பிற்சேர்க்கை: அத்தியாயம் 2

ஜனங்கள் நடைமுறைத் தேவனைப் பார்க்கும்போது, அவர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் வாழ்க்கையை வாழும்போது, ஒன்றாக இணைந்து நடக்கும்போது, தேவனுடன் தங்கியிருக்கும்போது, அவர்கள் தங்கள் இருதயத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆர்வத்தை ஒதுக்கி வைக்கிறார்கள். முன்பு சொல்லப்பட்டிருக்கிற தேவனைக் குறித்த அறிவானது முதல் படி மட்டுமே; ஜனங்கள் தேவனைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தாலும், அவர்களுடைய இருதயங்களில் இதுபோன்ற பல தொடர்ச்சியான சந்தேகங்கள் உள்ளன: தேவன் எங்கிருந்து வந்தார்? தேவன் சாப்பிடுகிறாரா? தேவன் சாதாரண ஜனங்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவரா? தேவனைப் பொறுத்தவரையில், எல்லா ஜனங்களுடனும் பழகுவது எளிதான காரியமா, மிகவும் எளிதான செயலா? தேவனுடைய வாயிலிருந்து பேசப்படும் அனைத்தும் பரலோகத்தின் இரகசியங்களா? சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் சொன்னதை விடவும் அவர் சொல்வதெல்லாம் மிக உயர்ந்ததா? தேவனுடைய கண்களிலிருந்து ஒளி பிரகாசிக்கிறதா? இன்னும் பல உள்ளன… இதற்குத்தான் ஜனங்களின் எண்ணங்கள் தகுதியுடையவையாக இருக்கின்றன. இந்த விஷயங்களைத்தான் நீங்கள் எல்லாவற்றிற்கும் முன்பு புரிந்துகொள்ள வேண்டும், மற்றும் பிரவேசிக்க வேண்டும். ஜனங்களின் கருத்துகளில், மனுவுருவான தேவன் இன்னும் ஒரு தெளிவற்ற தேவனாகவே இருக்கிறார். நடைமுறை அறிவின் மூலமாக இல்லாவிட்டால், ஜனங்கள் ஒருபோதும் என்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள், மேலும் அவர்களின் அனுபவங்களில் என் செயல்களையும் பார்க்க மாட்டார்கள். நான் மாம்சமாக மாறியதால்தான் ஜனங்கள் என் சித்தத்தை “கிரகிக்க இயலாதவர்களாய்” இருக்கிறார்கள். நான் மாம்சமாகாதிருந்து, இன்னும் பரலோகத்தில், இன்னும் ஆவிக்குரிய உலகில் இருந்திருந்தால், ஜனங்கள் என்னை “அறிவார்கள்”; அவர்கள் என்னைப் பணிந்து குனிந்து ஆராதிப்பார்கள், தங்கள் அனுபவங்களின் மூலம் என்னைப் பற்றிய அவர்களின் “அறிவை” பற்றி பேசுவார்கள்—ஆனால் அத்தகைய அறிவினால் பயன் என்ன? மேற்கோள் கருத்தாக அதன் மதிப்பு என்னவாக இருக்கும்? ஜனங்களின் எண்ணங்களிலிருந்து வரும் அறிவு உண்மையானதாக இருக்க முடியுமா? ஜனங்களின் மூளையின் அறிவு எனக்கு வேண்டாம்—எனக்கு நடைமுறை அறிவுதான் வேண்டும்.

என் சித்தம் எல்லா நேரங்களிலும் உங்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் எல்லா நேரங்களிலும் என் அறிவொளியும் பிரகாசமும் உள்ளது. நான் நேரடியாக தெய்வீகத்தன்மையில் செயல்படும்போது, அது மூளையிலிருந்து வருவதில்லை, மேலும் “மசாலாவை” சேர்க்க வேண்டிய அவசியமில்லை—இது தெய்வீகத்தன்மையின் நேரடி செயலாகும். ஜனங்கள் எதில் திறமையானவர்கள்? சிருஷ்டிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அனைத்தும் என்னால் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தப்படவில்லையா? கடந்த காலத்தில், நான் ஏழு மடங்கு தீவிரமடைந்த ஆவியானவரைப் பற்றி பேசினேன், ஆனால் அவருடைய சாராம்சத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை—அவர்கள் அதைப் பற்றி அறிந்திருந்தாலும், அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாதவர்களாய் இருந்தார்கள். நான் தெய்வீகத்தன்மையினால் நிர்வகிக்கப்படும் மனிதத்தன்மையில் கிரியை செய்யும்போது, இந்தக் கிரியையானது, இயற்கைக்கு அப்பாற்பட்டதாக அல்ல, மாறாக, சாதாரணமானதுதான் என்று ஜனங்கள் நம்பும் சூழ்நிலையில் மேற்கொள்ளப்படுவதால், இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று குறிப்பிடப்படுகிறது. நான் நேரடியாக தெய்வீகத்தன்மையில் கிரியை செய்யும்போது, ஜனங்களின் கருத்துக்களால் நான் கட்டுப்படுத்தப்படாதவனாக இருப்பதாலும், அவர்களின் கருத்துகளுக்குள் இருக்கும் “இயற்கைக்கு அப்பாற்பட்ட” வரம்புகளுக்கு நான் உட்பட்டிருக்கவில்லை என்பதாலும், இந்தக் கிரியை உடனடியான பலனைக் கொண்டிருக்கிறது; இது விஷயத்தின் மையப் பகுதிக்குச் செல்கிறது, மேலும் அது நேரடியாக விஷயத்தைக் கூறுகிறது. இதன் விளைவாக, இந்தக் கட்ட கிரியையானது தூய்மையானதாய் இருக்கிறது; இது இருமடங்கு வேகமானதாக மாறுவதால், ஜனங்களின் புரிதல் துரிதப்படுத்தப்படுகிறது மற்றும் எனது வார்த்தைகள் அதிகரிக்கின்றன, அதை அடைய அனைத்து ஜனங்களையும் விரைந்து செல்ல வைக்கிறது. அதன் பலன் வித்தியாசமாக இருப்பதாலும், எனது கிரியையின் வழிமுறைகள், தன்மை மற்றும் உட்பொருள் ஒரே மாதிரியாக இல்லாததாலும்—மேலும், நான் அதிகாரப்பூர்வமாக மாம்சத்தில் கிரியை செய்யத் தொடங்கியதாலும், மேற்கூறியவற்றின் பார்வையில், இந்தக் கட்ட கிரியையானது “ஏழு மடங்காகத் தீவிரமடைந்த ஆவியானவரின் கிரியை” என்று குறிப்பிடப்படுகிறது. இது கடினமான ஒன்று அல்ல. நான் உங்களில் கிரியை செய்யும் வழிமுறைகளின் வளர்ச்சியைத் தொடர்ந்து, ராஜ்யத்தின் வருகையைத் தொடர்ந்து, ஏழு மடங்காகத் தீவிரமடைந்த ஆவியானவர் கிரியை செய்யத் தொடங்குகிறார், மேலும் இந்தக் கிரியை தொடர்ந்து மிக அதிகமாகவும், மேலும் தீவிரமாகவும் வளர்கிறது. எல்லா ஜனங்களும் தேவனைப் பார்க்கும்போது, தேவனுடைய ஆவியானவர் மனுஷர்கள் மத்தியில் இருப்பதை அவர்கள் அனைவரும் பார்க்கும்போது, எனது மனுவுருவானவரின் முழு முக்கியத்துவமும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. விவரிக்க வேண்டிய அவசியமில்லை—ஜனங்கள் இதை இயல்பாகவே அறிவார்கள்.

நான் கிரியை செய்யும் வழிமுறைகள், எனது கிரியையின் படிகள், இன்று என் வார்த்தைகளின் தொனி மற்றும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இப்போது என் வாயிலிருந்து வருவதெல்லாம், உண்மையான அர்த்தத்தில் “ஏழு ஆவிகளின் கூற்றுகள்” மட்டுமே ஆகும். நான் கடந்த காலத்தில் பேசினாலும் கூட, அது திருச்சபையைக் கட்டும் காலகட்டமாக இருந்தது. இது ஒரு புதினத்தில் முன்னுரையும் பொருளடக்கமும் போல இருந்தது—அது சாராம்சம் இல்லாமல் இருந்தது; இன்றைய வார்த்தைகள் மட்டுமே, அதன் சாராம்சத்தின் அடிப்படையில் ஏழு ஆவிகளின் வார்த்தைகள் என்று சொல்லப்படும். “ஏழு ஆவிகளின் வார்த்தைகள்” என்பது சிங்காசனத்திலிருந்து வரும் வார்த்தைகளைக் குறிக்கிறது, அதாவது, அவை நேரடியாக தெய்வீகத்தன்மையில் பேசப்படுகின்றன. என் வார்த்தைகள் பரலோகத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் தருணமே நான் தெய்வீகத்தன்மையை நேரடியாகப் பேசிய தருணமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதத்தன்மையினால் கட்டுப்படுத்தப்படாமல், ஆவிக்குரிய உலகத்தின் அனைத்து இரகசியங்களையும் சூழ்நிலைகளையும் நான் நேரடியாக வெளிப்படுத்தினேன். நான் முன்பு மனிதத்தன்மையின் வரம்புகளுக்கு உட்பட்டவனாக இருந்தேன் என்று ஏன் சொல்கிறேன்? இதை விளக்குவது அவசியமாகும். ஜனங்களின் பார்வையில், பரலோகத்தின் இரகசியங்களை ஒருவரும் வெளிப்படுத்த இயலாதவர்களாய் இருக்கிறார்கள்; தேவன் தாமே வெளிப்படுத்தவில்லை என்றால், பூமியில் உள்ள யாராலும் இந்த இரகசியங்களைப் பற்றி அறிய முடியாது. இவ்வாறு, நான் ஜனங்களின் கருத்துக்களைக் குறிப்பிட்டு, கடந்த காலங்களில் நான் எந்த இரகசியங்களையும் வெளிப்படுத்தாததற்குக் காரணம், நான் மனிதத்தன்மையின் வரம்புகளுக்கு உட்பட்டிருந்ததால்தான் என்று கூறுகிறேன். இருப்பினும், இன்னும் குறிப்பாக, இது அப்படியல்ல: எனது கிரியை வேறுபடுவதால் என்னுடைய வார்த்தைகளின் உள்ளடக்கமும் வேறுபடுகிறது, எனவே, நான் தெய்வீகத்தன்மையில் எனது ஊழியத்தை செய்யத் தொடங்கியபோது, நான் இரகசியங்களை வெளிப்படுத்தினேன்; கடந்த காலத்தில், எல்லா ஜனங்களும் சாதாரணமாகப் பார்க்கும் சூழ்நிலையிலும், மேலும் நான் பேசிய வார்த்தைகள் ஜனங்களின் எண்ணங்களில் சென்றடையக்கூடியவையாக இருக்கும்படியும் நான் கிரியை செய்ய வேண்டியிருந்தது. நான் இரகசியங்களை வெளிப்படுத்தத் தொடங்கியபோது, இவற்றில் ஒன்று கூட ஜனங்களின் எண்ணங்களால் புரிந்துகொள்ளக் கூடியதாக இல்லை—அவைகள் மனுஷனுடைய சிந்தனையைப் போலல்லாமல் இருந்தன. எனவே, நான் அதிகாரப்பூர்வமாக தெய்வீகத்தன்மையில் பேசத் தொடங்கினேன், உண்மையான அர்த்தத்தில், இவைகளே ஏழு ஆவிகளின் வார்த்தைகளாகும். கடந்த கால வார்த்தைகள் சிங்காசனத்திலிருந்து சொல்லப்பட்டவை என்றாலும், அவை ஜனங்களால் அடையக்கூடியவற்றின் அடிப்படையில்தான் பேசப்பட்டன, எனவே அவை நேரடியாக தெய்வீகத்தன்மையில் பேசப்படவில்லை—இதன் விளைவாக, உண்மையான அர்த்தத்தில், அவை ஏழு ஆவிகளின் வார்த்தைகளாக இருக்கவில்லை.

முந்தைய: அத்தியாயம் 11

அடுத்த: அத்தியாயம் 12

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக