குணத்தில் நீங்கள் அனைவரும் மிகவும் கீழ்த்தரமானவர்கள்!

நீங்கள் அனைவரும் கம்பீரமான இருக்கைகளில் அமர்ந்து, உங்களைப்போலவே இருக்கின்ற இளைய தலைமுறையினருக்கு போதித்து, அவர்கள் எல்லாரையும் உங்களோடு அமர்ந்திருக்கப் பண்ணுகிறீர்கள். உங்கள் “சந்ததியினர்” வெகுகாலத்திற்கு முன்பே என் சுவாசத்தை விட்டு விலகி, என் கிரியையை இழந்துவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. என் மகிமை கிழக்குத் தேசத்தில் இருந்து மேற்கு தேசம் வரைக்கும் பிரகாசிக்கிறது, ஆனாலும் அது பூமியின் கடைசி பரியந்தம் வரை பரவி எழும்பிப் பிரகாசிக்கத் தொடங்கும்போது, நான் கிழக்கிலிருந்து என் மகிமையை எடுத்து மேற்கு நோக்கி கொண்டுவருவேன், அதனால் கிழக்கில் என்னை விட்டு விலகின இருளின் ஜனங்கள் அப்போதிலிருந்து வெளிச்சத்தை இழப்பார்கள். அது நிகழும்போது நீங்கள் இருளின் பள்ளத்தாக்கில் வாழ்வீர்கள். இந்நாட்களின் ஜனங்கள் முன்பு இருந்தவர்களை விட நூறு மடங்கு சிறந்தவர்கள் என்றாலும் அவர்களால் இன்னும் என் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை, அவர்கள் இன்னும் என் மகிமைக்கு ஒரு சாட்சியாக இல்லை. நீங்கள் முன்பை விட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க முடிகிறது என்பது என் கிரியையின் விளைவாகும். இது பூமியில் நான் செய்த கிரியையின் பலனாகும். இருப்பினும் உங்களுடைய சொற்கள் மற்றும் செயல்களால், உங்களுடைய குணத்தினால் கூட நான் இன்னும் வெறுப்படைகிறேன், நீங்கள் எனக்கு முன் நடந்து கொள்வதில் நம்பமுடியாத மனக்கசப்பை உணர்கிறேன், ஏனென்றால் என்னைக் குறித்த எந்தப் புரிதலும் உங்களுக்கு இல்லை. அப்படியானால் என் மகிமையின்படி நீங்கள் எப்படி வாழ முடியும், என் எதிர்காலக் கிரியைக்கு நீங்கள் எவ்வாறு முழு உண்மையுள்ளவர்களாக இருக்க முடியும்? உங்கள் விசுவாசம் மிகவும் அழகானது; நீங்கள் உங்கள் முழு வாழ்நாட்களை என் கிரியைகளுக்காக செலவிட விருப்பப்படுகிறீர்கள் என்றும், அதற்காக உங்கள் வாழ்க்கைகளை அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள் என்றும் சொல்லுகிறீர்கள், ஆனால் உங்கள் மனநிலைகள் பெரிதாக மாறவில்லை. உங்கள் உண்மையான நடத்தை மிகவும் இழிவானதாக இருக்கும்போதிலும் நீங்கள் மிகவும் ஆணவத்துடன் பேசுகிறீர்கள். இது ஏதோ ஜனங்களின் நாவுகளும் உதடுகளும் பரலோகத்தில் இருப்பதாகவும், ஆனால் அவர்களின் பாதங்கள் பூமியை நோக்கி கீழே இருப்பதாகவும், இதன் விளைவாக, அவர்களின் சொற்களும் செயல்களும் அவர்களின் நன்மதிப்பும் இன்னும் கந்தைகளிலும் அழிவுகளிலும் உள்ளதாக இருக்கின்றன. உங்கள் மதிப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன, உங்கள் நடத்தைச் சீரழிந்துள்ளது, நீங்கள் பேசும் விதம் கீழ்த்தரமாக இருக்கிறது, உங்கள் வாழ்வுகள் வெறுக்கத்தக்கது; உங்கள் மனிதத்தன்மை முழுமையும் கூட மிகக் கீழ்த்தரமான தாழ்மையில் மூழ்கியுள்ளது. நீங்கள் மற்றவர்களிடம் குறுகிய எண்ணங்கொண்டு இருக்கிறீர்கள், ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் நீங்கள் போராடுகிறீர்கள். நரகத்திலும், அக்கினிக்கடலிலும் இறங்க விரும்பும் அளவிற்கு, உங்கள் சொந்த நன்மதிப்புக்காகவும் அந்தஸ்துக்காகவும் சண்டையிடுகிறீர்கள். நீங்கள் பாவமுள்ளவர்கள் என்பதைத் தீர்மானிக்க உங்களின் தற்போதைய சொற்களும் செயல்களும் எனக்குப் போதுமானவையாகும். நீங்கள் அநீதியுள்ளவர்கள் என்பதைத் தீர்மானிக்க என் கிரியையைப் பற்றிய உங்கள் அணுகுமுறைகள் எனக்கு போதுமானவையாகும், மேலும் நீங்கள் அருவருப்புகள் நிறைந்த அசுத்த ஆத்துமாக்கள் என்பதைச் சுட்டிக்காட்ட உங்கள் எல்லாருடைய மனநிலைகளும் போதுமானவையாகும். உங்கள் வெளிப்பாடுகளும் நீங்கள் வெளிப்படுத்துகிறவைகளும் நீங்கள் அசுத்த ஆவிகளின் இரத்தத்தை நிரம்பக் குடித்த ஜனங்கள் என்று சொல்வதற்குப் போதுமானவையாகும். ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதைப் பற்றிப் பேசுகையில், உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தவில்லை. என் பரலோகராஜ்யத்தின் வாசல் வழியாக நடந்து செல்ல நீங்கள் இப்போது இருக்கும் விதம் போதுமானது என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களுடைய சொந்த சொற்களும் செயல்களும் முதலில் என்னால் சோதிக்கப்படாமல், என் கிரியை மற்றும் வார்த்தைகளின் பரிசுத்தப் பூமியில் உங்களால் பிரவேசிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரால் என்னை வஞ்சிக்க முடியும்? உங்களுடைய வெறுக்கத்தக்க, தாழ்ந்த நடத்தைகள் மற்றும் உரையாடல்கள் என் பார்வையில் இருந்து எவ்வாறு தப்பிக்க முடியும்? உங்கள் வாழ்வுகள் அந்த அசுத்த ஆவிகளின் இரத்தத்தைக் குடித்து, அவைகளின் மாம்சத்தை உண்டு இருக்கும்படி நான் தீர்மானித்திருக்கிறேன், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொரு நாளும் எனக்கு முன்பாக அவைகளைப் பின்பற்றுகிறீர்கள். எனக்கு முன்பாக, உங்கள் நடத்தை அதிக மோசமாக இருந்தது, எனவே நான் உங்களை அருவருப்பாகப் பார்க்காமல் இருப்பது எப்படி? உங்கள் வார்த்தைகள் அசுத்த ஆவிகளின் அசுத்தங்களைக் கொண்டுள்ளன. சூனியத்தில் ஈடுபடுவோரைப் போலவும், துரோகிகளாகவும் அநீதியுள்ளவர்களின் இரத்தத்தைக் குடிக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களைப் போலவும் நீங்கள் வஞ்சித்து, மறைத்து, முகஸ்துதி செய்கிறீர்கள். மனிதனின் அனைத்து வெளிப்பாடுகளும் மிக அநீதியானவையாகும், எனவே நீதிமான்கள் இருக்கிற பரிசுத்த தேசத்தில் எல்லா ஜனங்களும் எவ்வாறு வைக்கப்பட முடியும்? உன்னுடைய இழிவான நடத்தையானது அநீதியானவர்களுடன் ஒப்பிடும்போது உன்னைப் பரிசுத்தமானவனாக வேறுபடுத்தக் கூடும் என்று நீ நினைக்கிறாயா? சர்ப்பம் போன்ற உன் நாவானது இறுதியில் அழிவை வெளிப்படுத்தும் மற்றும் அருவருப்புகளைச் செய்யும் உன் மாம்சத்தை அழித்துவிடும், மேலும் அசுத்தமான ஆவிகளின் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கும் உன் கைகளும் இறுதியில் உன்னுடைய ஆத்துமாவை நரகத்திற்கு இழுத்துவிடும். அப்படியானால் அசுத்தத்தால் மூடப்பட்டிருக்கும் உன் கைகளைச் சுத்தப்படுத்த நீ ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை? இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அநீதியான சொற்களைப் பேசும் உன்னுடைய நாவை வெட்டிப் போடவில்லை? உன் கைகள், நாவு மற்றும் உதடுகளின் பொருட்டு நீ நரக அக்கினியில் துன்பப்படத் தயாராக இருப்பதா காரணம்? நான் ஒவ்வொருவருடைய இருதயத்தையும் என் இரண்டு கண்களாலும் கவனித்துக் கொண்டு வருகிறேன், ஏனென்றால் மனுக்குலத்தைச் சிருஷ்டிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர்களின் இருதயங்களை என் கரங்களுக்குள் அகப்படுத்திக்கொண்டேன். நான் வெகுகாலத்திற்கு முன்பாகவே ஜனங்களின் இருதயங்களூடாகப் பார்த்தேன், எனவே அவர்களின் எண்ணங்கள் எனது பார்வையில் இருந்து எவ்வாறு தப்பிக்க முடியும்? என் ஆவியால் எரிக்கப்படுவதில் இருந்து அவர்கள் தப்பிப்பது நடக்காத காரியம் போலில்லாமல் எப்படி இருக்கும்?

உன்னுடைய உதடுகள் புறாக்களை விட கனிவானவை, ஆனால் உன்னுடைய இதயம் பழைய சர்ப்பத்தை விட மிகவும் கபாடானதாகும். உன்னுடைய உதடுகள் லீபனோன் பெண்களைப் போலவே மிக அழகாக இருக்கின்றன, ஆனாலும் உன்னுடைய இதயம் அவர்களுடையதை விட கனிவானது அல்ல, அது நிச்சயமாக கானானியர்களின் அழகுடன் ஒப்பிட முடியாது. உன்னுடைய இதயம் மிகவும் துரோகம் நிறைந்தது! நான் வெறுக்கிற விஷயங்கள் அநியாயக்காரர்களின் உதடுகள் மற்றும் அவர்களின் இருதயங்கள் மட்டுமே, மேலும் நான் ஜனங்களிடம் எதிர்பார்ப்பது நான் பரிசுத்தவான்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடக் கொஞ்சமும் அதிகமானவை அல்ல; அநீதியுள்ளவர்களின் தீயசெயல்களினால் நான் அதிவெறுப்பை உணர்கிறேன், அவர்கள் தங்கள் அசுத்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த அநீதியானவர்களிடமிருந்து விலகி நின்று, நீதிமான்களுடன் வாழ்ந்து பரிசுத்தமாக இருக்கும்படி, அவர்களின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நான் இருப்பதைப் போன்ற அதே சூழ்நிலைகளில் இருக்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் அசுத்தத்தால் மூடப்பட்டிருக்கிறீர்கள்; ஆரம்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் உண்மையான ஒத்ததன்மையின் மிகச் சிறியத் துணுக்கு கூட உங்களிடம் இல்லை. மேலும், ஒவ்வொரு நாளும் நீங்கள் அந்த அசுத்த ஆவிகளின் ஒத்தத்தன்மையைப் பின்பற்றி, அவைகள் செய்வதைச் செய்து, அவைகள் சொல்வதைச் சொல்வதால், உங்களின் அனைத்து உறுப்புகளும்—உங்கள் நாவுகள் மற்றும் உதடுகள் கூட, நீங்கள் முழுவதுமாக இப்படிப்பட்ட கறைகளால் மூடப்பட்டு, உங்களின் ஓர் உறுப்பு கூட என்னுடைய கிரியைக்காக உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு, அவைகளின் நாற்றம் வீசுகிற நீரில் மூழ்கியிருக்கின்றன. இது மிகுந்த மனவேதனையை உண்டாக்குகிறது. நீங்கள் அத்தகைய குதிரைகள் மற்றும் கால்நடைகளின் உலகில் வாழ்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் உண்மையில் கலக்கமடைவதில்லை; நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், சுதந்திரமாகவும், சுகமாகவும் வாழ்கிறீர்கள். நீங்கள் அந்த நாற்றம் வீசுகிற நீரில் நீந்திக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் அத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் விழுந்து விட்டீர்கள் என்பதை உண்மையில் உணரவில்லை. ஒவ்வொருநாளும் நீங்கள் அந்த அசுத்த ஆவிகளுடன் கூட்டாக இணைந்து, “அசுத்தத்துடன்” உறவாடுகிறீர்கள். உன் வாழ்க்கை மிக இழிவாக இருக்கிறது, ஆனாலும், இந்த மனித உலகில் நீ முற்றிலும் இல்லை என்பதையும், உன் கட்டுப்பாட்டில் நீ இல்லை என்பதையும் கூட உண்மையில் நீ அறிந்திருக்கவில்லை. நீண்ட காலத்திற்கு முன்பே அந்த அசுத்த ஆவிகளால் உன்னுடைய வாழ்க்கை மிதிக்கப்பட்டதென்றோ அல்லது அந்த நாற்றம் வீசும் நீரில் உன்னுடைய இயற்பண்பு நீண்ட காலத்திற்கு முன்பே களங்கப்படுத்தபட்டதென்றோ உனக்குத் தெரியாதா? நீ பூமியின் பரதீசில் வாழ்கிறாய் என்றும், நீ மகிழ்ச்சியின் மத்தியில் இருக்கிறாய் என்றும் நினைக்கிறாயா? நீ அசுத்த ஆவிகளுடன் இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாய் என்பதும், அவைகள் உனக்காக ஆயத்தப்படுத்தின எல்லாவற்றோடும் இணைந்து வாழ்ந்தாய் என்பதும் உனக்குத் தெரியாதா? இவ்விதமான உன் வாழ்க்கைக்கு எப்படி ஓர் அர்த்தம் இருக்கும்? உன் வாழ்க்கைக்கு எப்படி ஒரு மதிப்பு இருக்கும்? நீ உன் பெற்றோருக்காக, அசுத்த ஆவிகளின் பெற்றோருக்காக ஓடிக்கொண்டிருக்கிறாய், ஆனாலும் உன்னைச் சிக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் உன்னைப் பெற்றெடுத்து, உன்னை வளர்த்த அந்த அசுத்த ஆவிகளின் பெற்றோரே என்பதைப் பற்றி உண்மையில் உனக்கு எதுவும் தெரியவில்லை. மேலும், உன்னுடைய அசுத்தங்கள் அனைத்தும் உண்மையில் அவர்களாலேயே உனக்கு வழங்கப்பட்டன என்பதை நீ அறியல்லை. உனக்குத் தெரிந்தது எல்லாம், அவர்கள் உனக்கு “இன்பத்தைக்” கொடுக்க முடியும் என்பதே, அவர்கள் உன்னைச் சிட்சிப்பதில்லை, உன்னை நியாயந்தீர்ப்பதும் இல்லை, விசேஷமாக உன்னைச் சபிப்பதில்லை. அவர்கள் ஒருபோதும் உன்னிடம் கோபத்துடன் வெகுண்டெழாமல், உன்னை அன்போடும் பரிவோடும் நடத்துகிறார்கள். அவர்களின் வார்த்தைகள் உன் இருதயத்தைப் போஷித்து, உன்னைக் கவர்ந்திழுக்கின்றன, அதனால் நீ திசைதிருப்பப்பட்டு, அதை உணராமல், நீ சிக்கிக்கொண்டு அவர்களின் வடிகாலாகவும், ஊழியனாகவும் மாறி, அவர்களுக்கு ஊழியஞ்செய்ய விரும்புகிறாய். உனக்கு எந்த குறையும் இல்லை, ஆனால் நாய்களைப் போல, குதிரைகளைப் போல அவர்களுக்காக ஊழியஞ்செய்யத் தயாராக இருக்கிறாய்; நீ அவர்களால் வஞ்சிக்கப்படுகிறாய். இந்தக் காரணத்தினால் நான் செய்யும் கிரியையில் உனக்கு எவ்விதமான எதிர்வினையும் இல்லை. நீ எப்போதும் என் விரல்களிலிருந்து இரகசியமாக நழுவ விரும்புவதில் ஆச்சரியம் இல்லை, மேலும் நீ என்னிடமிருந்து வஞ்சகமாய்த் தயவைப் பெறுவதற்காக எப்போதும் இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்புவதில் ஆச்சரியம் இல்லை. அது மாறும்போது, ஏற்கனவே வேறொரு திட்டமும், வேறொரு ஏற்பாடும் உன்னிடத்தில் இருந்தது. சர்வவல்லமையுள்ள என்னுடைய கிரியைகளின் சிறிய அளவை நீ காணலாம், ஆனால் என்னுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையைக் குறித்து உனக்கு குறைந்தபட்ச அறிவுகூட இல்லை. என் சிட்சை எப்போது தொடங்கியது என்பதைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது. உனக்குத் தெரிந்ததெல்லாம் என்னை எப்படி ஏமாற்றுவது என்பதே, ஆனாலும் மனிதனிடம் இருந்து வரும் எந்த மீறுதலையும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று உனக்குத் தெரியவில்லை. நீ ஏற்கனவே எனக்கு ஊழியஞ்செய்யத் தீர்மானங்களை எடுத்துள்ளதால் நான் உன்னைப் போக விடமாட்டேன். நான் எரிச்சலுள்ளதேவன், மனிதகுலத்தின் மீது எரிச்சலுள்ள ஒரு தேவன். நீ ஏற்கனவே உன் வார்த்தைகளைப் பலிபீடத்தின் மீது வைத்திருப்பதால், நீ என் சொந்தக் கண்களுக்கு முன்பாக விலகி ஓடுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன், இரண்டு எஜமான்களுக்கு நீ ஊழியம் செய்வதையும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். உன் வார்த்தைகளை என் பலிபீடத்தின் மீதும், என் கண்களுக்கு முன்பும் வைத்துவிட்ட பிறகு நீ இரண்டாவதாக வேறொரு அன்பைப் பெறலாம் என்று நினைத்தாயா? இவ்வாறு ஜனங்கள் என்னை முட்டாளாக்க நான் எப்படி அனுமதிக்க முடியும்? உன் நாவால் சாதாரணமாக என்னிடம் பொருத்தனைகளையும் பிரமாணங்களையும் செய்யலாம் என்று நீ நினைத்தாயா? மிகவும் உன்னதமானவரான என்னுடைய சிங்காசனமாகிய சிங்காசனத்தின்மேல் நீ எப்படி ஆணையிடுகிறாய்? உன் பிரமாணங்கள் ஏற்கனவே முடிந்து விட்டன என்று நீ நினைத்தாயா? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களுடைய மாம்சம் அழிந்து போனாலும், உங்களுடைய பொருத்தனைகள் அழிய முடியாது. முடிவில் உங்களுடைய பொருத்தனைகளின் அடிப்படையிலே உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பேன். இருப்பினும், உங்கள் வார்த்தைகளை எனக்கு முன் வைப்பதினால் நீங்கள் என்னைச் சமாளிக்க முடியும் என்றும், உங்கள் இருதயங்கள் அசுத்த ஆவிகளுக்கும், பொல்லாத ஆவிகளுக்கும் ஊழியஞ்செய்யலாம் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். என்னை வஞ்சிக்கும் நாய் போன்ற, பன்றி போன்றவர்களை என் கோபம் எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்? நான் என்னுடைய நிர்வாக ஆணைகளை நிறைவேற்ற வேண்டும், அசுத்த ஆவிகளின் கைகளிலிருக்கிற, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கும் “பக்தியுள்ளவர்களை” திரும்பவும் பிடுங்க வேண்டும், இதனால் அவர்கள் ஒழுங்குள்ள முறையில் எனக்காக “காத்திருக்கக்கூடும்”, என்னுடைய எழுத்துகளாக என்னுடைய குதிரைகளாக என்னுடைய திட்டத்தின்கீழ் இருப்பார்கள். உன்னுடைய முந்தைய தீர்மானத்தைச் செம்மைப்படுத்திக் கொண்டு, மீண்டும் எனக்கு ஊழியம் செய்ய வைப்பேன். என்னை ஏமாற்றும் எந்த சிருஷ்டிப்பையும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நீ ஒழுக்கமற்ற முறையில் என் முன் கோரிக்கைகளை விடுத்து, பொய் சொல்லி விடலாம் என்று நினைத்தாயா? உன் சொற்களையும் செயல்களையும் நான் கேட்கவோ அல்லது பார்க்கவோ இல்லை என்று நினைத்தாயா? உன் சொற்களும் செயல்களும் என் பார்வையில் எப்படி இல்லாமல் இருக்கக்கூடும்? ஜனங்கள் என்னை அப்படி ஏமாற்ற நான் எப்போதாவது அனுமதிக்க முடியுமா?

நான் பல காலங்களாக உங்கள் மத்தியில் உங்களோடு தொடர்பில் இருக்கிறேன். நான் உங்களிடையே நீண்ட காலமாக வாழ்ந்தேன், உங்களுடன் வாழ்ந்தேன். உங்களின் எத்தனை இழிவான நடத்தை என் கண்களுக்கு முன்பாகக் கடந்து போய்விட்டது? உங்களுடைய அந்த இதயபூர்வமான வார்த்தைகள் தொடர்ந்து என் காதுகளில் எதிரொலிக்கின்றன. எண்ணப்படவும் முடியாதவையான உங்களின் மில்லியன் கணக்கான அபிலாஷைகள் என் பலிபீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் நீங்கள் பயன்படுத்தும் காரியங்களைப் பொறுத்தவரை, நீங்கள் சொற்ப காரியத்தைக் கூட கொடுக்கவில்லை. நீங்கள் ஒரு சிறு துளி உண்மையைக் கூட என் பலிபீடத்தின் மீது வைக்கவில்லை. என் மேல் இருக்கும் உங்கள் விசுவாசத்தின் பலன்கள் எங்கே? நீங்கள் என்னிடமிருந்து அளவற்ற கிருபையைப் பெற்றிருக்கிறீர்கள், பரலோகத்திலிருந்து எண்ணற்ற இரகசியங்களைக் கண்டீர்கள். பரலோகத்தின் அக்கினிப் பிழம்புகளைக் கூட நான் உங்களுக்குக் காண்பித்துள்ளேன், ஆனால் உன்னை எரித்துப் போடுவதற்கு எனக்கு இதயம் இல்லை. ஆயினும்கூட, அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு என்ன திருப்பிக் கொடுத்தீர்கள்? நீங்கள் எனக்கு எவ்வளவு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்? நான் உங்களுக்குக் கொடுத்த உணவை கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் எதிராகத் திரும்பிக்கொண்டு அதையே எனக்குக் கொடுக்கிறீர்கள், அதைக்காட்டிலும், அது உன்னுடைய சொந்த கடின உழைப்பின் வியர்வையின் பிரதிபலனாக நீ பெற்றுக்கொண்டது என்றும் உன்னிடத்தில் இருக்கிற எல்லாவற்றையும் எனக்குக் காணிக்கை கொடுக்கிறாய் என்றும் சொல்லுமளவிற்குப் போகிறாய். நீ எனக்குக் கொடுத்த “பங்களிப்புகள்” அனைத்துமே என் பலிபீடத்திலிருந்து திருடப்பட்டவை என்பதை நீ எப்படி அறியாமல் இருக்கிறாய்? மேலும் இப்போது அவற்றை எனக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறாய், நீ என்னை வஞ்சிக்கிறாயல்லவா? இன்று நான் அனுபவிப்பது எல்லாமே என் பலிபீடத்தின் மீதுள்ள காணிக்கைகள் என்றும் அவை உன்னுடைய கடின உழைப்பிலிருந்து நீ சம்பாதித்து, அதன் பின் எனக்குக் கொடுத்தது அல்ல என்றும் நீ எப்படி அறியாமல் இருக்கிறாய்? உண்மையில் இப்படி என்னை வஞ்சிப்பதற்கு உங்களுக்கு என்ன தைரியம், எனவே நான் உங்களை எப்படி மன்னிக்க முடியும்? இனிமேல் நான் இதைச் சகித்துக் கொள்வேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? நான் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன். நான் உங்களிடம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தினேன், உங்கள் தேவைகளை சந்தித்தேன், உங்கள் கண்களைத் திறந்தேன், ஆனாலும் நீங்கள் உங்கள் மனசாட்சிகளைப் புறக்கணித்து விட்டு இப்படி என்னை வஞ்சிக்கிறீர்கள். நீங்கள் பாடுபட்டாலும், நான் பரலோகத்தில் இருந்து கொண்டு வந்த அனைத்தையும் நீங்கள் என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி நான் தன்னலமின்றி எல்லாவற்றையும் உங்களுக்கு வழங்கினேன். அப்படி இருந்தும் உங்களிடம் எந்தவிதமான அர்ப்பணிப்பும் இல்லை, நீங்கள் ஒரு மிகச்சிறிய பங்களிப்பைச் செய்திருந்தாலும் கூட, அதன்பின் என்னுடன் “கணக்குப்பார்த்து தீர்த்துக்கொள்ள” முயற்சிக்கிறீர்கள். உன்னுடைய பங்களிப்பு ஒன்றும் இல்லை அல்லவா? நீ எனக்கு கொடுத்தது வெறும் மண் துகளாகும், ஆனாலும் நீ என்னிடம் கேட்டது ஒரு டன் தங்கம் ஆகும். நீ முற்றிலும் நியாயமற்றவனாக இருக்கிறாய் அல்லவா? நான் உங்களிடையே கிரியை செய்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட வேண்டிய பத்து சதவிகிதத்தில் எந்தச் சுவடும் முற்றிலும் இல்லை, எந்தவொரு கூடுதல் பலிகளும் இல்லை என்பது சொல்ல வேண்டுவதில்லை. மேலும் பக்தியுள்ளவர்களால் பங்களிக்கப்பட்ட அந்த பத்து சதவிகிதமும் துன்மார்க்கர்களால் கைப்பற்றப்படுகிறது. நீங்கள் அனைவரும் என்னிடமிருந்து சிதறிப் போகவில்லையா? நீங்கள் அனைவரும் என்னை எதிர்த்து நிற்கவில்லையா? நீங்கள் அனைவரும் என் பலிபீடத்தை அழித்துக் கொண்டிருக்கவில்லையா? அத்தகைய ஜனங்கள் என் பார்வையில் எவ்வாறு பொக்கிஷமாக பார்க்கப்படுவார்கள்? அவர்கள் நான் வெறுக்கிற பன்றிகளும் நாய்களும் அல்லவா? நான் எப்படி உங்கள் தீமைசெய்தலை ஒரு பொக்கிஷமாக குறிப்பிட முடியும்? என் கிரியை உண்மையில் யாருக்காக செய்யப்படுகிறது? என் அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்காக உங்கள் அனைவரையும் தாக்குவது அதனுடைய நோக்கமாக இருக்க முடியுமா? என்னிடத்திலிருந்து வரும் ஒரு வார்த்தையின் மேல் உங்கள் வாழ்வுகள் சார்ந்து இருக்கிறதல்லவா? உங்களுக்கு அறிவுறுத்துவதற்கு நான் ஏன் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துகிறேன், என்னால் முடியும் என்றவுடன் உங்களைத் தாக்கி கீழே தள்ளும்படி என் வார்த்தைகளை நிகழ்வுகளாக நான் ஏன் மாற்றவில்லை? மனிதகுலத்தைத் தாக்கி கீழே தள்ளுவதா என் வார்த்தைகளின் நோக்கம் மற்றும் கிரியை? குற்றமற்றவர்களைக் கண்மூடித்தனமாக கொல்லுகிற தேவனா நான்? இப்போதே மனித வாழ்க்கையின் சரியான பாதையைத் தேடுவதற்கு உங்களில் எத்தனை பேர் உங்கள் முழு மனதுடன் என் முன் வருகிறீர்கள்? உங்கள் சரீரங்கள் மட்டுமே எனக்கு முன்னால் உள்ளன; உங்கள் இருதயங்கள் இன்னும் வெகு தூரத்தில், என்னைவிட வெகு தொலைவில் உள்ளன. என் கிரியை உண்மையில் என்னவென்று உங்களுக்குத் தெரியாததால், உங்களில் பலர் என்னிடமிருந்து விலகி, என்னை விட்டு தூரஞ்செல்ல விரும்பி, அதற்குப் பதிலாக, சிட்சையோ தீர்ப்போ இல்லாத ஒரு பரதீசில் வாழலாம் என்று நம்புகிறீர்கள். இதைத் தான் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் விரும்புகிறார்கள் அல்லவா? நான் நிச்சயமாக உன்னைக் கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை. நீ எந்த பாதையில் செல்ல வேண்டுமென்பது உன்னுடைய சொந்த விருப்பமாகும். இன்றைய பாதையானது தீர்ப்பு மற்றும் சாபங்களுடன் இணைந்திருக்கும் ஒன்றாகும், ஆனால் நான் உங்கள்மேல் வருவித்த, நியாயத்தீர்ப்புகளானாலும் சிட்சைகளானாலும், அவை நான் உங்களுக்காக கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசுகளும், உங்கள் அனைவருக்கும் அவசரமாகத் தேவைப்படும் காரியங்களுமாகும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

முந்தைய: சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது

அடுத்த: நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக