அத்தியாயம் 44
ஜனங்கள் எனது கிரியையை ஒரு துணைக் கிரியையாகக் கருதுகிறார்கள்; அவர்கள் அதற்காக உணவையோ உறக்கத்தையோ கைவிடுவதில்லை, எனவே, என் மீதான அவனது அணுகுமுறைக்கு ஏற்றவாறு அவனிடம் தகுந்த கோரிக்கைகளை வைப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் ஒருமுறை மனுஷனுக்கு அதிகக் கிருபையையும் அநேக ஆசீர்வாதங்களையும் கொடுத்ததை நினைவுகூர்கிறேன், ஆனால், இவற்றைப் பறித்துக்கொண்டு, அவன் உடனடியாக தூரம்போய்விட்டான். நான் அறியாமலேயே அவனுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டேன் என்பது போல் இருந்தது. எனவே, மனுஷன் எப்போதும் தன் சொந்த கருத்துக்களைக் கொண்டே என்னை நேசித்திருக்கிறான். மனுஷன் என்னை உண்மையாக நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; இருப்பினும், இன்றும் ஜனங்கள் தங்களின் உண்மையான அன்பை என்னிடம் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அவர்களின் கற்பனையில், அவர்கள் தங்கள் உண்மையான அன்பை என்னிடம் கொடுத்தால், அவர்களுக்கென்று ஒன்றும் இல்லாது போய்விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். நான் எதிர்க்கும்போது, அவர்களின் முழு சரீரமும் நடுங்குகிறது—ஆயினும் அவர்கள் தங்கள் உண்மையான அன்பை எனக்குக் கொடுக்க விருப்பமில்லாதிருக்கிறார்கள். அவர்கள் எதற்காகவோ காத்திருப்பது போல் இருக்கிறது, அதனால் அவர்கள் முன்னோக்கிப் பார்க்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உண்மையை என்னிடம் ஒருபோதும் சொல்வதில்லை. அவர்களின் வாயில் பசை ஒட்டப்பட்டிருப்பது போல, அவர்களின் பேச்சு தொடர்ந்து தடுமாறிக்கொண்டே இருக்கிறது. மனுஷனுக்கு முன், நான் இரக்கமற்ற முதலாளியாகிவிட்டேன் என்பது போலத் தோன்றுகிறது. ஜனங்கள் எப்போதும் எனக்குப் பயப்படுகிறார்கள்: என்னைப் பார்த்தவுடன், அவர்களின் சூழ்நிலைகளைப் பற்றி நான் அவர்களிடம் என்ன கேட்பேனோ என்று பயந்து, அவர்கள் உடனடியாக ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து விடுகிறார்கள். ஜனங்கள் ஏன் தங்கள் “சக கிராமவாசிகளை” உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனால் ஆவியில் உயர்ந்த என்னை நேசிக்க முடிவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இதன் காரணமாக, நான் பெருமூச்சுவிட்டுக் கூறுகிறேன்: மனித உலகில் ஜனங்கள் ஏன் எப்போதும் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்? என்னால் ஏன் மனுஷனின் அன்பைச் சுவைக்க முடியவில்லை? நான் மனித குலத்தில் ஒருவனல்ல என்பதனாலா? ஜனங்கள் எப்போதும் என்னை மலைகளிலிருந்து வரும் காட்டுமிராண்டியைப் போல நடத்துகிறார்கள். ஒரு சாதாரண மனுஷனை உருவாக்கும் அனைத்து உறுப்புகளும் என்னிடம் இல்லாதது போல் உள்ளது, எனவே, எனக்கு முன், ஜனங்கள் எப்போதும் உயர்ந்த தார்மீகத் தொனியைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் என்னைக் கண்டிப்பதற்காக அடிக்கடி என்னை அவர்களுக்கு முன்பாக இழுத்துச் செல்கிறார்கள், பள்ளிப் பருவத்திற்கு முன்னான பாலர் வயதுக் குழந்தையைத் திட்டுவது போல் என்னைத் திட்டுகிறார்கள்; ஜனங்கள் எப்போதும் எனக்கு முன் கல்வி போதிப்பவரின் பங்கை வகிக்கிறார்கள், ஏனென்றால் அவர்களின் நினைவுகளில், நான் பகுத்தறிவற்ற மற்றும் படிக்காத ஒருவனாய் இருக்கிறேன். நான் அவர்களின் தோல்விகளுக்காக ஜனங்களை தண்டிப்பதில்லை, மாறாக, அவர்களை வழக்கமான “பொருளாதார உதவி” பெற அனுமதித்து, அவர்களுக்குத் தகுந்த உதவிகளை வழங்குகிறேன். மனுஷன் எப்பொழுதும் பேரழிவின் மத்தியில் வாழ்ந்து, தப்பித்துச் செல்ல கஷ்டப்படுவதாலும், இந்தப் பேரழிவிற்கு மத்தியில், அவன் எப்போதும் என்னைக் கூப்பிட்டுக் கொண்டிருப்பதாலும், நான் அவன் கைகளில் “தானியப் பொருட்களை” சரியான நேரத்தில் வழங்கி, எல்லா ஜனங்களையும் புதிய சகாப்தத்தின் பெரிய குடும்பத்தில் வாழவும், மற்றும் பெரிய குடும்பத்தின் அரவணைப்பை அனுபவிக்கவும் அனுமதிப்பேன். நான் மனுஷர்கள் மத்தியில் உள்ள கிரியையைக் கவனிக்கும்போது, அவனுடைய பல குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன் விளைவாக, நான் அவனுக்கு உதவி செய்கிறேன். இந்த நேரத்தில் கூட, மனுஷர்களிடையே விதிவிலக்கான வறுமை இன்னும் உள்ளது, எனவே “வறுமையில் உள்ள பகுதிகளுக்கு” நான் தகுந்த கவனிப்பை வழங்கியிருக்கிறேன், அவர்களை வறுமையிலிருந்து தூக்கி எடுத்திருக்கிறேன். எல்லா ஜனங்களும் தங்களால் இயன்ற அளவு என் கிருபையை அனுபவிக்க அனுமதிக்கும் வகையில் நான் கிரியை செய்யும் வழிமுறை இதுதான்.
பூமியில் உள்ள ஜனங்கள் அறியாமலேயே சிட்சையை அனுபவிக்கிறார்கள், அதனால், பூமியில் என் கிருபையை அனுபவிக்கும் அதிர்ஷ்டத்தை அவர்களுக்கு அனுமதித்து, நான் என் கையை நீட்டி அவர்களை என் பக்கமாக இழுத்துக்கொள்கிறேன். பூமியில் எது வெறுமையாக இல்லை மற்றும் மதிப்பு இல்லாமல் இருக்கிறது? மனுஷனின் உலகில் எல்லா இடங்களிலும் நான் நடந்து செல்கிறேன், பல புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் மற்றும் மனுஷனை மகிழ்விக்கும் இயற்கை காட்சிகள் இருந்தாலும், நான் செல்லும் எல்லா இடங்களிலும் நீண்ட காலமாக ஜீவனற்றது போல ஆகியிருக்கிறது. அப்போதுதான் பூமியை இருண்டதாகவும் பாழடைந்ததாகவும் உணர்கிறேன்: பூமியில், ஜீவன் நீண்ட காலத்திற்கு முன்பாகவே காணாமல் போய்விட்டது. மரணத்தின் துர்நாற்றம் மட்டுமே உள்ளது, எனவே இந்த துன்பமான நிலத்தை விட்டு வெளியேற விரைந்து செல்லுமாறு நான் மனுஷனை அழைத்திருக்கிறேன். நான் பார்ப்பதெல்லாம் வெறுமையை நினைவூட்டுகிற நறுமணம் மட்டுமே ஆகும். நான் தெரிந்துகொண்டவர்களின் மீதே என் கரத்தில் உள்ள ஜீவனை வீசும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்; உடனடியாக, நிலத்தில் ஒரு பசுமையான பகுதி காணப்படுகிறது. பூமியில் உள்ள ஜீவனை ஜனங்கள் அனுபவிக்கத் தயாராக உள்ளனர், ஆனால் இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை; ஜனங்கள் எப்போதும் பூமியில் உள்ள பொருட்களின் மீது அன்பு வைக்கிறார்கள், அவற்றின் வெறுமையை ஒருபோதும் பார்ப்பதில்லை, இன்று இந்த நிலையை அடைந்துவிட்டாலும், பூமியில் ஏன் ஜீவன் இல்லை என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இன்று, நான் பிரபஞ்சத்திற்குள் நடக்கும்போது, எல்லா ஜனங்களும் நான் இருக்கும் இடத்தின் கிருபையை அனுபவிக்க முடிகிறது, மேலும் அவர்கள் இதை ஒரு சொத்தாகப் பயன்படுத்துகிறார்கள், ஒருபோதும் ஜீவனுக்கான ஆதாரத்தைத் பின்தொடர்வதில்லை. அவர்கள் அனைவரும் நான் கொடுப்பதை ஒரு சொத்தாகப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவர்களில் யாரும் ஜீவனுக்கான உண்மையான செயல்பாட்டைச் செய்ய முயற்சிப்பதில்லை. இயற்கை வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது அல்லது மேம்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை, இதனால் அவர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர். நான் மனுஷர்களிடையே வசிக்கிறேன், நான் மனுஷர்களிடையே வாழ்கிறேன், ஆனாலும் இன்று, மனுஷன் இன்னும் என்னை அறியவில்லை. நான் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருப்பதன் விளைவாக ஜனங்கள் எனக்கு நிறைய உதவி செய்திருந்தாலும், நான் இன்னும் மனுஷனுடன் சரியான நட்பை ஏற்படுத்தவில்லை என்பது போல் உள்ளது, மேலும் மனுஷீக உலகின் நியாயமற்ற தன்மையை நான் இன்னும் உணர்கிறேன்; எல்லாவற்றிற்கும் மேலாக, என் பார்வையில், மனித இனமானது வெறுமையாக உள்ளது, மேலும் மனுஷர்கள் மத்தியில் எந்த மதிப்புமிக்க பொக்கிஷமும் இல்லை. மனுஷ வாழ்க்கையைப் பற்றி ஜனங்களுக்கு என்ன பார்வை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், மொத்தத்தில், எனக்குச் சொந்தமானது “வெறுமை” என்ற வார்த்தையிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கிறது. இதனால் ஜனங்கள் என்னைப் பற்றி தவறாக நினைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால், நான் மிகவும் வெளிப்படையாக இருக்கிறேன், நான் அமைதியாக இருக்க முயற்சிப்பதில்லை. இருப்பினும், நான் என்ன நினைக்கிறேனோ அதைக் கூர்ந்து கவனிக்கும்படி ஜனங்களுக்கு அறிவுறுத்துகிறேன், ஏனென்றால், என் வார்த்தைகள், எப்படி இருந்தாலும், அவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கும். “வெறுமை” பற்றி ஜனங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தக் கிரியையில் கொஞ்சம் முயற்சி செய்வார்கள் என்பது என் நம்பிக்கையாகும். ஒரு நடைமுறை வழியில் மனுஷ வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவும், மேலும் அதில் மதிப்புமிக்க “மறைக்கப்பட்ட தாது நரம்புகள்” ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று பார்ப்பதற்காகவும் நன்றாக செயல்படுவார்கள். நான் ஜனங்களின் நேர்மறை எண்ணத்தைக் குறைக்க முயற்சிக்கவில்லை; என்னுடைய வார்த்தைகளிலிருந்து அவர்கள் கொஞ்சம் அறிவைப் பெற வேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன். நான் எப்போதும் மனுஷனுடைய காரியங்களுக்காக அவசரப்படுகிறேன், ஆனால் இப்போதும் அவைகள் அப்படியே இருக்கின்றன, ஜனங்கள் இன்னும் நன்றி சொல்ல ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவர்கள் மிகவும் அலுவலாக இருப்பதைப் போல, அதைச் செய்ய மறந்திருந்தார்கள். இன்றும் கூட, நாள் முழுவதும் மனுஷனின் அவசரம் என்ன விளைவை ஏற்படுத்தியது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இன்றும், ஜனங்களின் இருதயங்களில் எனக்கென்று இடமில்லை, அதனால் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குகிறேன். “என்னை உண்மையாக நேசிக்கும் இருதயத்தை ஏன் ஜனங்கள் பெற்றிருக்கவில்லை” என்று ஆராய்ச்சி செய்யும் பணியில் என்னை நானே ஈடுபடுத்த ஆரம்பித்திருக்கிறேன். நான் மனுஷனை “அறுவை சிகிச்சை மேஜையில்” ஏற்றுவேன், நான் அவனது “இருதயத்தை” கூறுபோட்டு, வழியைத் தடை செய்வதும் என்னை உண்மையாய் நேசிப்பதைத் தடுப்பதும் எது என்று பார்ப்பேன். “கத்தியின்” தாக்கத்தின் கீழ், ஜனங்கள் தங்கள் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, நான் தொடங்கும்படிக்குக் காத்திருக்கிறார்கள், ஏனென்றால், இந்த நேரத்தில், அவர்கள் முழுமையாக ஒப்புக்கொண்டனர்; அவர்களின் இருதயங்களில், நான் வேறு பல கலப்படங்களைக் காண்கிறேன். இவற்றில் முதன்மையானது ஜனங்களின் சொந்த விஷயங்களாகும். அவர்கள் சரீரத்திற்கு வெளியே சில விஷயங்கள் இருந்தாலும், அவர்களின் சரீரத்திற்குள் உள்ளவைகள் எண்ணற்றவையாக இருக்கின்றன. மனுஷனின் இருதயம் ஒரு பெரிய சேமிப்புப் பெட்டியைப் போல, ஐசுவரியத்தால் நிரம்பி இருக்கிறது, அவை அனைத்தும் ஜனங்களுக்கு ஒருபோதும் தேவைப்படாதவைகளாகும். ஜனங்கள் ஏன் என்னிடம் எந்த விதமான மரியாதையும் செலுத்துவதில்லை என்பது இந்த நேரத்தில்தான் எனக்குப் புரிகிறது: அது அவர்கள் மிகுந்த தன்னிறைவைக் கொண்டிருப்பதால்தான்—அவர்களுக்கு என் உதவிக்கான தேவை என்ன இருக்கிறது? எனவே, நான் மனுஷனை விட்டு விலகுகிறேன், ஏனென்றால் ஜனங்களுக்கு என் உதவி தேவையில்லை; நான் ஏன் “வெட்கமின்றி நடந்து” அவர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டும்?
எனக்கு நானே உதவி செய்ய முடியாது என்பது போல, நான் எப்போதும் மனுஷர்கள் மத்தியில் பேசத் தயாராக இருந்தது ஏன் என்று யாருக்குத் தெரியும். இதனால், ஜனங்கள் என்னை மதிப்பற்றவராகப் பார்க்கிறார்கள், மேலும் நான் ஒரு செப்பு நாணயத்தை விட குறைவான மதிப்புடையவர் போல் எப்போதும் என்னை நடத்துகிறார்கள்; அவர்கள் என்னை மரியாதைக்குரிய ஒருவராக நடத்துவதில்லை. அவர்கள் என்னை நேசிக்கவில்லை, அவர்கள் விரும்பும் போதெல்லாம் என்னை வீட்டிற்கு இழுத்துச் செல்கிறார்கள், பின்னர் மீண்டும் என்னை வெளியே தூக்கி எறிந்துவிட்டு, என்னைப் பொது ஜனங்கள் முன் “வெளிப்படுத்துகிறார்கள்”. மனுஷனின் இழிவான நடத்தையின் மீது எனக்கு மிகுந்த வெறுப்பு உள்ளது, எனவே மனுஷன் மனச்சாட்சி இல்லாதவன் என்று நான் வெளிப்படையாக சொல்கிறேன். ஆனால் ஜனங்கள் ஒத்துப்போகாதவர்கள்; என் வார்த்தைகள் யதார்த்தத்துடன் முரண்படுகின்றன என்று கூறியும், நான் அவர்களை இழிவுபடுத்துகிறேன் என்று கூறியும் அவர்கள் தங்கள் “வாள் மற்றும் ஈட்டிகளை” எடுத்து என்னுடன் யுத்தம் செய்கிறார்கள்—ஆனால் அவர்களின் வன்முறை நடத்தையின் நிமித்தமாக நான் அவர்களைப் பழிவாங்கவில்லை. ஜனங்களை வெல்வதற்கும், அவர்களைத் தங்களைப் பற்றியே வெட்கப்படச் செய்வதற்கும் நான் வெறுமனே என் சத்தியங்களைப் பயன்படுத்துகிறேன், அதன் பிறகு அவர்கள் அமைதியாகப் பின்வாங்குகிறார்கள். நான் மனுஷனுடன் போட்டியிடுவதில்லை, ஏனென்றால் அதனால் எந்த நன்மையும் இல்லை. நான் என் கடமையைச் செய்வதில் நிலைத்திருப்பேன், மேலும் மனுஷன் எனக்கு எதிராகச் செயல்படாமல் அவனுடைய கடமையில் நிலைத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இப்படிச் சமாதானமாகப் பழகுவது நல்லதல்லவா? நமது உறவை ஏன் காயப்படுத்த வேண்டும்? இத்தனை வருடங்களாகப் பழகிவிட்டோம்—இருவருக்கும் பிரச்சனையை உண்டாக்க வேண்டிய அவசியம் என்ன? அது நமது நற்பெயருக்கு முற்றிலும் பயனளிக்காது அல்லவா? நம்முடைய நட்பு பல வருட கால “பழைய நட்பு”, ஒரு “பழைய பழக்கம்”—கடுமையான நிபந்தனைகளில் பிரிந்து செல்வதற்கான தேவை என்ன இருக்கிறது? அப்படிச் செய்தால் நன்றாக இருக்குமா? ஜனங்களுக்கு எது நல்லது என்பதை அவர்கள் அறியும்படி, அவர்கள் விளைவின் மீது கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். இன்றைய மனுஷனைப் பற்றிய எனது அணுகுமுறை அவனது வாழ்நாள் முழுவதுமான விவாதத்திற்குப் போதுமானது—ஜனங்கள் ஏன் எப்போதும் என் தயவை உணரத் தவறுகிறார்கள்? அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்கான ஆற்றல்கள் இல்லாததாலா? அவர்களுக்குப் போதுமான அளவு சொற்களஞ்சியம் இல்லையா? அவர்கள் ஏன் எப்போதும் வார்த்தைகள் கிடைக்காமல் இருக்கிறார்கள்? நான் எப்படி என்னை நடத்துகிறேன் என்பதை அறியாதவர் யார்? ஜனங்கள் எனது செயல்களைப் பற்றி பரிபூரணமாக அறிந்திருக்கிறார்கள்—அவர்கள் எப்போதும் மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள், எனவே அவர்கள் ஒருபோதும் தங்கள் சொந்த நலன்களை ஒதுக்கி வைக்கத் தயாராக இல்லை. ஒரு வாக்கியம் அவர்களின் சொந்த நலன்களைத் தொட்டால், அவர்கள் அதின் ஆதிக்கத்தைப் பெறும் வரை ஓய்வெடுக்க மறுக்கிறார்கள்—அதனால் என்ன பயன் இருக்கிறது? ஜனங்கள் தங்களால் என்ன பங்களிக்க முடியும் என்பதில் போட்டியிட முடியாது, ஆனால் அவர்கள் எதைப் பெற முடியும் என்பதில்தான் போராட முடியும். அவர்களது அந்தஸ்தில் இன்பம் இல்லை என்றாலும், அவர்கள் அதை விலையேறப்பெற்ற பொக்கிஷமாகக் கூட கருதி அதை மிகவும் நேசிக்கிறார்கள்—அதனால் அவர்கள் அந்தஸ்தின் நன்மைகளை விட்டுவிடுவதை விட என் சிட்சையைச் சகித்துக்கொள்வார்கள். ஜனங்கள் தங்களைப் பற்றி மிக உயர்வாக நினைக்கிறார்கள், எனவே தங்களை ஒதுக்கி வைக்க ஒருபோதும் தயாராக இல்லை. மனுஷனைப் பற்றிய எனது மதிப்பிடுதலில் சில சிறிய தவறுகள் இருக்கலாம், அல்லது கடுமையான அல்லது கருணையற்ற ஒரு முத்திரையை நான் அவனுக்குப் போட்டிருக்கலாம், ஆனால், மொத்தத்தில், ஜனங்கள் இதை ஓர்எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வார்கள் என்பதுதான் எனது நம்பிக்கையாகும்.
மே 21, 1992