அத்தியாயம் 46

ஜனங்கள் எனது வார்த்தைகளைத் தங்கள் வாழ்விற்கான அடிப்படையாக மாற்றுவதில் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனுஷனின் தலைவிதியைப் பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டிருக்கிறேன், ஆனால் இதைப் பற்றிய எந்த உணர்வையும் ஜனங்கள் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை—இதன் விளைவாக, அவர்கள் ஒருபோதும் என் கிரியைகள் மீது கவனம் செலுத்தியிருக்கவில்லை, மேலும் மனுஷன் மீதான எனது அணுகுமுறையின் விளைவாக என்னை வணங்குவதற்கான முயற்சியை ஒருபோதும் செய்ததில்லை. என் இருதயத்தைத் திருப்திப்படுத்த அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ச்சிகளைக் கொட்டியிருந்ததைப் போல் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்டதால், நான் மீண்டும் ஒருமுறை மௌனமாகிவிட்டேன். எனது வார்த்தைகள் ஜனங்களின் கருத்தில் கொள்ளுவதற்கும், மேலும் பிரவேசித்தலுக்கும் ஏன் தகுதியற்றவையாக இருக்கின்றன? என்னிடம் யதார்த்தம் இல்லை என்பதாலும், ஜனங்களுக்கு எதிராக நான் பயன்படுத்தக்கூடிய எதையாவது நான் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருப்பதாலுமா? ஜனங்கள் ஏன் எப்போதும் எனக்குச் “சிறப்புச் சிகிச்சை” அளிக்கிறார்கள்? நான் அவனது சொந்தச் சிறப்பு நோயாளி பிரிவில் இருக்கும் செயல்படாதவனா? ஏன், இன்று அவைகள் இருக்கும் நிலைக்கு விஷயங்கள் வந்திருந்தாலும், ஜனங்கள் இன்னும் என்னை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள்? மனுஷன் மீதான எனது அணுகுமுறையில் தவறு உள்ளதா? இன்று, நான் பிரபஞ்சங்களுக்கு மேல் புதிய கிரியையைத் தொடங்கியிருக்கிறேன். நான் பூமியிலுள்ள ஜனங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளேன், மேலும் அவர்கள் அனைவரையும் என் வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஜனங்கள் எப்பொழுதும் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவதால், நான் அவர்களுக்குச் சுய விழிப்புணர்வோடு இருக்கவும், எப்போதும் என் கிரியையைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவும் அறிவுறுத்துகிறேன். நான் திறந்திருக்கிற “விருந்தினர் இல்லத்தில்”, மனுஷனை விட வேறு எதுவும் என் வெறுப்பைத் தூண்டவில்லை, ஏனென்றால் ஜனங்கள் எப்போதும் எனக்குப் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள் மற்றும் என்னை ஏமாற்றுகிறார்கள். அவர்களின் நடத்தை எனக்கு அவமானத்தைக் கொண்டுவருகிறது மற்றும் என்னால் என் தலையை நிமிர்ந்து நிற்கச் செய்ய முடியவில்லை. எனவே, நான் அவர்களுடன் அமைதியாகப் பேசி, அவர்கள் கூடிய விரைவில் என் வீட்டை விட்டு வெளியேறவும், இலவசமாக எனது உணவை சாப்பிடுவதை நிறுத்தவும் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நிலைத்திருக்க விரும்பினால், அப்போது அவர்கள் துன்பத்திற்கு உள்ளாகி, என் சிட்சையை சகித்துக்கொள்ள வேண்டும். அவர்களின் மனதைப் பொருத்த வரை, அவர்களது செயல்களை நான் முற்றிலும் அறியாமலும் கண்டுகொள்ளாமலும் இருக்கிறேன், இதனால் அவர்கள் தவறுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல், எப்போதும் என் முன் நிமிர்ந்து நின்று, வெறுமனே எண்களைக் கூட்டுவதற்காக மனுஷனாக நடிக்கிறார்கள். நான் ஜனங்களிடம் கோரிக்கைகளை வைக்கும்போது, அவர்கள் வியப்படைகிறார்கள்: இத்தனை ஆண்டுகளாக நல்ல சுபாவமும் தயவும் கொண்ட தேவனால், இரக்கமற்றதும் நியாயமற்றதுமான வார்த்தைகளைச் சொல்ல முடியும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருந்ததில்லை, அதனால்தான் அவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். இதுபோன்ற சமயங்களில், ஜனங்கள் மனதில் என் மீதான வெறுப்பு மீண்டும் ஒருமுறை அதிகரித்திருப்பதை நான் காண்கிறேன், ஏனென்றால், அவர்கள் மீண்டும் குறைகூறும் வேலையைத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எப்போதும் பூமிக்கு எதிராகக் குறைகூறி பரலோகத்தை சபிக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் வார்த்தைகளில் தங்களைத் தாங்களே சபித்துக் கொள்ளும் எதையும் நான் காணவில்லை, ஏனென்றால் அவர்கள் தங்களைத் தாங்களே நேசிப்பது மிகவும் பெரியதாக இருக்கிறது. இவ்வாறு, மனுஷனுடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நான் சுருக்கமாகக் கூறுகிறேன்: ஜனங்கள் தங்களை அதிகமாக நேசிப்பதால், அவர்களின் முழு வாழ்க்கையும் வேதனையாகவும் வெறுமையாகவும் இருக்கிறது, மேலும் அவர்கள் என் மீதான வெறுப்பின் காரணமாக அவர்கள் தங்களது சொந்த தலையின் மீதே அழிவை வருவித்துக் கொள்கிறார்கள்.

மனுஷனின் வார்த்தைகளில் என்மீது, அளவற்ற “அன்பு” இருந்தாலும், இந்த வார்த்தைகளை சோதனைக்காக நான் “ஆய்வுக்கூடத்திற்கு” எடுத்துச் சென்று, நுண்ணோக்கியின் கீழ் வைத்துக் கவனிக்கும்போது, அவற்றிற்குள் உள்ளடங்கி இருக்கும் அனைத்தும் முற்றிலும் தெளிவுடன் வெளிப்படுகின்றன. இந்த நேரத்தில், அவர்களின் “மருத்துவப் பதிவுகளைப்” பார்க்க அவர்களை அனுமதிக்கவும், அதனால் அவர்களை உண்மையாக நம்ப வைக்கவும் நான் மீண்டும் ஒருமுறை மனுஷர்கள் மத்தியில் வருகிறேன். ஜனங்கள் அவைகளைப் பார்க்கும்போது, அவர்களின் முகங்கள் சோகத்தால் நிரம்பி இருக்கின்றன, அவர்கள் தங்கள் இருதயங்களில் வருந்துகிறார்கள், மேலும் அவர்கள் என்னை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக உடனடியாகத் தங்கள் பொல்லாத வழிகளை விட்டுவிடத் துரிதமடைந்து, சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று கூட அவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். அவர்களின் தீர்மானத்தைப் பார்த்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்; நான் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறேன்: “பூமியில், மனுஷனைத் தவிர வேறு யாரால் என்னுடன் மகிழ்ச்சியையும், துக்கத்தையும், கஷ்டத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும்? மனுஷன் மட்டுமே அல்லவா?” ஆனாலும் நான் வெளியேறும்போது, ஜனங்கள் தங்கள் மருத்துவப் பதிவுகளைக் கிழித்து தரையில் வீசுகிறார்கள். அந்த நாட்களில் இருந்து, நான் ஜனங்களின் செயல்களில் கொஞ்சம் எனது சொந்த இருதயத்திற்கு ஏற்றதாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்னும் என் முன் அவர்களது தீர்மானங்கள் கணிசமான அளவு குவிந்துள்ளன, மேலும், அவர்களின் தீர்மானங்களைப் பார்த்து நான் வெறுப்படைகிறேன், ஏனென்றால், அவற்றில் எதுவும் என் மகிழ்ச்சிக்காகத் தீர்மானிக்கப்படவில்லை; அவர்கள் மிகவும் கறைபடிந்தவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் தீர்மானத்தை நான் புறக்கணிப்பதைப் பார்த்து, ஜனங்கள் வெறுப்படைகின்றனர். பின்னர், அவர்கள் அரிதாகவே ஒரு “விண்ணப்பத்தை” சமர்ப்பிக்கிறார்கள், ஏனென்றால் மனுஷனின் இருதயம் எனக்கு முன் ஒருபோதும் பாராட்டப்படவில்லை, மேலும் எனது நிராகரிப்பை மட்டுமே எப்போதும் சந்தித்திருக்கிறது—இனி ஜனங்களின் வாழ்க்கைகளில் எந்த ஆவிக்குரிய ஆதரவும் இல்லை, அதனால் அவர்களின் வைராக்கியம் மறைந்துவிடுகிறது, மேலும் நான் வானிலை “சுட்டெரிக்கும் வெப்பமாக” இருக்கிறது என்று இனி ஒருபோதும் உணர்வதில்லை. ஜனங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் துன்பப்படுகிறார்கள், இன்றைய சூழ்நிலையின் வருகையினால், அவர்கள் ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையில் அலைக்கழிக்கப்படும் அளவுக்கு, அவர்கள் என்னால் “துன்புறுத்தப்படுகிறார்கள்”. இதன் விளைவாக, அவர்களின் முகங்களில் வெளிச்சம் மங்கி, அவர்கள் தங்கள் “உற்சாகத்தை” இழக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அனைவரும் “வளர்ந்திருக்கிறார்கள்.” சிட்சையின் சமயத்தில் ஜனங்கள் சுத்திகரிக்கப்படும்போது அவர்களின் பரிதாபமான நிலையைப் பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை—ஆனாலும் மனுஷகுலத்தின் பரிதாபகரமான தோல்வியை யாரால் மீட்க முடியும்? துன்பகரமான மனுஷ வாழ்விலிருந்து மனுஷனை யாரால் இரட்சிக்க முடியும்? துன்பக் கடலின் படுகுழியில் இருந்து ஏன் ஜனங்கள் தங்களை ஒருபோதும் விடுவித்துக் கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள்? நான் வேண்டுமென்றே ஜனங்களைச் சிக்க வைக்கிறேனா? ஜனங்கள் என் மனநிலையை ஒருபோதும் புரிந்து கொண்டிருக்கவில்லை, அதனால் நான் பிரபஞ்சத்தினிடத்தில் புலம்புகிறேன், பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றிலும், எதுவும் என் இருதயத்தை ஒருபோதும் உணரவில்லை, எதுவும் என்னை உண்மையாக நேசிப்பதில்லை. இன்றும் கூட, ஜனங்கள் ஏன் என்னை நேசிக்கத் திறனற்றவர்களாய் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களால் தங்கள் இருதயங்களை எனக்காகக் கொடுக்க முடிகிறது, அவர்களால் தங்கள் விதியை எனக்காகத் தியாகம் செய்ய முடிகிறது, ஆனால் அவர்களால் ஏன் தங்கள் அன்பை எனக்குக் கொடுக்க முடிவதில்லை? நான் கேட்பதை அவர்கள் பெற்றிருக்கவில்லையா? ஜனங்களால் என்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நேசிக்க முடிகிறது—அப்படியானால் அவர்களால் ஏன் என்னை நேசிக்க முடியாது? அவர்களின் அன்பு ஏன் எப்போதும் மறைந்திருக்கிறது? இன்று வரை அவர்கள் என் முன் நின்றிருந்தாலும், ஏன் அவர்களின் அன்பை நான் பார்த்திருக்கவே இல்லை? இதில்தான் அவர்கள் குறைவுபட்டிருக்கிறார்களா? நான் வேண்டுமென்றே ஜனங்களுக்கு விஷயங்களைக் கடினமாக்குகிறேனா? அவர்களது இருதயங்களில் இன்னும் மனசாட்சியின் உறுத்தல்கள் இருக்கின்றனவா? தவறான நபரை நேசிப்பதைக் குறித்து அவர்கள் பயப்படுகிறார்களா, மேலும் தங்களுக்குத் தாங்களே தீர்வு காண இயலாதவர்களாய் உள்ளார்களா? ஜனங்களிடத்தில் எண்ணற்ற புரிந்துகொள்ள முடியாத இரகசியங்கள் உள்ளன, எனவேதான், நான் எப்போதும் மனுஷனுக்கு முன் “தைரியமில்லாமலும் பயத்துடனும்” இருக்கிறேன்.

இன்று, ராஜ்யத்தின் வாசற்கதவை நோக்கி முன்னேறும் நேரத்தில், எல்லா ஜனங்களும் முன்னேறத் தொடங்குகிறார்கள்—ஆனால் அவர்கள் வாசலை வந்தடையும் முன்பே, நான் வாசற்கதவை மூடுகிறேன், ஜனங்களை வெளியேவிட்டு கதவை அடைத்து, அவர்களின் நுழைவுச் சீட்டுகளைக் காட்டும்படி கோருகிறேன். இத்தகைய வித்தியாசமான நடவடிக்கை ஜனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிரானது, மேலும் அவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். எப்பொழுதும் விரிவாய் திறந்தே இருக்கும் வாசற்கதவு, இன்று ஏன் திடீரென்று இறுகப் பூட்டப்பட்டிருக்கிறது? ஜனங்கள் தங்கள் கால்களை தரையில் அடித்துக்கொண்டு வேகமாகச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் வளைந்து நெளிந்து உள்ளே நுழைந்துவிடலாம் என்று கற்பனை பண்ணி, அவர்களின் தவறான நுழைவுச் சீட்டுகளை என்னிடம் ஒப்படைக்கும்போது, நான் அவர்களை அதே இடத்திலேயே அக்கினிக் குழிக்குள் தள்ளிவிடுகிறேன், மேலும் ஜுவாலைகளில் தங்களது சொந்தக் “கடினமான முயற்சிகளைப்” பார்த்து, அவர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். அவர்கள் தலையைப் பிடித்துக் கொண்டு, அழுகிறார்கள், ராஜ்யத்திற்குள் இருக்கும் அழகான காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் உள்ளே பிரவேசிக்க முடியவில்லை. ஆயினும், அவர்களின் பரிதாபமான நிலையின் காரணமாக நான் அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை—தாங்கள் விரும்புகிறபடியெல்லாம் எனது திட்டத்தை யாரால் கெடுக்க முடியும்? எதிர்கால ஆசீர்வாதங்கள் ஜனங்களின் வைராக்கியத்திற்குப் பதிலாக கொடுக்கப்பட்டுள்ளனவா? மனுஷன் வாழ்வதின் அர்த்தமானது, ஒருவன் விரும்புகிறபடி எனது ராஜ்யத்தில் பிரவேசிப்பதில் உள்ளதா? நான் இவ்வளவு தாழ்ந்தவரா? என்னுடைய கடுமையான வார்த்தைகள் இல்லையென்றால், வெகு காலத்திற்கு முன்பே ஜனங்கள் ராஜ்யத்தில் பிரவேசித்திருக்க மாட்டார்களா? எனவே, நான் இருப்பது அவர்களுக்கு ஏற்படுத்தும் அனைத்து தொந்தரவுகளின் காரணமாக ஜனங்கள் எப்போதும் என்னை வெறுக்கிறார்கள். நான் இல்லாவிட்டால், அவர்கள் இன்றைய காலத்தில் ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும்—அப்போது இந்த துன்பத்தைச் சகித்துக்கொள்வதற்கான தேவை என்ன இருக்கும்? அதனால்தான், அவர்கள் வெளியேறுவது நல்லது, அவர்கள் தாங்கள் வெளியேறுவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க நிகழ்காலத்தில் விஷயங்கள் எவ்வளவு நன்றாக செல்கின்றன என்பதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் ஜனங்களுக்குச் சொல்கிறேன்; அவர்கள் இளமையாக இருக்கும் போதே, சில திறன்களைக் கற்றுக்கொள்வதற்காக, நிகழ்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் அது மிகவும் தாமதமாகிவிடும். என் வீட்டில் இதுவரை யாரும் ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கவில்லை. “வறுமையில்” வாழாமல் இருக்க, ஜனங்களை விரைந்து வெளியேறச் சொல்கிறேன்; எதிர்காலத்தில் வருத்தப்படுவதற்கு மிகவும் தாமதமாகிவிடும். உங்களை நீங்களே மிகவும் கடினப்படுத்தாதீர்கள்; உங்களுக்கு நீங்களே ஏன் விஷயங்களைக் கடினமாக்கிக்கொள்கிறீர்கள்? இன்னும் நான் ஜனங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெறத் தவறும்போது, யாரும் என்னைப் பற்றிக் குறைகூற இயலாது. மனுஷனிடம் என் வார்த்தைகளை வீணாக்க எனக்கு நேரமில்லாதிருக்கிறது. இது ஜனங்கள் மனதில் நிலைத்திருக்கும், அவர்கள் அதை மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்—நான் சொல்கிறேன், நான் கொடுக்கும் இந்த வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகும். நான் நீண்ட காலத்திற்கு முன்பே மனுஷர்கள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கிறேன், நான் நீண்ட காலத்திற்கு முன்பே ஜனங்கள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கிறேன், ஏனென்றால் அவர்களுக்கு லட்சியம் இல்லை, தேவனை நேசிக்கும் இருதயத்தை அவர்களால் எனக்கு ஒருபோதும் கொடுக்க முடிந்திருக்கவில்லை, அதற்குப் பதிலாக அவர்களது செயல் நோக்கங்களை எப்போதும் எனக்குக் கொடுக்கிறார்கள். நான் மனுஷனிடம் அதிகம் கூறியிருக்கிறேன், இன்று ஜனங்கள் எனது அறிவுரையை இன்னும் புறக்கணிப்பதால், எதிர்காலத்தில் என் இருதயத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் எனது கருத்தை அவர்களிடம் கூறுகிறேன்; இனிவரும் காலங்களில் அவர்கள் ஜீவிப்பார்களா அல்லது மரிப்பார்களா என்பது அவர்களைப் பொறுத்தது; இதின் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் உயிர்வாழ்வதற்கான தங்கள் சொந்தப் பாதையைக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இதில் நான் வல்லமையில்லாதவராய் இருக்கிறேன். மனுஷன் என்னை மெய்யாக நேசிக்காததால், நாங்கள் பிரிந்து செல்கிறோம்; எதிர்காலத்தில், இனி ஒருபோதும் எங்களுக்கு இடையே வார்த்தைகள் இருக்காது, இனிப் பேசுவதற்கு எதையும் நாங்கள் பெற்றிருப்பதில்லை, நாங்கள் ஒருவருக்கொருவர் தலையிட மாட்டோம், நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் செல்வோம், ஜனங்கள் என்னைத் தேடி வரக்கூடாது, இனி ஒருபோதும் நான் மனுஷனுடைய “உதவியைக்” கேட்க மாட்டேன்? இது எங்களுக்கிடையில் உள்ள ஒன்று, எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் தடுக்க நாங்கள் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் பேசியிருக்கிறோம். இது விஷயங்களை எளிதாக்குவது அல்லவா? நாம் ஒவ்வொருவரும் அவரவர் சொந்த வழியில் செல்கிறோம், ஒருவருடன் மற்றொருவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை—அதில் என்ன தவறு இருக்கிறது? ஜனங்கள் இதில் கொஞ்சம் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

மே 28, 1992

முந்தைய: அத்தியாயம் 45

அடுத்த: அத்தியாயம் 47

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக