அத்தியாயம் 92

ஒவ்வொரு நபரும் என் சர்வவல்லமையையும் என் ஞானத்தையும், என் வார்த்தைகளிலும் என் செயல்களிலும் காண முடியும். நான் எங்கு சென்றாலும் அங்கு என் கிரியை இருக்கிறது; முக்கியமானது என்னவென்றால், எனது அடிச்சுவடுகள் சீனாவில் மட்டுமல்ல; அவை உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளன. எவ்வாறாயினும், இந்த நாமத்தை முதலாவது பெற்றுக் கொண்டவை, முன்னர் பேசப்பட்ட ஏழு நாடுகள் மட்டுமே; ஏனெனில், இது எனது கிரியையின் வரிசை முறையாகும். சீக்கிரத்தில் நீங்கள் இதைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டு மிகுந்த தெளிவைப் பெறுவீர்கள். நான் இப்போது உங்களிடம் சொன்னால், அதன் விளைவாகப் பெரும்பான்மையானவர்கள் வீழ்ந்து போவீர்கள் என்று நான் அஞ்சுகிறேன், ஏனென்றால், நான் உங்களிடம் பேசுவேன் மற்றும் உங்களுடைய வளர்ச்சிக்கு ஏற்ப என் சத்தத்தை உரைக்கப் பண்ணுவேன் என்றும், நான் செய்வதெல்லாம் ஒருவரும் புரிந்து கொள்ள முடியாத என் முடிவில்லாத ஞானத்தைக் கொண்டுள்ளது என்றும் முன்பாகவேச் சொல்லியிருந்தேன்; அதைத் தொகுப்புகளாகச் சொல்வது தான் உங்களிடம் சொல்லக்கூடிய ஒரே வழியாகும். இதை அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் என்றென்றும் என் பார்வையில் குழந்தைகள்; நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும், நீங்கள் என்னால் வழிநடத்தப்பட வேண்டும்; மற்றும் என்னால் அறிவுறுத்தப்பட வேண்டும். ஜனங்களே, என் வழிகாட்டுதலின்கீழ் மட்டுமே நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ முடியும்; அது இல்லாமல் ஒருவராலும் தொடர்ந்து வாழ முடியாது. முழு அண்டசராசரமும் என் கைகளில் உள்ளது; ஆனாலும், நான் பரபரப்பாய்ச் சுற்றிக் கொண்டிருப்பதை நீ காண்பதில்லை. மாறாக, நான் நிதானமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். என் சர்வவல்லமை ஜனங்களுக்குத் தெரியாது, எனக்காக ஏங்குவார்கள்—உங்களைக் குறித்தே நீங்கள் ஒன்றும் அறியாதவர்களாய் இருக்கிறீர்கள்! உங்களுடைய பயனற்ற அற்ப விஷயங்களை நீங்கள் எனக்கு முன்பாக வீறாப்பாகக் காண்பித்து, உங்களையே மெச்சிக் கொள்கிறீர்கள்! இதை நான் நீண்ட காலத்திற்கு முன்பே பார்த்திருக்கிறேன். இகழத்தக்கத் தீயவர்களே, நீங்கள் எனக்கு முன்பாகத் தந்திரங்களில் ஈடுபடுகிறீர்கள்! இப்பொழுதே என் வீட்டை விட்டு வெளியேறுங்கள்! உங்களுக்குள் இருப்பதைப் போன்ற மோசமான விஷயங்களை நான் விரும்பவில்லை. உங்களைப் போன்ற இகழத்தக்கத் தீயவர்கள் இருப்பதை விட, என் ராஜ்யத்தில் ஒருவரும் இல்லாதிருப்பதையே விரும்புவேன்! நீ வழக்கம்போல இன்னும் உண்டு, உடை அணிந்து கொண்டிருந்தாலும், நான் ஏற்கனவே உன்னில் கிரியை செய்வதை நிறுத்தி விட்டேன் என்பது உனக்குத் தெரியுமா? ஆனால் நீ சாத்தானுக்காக வாழ்கிறாய் என்பதையும், நீ சாத்தானுக்காக ஊழியம் செய்து கொண்டிருக்கிறாய் என்பதையும் நீ அறிந்திருக்கிறாயா? ஆனாலும் இன்னும் என் முன் நிற்க உனக்குத் தைரியம் இருக்கிறது! நீ உண்மையிலேயே வெட்கமில்லாதவன்!

கடந்த காலத்தில், “பெரும் பேரழிவுகள் விரைவில் வரும்; பெரும் பேரழிவுகள் ஏற்கனவே என் கரங்களில் இருந்து விழுந்துவிட்டன” என்று நான் அடிக்கடி சொல்லியிருந்தேன். “பெரும் பேரழிவுகள்” என்பது எதைக் குறிக்கின்றன, மேலும் “விழுந்து விட்டன” என்பதை எவ்வாறு விளக்க முடியும்? இந்தப் பெரும் பேரழிவுகள் மனிதனுடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தைக் காயப்படுத்தும் தப்ப முடியாத பேரழிவுகளைக் குறிக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; மேலும் இந்தப் பெரும் பேரழிவுகள் நான் பேசுகிற “பூகம்பங்கள், பஞ்சங்கள் மற்றும் வாதைகளைக்” குறித்தது என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் என் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இந்த “விழுந்து விட்டன” என்பதற்கு, பெரும் பேரழிவுகள் தொடங்கியுள்ளன என்று அர்த்தம் என நீங்கள் நினைக்கிறீர்கள், இது நகைப்பிற்குரியது! நீங்கள் அதை இப்படித் தான் உண்மையில் புரிந்து கொள்கிறீர்கள், உங்கள் விளக்கங்களைக் கேட்டு நான் உண்மையிலேயே கோபமடைகிறேன். ஜனங்கள் வெளிப்படுத்த முடியாத மர்மமானது (இது மிகவும் ரகசியமான மர்மம்) யுகங்கள் முழுவதும் மிகவும் மோசமாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகும்; மேலும் இது ஒருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவித்திராத (இது கடைசி நாட்களில் மட்டுமே சகிக்கும்படியாய் கொண்டு வரப்பட்டதால், மேலும் மனிதர்கள் அதை அடையாளம் காணமாட்டார்கள் எனினும் அவர்களால் அதைக் கடைசி யுகத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்பதாலும்) ஒரு மர்மமாகும்; ஏனென்றால், மனிதனால் அதை ஊடுருவ முடியாதபடி (அதில் உள்ள மிகச் சிறிய பகுதியைக் கூட காணமுடியாதபடி) நான் அதை மிகவும் இறுக்கமாக முத்திரையிட்டேன். இப்போது எனது கிரியை இந்தக் கட்டம் வரை கொண்டுவரப்பட்டிருப்பதால், எனது கிரியையின் தேவைகளுக்கு ஏற்ப நான் உங்களை பிரகாசிப்பிக்கிறேன்; இல்லையெனில், ஜனங்களுக்குப் புரிந்து கொள்ள எந்த வழியும் இருக்காது. நான் இப்போது ஐக்கியத்தைக் கொடுக்க ஆரம்பிக்கிறேன்; எல்லோரும் கவனிக்க வேண்டும், ஏனென்றால், முதற்பிறந்த என் குமாரர்கள் உட்பட, எச்சரிக்கையாக இல்லாத எவரும் என் நியாயத்தீர்ப்பை அனுபவிப்பார்கள், மிகத் தீவிரமான சந்தர்ப்பங்களில் அவர்கள் என் கரத்தால் கீழே தள்ளப்படுவார்கள் (அதாவது அவர்களின் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் எடுத்துக்கொள்ளப்படும்). எனது ராஜ்யத்தின் ஆட்சிமுறை ஆணைகளின் ஒவ்வொன்றோடும் தொடர்புடையதாய் பெரும் பேரழிவுகள் பேசப்படுகின்றன, மேலும் எனது ஆட்சிமுறை ஆணைகள் ஒவ்வொன்றும் பெரும் பேரழிவுகளின் ஒரு பகுதியாகும். (எனது ஆட்சிமுறை ஆணைகள் முழுமையாக உங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் அதைக் குறித்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம், அல்லது இதைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம்; உங்களுக்குச் சிறிய நன்மைகளைக் கொண்டு வரக் கூடிய சில காரியங்களைக் குறித்து நீங்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்ள வேண்டும். இதை நினைவில் வையுங்கள்! நான் ஒரு ஞானமுள்ள தேவன்.) எனவே மற்றப் பகுதி என்ன? பெரும் பேரழிவுகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன: எனது ஆட்சிமுறை ஆணைகள் மற்றும் எனது கோபம். பெரும் பேரழிவுகளானது நான் என் கோபத்தில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து, எனது ஆட்சிமுறை ஆணைகளை அமல்படுத்தத் தொடங்கும் நேரத்திலேயே உண்டாகும். இங்கே, நான் என் முதற்பேறான குமாரர்களிடம் சொல்கிறேன்: இதன் விளைவாக நீங்கள் சீரழிந்து போகக் கூடாது. எல்லா காரியங்களும் எல்லா விஷயங்களும் என்னால் முன்குறிக்கப்பட்டவை என்பதை நீ மறந்து விட்டாயா? என் மகனே, பயப்படாதே! நான் உன்னை நிச்சயமாகப் பாதுகாப்பேன்; நீ என்றென்றும் என்னுடன் சிறந்த ஆசீர்வாதங்களை அனுபவிப்பாய், மேலும் என்றென்றும் என்னுடன் நித்தியமாக இருப்பாய். நீ எனக்குப் பிரியமானவன் என்பதால், நான் உன்னைக் கைவிடமாட்டேன். எந்த முட்டாள்தனமான காரியங்களையும் நான் செய்யவில்லை, ஆனாலும் இதுபோன்ற சிரமத்துடன் செய்து முடித்த ஒரு காரியத்தை நான் அழித்து விட்டால், கவனக்குறைவாக எனக்கு நானே சூழ்நிலையை மோசமாக்கிக் கொண்டதாக ஆகுமல்லவா? நீ உன் இருதயத்தில் என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். நீ இதை நினைவில் வைத்திருந்தாயா? நான் வேறு என்ன சொல்ல வேண்டும் என்று இருக்கிறாய்? நான் பெரும் பேரழிவுகளைக் குறித்து அதிகம் பேசுவேன். பெரும் பேரழிவுகள் வரும்போது அது மிகவும் பயமுறுத்தும் நேரமாக இருக்கும், மேலும் அவை மனிதனின் அவலட்சணத்தை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தும். எல்லாவிதமான பிசாசின் முகத்தோற்றங்களும் என் முகத்தின் வெளிச்சத்தில் வெளியாக்கப்படும், மேலும் அவை மறைந்து கொள்ள எவ்விடமும் இருக்காது, எங்கும் அவை மறைவிடத்தைக் கண்டுகொள்ள முடியாது. அவை முற்றிலும் வெளிப்படுத்தப்படும். பெரும் பேரழிவுகளின் விளைவு என்னவென்றால், நான் தெரிந்து கொள்ளாத அல்லது முன்குறிக்காத எல்லோரையும் என் முன் மண்டியிட்டு, அழுகையோடும் பற்கடிப்புக்களோடும் மன்னிப்புக்காகக் கெஞ்சப் பண்ண வேண்டும். இது சாத்தானுக்கான என்னுடைய நியாயத்தீர்ப்பாகும், என்னுடைய கோபமான நியாயத்தீர்ப்பாகும். நான் தற்போது இந்த கிரியையில் ஈடுபட்டுள்ளேன்; மேலும், கூடுமானால், தகுதிகள் இருப்பதாக நடிக்கிற, மேலும் பொய்யாய்த் தங்கள் வழியை அடைய விரும்புகிற சிலர் உண்டு; அவர்கள் எவ்வளவு அதிகமாய் அப்படிச் செய்கிறார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் மேல் சாத்தான் கிரியை செய்வான், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அவர்களின் உண்மையான வடிவங்கள் வெளிப்படும்.

நான் எனது கிரியையைச் செய்ய அவசரப்படவில்லை, மேலும் ஒவ்வொரு நபரையும் நானே திட்டமிடுகிறேன் (இது அவர்கள் பெரிய சிவப்பு டிராகனின் சந்ததியினர் என்பதை நிரூபிக்கும் அவர்களைக் குறித்த ஓர் இகழ்ச்சியாகும், நான் அவர்களிடத்தில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை, எனவே “திட்டமிடுகிறேன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மிகையானதல்ல), ஒவ்வொரு செயலையும் நானே செய்கிறேன். என்னால் அனைத்தும் வெற்றியாகின்றன, அது பாதுகாப்பான, உறுதியான வெற்றியாகும்; நான் செய்யும் அனைத்தும் படிப்படியாக ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. என் சித்தம் மற்றும் என் பாரத்தைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது உங்களுக்குச் சொல்கிறேன். இந்தக் கட்டத்தில் இருந்து, என் வார்த்தைகள் எல்லாத் தேசங்களுக்கும், எல்லா மக்களுக்கும் வெளிப்படத் தொடங்குகின்றன. என் முதற்பேறான குமாரர்கள் ஏற்கனவே முழுமையாக்கப்பட்டதால் (என் குமாரர்கள் மற்றும் என் ஜனங்கள் மீது என் வார்த்தைகள் கவனம் செலுத்துகின்றன), நான் கிரியை செய்யும் முறை மீண்டும் மாறத் தொடங்கியுள்ளது. நீங்கள் இதைத் தெளிவாகப் பார்க்கிறீர்களா? கடந்த சில நாட்களாக, என் வார்த்தைகளின் தொனியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நான் என் முதற்பேறான குமாரர்களை ஒவ்வொரு அடியிலும் தேற்றுகிறேன், ஆனால் இனிமேல் (என் முதற்பேறான குமாரர்கள் ஏற்கனவே முழுமையாக்கப்பட்டதால்), நான் ஒரு கத்தியை என் கையில் எடுக்கிறேன் (“கத்தி” என்றால் “மிகக் கடுமையான வார்த்தைகள்” என்று அர்த்தம்). நான் ஒரு கணம் சாதகமாயிராதவராகக் கருதும் யாராயிருந்தாலும் (இது முன்குறிக்கப்படாத அல்லது தெரிந்துகொள்ளப்படாதவர்களைக் குறிக்கிறது, ஆகவே எந்த முரண்பாடும் இல்லை), அவர்கள் எனக்கு ஊழியஞ்செய்கிறார்களா அல்லது அவர்கள் வேறானவர்களா என்பதைக் குறித்த கவலை எனக்கில்லை; நான் உடனடியாக அவர்களை ஒழித்து விடுவேன். நான் சர்வவல்லமையுள்ள தேவன், என்னால் எல்லா ஜனங்களையும் எனக்கு ஊழியஞ்செய்ய வைக்க முடியும். அத்தகையவர்களிடமிருந்து நான் பிரிந்து செல்ல சிறிதும் தயங்கவில்லை. அவர்கள் எனக்கு அவசியமில்லை என்று நான் சொன்னால், அவர்கள் எனக்கு அவசியமில்லை தான். இப்போது இந்த வேளை வந்துவிட்டதால், என்னைப் பிரியப்படுத்தாதவர்களை மட்டுமே நான் கண்டு, என் வார்த்தையைப் போலவே நானும் நல்ல தேவனாக இருப்பதால், அவர்களை உடனடியாக விசாரணையின்றித் தள்ளி விடுவேன். என் ஊழியத்தில் நான் முன்குறித்திருந்தவர்களைக் குறித்து, நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், நீ என்னை எதிர்க்கும் எதையும் செய்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், நீ என்னை அதிருப்திப்படுத்தினால், நான் உன்னை வெளியே உதைத்துத் தள்ளுவேன். எந்த எதிர்காலப் பிரச்சனைக்கும் நான் பயப்பட மாட்டேன். எனது ஆட்சிமுறை ஆணைகள் என்னிடம் உள்ளன, நான் என் வார்த்தையைப் போலவே நல்லவர், என் வார்த்தை நிறைவேறும். நான் சாத்தானை இருக்க அனுமதிப்பேனா? ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்! நீங்கள் பயப்படத் தேவையில்லை; நான் வெளியேறும்படி எப்பொழுது உன்னிடம் சொல்கிறேனோ, அப்பொழுது நீ வெளியேற வேண்டும். என்னிடம் சாக்குப்போக்குகள் சொல்லாதே; உன்னிடம் சொல்வதற்கு, என்னிடம் எந்த வார்த்தைகளும் இல்லை. நான் அத்தகைய பொறுமையைக் கடைபிடித்திருக்கிறேன், என் ஆட்சிமுறை ஆணைகளை அமல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது, உங்களுடைய கடைசி நாளும் வந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீங்கள் ஒழுக்கமற்று நடந்தீர்கள், எப்போதும் கர்வமாக, தன்னிச்சையாகக் காரியங்களைச் செய்தீர்கள், ஆனால் நான் எப்போதும் சகிப்புத்தன்மையுடன் இருந்தேன் (நான் பெருந்தன்மையுள்ளவராக, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உன் சீர்கேட்டை அனுமதித்தேன்). ஆனால் இப்போது என் தயையானது முடிவுக்கு வந்துவிட்டது, மேலும் நீங்கள் அக்கினி மற்றும் கந்தகக் கடலுக்குள் இருக்கவும், தூக்கி எறியப்படுவதற்கான நேரமும் வந்துவிட்டது. சீக்கிரமாய் வழியிலிருந்து விலகுங்கள். நான் எனது நியாயத்தீர்ப்பை முறையாக செயல்படுத்தத் தொடங்குகிறேன், என் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறேன்.

எல்லாத் தேசங்களிலும், உலகின் எல்லா இடங்களிலும், பூகம்பங்கள், பஞ்சங்கள், வாதைகள் மற்றும் அனைத்து வகையான பேரழிவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எல்லாத் தேசங்களிலும், எல்லா இடங்களிலும் நான் எனது மகத்தான கிரியையைச் செய்யும்போது, இந்தப் பேரழிவுகளானது, உலகம் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து வேறெந்த காலத்திலும் இல்லாத அளவுக்குத் தீவிரத்தோடு எழும்பும். எல்லா ஜனங்களுக்கும் நான் அளித்த நியாயத்தீர்ப்பின் ஆரம்பம் இதுதான், ஆனால் என் குமாரர்கள் எளிதில் இளைப்பாற முடியும்; உங்களுக்கு எந்தப் பேரழிவும் ஏற்படாது, நான் உங்களைப் பாதுகாப்பேன். (இதன் பொருளானது, பின்னர் நீங்கள் சரீரத்தில் வாழ்வீர்கள், ஆனால் மாம்சத்தில் அல்ல, எனவே, பேரழிவின் எந்த வேதனையையும் நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள்.) என்னுடன் இணைந்து, நீங்கள் பிரபஞ்சத்திலும் பூமியின் கடைமுனைகளிலும் என்றென்றும் என்னுடன் நலமான ஆசீர்வாதங்களை அனுபவித்து, எளிதாக ராஜாக்களாக ஆளுகைச் செய்வீர்கள், தேசங்களையும் எல்லா ஜனங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள். இவ்வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறும், அவை விரைவில் உங்கள் சொந்தக் கண்களுக்கு முன்பாக நடைபெறும். நான் ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரம் கூட தாமதிக்க மாட்டேன்; நான் நம்ப முடியாத அளவுக்கு விரைவாகக் காரியங்களைச் செய்கிறேன். வருத்தம் கொள்ளவோ கவலைப்படவோ வேண்டாம்; நான் உனக்களிக்கும் ஆசீர்வாதமானது, உன்னிடமிருந்து ஒருவரும் எடுக்க முடியாத ஒன்று, இது எனது ஆட்சிமுறை ஆணையாகும். என் செயல்களினிமித்தம் எல்லா ஜனங்களும் எனக்குக் கீழ்ப்படிவார்கள்; அவர்கள் இடைவிடாமல் ஆனந்த சத்தமிடுவார்கள், அதைக் காட்டிலும் அவர்கள் இடைவிடாமல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள்.

முந்தைய: அத்தியாயம் 91

அடுத்த: அத்தியாயம் 93

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக