அத்தியாயம் 34

சர்வவல்லமையுள்ள தேவன் தான் அனைத்திலும் வல்லமைமிக்க, அனைத்தையும் நிறைவேற்றுகின்ற, முழுமையான மெய்த்தேவன்! அவர் ஏழு நட்சத்திரங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை, ஏழு ஆவிகளைக் கொண்டிருக்கிறார், ஏழு கண்களைக் கொண்டிருக்கிறார், ஏழு முத்திரைகளைத் திறக்கிறார், சுருளைத் திறக்கிறார், ஆனால் அதற்கும் மேலாக, ஏழு வாதைகளையும், ஏழு கலசங்களையும் நிர்வகித்து, ஏழு எக்காளங்களை வெளிப்படுத்துகிறார். நீண்ட காலத்திற்கு முன்பு கூட, அவர் ஏழு எக்காளங்களை ஊதினார்! அவர் சிருஷ்டித்து முழுமையாக உருவாக்கிய அனைத்தும் அவரைத் துதிக்க வேண்டும், அவரை மகிமைப்படுத்த வேண்டும், மற்றும் அவரது சிங்காசனத்தை உயர்த்த வேண்டும். ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! நீர் தான் எல்லாம். நீர் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளீர், மேலும் உம்முடன் அனைத்தும் முழுமையாகவும், பிரகாசமாகவும், விடுவிக்கப்பட்டும், விடுதலையோடும், பெலனுள்ளதாகவும், மற்றும் வல்லமையுள்ளதாகவும் இருக்கின்றன! எதுவும் மறைந்திருக்கவில்லை அல்லது மறைக்கப்படவில்லை; உம் மூலமாக, அனைத்து இரகசியங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உமது எதிரிகளின் கூட்டத்தை நீர் நியாயந்தீர்த்திருக்கிறீர், உம் மகத்துவத்தை நீர் வெளிப்படுத்தி, கொழுந்துவிட்டு எரியும் உம் அக்கினியை வெளிப்படுத்தினீர், நீர் உம் கடுங்கோபத்தைக் காட்சிப்படுத்துகிறீர், மேலும், நீர் உம் முன்னெப்போதுமில்லாத, நித்தியமான, முற்றிலும் எல்லையற்ற மகிமையைக் காட்டுகிறீர்! ஜனங்கள் அனைவரும் தயக்கமின்றி, நித்தியத்திலிருந்து வந்த இந்தச் சர்வவல்லமையுள்ள, முற்றிலும் உண்மையான, அனைத்திலும் வாழ்கின்ற, அருள் நிறைந்த, மகிமை வாய்ந்த, உண்மையான தேவனைப் புகழ்ந்து, ஆரவாரம் செய்து பாடுவதற்காக விழித்திருக்க வேண்டும். அவரது சிங்காசனமானது தொடர்ந்து உயர்த்தப்பட வேண்டும், அவரது நாமம் போற்றப்பட்டு மகிமைப்படுத்தப்பட வேண்டும். இது தான் என் தேவனுடைய நித்திய சித்தம், மற்றும் அவர் வெளிப்படுத்தி எங்கள் மீது அருளுகிற எல்லையற்ற ஆசீர்வாதம் ஆகும்! நம்மில் யார் அதைச் சுதந்தரித்துக் கொள்ளவில்லை? தேவனின் ஆசீர்வாதத்தைச் சுதந்தரிப்பதற்கு, ஒருவர் அவரது பரிசுத்தமான நாமத்தை உயர்த்தி, ஆராதனையில் அவரது சிங்காசனத்தைச் சுற்றி வர வேண்டும். மற்ற கருத்துக்கள் மற்றும் நோக்கங்களுடன் அவர் முன் செல்லும் அனைவரும் அவரது எரியும் அக்கினியில் உருகிப் போவார்கள். இன்று அவரின் எதிரிகள் நியாயந்தீர்க்கப்படும் நாள், மற்றும் இந்த நாளில் தான் அவரது எதிரிகள் அழிந்து போவார்கள். மேலும், சர்வவல்லமையுள்ள தேவனாகிய நான் வெளிப்படும் மற்றும் மகிமையையும் கனத்தையும் நான் அடையும் நாளாகவும் அது இருக்கிறது. ஓ, சகல ஜனங்களே! ஆதி காலம் முதல் நித்தியக் காலத்திற்கும், நமக்கு நேசமிக்க தயையை அனுப்பி, இரட்சித்து, நமக்கு ஆசீர்வாதங்களை அருளும், அவரது குமாரர்களை முழுமையாக்கும் மற்றும் அவரது ராஜ்யத்தை வெற்றிகரமாக அடையும் சர்வவல்லமையுள்ள தேவனைப் போற்றி வரவேற்பதற்காக விரைவாக எழுந்திருங்கள்! இதுவே தேவனின் அற்புதமான செயல் ஆகும்! இதுவே தேவனின் நித்தியமான, முன்குறிக்கப்பட்ட சென்றடையும் இடம் மற்றும் ஏற்பாடாகும். அதாவது, அவர் தாமே நம்மை இரட்சிக்கவும், நம்மை முழுமையாக்கவும், நம்மை மகிமைக்குள் கொண்டுவரவும் வந்துள்ளார்.

எழுந்து சாட்சி கூறாத அனைவரும் குருடனின் முன்னோர்கள் மற்றும் அறியாமையின் ராஜாக்கள் ஆவார்கள். அவர்கள் நித்தியத்திற்கும் அறியாமையுள்ளவர்களாகவும், நிரந்தர முட்டாள்களாகவும்; நித்தியத்திற்கும் இறந்த குருடர்களாகவும் மாறுவார்கள். இந்தக் காரணத்திற்காகத் தான் நம் ஆவிகள் விழித்திருக்க வேண்டும்! ஜனங்கள் அனைவரும் எழ வேண்டும்! மகத்துவமுள்ள பொங்கியெரியும் நெருப்பையும் நீதியுள்ள நியாயத்தீர்ப்பையும் கொண்டுவரும், முற்றிலும் போதுமான, தயாள குணமுள்ள, சர்வவல்லமையுள்ள, முழுமையான, மகிமையின் ராஜாவை, இரக்கத்தின் பிதாவை, இரட்சிப்பின் குமாரனை, கொடையான ஏழு ஆவிகளை, சர்வவல்லமையுள்ள தேவனை முடிவின்றி போற்றித் துதித்து உயர்த்துங்கள். அவருடைய சிங்காசனம் நித்தியத்திற்கும் உயர்த்தப்படும்! இது தான் தேவனின் ஞானம் என்பதை ஜனங்கள் அனைவரும் காண வேண்டும்; இது இரட்சிப்புக்கான அவருடைய அற்புதமான பாதை மற்றும் அவருடைய மகிமையான சித்தம் நிறைவேறியது என்பதாகும். நான் எழுந்து சாட்சி கூறவில்லை என்றால், அந்தத் தருணம் கடந்து போனதும், திரும்பிச் செல்ல முடியாததுமாக இருக்கும். நாம் ஆசீர்வாதங்களை அல்லது சாபத்தைப் பெறுவோமா என்பது, தற்போது நாம் என்ன செய்கிறோம், என்ன சிந்திக்கிறோம், மற்றும் நாம் எதன்படி வாழ்கிறோம் என்பதின் அடிப்படையில், நம் பயணத்தின் இந்தத் தற்போதைய கட்டத்தின் போது தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் எப்படிச் செயல்பட வேண்டும்? தேவனுக்காகச் சாட்சி கூறி, தேவனை என்றென்றைக்கும் உயர்த்துங்கள்; கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனை—நித்தியமான, தனித்துவமான, உண்மையான தேவனை உயர்த்துங்கள்!

இப்போதிருந்து, தேவனுக்குச் சாட்சி கூறாத அனைவரும்—இந்த தனித்துவமான, உண்மையான தேவனுக்குச் சாட்சி கூறாதவர்கள், அத்துடன் அவரைக் குறித்து சந்தேகங்களைக் கொண்டுள்ளவர்கள் அனைவரும் நோயுற்று மரிப்பவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவனை எதிர்ப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாகக் காண வேண்டும்! ஆதி காலத்திலிருந்து ஏற்கனவே தேவனின் வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டுவிட்டன: என்னோடே சேர்க்காதவர் சிதறடிக்கிறார், என்னோடே இராதவர் எனக்கு விரோதியாயிருக்கிறார்; இது கல்லில் பொறிக்கப்பட்ட மாற்ற முடியாத உண்மை ஆகும்! தேவனுக்குச் சாட்சி கூறாத எவரும் சாத்தானின் சேவகர் ஆவர். அத்தகைய ஜனங்கள் தேவனின் பிள்ளைகளைத் தொந்தரவு செய்து ஏமாற்றவும், அவரது நிர்வாகத்திற்கு இடையூறு செய்யவும் வந்துள்ளனர்; அவர்கள் அழிக்கப்பட வேண்டும்! அவர்கள் மீது நல்ல எண்ணம் கொள்பவர்கள், தங்களின் சொந்த அழிவைத் தேடுகின்றனர். தேவனுடைய ஆவியானவரின் பேச்சுக்களை நீங்கள் கேட்டு விசுவசிக்க வேண்டும், தேவனுடைய ஆவியானவரின் பாதையில் நடந்து, தேவனுடைய ஆவியானவரின் வார்த்தைகளின் படி வாழ வேண்டும். மேலும், காலம் முடியும் வரை சர்வவல்லமையுள்ள தேவனின் சிங்காசனத்தை நீங்கள் உயர்த்த வேண்டும்!

சர்வவல்லமையுள்ள தேவன் ஏழு ஆவிகளின் தேவன் ஆவார்! ஏழு கண்கள் மற்றும் ஏழு நட்சத்திரங்களை உடையவரும் அவரே; அவர் ஏழு முத்திரைகளைத் திறக்கிறார், மற்றும் முழுச் சுருளும் அவரால் விரிக்கப்பட்டுள்ளது! ஏழு எக்காளங்களை அவர் ஊதியுள்ளார், மற்றும் ஏழு கலசங்களும் ஏழு வாதைகளும் அவரின் சித்தப்படி கட்டவிழ்த்து விடப்படுவதற்காக அவரது பிடியில் உள்ளன. ஓ, எப்போதும் முத்திரையிடப்பட்ட ஏழு இடிமுழக்கங்களே! அவற்றை வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது! ஏழு இடிமுழக்கங்களை உண்டாக்குபவர் ஏற்கனவே நம் கண்களின் முன் தோன்றியிருக்கிறார்!

சர்வவல்லமையுள்ள தேவனே! உம் மூலமாக, அனைத்தும் விடுவிக்கப்பட்டுச் சுதந்திரமாக உள்ளன; எந்தவொரு சிரமங்களும் இல்லை, அனைத்தும் சீராகச் செல்கிறது! உம்மைத் தடுக்க அல்லது தடை செய்ய எதற்கும் துணிவில்லை, மற்றும் அனைத்தும் உம் முன் அடங்கி இருக்கின்றன. அடங்கி இருக்காத எதுவும் மரித்துப் போகும்!

சர்வவல்லமையுள்ள தேவனே, ஏழு கண்களுடைய தேவனே! அனைத்தும் முற்றிலும் தெளிவாக உள்ளது, அனைத்தும் பிரகாசமாகவும், வெளிக்காட்டப்பட்டும் உள்ளது மற்றும் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு அப்பட்டமாக உள்ளது. அவரில், அனைத்தும் மிகவும் தெளிவாக உள்ளது, மற்றும் தேவன் மட்டும் இப்படி இல்லை, அவரின் குமாரர்களும் கூட இப்படித் தான் இருக்கிறார்கள். யாவரையும், எந்தவொரு பொருளையும், எந்தவொரு விஷயத்தையும் அவர் மற்றும் அவரின் குமாரர்கள் முன்பு மறைக்க முடியாது!

சர்வவல்லமையுள்ள தேவனின் ஏழு நட்சத்திரங்களும் பிரகாசமாக உள்ளன! திருச்சபை அவரால் பரிபூரணப்படுத்தப்பட்டுள்ளது; அவர் தமது திருச்சபைத் தூதர்களை ஏற்படுத்தியுள்ளார், மேலும் ஒட்டுமொத்தத் திருச்சபையும் அவரது ஏற்பாட்டின் கீழ் உள்ளது. அவர் ஏழு முத்திரைகளையும் திறக்கிறார், மேலும், அவர் தாமே அவருடைய நிர்வாகத் திட்டத்தையும் அவருடைய சித்தத்தையும் நிறைவுக்குக் கொண்டுவருகிறார். சுருள் என்பது அவரது நிர்வாகத்தின் விளங்கிக் கொள்ள முடியாத ஆவிக்குரிய மொழி ஆகும், மேலும் அது அவரால் விரிக்கப்பட்டு வெளிப்படுத்தப்படுகிறது!

அனைத்து ஜனங்களும் அவரது ஏழு பெரும் எக்காளங்களுக்குச் செவி மடுக்க வேண்டும். அவர் மூலமாகவே, அனைத்தும் அறியச் செய்யப்படுகிறது, இனி ஒருபோதும் மறைக்கப்படாது, மற்றும் இனி ஒருபோதும் துயரம் இருக்காது. அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது மற்றும் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கிறது!

சர்வவல்லமையுள்ள தேவனின் ஏழு எக்காளங்களும் வெளிப்படையான, மகிமைமிக்க, வெற்றிகரமான எக்காளங்கள் ஆகும்! அவை எதிரிகளை நியாயந்தீர்க்கும் எக்காளங்களும் ஆகும்! அவருடைய வெற்றியின் மத்தியில், அவரது கொம்பு உயர்த்தப்படுகிறது! ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் அவர் ஆட்சி செய்கிறார்!

வாதைகள் அடங்கிய ஏழு கலசங்களை அவர் தயார் செய்துள்ளார், அவருடைய எதிரிகள் இலக்காக்கப்பட்டுள்ளனர், மேலும், ஒரு கடுமையான நீரோட்டத்தில் அவர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர், அவருடைய எரியும் அக்கினிப் பிழம்புகளில் அந்த எதிரிகள் எரிக்கப்படுவார்கள். சர்வவல்லமையுள்ள தேவன் அவருடைய அதிகாரத்தின் வல்லமையைக் காட்டுகிறார், மற்றும் அவருடைய எதிரிகள் அனைவரும் அழிந்து போகின்றனர். சர்வவல்லமையுள்ள தேவன் முன் இறுதி ஏழு இடிமுழக்கங்களும் முத்திரை இடப்பட்டிருக்க வேண்டியதில்லை; அவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன! அவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன! ஏழு இடிமுழக்கங்களைப் பயன்படுத்தி அவர் தமது எதிரிகளை மரிக்கச் செய்து, பூமியை நிலைப்படுத்தி, அதை அவருக்கு ஊழியம் செய்ய வைக்கிறார், மீண்டும் ஒருபோதும் வீணடிக்கப்படாது!

நீதியுள்ள சர்வவல்லமையுள்ள தேவனே! நாங்கள் உம்மை என்றென்றைக்கும் உயர்த்துகிறோம்! முடிவில்லாப் போற்றுதலுக்கும், நித்தியப் புகழ்ச்சி மற்றும் மேன்மைக்கும் நீர் தகுதியானவர்! உமது ஏழு இடிமுழக்கங்களும் உமது நியாயத்தீர்ப்புக்காக பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றுவதற்காகவும் உமது மகிமை மற்றும் அதிகாரத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது!

அனைத்து ஜனங்களும் சிங்காசனத்தின் முன் கொண்டாடுகிறார்கள், கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனைப் புகழ்ந்து போற்றுகிறார்கள்! அவர்களின் குரல்கள் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் இடிமுழக்கம் போன்று அதிரச் செய்கின்றன! முற்றிலும் அனைத்துப் பொருட்களும் அவராலேயே இருக்கின்றன மற்றும் அவராலேயே எழுகின்றன. மகிமை, கனம், அதிகாரம், ஞானம், பரிசுத்தம், வெற்றி, மற்றும் வெளிப்பாடுகள் முழுமைக்கும் அவரைக் காரணம் காட்டாமல் இருக்க யார் துணிவார்கள்? இது அவருடைய சித்தத்தின் சாதனை ஆகும், மேலும், இது அவருடைய நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவதின் இறுதி நிறைவு ஆகும்!

முந்தைய: அத்தியாயம் 33

அடுத்த: அத்தியாயம் 35

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக