அத்தியாயம் 59

நீ சந்திக்கும் சூழல்களில் என் சித்தத்தைத் தேடு, நீ நிச்சயமாக என் ஒப்புதலைப் பெறுவாய். நீ என்னைத் தேடுவதற்கும், எனக்காகப் பயபக்தியைக் கொண்டிருப்பதற்கும் தயாராக இருக்கும் வரை உன்னிடத்தில் இல்லாத அனைத்தையும் நான் உனக்கு வழங்குவேன். திருச்சபை இப்போது முறையான பயிற்சிக்குள் நுழைகிறது, மேலும் அனைத்தும் சரியான பாதையில் உள்ளது. வரவிருக்கும் காரியங்களின் முன்னறிவிப்பாக இருந்ததைப் போல காரியங்கள் இனி இல்லை; நீங்கள் இனி குழப்பமாகவோ அல்லது பகுத்தறிவு இல்லாமலோ இருக்கக் கூடாது. நீங்கள் எல்லாவற்றிலும் யதார்த்தத்தில் நுழைய வேண்டும் என்று நான் ஏன் கோருகிறேன்? நீ இதை உண்மையாக அனுபவித்திருக்கிறாயா? நான் உங்களைத் திருப்திப்படுத்துவது போலவே நான் உங்களிடம் கோருவதில் உங்களால் என்னை உண்மையாகத் திருப்திப்படுத்த முடியுமா? வஞ்சிக்கிறவர்களாய் இருக்க வேண்டாம்! நான் உங்களை மீண்டும் மீண்டும் சகித்துக் கொண்டே இருக்கிறேன், ஆனாலும் நீங்கள் மீண்டும் மீண்டும் நல்லவைக்கும் கெட்டவைக்கும் இடையேயான வித்தியாசத்தைச் சொல்லவும், உங்கள் நன்றியறிதலைக் காட்டவும் தவறி விட்டீர்கள்!

நான் கொண்டிருக்கிற என் நீதி, என் மாட்சிமை, என் நியாயத்தீர்ப்பு மற்றும் என் அன்பு ஆகிய இவை அனைத்தையும் மற்றும் நான் இருப்பதாக இருக்கும் இவ்விஷயங்களையும்—நீ அவற்றை உண்மையிலேயே ருசித்திருக்கிறாயா? நீ உண்மையில் மிகவும் சிந்தனையற்றவன், தொடர்ந்து என் சித்தத்தை உணர்ந்தறியாமலிருக்கிறாய். நான் தயார் செய்யும் விருந்துகளை நீங்களே ருசிக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறேன், ஆனாலும் நீங்கள் மீண்டும் மீண்டும் அவற்றை கவிழ்த்துப் போடுகிறீர்கள், மேலும் ஒரு மோசமான சூழலிலிருந்து ஒரு நல்ல சூழலைச் சொல்ல முடிவதில்லை. இந்தச் சூழல்களில் எவை உங்களால் உருவாக்கப்பட்டவை? எவை என் கரங்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை? உங்களை நீங்களே தற்காத்துக் கொள்வதை நிறுத்துங்கள்! நான் எல்லாவற்றையும் மிகத் தெளிவாகப் பார்க்கிறேன், உண்மை என்னவென்றால் நீ என்னைத் தேடுவதே இல்லை. நான் இன்னும் என்ன சொல்ல முடியும்?

என் சித்தத்தை உணர்ந்தறியும் அனைவரையும் நான் எப்போதும் தேற்றுவேன், அவர்கள் துன்பப்படவோ அல்லது தீங்கடையவோ நான் அனுமதிக்க மாட்டேன். எனது சித்தத்திற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இப்போது முக்கியமான விஷயமாகும். இதைச் செய்பவர்கள் நிச்சயமாக என் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் மற்றும் என் பாதுகாப்பின் கீழ் வருவார்கள். யார் எனக்காக உண்மையாகவும் முழுமையாகவும் தங்களையே பயன்படுத்தவும் அவர்களுடைய எல்லாவற்றையும் எனக்காகக் கொடுக்க முடியும்? நீங்கள் அனைவரும் அரை மனதுடையவர்கள்; வீடு, வெளி உலகம், உணவு மற்றும் உடைகளைப் பற்றியே உங்கள் எண்ணங்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன. நீ இங்கே என் முன் இருக்கிறாய் மற்றும் எனக்காகக் காரியங்களைச் செய்கிறாய் என்ற போதிலும், வீட்டிலிருக்கும் உன் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரைப் பற்றியே உள்ளான நினைவுகளில் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறாய். இவை அனைத்தும் உன்னுடைய உடைமையா? நீ ஏன் அவற்றை என் கரங்களில் ஒப்படைக்கவில்லை? உனக்கு என் மீது போதுமான விசுவாசம் இல்லையா? அல்லது நான் உனக்காகப் பொருத்தமற்ற ஏற்பாடுகளைச் செய்து விடுவேன் என்று நீ பயப்படுகிறதினாலேயா? உன் மாம்சத்தின் குடும்பத்தைப் பற்றி ஏன் எப்போதும் கவலைப்படுகிறாய்? உன் அன்புக்குரியவர்களுக்காக நீ எப்போதும் ஏங்குகிறாய்! உன் இருதயத்தில் எனக்கு ஒரு நிலையான இடம் இருக்கிறதா? நான் உனக்குள் ஆதிக்கம் செலுத்துவதற்கும் மற்றும் உன்னை முழுவதும் ஆக்கிரமிப்பதற்கும் என்னை அனுமதிப்பதைப் பற்றி நீ இன்னும் பேசுகிறாய், இவை அனைத்தும் ஏமாற்றும் பொய்களாகும்! உங்களில் எத்தனை பேர் முழுமனதுடன் திருச்சபைக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறீர்கள்? உங்களில் யார் உங்களைப் பற்றி நினைக்காமல், இன்றைய ராஜ்யத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? இதைப் பற்றி மிகவும் கவனமாகச் சிந்தியுங்கள்.

உங்களை அடிக்கவும் உங்களை முன்னோக்கி வழிநடத்தவும் என் கைகளை மட்டுமே பயன்படுத்தக் கூடிய அளவிற்கு நீங்கள் என்னைத் தள்ளியிருக்கிறீர்கள்; நான் இனி உங்களிடம் இனிமையாகப் பேசி இணங்க வைப்பதில்லை. ஏனென்றால் நான் ஞானமுள்ள தேவன், நீங்கள் எனக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்பதற்கேற்ப, நான் வெவ்வேறு நபர்களை வெவ்வேறு வழிகளில் நடத்துகிறேன். நான் சர்வவல்லமையுள்ள தேவன்—எனது முன்னோக்கிய அடிகளைத் தடைசெய்ய யார் துணிவார்கள்? இனிமேல், நேர்மையற்று என்னை நடத்தத் துணியும் அனைவரும் நிச்சயமாக எனது ஆட்சிமுறை ஆணைகளின் கரத்தின்கீழ் வருவார்கள், அதனால் அவர்கள் என் சர்வவல்லமையை அறிந்து கொள்வார்கள். நான் விரும்புவது அதிக எண்ணிக்கையிலான ஜனங்களை அல்ல, ஆனால் சிறப்பானவர்களையே விரும்புகிறேன். உண்மையில்லாத, நேர்மையற்ற, மற்றும் வக்கிரமான நடத்தை மற்றும் வஞ்சகத்தில் ஈடுபடுபவர்களை நான் கைவிட்டுத் தண்டிப்பேன். நான் இரக்கமுள்ளவர், அல்லது நான் அன்பானவர், பரிவானவர் என்று இனி நினைக்க வேண்டாம்; இத்தகைய எண்ணங்கள் சுய விருப்பங்களே ஆகும். நான் உன்னை எவ்வளவு அதிகமாக மனநிறைவு அடையச் செய்கிறேனோ, அவ்வளவு எதிர்மறையாகவும் செயலற்றும் நீ ஆகிறாய், மேலும் உன்னையே நீ விட்டுவிட மனதில்லாமல் ஆகிறாய் என்று எனக்குத் தெரியும். மக்கள் இந்த அளவிற்குக் கடினமாக இருக்கும் போது நான் தொடர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களை இழுத்துச் செல்லத் தான் முடியும். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்! இனிமேல் நான் நியாயத்தீர்ப்பு செய்யும் தேவன்; நான் இனி ஜனங்கள் கற்பனை செய்வதைப் போல இரக்கமுள்ள, பரிவான, அன்பான தேவன் இல்லை!

முந்தைய: அத்தியாயம் 58

அடுத்த: அத்தியாயம் 60

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக