அத்தியாயம் 23
என் குரல் உரத்து ஒலிக்கையில், என் கண்கள் நெருப்பைக் கொப்பளிக்கையில், நான் பூமியெங்கும் பார்க்கிறேன், முழு பிரபஞ்சத்தையும் கவனிக்கிறேன். எல்லா மனுஷர்களும் என்னிடம் ஜெபிக்கிறார்கள், அவர்களின் பார்வையை என்னிடம் திருப்புகிறார்கள், என் கோபத்தை நிறுத்தும்படி வேண்டுகிறார்கள், இனி எனக்கு எதிராகக் கலகம் செய்யாதிருப்பதாக சத்தியம் செய்கிறார்கள். ஆனால் இது இனி கடந்த காலம் அல்ல; இது நிகழ் காலம். என் சித்தத்தை யாரால் திருப்ப முடியும்? நிச்சயமாக மனுஷர்களின் இருதயங்களுக்குள் இருக்கும் ஜெபங்களும், அவர்களின் வாயில் உள்ள வார்த்தைகளும் இல்லையா? நான் இல்லையென்றால், தற்போது வரை யாரால் பிழைத்திருக்க முடிந்திருக்கும்? என் வாயில் உள்ள வார்த்தைகளைத் தவிர யார் பிழைக்கிறார்கள்? என் கண்ணால் யார் கண்காணிக்கப்படுவதில்லை? எனது புதிய கிரியையை பூமி முழுவதும் நான் செய்கிறேன், அதிலிருந்து யாரால் தப்பிக்க முடிந்தது? மலைகள் அவற்றின் உயரத்தைக் கொண்டு அதைத் தவிர்க்க முடியுமா? தண்ணீர் அதன் பன்முகத்தன்மையைக் கொண்டு அதைத் தடுக்க முடியுமா? எனது திட்டத்தில், நான் ஒருபோதும் எதையும் இலகுவாக விட்டுவிடவில்லை, ஆகவே எனது கரங்களின் பிடியைத் தவிர்த்த எந்தவொரு நபரோ அல்லது எந்தவொரு பொருளோ இருந்ததில்லை. இன்று, என் பரிசுத்த நாமம் மனுஷர்கள் அனைவராலும் புகழப்படுகிறது, மீண்டும், மனுஷர்கள் அனைவரிடத்திலிருந்தும் எதிர்ப்புக்கான வார்த்தைகள் எனக்கு எதிராக எழுகின்றன, மேலும் நான் பூமியில் இருப்பதைப் பற்றிய கட்டுக்கதைகள் மனுஷர்கள் அனைவரிடத்திலும் நிறைந்துள்ளன. மனுஷர்கள் என்னை நியாயந்தீர்ப்பதை நான் பொறுத்துக்கொள்வதில்லை, அவர்கள் என் சரீரத்தைப் பகுப்பதையும் நான் பொறுத்துக்கொள்வதில்லை, மேலும் எனக்கு எதிராக அவர்கள் பழித்துப் பேசுவதையும் நான் சகித்துக்கொள்வதில்லை. மனுஷன் என்னை ஒருபோதும் உண்மையாக அறியாததால், அவன் எப்போதும் என்னை எதிர்த்துக்கொண்டும், ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறான், என் ஆவியை மதிக்கவோ அல்லது என் வார்த்தைகளைப் பொக்கிஷமாக்கவோ தவறிவிட்டான். அவனுடைய ஒவ்வொரு காரியங்களுக்கும், செய்கைகளுக்கும், அவன் என்னிடம் கொண்டிருக்கும் மனப்பான்மைக்கும், மனுஷனுக்கு அவனுடைய “வெகுமதியைத்” தருகிறேன். எனவே, எல்லா மனுஷர்களும் தங்கள் வெகுமதி மீது ஒரு கண்ணை வைத்துகொண்டே செயல்படுகிறார்கள், மேலும் ஒருவரும் கூட சுய-பலி சம்பந்தப்பட்ட எந்தக் கிரியையும் செய்ததில்லை. மனுஷர்கள் தன்னலமற்ற அர்ப்பணிப்பை வழங்க விரும்பவில்லை, மாறாக எதுவும் செய்யாததற்காகக் கிடைக்கும் வெகுமதிகளில் மகிழ்ச்சி அடைகிறார்கள். பேதுரு எனக்கு முன்பாகத் தன்னைப் பரிசுத்தப்படுத்தினாலும், அது இன்றைய அறிவின் பொருட்டு தானே தவிர நாளைய வெகுமதிக்காக அல்ல. மனுஷர்கள் ஒருபோதும் என்னுடன் உண்மையாக உரையாடியதில்லை, ஆனால் எனது அங்கீகாரத்தைச் சிரமமின்றி வென்றெடுக்க எண்ணி மீண்டும் மீண்டும் மேலோட்டமாக என்னைக் கையாண்டனர். நான் மனுஷனின் இருதயத்தை ஆழமாகப் பார்த்தேன், ஆகவே அதன் உள்ளார்ந்த இடைவெளிகளில் “பல செல்வங்களின் சுரங்கம்” ஒன்றை நான் கண்டுபிடித்தேன், அவற்றில் ஒன்று கூட மனுஷனுக்கு இன்னும் தெரியாது, ஆனாலும் நான் புதிதாகக் கண்டுபிடித்தேன். எனவே, மனுஷர்கள் “பொருள் ஆதாரங்களைக்” கண்டால்தான், தங்கள் புனிதமான சுய-அவமதிப்பை நிறுத்திவிட்டு, உள்ளங்கைகளை நீட்டி, தங்கள் அசுத்தமான நிலையை ஒப்புக்கொள்கிறார்கள். மனுஷர்களிடையே, எல்லா மனுஷர்களின் இன்பத்துக்காகவும் அதைப் “பிரித்தெடுக்க” நான் காத்திருக்கிறேன். மனுஷனின் இயலாமை காரணமாக எனது கிரியையை நிறுத்துவதற்குப் பதிலாக, எனது அசல் திட்டத்தின்படி அவனைக் கிளைநறுக்குகிறேன். மனுஷன் ஒரு பழ விருட்சத்தைப் போன்றவன்: கிளைநறுக்காமல், விருட்சம் பலனளிக்கத் தவறி, கடைசியில், எந்தவொரு கனியும் தரையில் விழாமல், பார்க்கும் அனைத்துமே வாடிய கிளைகளாகவும் விழுந்த இலைகளாகவும் இருக்கும்.
ஒவ்வொரு நாளும் நான் என் ராஜ்யத்தின் “உள் அறையை” அலங்கரிக்கும்போது, என் கிரியைக்கு இடையூறு விளைவிக்க யாரும் திடீரென்று என் “கிரியை அறைக்குள்” அத்துமீறி நுழைவதில்லை. எல்லா ஜனங்களும் என்னுடன் ஒத்துழைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள், “நீக்கம் செய்யப்படுதல்” என்றும், “தங்கள் நிலையை இழந்துபோகுதல்” என்றும் ஆழ்ந்த பயம் அவர்களுக்கு, இதனால் அவர்கள் ஜீவிதத்தில் ஒரு முட்டுச்சந்தை அடைகிறார்கள், அங்கு அவர்கள் சாத்தான் ஆக்கிரமித்துள்ள “பாலைவனத்தில்” கூட விழ நேரிடும். மனுஷனின் பயம் காரணமாக, நான் ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஆறுதல் கூறுகிறேன், ஒவ்வொரு நாளும் அவனை நேசிக்க தூண்டுகிறேன், மேலும் அவனது அன்றாட வாழ்க்கைக்கு மத்தியில் அவனுக்கு அறிவுறுத்தலை வழங்குகிறேன். மனுஷர்கள் அனைவரும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் போலவும்; பால் வழங்கப்படாவிட்டால், அவர்கள் விரைவில் இந்த பூமியை விட்டு வெளியேறி காணப்படாமல் போவார்கள் என்பது போலவும் இது இருக்கிறது. மனுஷர்களின் வேண்டுகோள்களுக்கு மத்தியில், நான் மனுஷர்களின் உலகத்திற்கு வருகிறேன், உடனடியாக, மனுஷர்கள் ஒரு வெளிச்சமான உலகில் வாழ்கிறார்கள், இனியும் ஓர் “அறைக்குள்” அவர்கள் அடைக்கப்பட்டு, அங்கிருந்து அவர்கள் பரலோகத்திற்கு நேராகத் தங்கள் ஜெபங்களை ஏறெடுப்பதில்லை. மனுஷர்கள் என்னைப் பார்த்தவுடனேயே, தங்கள் இருதயங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள “குறைகளை” விடப்பிடியாக முறையிடுகிறார்கள், உணவு வேண்டும் என்று கெஞ்ச எனக்கு முன்பாக வாய் திறக்கிறார்கள். ஆனால் பின்னர், அவர்களின் அச்சங்கள் நீங்கி, அமைதி திரும்புகிறது, அவர்கள் என்னிடம் இனி எதையும் கேட்பதில்லை, ஆனால் நன்றாகத் தூங்குகிறார்கள், இல்லையெனில், நான் இருப்பதை மறுத்து, அவர்கள் தங்கள் சொந்தக் காரியங்களைச் செய்யச் சென்றுவிடுகிறார்கள். மனுஷகுலத்தின் “கைவிடப்படுதல்”, “உணர்வு” இல்லாத மனுஷர்கள், தங்கள் “பாரபட்சமற்ற நீதியை” என்னிடம் எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகையால், மனுஷனை அவனது அன்பற்ற அம்சத்தில் பார்த்து, நான் அமைதியாகப் புறப்படுகிறேன், இனி அவனது ஆர்வமான வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக மீண்டும் கீழே வரமாட்டேன். மனுஷனுக்கே தெரியாமல், அவனது கஷ்டங்கள் நாளுக்கு நாள் வளர்கின்றன, ஆகவே, அவனது கடுமையான உழைப்பிற்கு நடுவே, திடீரென்று நான் இருப்பதைக் கண்டறிந்ததும், எந்தக் கேள்விக்கும் “இல்லை” என்று கூற மறுத்து, என் அங்கியைப் பிடித்துக்கொண்டு என்னை அவன் வீட்டிற்குள் விருந்தினராக அழைத்துச் செல்கிறான். ஆனால், என் இன்பத்திற்காக ஓர் ஆடம்பரமான உணவை அவன் முன்வைத்தாலும், அவன் ஒருபோதும் என்னைத் தன்னுள் ஒருவராகக் கருதவில்லை, அதற்குப் பதிலாக என்னிடமிருந்து சிறிதளவு உதவியைப் பெற என்னை ஒரு விருந்தினர் போல நடத்துகிறான். எனவே, இந்த நேரத்தில், என் “கையொப்பத்தைப்” பெறுவான் என்று நம்பி அவன் தனது வருத்தமான நிலையை முறையில்லாமல் என் முன் முன்வைக்கிறான். மேலும், தனது வணிகத்திற்குக் கடன் தேவைப்படுவதைப் போலவே, அவன் என்னைத் தன் முழு வலிமையுடனும் சமாளிக்கிறான். அவனது ஒவ்வொரு சைகையிலும் அசைவிலும், மனுஷனுடைய நோக்கத்தை நான் காண்கிறேன்: இது அவனது பார்வையில், ஒரு நபரின் முகபாவனையில் மறைந்திருக்கும் அல்லது அவனது வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் பொருளை எவ்வாறு படிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை என்பதுபோலவும், அல்லது எப்படி ஒரு நபரின் இருதயத்தை ஆழமாகப் பார்க்க எனக்குத் தெரியவில்லை என்பது போலவும் இருக்கிறது. ஆகவே, மனுஷன் தனக்கு நேர்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு அனுபவத்தையும் பிழை இல்லாமல் அல்லது ஒன்றுவிடாமல் என்னிடம் நம்பிக்கையுடன் கூறுகிறான், அதன் பின்னர் அவனுடைய கோரிக்கைகளை எனக்கு முன் வைக்கிறான். மனுஷனின் ஒவ்வொரு கிரியையையும் செயலையும் நான் வெறுக்கிறேன், இழிவாகக் கருதுகிறேன். மனுஷர்களுக்கு மத்தியில், நான் விரும்பும் கிரியையைச் செய்த ஒருவரும் இருந்ததில்லை. மனுஷர்கள் வேண்டுமென்றே என்னை சத்துருவாகப் பார்ப்பது போலவும், என் கோபத்தை வேண்டுமென்றே ஈர்ப்பது போலவும்: அவர்கள் அனைவரும் எனக்கு முன்னால், முன்னும் பின்னுமாக அணிவகுத்துச் செல்கிறார்கள், தங்கள் சித்தத்தை என் கண்களுக்கு முன்பாக நிகழ்த்துகிறார்கள். மனுஷர்களுக்கு மத்தியில் என் பொருட்டு வாழும் ஒருவர் கூட இல்லை, இதன் விளைவாக, முழு மனுஷ இனத்தின் பிரசன்னத்துக்கும் மதிப்போ அர்த்தமோ இருப்பதில்லை, இதனால் மனுஷகுலம் வெற்றிடத்தில் வாழ்கிறது. அப்படியிருந்தும், மனுஷர்கள் இன்னும் விழிக்க மறுக்கின்றனர், ஆனால் தொடர்ந்து எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, அதன் மாயையில் விடாப்பிடியாக இருக்கின்றனர்.
மனுஷர்கள் கடந்து வந்த எல்லாச் சோதனைகளிலும், அவர்கள் ஒருபோதும் என்னை மகிழ்விக்கவில்லை. அவர்களின் கொடூரமான அக்கிரமத்தின் காரணமாக, மனுஷகுலம் என் நாமத்துக்கு சாட்சி கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; மாறாக, அவர்கள் வாழ்வாதாரத்திற்காக என்னை நம்பியிருப்பதனால் “வேறு வழியில் ஓடுகிறார்கள்”. மனுஷனின் இருதயம் முழுவதுமாக என்னிடம் திரும்புவதில்லை, ஆகவே, அவன் ஏராளமான காயங்களுடன், அவனது உடல் அசுத்தங்களால் மூடப்படும்வரைச் சாத்தான் அவனை வீணடிக்கிறான். ஆனால் தனது முகம் எவ்வளவு கேவலமானது என்பதை மனுஷன் இன்னும் உணரவில்லை: இப்போது வரை சாத்தானை என் முதுகுக்குப் பின்னால் வணங்குகிறான். இந்த காரணத்திற்காக, அவன் தன்னை ஒருபோதும் விடுவிக்க முடியாதபடிக்குக் கோபத்துடன் நான் அவனை அடிமட்ட பாதாளத்துக்குள் தள்ளிவிடுகிறேன். அப்படியிருந்தும், அவனது பரிதாபகரமான அழுகையின் மத்தியில், மனுஷன் தனது மனதைச் சீர்திருத்த மறுக்கிறான், கசப்பான முடிவுக்கு என்னை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறான், அதன் மூலம் என் கோபத்தை வேண்டுமென்றே தூண்டிவிடுகிறான். அவன் செய்த காரியத்தின் அடிப்படையில், நான் அவனை பாவியாகக் கருதி, என் அரவணைப்பை அவனுக்கு மறுக்கிறேன். முதன்முதலில், தேவதூதர்கள் எனக்குச் சேவை செய்தார்கள், எந்த மாற்றமும் இல்லாமல் எனக்குக் கீழ்ப்படிந்தார்கள், ஆனால் மனுஷன் ஏதோ என்னிடமிருந்து வராமல் சாத்தானிலிருந்து பிறந்தவன் போல எப்போதுமே சரியாக எதிர்மாறாகவே செய்திருக்கிறான். அந்தந்த இடங்களில் உள்ள தேவதூதர்கள் அனைவரும் எனக்கு மிகுந்த பக்தியைத் தருகிறார்கள்; அவர்கள் சாத்தானின் வல்லமைகளால் பாதிக்கப்படுவதில்லை, மேலும் தங்கள் கடமையை மட்டுமே நிறைவேற்றுகிறார்கள். தேவதூதர்களால் பாலூட்டப்பட்டு போஷிக்கப்பட்ட திரளான என் குமாரர்கள் மற்றும் என் ஜனங்கள் அனைவருமே பலமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்கிறார்கள், அவர்களில் ஒருவர் கூட பலவீனமானவராகவோ வலுகுறைந்தவர்களாகவோ இல்லை. இதுவே என் கிரியை, என் அதிசயம். தொடர்ச்சியான பீரங்கி முழக்கம் என் ராஜ்யத்தின் ஸ்தாபனத்தைத் துவக்குகிறது, தேவதூதர்கள், இசைக்குழுவின் தாளங்களுக்கு ஏற்ப நடந்து வந்து, என் ஆய்வுக்கு அடிபணிய என் பிரசங்க மேடைக்கு முன் வருகிறார்கள், ஏனென்றால் அவர்களின் இருதயங்கள் தூய்மையற்ற விஷயங்களோ மற்றும் விக்கிரங்களோ இல்லாதவை, மேலும் என் ஆய்விலிருந்து அவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை.
பலத்தக் காற்றின் அலறலில், வானம் ஒரே நொடியில் கீழிறங்கி வந்து, எல்லா மனுஷர்களையும் மூச்சுத் திணறச் செய்கிறது, இதனால் அவர்கள் விரும்பியபடி என்னை அழைக்க முடியவில்லை. அது தெரியாமல், மனுஷர்கள் அனைவரும் வீழ்ந்துபோய்விட்டனர். விருட்சங்கள் காற்றில் முன்னும் பின்னுமாக ஆடுகின்றன, அவ்வப்போது கிளைகள் ஒடிவது கேட்கின்றன, வாடிய இலைகள் அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன. பூமி திடீரென இருண்டதாகவும், பாழடைந்ததாகவும் உணர்கிறது, மேலும் இலையுதிர்காலத்தில் ஏற்படும் எந்தப் பேரழிவும் எந்த நேரத்திலும் தங்களைத் தாக்கும் என்ற எண்ணத்தில் ஜனங்கள் தங்களை இறுக்கமாக அணைத்துக்கொள்கிறார்கள். தங்கள் துக்கத்தை ஒருவரிடம் அழுதுகொண்டே கூறுவது போல மலையிலுள்ள பறவைகள் அங்கும் இங்கும் பறக்கின்றன; மலைக் குகைகளில், சிங்கங்கள் தங்கள் கர்ஜனைகள் மூலம் ஜனங்களை பயமுறுத்துகின்றன, அவர்களின் மஜ்ஜையை உறையவைத்து, மயிர்க்கூச்சரிய வைக்கின்றன, மேலும் இது ஓர் அச்சுறுத்தும் உணர்வு போல மனுஷகுலத்தின் முடிவைக் குறிக்கிறது. எல்லா மனுஷர்களும் என் சித்தத்திற்குக் கீழ்ப்படிய விரும்பாமல் பரலோகத்தில் உள்ள சர்வவல்லமையுள்ள கர்த்தரிடம் மௌனமாக ஜெபிக்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய நீரோடையில் ஓடும் நீரின் சத்தத்தால் பலத்தக் காற்றை எவ்வாறு தடுக்க முடியும்? மனுஷர்களுடைய வேண்டுதல்களின் சத்தத்தால் திடீரென்று அதை எவ்வாறு நிறுத்த முடியும்? மனுஷனின் கோழைத்தனத்துக்காக இடிமுழக்கத்தின் இருதயத்தில் உள்ள கோபத்தை எவ்வாறு தணிக்க முடியும்? மனுஷன் காற்றில் முன்னும் பின்னுமாக ஆடுகிறான்; மழையிலிருந்து தன்னைப் பாதுகாக்க அவன் அங்கும் இங்கும் ஓடுகிறான்; என் கோபத்தின் மத்தியில், மனுஷர்கள் அதிர்ந்து நடுங்குகிறார்கள், ஏதோ நான் எப்போதும் மனுஷனின் மார்பை நோக்கித் துப்பாக்கியை நீட்டியிருப்பது போலவும், அவன் என் நண்பன் இல்லாமல் என் சத்துரு போலவும், நான் அவர்களின் சரீரங்களில் என் கையை வைப்பேன் என்ற ஆழ்ந்த பயத்தில் இருக்கிறார்கள். மனுஷன் அவனுக்கான எனது உண்மையான நோக்கங்களை ஒருபோதும் கண்டுபிடித்ததில்லை, என் உண்மையான நோக்கங்களை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை, ஆகவே, அறியாமல், அவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறான்; அறியாமல், அவன் என்னை எதிர்க்கிறான்; மேலும், அர்த்தமில்லாமல், அவன் என் அன்பையும் பார்த்திருக்கிறான். என் கோபத்தின் மத்தியில் என் முகத்தைப் பார்ப்பது மனுஷனுக்குக் கடினம். நான் என் கோபம் எனும் கார்மேகங்களில் மறைந்திருக்கிறேன், முழு பிரபஞ்சத்தின் மேல் இடிகளுக்கு இடையே நான் நின்றுகொண்டு, என் இரக்கத்தைக் கீழே மனுஷனுக்கு அனுப்புகிறேன். மனுஷன் என்னை அறியாததால், என் நோக்கத்தை புரிந்துகொள்ளத் தவறியதற்காக நான் அவனைத் தண்டிப்பதில்லை. மனுஷர்களின் பார்வையில், நான் அவ்வப்போது என் கோபத்தை வெளிப்படுத்துகிறேன், அவ்வப்போது என் புன்னகையை நான் காட்டுகிறேன், ஆனாலும் என்னைப் பார்க்கும்போது கூட, மனுஷன் என் மனநிலையை முழுவதுமாகப் பார்த்ததில்லை, மேலும் எக்காளத்தின் மெல்லிய சத்தத்தைக் கேட்க முடியவில்லை. ஏனெனில் அவன் மிகவும் உணர்ச்சியற்றவனாகவும் முட்டாள்தனமாகவும் வளர்ந்துள்ளான். இது, மனுஷனின் நினைவுகளில் எனது சாயல் இருப்பதைப் போலவும், அவனது எண்ணங்களில் எனது உருவம் இருப்பதைப் போலவும் இருக்கிறது. இருப்பினும், இன்றுவரை மனுஷர்களின் முன்னேற்றத்தின் மூலம், என்னை உண்மையிலேயே பார்த்த ஒரு நபர் கூட இருந்ததில்லை, ஏனென்றால் மனுஷனின் மூளை மிகவும் வறிய நிலையில் உள்ளது. அந்த மனுஷன் என்னைத் “துண்டித்துவிட்டான்”, ஏனென்றால் அவனுடைய விஞ்ஞானம் போதுமானதாக வளர்ச்சியடையாததால், அவனது விஞ்ஞான ஆராய்ச்சி இதுவரை எந்த முடிவுகளையும் தரவில்லை. எனவே, “என் சாயல்” என்ற தலைப்பு எப்போதுமே முழுமையாக வெறுமையாகத் தான் உள்ளது, அதை நிரப்ப யாரும் இல்லை, ஓர் உலகச் சாதனையை முறியடிக்க யாரும் இல்லை, ஏனென்றால் பெரும் துரதிர்ஷ்டத்தின் மத்தியில், மனுஷகுலம் தற்போது தனது காலடிகளைப் பராமரிப்பது கணிக்க முடியாத ஆறுதலாக இருக்கிறது.
மார்ச் 23, 1992