அத்தியாயம் 5

என் ஆவியின் குரல் என் மனநிலையின் முழு வெளிப்பாடாகும். உங்களுக்குப் புரிகிறதா? இந்த விஷயத்தில் தெளிவாக இல்லாவிட்டால் அது என்னை நேரடியாக எதிர்ப்பதற்கு ஒப்பாகும். இதற்குள் அடங்கியுள்ள முக்கியத்துவத்தை நீங்கள் மெய்யாகவே பார்த்தீர்களா? உங்களுக்காக நான் எவ்வளவு முயற்சியை, எவ்வளவு சக்தியைச் செலவிடுகிறேன் என்று உண்மையிலேயே உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்ன செய்தீர்கள், எனக்கு முன் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை மனம் திறந்து சொல்ல உண்மையிலேயே உங்களுக்குத் தைரியம் உண்டா? என் முகத்திற்கு முன்பாகவே நீங்கள் உங்களை என் ஜனங்கள் என்று நீங்களே அழைத்துக் கொள்ளும் துணிவு உங்களிடம் உள்ளது—உங்களுக்கு வெட்கம் கிடையாது, அதற்கும் கீழாக, எந்த உணர்வும் கிடையாது! விரைவில் அல்லது அப்பால், உங்களைப் போன்றவர்கள் எனது வீட்டிலிருந்து புறம்பே தள்ளப்படுவார்கள்! நீங்கள் எனக்கு சாட்சியமாக இருந்தீர்கள் என்பதைக் கருதிக் கொண்டு பழைய போர்ச்சேவகராக என்னுடன் வர வேண்டாம்! இது, மனிதகுலத்துக்குச் செய்யும் திறன் கொண்ட ஒரு விஷயம்தானா? உனது நோக்கங்கள் மற்றும் உனது குறிக்கோள்களில் எதுவும் மிஞ்சி இருக்கவில்லை என்றால், நீ நீண்ட காலமாக வேறு பாதையில் சென்றிருப்பாய். மனித இருதயத்தில் எவ்வளவு வைத்திருக்க முடியும் என்று எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயா? இந்த நேரத்திலிருந்து, எல்லா விஷயங்களிலும், நீ நடைமுறையின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்; கடந்த காலங்களில் நீ செய்ததைப் போல, வீணான பேச்சு மட்டும் பேசுவது இனிமேல் உன்னைப் பாதுகாக்காது. கடந்த காலத்தில், உங்களில் பெரும்பாலோர் எனது கூரையின் கீழ் ஒட்டுண்ணிகளாக இருக்க முடிந்தது; இன்று நீங்கள் உறுதியாக நிற்க முடிகிறது என்பது என் வார்த்தைகளின் தீவிரத்தினால் தான். நான் தோராயமாகவும் நோக்கமின்றியும் பேசுகிறேன் என்று நீ நினைக்கிறாயா? சாத்தியமே இல்லை! நான் மேலேயிருந்து எல்லாவற்றையும் பார்க்கிறேன், மேலேயிருந்து எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறேன். அதேபோல், பூமியின் மீது என் இரட்சிப்பை அதற்குரிய இடத்தில் வைத்திருக்கிறேன். நான் கவனிக்காத ஒரு கணமும் இல்லை, என் ரகசிய இடத்திலிருந்து, மனிதர்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் சொல்லும் மற்றும் செய்யும் எல்லாவற்றையும் நான் கவனிக்கிறேன். மனிதர்கள் எனக்குத் திறந்த புத்தகங்கள்: நான் ஒவ்வொருவரையும் மற்றும் அனைவரையும் பார்க்கிறேன் மற்றும் அறிவேன். இரகசிய இடம் என் வாசஸ்தலம், மற்றும் பரலோகத்தின் முழுப் பெட்டகமும் நான் படுத்திருக்கும் படுக்கையாகும். சாத்தானின் சக்திகள் என்னை அடைய முடியாது, ஏனென்றால் நான் மகத்துவம், நீதி மற்றும் நியாயத்தீர்ப்பினால் நிறைந்திருக்கிறேன். ஒரு விளக்க முடியாத இரகசியம் என் வார்த்தைகளில் அடங்கியுள்ளது. நான் பேசும்போது, நீங்கள் குழப்பத்தில் மூழ்கி, அப்போதுதான் தண்ணீரில் எறியப்பட்ட பறவைகள் போல ஆகிவிடுவீர்கள், அல்லது பயந்துபோன குழந்தைகள் போல, எதுவும் தெரியாதவர்கள் போலத் தோன்றுவீர்கள், ஏனென்றால் உங்கள் ஆவி சிந்திக்க இயலாத ஒரு நிலைக்கு வீழ்ந்து விட்டது. ரகசிய இடம் என் வாசஸ்தலம் என்று நான் ஏன் சொல்கிறேன்? எனது வார்த்தைகளின் ஆழமான அர்த்தம் உனக்குத் தெரியுமா? மனிதர்கள் மத்தியில் என்னை அறிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள் யார்? தங்கள் தந்தையையும் தாயையும் அறிந்திருப்பதுபோல என்னை அறிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள் யார்? என் வாசஸ்தலத்தில் இருந்துகொண்டு, நான் உன்னிப்பாகக் கவனிக்கிறேன்: பூமியிலுள்ள எல்லா ஜனங்களும் “உலகைச் சுற்றிலும் பயணம்” செய்வது பற்றிப் பரபரப்பாக இருக்கிறார்கள், முன்னும் பின்னுமாக விரைந்து செல்கிறார்கள், இவை அனைத்துமே அவர்களின் விதி மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான். என் ராஜ்யத்தைக் கட்டியெழுப்பத் தனது சக்தியைக் கொடுக்க முடிந்தாலும்கூட, மூச்சு விடும் அளவுக்கான சிரமம் மேற்கொள்ளவும்கூட ஒருவர் இல்லை. நான் மனிதர்களை சிருஷ்டித்தேன், அவர்களைப் பலமுறை உபத்திரவத்திலிருந்து மீட்டிருக்கிறேன்; இருப்பினும், இந்த மனிதர்கள் அனைவருமே நன்றிகெட்டவர்கள்: என் இரட்சிப்பின் அனைத்து சம்பவங்களையும் அவர்களில் ஒருவரால் கூட கணக்கிட முடியாது. உலகத்தை உருவாக்கியதிலிருந்து இன்றுவரை இது பல ஆண்டுகளாக—பல நூற்றாண்டுகளாக இப்படியே உள்ளது; நான் பல அற்புதங்களைச் செய்திருக்கிறேன், என் ஞானத்தைப் பல முறை வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆயினும்கூட, மனிதர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே அறிவு குழம்பியவர்களாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறார்கள், என் விவகாரங்களுக்குச் செவிசாய்க்கும் நோக்கம் சிறிதளவும் இன்றி சில சமயங்களில் காட்டில் மிரண்டு ஓடும் மிருகங்களைப் போல இருக்கிறார்கள். பல முறை, நான் மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளேன், அவர்கள் மரிக்கும்படிக்கு மரண தண்டனை விதித்துள்ளேன், ஆனால் எனது நிர்வாகத் திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. ஆகையால், என் கைகளில், மனிதர்கள் தாங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் பழைய விஷயங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். எனது கிரியையின் படிகளின் காரணமாக, ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து, சீரழிந்த, நடத்தை கெட்ட, இழிந்த, கீழ்த்தரமான மனிதர்களான உங்களை நான் மீண்டும் ஒருமுறை மீட்டிருக்கிறேன்.

எனது திட்டமிடப்பட்ட கிரியை ஒரு கணம் கூட இயங்குவதில் நிறுத்தம் இன்றி முன்னோக்கி விரைகிறது. ராஜ்யத்தின் காலத்திற்கு நகர்ந்து, என் ஜனங்களாக உங்களை என் ராஜ்யத்திற்குள் கொண்டு சென்றபின், நீங்கள் செய்யவேண்டிய எனது மற்ற கோரிக்கைகள் உள்ளன; அதாவது, இந்த யுகத்தை நான் ஆளுகை செய்வதற்கான சட்டதிட்டங்களின் சாசனத்தை உங்கள் முன் பிரகடனப்படுத்துவேன்:

நீங்கள் என் ஜனங்கள் என்று அழைக்கப்படுவதால், உங்களால் என் நாமத்தை மகிமைப்படுத்த முடியும்; அதாவது, சோதனையின் மத்தியில் சாட்சியம் அளிக்க முடியும். யாராவது என்னை இனிய சொற்களால் ஏமாற்றி, என்னிடமிருந்து உண்மையை மறைக்க முயன்றால், அல்லது என் முதுகுக்குப் பின்னால் அவமானகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அத்தகையவர்கள் எந்த விதிவிலக்கும் இல்லாமல், நான் அவர்களைக் கையாள்வதற்காகக் காத்திருக்கும் படிக்கு, துரத்தப்பட்டு என் வீட்டிலிருந்து அகற்றப்படுவார்கள். கடந்த காலங்களில் என்னிடம் விசுவாசமற்றவர்களாகவும், வாரிசுரிமைக்கு ஒவ்வாதவர்களாகவும் இருந்தவர்கள், வெளிப்படையாக என்னை நியாயந்தீர்க்க இன்று மீண்டும் எழுந்தவர்கள்—அவர்களும் என் வீட்டை விட்டு விரட்டப்படுவார்கள். என் ஜனங்களாக இருப்பவர்கள் தொடர்ந்து என் பாரங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும், அதே போல் என் வார்த்தைகளை அறியவும் நாட வேண்டும். இதுபோன்றவர்களுக்கு மட்டுமே நான் பிரகாசத்தைத் தருவேன், அவர்கள் நிச்சயமாக என் வழிகாட்டுதலிலும் பிரகாசத்தின் கீழும் வாழ்வார்கள், ஒருபோதும் சிட்சையை எதிர்கொள்வதில்லை. என் பாரங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியவர்கள், தங்கள் சொந்த எதிர்காலங்களைத் திட்டமிடுவதில் கவனம் செலுத்துகிறவர்கள்—அதாவது, என் இருதயத்தைத் திருப்திப்படுத்துவதைத் தங்கள் செயல்களின் நோக்கமாகக் கொள்ளாதவர்கள், அதற்கு மாறாக இலவசச் சலுகைகளைத் தேடுவோர்—இந்தப் பிச்சைக்காரர் போன்ற ஜீவன்களைப் பயன்படுத்துவதற்கு நான் முற்றிலும் மறுக்கிறேன், ஏனென்றால் அவர்கள் பிறந்த காலத்திலிருந்தே, என் பாரங்களைக் கருத்தில் கொள்வதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் இயல்பான அறிவு இல்லாதவர்கள்; அத்தகைய ஜனங்கள் மூளையின் “ஊட்டச்சத்துக் குறைபாட்டால்” பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சில “ஊட்டச்சத்துக்காக” வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியமாயிருக்கிறது. அத்தகையவர்களால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை. என் ஜனங்கள் மத்தியில், எல்லோரும் என்னை அறிவது ஒரு கட்டாயக் கடமையாகக் கருதப்படுவது முடிவு வரைக்கும் பார்க்கப்படவேண்டும், அதாவது புசிப்பது, உடுத்துவது, மற்றும் தூங்குவது போன்றவை, எப்படி ஒரு கணம் கூட மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறதோ அதுபோல, அதனால் இறுதியில் என்னை அறிவது சாப்பிடுவதைப் போலவே பழக்கமாகிவிடும்—நீங்கள் சிரமமின்றி, நடைமுறையில் கைமுறைப் பழக்கத்தில் அதைச் செய்வீர்கள். நான் பேசும் சொற்களைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றும் மிகுந்த விசுவாசத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டு முழுமையாகத் தன்மயமாக்கப்பட வேண்டும்; அதில் எந்தவொரு ஏனோதானோவென்ற அரை நடவடிக்கைகளும் இருக்க முடியாது. என் வார்த்தைகளில் கவனம் செலுத்தாத எவரும் என்னை நேரடியாக எதிர்ப்பதாகக் கருதப்படுவார்கள்; என் வார்த்தைகளைப் புசிக்காத, அல்லது அவற்றை அறிய முற்படாத எவரும் என்மீது கவனம் செலுத்தவில்லை என்று கருதப்படுவார்கள், மேலும் நேரடியாக என் வீட்டின் கதவுக்கு அப்பால் துடைத்தெறியப் படுவார்கள். இது ஏனென்றால், கடந்த காலத்தில் நான் கூறியுள்ளது போல், நான் விரும்புவது ஏராளமான ஜனங்களை அல்ல, ஆனால் சிறப்பானவர்களையே. ஒரு நூறு பேரில், ஒரே ஒருவர் மட்டுமே என் வார்த்தைகளின் மூலம் என்னை அறிந்து கொள்ள முடிந்தால், அந்த ஒருவருக்குப் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அளிப்பதில் கவனம் செலுத்தும்படிக்கு மற்ற அனைவரையும் நான் விருப்பத்துடன் தூக்கி எறிந்துவிடுவேன். இதிலிருந்து, அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மட்டுமே என்னை வெளிப்படுத்தி எனக்காய் வாழ முடியும் என்பது உண்மையல்ல என்பதை நீங்கள் காணலாம். நான் விரும்புவது கோதுமையே (விதைகள் முழுமையாக இல்லாவிட்டாலும்) களைகளை அல்ல (விதைகள் போற்றத்தக்க அளவுக்கு முழுமையாக இருந்தாலும்கூட). தேடுவதைப் பொருட்படுத்தாமல், மாறாக மந்தமான முறையில் நடந்துகொள்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் விருப்பப்படி வெளியேற வேண்டும்; அவர்கள் தொடர்ந்து என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவரக்கூடாது என்பதற்காக நான் அவர்களை இனி பார்க்க விரும்பவில்லை. எனது ஜனங்களிடம் நான் கோருவதைப் பொறுத்தவரை, நான் இப்போதே இந்தக் கட்டளைகளை நிறுத்தி, சூழ்நிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பொறுத்து மேலும் தடைகளை விதிக்கக் காத்திருப்பேன்.

கடந்த நாட்களில், பெரும்பான்மையான ஜனங்கள் ஞானத்தின் தேவன் நானேதான், மனிதர்களின் இருதயங்களை ஆழமாகக் கண்ட தேவன் நானேதான் என்று நினைத்தார்கள்; இருப்பினும், இது மேலோட்டமான பேச்சு. மனிதர்கள் என்னை உண்மையாக அறிந்திருந்தால், அவர்கள் அவசர அவசரமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கருத மாட்டார்கள், அதற்குப் பதிலாக என் வார்த்தைகளின் மூலம் என்னை அறிந்து கொள்ள முயன்றிருப்பார்கள். என் செயல்களை உண்மையிலேயே பார்த்த ஒரு கட்டத்திற்கு அவர்கள் வந்தபோதுதான் என்னை ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்று அழைக்கத் தகுதியாவார்கள். என்னைப் பற்றிய உங்கள் அறிவு மிகவும் ஆழமற்றது. யுகங்கள் முழுவதும், பலர் இத்தனை ஆண்டுக் காலங்களாக எனக்குச் சேவை செய்திருக்கிறார்கள், என் செயல்களைப் பார்த்து, உண்மையிலேயே என்னைப் பற்றி ஏதாவது தெரிந்துகொள்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக, அவர்கள் எப்போதுமே என் நிமித்தம் கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைக் கொண்டிருந்தார்கள், என் கால்தடங்களைத் தேடுவது எவ்வளவு கடினம் என்பதன் காரணமாக என்னை எதிர்க்கும் குறைந்தபட்ச நோக்கத்தைக்கூடக் கொண்டிருக்கத் துணியவில்லை. இந்த ஜனங்கள் மத்தியில் எனது வழிகாட்டுதல் இல்லாதிருந்தால், அவர்கள் கண்மூடித்தனமாகச் செயல்படத் துணிய மாட்டார்கள். ஆகையால், பல வருட அனுபவங்களுடன் வாழ்ந்த பின்னர், அவர்கள் என்னைப் பற்றிய அறிவின் ஒரு பகுதியைப் பொதுமைப்படுத்தி, என்னை ஞானமுள்ளவர், அற்புதமானவர், ஆலோசனைக் கர்த்தா, என் வார்த்தைகள் ஓர் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போன்றவை, என் செயல்கள் பெரியவை, வியக்க வைக்கும் மற்றும் அதிசயமானவை, நான் மகத்துவத்தில் அணிவிக்கப்பட்டு இருக்கிறேன், எனது ஞானம் ஆகாயவிரிவையும் மற்ற நுண்ணறிவுகளையும் விட உயர்ந்தது என்று அழைக்கின்றனர். ஆயினும், இன்று, என்னைப் பற்றிய உங்கள் அறிவு அவர்கள் போட்ட அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே உங்களில் பெரும்பான்மையானவர்கள்—கிளிகள் போல—அவர்கள் பேசிய வார்த்தைகளையே உச்சரிக்கிறீர்கள். நீங்கள் என்னை அறிந்த வழி எவ்வளவு ஆழமற்றது என்பதையும், உங்கள் “கல்வி” எவ்வளவு மோசமானது என்பதையும் நான் கணக்கில் எடுத்துக்கொள்ளும் காரணத்தால்தான் நான் உங்களை இவ்வளவு சிட்சையிலிருந்து காப்பாற்றினேன். அப்படியிருந்தும், உங்களில் பெரும்பான்மையினர் உங்களை இன்னும் அறியவில்லை, அல்லது உங்கள் செயல்களில் நீங்கள் ஏற்கெனவே என் சித்தத்தை விரும்பியிருக்கிறீர்கள், இந்தக் காரணத்திற்காக நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துவிட்டீர்கள்; அல்லது, மாம்சமாக மாறிய பிறகு, மனிதகுலத்தின் செயல்களைக் கண்காணிப்பதை நான் முற்றிலுமாக இழந்துவிட்டேன், இந்தக் காரணத்தினால் நீங்களும் சிட்சையிலிருந்து தப்பித்துவிட்டீர்கள்; அல்லது நீங்கள் நம்புகிற தேவன் பிரபஞ்சத்தின் பரந்த வெளிகளில் இல்லை என்று நினைக்கிறீர்கள், எனவே தேவனை அறிவதை உங்கள் இருதயங்களில் முதலில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாக இருப்பதைக் காட்டிலும் உங்கள் ஓய்வு நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு வேலையாக நீங்கள் தள்ளிவிட்டீர்கள், ஒன்றும் செய்யாமல் செலவிடப்படும் நேரத்தை ஏமாற்றுவதற்கான ஒரு வழியாக தேவன் மீதுள்ள நம்பிக்கையைப் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்குத் தகுதிகள், காரணம் மற்றும் நுண்ணறிவு இல்லாததற்கு நான் பரிதாபப்படாவிட்டால், நீங்கள் அனைவரும் என் சிட்சைக்கு இடையில் அழிந்து போவீர்கள், உயிர்வாழ்வதில் இருந்து துடைத்தெடுக்கப் படுவீர்கள். ஆயினும்கூட, பூமியில் எனது கிரியை முடியும் வரை, நான் மனிதகுலத்திடம் இரக்கத்தோடே இருப்பேன். இது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம், மேலும் நல்லதும் கெட்டதும் குழப்பம் அடையச் செய்வதை நிறுத்துங்கள்.

பிப்ரவரி 25, 1992

முந்தைய: அத்தியாயம் 4

அடுத்த: அத்தியாயம் 6

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக