முன்னுரை

“முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்” என்பது தேவனின் அடையாளத்திலேயே கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடுகளின் இரண்டாவது பகுதியாகும். அவை 1992 பிப்ரவரி 20 முதல் 1992 ஜூன் 1 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்குகின்றன, மற்றும் மொத்தம் நாற்பத்தேழு அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த வாக்கியங்களில் தேவனுடைய வார்த்தைகளின் முறை, உள்ளடக்கம் மற்றும் பார்வை ஆகியவை முற்றிலும் “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” போலல்லாமல் உள்ளன. “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” ஜனங்களின் வெளிப்புற நடத்தை மற்றும் அவர்களின் எளிய ஆவிக்குரிய ஜீவிதங்களை வெளிப்படுத்துகின்றன மற்றும் அவைகளுக்கு வழிகாட்டுகின்றன. இறுதியில், இது “ஊழியம் செய்பவர்களின் உபத்திரவத்துடன்” முடிவடைகிறது. எப்படியாயினும், “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்,” ஊழியம் செய்பவர்களாக ஜனங்களுடைய அடையாளத்தின் இறுதியுடனும், தேவனுடைய ஜனங்களாக அவர்களுடைய ஜீவனின் ஆரம்பத்துடனும் தொடங்குகின்றன. இது அவர்கள், அக்கினிக் கடலின் உபத்திரவம், மரண உபத்திரவம் மற்றும் தேவனை நேசிக்கும் நேரத்திற்கு உட்படும் அந்தக் காலகட்டத்தில், தேவனுடைய கிரியையின் இரண்டாவது உச்சத்திற்கு ஜனங்களை வழிநடத்துகிறது. இந்தப் பல படிகள் தேவனுக்கு முன்பாக மனுஷனுடைய அவலட்சணத்தையும், அதோடு கூட மனுஷனுடைய உண்மையான முகத்தையும் முழுமையாக வெளிப்படுத்துகின்றன. இறுதியாக, தேவன் மனுஷனுடன் தான் அங்கம் வகிக்கிற ஓர் அத்தியாயத்துடன் முடிக்கிறார், இவ்வாறு தேவன் முதல் ஜனக்கூட்டத்தை ஜெயங்கொள்ளும் இந்த மனுவுருவாதலின் எல்லாப் படிகளையும் நிறைவு செய்கிறார்.

“முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்” என்பதில், தேவன் தமது வார்த்தைகளை ஆவியின் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துகிறார். அவர் பேசும் விதம் சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தால் அடைய முடியாததாகும். மேலும், அவரது வார்த்தைகளின் சொல்லகராதி மற்றும் பாணி அழகாகவும், உந்தக் கூடிய வகையிலும் உள்ளது, மேலும் மனித இலக்கியத்தின் எந்த வடிவமும் அவற்றின் இடத்தை அடைய முடியாது. அவர் மனுஷனை வெளிப்படுத்துவதற்கான வார்த்தைகள் துல்லியமானவைகளும், அவை எந்தத் தத்துவத்தாலும் மறுக்க முடியாதவைகளுமாய் இருக்கின்றன, மேலும் அவைகள் எல்லா ஜனங்களையும் கீழ்ப்படிதலுக்குள் கொண்டுவருகின்றன. ஒரு கூர்மையான பட்டயத்தைப் போல, தேவன் மனிதனை நியாயந்தீர்க்கிற வார்த்தைகள் ஜனங்களுடைய ஆத்துமாவின் ஆழத்திற்குள் நேராக வெட்டுகின்றன, மறைந்துகொள்ள அவைகளுக்கு இடங்கொடாமல் மிகவும் ஆழமாக வெட்டுகின்றன. அவர் ஜனங்களை ஆறுதல்படுத்தும் வார்த்தைகளானது இரக்கத்தையும் காருண்யத்தையும் கொண்டுள்ளன, அவைகள் அன்பான தாயின் அரவணைப்பைப் போல இதமாக இருக்கின்றன, மேலும் அவைகள் ஜனங்களை முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பாக உணர வைக்கின்றன. இந்த வாக்கியங்களின் ஒரே மகத்தான பண்பு என்னவென்றால், இந்தக் கட்டத்தில், தேவன், யேகோவா அல்லது இயேசு கிறிஸ்துவின் அடையாளத்தைப் பயன்படுத்திப் பேசுவதுமில்லை, கடைசி நாட்களின் கிறிஸ்துவின் அடையாளத்தைப் பயன்படுத்திப் பேசுவதுமில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய இயற்கையாய் அமையப்பெற்ற சிருஷ்டிகர் என்னும் அடையாளத்தைப் பயன்படுத்தி, அவர் தம்மைப் பின்பற்றும் அனைவருடனும் மற்றும் அவரைப் பின்பற்றவிருக்கும் அனைவருடனும் பேசுகிறார் மற்றும் போதிக்கிறார். உலகத்தின் சிருஷ்டிப்பு முதல் தேவன் முழு மனுக்குலத்திடமும் பேசுவது இதுவே முதல் முறை என்று சொல்வது நியாயமானது. தேவன் இதற்கு முன்பு ஒருபோதும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்துடன் இவ்வளவு விரிவாகவும், முறையாகவும் பேசியதில்லை. நிச்சயமாக, அவர் எல்லா மனுஷர்களிடமும் மிக அதிகமாகவும் நீண்ட நேரமாகவும் பேசியது இதுவே முதல் முறையாகும். இது முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாகும். இன்னும் என்னவென்றால், மனித குலத்தின் மத்தியில் தேவனால் வெளிப்படுத்தப்பட்ட முதல் உரையாகிய, அவர் ஜனங்களை வெளிப்படுத்துகிற, அவர்களை வழிநடத்துகிற, அவர்களை நியாயந்தீர்க்கிற, மேலும் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுகிற இந்த வாக்கியங்களை வடிவமைக்கின்றன, மேலும், ஜனங்கள் அவருடைய அடிச்சுவடுகளையும், அவர் இருக்கிற இடத்தையும், தேவனுடைய மனநிலையையும், தேவன் எதைப் பெற்றிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதையும், தேவனுடைய எண்ணங்களையும், மனிதகுலத்திற்கான அவரது அக்கறையையும் ஜனங்கள் அறிந்துகொள்ள தேவன் அனுமதிக்கும் முதல் வாக்கியங்களும் இதுவே ஆகும். சிருஷ்டிப்பு முதல், தேவன் மூன்றாம் வானத்திலிருந்து மனிதகுலத்திற்குப் பேசிய முதல் வாக்கியங்கள் இவைகளே என்றும், தேவன் தனது உள்ளார்ந்த அடையாளத்தைப் பயன்படுத்தி வார்த்தைகளுக்கு மத்தியில் மனிதகுலத்திற்குத் தனது இதயத்தின் குரலைத் தோன்றச் செய்ததும், வெளிப்படுத்தியதும் இதுவே முதல் முறை என்றும் சொல்லலாம்.

இந்த வெளிப்பாடுகள் ஆழமானவைகளும் மற்றும் புரிந்துகொள்ள முடியாதவைகளுமாகும்; அவற்றைப் புரிந்துகொள்வதும் எளிதல்ல, தேவனுடைய வார்த்தைகளின் தோற்றங்களையும் நோக்கங்களையும் கிரகித்துக் கொள்ளவும் இயலாது. இவ்வாறு, மனுஷனுக்கு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழியைப் பயன்படுத்தி வாக்கியங்களின் பெரும்பகுதிக்குத் தெளிவைக் கொண்டுவரும்படி, ஒவ்வொரு அத்தியாயத்திற்குப் பிறகும் கிறிஸ்து ஒரு விளக்கத்தைச் சேர்த்துள்ளார். இது வெளிப்பாடுகளுடன் இணைந்து, தேவனுடைய வார்த்தைகளை அனைவரும் புரிந்துகொள்வதையும் அறிந்து கொள்வதையும் எளிதாக்குகிறது. இந்த வார்த்தைகளை “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்” என்பதற்கு ஓர் இணைப்பாக நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். அவற்றில், கிறிஸ்து எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்கங்களை அளிக்கிறார். இரண்டின் கலவையானது தெய்வீகத்தன்மை மற்றும் மனிதத்தன்மை ஆகிய இரண்டின் மிகச்சரியான இணைப்பாக இருக்கிறது. இணைப்பில் மூன்றாவது நபரின் கண்ணோட்டத்தில் தேவன் பேசினாலும், தேவனுடைய வார்த்தைகளை எந்த மனுஷனும் தெளிவாக விளக்க முடியாததால், இந்த வார்த்தைகள் தேவனால் தனிப்பட்ட முறையில் உரைக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது; தேவன் மட்டுமே அவரது வெளிப்பாடுகளின் தோற்றங்களையும் நோக்கங்களையும் தெளிவுபடுத்த முடியும். இவ்வாறு, தேவன் அநேக வழிகளைப் பயன்படுத்திப் பேசினாலும், ஒருபோதும் அவருடைய கிரியையின் குறிக்கோள்களும் மாறாது, அவருடைய திட்டத்தின் நோக்கமும் மாற்றி அமைக்கப்படாது.

“முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்” தேவன் மனுஷனுடன் அங்கம் வகிக்கும் ஓர் அத்தியாயத்துடன் முடிவடைந்தாலும், உண்மையில், இப்பொழுதுதான் மனுஷர்கள் மத்தியில் ஜெயங்கொள்ளுதலின் மற்றும் இரட்சிப்பின் தேவனுடைய கிரியை, மற்றும் ஜனங்களைப் பரிபூரணமாக்கும் அவரது கிரியை அதிகாரப்பூர்வமாக வெளியாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்” என்பதைக் கடைசி நாட்களுக்கான தேவனுடைய கிரியையின் தீர்க்கதரிசனமாக நாம் கருதுவதற்கு மிகவும் பொருத்தமானதாய் இருக்கிறது. இந்தக் கட்டத்திற்குப் பிறகுதான், மனுவுருவான மனுஷகுமாரன் கிறிஸ்துவின் அடையாளத்தைப் பயன்படுத்தியும், திருச்சபைகளுக்கு மத்தியில் நடந்து ஜீவனை வழங்கியும், மேலும் தம்முடைய எல்லா ஜனங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சியும் மேய்த்தும், அதிகாரப்பூர்வமாகப் பேசவும் கிரியை செய்யவும் தொடங்கினார், அதன் நிமித்தமாக இது “கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள்” என்பதில் அநேக வாக்கியங்கள் எழுவதற்கு வழிவகுத்தது.

முந்தைய: அத்தியாயம் 120

அடுத்த: அத்தியாயம் 1

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக