கிரியையும் பிரவேசித்தலும் (6)

கிரியையும் பிரவேசமும் இயல்பாகவே நடைமுறைக்குரியவைகள்; அவை தேவனுடைய கிரியை மற்றும் மனுஷனின் பிரவேசத்தைக் குறிக்கின்றன. தேவனுடைய மெய்யான முகத்துக்குள்ளும் தேவனுடைய கிரியைக்குள்ளும் மனிதனால் முற்றிலுமாக ஊடுருவ முடியாதது அவனது பிரவேசத்திற்கு மிகவும் சிரமத்தைக் கொண்டு வந்துள்ளது. இன்றுவரை, கடைசி நாட்களில் தேவன் எத்தகைய கிரியையைச் செய்வார், அல்லது இன்பத்திலும் துன்பத்திலும் மனுஷனுடன் நிற்பதற்காக தேவன் ஏன் மாம்சத்தில் வருவதற்காக மிகுந்த அவமானத்தைத் தாங்கினார் என்பது பலருக்கு இன்னும் தெரியாது. தேவனுடைய கிரியையின் குறிக்கோள் முதல் கடைசி நாட்களுக்கான தேவனுடைய திட்டத்தின் நோக்கம் வரை, மனுஷன் இந்த விஷயங்களைப் பற்றி முற்றிலும் அறியாதவனாய் இருக்கிறான். ஜனங்கள் பல்வேறு காரணங்களுக்காக, தேவன் அவர்களிடம் கோரும் பிரவேசம் குறித்து எப்பொழுதும் அக்கறையற்றவர்களாகவும் நிச்சயமில்லாதவர்களாகவும்[1] இருக்கின்றனர், இது மாம்சத்தில் இருக்கிற தேவனுடைய கிரியைக்கு மிகுந்த சிரமத்தைக் கொண்டுவந்துள்ளது. ஜனங்கள் அனைவரும் தடைகளாக மாறிவிட்டார்கள் என்பது போலவும் இன்றுவரை, அவர்கள் இன்னும் தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது போலவும் தோன்றுகிறது. இந்தக் காரணத்திற்காக, உங்கள் அனைவரையும், தேவனைப் புறக்கணிப்பதை விட மரிப்பதை விரும்பி, ஒவ்வொரு அவமானத்தையும் சகித்துக் கொண்ட யோபுவைப் போல தேவனுடைய விசுவாசமான ஊழியர்களாக்குவதற்காகவும், மேலும், பேதுருவைப் போலவே, உங்கள் முழு ஜீவனையும் தேவனுக்கு அர்ப்பணித்து, கடைசி நாட்களில் தேவனால் ஆதாயப்படுத்திக்கொள்ளப்பட்டு நீங்கள் அவருக்கு நெருக்கமானவர்களாவதற்காகவும், தேவன் மனுஷனில் செய்யும் கிரியையைப் பற்றியும், தேவனுடைய அவசர நோக்கத்தைப் பற்றியும் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். தேவனுடைய பரலோகச் சித்தத்திற்காகத் தங்களுக்குரிய எல்லாவற்றையும் கொடுத்து, தங்கள் முழு ஜீவனையும் அர்ப்பணிக்கக்கூடிய அனைத்துச் சகோதர சகோதரிகளும் தேவனுடைய வீட்டில் பரிசுத்த ஊழியர்களாகி, தேவனால் அளிக்கப்பட்ட முடிவில்லாத வாக்குத்தத்தத்தை அனுபவிக்கின்றனர், இதனால், பிதாவாகிய தேவனுடைய இருதயம் சீக்கிரத்தில் சமாதானமான இளைப்பாறுதலை அனுபவிக்க முடியும். “பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவது” தேவனை நேசிக்கும் அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த வார்த்தைகள் மனுஷனின் பிரவேசத்திற்கான வழிகாட்டியாகவும், அவனது செயல்களுக்கு வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க வேண்டும். இதுவே மனுஷன் கொண்டிருக்க வேண்டிய தீர்மானமாகும். பூமியில் தேவனுடைய கிரியையை முழுமையாக முடிப்பதும், மாம்சத்தில் இருக்கிற தேவனுடைய கிரியைக்கு ஒத்துழைப்பதுமே மனுஷனின் கடமையாகும், ஒரு நாள் தேவனுடைய கிரியை முடியும் போது, அவர் பரலோகத்தில் இருக்கிற பிதாவினிடத்திற்கு சீக்கிரம் திரும்புவதால் மனுஷன் மகிழ்ச்சியுடன் அவருக்குப் பிரியாவிடை அளிப்பான். இது மனுஷன் நிறைவேற்ற வேண்டிய கடமை அல்லவா?

கிருபையின் காலத்தில், தேவன் மூன்றாம் வானத்திற்குத் திரும்பியபோது, மனிதகுலம் முழுவதையும் மீட்கும் தேவனுடைய கிரியை உண்மையில் அதன் இறுதிப் பகுதிக்கு நகர்ந்துவிட்டது. பூமியில் எஞ்சியிருந்தது, இயேசு தனது முதுகில் ஏந்திய சிலுவையும், இயேசுவைச் சுற்றிவைத்திருந்த மெல்லிய வஸ்திரமும், மற்றும் இயேசு அணிந்திருந்த முட்களாலாகிய கிரீடம் மற்றும் சிவப்பான அங்கியுமே ஆகும் (இவை யூதர்கள் அவரை பரியாசம் செய்யப் பயன்படுத்திய பொருட்களாகும்). அதாவது, இயேசுவின் சிலுவையில் அறையப்படுதல் என்னும் கிரியை பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திய பிறகு, விஷயங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன. அப்போதிருந்து, இயேசுவின் சீஷர்கள் எல்லா இடங்களிலும் திருச்சபைகளில் மேய்த்தல் மற்றும் தண்ணீர் பாய்ச்சுதலாகிய அவரது கிரியையை செய்யத் தொடங்கினர். அவர்களின் கிரியையின் உள்ளடக்கம் பின்வருமாறு: அவர்கள் எல்லா ஜனங்களையும் மனந்திரும்பவும், தங்கள் பாவங்களை அறிக்கையிடவும், ஞானஸ்நானம் பெறவும் வேண்டும் என்று கோரினார்கள்; மற்றும் அப்போஸ்தலர்கள் அனைவரும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் மையச் சம்பவத்தை, நேரடியான விவரத்தைப் பரப்ப முன்வந்தனர், எனவே அனைவரும் தங்கள் பாவங்களை அறிக்கையிட இயேசுவிடம் சாஷ்டாங்கமாக விழுந்துவிடுவதைத்தவிர வேறுவழியில்லை; மேலும், அப்போஸ்தலர்கள் இயேசு பேசிய வார்த்தைகளை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றனர். அந்த சமயத்திலிருந்து கிருபையின் காலத்தில் திருச்சபை கட்டப்படத் தொடங்கியது. அந்தக் காலத்தில் இயேசு செய்தது என்ன‌வென்றால், மனுஷனின் ஜீவன் மற்றும் பரலோகப் பிதாவின் சித்தத்தைப் பற்றிப் பேசியது மட்டும்தான், ஏனெனில், அது வேறுபட்ட காலமாக இருந்தது, அந்த வார்த்தைகள் மற்றும் நடைமுறைகளில் பல இன்றைய காலத்தினுடையதிலிருந்து பெரிதும் வேறுபட்டன. இருப்பினும், சாராம்சத்தில் அவை ஒன்றே: அவை இரண்டும் மாம்சத்தில் இருக்கிற தேவ ஆவியானவரின் கிரியையாகும், துல்லியமாகவும் சரியாகவும் அதுவே ஆகும். இந்த வகையான கிரியை மற்றும் வார்த்தை இன்றுவரை தொடர்ந்திருக்கிறது, எனவே இந்த வகையான விஷயங்கள் இன்றைய மத நிறுவனங்களிடையே பகிரப்படுகின்றன, அது முற்றிலும் மாறாமல் உள்ளது. இயேசுவின் கிரியை முடிவடைந்ததும், திருச்சபைகள் ஏற்கனவே இயேசு கிறிஸ்துவின் சரியான பாதையில் வந்துவிட்டன, இருந்தபோதிலும், தேவன் தமது கிரியையின் மற்றொரு கட்டத்திற்கான தமது திட்டத்தைத் துவங்கினார், இதுவே கடைசி நாட்களில் அவர் மாம்சத்தில் வருகிற விஷயமாக இருந்தது. மனுஷன் பார்ப்பது போல், தேவனின் சிலுவையில் அறையப்படுதலானது ஏற்கனவே தேவனுடைய மனுவுருவாதலின் கிரியையை முடித்து, மனித குலம் முழுவதையும் மீட்டு, பாதாளத்திற்கான திறவுகோலைக் கைப்பற்ற அனுமதித்தது. தேவனுடைய கிரியை முழுமையாக நிறைவேறிவிட்டது என்று அனைவரும் நினைக்கிறார்கள். உண்மையில், தேவனுடைய பார்வையில், அவருடைய கிரியையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டிருந்தது. மனிதகுலத்தை மீட்பதற்காகவே அவர் அனைத்தையும் செய்திருந்தார்; அவர் மனிதகுலத்தை ஜெயங்கொள்ளவில்லை, மனுஷனின் சாத்தானிய முகத்தை மாற்றுவதைப் பற்றி குறிப்பிட வேண்டியதே இல்லை. அதனால்தான் தேவன் கூறுகிறார், “மனுவுருவான என் மாம்சமானவர் மரண வேதனையைக் கடந்து சென்றாலும், அது என் மனுவுருவாதலின் முழு குறிக்கோள் அல்ல. இயேசு என் நேச குமாரன் மற்றும் எனக்காகச் சிலுவையில் அறையப்பட்டார், ஆனால் அவர் என் கிரியையை முழுமையாக முடிக்கவில்லை. அவர் அதில் ஒரு பகுதியை மட்டுமே செய்தார்.” இவ்வாறு தேவன் மனுவுருவாதலின் கிரியையைத் தொடர இரண்டாவது சுற்றுத் திட்டங்களைத் தொடங்கினார். தேவனுடைய இறுதி நோக்கம் சாத்தானின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட அனைத்து ஜனங்களையும் பரிபூரணப்படுத்துவதும் ஆதாயப்படுத்திக்கொள்வதுமே ஆகும், அதனால்தான் மாம்சத்தில் வருவதிலுள்ள ஆபத்தை தைரியமாக எதிர்கொள்ள தேவன் மீண்டும் தயாரானார். “மனுவுருவாதல்” என்பதன் அர்த்தமானது மகிமையைக் கொண்டுவரும் ஒருவரை அல்ல, (ஏனெனில் தேவனுடைய கிரியை இன்னும் முடிவடையவில்லை), மாறாக, தேவன் மிகவும் பிரியம் வைத்திருக்கிற, அவரது நேச குமாரன் மற்றும் கிறிஸ்துவின் அடையாளத்தில் தோன்றுகிற ஒருவரைக் குறிக்கிறது. அதனால்தான் இது “ஆபத்தை தைரியமாக எதிர்கொள்ளுதல்” என்று கூறப்படுகிறது. குறைந்த வல்லமையையுடையவர், மேலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்[2], மேலும் அவரது வல்லமை பரலோகத்தில் உள்ள பிதாவின் அதிகாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது; அவர் மாம்சமானவரின் ஊழியத்தை மட்டுமே நிறைவேற்றுகிறார், பிதாவாகிய தேவனுடைய கிரியை மற்றும் அவரது கட்டளையை மற்ற கிரியைகளில் ஈடுபடாமல் முடிக்கிறார், மேலும் அவர் கிரியையின் ஒரு பகுதியை மட்டுமே முடிக்கிறார். இதனால்தான் தேவன் பூமிக்கு வந்தவுடன் “கிறிஸ்து” என்று பெயரிடப்பட்டார்—அதுதான் நாமத்தின் உள்ளான அர்த்தமாகும். வரவிருப்பது சோதனைகளுடன் சேர்ந்துள்ளது என்று கூறப்படுவதற்குக் காரணம், ஒரே ஒரு பகுதி கிரியை மட்டுமே முடிக்கப்படுகிறது. மேலும், பிதாவாகிய தேவன் அவரைக் “கிறிஸ்து” மற்றும் “நேச குமாரன்” என்று மட்டுமே அழைப்பதும், ஆனால் அவருக்கு எல்லா மகிமையையும் கொடுக்காதற்குமான சரியான காரணம், மனுவுருவான மாம்சமானவர், பரலோகத்தில் உள்ள பிதாவைப் பிரதிநிதித்துவப்படுத்த அல்ல, மாறாக, நேச குமாரனின் ஊழியத்தை நிறைவேற்றும்படி ஒரு பாகக் கிரியையைச் செய்ய வருகிறார். நேச குமாரன் தமது தோள்களில் ஏற்றுக்கொண்ட முழு கட்டளையையும் முடிக்கும்போது, பிதா அவருக்கு, பிதாவின் அடையாளத்துடன் கூடிய முழு மகிமையையும் அளிப்பார். இது “பரலோகத்தின் குறியீடு” என்று ஒருவர் கூறலாம். மாம்சத்தில் வந்தவரும் பரலோகத்தில் இருக்கிற பிதாவும் இரண்டு வெவ்வேறு ராஜ்யங்களில் இருப்பதாலும், இருவரும் ஆவியில் மட்டுமே ஒருவருக்கொருவர் பார்ப்பதாலும், பிதா நேச குமாரனைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார், ஆனால் குமாரனோ தூரத்திலிருந்து பிதாவைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் மாம்சத்தின் திறன் கொண்ட செயல்பாடுகள் மிகக் குறைவானவை மற்றும் அவர் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்பதால், இந்த வருகை மிகப்பெரிய ஆபத்தால் நிறைந்துள்ளது என்று ஒருவர் கூறலாம். இது தேவன் மீண்டும் தமது நேச குமாரனை அவரது ஜீவனுக்கு ஆபத்து உள்ள இடமாகிய, புலியின் இரைப்பைக்குள் விட்டுவிடுவதற்கும், அவரை சாத்தான் அதிகம் கவனம் வைத்துள்ள இடத்தில் வைத்துவிடுவதற்கும் ஒப்பானதாகும். இந்த மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட, தேவன் தமது நேச குமாரனை அசுத்தத்தாலும் வேசித்தனத்தாலும் நிரப்பப்பட்ட இடத்திலுள்ள ஜனங்களிடம், அவர்கள் “அவரை வாலிப் பருவம் வரை வளர்க்கும்படியாக” ஒப்படைத்தார். அப்படிச் செய்யக் காரணம் என்னவென்றால், தேவனுடைய கிரியை பொருத்தமாகவும் இயற்கையாகவும் காணப்படுவதற்கான ஒரே வழி இதுதான், மேலும் பிதாவாகிய தேவனுடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கும் மனிதகுலத்தின் மத்தியில் அவருடைய கிரியையின் கடைசிப் பகுதியை நிறைவு செய்வதற்கும் ஒரே வழி இதுதான். பிதாவாகிய தேவனுடைய கிரியையின் ஒரு கட்டத்தை இயேசு நிறைவேற்றியதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மனுவுருவான மாம்சத்தால் விதிக்கப்பட்ட தடையின் காரணமாகவும், நிறைவேற்றப்பட வேண்டிய கிரியையில் உள்ள வேறுபாடுகளின் காரணமாகவும், மாம்சத்திற்கு இரண்டாவது முறை திரும்ப வருவது இயேசுவுக்கே தெரியாது. ஆகையால், கடைசி நாட்களில் தேவன் மீண்டும் மனுவுருவாவார், அதாவது மாம்சத்தில் அவருடைய கிரியையின் இரண்டாம் பாகத்தைச் செய்ய அவர் மீண்டும் மாம்சத்தில் வருவார் என்று எந்த வேதாகம வல்லுநரும் அல்லது தீர்க்கதரிசியும் தெளிவாகத் தீர்க்கதரிசனம் உரைக்கத் துணியவில்லை. ஆகையால், நீண்ட காலமாக, தேவன் ஏற்கனவே தம்மை மாம்சத்தில் மறைத்து வைத்திருப்பதை யாரும் உணரவில்லை. சிறிய ஆச்சரியம் என்னவென்றால், இயேசு உயிர்த்தெழுந்து பரத்திற்கு எழும்பிச் சென்ற பிறகுதான் அவர் இந்தக் கட்டளையை ஏற்றுக்கொண்டார், எனவே தேவனுடைய இரண்டாவது மனுவுருவாதல் பற்றி தெளிவான தீர்க்கதரிசனம் இல்லை, அது மனித சிந்தனைக்கு எட்டாததாகும். வேதாகமத்தில் உள்ள பல தீர்க்கதரிசன புத்தகங்களில், இதைத் தெளிவாகக் குறிப்பிடும் வார்த்தைகள் இல்லை. ஆனால் இயேசு கிரியை செய்ய வந்தபோது, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அதாவது அவர் பரிசுத்த ஆவியின் மூலமாக கருத்தரிக்கப்பட்டார் என்று ஒரு தெளிவான தீர்க்கதரிசனம் ஏற்கனவே இருந்தது. அப்படியிருந்தும், இது இன்னும் மரண அபாயத்தில் நடந்தது என்று தேவன் கூறினார், எனவே இன்றைய நாளின் காரியம் எவ்வளவு அதிகமாக இருக்கும்? கிருபையின் காலத்தில் ஏற்பட்டதை விட ஆயிரம் மடங்கு அதிக ஆபத்துகளின் அபாயத்தில் இந்த மனுவுருவாதல் இருப்பதாக தேவன் சொல்வதில் ஆச்சரியமில்லை. அநேக இடங்களில், தேவன் சீனிம் தேசத்தில் ஒரு ஜெயங்கொள்பவர்களின் கூட்டத்தை ஆதாயப்படுத்திக்கொள்வார் என்று தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார். உலகின் கிழக்குப் பகுதியில் தான் ஜெயங்கொள்பவர்களை ஆதாயப்படுத்த வேண்டியிருப்பதால், தேவன் தமது இரண்டாவது மனுவுருவில் கால் வைக்கும் இடம் சந்தேகமின்றி, சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டு கிடக்கும் அதே இடமாகிய சீனிம் தேசமாகத்தான் இருக்கும். அங்கு, சிவப்பான பெரிய வலுசர்ப்பமானது முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு வெட்கப்படும்படியாக, அதன் வம்சத்தினர்களை தேவன் ஆதாயப்படுத்திக்கொள்வார். தேவன் துன்பத்தால் அதிகப் பாரமடைந்த இந்த ஜனங்களை விழிப்படையச் செய்யப் போகிறார், அவர்கள் முழுமையாக விழிக்கும் வரை அவர்களை எழுப்பவும், அவர்களை மூடுபனிக்கு வெளியே நடக்கச் செய்து, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை நிராகரிக்க வைக்கவும் போகிறார். தங்கள் சொப்பனத்திலிருந்து அவர்கள் விழித்தெழுந்து, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சாராம்சத்தை அடையாளம் கண்டு, தங்கள் முழு இருதயத்தையும் தேவனுக்குக் கொடுக்கக் கூடியவர்களாகி, அந்தகார வல்லமைகளின் ஒடுக்குமுறையிலிருந்து எழுந்து, உலகின் கிழக்கில் எழுந்து நின்று, தேவனுடைய ஜெயத்திற்குச் சான்றாக மாறுவார்கள். இவ்வாறுதான் தேவன் மகிமை பெறுவார். இந்தக் காரணத்திற்காக மட்டும், இஸ்ரேவேலில் முடிவுக்கு வந்த கிரியையை, சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டு கிடக்கிற தேசத்திற்கு தேவன் கொண்டு வந்தார், மற்றும் இங்கிருந்து புறப்பட்டுச்சென்று சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், கிருபையின் காலத்துக் கிரியையைத் தொடர மீண்டும் ஒருமுறை மாம்சத்தில் வந்திருக்கிறார். மனுஷனின் கண்கள் காண வெளியரங்கமாய், தேவன் மாம்சத்தில் புதிய கிரியையைத் தொடங்குகிறார். ஆனால் தேவனுடைய பார்வையில், சில ஆயிரம் வருடங்களின் இடைப்பட்ட காலத்திற்குப் பிறகு, இடத்திலும், அவருடைய கிரியையின் திட்டத்திலும் மட்டும் மாற்றத்துடன் அவர் கிருபையின் காலத்து கிரியையைத் தொடர்கிறார். இன்றைய நாட்களின் கிரியையில் மாம்ச சரீரம் எடுத்திருக்கிற சாயலானது இயேசுவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் தோன்றினாலும், அவை ஒரே சாராம்சம் மற்றும் வேரிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை ஒரே மூல ஆதாரத்திலிருந்து வருகின்றன. ஒருவேளை அவைகளுக்கு வெளிப்புறமாகப் பல வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவைகளுடைய கிரியையின் உள்ளான சத்தியங்கள் முற்றிலும் ஒரே மாதிரியானவையாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, காலங்கள் கூட இரவையும் பகலையும் போல மாறுபடுபவையாக இருக்கின்றன. எனவே தேவனுடைய கிரியை மட்டும் எப்படி மாறாத முறைமையைப் பின்பற்ற முடியும்? அல்லது அவரது கிரியையின் வெவ்வேறு கட்டங்கள் எவ்வாறு ஒன்று மற்றொன்றின் வழியில் செல்ல முடியும்?

இயேசு ஒரு யூதரின் தோற்றத்தை எடுத்துக் கொண்டு, யூதர்களின் உடையை ஒத்திருந்து, மேலும் யூதர்களின் உணவைப் புசித்து வளர்ந்தார். இது அவருடைய இயல்பான மனிதத்தன்மையாகும். ஆனால் இன்று மனுவுருவெடுத்த மாம்சமானவர் ஆசியாவின் குடிமகனின் வடிவத்தை எடுத்து சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் வளர்கிறார். இவை எந்த வகையிலும் தேவனுடைய மனுவுருவாதலின் இலக்குடன் முரண்படவில்லை. மாறாக, தேவனுடைய மனுவுருவாதலின் உண்மையான முக்கியத்துவத்தை முழுமையான நிறைவுக்குக் கொண்டுவருவதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் நிறைவு செய்கிறார்கள். மனுவுருவெடுத்த மாம்சமானவர் “மனுஷகுமாரன்” அல்லது “கிறிஸ்து” என்று குறிப்பிடப்படுவதால், இன்றைய கிறிஸ்துவின் வெளிப்புறத்தை இயேசு கிறிஸ்துவைப் போல அதே வார்த்தைகளில் பேச முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மாம்சமானவர் “மனுஷகுமாரன்” என்று அழைக்கப்படுகிறார் மற்றும் ஒரு மாம்ச சரீரத்தின் சாயலில் இருக்கிறார். தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் குறிப்பிடத்தக்க ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இயேசு பரிசுத்த ஆவியால் கருத்தரிக்கப்பட்டதற்கான காரணம், அவர் பாவிகளை மீட்கவிருந்தார் என்பதுதான். அவர் பாவம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறுதியில்தான், அவர் பாவமுள்ள மாம்சத்தின் ரூபமாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, பாவிகளின் பாவங்களை ஏற்றுக்கொண்டபோது, தேவன் மனிதகுலத்தைச் சிட்சித்த சிலுவையாகிய, சாபமான சிலுவையிலிருந்து அவர்களைக் மீட்டுக்கொண்டார். (மனிதகுலத்தை சபிப்பதற்கும் சிட்சிப்பதற்கும் சிலுவை தேவனுடைய கருவியாகும்; சாபங்கள் மற்றும் சிட்சைகள் குறிப்பிடப்படும்போதெல்லாம், அது பாவிகளைக் குறிக்கும் முக்கிய குறிப்பு ஆகும்.) சிலுவையில் அறையப்படுவதன் மூலமாக எல்லா பாவிகளும் மனந்திரும்பவும், அவர்களைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடச் செய்யவும் வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது. அதாவது, மனிதகுலம் முழுவதையும் மீட்பதற்காக, தேவன் பரிசுத்த ஆவியால் கருத்தரிக்கப்பட்ட மாம்ச சரீரத்தில் மனுவுருவானார் மற்றும் மனிதகுலத்தின் எல்லா பாவங்களையும் தாமே எடுத்துக்கொண்டார். இதை அன்றாட மொழியில் விவரிக்க வேண்டுமானால், அவர் அனைத்து பாவிகளுக்கும் ஈடாக ஒரு மாம்சத்தினாலாகிய பரிசுத்த சரீரத்தை ஒப்புக்கொடுத்தார், இது சாத்தான் மிதித்து வைத்திருந்த அப்பாவி மனிதகுலம் முழுவதையும் எடுத்து அவர்களை தேவனிடம் திருப்பிக் கொடுக்கும்படியாக சாத்தானிடம் “கெஞ்சிக் கேட்பதற்காக” இயேசு சாத்தானின் முன் “பாவநிவாரணபலியாக” வைக்கப்பட்டதற்கு சமமாகும். அதனால்தான் மீட்பின் இந்தக் கட்ட கிரியையை நிறைவேற்றுவதற்குப் பரிசுத்த ஆவியின் மூலம் கருத்தரிக்கப்படுதல் அவசியமாக இருந்தது. இது ஒரு அவசியமான நிபந்தனையாக, பிதாவாகிய தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தில் “அமைதி ஒப்பந்தமாக” இருக்கிறது. அதனால், இயேசு சாத்தானிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் இந்தக் கட்ட கிரியை நிறைவடைந்தது. எவ்வாறாயினும், தேவனுடைய மீட்பின் கிரியையானது, முன்னர் இல்லாத அளவிற்கு மகத்துவத்தை இன்று அடைந்துள்ளது, மேலும் சாத்தானுக்குக் கோரிக்கைகளை வைப்பதற்கு வேறு எந்த சாக்குப்போக்கும் இல்லை, எனவே தேவன் மனுவுருவெடுப்பதற்குப் பரிசுத்த ஆவியால் கருத்தரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. தேவன் இயல்பாகவே பரிசுத்தமானவர் மற்றும் குற்றமில்லாதவர் என்பதால், இந்த மனுவுருவாதலில் தேவன் இனி கிருபையின் காலத்து இயேசுவாக இருப்பதில்லை. இருப்பினும், அவர், பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்காகவும், தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும் இன்னும் மனுவுருவானவராக இருந்து வருகிறார். நிச்சயமாக இது விஷயங்களை விளக்குவதற்கான நியாயமற்ற வழி அல்லவா? தேவனுடைய மனுவுருவானவர் குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளுக்கு ஒத்துப்போக வேண்டுமா?

தேவனுடைய மனுவுருவாதலைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் அநேக ஜனங்கள் ஆதாரத்திற்காக வேதத்தைப் பார்க்கிறார்கள். தேவன் வேதாகமத்தில் “கிரியை” செய்வதை நீண்ட காலத்திற்கு முன்பே நிறுத்திவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும் அதிக நாட்டத்துடனும், நீண்ட காலமாகத் தாம் திட்டமிட்டு இருந்ததும், ஆனால் ஒருபோதும் அதைப் பற்றி மனுஷனிடம் சொல்லியிராததுமாகிய கிரியையைச் செய்ய, அதன் எல்லைக்கு அப்பால் “தாவிச் சென்றுவிட்டார்” என்பதைக் குழப்பமான மற்றும் தெளிவற்ற எண்ணங்களைக் கொண்ட மனுஷன் எப்படி அறிந்து கொள்வான்? ஜனங்கள் அறிவில் மிகவும் குறைவுள்ளவர்கள். தேவனுடைய மனநிலையைக் குறைந்த அளவே ருசித்த பிறகு, அவர்கள் ஒரு மேடையில் ஏறி, முற்றிலும் அலட்சியத்துடன் தேவனுடைய கிரியையைப் பரிசோதிக்கும்படி, உயர்தர “சக்கர நாற்காலியில்” உட்கார்ந்து, சூரியனுக்குக் கீழே எல்லாவற்றையும் பற்றி வெறுமையான மற்றும் தொடர்பில்லாத பேச்சு மூலம் தேவனுக்குப் பாடம் கற்பிக்கத் தொடங்கும் அளவிற்குச் செல்கின்றனர். ஒரு “முதியவர்,” படிக்கும் கண்ணாடிகளை அணிந்து, தாடியைத் தடவிக்கொண்டே, வாழ்நாள் முழுவதும் படித்த “பழைய பஞ்சாங்கத்தின்” (வேதாகமம்) மஞ்சள் பக்கங்களைத் திறக்கிறார். முணுமுணுத்த வார்த்தைகள் மற்றும் ஆவியினால் ஒளிர்வதைப் போன்ற கண்களால், அவர் இப்போது அனைவருக்கும் நன்கு தெரிந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திற்கும், இப்போது தானியேல் புத்தகத்திற்கும், இப்போது ஏசாயா புத்தகத்திற்கும் திருப்புகிறார். சிறிய சொற்களால் நிறைந்திருப்பதைப் பக்கம் பக்கமாகப் பார்த்து, அவர் அமைதியாகப் படிக்கிறார், அவருடைய மூளை இடைவிடாமல் குழப்பமடைகிறது. திடீரென்று தாடியைத் தடவிக்கொண்டிருக்கும் கை நின்று அதை இழுக்கத் தொடங்குகிறது. அவ்வப்போது தாடி முடிகள் பிடுங்கப்படுகிற சத்தத்தை ஒருவர் கேட்கிறார். இத்தகைய அசாதாரண நடத்தை ஒருவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. “ஏன் இத்தகைய பெலத்தைப் பயன்படுத்த வேண்டும்? அதைப் பற்றி ஏன் இவ்வளவு பயித்தியமாய் இருக்கிறார்?” மீண்டும் அந்த முதியவரைப் பார்த்தால், அவருடைய புருவங்கள் இப்போது சிலிர்த்துக்கொண்டு இருப்பதைக் காண்கிறோம். வயதானவரின் கண்கள் பூஞ்சை காட்சியளிப்பது போல் இருக்கும் பக்கங்களில் பதிந்திருக்கையில், தற்செயலாகவும், இன்னும் மிகச் சரியாகவும், புருவங்களின் நரை முடிகள், வாத்து இறகுகளைப் போல, இந்த முதியவரின் கண் இமைகளிலிருந்து துல்லியமாக இரண்டு சென்டிமீட்டர் கீழே இறங்கியுள்ளன. பல முறை அதே பக்கங்களுக்குத் திரும்பிச் சென்ற பிறகு, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், இருப்பினும் அவரது கண்களிலிருந்து வெளிப்படும் மங்கிய ஒளி பஞ்சாங்கத்தை விட்டுவிடாதபோதிலும் ஒருவருடன் சிறிய பேச்சைப்[3] பேசுவது போல் பேசத் தொடங்குகிறார். திடீரென்று அவர் தற்போதைய பக்கத்தை மூடிவிட்டு “வேறொரு உலகத்திற்குத்” திரும்புகிறார். அவரது அசைவுகள் மிகவும் அவசரமாகவும்[4] பயமுறுத்துவதாகவும் இருக்கின்றன, கிட்டத்தட்ட ஜனங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. தற்போது, தன் ஓட்டைக்குள் இருந்து வெளியே வந்த சுண்டெலி மற்றும் அவரது மௌனத்தின் போது, சுதந்திரமாக நகரும் அளவுக்கு நிம்மதியாக உணரத் தொடங்கியது, அவரது எதிர்பாராத அசைவுகளால் மிகவும் பீதியடைந்து, அது தன் ஓட்டைக்குள் வேகமாக ஓடி, மீண்டும் ஒருபோதும் தோன்றாத புகை மூட்டம் போல, அதற்குள் சென்று மறைந்துவிடுகிறது. இப்போது அந்த முதியவரின் இடது கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அவரது தாடியை மேலேயும் கீழேயும், மறுபடியும் மேலேயும் கீழேயும் தடவுவதை மீண்டும் தொடர்கிறது. புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு அவர் இருக்கையை விட்டு நகர்ந்தார். கதவின் விரிசல் மற்றும் திறந்த ஜன்னல் வழியாக காற்று உள்ளே வந்து, இரக்கமின்றி வீசியடித்துப் புத்தகத்தை மூடி, பின்னர் மீண்டும் திறக்கிறது. இக்காட்சியைப் பற்றி விவரிக்க முடியாத சோகம் இருக்கிறது, மேலும் புத்தகத்தின் பக்கங்கள் காற்றால் சலசலக்கப்படுவதைத் தவிர, அனைத்து சிருஷ்டிகளும் அமைதியாகிவிட்டதாகத் தெரிகிறது. அவர் கைகளை முதுகுக்குப் பின்னால், அறை முழுவதும் முன்னும் பின்னுமாக வேகமாக அசைத்து, இப்போது நிறுத்துகிறார், இப்போது தொடங்குகிறார், அவ்வப்போது தலையை அசைத்து, தன் வாயால் இந்த வார்த்தைகளை அவர் மீண்டும் மீண்டும் சொல்வதைப்போலத் தோன்றுகிறது, “ஓ! தேவனே! நீர் உண்மையில் அதைச் செய்வீரா?” அவ்வப்போது அவர் தன் தலையை அசைத்து, “ஓ! தேவனே! உம்முடைய கிரியையை யாரால் புரிந்துகொள்ள முடியும்? உமது அடிச்சுவடுகளைத் தேடுவது கடினம் அல்லவா? சரியான காரணமில்லாமல் பிரச்சனையை உண்டாக்கும் விஷயங்களை நீர் செய்ய மாட்டீர் என்று நான் விசுவாசிக்கிறேன்.” தற்போது, அந்த முதியவர், மெதுவான மற்றும் திட்டமிட்ட கணக்கீடு செய்வது போல், தனது புருவங்களை இறுக்கமாகக் குறுக்கிக்கொண்டு, கண்களை இறுக மூடிக்கொண்டு, சங்கடமான தோற்றத்தையும், மிகவும் வேதனையான வெளிப்பாட்டையும் காட்டுகிறார். பாவம் இந்த முதியவர்! அவரது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த பின்னர் “துரதிர்ஷ்டவசமாக” இந்த விஷயத்தை இந்த நாளில், மிகவும் தாமதமாகத் தெரிந்துகொண்டார். அதற்காக என்ன செய்ய முடியும்? நானும் நஷ்டமடைந்தவனாகவும் எதையும் செய்ய பலன் இல்லாதவனாகவும் இருக்கிறேன். அவரது பழைய பஞ்சாங்கம் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு யார் காரணம்? வெண்மையான பனி போல, அவரது தாடி மற்றும் புருவங்கள், அவரது முகத்தின் பல்வேறு பகுதிகளை ஓயாமல் மூடிமறைத்ததற்கு யார் காரணம்? இது அவரது தாடியில் உள்ள முடிகள் அவரது வயதின் மூப்பைப் பிரதிபலிப்பது போல் உள்ளது. ஆயினும், ஒரு பழைய பஞ்சாங்கத்தில் தேவன் இருப்பதைத் தேடும் அளவுக்கு மனுஷன் முட்டாளாக முடியும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு பழைய பஞ்சாங்கம் எத்தனை தாள்களைக் கொண்டிருக்க முடியும்? அது தேவனுடைய கிரியைகள் அனைத்தையும் துல்லியமாக பதிவு செய்ய முடியுமா? யார் அதற்கு உத்தரவாதம் அளிக்கத் துணிகிறார்கள்? ஆயினும், மனுஷன் உண்மையில் தேவனுடைய தோற்றத்தைத் தேடவும், வார்த்தைகளைப் பிரிப்பது மற்றும் முடிகளைப் பிய்த்துக்கொள்வது[5] தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற நினைத்து, இதன் மூலம் ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறான். இந்த வழியில் ஜீவனுக்குள் பிரவேசிக்க முயற்சிப்பது சொல்வதைப்போலவே, அவ்வளவு எளிதானதா? இது மிகவும் அபத்தமான மூடத்தனத்தின் தவறான பகுத்தறிதல் அல்லவா? இது உனக்குச் சிரிப்பாகக் காணப்படவில்லையா?

அடிக்குறிப்புகள்:

1. “நிச்சயமில்லாதவர்களாகவும்” என்பது தேவனுடைய கிரியையில் ஜனங்களுக்குத் தெளிவான நுண்ணறிவு இல்லை என்பதைக் குறிக்கிறது.

2. “குறைந்த வல்லமையையுடையவர், மேலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்பது மாம்சத்தின் சிரமங்கள் அதிகமாக இருப்பதையும், செய்யப்படும் கிரியை மிகவும் குறைவாக இருப்பதையும் குறிக்கிறது.

3. “சிறிய பேச்சு” என்பது தேவனுடைய கிரியையை ஆராய்ச்சி செய்யும் ஜனங்களின் அசிங்கமான முகத்திற்கான ஒரு உருவகமாகும்.

4. “அவசரமாகவும்” என்பது, வேதத்தைக் குறிப்பிடும் “முதியவரின்” ஆர்வமுள்ள, வேகமான அசைவுகளைக் குறிக்கிறது.

5. “பிரிப்பது மற்றும் முடிகளைப் பிய்த்துக்கொள்வது” என்பது, வார்த்தைகளின் நிமித்தமாக முடிகளைப் பிய்த்துக்கொண்டாலும், சத்தியத்தைத் தேடாமலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாமலும் இருக்கிறவர்களாகிய, தவறான உபதேசத்தில் நிபுணர்களாயிருக்கிறவர்களைப் பரியாசம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

முந்தைய: கிரியையும் பிரவேசித்தலும் (5)

அடுத்த: கிரியையும் பிரவேசித்தலும் (7)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக