அத்தியாயம் 48

நான் கவலையாக இருக்கிறேன், ஆனால் உங்களில் எத்தனை பேரால் என்னுடன் ஒரே மனதுடனும் ஒரே எண்ணத்துடனும் இருக்க முடிகிறது? நீங்கள் என் வார்த்தைகளுக்குச் செவி கொடுக்காமல், முற்றிலும் புறக்கணித்து, அவற்றில் கவனம் செலுத்தத் தவறுகிறீர்கள், மாறாக உங்கள் சொந்த மேலோட்டமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள். எனது மிகுந்த சிரத்தையுடன் கூடிய கவனிப்பையும் முயற்சியையும் வீண் என்று கருதுகிறீர்கள்; உங்கள் மனசாட்சி கண்டிக்கப்படவில்லையா? நீங்கள் அறியாதவர்களும் பகுத்தறிவு இல்லாதவர்களுமாய் இருக்கிறீர்கள்; நீங்கள் அனைவரும் மூடர்களும், என்னை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாதவர்களுமாய் இருக்கிறீர்கள். நான் முற்றிலுமாக உங்களுக்காகவே இருக்கிறேன்—எனக்காக உங்களால் எவ்வளவு இருக்க முடியும்? என் நோக்கத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இது உண்மையிலேயே உங்கள் குருட்டுத்தன்மையும் விஷயங்களைப் பார்க்க இயலாமையுமே ஆகும், எப்போதும் என்னை உங்களைப் பற்றி கவலைப்பட வைக்கிறீர்கள் மற்றும் உங்களுக்காக நேரத்தை செலவிடச் செய்கிறீர்கள். இப்போது, உங்களால் எவ்வளவு நேரத்தை எனக்காகச் செலவிடவும் அர்ப்பணிக்கவும் முடியும்? இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே அடிக்கடி கேட்க வேண்டும்.

என்னுடைய எண்ணம் அனைத்தும் உங்களைப் பற்றியதே—நீங்கள் இதை உண்மையிலேயே புரிந்து கொள்கிறீர்களா? நீங்கள் இதை உண்மையிலேயே புரிந்து கொண்டால், நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே என் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, என் பாரத்தைக் கருத்தில் கொண்டிருப்பீர்கள். மீண்டும் கவனக்குறைவாக இருக்காதீர்கள், இல்லையென்றால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உங்களில் கொண்டிருக்க மாட்டீர்கள், அது உங்கள் ஆவிகளை மரிக்கச் செய்து பாதாளத்தில் விழப்பண்ணும். இது உனக்கு மிகவும் பயங்கரமானதல்லவா? நான் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் மனசாட்சியை ஆராய்ந்து உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: நான் உங்கள் அனைவருக்காகவும் மிகவும் வருந்துகிறேன் என்பதினாலா அல்லது நீங்கள் எனக்கு அதிகமாகக் கடன்பட்டிருக்கிறீர்கள் என்பதினாலா? சரி எது, தவறு எது என்று குழப்பமடைய வேண்டாம்; உணர்வு இல்லாமல் இருக்க வேண்டாம்! அதிகாரத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் சண்டையிடுவதற்கான அல்லது சூழ்ச்சியில் ஈடுபடுவதற்கான நேரம் இது அல்ல. மாறாக, வாழ்க்கைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இந்த விஷயங்களை, நீங்கள் விரைவாக ஒதுக்கி வைத்து விட்டு யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முற்பட வேண்டும். நீங்கள் மிகவும் கவனக்குறைவாக இருக்கிறீர்கள்! உங்களால் என் இருதயத்தைப் புரிந்து கொள்ளவோ அல்லது என் நோக்கத்தை உணர்ந்து கொள்ளவோ முடியாது. நான் சொல்லியிருக்கக் கூடாத அநேக விஷயங்கள் உள்ளன, ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளாதவர்களாகிய குழம்பிப் போன ஜனங்களாக இருக்கிறீர்கள், எனவே நான் அவற்றைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருந்தது, அப்படியிருந்தாலும், நீங்கள் இன்னும் என் இருதயத்தைத் திருப்தி அடையச் செய்திருக்கவில்லை.

உங்களை ஒவ்வொருவராக எண்ணிப் பார்த்தால், உங்களில் எத்தனை பேரால் என் இருதயத்தைக் குறித்து உண்மையிலேயே அக்கறையுள்ளவர்களாக இருக்க முடியும்?

முந்தைய: அத்தியாயம் 47

அடுத்த: அத்தியாயம் 49

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக