனையைப் போல மனிதன் உண்மையில் தேவன் தம்முடைய கைகளில் ஒரு விளையாட்டுப் பொருள் என்று சொல்வது நியாயமானது. எந்தவொரு சந்தேகமுமின்றி, அவன் தேவன் தம்முடைய கைகளில் ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கிறான்—எனவே பேதுருவின் அறிவைப் பொறுத்தவரை அதில் பொய் எதுவும் இல்லை. இதிலிருந்து, தேவனுடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் மனுஷரிடத்தில் சுலபமாகவும் மகிழ்ச்சியுடனும் செய்துமுடிக்கப்படுவதைக் காணலாம். ஜனங்கள் கற்பனை செய்வது போல் அவர் தமது மூளையைக் குழப்பிக்கொள்வதில்லை அல்லது திட்டங்கள் போடுவதில்லை; மனுஷருக்கு அவர் சொல்லும் வார்த்தைகள் போலவே மனுஷரிடம் அவர் செய்யும் கிரியைகள் மிகவும் இயல்பானவை. தேவன் பேசும் போது, அவருடைய நாக்கு அவருடன் சேர்ந்து இயங்க அனுமதிப்பது போலவும், அவரது மனதில் என்ன வருகிறதோ அதைக் கட்டுப்பாடில்லாமல் கூறுவது போலவும் அவர் தோன்றுகிறார். இருப்பினும், தேவனுடைய வார்த்தைகளைப் படித்த பிறகு, மக்கள் முற்றிலும் சமாதானமடைகிறார்கள், அவர்களுக்குப் பேச வார்த்தைகள் இல்லை, பரந்த கண்களுடன் மௌனமாகி விடுகிறார்கள். இங்கு என்ன நடக்கிறது? தேவனுடைய ஞானம் எவ்வளவு பெரியது என்பதை இது நன்கு காட்டுகிறது. மக்கள் கற்பனை செய்வதுபோல, தேவன் மனுஷரிடத்தில் செய்யும் கிரியை துல்லியமாகவும் சரியாகவும் திட்டமிடப்பட வேண்டும் என்றால், இந்தக் கற்பனைகளை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்ல—தேவனுடைய ஞானம், அதிசயத்தன்மை மற்றும் ஆராய முடியாத தன்மை ஆகியவை அளவிடக்கூடியதாக இருக்கவேண்டும், இது மக்கள் தேவனைப் பற்றி கொண்டுள்ள மதிப்பீடு மிகவும் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. மனிதர்களின் செயல்களில் எப்போதும் முட்டாள்தனம் இருப்பதால், அவர்கள் தேவனை அதே முறையில் அளவிடுகிறார்கள். தேவனாகியவர் திட்டங்கள் அல்லது அவருடைய கிரியைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில்லை; அதற்குப் பதிலாக, இது நேரடியாக தேவனுடைய ஆவியானவரால் செயல்படுத்தப்படுகிறது—மேலும் தேவனுடைய ஆவியானவர் செய்யும் கிரியைகளின் கொள்கைகள் சுதந்திரமானவை மற்றும் கட்டுப்பாடற்றவை. தேவன் மனிதனின் நிலைகளைக் கவனிக்காமல், அவர் விரும்பியபடி பேசுவதைப் போல இருக்கிறது—இருப்பினும் அப்போதும் மனிதன் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ள முடிவதில்லை, இதன் காரணம் தேவனுடைய ஞானமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மைகள் உண்மைகள்தான். எல்லா மனுஷரிலும் தேவனுடைய ஆவியானவரின் கிரியை சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாக இருப்பதால், தேவனுடைய கிரியையின் கொள்கைகளைக் காட்ட இது போதுமானது. சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களுக்கு தேவன் தமது கிரியையில் இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டியதிருந்தால், அது சிறிய பயன்பாட்டிற்கு நல்ல தரமான மரத்தை வைப்பது போல் அல்லவா? தேவன் நேரில் செயல்பட வேண்டுமா? அது பயனுள்ளதாக இருக்குமா? தேவனுடைய ஆவியானவர் நீண்ட காலமாக கிரியை செய்து கொண்டிருப்பதால், இருப்பினும் தேவனுடைய ஆவியாவரின் காலங்கள் முழுவதிலும் தேவன் இந்த வழியில் ஒருபோதும் கிரியை செய்யவில்லை என்பதால், தேவன் கிரியை செய்யும் வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை யாரும் அறிந்திருக்கவில்லை, அவை ஒருபோதும் தெளிவாக இருந்ததில்லை. இன்று அவை தெளிவாக உள்ளன, ஏனென்றால் தேவனுடைய ஆவியானவர் தனிப்பட்ட முறையில் அவற்றை வெளிப்படுத்தியுள்ளார்—இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது, இது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகக் காட்டப்படுகிறது, மனுஷரால் சுருக்கமாகக் கூறப்படவில்லை. மூன்றாம் வானத்துக்கு பயணம் செய்து, இது உண்மையில் நடக்கிறதா என்று ஏன் பார்க்கக்கூடாது; இந்த கிரியைகள் எல்லாவற்றையும் செய்த பிறகு, தேவனுடைய உழைப்பு அவரை சோர்வடையச் செய்ததா, அவரது முதுகு வலிக்கிறதா மற்றும் அவரது கால்கள் வலிக்கிறதா, அல்லது சாப்பிடவோ அல்லது தூங்கவோ முடியவில்லையா என்று ஏன் பார்க்கக்கூடாது; இந்த வார்த்தைகளையெல்லாம் பேசுவதற்கு அவர் ஏராளமான குறிப்புப் பொருட்களைப் படிக்க வேண்டியதிருந்ததா, தேவனுடைய வார்த்தைகளின் வரைவுகள் மேசை முழுவதும் பரவியிருக்கிறதா, இவ்வளவு சொன்னபிறகு அவர் வாய் வறண்டு போனதா என்று ஏன் பார்க்கக்கூடாது. உண்மைகள் துல்லியமாக இதற்கு நேர்மாறானவை: மேலேயுள்ள வார்த்தைகளுக்கும் தேவன் வசிக்கும் இடத்திற்கும் பொதுவானது எதுவும் இல்லை. தேவன் கூறுகிறார், “நான் மனுஷருக்காக அதிக நேரத்தைச் செலவழித்திருக்கிறேன் மற்றும் ஒரு பெரிய விலைக்கிரயத்தைக் கொடுத்திருக்கிறேன்—ஆனால் இந்த நேரத்தில், அறியப்படாத ஒரு காரணத்திற்காக, மக்களின் மனச்சாட்சிகள் எப்போதும் அவற்றின் அசல் செயல்பாட்டைச் செய்ய இயலாது இருக்கின்றன.” தேவனுடைய துக்கத்தைப் பற்றி மனுஷர்களுக்கு எந்த உணர்வும் இருக்கிறதா என்று பாராமல், அவர்கள் தங்கள் மனச்சாட்சிக்கு எதிராகச் செல்லாமல் தேவனுடைய அன்பை அணுக முடிந்தால், இது பகுத்தறிவானது மற்றும் நியாயமானது என்று கருதப்படும். ஒரே பயம் என்னவென்றால், அவர்கள் மனச்சாட்சியின் அசல் செயல்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவர விரும்பவில்லை என்பதாகும். நீ என்ன சொல்கிறாய், இது சரியா? இந்த வார்த்தைகள் உனக்கு உதவுமா? நீங்கள் மனச்சாட்சி இல்லாமல் குப்பையாக இருப்பதை விட, மனச்சாட்சியால் ஆட்கொள்ளப்பட்ட விஷயங்களைச் சேர்ந்தவர்கள் என்பது என் நம்பிக்கை. இந்த வார்த்தைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? யாருக்காவது இதைப் பற்றிய உணர்வு இருக்கிறதா? உங்கள் இருதயத்தில் ஊசி குத்தியிருந்தால் வலிக்காதா? உணர்ச்சியற்ற பிணத்தில் தேவன் ஊசியைக் குத்துகிறாரா? தேவன் தவறாக நினைக்கிறாரா, முதுமை அவரது கண்பார்வையை மழுங்கடித்துவிட்டதா? இது சாத்தியமற்றது என்று நான் சொல்கிறேன்! எப்படியிருந்தாலும், இது மனிதனின் தவறாக இருக்க வேண்டும். மருத்துவமனைக்குப் போய் ஏன் பரிசோதனை செய்து பார்க்கக்கூடாது? மனிதனின் இருதயத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பிரச்சினை உள்ளது; அதற்குப் புதிய “பாகங்கள்” பொருத்தப்பட வேண்டும்—நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அதைச் செய்வீர்களா?

தேவன் கூறுகிறார், “நான் அவர்களின் அருவருப்பான முகங்களையும் விசித்திரமான நிலைகளையும் பார்க்கிறேன், நான் மீண்டும் ஒருமுறை மனுஷனை விட்டு விலகுகிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளில், ஜனங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள், மேலும் நான் அவர்களுக்கு மறுத்ததை மீண்டும் ஒருமுறை திரும்ப எடுத்துக்கொண்டு, என் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.” இந்தப் “புதிய தொழில்நுட்ப யுகத்தில்” தேவன் இன்னும் எருது இழுக்கும் வண்டிகளைப் பற்றி ஏன் பேசுகிறார்? இது ஏன்? தேவன் நச்சரிக்க விரும்புகிறாரா? தேவனுக்குச் சிறப்பாக செய்ய எதுவும் இல்லை என்பதால் காலத்தைக் கடத்துகிறாரா? தேவனும் மனிதனைப் போன்றவரா, உணவை முழுவதுமாக வயிற்றில் அடைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்குகிறாரா? இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வதில் ஏதேனும் பயன் உண்டா? மக்கள் கேவலமானவர்கள், அவர்களிடம் விஷயத்தைச் சொல்ல நீங்கள் எப்போதும் அவர்களின் காதுகளைப் பிடிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். இன்று அவர்களுடன் பேசப்பட்ட வார்த்தைகளுக்குப் பின்பு, நாளை அவர்கள் உடனடியாக மறந்துவிடுவார்கள்—இது அவர்கள் மறதி நோயால் அவதிப்படுவது போல இருக்கிறது. இதனால், சில வார்த்தைகள் பேசப்படவில்லை, ஆனால் அவை மக்கள் மீது செயல்படுத்தப்படவில்லை என்பது போன்ற விஷயம் அல்ல இது. ஏதோ ஒன்று, ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே சொல்லப்பட்டது என்றால், மக்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்—அதை மூன்று முறை சொல்ல வேண்டும், இது குறைந்தபட்ச எண் ஆகும். சில “வயதான மனிதர்களும்” கூட இருக்கிறார்கள், அவர்களிடம் பத்து முதல் இருபது முறை சொல்ல வேண்டும். இப்படி, மக்கள் மாறிவிட்டார்களா இல்லையா என்று பார்க்க ஒரே விஷயமே திரும்பத் திரும்பப் பலவிதமாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் உண்மையிலேயே இந்த வழியில் செயல்பட்டிருக்கிறீர்களா? நான் மக்களை வலியுறுத்திச் செய்ய வைக்க விரும்பவில்லை, ஆனால் அவர்கள் அனைவரும் தேவனை முட்டாளாக்குகிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் அதிக ஊட்டச்சத்து துணை உணவு எடுக்கத் தெரியும், ஆனால் தேவனுக்காகக் கவலைப்படுவதில்லை—இதுதான் தேவனுக்குச் செய்யும் ஊழியமா? இதுதான் தேவனை நேசிப்பதா? அவர்கள் நாள் முழுவதும் ஓர் அக்கறையும் இல்லாமல், சும்மா மற்றும் செயல்பாடின்றி உலகில் எல்லா நாட்களையும் செலவிடுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் கூட, சிலர் திருப்தி அடையாமல், தங்கள் சொந்தக் கவலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒருவேளை நான் கொஞ்சம் கடுமையாக இருக்கலாம், ஆனால் இதுதான் உங்களைப் பற்றி மிகவும் உணர்ச்சிகரமாக இருப்பதாக அறியப்படுகிறது! தேவன்தான் உன்னைக் கவலையாக உணரச் செய்கிறாரா? இது உங்களுக்குத் துன்பத்தை வரவழைக்கும் விஷயம் அல்லவா? உன் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருக்க தேவனுடைய கிருபைகள் எதுவும் தகுதி பெறவில்லையா? இது முழுக்கவும், நீங்கள் தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை, மேலும் நீங்கள் எதிர்மறையாகவும், சுகவீனர்களாகவும், மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருக்கிறீர்கள்—இது ஏன்? உன்னை மாம்சத்தில் வாழ வைப்பது தேவனுடைய சித்தமா? நீங்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றி அறியாதவர், உங்கள் சொந்த இருதயத்தில் அமைதியற்றவர், நீங்கள் முணுமுணுத்துப் புலம்புகிறீர்கள், நாள் முழுவதும் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறீர்கள், உங்கள் சதை வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறது—அதுதான் உங்களுக்குத் தகுதியானது! மற்றவர்கள் சிட்சைக்கு மத்தியில் தேவனைப் புகழ்வதையும், அவர்கள் சிட்சையிலிருந்து வெளிவருவதையும், அதனால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதையும் நீங்கள் கேட்கிறீர்கள்—ஆனாலும் நீங்கள் அதில் விழுந்துவிட்டீர்கள், தப்பிக்க முடியவில்லை. இந்த தொங் குன்ருய் போன்ற “சுய தியாக உணர்வை” பின்பற்ற பல ஆண்டுகள் ஆகும். நீ வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் பிரசங்கம் செய்யும்போது, உனக்கு வெட்கமாக இல்லையா? உன்னை நீயே அறிவாயா? உன்னையே நீ ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டாயா? நீ உண்மையிலேயே தேவனை நேசிக்கிறாயா? உன் வாய்ப்புகளையும் விதியையும் ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டாயா? மனிதர்கள் அதிசயமானவர்கள் மற்றும் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்று தேவன் சொல்வதில் ஆச்சரியமில்லை. மனிதனுக்குள் இன்னும் தோண்டியெடுக்கப்படாத பல “புதையல்கள்” இருப்பதாக யார் நினைத்திருப்பார்கள்? இன்று, அதன் பார்வை மட்டுமே “ஒருவரின் கண்களைத் திறக்க” போதுமானது—மனுஷர்கள் மிகவும் “அருமையானவர்கள்”! எண்ண முடியாத ஒரு குழந்தை போல் நான் இருப்பது போல இது இருக்கிறது. இன்றும்கூட எத்தனை பேர் தேவனை உண்மையாக நேசிக்கிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த எண்ணை என்னால் நினைவுகூர முடியவில்லை—எனவே, எனது “விசுவாசமின்மை” காரணமாக, தேவன் முன் கணக்குக் கொடுக்கும் நேரம் வரும்போது, நான் எப்போதும் வெறுங்கையுடன் இருக்கிறேன், நான் விரும்பியதைச் செய்ய இயலாது, நான் எப்போதும் தேவனுடைய கடனாளியாக இருக்கிறேன். இதன் விளைவாக, நான் கணக்குக் கொடுக்கும்போது, நான் எப்போதும் தேவனால் “கண்டிக்கப்படுகிறேன்”. மனுஷர்கள் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, இதனால் என்னை எப்போதும் கஷ்டப்படுத்துகிறார்கள். மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிரிப்பை இரட்டிப்பாக்குகிறார்கள், அவர்கள் உண்மையிலேயே என் நண்பர்கள் அல்ல. நான் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர்கள் எனக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள், ஆனால் வேண்டுமென்றே என்னைக் கேலி செய்கிறார்கள்—அவர்களுக்கு உண்மையிலேயே மனச்சாட்சி இல்லை!

முந்தைய: அத்தியாயம் 39

அடுத்த: அத்தியாயம் 41

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக