அத்தியாயம் 82

என் வார்த்தைகளைக் கேட்டவுடன், அனைவரும் அச்சப்படுகிறார்கள்; ஒவ்வொரு தனி நபரும் நடுக்கத்தால் நிரம்புகிறார்கள். நீங்கள் எதற்காகப் பயப்படுகிறீர்கள்? நான் உங்களைக் கொல்லப் போவதில்லை! இதற்குக் காரணம் உங்களிடம் குற்ற மனசாட்சி இருப்பது தான்; என் முதுகுக்குப் பின்னால் நீங்கள் செய்வதெல்லாம் மிகவும் அற்பமானதும் பயனற்றதும் தான். நான் முன்குறிக்காதவர்களையும் தேர்ந்தெடுக்காதவர்களையும் துண்டுதுண்டாக நொறுக்கிப்போடும்படி பாதாளத்தில் தூக்கி எரிய வேண்டுமென நான் தீவிரமாக விரும்பும் அளவிற்கு உங்களை நான் மிகவும் வெறுக்கும்படி இது என்னை மாற்றி விட்டது. இருப்பினும், என்னிடம் என் திட்டம் இருக்கிறது; என்னிடம் என் இலக்குகள் இருக்கின்றன. தற்போது நான் உன்னுடைய அற்ப ஜீவனை விட்டு வைப்பேன், எனக்கான உன் ஊழியம் முடியும் வரை உன்னை வெளியே தள்ளுவதைத் தவிர்ப்பேன். நான் இத்தகைய ஜந்துக்களைப் பார்க்க விரும்பவில்லை; அவர்கள் என் நாமத்துக்கு ஒரு நிந்தையாக இருக்கிறார்கள்! இது உனக்குத் தெரியுமா? நீ புரிந்து கொள்ளுகிறாயா? தகுதியற்ற ஈனர்கள்! இதை நன்றாகப் புரிந்து கொள்! நீ பயன்படுத்தப்படும் போது, அதைச் செய்கிறவர் நானே, பயன்படுத்தபடாத போது, அதுவும் என்னால் தான். எல்லாம் என்னால் தான் திட்டமிடப்படுகின்றன, மேலும் என் கரங்களில் ஒவ்வொன்றும் நன்றாகவும் ஒழுங்காகவும் நடந்து கொள்ளுகிறது. முறை தவறி நடப்பவர்கள் யாராக இருந்தாலும் என் கரத்தால் உடனடியாக அழித்துப் போடப்படுவார்கள். நான் அடிக்கடி “அழித்துப்போடப் போவதாகச்” சொல்லுகிறேன்; உண்மையில் நான் என்னுடைய சொந்தக் கையால் அதைச் செய்வேன் என்று நீ நினைக்கிறாயா? நான் அதைச் செய்யத் தேவை இல்லை! மனுஷர்கள் கற்பனை செய்வது போல் என் செயல்கள் முட்டாள்தனமானவைகள் அல்ல. ஒவ்வொன்றும் என் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன என்று சொல்லும்போது அதற்கு அர்த்தம் என்ன? நான் என்னுடைய ஒரு விரலைக் கூட அசைக்காமல் எல்லாம் நிறைவேற்றப்பட்டன. என்னுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுகிறாயா?

எனக்கு ஊழியம் செய்யும் யாரொருவருக்கும் நான் இரட்சிப்பைக் கொண்டுவர மாட்டேன்; அவர்களுக்கு என் ராஜ்யத்தில் எந்தப் பங்கும் இல்லை. இது ஏனென்றால் இந்த ஜனங்கள் என் சித்தப்படி செய்வதற்கு மாறாக, புற விஷயங்களில் தான் தங்களை மும்முரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களை நான் இப்போது பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், உண்மையில் இந்த ஜனங்களே என்னால் மிகவும் வெறுக்கப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள்; நான் மிகவும் அருவருக்கும் ஜனங்கள். இன்று, யார் யாரெல்லாம் என் சித்தப்படி செய்கிறர்களோ, யார் யாரெல்லாம என் பாரங்களைக் கருத்தில் கொள்ளுகிறார்களோ, மேலும் யார் யாரெல்லாம் முழு இருதயத்தோடும் உண்மையோடும் தங்களுடைய முழுமையையும் எனக்குத் தருகிறார்களோ அவர்களையே நான் நேசிக்கிறேன். அவர்களை நான் தொடர்ந்து பிரகாசிப்பித்து, அவர்களை என்னை விட்டு நழுவிப் போக விடமாட்டேன். நான் அடிக்கடி சொல்லுகிறேன், “எனக்காக மனமார ஒப்புக் கொடுப்பவர்களுக்கு, நான் நிச்சயமாக உன்னைப் பெரிதும் ஆசீர்வதிப்பேன்.” “ஆசீர்வதித்தல்” என்பது எதைக் குறிக்கிறது? உனக்குத் தெரியுமா? பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையின் சூழலில், நான் உனக்குக் கொடுக்கும் பாரங்களையே அது குறிக்கிறது. சபைக்காக யாரெல்லாம் ஒரு பாரத்தைச் சுமக்க முடிகிறதோ, எனக்காக யாரெல்லாம் தங்களை அர்ப்பணிக்கிறார்களோ, அவர்களின் பாரங்களும் ஆர்வங்களும் ஆகிய இரண்டுமே என்னிடம் இருந்து வரும் ஆசீர்வாதங்கள் ஆகும். கூடுதலாக, அவர்களுக்கான என் வெளிப்பாடுகளும் கூட ஓர் ஆசீர்வாதமே. இது ஏனென்றால், தற்போது யாருக்குப் பாரம் இல்லையோ அவர்கள் யாவரும் என்னால் முன்குறிக்கப்பட்டுத் தெரிந்தெடுக்கப்படாதவர்கள் ஆவர்; என்னுடைய சாபங்கள் அவர்கள் மேல் ஏற்கெனவே வந்து விட்டன. வேறு வார்த்தைகளில் கூறினால், யாரையெல்லாம் நான் முன்குறித்து தெரிந்தெடுத்திருக்கிறேனோ அவர்களுக்கெல்லாம் நான் கூறியவற்றின் நேர்மறையான அம்சங்களில் ஒரு பங்குண்டு, நான் முன்குறிக்காத மற்றும் தெரிந்தெடுக்காதவர்களுக்கெல்லாம் நான் உரைத்தவைகளின் எதிர்மறையான அம்சங்களில் மட்டுமே பங்குண்டு. என் வார்த்தைகள் அதிகதிகமாய் பேசப்படும்போது, அர்த்தமும் இன்னும் தெளிவாக இருக்கும்; அவற்றை நான் அதிகமாகப் பேசும்போது, அவை மிகவும் தெளிவானவையாக மாறுகின்றன. நேர்மையற்றவர்களாகவும் ஏமாற்றுகிறவர்களாகவும் என்னால் முன்குறிக்கப்பபடாதவர்கள் ஒவ்வொருவரும் இந்த உலகத்தோற்றத்திற்கு முன்னரே சபிக்கப்பட்டவர்கள். உங்கள் பிறப்பின் ஆண்டு, மாதம், நாள், மட்டுமல்லாமல் மணிநேரம், நிமிடம் மற்றும் வினாடியும் கூட என்னால் பொருத்தமாகத் திட்டமிடப்பட்டவை என்று ஏன் கூறப்படுகிறது? யார் முதற்பேறான குமாரர்களின் நிலையை அடைவார்கள் என்று வெகு காலத்திற்கு முன்னரே நான் தீர்மானித்து விட்டேன். அவர்கள் என் கண்களில் இருக்கிறார்கள்; அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே விலையேறப் பெற்றவர்களாய் என்னால் கருதப்பட்டு விட்டார்கள், அவர்களுக்காக நீண்ட காலத்திற்கு முன்னரே என் இருதயத்தில் ஓர் இடம் இருந்தது. நான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு மேலும் அவை என்னுடைய எண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. மனுஷன் என்றால் என்ன? என்னால் நேசிக்கப்படும் ஒரு சிலரைத் தவிர, யாருக்கு முதற்பேறான குமாரர்கள் என்ற அந்தஸ்து இருக்கிறது, என் சித்தத்தை எந்த சிலர் கருத்தில் கொள்ளுகின்றனர்? என் குமாரர்களின் மதிப்பு என்ன? என் ஜனங்களின் மதிப்பு என்ன? கடந்த காலத்தில், “என் குமாரர்கள்” என்ற சொல் என் முதற்பேறான குமாரர்களுக்கு ஒரு பட்டப் பெயராக இருந்தது. ஆனால் வெட்கம் அறியாத என் குமாரர்களும் என் ஜனங்களும் அதை அவர்களுக்கு உரிய ஒரு மதிப்பிற்குரிய பட்டமாக நினைத்தார்கள். வெட்கமின்றி என் முதற்பேறான குமாரர்கள் என்ற பங்கை வகிக்க வேண்டாம். நீ இந்தப் பட்டத்துக்கு உரியவன்தானா? இன்று, எனக்கு முன்பாக முக்கிய நிலைகளில் வைக்கப்பட்டிருப்பவர்களே சரிபார்க்கப்பட்டவர்கள்; இந்த ஜனங்கள் முதற்பேறான குமாரர்கள் என்ற அந்தஸ்தை அடைந்திருக்கிறார்கள். என் சிங்காசனத்தில், என் கிரீடத்தில், என் மகிமையில், என் ராஜ்யத்தில் அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பங்கு இருக்கிறது. எல்லா விஷயங்களும் என்னால் நுணுக்கமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முதற்பேறான குமாரர்கள் என்ற அந்தஸ்தை அடைந்திருப்பவர்கள் எல்லோரும் மிகுந்த வலி, அடக்குமுறை மற்றும் துன்பங்களை அடைந்தவர்கள் ஆவர். இதில் அவர்கள் தங்கள் குடும்பங்களில் பிறந்ததில் இருந்து அனுபவித்தவை, சொந்த தனிப்பட்ட வாய்ப்புகள், வேலை, மற்றும் திருமணமும் அடங்கும். ஒரு விலையைக் கொடுக்காமல் இந்த முதற்பேறான குமாரர்கள் இந்த அந்தஸ்தை அடையவில்லை; மாறாக, அவர்கள் ஜீவிதத்தின் எல்லா அம்சங்களையும் நல்லது கெட்டது மற்றும் உயர்வு தாழ்வு ஆகியவற்றை ஏற்கனவே அனுபவித்திருக்கிறார்கள். உலக ஜனங்களால் முன்னர் உயர்வாக மதிக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும், மேலும் வீட்டில் வசதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும், முதற்பேறான குமாரர்களில் எந்தப் பங்கும் இல்லை. அவர்கள் முதற்பேறான குமாரர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்; அவர்கள் என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டு வருகிறார்கள், மேலும் அவர்கள் எனக்கு முற்றிலுமாகத் தேவை இல்லை. நான் தெரிந்தெடுத்த என் குமாரர்களுக்கும் என் ஜனங்களுக்கும் உலகத்திலும் நல்ல புகழ் இருக்கிறது, ஆனால் அவர்கள் என் முதற்பேறான குமாரர்களின் தரத்தை அடையத் தவறுகிறார்கள். நான் தற்போது சிலரைப் பயன்படுத்தி வருகிறேன், ஆனால் அவர்களின் மத்தியில் பலர் என் ஜனங்களாக இருக்கவுங்கூடத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நித்திய அழிவிற்கான பொருட்கள்; ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக்கு ஊழியம் செய்ய அவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள், ஆனால் அவர்கள் நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உரியவர்கள் அல்லர். என் உள்ளத்தின் ஆழத்தில் நீண்ட காலத்திற்கு உபயோகப்படுத்தபடக் கூடியவர்கள் யார் என்று ஏற்கனவே தீர்மானித்துவிட்டேன். அதாவது, நான் நேசிக்கிறவர்களையே முக்கியமான நிலைகளில் நான் வைப்பேன், மேலும் நீண்ட காலத்திற்கு முன்னரே நான் அவர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அவர்களது செயல்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டாயிற்று. நான் வெறுக்கும் ஜனங்களைப் பொறுத்த வரையில், தற்போதைய கட்டத்தில், அவர்கள் வெறும் தற்காலிக அடிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். அயல்நாட்டுக்காரர்கள் வரும்போது, உங்களுக்கு முதற்பேறான குமாரர்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படுவார்கள்.

இப்போதே நீங்கள் துரிதமாக வளர்ந்து என் பாரத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்று கேட்கிறேன். இந்த பாரம் மிகப் பெரியது அல்ல, உன்னுடைய திறமைக்குட்பட்டவற்றை நீங்கள் செய்ய வேண்டியது மட்டுமே எனக்குத் தேவையானது ஆகும். நான் உன்னுடைய வளர்ச்சியை அறிவேன்; உன்னால் என்ன செயல்களைச் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும். இவை எல்லாம் எனக்குத் தெரியும் மற்றும் இந்த விஷயங்களை நான் புரிந்து கொள்ளுகிறேன்; என் குமாரர்களே, நீங்கள் மனப்பூர்வமாக உங்கள் சுயத்தை மறுத்து, உண்மையாகவே நான் நேசிப்பதை நேசித்து, நான் வெறுப்பதை வெறுத்து, நான் செய்வதையே செய்து, நான் கூறுவதையே கூற வேண்டும் என்று மட்டும் தான் நான் விரும்புகிறேன். வெளி, நிலவியல், நேரம், அல்லது எந்த ஒரு நபராலும் கட்டுப்படுத்தப்பட வேண்டாம். என் முதற்பேறான குமாரர்கள் என்ற நிலையில் உங்களில் ஒவ்வொருவரும் நிற்கக்கூடியதாக எல்லா இடத்திலும் உங்கள் ஆவி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இன்று தன்னை முழுமையாக எனக்கு அர்ப்பணிக்கக் கூடியவர் யார்? யாரால் உண்மையாக எனக்கு ஒப்புக் கொடுக்க முடியும்? எனக்காக இரவும் பகலும் செயலாற்றுபவன் யார்? எனக்காக என் வீட்டு வேலைகளை நடத்துபவன் யார்? எனக்காக என் தோள்களின் பாரங்களை இலகுவாக்குபவன் யார்? அவர்கள் என் குமாரர்கள் இல்லையா? நான் செய்யும் யாவும் என் குமாரர்களைப் பரிபூரணப்படுத்துவதற்காகவே மேலும் என் குமாரர்களுக்குச் சேவையாகச் செய்யப்பட்டவையே. நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா? எல்லாமே என் முதற்பேறான குமாரர்களுக்காகவே, மேலும் நான் தவறேதும் செய்வதில்லை. நான் ஜனங்களைத் தவறாக வழிநடத்துகிறேன் என்ற தவறானப் புரிதலினால் இயங்காதே, மேலும் நான் உன்னைக் குறைவானவனாக பார்ப்பதாக நினைக்காதே. பெரும் தாலந்துகளை நான் குறைவாகப் பயன்படுத்துவதாக அல்லது உன்னை முன்குறிக்காமல் தவறு செய்துவிட்டேன் என்று நீயாகவே நினைத்துக் கொள்ளாதே. அதுவல்ல காரணம்; நீ அதற்குத் தகுதியானவன் இல்லை என்பதே அதற்குக் காரணம்! அது உனக்குத் தெரியுமா? இப்போது நான் உங்களுக்காகச் சில விஷயங்களை உறுதிப்படுத்துவேன்: அடிக்கடி என் கோபத்தைக் கிளறுபவனாகவும் என்னுடைய விமர்சனத்துக்கு அல்லது கையாளுதலுக்கு அடிக்கடி இலக்காக இருப்பவனும் யாரோ அவனே நிச்சயமாக என் வெறுப்புக்கு ஆளாவான். இத்தகைய ஜனங்கள் நிச்சயமாக சாவார்கள்—இது மாற்ற முடியாததாகும். நான் என் முதற்பேறான குமாரர்களை இனி கையாள மாட்டேன் என்று நான் சொல்லியிருக்கிறேன், ஏனெனில் இந்த ஜனங்கள் ஏற்கனவே என்னுடைய கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு என் ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்கள். யாரை நான் கடுமையாகப் பார்க்கிறேனோ அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். நீ பயப்படவில்லையா? என் வாயில் இருந்து என் வார்த்தை வெளிப்படுத்தப்பட்டவுடன் பலர் மரித்துப் போவார்கள். இருப்பினும், சிலர் இன்னும் தங்கள் மாம்சத்தைப் பராமரிப்பார்கள்; உண்மையில் அவர்களுடைய ஆவி செத்துப்போய்விட்டது என்பதே அதன் அர்த்தம். அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கவில்லை மேலும் அவர்களைக் கட்டுப்படுத்த அவர்களிடம் எதுவும் இல்லை என்பதே அவர்களின் தெளிவான அறிகுறியாகும். (அவர்கள் ஓர் ஆழமான அளவுக்கு, ஏற்கெனவே சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள்). அவர்களின் மாம்சம் அழிக்கப்படும் போதெல்லாம், அது என்னால் பொருத்தமாய்த் திட்டமிடப்பட்ட பிறகு மற்றும் நான் குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறது. அவர்களுடைய ஆவிக்குரிய மரணங்கள் எனக்குப் பெரும் சேவையைச் செய்ய முடியாது; நான் அவர்களுடைய மாம்சத்தைப் பயன்படுத்தி என் செயல்களின் அதிசயத்தை நிரூபிப்பேன். இதில் இருந்து, ஜனங்கள் நம்புவார்கள்; அவர்கள் முடிவில்லாமல் துதிப்பார்கள், மேலும் என்னை வணங்காமலும் எனக்குப் பயப்படாமலும் யாரும் இருக்க மாட்டார்கள். நான் எந்த விவரத்தையும் இலகுவாகக் கையாள மாட்டேன்; எல்லோரும் எனக்காக ஜீவிக்க வேண்டும் அல்லது மரிக்க வேண்டும், மேலும் எனக்கு ஊழியத்தைச் செய்யும் வரை யாரும் விட்டுச்செல்ல முடியாது. எனக்காக ஊழியத்தைச் செய்யாமல் சாத்தானால் கூட பாதாளத்துக்குள் திரும்பிப் போக முடியாது. நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் உறுதியானது, பாதுகாப்பானது மற்றும் திடமான அடிப்படையிலானது; நான் எடுக்கும் ஓர் அடி கூட சிறிதளவு கூட நடைமுறைப்படுத்தக் கூடாதது அல்ல.

என்னோடு ஒப்பிடத் துணிபவன் யார்? என்னை எதிர்க்கத் துணிபவன் யார்? நான் உன்னை உடனடியாக அழித்துப் போடுவேன்! ஒரு தடயமும் இல்லாமல் உன் மாம்சம் அழிக்கப்பட்டு விடும். இது முற்றிலும் உண்மை. நான் இந்த விஷயங்களைக் கூறும்போதே, உடனடியாக நான் அவற்றின் மேல் செயலாற்றுவேன், மேலும் அதில் இருந்து பின்வாங்க மாட்டேன். இந்த உலகம் நாளுக்கு நாள் சிதைந்து கொண்டே இருக்கிறது, மேலும் நாளுக்கு நாள் மனுக்குலம் அழிந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாள் கழியும் போதும், என்னுடைய ராஜ்யம் உருவாகி வருகிறது மேலும் என்னுடைய முதற்பேறான குமாரர்கள் வளர்ந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் என் கோபம் அதிகரிக்கிறது, என்னுடைய சிட்சைகள் கடுமையாகிக் கொண்டே வருகின்றன, மேலும் என்னுடைய வார்த்தைகள் கண்டிப்பாகிக் கொண்டே வருகின்றன. நீங்கள் நான் இன்னும் உங்களோடு மென்மையாகப் பேச வேண்டும் என்றும், என் தொனி இலகுவாக வேண்டும் என்றும் காத்திருக்கிறீர்கள், ஆனால் மறுபடியும் சிந்தியுங்கள்! நான் கையாளும் ஜனங்களைப் பொறுத்தது என் தொனி. நான் நேசிப்பவர்களுக்கு என் தொனி மென்மையாக இருப்பதோடு எப்போதும் ஆறுதல் அளிக்கும், ஆனால் உங்களுக்கோ, நான் கடுமையையும் நியாயத்தீர்ப்பையும் தான் காட்ட முடியும், மேலாக சிட்சையையும் கோபத்தையும் அதனோடு கூட்டுகிறேன். யாரும் அறியாமலேயே, உலகின் ஒவ்வொரு தேசத்தின் நிலையும் நாளுக்கு நாள் தொடர்ந்து பதட்டமாகவும், நொறுங்கிக் கொண்டும், குழப்பத்தில் வீழ்ந்து கொண்டும் இருக்கிறது. முடிவில் அதிகாரத்தை அடைவதற்காக ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் யாவரும் நம்பிக்கையோடு இருக்கின்றனர். என் சிட்சை ஏற்கனவே அவர்கள் மீது இருப்பதாக உண்மையில் அவர்களுக்குத் தோன்றவில்லை. அவர்கள் என் அதிகாரத்தைக் கைப்பற்ற நாடுகிறார்கள்—ஆனால் அவர்களுடையது ஒரு நிறைவேறாத கனவே! என்னுடைய மன்னிப்புக்காக ஐக்கிய நாடுகளின் தலைவர் கூட கெஞ்ச வேண்டும். அவர் செய்துள்ள தீய செயல்கள் எண்ணில் அடங்காதவை. சிட்சைக்கு இதுதான் நேரம், நான் அவரை சும்மா விடமாட்டேன். அதிகாரத்தில் இருக்கிற எல்லோரும் தங்கள் கிரீடத்தை எடுக்க வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக ஆளும் தகுதி என்னிடம் மட்டுமே இருக்கிறது. ஒரு சில அயல்நாட்டுக்காரர்கள் உட்பட எல்லாம் என்னைச் சார்ந்தே இருக்கின்றன—என்னைச் சோதிக்கும் எல்லோரையும் நான் உடனடியாக அழித்துப் போடுவேன், ஏனெனில் என்னுடைய கிரியைகள் வந்திருக்கும் தூரம் இதுவே. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வெளிப்படுத்துதலைப் பார்க்கிறது; ஒவ்வொரு நாளும் புதிய வெளிச்சம் பிறக்கிறது. எல்லாம் அதிக அதிகமாக முழுமையாகிக் கொண்டு வருகிறது. சாத்தானின் கடைசி நாள் நெருங்கி வந்து கொண்டே இருக்கிறது மேலும் அது மிகவும் தெளிவாகிறது.

முந்தைய: அத்தியாயம் 81

அடுத்த: அத்தியாயம் 83

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக