முன்னுரை

தேவனுடைய வார்த்தைகளின் இந்தப் பகுதி ஜூன் 1992 க்கும் மார்ச் 23, 2010 க்கும் இடையில் கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து நான்கு பிரிவுகளையும் மொத்தமாக உள்ளடக்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அவர் சபைகளின் மத்தியில் பயணம் சென்றபோது நிகழ்த்திய பிரசங்கங்கள் மற்றும் ஐக்கியங்களின் பதிவுகளை அடைப்படையாகக் கொண்டவையாகும். இவை எந்த வகையிலும் மாற்றியமைக்கப்படவும் இல்லை அல்லது பின்னர் கிறிஸ்துவால் திருத்தப்படவுமில்லை. மீதியுள்ள பிரிவுகள் கிறிஸ்துவினால் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டவை (கிறிஸ்து எழுதும்போது, அவர் ஒரே தடவையிலேயே சிந்திப்பதை நிறுத்தாமல் அல்லது திருத்தாமல் எழுதுகிறார், மேலும் அவரது வார்த்தைகள் முழுவதும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாக இருக்கின்றன—இது எல்லாவிதமான சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது). இந்த இரு வகையான உரைகளையும் பிரிப்பதற்குப் பதிலாக, அவை வெளிப்படுத்தப்பட்ட மூல ஒழுங்குமுறையையே பயன்படுத்தி நாங்கள் அவற்றை ஒன்றாகத் தந்திருக்கிறோம்; இது நம்மை அவரது உரைகளின் முழுமையையும், தேவனுடைய கிரியையின் படிநிலைகளையும் பார்ப்பதோடு, ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எப்படிக் கிரியை செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கிறது. இது தேவனுடைய கிரியையின் படிநிலைகள் மற்றும் தேவனின் ஞானத்தைப் பற்றிய ஜனங்களின் அறிவுக்கு நன்மை தருவதாக உள்ளது.

“கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் I”—இன் முதல் எட்டு அத்தியாயங்கள் ஒட்டுமொத்தமாகப் “பாதை” என்று குறிக்கப்படுகிறது—இவை கிறிஸ்து மனுஷனுக்கு நிகராக நின்றபோது பேசிய வார்த்தைகளின் ஒரு சிறு பகுதியாகும். அவை வெளிப்படையாகத் தெளிவற்ற நிலையில் இருந்தாலும் தேவ அன்பாலும் மனுக்குலத்தின்பால் உள்ள அக்கறையாலும் ததும்பிவழிகின்றன. இதற்கு முன், தேவன் மூன்றாம் வானத்தின் கண்ணோட்டத்தில் இருந்து பேசினார். அது தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு பெரும் தூரத்தை உருவாக்கியது, மற்றும் ஜனங்கள் தேவனை அணுகவும், அதைவிடத் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரத்தை வழங்கும்படி கேட்கவும் அச்சப்பட வைத்தது, ஆகவே “பாதை” இல் தேவன் மனிதனுடன் சமமானவராகப் பேசினார் மேலும் வழியின் திசையைச் சுட்டிக்காட்டினார். இவ்விதம் மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த உறவை முன்பிருந்த நிலைக்கு மீண்டும் கொண்டுவந்தார்; தேவன் இன்னும் ஒரு பேசும் முறையைப் பயன்படுத்துகிறாரோ என்றும் அதற்கு மேலும் மக்கள் சந்தேகப்படவில்லை, மேலும் மரண உபத்திரவத்தின் பயங்காரத்தால் அதற்கு மேலும் பீடிக்கப்படவில்லை. தேவன் மூன்றாம் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கினார், ஜனங்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் இருந்து தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வந்தார்கள். அவர்கள் “ஊழியம் செய்பவர்கள்” என்ற மாயத் தோற்றத்தை அகற்றிப்போட்டார்கள். மேலும் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டிகளைப் போல அவர்கள் தேவனின் வார்த்தைகளிலான ஞானஸ்நானத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள். அதற்குப் பின்தான் தேவனால் அவர்களோடு நெருக்கமாகப் பேச முடிந்தது மேலும் அவர்களுக்கு ஜீவனை வழங்கும் அதிகமான கிரியையைச் செய்ய முடிந்தது. தேவன் தம்மைத்தாமே ஒரு நபராகத் தாழ்த்திக் கொண்டதன் நோக்கம் ஜனங்களை நெருங்கி வருவதும், அவர்களுக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் தூரத்தைக் குறைப்பதும், ஜனங்களின் அங்கீகாரத்தையும் நம்பிக்கையையும் பெற அவரை அனுமதிப்பதற்காகவும், ஜீவனைத் தேடி தேவனைப் பின்பற்றும் உறுதிப்பாட்டை மக்களுக்குள் தூண்டுவதற்குமே ஆகும். ஜனங்களின் இருதயங்களுக்கான கதவுகளை தேவன் திறக்கும் திறவுகோல்கள் என்று “பாதை” இன் எட்டு அத்தியாயங்களைத் தொகுத்துரைக்கலாம். மேலும் அவை ஒட்டுமொத்தமாக அவர் ஜனங்களுக்கு அளிக்கும் சர்க்கரையால் பூசப்பட்ட மாத்திரையாக அமைகின்றன. தேவன் இவ்வாறு செய்வதன் மூலமாகவே அவர் திரும்பத் திரும்பக் கொடுக்கும் போதனைகள் மற்றும் கடிந்துகொள்ளுதல்களின் மேல் மனிதனால் கவனம் செலுத்த முடிகிறது. இதற்குப் பின்னர்தான் கிரியையின் தற்போதைய கட்டத்தில் ஜீவனை அளிக்கும் மற்றும் சத்தியத்தை வெளிப்படுத்தும் கிரியையை தேவன் தொடர்ந்து பேசியபடி அதிகாரபூர்வமாக ஆரம்பித்தார் என்று கூறமுடியும்: “விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்” மற்றும் “தேவனுடைய கிரியையின் படிகள்”…. இத்தகைய ஒரு முறை தேவனின் ஞானத்தையும் அவரது தீவிரமான நோக்கங்களையும் காட்டவில்லையா? இதுவே கிறிஸ்து ஜீவனை அளிப்பதின் முதல் தொடக்கமாகும், ஆகவே சத்தியங்கள் பின்வரும் பகுதிகளைக் காட்டிலும் சற்று ஆழமற்றவையாக இருக்கின்றன. இதன் பின்னால் இருக்கும் கொள்கை மிக எளியது: தேவன் மனுக்குலத்தின் தேவைகளுக்கு ஏற்பக் கிரியை செய்கிறார். அவர் கண்மூடித்தனமாகக் கிரியைசெய்வதோ அல்லது பேசுவதோ இல்லை; மனுக்குலத்தின் தேவைகளை தேவன் மட்டுமே முற்றிலுமாகப் புரிந்துகொள்ளுகிறார், மற்றும் மனுஷனின் பேரில் வேறு யாருக்கும் பேரன்பும் புரிதலும் இல்லை.

“கிரியையும் பிரவேசித்தலும்” என்பதில் உரை ஒன்றில் இருந்து பத்து வரை, தேவனுடைய வார்த்தைகள் ஒரு புதிய கட்டத்துக்குள் நுழைகின்றன. இதன் விளைவாக, இந்த உரைகள் ஆரம்பத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, “கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் II” வந்துள்ளது. இந்தக் கட்டத்தில், தேவன் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு விரிவான கோரிக்கைகளை வைக்கிறார். இந்த கோரிக்கைகளில் ஜனங்களின் வாழ்க்கை முறை பற்றிய அறிவு, அவர்களின் திறனுக்கு தேவையானவைகள் போன்றவை அடங்கும். இந்த ஜனங்கள் தேவனைப் பின்பற்றுவதைத் தீர்மானித்திருப்பதால், இனிமேலும் தேவனுடைய அடையாளம் மற்றும் சாராம்சம் பற்றிய சந்தேகங்கள் எதுவும் இல்லாததால், தேவனும் அவர்களைத் தமது சொந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களாக முறைப்படி நடத்தத் தொடங்கி சிருஷ்டிப்பு முதல் இன்று வரை தேவனுடைய கிரியையின் உள்ளார்ந்த சத்தியத்தை ஐக்கியத்தில் கூறி, வேதாகமத்தின் பின்னால் இருக்கும் சத்தியத்தை வெளிப்படுத்தி, அவர்களுக்கு தேவனின் மனுவுருவெடுத்தலின் முக்கியத்துவத்தைப் போதித்து வருகிறார். தேவனின் சாராம்சம் மற்றும் அவரது கிரியையின் சாரம்சம் பற்றிய சிறந்த புரிதலை இந்தப் பகுதியில் இருக்கும் தேவனின் உரைகள் ஜனங்களுக்கு அளித்ததோடு கடந்துபோன காலங்களில் தீர்க்கதரிசிகளாலும் அப்போஸ்தலர்களாலும் அடையப் பெற்றவைகளைக் காட்டிலும் தேவனின் இரட்சிப்பினால் அவர்கள் அடைந்தவைகள் விஞ்சிவிட்டன என்பதைப் புரிந்துகொள்ள அனுமதித்தது. தேவனின் வார்த்தைகளின் ஒவ்வொரு வரியில் இருந்தும் அவருடைய ஞானத்தின் ஒவ்வொரு நுண்பகுதியையும், அதுமட்டுமல்லாமல் மனிதனிடம் அவருக்குள்ள அவருடைய நுணுக்கமான அன்பையும் அக்கறையையும் உன்னால் அறிந்துணர முடியும். அந்த வார்த்தைகளை வெளிப்படுத்தியதோடு, ஒவ்வொன்றாக தேவன் மனிதனின் முந்தைய கருத்துக்கள் மற்றும் பொய்கள் மற்றும் மக்கள் முன்னர் கற்பனை செய்து பார்த்திராத விஷயங்கள் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஜனங்கள் நடக்க வேண்டிய வழி ஆகியவற்றைப் பொதுப்படையாக வெளிப்படுத்தினார். இது, ஒருவேளை துல்லியமாக மனிதனால் அனுபவிக்கக் கூடிய குறுகிய “அன்பாக” இருக்கலாம்! எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் எதையும் வைத்துக் கொள்ளாமல், எதையும் பதிலாகத் திருப்பிக் கேட்காமல் மனிதனுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார், மேலும் அவர்கள் கேட்டவை எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார்.

இந்தப் பகுதியில் பல சிறப்பு அத்தியாயங்கள் வேதாகமத்தைப் பற்றிக் கூறுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக வேதாகமம் மனித வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மேலும் ஜனங்கள் அதை தேவனைப் போலவே நடத்துகின்றனர். கடைசிநாட்களில் அது தேவனுடைய இடத்தை எடுத்துக்கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது. இது தேவனுக்கு வெறுப்புண்டாக்குகிறது. இவ்வாறு, காலம் அனுமதிக்கும்போது, வேதாகமத்தின் உட்கதையையும் தோற்ற வரலாற்றையும் விளக்க கடமைப்பட்டுள்ளதாக தேவன் உணர்கிறார்; இதை அவர் செய்யாவிட்டால், ஜனங்களின் இருதயங்களில் வேதாகமம் தேவனின் இடத்தைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும், மேலும் ஜனங்கள் வேதாகமத்தின் வார்த்தைகளைப் பயன்படுத்தி தேவனுடைய காரியங்களை அளப்பதையும் கண்டனம் செய்வதையும் தொடர்வார்கள். சாராம்சத்தையும், அமைப்பையும், வேதாகமத்தின் தவறுகளையும் விளக்குவதன் மூலம், தேவன் எந்த விதத்திலும் வேதாகமத்தின் இருப்பை மறுக்கவில்லை, அல்லது அதைக் கண்டனமும் செய்யவில்லை. மாறாக, அவர் தகுந்த மற்றும் பொருத்தமான விளக்கத்தை அளித்துகொண்டிருந்தார். இது வேதாகமத்தின் உண்மையான பிம்பத்தை மீண்டும் கொண்டுவந்தது, ஜனங்கள் வேதாகமத்தின் மீது வைத்திருந்த தவறான புரிதலை நிவிர்த்தி செய்தது, அவர்கள் வேதாகமத்தை வணங்காமலும் மேலும் இழந்து போகாமலும் இருக்க அவர்களுக்கு வேதாகமத்தைப் பற்றிய சரியான விளக்கத்தை அளித்தது; அதாவது, அதன் உண்மையான பின்புலத்தையும் தோல்விகளையும் எதிர்கொள்ளப் பயந்து வேதாகமத்தைப் பற்றிய தங்கள் கண்மூடித்தனமான விசுவாசத்தை தேவன் மேல் கொண்ட விசுவாசமாகவும் தேவனை ஆராதிப்பதாகவும் தவறாக இனிமேலும் எண்ணாமல் இருக்க வகைசெய்தது. வேதாகமத்தைப் பற்றிய கலப்படமற்ற புரிதலை மக்கள் பெற்றுவிட்டால் அவர்களால் குற்ற உணர்வு இல்லாமலும் தைரியமாகவும் அதை ஒதுக்கிவைத்துவிட்டு தேவனுடைய புதிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியும். இந்தப் பல அத்தியாயங்களில் தேவனுடைய இலக்கு இதுதான். இங்கு ஜனங்களுக்கு தேவன் கூற விரும்பும் சத்தியம் என்னவென்றால் தேவனின் இன்றைய கிரியை மற்றும் வார்த்தைகளின் இடத்தை எந்தக் கொள்கையோ அல்லது உண்மைகளோ ஆக்கிரமிக்க முடியாது, மேலும் தேவனுக்குப் பதிலாக எதுவும் நிற்க முடியாது என்பதாகும். ஜனங்களால் வேதாகமப் பொறியில் இருந்து விடுபட முடியாவிட்டால், அவர்களால் ஒருபோதும் தேவனுக்கு முன்பாக வர முடியாது. அவர்கள் தேவனுக்கு முன்பாக வர வேண்டுமானால் முதலில் அவர்கள் அவரைப் பதிலீடு செய்யும் எதையும் தங்கள் இருதயத்தில் இருந்து நீக்க வேண்டும்; பின்னர் அவர்கள் தேவனுக்குத் திருப்தி அளிப்பவர்களாக இருப்பார்கள். இங்கு தேவன் வேதாகமத்தை மட்டுமே விளக்கினாலும், வேதாகமத்தைத் தவிர்த்து ஜனங்கள் உண்மையாக வணங்கும் தவறான விஷயங்கள் பல இருப்பதை மறந்துவிடக் கூடாது; அவர்கள் வணங்காத ஒரே விஷயங்கள் தேவனிடம் இருந்து உண்மையாக வருபவைகளே. தவறான வழியை எடுக்க வேண்டாம் மற்றும் தேவனை விசுவாசித்து அவராது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது மீண்டும் தீவிரங்களுக்குச் சென்று குழப்பத்துக்கு பலியாகிவிடக் கூடாது என்பதை மக்களுக்கு நினைவூட்டவே தேவன் வேதாகமத்தை ஓர் உதாரணமாக மட்டுமே பயன்படுத்துகிறார்.

தேவன் மனிதனுக்கு அளிக்கும் வார்த்தைகள் ஆழமற்றதில் இருந்து ஆழத்துக்குச் செல்கின்றன. அவருடைய உரைகளின் தலைப்புகள் மக்களின் புற நடத்தைகள் மற்றும் செய்கைகளில் இருந்து அவர்களின் சீர்கேடான மனநிலைகளுக்குத் தொடர்ந்து முன்னேறிச் செல்கின்றன. அங்கிருந்து தேவன் அவருடைய மொழியியல் ஈட்டியின் முனையை ஜனங்களின் ஆத்துமாக்களின் ஆழமான பகுதியான அவர்களுடைய சாராம்சம் நோக்கிக் குறிவைக்கிறார். “கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் III” வெளிப்படுத்தப்பட்ட காலகட்டத்தில், தேவனுடைய உரைகள் மனுஷனின் சாராம்சமும் அடையாளமும் ஓர் உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும் வலியுறுத்துகின்றன—ஜனங்கள் ஜீவனுக்குள் பிரவேசிப்பதைப் பற்றிய இந்த மிக ஆழமான சத்தியங்கள் மற்றும் முக்கியமான கேள்விகள். நிச்சயமாக, “கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் I,” இல் தேவன் மனிதனுக்கு அளிக்கும் சத்தியங்களை மறுபடியும் சிந்திக்கும்போது, “கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் III” இன் உள்ளடக்கம் ஒப்பீட்டளவில் நம்பமுடியாத அளவுக்கு ஆழமாக உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வார்த்தைகள் ஜனங்களின் எதிர்கால வழியையும் அவர்கள் எவ்விதம் பரிபூரணப்படுத்தப்படலாம் என்பதையும் பற்றி பேசுகின்றன; மனுக்குலத்தின் எதிர்காலச் சென்று சேருமிடம் மற்றும் தேவனும் மனிதனும் எவ்வாறு ஒன்றாக ஓய்வுக்குள் பிரவேசிப்பார்கள் என்பதையும் அவைகள் மேலும் கூறுகின்றன. (இதுநாள் வரை, ஜனங்களின் சாராம்சம், அவர்களின் ஊழியம், மற்றும் அவர்களின் சென்றடையும் இடம் தொடர்பாக எளிதில் புரியும்படி தேவன் ஜனங்களுக்கு வெளிப்படுத்திய வார்த்தைகள் இவைகளே என்று கூறலாம்.) இந்த வார்த்தைகளைப் படிக்கும் ஜனங்கள் மனிதனுடைய கருத்துக்கள் மற்றும் கற்பனைகளில் இருந்து தங்களை வேறுபடுத்திக்கொண்டவர்களாக இருக்கிறார்கள் மற்றும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் தங்கள் இருதயத்தில் ஆழமான தூய்மையான புரிதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது தேவனுடைய நம்பிக்கையாகும், மேலும், இந்த வார்த்தைகளை வாசிக்கிறவர்கள் தமது வார்த்தையைச் சத்தியமும், வழியும் ஜீவனுமென்று எடுத்துக் கொள்ள முடியும் என்றும் மேலும் அவர்கள் தேவனை இலேசாக நடத்த மாட்டார்கள் அல்லது இனிய சொல் கூறி ஏமாற்ற மாட்டார்கள் என்றும் அவர் நம்புகிறார். தேவனை ஆராயும் அல்லது சோதனை செய்யும் மனப்பாங்கோடு ஜனங்கள் இந்த வார்த்தைகளை வாசித்தால், அதன் பின் இந்த உரைகள் அவர்களுக்கு ஒரு மூடிய புத்தகமாக இருக்கும். சத்தியத்தைத் தேடுகிறவர்களும், தேவனைப் பின்பற்றத் தீர்மானமாக இருக்கிறவர்களும், அவரிடத்தில் ஒரு சிறு சந்தேகமும் இல்லாதவர்களும் மட்டுமே இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் தகுதி பெற்றவர்கள்.

“முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்” என்பதில் இருந்து தொடர்ந்து வரும் தெய்வீக உரையின் இன்னொரு வகையே “கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் IV” ஆகும். இந்தப் பகுதியில் கிறிஸ்தவ சபைப்பிரிவுகளின் கிறிஸ்தவர்களுக்கான பின்வருவன போன்ற புத்திமதி கூறல்கள், போதனைகள், மற்றும் வெளிப்படுத்தல்கள் அடங்கியுள்ளன: “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்,” “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்.” மனுக்குலத்துக்கான மிகவும் குறிப்பிடத்தக்கப் பின்வருவன போன்ற தேவைகளையும் இது உள்ளடக்கியுள்ளது: “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” “மூன்று புத்திமதிகள்” “மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்.” அனைத்து வகையான மக்களுக்குமான வெளிப்படுத்தல்கள் மற்றும் நியாயத்தீர்ப்புகள் மற்றும் தேவனை எப்படி அறிவது என்பது பற்றிய வார்த்தைகள் போன்ற பல அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்தப் பிரிவுதான் மனுக்குலத்துக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பின் மையம் என்று கூற முடியும். தேவன் தமது கிரியைகளை முடிக்கப் போகும்போது, ஜனங்களின் எலும்புகளின் மஜ்ஜையில் என்ன இருக்கிறது, அதாவது துரோகம் இருக்கிறது என்று அவர் வெளிப்படுத்துவதுதான் தேவனுடைய உரைகளின் இந்தப் பிரிவின் மிகவும் மறக்க முடியாத பகுதியாகும். பின்வரும் உண்மையை மக்களை முடிவில் அறியச் செய்து அவர்களுடைய இருதயத்தின் ஆழமான பகுதியில் அதை எரிப்பதே அவருடைய நோக்கம் ஆகும்: நீ எவ்வளவு காலமாக தேவனைப் பின்பற்றுகிறாய் என்பது முக்கியமல்ல—உன் சுபாவம் இன்னும் தேவனுக்கு துரோகம் செய்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், தேவனுக்கு துரோகம் செய்வது மனிதனின் சுபாவத்தில் இருக்கிறது, ஏனெனில் ஜனங்கள் தங்கள் வாழ்நாளில் முதிர்ச்சியை முற்றிலுமாக அடைய முடியாது, மேலும் அவர்களின் மனநிலைகளில் சார்பான மாற்றங்கள் மட்டுமே இருக்க முடியும். “துரோகம் (1)” மற்றும் “துரோகம் (2)” ஆகிய இந்த இரு அத்தியாயங்கள், ஜனங்களுக்கு ஓர் அடியாக இருந்தாலும், அவைகள் ஜனங்களுக்கு தேவனின் மிகவும் உண்மையான நன்மைபயக்கும் எச்சரிக்கைகள் ஆகும். ஜனங்கள் கவனக்குறைவாகவும் ஆணவத்துடனும் இருக்கும்போது, இந்த இரு அத்தியாயங்களையும் படித்த பிறகு, குறைந்தபட்சம் அவர்களுடைய துன்மார்க்கம் கட்டுக்குள் வைக்கப்படும், மேலும் அவர்கள் அமைதியாக இருப்பார்கள். இந்த இரு அத்தியாயங்கள் மூலமாக, உன் வாழ்க்கை எவ்வளவு தூரம் முதிர்ச்சியுடையதாக இருந்தாலும், உன் அனுபவங்கள் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், உன்னுடைய நம்பிக்கை எவ்வளவு பெரியதாக இருந்தாலும். நீ எங்கு பிறந்து எங்கு போய்க்கொண்டு இருந்தாலும், உன்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்யும் சுபாவம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தானாகவே வெளிப்படக் கூடும் என்பதைச் சகல ஜனங்களுக்கும் தேவன் ஞாபகப்படுத்துகிறார். ஒவ்வொரு நபருக்கும் தேவன் சொல்ல விரும்புவது என்னவென்றால்: ஒவ்வொரு நபரின் உள்ளார்ந்த சுபாவம் என்பது தேவனுக்குத் துரோகம் செய்வதுதான். நிச்சயமாக, இந்த இரு அத்தியாயங்களையும் தேவன் வெளிப்படுத்துவதன் நோக்கம் மனுக்குலத்தை புறம்பாக்குவதற்கும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதற்கும் காரணங்களைக் கண்டுபிடிப்பது அல்ல. ஆனால் மனித சுபாவத்தைப் பற்றி இன்னும் விழிப்புணர்வோடு ஜனங்களை இருக்க வைப்பதற்கே ஆகும். இதனால் தேவனுக்கு முன்பாக அவரது வழிகாட்டுதலைப் பெறும்படியாக அவர்கள் எப்போதும் கவனமாக வாழ முடியும். அது அவர்களை தேவப் பிரசன்னத்தை இழந்துவிடாமலும் திரும்பிவர முடியாத பாதையில் கால்வைப்பதையும் தடுக்கும். தேவனைப் பின்பற்றும் அனைவருக்கும் இந்த இரு அத்தியாயங்களும் எச்சரிக்கை மணியாகும். ஜனங்கள் தேவனுடைய உண்மையான நோக்கங்களை புரிந்து கொள்வார்கள் என்று நம்பலாம்; சொல்லப்போனால் இந்த வார்த்தைகள் எல்லாம மறுக்க முடியாத உண்மைகள்—அதனால் அவைகள் எப்போது எப்படி தேவனால் வெளிப்படுத்தப்பட்டன என்று மனுஷன் ஏன் தர்க்கவாதம் புரிய வேண்டும். தேவன் இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் தமக்குள் வைத்திருந்தால், அவை அவர் உரைப்பதற்கு பொருத்தமாவை என்று மக்கள் விசுவாசிக்கும் வரை காத்திருந்தால், அது வெகு தாமதமானதாக இருந்திருக்கும் அல்லவா? அந்த மிகப் பொருத்தமான நேரம் எப்போதாக இருக்கும்.

இந்த நான்கு பிரிவுகளிலும் தேவன் பல வழிமுறைகளையும் கண்ணோட்டங்களையும் பயன்படுத்துகிறார். உதாரணமாக, சிலசமயம் அவர் வஞ்சப்புகழ்ச்சியைப் பயன்படுத்துகிறார், மற்றும் சில சமயம் நேரடியாக அளிப்பதையும் போதனையையும் பயன்படுத்துகிறார்; சில சமயம் உதாரணங்களைப் பயன்படுத்துகிறார், மற்றும் சில சமயம் கடினமான கடிந்துகொள்ளுதலையும் பயன்படுத்துகிறார். மொத்தத்தில், எல்லா வகையான வழிமுறைகளும் இருக்கின்றன. இதன் இலக்கு ஜனங்களின் பல்வேறு நிலைகளையும் சுவைகளையும் பூர்த்திசெய்வதுதான். அவரது உரைகளின் வெவ்வேறு வழிமுறைகள் மற்றும் உள்ளடக்கத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அவருடைய பேச்சு மாறுகிறது. உதாரணமாக, சில சமயம் அவர் “நான்” “எனக்கு” என்று கூறுகிறார்; அதாவது, தேவனுடைய கண்ணோட்டத்தில் இருந்து ஜனங்களிடம் பேசுகிறார். சில சமயம் “தேவன்” இதுவாக அதுவாக இருக்கிறார் என்று கூறி மூன்றாம் நபரின் இடத்தில் இருந்து பேசுகிறார், சில சமயம் மனிதன் என்ற கண்ணோட்டத்தில் இருந்தும் பேசுகிறார். அவர் எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பேசினாலும், அவரது சாராம்சம் மாறுவதில்லை, அவர் எப்படிப் பேசினாலும், அவர் பேசுவது எல்லாம் தேவனின் சாராம்சமே—அது எல்லாம் சத்தியம், மற்றும் அதுவே மனுக்குலத்துக்குத் தேவையானது.

முந்தைய: அத்தியாயம் 46

அடுத்த: பாதை … (1)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக