அத்தியாயம் 36

தேவன் இப்போது மனுஷனைச் சிட்சிக்கத் தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒருவராலும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. இந்த சிட்சையின் மூல நோக்கம் மனுஷனுக்கு நேரிடத் தொடங்கிவிட்டதா என்பதைப் பற்றி ஒருவராலும் ஒரு தெளிவான பதிலைச் சொல்ல முடியவில்லை. தேவன் கூறுகிறார், “என் சிட்சையினால் மனுஷன் ஒருபோதும் எதையும் கண்டறியவில்லை, ஏனெனில் தன்னுடைய இரு கரங்களால் தன் கழுத்தைச் சுற்றி இருக்கும் நுகத்தைப் பற்றிக்கொள்வதைத் தவிர எதையும் அவன் செய்வதில்லை. ஓர் எதிரியைப் பார்ப்பது போல் இரு கண்களும் என்மேல் நிலைகுத்தி நிற்கின்றன—மேலும் இந்தக் கணத்தில்தான் அவன் எவ்வளவுதூரம் இளைத்துப்போயிருக்கிறான் என்று நான் பார்க்கிறேன். ஒருவரும் ஒருபோதும் சோதனைகளின் மத்தியில் உறுதியாக நிற்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று நான் கூறுகிறேன்.” மனுஷனுக்கு நேர இருக்கிற சிட்சையைப் பற்றிய உண்மைகளை தேவன் அவனிடம் கூறுகிறார். எதையும் விட்டுவிடாமல் அவர் அதைப் பேரளவுக்கு விரிவாய் விளக்குகிறார். மனுஷன் சிட்சைக்குள் நுழைந்து உண்மையில் உறுதியாய் நிற்க முடியாமல் இருப்பது போல் அது இருக்கிறது. மனுஷனுடைய அலங்கோலமான அம்சங்கள் பற்றி தேவன் தெளிவான, உயிரோட்டமுள்ள சித்தரிப்பை வழங்குகிறார். இதனால்தான் மனுஷன் அழுத்தத்தின் கீழ் இருப்பதாக உணர்கிறான்: சோதனைகளின் மத்தியில் அவர்கள் ஒருபோதும் உறுதியாக நிற்பதில்லை என்று தேவனே கூறுவதால், மரபுக்கு மாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உலக சாதனையை முறியடிக்கும் ஒருவனாக என்னால் எப்படி இருக்க முடியும்? இந்தக் கணத்தில், அவர்கள் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள், எதார்த்தத்தில் இது தேவன் கூறுவது போலவே இருக்கிறது: “நான் அவர்களைச் சாலையின் முடிவுக்குக் கொண்டுவந்து விட்டேனா?” உண்மையில், தேவன் எல்லா ஜனங்களையும் சாலையின் முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார், அதனால், அவர்களது மனசாட்சியில், ஜனங்கள் எப்போதும் தேவன் கொடுமையானவரும் மனிதத்தன்மையற்றவருமாக இருப்பதாக நம்புகிறார்கள். உலகத் துன்பம் என்னும் கடலில் இருந்து தேவன் எல்லா ஜனங்களையும் பிடித்திருக்கிறார், அதன் பின்னர், “எந்த விபத்தையும் தவிர்க்க, பிடிக்கப்பட்டிருந்த எல்லா ‘மீனையும்’ நான் கொன்றேன், அதன் பிறகு மீன் கீழ்ப்படிதல் உள்ளதாக மாறியது, மற்றும் சிறிதளவு குறைகூறுதலும் இல்லை.” இது உண்மை இல்லையா? கசப்பான கடலாகிய மரணத்தில் இருந்து தேவன் எல்லா ஜனங்களையும் இன்னொரு மரணப் பள்ளத்தாக்குக்குள் இழுத்திருக்கிறார், அவர் அவர்கள் அனைவரையும் “மரணதண்டனை நிறைவேற்றுபவனின் அறைக்கு” இழுத்திருக்கிறார், அவர் அவர்களைச் சாலையின் முடிவுக்குத் தள்ளியிருக்கிறார்—அவர் ஏன் இதை மற்ற குமாரர்களுக்கும் தேவனுடைய ஜனங்களுக்கும் செய்யவில்லை? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டில் இந்தக் கிரியையை அவர் செய்வதில் இருக்கும் அவருடைய நோக்கம் என்ன? தேவனுடைய கரம் ஏன் மிகவும் “தீங்கு” செய்வதாக இருக்கிறது? “எனக்கு மனிதன் தேவைப்படும்போது, அவன் எப்போதும் மறைந்திருக்கிறான். அவன் ஒருபோதும் திகைக்கவைக்கும் காட்சிகளைப் பார்த்திராதது போல, அவன் கிராமப் புறத்தில் பிறந்து நகரத்தின் விஷயங்கள் ஒன்றையும் அறிந்திராதவன் போல இது இருக்கிறது.” என்பதில் ஆச்சரியமில்லை. உண்மையில், ஜனங்கள் தங்களுக்குள் கேட்கிறார்கள்: “இதைச் செய்வதில் இருக்கும் தேவனின் திட்டம் என்ன? அவர் நம்மை மரணத்துக்கு உட்படுத்தவில்லையா? இதில் இருக்கும் கருத்து என்ன? அவருடைய கிரியையின் படிநிலைகள் துரிதமாகவும் அதிக எண்ணிக்கையிலும் வருகின்றன, மேலும் அவர் ஏன் நம்மிடம் சிறிதளவு கூட கருணை காட்டுவதில்லை?” இருப்பினும் ஜனங்கள் இதைச் சொல்லத் துணியவில்லை, மற்றும் தேவனுடைய வார்த்தைகள் அவர்களை இத்தகைய சிந்தனைகளை நிராகரிக்கச் செய்கின்றன, மேலும் அவர்களின் சிந்திக்கும் வாய்ப்பைப் பறிக்கின்றன, மேலும் இத்தகைய சிந்தனைகளை ஒதுக்கி வைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. மனுஷனுடைய எண்ணங்களை எல்லாம் தேவன் வெளிப்படுத்துகிறார் என்பது போல இது இருக்கிறது. அதனால் ஜனங்கள் அவற்றை வெளிவர அனுமதிக்காமல் தங்களுக்குள் அழுத்தி வைக்கிறார்கள். இந்த ஜனங்கள்தான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி என்று முன்னர் சொல்லப்பட்டது. உண்மையில், தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், அவர்களே சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் உள்ளடக்கம் ஆவர். தேவன் அவர்களைச் சாலையின் முடிவுக்குத் தள்ளி சங்கரிக்கும்போது, அப்போது—சந்தேகம் இல்லாமல்—சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ஆவி அவர்களுக்குள் கிரியை செய்ய மேலும் வாய்ப்புகள் இருக்காது. இவ்வாறு, ஜனங்கள் சாலையின் முடிவுக்கு நடக்கும்போதுதான் சிவப்பான பெரிய வலுசர்ப்பமும் செத்து முடிவை அடையும். தேவனின் “மாபெரும் அன்பைத்” திருப்பி செலுத்த அது மரணத்தைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம்—இதுதான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டில் தேவனுடைய கிரியையின் நோக்கமாக இருக்கிறது. ஜனங்கள் தங்கள் ஜீவன்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும்போது, எல்லாம் அற்பமாகிவிடுகின்றன, அவர்களை விட சிறப்பாக யாராலும் ஆக முடியாது. ஜீவனை விட மிகவும் முக்கியமானது எதுவாக இருக்க முடியும்? இப்படி, ஜனங்களுக்குள் மேலும் எதுவும் சாத்தானால் செய்யமுடியாமல் போகிறது, மனிதனைக் கொண்டு அதனால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இருப்பினும், “மாம்சம்” என்பதன் விளக்கத்தில், மாம்சம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனங்கள் உண்மையாகவே தங்களை ஒப்புக்கொடுத்தால், மற்றும் அவர்கள் சாத்தானால் இயக்கப்படாமல் இருந்தால், அவர்களைத் தோற்கடிக்க யாராலும் முடியாது—மேலும் இந்தக் கணத்தில், மாம்சம் தனது மற்றொரு செயல்பாட்டைச் செய்யும், மற்றும் முறையாக தேவ ஆவியானவரின் வழிகாட்டுதலைப் பெறத் தொடங்கும். இது இன்றியமையாத ஒரு செயல்முறை ஆகும், இது படிப்படியாக நடக்க வேண்டும்; இல்லாவிட்டால், பிடிவாதமான மாம்சத்தில் தேவன் கிரியை செய்ய எந்த வழியும் இருக்காது. தேவனுடைய ஞானம் இப்படிப்பட்டது ஆகும். இந்த வகையில், எல்லா ஜனங்களும் இன்றைய சூழ்நிலைகளுக்குள் தங்களை அறியாமலேயே நுழைந்திருக்கிறார்கள். மேலும் மனுஷனை “சாலையின் முடிவுக்கு” வழிநடத்திச் சென்றது தேவன் இல்லையா? அது மனுஷனால் திறக்கப்பட்ட ஒரு புதிய சாலையாக இருக்க முடியுமா? உங்கள் அனுபவத்தைப் பார்க்கும்போது, உங்களில் மிக அதிகமான கொடூரமான முறைகளை தேவன் பயன்படுத்துவதாகத் தெரிகிறது, இதில் இருந்து தேவனின் நீதியைக் காணலாம். உங்களால் எப்படி துதிக்காமல் இருக்க முடியும்? உங்களில் தேவன் செய்வது தேவனுடைய நீதியான மனநிலையை ஜனங்கள் காண அனுமதிக்கிறது; தேவன் மேல் இருக்கும் உங்களுடைய அபிமானத்தை இது கூட்டவில்லையா? பழைய யுகம் இன்னும் இருக்கும் போது புதிய யுகம் இன்னும் வந்தடையாத இந்தச் சாலைச்சந்திப்பில் தேவனுக்கு நீங்கள் எப்படி சாட்சி கொடுப்பீர்கள்? இப்படிப்பட்ட தீவிரமான பிரச்சனை ஆழ்ந்த சிந்தனைக்கு உரியதில்லையா? நீங்கள் இன்னும் புறம்பான பிற விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறீர்களா? “ஜனங்கள் ஒருமுறை ‘புரிதல் நீடுழி வாழ்க’ என்று கூக்குரலிட்டாலும், ‘புரிதல்’ என்ற வார்த்தையைப் பகுத்தாய ஒருவரும் அதிக நேரத்தைச் செலவிட்டதில்லை. இது என்னை நேசிக்க ஜனங்களுக்கு விருப்பம் இல்லை என்பதைக் காட்டுகிறது.” என்று தேவன் ஏன் கூறினார். தேவன் இப்படிப்பட்ட விஷயங்களைக் கூறவில்லை என்றால், உங்கள் சொந்த விருப்பத்தின்படி தேவனின் இருதயத்தைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்திருக்க மாட்டீர்களா?

சமீப காலங்களில், தேவன் மனுவுருவெடுத்தலின் நோக்கங்கள் மற்றும் கருத்து பற்றி சில ஜனங்கள் ஒரு சிறிதளவு அறிய வந்திருந்தாலும், தேவன் மனிதனிடம் அப்பட்டமாகப் பேசியிருக்கவில்லை என்றால் தேவனின் மனுவுருவெடுத்தலின் நோக்கங்கள் மற்றும் கருத்தை ஒருவரும் யூகித்திருக்க முடியாது என்று என்னால் சொல்ல முடியும். இது முழுமையானது. இது உங்களுக்கு இன்னும் தெளிவாகவில்லையா? ஜனங்களில் தேவன் செய்யும் எல்லாம் அவரது நிர்வாகத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்—இருப்பினும் அவர்களால் துல்லியமாக தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதுவே மனுஷனின் குறைபாடு, ஆனால் மனிதன் எல்லாவற்றையும் செய்யக் கூடியவனாக இருக்க வேண்டும் என்பது தேவன் கோருவதில்லை, அவர்கள் வெறுமனே “மருத்துவர்களின் ஆலோசனைகளை” கவனிக்க வேண்டும் என்றே அவர் கேட்டுக்கொள்கிறார். இதுவே தேவனின் கோரிக்கை. உண்மையான மனுஷ வாழ்க்கையை எல்லா ஜனங்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்கிறார், ஏனெனில் “அவர்களுடைய இருதயங்களில், ‘மனுஷ வாழ்க்கை’ என்ற வார்த்தைகள் இல்லை, அவற்றைப் பற்றிய எண்ணம் அவர்களிடம் இல்லை, நான் ஒரு தொணதொணக்கும் கிழவியாகிவிட்டது போல வெறுமனே என் வார்த்தைகளில் களைப்படைகிறார்கள்.” ஜனங்களின் கண்களில், தேவனின் வார்த்தைகள் அன்றாடும் புழங்கும் பாத்திரம் போல் இருக்கின்றன, அவைகளை முக்கியத்துவம் வாய்ந்ததுவாகக் கருதுவதே இல்லை. இதனால், ஜனங்களால் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்க முடியாத இழிவான ஜனங்கள் ஆகிவிட்டனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மனிதனின் இந்தத் தவறு மட்டுமே அவர்கள் மேல் தேவனிடம் வெறுப்பை உண்டாக்க போதுமானதாக உள்ளது, இவ்வாறு பலமுறை ஜனங்கள் தமது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை என்று அவர் கூறுகிறார். இருந்தாலும் தங்கள் எண்ணங்களில் ஜனங்கள் பின்வருமாறு சிந்திக்கிறார்கள்: “தினமும் நாம் தேவனுடைய வார்த்தைகளைப் படித்து ஆராய்கிறோம். ஆகையால் அதற்குச் செவிகொடுப்பதில்லை என்று எப்படி கூற முடியும்? இது நமக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?” ஆனால் நான் இதை உங்களுக்காகக் கொஞ்சம் பகுத்து ஆய்வுசெய்கிறேன்—ஜனங்களின் முகம் சிவந்து போய்விடும். அவர்கள் எப்போது தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கிறார்களோ அப்போது அவர்கள் தங்கள் தலையை அசைக்கிறார்கள், தங்கள் எஜமானனின் சொற்களைக் கேட்டு வாலை அசைத்து அன்புகாட்டும் ஒரு நாயைப் போல அடிபணிகிறார்கள். இதனால், இந்த தருணத்தில், ஜனங்கள் தகுதியற்றவர்களாக உணர்கிறார்கள், அவர்கள் முகங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது, இது அவர்கள் மனந்திரும்பி புதிதாக ஆரம்பிப்பதுபோல் உள்ளது—ஆனால் காலம் கடந்த உடன், அவர்களது பணிவு உடனே மறைந்து விடுகிறது, அதற்குப் பதில் ஓநாய்த்தனம் குடிகொள்கிறது; அவர்கள் தேவனுடைய வார்த்தகைளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, அவர்களது சொந்த விஷயங்களே முன்னுரிமை வாய்ந்தது என எப்போதும் நம்புகிறார்கள், இதனால் தேவனின் விஷயங்கள் கடைசிக்குச் சென்றுவிடுகின்றன, மற்றும் அவர்களுடைய இந்தச் செய்கைகளினால், அவர்களால் தேவனுடைய வார்த்தைகளை ஒருபோதும் செயல்படுத்த முடிவதில்லை. உண்மைகள் வரும்போது, அவைகள் தங்கள் முழங்கைகளை வெளிப்புறமாக நீட்டும்[அ]—இது சொந்த ஜனங்களையே ஏமாற்றுவது ஆகும்—“வாழ்வாதாரத்திற்காக என்னை நம்பியிருப்பதனால் ‘வேறு வழியில் ஓடுகிறார்கள்’.” என்று தேவன் சொல்லுவதில் ஆச்சரியமில்லை. தேவனுடைய வார்த்தைகளில் கொஞ்சம்கூடப் பொய் இல்லை என்பதை இதில் இருந்துதான் பார்க்க முடியும், அவை முற்றிலும் உண்மையானவை, அதில் கொஞ்சம் கூட மிகைப்படுத்திக் கூறுதல் இல்லை, இருந்தாலும் அது ஓரளவு குறைத்துக் கூறப்பட்டது போல தோன்றுகிறது ஏனெனில் மனுஷனின் உயரம் மிகச் சிறியது, அவனால் அவற்றைத் தாங்க முடியாது. மனுஷனைப் பற்றிய விஷயங்களைப் பற்றி, உள்ளும் புறம்புமாக தேவனுடைய வார்த்தை ஏற்கெனவே ஒரு தெள்ளத் தெளிவான சித்தரிப்பை வழங்கிவிட்டது; அவை முழுத் தெளிவோடு செதுக்கப்பட்டுள்ளன, சாத்தானின் உண்மையான முகத்தை அப்படியே உரித்துவைத்தது போன்ற ஒப்புமையை அது தெளிவாகச் சித்தரிக்கிறது. தற்போதைய கட்டத்தில், ஜனங்கள் எல்லாவற்றையும் இனிமேல்தான் தெளிவாகப் பார்க்க வேண்டும், மேலும் இவ்வாறு அவர்கள் தங்களையே அறிந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தால் இந்தப் பாடம் தொடரவேண்டும் என்று நான் கூறுகிறேன்; அதை நிறுத்த முடியாது. ஜனங்கள் தங்களைத் தாங்களே அறியும் போதுதான் தேவனுக்கு மகிமை உண்டாகிறது. இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்—இதை விவரமாக நான் விளக்கிக் கூற வேண்டிய தேவை இல்லை. இருப்பினும், உங்களுக்கு நான் நினைவூட்ட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது, ஆனாலும் நீ தேவனுடைய இந்த வாத்தைகளை வாசிக்க வேண்டும்: “இன்றைய காலத்தில் ஜனங்கள் ஒருபோதும் என்னைப் பொக்கிஷமாகப் பாதுகாத்ததில்லை, எனக்கு அவர்கள் இருதயத்தில் இடமில்லை. வரவிருக்கும் துன்பங்களின் நாட்களில் அவர்களால் என் மீது உண்மையான அன்பைக் காட்ட முடியுமா?” இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? மனிதனுக்குச் சிட்சை நேர வேண்டியிருக்கிறது என்று தேவன் கூறுகிறார், “உங்களை நீங்களே அறிதல்” என்ற வார்த்தைகளுக்கு இன்னும் ஓர் உள்ளர்த்தம் இருப்பதை இது காட்டுகிறது—இதை நீ பார்க்கிறாயா? கஷ்டங்களுக்கும் சுத்திகரிப்புக்கும் உட்படாமல் ஜனங்கள் தங்களைத் தாங்களே எப்படி அறிய முடியும்? இவை வெற்றுச் சொற்கள் இல்லையா? தேவன் பேசிய எல்லவாற்றையும் நீ உண்மையில் நம்புகிறாயா? உன்னால் தேவனுடைய வார்த்தைகளை அறிய முடியுமா? “மனிதனின் செயல்களைப் பார்க்கும்போது, சென்றுவிடுவதுதான் என்னுடைய ஒரே விருப்பம்,” போன்ற விஷயங்களை தேவன் ஏன் திருப்பித்திருப்பி கூறுகிறார், மற்றும் “மலைகள் நிலைகுலைந்து பூமி இரண்டாகப் பிளந்தால்தான் ஜனங்கள் என் வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறார்கள், அப்போது மட்டும்தான் அவர்கள் தங்கள் கனவுகளில் இருந்து விழிக்கிறார்கள், ஆனால் அந்த நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது, அவர்கள் பெரும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகிறார்கள், அவர்களுடைய பிணங்கள் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டு இருக்கின்றன.” என்றும் கூறுகிறார். “ஜனங்கள் நினைத்துப் பார்க்கிறார்கள்” என்று தேவன் கூறுகிறாரே தவிர “ஜனங்கள் என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள்” என்று ஏன் கூறவில்லை? மலைகள் நிலைகுலைந்து பூமி இரண்டாகப் பிளந்திருப்பது உண்மையா? ஜனங்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதில்லை, அவர்கள் அதைக் கடந்துபோக விடுகிறார்கள், அதனால் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளில் அதிகக் “கஷ்டங்களை” அனுபவிக்கிறார்கள். அவர்கள் சிந்தனையற்று இருப்பதே இதற்குக் காரணம். மனுஷனின் இந்தத் தோல்வியால், தேவன் கூறுகிறார், “நான், கண்ணீர் நாளங்கள் இல்லாமலேயே ‘உணர்ச்சிவசப்பட்டேன்’, மனிதனுக்காகப் பல தடவை அழுதேன். இருந்தாலும் மனுஷனுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது.” ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்தாததால், அவர்களுக்கு நினைவூட்ட தேவன் இந்த வழியைப் பயன்படுத்தி அவர்களது “உதவி” யைப் பெறுகிறார்.

இப்போது, உலக வளர்ச்சிகள் குறித்து நான் தீர்க்கதரிசனம் உரைக்க மாட்டேன், ஆனால் மனிதனின் விதியைப் பற்றி சிலவற்றை முன்னறிவிப்பேன். ஜனங்கள் தங்களை அறிவார்களா என்று நான் கேட்டதில்லையா? இதை எப்படி விளக்குவது? ஜனங்கள் தங்களையே எப்படி அறிந்துகொள்ள வேண்டும்? தேவன் ஜனங்களை அதிகமாக “வேதனைப்படுத்தும்போது” அவர்கள் ஜீவனுக்கும் மரணத்துக்கும் இடையில் திரிகிறார்கள், அவர்கள் மனுஷ வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள், மேலும் அவர்கள் மனுஷ வாழ்க்கையில் களைப்படைகிறார்கள், மனிதனின் முழு வாழ்க்கையும் ஒரு கனவைத் தவிர வேறில்லை என்று நம்புகிறார்கள். மனித வாழ்க்கை வேதனை நிறைந்த ஒன்று, ஒன்றையும் ஒருபோதும் சாதிக்காமலேயே அவர்கள் மரணமடைவார்கள், அவர்களது வாழ்க்கை பொருளற்றது மற்றும் மதிப்பற்றது என்று நம்புகிறார்கள். மனித வாழ்க்கை ஒரு கனவுதான், அந்தக் கனவில் துன்பமும் ம்கிழ்ச்சியும் வந்து போகின்றன. இன்று, மக்கள் தேவனுக்காக வழ்கின்றனர், ஆனால் அவர்கள் மனுஷனின் உலகத்தில் ஜீவிப்பதால், அவர்களது அன்றாட வாழ்க்கை வெறுமையாகவும் விலைமதிப்பற்றும் உள்ளது, இது தேவனில் மகிழ்வது கடந்து போகும் ஆறுதலே என்று எல்லா ஜனங்களையும் அறிய வைக்கிறது—ஆனால் அவர்கள் தேவனில் மகிழ்ச்சியாக இல்லாத போது அவர்கள் தேவனை விசுவாசித்தாலும் இன்னும் மாம்சத்தில் வாழ்கிறார்கள், இதில் என்ன பொருள் இருக்கிறது? மாம்சத்தில் மனுஷனுக்கு எல்லாமே வெறுமையாய் இருக்கிறது. மனித வாழ்க்கையின் ஏற்றதாழ்வுகளை அனுபவித்த பின்னர், முதுமை வரும்போது மனுஷனுடைய முடி வெண்மையாகிறது, அவனுடைய முகத்தில் முற்றிலுமாக சுருக்கம் விழுகிறது, கைகளில் தோல் தடிப்புகள் உருவாகின்றன. ஏற்கெனவே அவன் பெரும் விலைக்கிரயம் செலுத்தியிருந்தாலும், அவன் நடைமுறையில் ஒன்றையும் அடையவில்லை. இவ்வாறு, என் வார்த்தைகள் இன்னொரு படி மேலே செல்கின்றன: மாம்சத்தில் வாழ்பவர்களுக்கு எல்லாமே வெறுமைதான். இதில் சந்தேகமே இல்லை, மேலும் நீ இதை விவரமாக ஆராயத் தேவையில்லை. காலந்தோறும் தேவன் பேசியிருக்கும் மனுஷனுடைய உண்மையான முகம் இதுவே. மனுஷனுடைய பலவீனத்தின் காரணமாக தேவன் இந்த வார்த்தைகளைத் தவிர்க்கவில்லை. ஆனால் தமது மூல திட்டத்தின்படி அப்படியே செயலாற்றுகிறார். ஒருவேளை, சில வார்த்தைகள் ஜனங்களுக்கு ஆதரவையும் புரிதலையும் வழங்கலாம், மற்றும் மக்களை வேண்டுமென்றே மரணச் சூழலில் வாழ வைக்க ஒருவேளை சிலர் இதற்கு எதிராகவும் செயல்படலாம்—மேலும் துல்லியமாகச் சொல்லப்போனால் அவர்கள் இதனாலேயே துன்பம் அடைகிறார்கள். இப்படி, வேண்டுமென்றே மக்களைத் தவறாக வழிநடத்த ஒருவேளை தேவன் “வெற்று நகர உத்தியை”[ஆ] அமைக்கலாம், ஆனால் அவர்களால் இதைப் பார்க்கவே முடியாது, அவர்கள் இருளிலேயே இருக்கிறார்கள். இருந்தாலும், எல்லாம் தேவன் தம்முடைய கரத்திலேயே இருக்கிறது, மேலும் மக்கள் இதை அறிந்தாலும், அவர்களால் இதற்கெதிராக எப்படி தற்காத்துக்கொள்ள முடியும்? இவ்வாறு, சிட்சையின் ஆபத்தில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது—அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் செய்யக் கூடியது எல்லாம் தேவனின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதுதான்—மேலும் இது தேவன் அவர்களைப் பிடித்துக்கொண்டு போக விடாததனால்தானே? தேவனுடைய அச்சுறுத்தல்களின் கீழேயே மக்களால் இயற்கையின் போக்கைப் பின்பற்ற முடிகிறது—இதுதானே உண்மை? தேவனுடைய ஏற்பாடுகள் இல்லை என்றால், ஜனங்கள் எவ்வாறு விருப்பமுடன் தோல்வியை ஒத்துக்கொள்ள முடியும்? அது ஒரு நகைச்சுவையாக இருக்காதா? மனுஷ வாழ்க்கை வெறுமையானதாக இருந்தாலும், தங்கள் வாழ்க்கை வசதியாக இருக்கும்போது, யார் அமைதியாக மனிதனின் உலகை விட்டுவிட்டு தேவனைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் இறங்க விரும்புவார்கள்? நிர்க்கதியின் மத்தியில் மக்கள் சாகிறார்கள்—தாங்கள் விரும்பும் எல்லாம் தங்களிடம் இருக்கும் நிறைவின் மத்தியில் எப்போதாவது யாராவது இறந்திருக்கிறார்களா? வானத்தில் இருந்து இறங்கிய ஒரு “நட்சத்திரமே” இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும். மூன்றாம் வானத்தில் அது அனுபவித்த வாழ்க்கையோடு ஒப்பிடும்போது, உலக வாழ்க்கை பாதாளத்தில் வாழ்வது போல்தான் இருக்கும்—இத்தகைய சூழலில் மட்டுமே அது மரணமடைய விரும்பலாம். இருப்பினும் வானத்தில் இன்று நட்சத்திரமாக இருப்பது யார்? எனக்கும் கூட இது பற்றிய “தெளிவில்லை”. நாம் சுற்றிலும் தேடி ஒருவனைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்ப்போம். அவன் கிடைத்தால், மேலே உள்ள என்னுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப செயலாற்ற அவன் விரும்புகிறானா என்பதைக் கேட்க உதவுமாறு நான் ஜனங்களிடம் கேட்கிறேன். ஆனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னிடம் ஓர் எச்சரிக்கை இருக்கிறது: இறப்பதற்காக உங்களில் ஒருவரும் “கதாநாயகனாக” நடந்து கொள்ளவோ, தன்னிச்சையாக விரும்பவோ வேண்டாம், நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா?

அடிக்குறிப்புகள்:

அ. “ஒருவருடைய முழங்கையை வெளிப்புறமாக நீட்டுதல்” என்பது ஒரு சீன மரபுத்தொடர். ஒரு நபர் பெற்றோர், குழந்தைகள், உறவினர்கள், உடன்பிறப்புகள் போன்ற தனக்கு நெருக்கமாக இருக்கும் மக்களைப் பயன்படுத்தி பிறருக்கு உதவுதல்.

ஆ. “வெற்று நகர உத்தி” என்பது பழங்கால சீனத்தின் முப்பத்தாறு உத்திகளில் 32வது ஆகும். எதிரியை ஏமாற்றுவதற்காக ஆயத்தம் இல்லாமல் இருப்பதை மறைக்க ஏமாற்றுத்தனமான ஒரு துணிவான முன் வரிசையை அமைப்பது இந்த உத்தியில் அடங்கும்.

முந்தைய: அத்தியாயம் 35

அடுத்த: அத்தியாயம் 38

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக