அத்தியாயம் 103

இடிமுழக்கம் போன்றதொரு சத்தம் உண்டாகி முழு பிரபஞ்சத்தையும் உலுக்குகிறது. ஜனங்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாதபடிக்கு இது காதுகளைச் செவிடாக்குமளவிற்கு உரத்த சத்தத்தில் ஒலிக்கிறது. சிலர் கொல்லப்படுகிறார்கள், சிலர் அழிக்கப்படுகிறார்கள், மேலும் சிலர் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். இது உண்மையிலேயே ஓர் அதிசயமான காட்சியாக இருக்கிறது, இது போன்றதை யாரும் இதுவரை பார்த்ததில்லை. கவனமாகக் கேளுங்கள்: இடிமுழக்கங்கள் அழுகையின் சத்தத்துடன் வருகின்றன, இந்தச் சத்தமானது பாதாளத்திலிருந்து வருகிறது; நரகத்திலிருந்து வருகிறது. இது என்னால் நியாயந்தீர்க்கப்பட்ட கலகக் குமாரர்களின் கசப்பான சத்தமாகும். நான் சொல்வதைக் கேட்காதவர்களும், எனது வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவர்களும் கடுமையாக நியாயந்தீர்க்கப்பட்டு, எனது கோபாக்கினையின் சாபத்தைப் பெற்றிருக்கிறார்கள். நியாயத்தீர்ப்பும் கோபாக்கினையும்தான் எனது குரலாக இருக்கிறது; நான் யாரையும் மென்மையாக நடத்துவதில்லை, யாருக்கும் இரக்கம் காட்டுவதில்லை, ஏனென்றால் நான் நீதியுள்ள தேவன், நான் கோபாக்கினையைக் கொண்டிருக்கிறேன்; நான் சுட்டெரித்தலையும், சுத்திகரிப்பையும் மற்றும் அழிவையும் கொண்டிருக்கிறேன். என்னில் எதுவும் மறைக்கப்பட்டிருக்கவில்லை அல்லது எதுவும் உணர்ச்சியைச் சார்ந்ததாகவும் இல்லை, மாறாக, எல்லாமே வெளிப்படையாக, நீதியுள்ளவையாக மற்றும் பாரபட்சமற்றவையாக இருக்கின்றன. ஏனென்றால், எனது முதற்பேறான குமாரர்கள் ஏற்கெனவே என்னுடன் சிங்காசனத்தில் அமர்ந்து, எல்லா தேசங்களையும் எல்லா ஜனங்களையும் ஆளுகிறார்கள், அநியாயமும் அநீதியுமாக இருக்கும் அந்த விஷயங்களும் ஜனங்களும் இப்போது நியாயந்தீர்க்கப்படப்போகிறார்கள். நான் அவர்களை ஒவ்வொருவராக விசாரிப்பேன், யாரையும் விடமாட்டேன், அவர்களை முழுமையாக வெளிப்படுத்துவேன். எனது நியாயத்தீர்ப்பானது முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு முழுமையாக வெளியரங்கமாக்கப்பட்டுள்ளது, நான் எதையும் மறைத்து வைக்கவில்லை; எனது சித்தத்திற்கு இணங்காத அனைத்தையும் நான் தூக்கி எறிவேன், அது பாதாளத்தில் நித்தியத்திற்கும் அழிந்து போகட்டும். அங்கே நான் அதனை என்றென்றும் எரிய அனுமதிப்பேன். இதுவே எனது நீதியும், எனது நேர்மையுமாகும். இதை யாரும் மாற்ற முடியாது, அனைவரும் எனது கட்டளைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

வார்த்தைகள் வெறும் வார்த்தைகள்தான் என்றும் உண்மைகள் வெறும் உண்மைகள்தான் என்றும் நினைத்துப் பெரும்பாலானவர்கள் எனது வார்த்தைகளைப் புறக்கணிக்கிறார்கள். அவர்கள் குருடர்கள்! நானே உண்மையுள்ள தேவன் என்று அவர்களுக்குத் தெரியாதா? எனது வார்த்தைகளும் உண்மைகளும் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன. இதுதான் உண்மை இல்லையா? ஜனங்கள் பொதுவாக எனது வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில்லை, மேலும் தெளிவு பெற்றவர்களால் மட்டுமே உண்மையிலேயே எனது வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் உண்மை. ஜனங்கள் எனது வார்த்தைகளைப் பார்த்தவுடனேயே, அவர்கள் மிகவும் பயந்து, தங்களை மறைத்துக்கொள்ள எல்லா இடங்களுக்கும் சிதறி ஓடுகிறார்கள். எனது நியாயத்தீர்ப்பு வரும்போது இது இன்னும் அதிகமாகிறது. நான் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, உலகை அழிக்கும்போது, முதற்பேறான குமாரர்களைப் பரிபூரணமாக்கும்போது—இவை அனைத்தும் எனது வாயிலிருந்து வரும் ஒற்றை வார்த்தையால் நிறைவேற்றப்படுகின்றன. ஏனென்றால், எனது வார்த்தையே அதிகாரமாக இருக்கிறது; இதுவே நியாயத்தீர்ப்பு ஆகும். நானேதான் நியாயத்தீர்ப்பும் மகத்துவமும் என்று கூட சொல்லலாம்; இது மாற்ற முடியாத உண்மையாகும். இது எனது நிர்வாக ஆணைகளின் ஓர் அம்சமாக இருக்கிறது; இது ஜனங்களை நான் நியாயந்தீர்ப்பதற்கான ஒரு வழியாகும். எனது பார்வையில், அனைத்தும்—எல்லா ஜனங்களும், எல்லா விவகாரங்களும், எல்லா விஷயங்களும்—எனது கைகளிலும் எனது நியாயத்தீர்ப்பிற்குக் கீழும் இருக்கின்றன. யாரும் அல்லது எதுவும் மிருகத்தனமாக அல்லது வேண்டுமென்றே நடந்து கொள்ளத் துணிவதில்லை, மேலும் அனைத்தும் நான் சொல்லும் வார்த்தைகளின்படிதான் நிறைவேற வேண்டும். மனுஷனின் கருத்துக்களிலிருந்து, எல்லோரும் எனது வார்த்தைகளை விசுவாசிக்கிறார்கள். எனது ஆவியானவர் குரல் கொடுக்கும்போது, எல்லோரும் சந்தேகிக்கிறார்கள். எனது சர்வவல்லமையைப் பற்றி ஜனங்களுக்குச் சிறிதளவேனும் அறிவு இல்லை, மேலும் அவர்கள் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளையும் வைக்கிறார்கள். நான் இப்போது உனக்குச் சொல்கிறேன், யாரெல்லாம் எனது வார்த்தைகளைக் குறித்து சந்தேகப்படுகின்றனரோ, யாரெல்லாம் எனது வார்த்தைகளை அவமதிக்கின்றனரோ, அவர்கள்தான் அழிக்கப்படவேண்டியவர்கள்; அவர்கள்தான் அழிவின் நிரந்தர குமாரர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து முதற்பேறான குமாரர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவுதான் என்பதைக் காணலாம், ஏனென்றால் நான் இப்படித்தான் கிரியை செய்கிறேன். நான் முன்பு கூறியது போல், ஒரு விரலைக்கூட அசைக்காமல் நான் எல்லாவற்றையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறேன்; நான் எனது வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன். அப்படியானால், இதில்தான் எனது சர்வவல்லமை உள்ளது. எனது வார்த்தைகளில், நான் சொல்வதன் மூலக்காரணத்தையும் நோக்கத்தையும் யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஜனங்களால் இதை அடைய முடியாது, எனது வழிநடத்துதலைப் பின்பற்றும்போது மட்டுமே அவர்களால் செயல்பட முடிகிறது, எனது நீதியின்படி எனது சித்தத்திற்கு இணங்கிதான் எல்லாவற்றையும் செய்ய முடிகிறது, இதன்மூலம் எனது குடும்பமானது நீதியையும் சமாதானத்தையும் பெற்று என்றென்றும் ஜீவித்து, நித்தியமாக உறுதியுடனும் திடமாகவும் இருக்கும்.

எனது நியாயத்தீர்ப்பு அனைவருக்கும் வருகிறது, எனது நிர்வாக ஆணைகள் அனைவரையும் தொடுகிறது, எனது வார்த்தைகளும் எனது ஆள்தத்துவமும் அனைவருக்கும் வெளிப்படுத்தப்படுகின்றன. எனது ஆவியானவரின் மகத்தான கிரியைக்கான நேரம் இது (இந்த நேரத்தில், ஆசீர்வதிக்கப்பட இருப்பவர்களும், துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் வேறுபடுத்தப்படுகிறார்கள்). எனது வார்த்தைகள் வெளிவந்தவுடன், ஆசீர்வதிக்கப்பட இருப்பவர்களையும், துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க இருப்பவர்களையும் நான் வேறுபடுத்தியிருப்பேன். இவையனைத்தும் தெளிவாக இருக்கின்றன, மேலும் இதையெல்லாம் என்னால் ஒரே பார்வையில் பார்க்க முடிகிறது. (எனது மனுஷத்தன்மையைப் பொறுத்து நான் இதைச் சொல்கிறேன்; ஆகவே, இந்த வார்த்தைகள் எனது முன்னறிவிப்புக்கும் நான் தேர்ந்தெடுப்பதற்கும் முரணாக இருப்பதில்லை.) நான் மலைகள், ஆறுகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மத்தியிலும் சுற்றித் திரிகிறேன், பிரபஞ்சத்தின் இடைவெளிகளில் ஒவ்வொரு இடத்தையும் உற்று நோக்கிச் சுத்தப்படுத்துகிறேன், இதனால் அந்த அசுத்தமான இடங்களும் அந்த ஒழுங்கற்ற தேசங்களும் என அனைத்தும் இல்லாமல்போய், எனது வார்த்தைகளின் விளைவாக ஒன்றுமில்லாமல் எரிக்கப்படும். என்னைப் பொறுத்தவரை எல்லாம் எளிதானதுதான். உலகின் அழிவுக்கு நான் முன்குறித்த நேரமானது இதுதான் என்றிருந்தால், ஒரு வார்த்தையின் உச்சரிப்பில் உலகை என்னால் விழுங்க முடியும். எனினும், இப்போது அதற்கான நேரம் இல்லை. எனது திட்டமானது தொந்தரவு இல்லாமலும், எனது நிர்வாகமானது தடைபடாமலும் இருக்க நான் இந்தக் கிரியையைச் செய்வதற்கு முன்பு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இதை நியாயமாக எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியும்: நான் எனது ஞானத்தைக் கொண்டிருக்கிறேன், மேலும் நான் என்னுடைய சொந்த ஏற்பாடுகளையும் கொண்டிருக்கிறேன். ஜனங்கள் ஒரு விரலைக்கூட அசைக்கக் கூடாது; எனது கையால் கொலையுண்டு போகாமல் கவனமாக இருங்கள். இது ஏற்கெனவே எனது நிர்வாக ஆணைகளுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. இதிலிருந்து எனது நிர்வாக ஆணைகளின் கடுமையையும், அவற்றின் பின்னால் உள்ள கொள்கைகளையும் என இதன் இரண்டு பக்கங்களையும் உங்களால் பார்க்க முடிகிறது: ஒருபுறம், எனது சித்தத்திற்கு இணங்காத மற்றும் எனது நிர்வாக ஆணைகளை மீறும் அனைவரையும் நான் கொல்கிறேன்; மறுபுறம், எனது நிர்வாக ஆணைகளை மீறும் அனைவரையும் எனது கடுங்கோபத்தால் சபிக்கிறேன். இந்த இரண்டு அம்சங்களும் இன்றியமையாதவையாகும், மேலும் இவையே எனது நிர்வாக ஆணைகளுக்குப் பின்னால் இருக்கும் செயல்பாட்டுக் கொள்கைகளாகவும் இருக்கின்றன. ஒருவன் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், இந்த இரண்டு கொள்கைகளின்படி எல்லோரும் உணர்ச்சியற்ற நிலையில் கையாளப்படுகிறார்கள். எனது நீதியையும், எனது மகத்துவத்தையும், எனது கோபாக்கினையையும் காட்ட இதுவே போதுமானது, இது எல்லா பூமிக்குரிய விஷயங்களையும், எல்லா உலக விஷயங்களையும், எனது சித்தத்திற்கு இணங்காத எல்லாவற்றையும் எரித்துப்போடும். எனது வார்த்தைகளில் இரகசியங்கள் மறைந்திருக்கின்றன, எனது வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களும் இருக்கின்றன. இவ்வாறு, மனுஷ கருத்துக்களின்படி, மற்றும் மனுஷ மனதில், எனது வார்த்தைகள் என்றென்றும் புரிந்துகொள்ள முடியாதவையாக இருக்கின்றன, எனது இருதயமும் என்றென்றும் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அதாவது, நான் மனுஷரை அவர்களின் கருத்துக்களிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் வெளியேற்ற வேண்டும். இது எனது நிர்வாகத் திட்டத்தின் மிக முக்கியமான விஷயமாகும். எனது முதற்பேறான குமாரர்களை ஆதாயப்படுத்துவதற்கும் நான் செய்ய விரும்பும் காரியங்களைச் செய்வதற்கும் நான் இதைச் செய்தாக வேண்டும்.

உலகின் பேரழிவுகள் நாளுக்கு நாள் அதிகமாகின்றன, மேலும் எனது வீட்டில் பெருங்கேடு விளைவிக்கும் பேரழிவுகள் இன்னும் சக்திவாய்ந்ததாகின்றன. ஜனங்களுக்கு மறைந்துகொள்ளவும், தங்களை மறைத்துக்கொள்ளவும் உண்மையிலேயே எங்கும் இடமில்லை. மாற்றம் இப்போது நடப்பதால், ஜனங்களுக்குத் தங்கள் அடுத்த அடியை எங்கு எடுத்துவைப்பது என்று தெரியவில்லை. எனது நியாயத்தீர்ப்பிற்குப் பின்னரே இது தெளிவாகத் தெரியவரும். நினைவில் கொள்ளுங்கள்! இவைதான் எனது கிரியையின் படிகளாக இருக்கின்றன, மேலும் நான் கிரியை செய்யும் வழியும் இதுதான். நான் எனது முதற்பேறான குமாரர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக ஆறுதல்படுத்துவேன், ஒரே நேரத்தில் ஒரு படி மேலே உயர்த்துவேன்; ஊழியம் செய்பவர்களைப் பொறுத்தவரை, நான் அனைவரையும் ஒவ்வொருவராக புறம்பாக்குவேன், அவர்களைக் கைவிடுவேன். இது எனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஊழியம் செய்பவர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்பட்ட பிறகு, எனது முதற்பேறான குமாரர்களும் வெளிப்படுத்தப்படுவார்கள். (என்னைப் பொறுத்தவரை, இது மிகவும் எளிதானது. ஊழியம் செய்பவர்கள் எனது வார்த்தைகளைக் கேட்டபின், அவர்கள் அனைவரும் படிப்படியாக எனது வார்த்தைகளின் நியாயத்தீர்ப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் முன்பாக விலகிப்போவார்கள், பின்னர் எனது முதற்பேறான குமாரர்கள் மட்டுமே இருப்பார்கள். இது தானாக நிகழக்கூடிய ஒன்றல்ல, மேலும் மனுஷனின் எண்ணம் மாற்றக்கூடிய ஒன்றும் அல்ல; மாறாக, இது எனது ஆவியானவர் நேரில் கிரியை செய்வது ஆகும்.) இது ஒரு தொலைதூர நிகழ்வு இல்லை, மேலும் இதை என்னுடைய இந்தக் கட்ட கிரியை மற்றும் வார்த்தைகள் ஆகியவற்றில் இருந்து உங்களால் ஓரளவிற்கு உணரமுடியும், நான் ஏன் இவ்வளவு அதிகமாகக் கூறுகிறேன் என்பதையும், கணிக்க முடியாத தன்மையைக்கொண்ட எனது பேச்சுக்களை ஜனங்களால் புரிந்துகொள்ள முடியாததையும் நீங்கள் காண வேண்டும். நான் எனது முதற்பேறான குமாரர்களிடம் ஆறுதல், இரக்கம் மற்றும் அன்பு ஆகிய தொனிகளில் பேசுகிறேன் (ஏனென்றால் நான் எப்போதும் இந்த ஜனங்களை தெளிவுபடுத்துகிறேன், நான் அவர்களை முன்குறித்திருப்பதால் அவர்களைவிட்டுச் சென்றிட மாட்டேன்), அதே நேரத்தில் எனது முதற்பேறான குமாரர்களைத் தவிர மற்றவர்களை நான் கடுமையான நியாயத்தீர்ப்போடு, அச்சுறுத்தல்களோடு, மற்றும் மிரட்டலுடன் நடத்துகிறேன், இது அவர்களின் உணர்வுகள் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் அளவிற்கு அவர்களைத் தொடர்ந்து பயத்துடன் உணரவைக்கிறது. நிலைமை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வளர்ந்தவுடன், அவர்கள் இந்த நிலையிலிருந்து தப்பித்து விடுவார்கள் (நான் உலகை அழிக்கும்போது, இந்த ஜனங்கள் பாதாளத்தில் இருப்பார்கள்), ஆனாலும் அவர்கள் ஒருபோதும் எனது கரத்தின் நியாயத்தீர்ப்பில் இருந்து தப்பிக்க மாட்டார்கள் அல்லது இந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபட மாட்டார்கள். அப்படியானால், இதுவே அவர்களின் நியாயத்தீர்ப்பு ஆகும்; இதுவே அவர்களின் ஆக்கினைத்தீர்ப்புமாகும். புறதேசத்தினர் வரும் நாளில், இந்த ஜனங்களை ஒவ்வொருவராக நான் வெளிப்படுத்துவேன். இவையே எனது கிரியையின் படிகளாகும். நான் முன்பு பேசிய அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நீங்கள் இப்போது புரிந்துகொள்கிறீர்களா? எனது கருத்துப்படி, நிறைவேறாத ஒன்று கூட நிறைவேற்றப்பட்ட ஒன்றுதான், ஆனால் நிறைவேற்றப்பட்ட ஒன்று என்பது அடையப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏனென்றால், எனது ஞானமும், கிரியை செய்யும் முறையும் என்னிடம் இருக்கின்றன, இவை மனுஷருக்கு வெறுமனே விவரிக்க முடியாதவையாக இருக்கின்றன. இந்தப் படி மூலம் நான் முடிவுகளை அடைந்தவுடன் (என்னை எதிர்க்கும் அனைத்துப் பொல்லாதவர்களையும் நான் வெளிப்படுத்தியவுடன்), நான் அடுத்த படியைத் தொடங்குவேன், ஏனென்றால் எனது சித்தமானது தடையற்றதாக இருக்கிறது, மேலும் எனது நிர்வாகத் திட்டத்தைத் தடுக்க யாரும் துணிவதில்லை, ஏதேனும் தடைகளை ஏற்படுத்திடவும் துணிவதில்லை—அவர்கள் அனைவரும் வழிவிட வேண்டும்! சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் பிள்ளைகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்! நான் சீயோனிலிருந்து வந்து, எனது முதற்பேறான குமாரர்களை ஆதாயப்படுத்துவதற்கும், உங்கள் தந்தையை அவமானப்படுத்துவதற்கும் (இந்த வார்த்தைகள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினரை நோக்கமாகக் கொண்டவை), எனது முதற்பேறான குமாரர்களுக்கு ஆதரவளிக்கவும், எனது முதற்பேறான குமாரர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட தவறுகளைச் சரிசெய்வதற்கும் உலகில் மாம்சமாகியிருக்கிறேன். எனவே, மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக இருக்காதீர்கள்; எனது முதற்பேறான குமாரர்களை உங்களைக் கையாள அனுமதிப்பேன். கடந்த காலத்தில், எனது குமாரர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள், ஒடுக்கப்பட்டார்கள், பிதா தமது குமாரர்களுக்காக வல்லமையை பயன்படுத்துவதால், இனியும் கொடுமைப்படுத்தப்படாமல் ஒடுக்கப்படாமல் எனது குமாரர்கள் எனது அன்பான அரவணைப்பிற்குத் திரும்புவார்கள். நான் அநீதியானவர் அல்ல; இது எனது நீதியைத்தான் காட்டுகிறது, மேலும் இது உண்மையிலேயே “நான் நேசிப்பவர்களை நேசிப்பதும், நான் வெறுப்பவர்களை வெறுப்பதும்” ஆகும். நான் அநீதியானவர் என்று நீங்கள் சொன்னால், நீங்கள் விரைந்து வெளியேற வேண்டும். எனது வீட்டில் வெட்கமின்றி, எதுவும் செய்யாதவராக இருக்க வேண்டாம். நான் இனியும் உன்னைப் பார்க்காதபடிக்கு நீ துரிதமாக உனது வீட்டிற்குச் செல்ல வேண்டும். பாதாளம்தான் நீங்கள் சென்றடையும் இடமாக இருக்கிறது, அங்குதான் நீங்கள் இளைப்பாறுவீர்கள். நீங்கள் எனது வீட்டில் இருந்தால், உங்களுக்கு இடமே இருக்காது, ஏனென்றால் நீங்கள் சுமை என்னும் மிருகங்களாக இருக்கிறீர்கள்; நீங்கள்தான் நான் பயன்படுத்தும் கருவிகளாகவும் இருக்கிறீர்கள். உங்களால் எனக்கு இனியும் எந்தப் பயனும் இல்லாதபோது, உங்களை எரித்துப்போட நான் உங்களை நெருப்பில் எறிவேன். இதுவே எனது நிர்வாக ஆணையாகும்; நான் இதை இவ்வாறாகத்தான் செய்ய வேண்டும், இது மட்டுமே நான் கிரியை செய்யும் முறையைக் காட்டுகிறது, மேலும் எனது நீதியையும் எனது மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மிக முக்கியமாக, இவ்வாறாக மட்டுமே எனது முதற்பேறான குமாரர்கள் என்னுடன் வல்லமையாக ஆட்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

முந்தைய: அத்தியாயம் 102

அடுத்த: அத்தியாயம் 104

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக