பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி

நீங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக வெகுமதியைப் பெறவும் மற்றும் தேவனால் தயவைப் பெறவும் விரும்புகிறீர்கள். எல்லோரும் தேவனை விசுவாசிக்கத் தொடங்கும் போது எல்லோரும் இதுபோன்ற காரியங்களை நம்புகிறார்கள், ஏனென்றால் எல்லோரும் உயர்ந்த காரியங்களைத் தேடுவதில் ஆர்வமாக முன்பே எண்ணம் கொண்டிருக்கிறார்கள், யாரும் மற்றவர்களுக்குப் பின்தங்கியிருக்க விரும்புவதில்லை. இப்படித் தான் ஜனங்கள் இருக்கிறார்கள். துல்லியமாக இந்த காரணத்திற்காகத்தான், பரலோகத்திலுள்ள தேவனுக்கு உகந்தவராக இருக்க உங்களில் அநேகர் தொடர்ந்து முயற்சிக்கிறீர்கள், ஆனாலும், உண்மையாகவே, தேவன் மீதான உங்கள் விசுவாசமும், நேர்மையும் உங்கள் மீதான உங்களுடைய விசுவாசத்தையும், நேர்மையையும் விட மிகக் குறைவு. இதை நான் ஏன் சொல்லுகிறேன்? ஏனென்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை நான் ஒப்புக் கொள்ளவேயில்லை, ஏனென்றால் உங்கள் இருதயங்களில் தேவன் இருப்பதை நான் மறுக்கிறேன். அதாவது, நீங்கள் தொழுதுகொள்ளும் தேவன், நீங்கள் போற்றும் தெளிவற்ற தேவன் என்பவர் இல்லவே இல்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லக் காரணம், நீங்கள் மெய்யான தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசத்திற்குக் காரணம் உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் விக்கிரகமே. இதற்கிடையில், என்னைப் பொருத்தமட்டில் நீங்கள் பெரியவருமல்ல சிறியவருமல்ல என்று பார்க்கும் தேவனை, நீங்கள் வெறுமனே வார்த்தைகளாலேயே ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள் என்று நான் கூறும்போது, நீங்கள் மெய்யான தேவனிடமிருந்து தொலைவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அப்பொழுது அந்தத் தெளிவற்ற தேவன் அருகில் இருப்பதுபோலத் தெரிகிறது. “பெரியவருமல்ல” என்று நான் கூறும்போது, இந்த நாளில் நீங்கள் விசுவாசிக்கிற தேவன் எப்படிப் பெரிய திறன் இல்லாத ஒரு நபராக, மிக உயர்ந்தவராக இல்லாத ஒரு நபராகத் தோன்றுகிறார் என்பதைக் குறிக்கிறது. “சிறியவருமல்ல” என்று நான் கூறும்போது, இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த நபரால் காற்றை வரவழைத்து மழையைக் கட்டளையிட முடியாது என்றாலும், வானங்களையும் பூமியையும் உலுக்கும் கிரியையைச் செய்ய தேவனின் ஆவியானவரை அவர் அழைத்து, ஜனங்களை முற்றிலும் குழப்பத்தில் ஆழ்த்த முடிகிறது. வெளிப்புறமாக, நீங்கள் எல்லோரும் பூமியில் இந்தக் கிறிஸ்துவுக்கு மிகவும் கீழ்ப்படிந்தவர்களாகத் தோற்றமளிக்கிறீர்கள், ஆனாலும் சாராம்சத்தில், நீங்கள் அவரை விசுவாசிக்கவும் இல்லை, நீங்கள் அவரை நேசிக்கவுமில்லை. அதாவது, நீங்கள் உண்மையிலேயே விசுவாசிக்கும் ஒன்று உங்கள் சுய உணர்வுகளின் தெளிவற்ற தேவனே, மற்றும் நீங்கள் உண்மையிலேயே நேசிக்கும் ஒன்று நீங்கள் இரவும் பகலும் ஏக்கம் கொண்டிருக்கிற தேவன், ஆனால் இன்னும் நேரில் பார்த்திருக்கவில்லை. இந்தக் கிறிஸ்துவிடமான, உங்கள் விசுவாசம் ஒரு சிறு பகுதியே தவிர, உங்கள் அன்பு ஒன்றும் இல்லை. விசுவாசம் என்பது நம்பிக்கை மற்றும் சார்ந்திருத்தல் ஆகும். அன்பு என்றால் ஒருவரின் இருதயத்தில் ஒருபோதும் பிரிந்து செல்லாத அர்ப்பணிப்பு மற்றும் போற்றுதல் ஆகும். ஆயினும், இன்றைய தினத்தின் கிறிஸ்துவின் மீதான உங்களுடைய விசுவாசமும் அன்பும் இதற்கு மிகக் குறைவாக இருக்கிறது. விசுவாசம் என்று வரும்போது, நீங்கள் அவரை எவ்வாறு விசுவாசிக்கிறீர்கள்? அன்பு என்று வரும்போது, நீங்கள் அவரை எந்த முறையில் நேசிக்கிறீர்கள்? அவருடைய மனநிலையைக் குறித்த எந்தப் புரிதலும் உங்களுக்கு இல்லை, அவருடைய சாராம்சத்தைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாது, எனவே எப்படி அவர் மீது நீங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள்? அவர் மீதுள்ள உங்கள் விசுவாசத்தின் யதார்த்தம் எங்கே? நீங்கள் அவரை எப்படி நேசிக்கிறீர்கள்? அவர் மீதான உங்கள் அன்பின் யதார்த்தம் எங்கே?

அநேகர் இன்றுவரை தயங்காமல் என்னைப் பின்தொடர்ந்துள்ளனர். எனவே, கடந்த அநேக ஆண்டுகளாக நீங்கள் அதிக சோர்வைச் சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடைய உள்ளார்ந்த குணாதிசயத்தையும் மற்றும் பழக்கவழக்கங்களையும் நான் தெள்ளத் தெளிவுடன் புரிந்துகொண்டிருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடனும் தொடர்புகொள்வது என்பது வியக்கத்தக்க நிலையில் கடினமானதாக இருக்கின்றது. பரிதாபம் என்னவென்றால், நான் உங்களைப் பற்றி அதிகம் புரிந்து கொண்டிருந்தாலும், நீங்கள் என்னைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை. ஒரு குழப்பமான தருணத்தில் ஒருவரின் தந்திரத்தை நம்பி நீங்கள் அதற்குள் சிக்கியிருக்கிறீர்கள் என்று ஜனங்கள் சொல்வதில் ஆச்சரியமில்லை. உண்மையில், நீங்கள் என் மனநிலையைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை, என் மனதில் இருப்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இன்று, என்னைக் குறித்த உங்கள் தவறானப் புரிதல்கள் வேகமாகப் பெருகுகின்றன, மற்றும் என் மீதான உங்கள் விசுவாசம் ஒரு குழப்பமான விசுவாசமாகவே உள்ளது. நீங்கள் என் மீது விசுவாசம் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் அனைவரும் எனக்கு உகந்தவர்களாக இருக்கவும், எனனை நோக்கி கெஞ்சவும் முயற்சிக்கிறீர்கள் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். எனக்கு வெகுமதி அளிக்கக் கூடியவர்களை நான் பின்பற்றுவேன், அவர் தேவனாகவோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தேவனாகவோ இருந்தாலும், பெரிய பேரழிவுகளிலிருந்து தப்பிக்க யார் எனக்கு உதவுகிறார்களோ, அவர்களை நான் விசுவாசிப்பேன் என்னும் உங்கள் நோக்கங்கள் மிகவும் எளிமையானவை. இவை எதைக் குறித்துமே எனக்கு எந்தக் கவலையும் இல்லை. உங்களிடையே இதுபோன்றோர் அநேகர் உள்ளனர், இந்த நிலை மிகவும் கடுமையானது. ஒரு நாள், உங்களில் எத்தனை பேர் கிறிஸ்துவின் சாராம்சத்தைக் குறித்த நுண்ணறிவால் விசுவாசத்தைக் கொண்டிருந்தார்கள் என்று கண்டறியும் ஒரு சோதனை இருந்திருந்தால், உங்களில் ஒருவர் கூட எனக்குத் திருப்திகரமாக இருந்திருக்கமாட்டீர்களோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியைக் கருத்தில் கொள்வது புண்படுத்தாது. நீங்கள் விசுவாசிக்கிற தேவன் என்னிடமிருந்து மிகவும் வேறுபட்டவர், இது அவ்வாறு இருப்பதால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் சாராம்சம் என்ன? உங்கள் தேவன் என்று அழைக்கப்படுவதை நீங்கள் எவ்வளவு அதிகமாக விசுவாசிக்கிறீர்களோ, அவ்வளவு தூரமாக நீங்கள் என்னிடமிருந்து விலகிவிடுவீர்கள். அப்படியானால், இந்தப் பிரச்சினையின் சாராம்சம் என்ன? உங்களில் யாரும் இதுபோன்ற கேள்வியைச் சிந்தித்துப் பார்த்ததில்லை என்பது உறுதியாகிறது, ஆனால் அதனுடைய ஈர்ப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? இந்த வழியில் தொடர்ந்து விசுவாசிப்பதன் விளைவுகளைப் பற்றி நீங்கள் சிந்தித்துள்ளீர்களா?

இன்று, நீங்கள் அநேகப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள், உங்களில் ஒருவர் கூட பிரச்சனையைத் தீர்ப்பதில் திறமையானவர் அல்ல. இந்த நிலைமை தொடர்ந்தால், இழப்பைச் சந்திக்கப்போகும் ஒரே நபர் நீங்கள் தான். பிரச்சனைகளை அடையாளம் காண நான் உங்களுக்கு உதவுவேன், ஆனால் அவற்றைத் தீர்ப்பது உங்களுடையது ஆகும்.

மற்றவர்களை சந்தேகிக்காதவர்களிடத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், மற்றும் சத்தியத்தை உடனடியாக ஏற்றுக்கொள்பவர்களே எனக்கு வேண்டும். இந்த இரண்டு விதமான ஜனங்களை நோக்கி நான் மிகுந்த அக்கறை காட்டுகிறேன், ஏனென்றால் என் பார்வையில் அவர்கள் நேர்மையான ஜனங்கள். நீ வஞ்சகனாக இருந்தால், நீ எல்லா மக்களிடமும் காரியங்களிடமும் எச்சரிக்கையாக இருப்பாய், சந்தேகப்படுவாய், இதனால் என் மீது உன் விசுவாசம் சந்தேகம் என்னும் அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும். அத்தகைய விசுவாசத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையான விசுவாசத்தின் குறைபாட்டால், நீ உண்மையான அன்பிலிருந்து இன்னும் அதிகமாக விலகிவிட்டாய். தேவனைச் சந்தேகிக்கவும், அவரைப் பற்றி விருப்பப்படி ஊகிக்கவும் நீ ஆளாகிறாய் என்றால், நீ சந்தேகமின்றி, எல்லா ஜனங்களைக் காட்டிலும் மிகவும் வஞ்சகனாக இருக்கிறாய். மன்னிக்க முடியாத பாவம், அற்பமான குணம், நியாயமும் பகுத்தறிவும் இல்லாமை, நீதி உணர்வு இல்லாமை, பொல்லாத தந்திரங்களைக் கொண்டிருத்தல், துரோகம் மற்றும் கபடம், தீமை மற்றும் இருள் ஆகியவற்றால் மகிழ்தல், மற்றும் பலவற்றால் தேவன் மனிதனைப் போல இருக்க முடியுமா என்று நீ ஊகிக்கிறாய். ஜனங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் இருப்பதற்கு தேவனைக் குறித்த சிறிதளவு அறிவும் இல்லாததே காரணம் இல்லையா? இத்தகைய விசுவாசம் பாவத்திற்குக் குறைவானதல்ல! என்னைப் பிரியப்படுத்துபவர்கள் துல்லியமாக முகஸ்துதி செய்து தன் காரியத்திற்காகக் கெஞ்சுபவர்கள் என்றும், அத்தகைய திறமைகள் இல்லாதவர்கள் தேவனின் வீட்டில் வரவேற்கப்படாதவர்களாக இருப்பார்கள் என்றும், அங்கே தங்கள் இடத்தை இழக்க நேரிடும் என்றும் சிலர் நம்புகிறார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பெற்ற அறிவு இது மட்டும் தானா? இதைத்தான் நீங்கள் பெற்றுள்ளீர்களா? என்னைக் குறித்த உங்கள் அறிவு இந்தத் தவறான புரிதல்களோடு நிற்காது. தேவனின் ஆவியானவருக்கு எதிரான உங்கள் தூஷணமும் பரலோகத்தை இழிவுபடுத்துவதும் இன்னும் மோசமானது. இதனால்தான், உங்களுடையதைப் போன்ற விசுவாசம் உங்களை என்னிடமிருந்து மேலும் விலகக் காரணமாகி, எனக்கு எதிராக அதிக எதிர்ப்பாக இருக்கும் என்று நான் சொல்கிறேன். அநேக வருடங்களாக செய்த கிரியை முழுவதுமாக, நீங்கள் அநேக சத்தியங்களைக் கண்டிருக்கிறீர்கள், ஆனால் என் காதுகள் கேட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் சத்தியத்தை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள்? நீங்கள் சத்தியத்திற்கான விலைக்கிரயத்தைச் செலுத்தத் தயாராக உள்ளீர்கள் என்று நீங்கள் அனைவரும் விசுவாசிக்கிறீர்கள், ஆனால் உங்களில் எத்தனை பேர் சத்தியத்திற்காக உண்மையிலேயே துன்பப்பட்டிருக்கிறீர்கள்? உங்கள் இருதயங்களில் அநீதியைத் தவிர வேறொன்றுமில்லை, இது எல்லோரும், அவர்கள் யாராக இருந்தாலும் சமமாக வஞ்சகர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், மனுவுருவான தேவன் ஒரு சாதாரண மனிதனைப் போலவே அன்பான இருதயம் அல்லது கருணைமிக்க அன்பு இல்லாமல் இருக்க முடியும் என்ற அளவிற்குக் கூட நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அதற்கும் மேலாக, ஒரு உன்னத குணமும், இரக்கமுள்ள, கருணைமிக்க இயல்பும் பரலோகத்தில் உள்ள தேவனுக்குள் மட்டுமே இருப்பதாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அத்தகைய ஒரு பரிசுத்தவான் இல்லை, பூமியில் இருளும் தீமையும் மட்டுமே ஆட்சி செய்கின்றன, அதே சமயம் ஜனங்கள் தங்களால் உருவாக்கப்பட்ட நல்ல அழகான, பிரபலமான நபருக்கான ஏக்கத்தை ஒப்படைப்பதே தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்கள் மனதில், பரலோகத்தில் உள்ள தேவன் மிகவும் உயர்ந்தவர், நீதியுள்ளவர், பெரியவர், தொழுதுகொள்வதற்கும் போற்றுதலுக்கும் தகுதியானவராக இருக்கிறார். இதற்கிடையில், பூமியிலுள்ள இந்த தேவன், பரலோகத்தில் உள்ள தேவனுக்கு மாற்றாகவும் கருவியாகவும் இருக்கிறார். இந்த தேவன் பரலோகத்தின் தேவனுக்குச் சமமாக இருக்க முடியாது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அவரை அதே சுவாசம் என்று குறிப்பிடவும் முடியாது. தேவனின் மகத்துவம் மற்றும் மரியாதை என்று வரும்போது, அவை பரலோகத்திலுள்ள தேவனின் மகிமைக்கு உரியவை, ஆனால் அது இயல்பு மற்றும் மனிதனின் சீர்கேடு என்று வரும்போது, அவை பூமியில் உள்ள தேவனுக்கு ஒரு பங்கைக் கொண்டிருக்கும் பண்புகளாகும். பரலோகத்தில் உள்ள தேவன் நித்தியமாக உயர்ந்தவர், அதே நேரத்தில் பூமியில் உள்ள தேவன் என்றென்றும் முக்கியமற்றவர், பலவீனமானவர், திறமையற்றவர். பரலோகத்தில் உள்ள தேவன் உணர்ச்சிக்கு ஆளாகாமல் நீதியுடன் மட்டுமே இருக்கிறார், அதே நேரத்தில் பூமியில் உள்ள தேவன் சுயநலமான நோக்கங்களை மட்டுமே கொண்டிருக்கிறார், எந்த நியாயமும் பகுத்தறிவும் இல்லாமல் இருக்கிறார். பரலோகத்தில் உள்ள தேவனுக்கு சிறிதளவும் கபடத்தனம் இல்லை, என்றென்றும் உண்மையுள்ளவர், பூமியில் உள்ள தேவன் எப்போதும் நேர்மையற்ற பகுதியைக் கொண்டிருக்கிறார். பரலோகத்தில் உள்ள தேவன் மனிதனை மிகவும் நேசிக்கிறார், அதே நேரத்தில் பூமியில் உள்ள தேவன் மனிதன் மீது போதிய அக்கறை காட்டவில்லை, அவனை முற்றிலுமாக புறக்கணிக்கவும் செய்கிறார். இந்தத் தவறான அறிவு நீண்ட காலமாக உங்கள் இருதயங்களுக்குள் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இது எதிர்காலத்திலும் நிலைத்திருக்கக்கூடும். நீங்கள் கிறிஸ்துவின் அனைத்து கிரியைகளையும் அநியாயக்காரர்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கிறீர்கள், மேலும் அவருடைய எல்லாக் கிரியைகளையும், அவருடைய அடையாளத்தையும் சாராம்சத்தையும் துன்மார்க்கரின் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு முன் வருபவர்களால் செய்யப்படாத ஒரு கடுமையான தவறைச் செய்துள்ளீர்கள். அதாவது, நீங்கள் பரலோகத்திலுள்ள உயர்ந்த தேவனுக்கு மட்டுமே தலையில் கிரீடம் வைத்து ஊழியம் செய்கிறீர்கள், மிகவும் முக்கியமற்றவராக நீங்கள் கருதும் உங்களால் பார்க்க முடியாத தேவனை நீங்கள் எப்போதும் கவனிப்பதில்லை. இது உங்களுடைய பாவம் அல்லவா? தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் மீறுதலுக்கு இது ஒரு சிறந்த உதாரணம் அல்லவா? நீங்கள் பரலோகத்திலுள்ள தேவனை ஆராதிக்கின்றீர்கள். நீங்கள் உயர்ந்த சொரூபங்களை வணங்குகிறீர்கள், அவர்களின் சொல்லாற்றலுக்காகப் புகழ்பெற்றவர்களை மதிக்கிறீர்கள். உன் கைகளைச் செல்வங்களால் நிரப்புகிற தேவனால் நீ மகிழ்ச்சியுடன் கட்டளையிடப்படுகிறாய், மேலும் உன் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றக்கூடிய தேவனுக்காக ஏங்குகிறாய். இந்த உயர்ந்தவர் அல்லாதவரே நீ வணங்காத ஒரே தேவன் ஆவார். நீங்கள் வெறுக்கிற ஒரே காரியம், எந்த மனிதனும் உயர்வாகக் கருதாத இந்தத் தேவனோடு இணைந்திருப்பதுதான். நீ செய்ய விரும்பாத ஒரே காரியம், உனக்கு ஒருபோதும் ஒரு காசும் கொடுக்காத இந்த தேவனைச் சேவிப்பதே ஆகும், மேலும் உன்னை அவருக்காக ஏங்க வைக்க முடியாத ஒரே ஒருவர் இந்த அன்பற்ற தேவன் ஆவார். இந்த வகையான தேவனால் உன் எல்லைகளை விரிவுபடுத்தவும், நீ ஒரு புதையலைக் கண்டுபிடித்ததைப் போல உணர வைக்கவும், நீ விரும்புவதை நிறைவேற்றவும் முடியாது. அப்படியானால், நீ அவரை ஏன் பின்பற்றுகிறாய்? இது போன்ற கேள்விகளைப் பற்றி நீ சிந்தித்திருக்கிறாயா? நீ செய்வது இந்தக் கிறிஸ்துவைப் புண்படுத்தாது. மிக முக்கியமாக, அது பரலோகத்தில் உள்ள தேவனைப் புண்படுத்துகிறது. இது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் நோக்கம் அல்ல என்று நான் நினைக்கிறேன்!

உங்களுக்குள் தேவன் மகிழ்ந்திருக்க நீங்கள் ஏங்குகிறீர்கள், ஆனாலும் நீங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். இங்கே பிரச்சனை என்ன? நீங்கள் அவர் மீது முழு விசுவாசம் வைத்திருக்க அவருடைய வார்த்தைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் அவருடைய கையாளுதலையோ அல்லது கிளைநறுக்குதலையோ அல்ல, அவருடைய ஒவ்வொரு ஏற்பாட்டையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அப்படியானால், இங்கே பிரச்சனை என்ன? கடைசி ஆய்வில், உங்கள் விசுவாசம் ஒருபோதும் ஒரு கோழிக் குஞ்சை உருவாக்க முடியாத ஒரு வெற்று முட்டைக் கூடாகும். உங்கள் விசுவாசம் உங்களுக்கு சத்தியத்தைக் கொண்டு வரவில்லை அல்லது உங்களுக்கு ஜீவனைக் கொடுக்கவில்லை, மாறாக உங்களுக்கு ஒரு மாயையான வாழ்வாதாரம் மற்றும் நம்பிக்கை குறித்த உணர்வை அளித்துள்ளது. இந்த வாழ்வாதாரம் மற்றும் நம்பிக்கை குறித்த உணர்வுதான் தேவனை விசுவாசிப்பதில் உங்கள் நோக்கமாயிருக்கிறது, சத்தியமும் ஜீவனும் அல்ல. ஆகவே, தேவன்மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் முறை, அடிமைத்தனம் மற்றும் வெட்கமின்மை ஆகியவற்றின் மூலம் தேவனுக்கு உகந்தவராக முயற்சிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை, இதை எந்த வகையிலும் உண்மையான விசுவாசமாகக் கருத முடியாது. இது போன்ற விசுவாசத்தால் ஒரு கோழிக் குஞ்சு எப்படிப் பிறக்கக் கூடும்? வேறு விதமாகச் சொல்வதானால், இது போன்ற விசுவாசம் என்னத்தைச் சாதிக்க முடியும்? தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் நோக்கம், உங்கள் சொந்த நோக்கங்களை அடைந்திட அவரைப் பயன்படுத்துவதாகும். மேலும், இது தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் மீறுதல் குறித்த உண்மை அல்லவா? நீங்கள் பரலோகத்தில் தேவன் இருப்பதை விசுவாசிக்கிறீர்கள், பூமியில் தேவன் இருப்பதை மறுக்கிறீர்கள், ஆனாலும் உங்கள் கருத்துக்களை நான் அங்கீகரிக்கவில்லை. தரையில் கால்களை வைத்து, பூமியிலுள்ள தேவனைச் சேவிப்பவர்களை மட்டுமே நான் பாராட்டுகிறேன், ஆனால் பூமியில் இருக்கும் கிறிஸ்துவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்ல. அத்தகையவர்கள் பரலோகத்திலுள்ள தேவனிடம் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், கடைசியில் அவர்கள் துன்மார்க்கரைத் தண்டிக்கும் என் கைக்குத் தப்பிக்க மாட்டார்கள். இந்த ஜனங்கள் துன்மார்க்கர்கள். அவர்கள் தேவனை எதிர்க்கும் பொல்லாதவர்கள், அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதில்லை. நிச்சயமாக, அவர்களின் எண்ணிக்கை கிறிஸ்துவைத் தெரியாத, மேலும் ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் உள்ளடக்கியுள்ளது. நீ பரலோகத்திலுள்ள தேவனுக்கு விசுவாசமாக இருக்கும் வரை நீ விரும்பியபடி கிறிஸ்துவுக்காகச் செயல்பட முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? தவறு! கிறிஸ்துவைக் குறித்த உன் அறியாமை பரலோகத்தில் உள்ள தேவனை அறியாமல் இருப்பது ஆகும். பரலோகத்திலுள்ள தேவனிடம் நீ எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், அது வெறும் பேச்சும் மற்றும் பாசாங்கும் தான், ஏனென்றால் பூமியிலுள்ள தேவன் மனிதன் சத்தியத்தைப் பெறுவதிலும் அதிக ஆழமான அறிவைக் கொண்டிருப்பதிலும் கருவியாக இருக்கிறார், ஆனால் அதைவிட அதிகமாக மனிதனைத் தண்டித்தல், பின்னர் துன்மார்க்கரைத் தண்டிப்பதற்கான உண்மைகளைப் பெறுவதில் கருவியாக இருக்கிறார். இங்குள்ள நன்மை பயக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை நீ புரிந்து கொண்டாயா? நீ அவற்றை அனுபவித்திருக்கிறாயா? ஒரு நாள் இந்த உண்மையை நீங்கள் விரைவில் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தேவனை அறிய, நீ பரலோகத்தில் உள்ள தேவனை மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, பூமியிலுள்ள தேவனையும் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் முன்னுரிமைகளில் குழப்பமடைய வேண்டாம் அல்லது இரண்டாம் நிலையானது முதன்மையானதை மீற அனுமதிக்காதீர்கள். இந்த வழியில் மட்டுமே உன்னால் உண்மையிலேயே தேவனோடு ஒரு நல்ல உறவை உருவாக்க முடியும், தேவனிடம் நெருங்கி வர முடியும், மேலும் உன் இருதயத்தை அவருக்கு அருகில் கொண்டுவர முடியும். நீ அநேக ஆண்டுகளாக விசுவாசமாக இருந்திருந்தால், என்னுடன் நீண்ட காலமாக இணைந்திருந்தும், என்னிடமிருந்து தொலைவில் இருந்தால், நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் நீ அடிக்கடி தேவனின் மனநிலையைப் புண்படுத்துகிறாய், உன் முடிவு கணக்கிட மிகவும் கடினமாக இருக்கும். என்னுடன் அநேக ஆண்டுகளாக இணைந்திருப்பது உன்னை மனிதத்தன்மையையும் சத்தியத்தையும் கொண்ட ஒரு நபராக மாற்றத் தவறியது மட்டுமல்லாமல், மேலும், உன் பொல்லாத வழிகளை உன் சுபாவத்துக்குள் பதித்திருந்தால், உங்களுக்கு முன்பு போல இரு மடங்கான அகந்தை மட்டுமல்லாமல், என்னைக் குறித்த உங்கள் தவறானப் புரிதல்களும் பெருகிவிட்டன, அதாவது நீ என்னை உன் சிறிய சேவகனாகக் கருதுகிறாய், அப்படியானால் நான் சொல்கிறேன், உன் நோய் இனி தோல் ஆழத்தில் இல்லாமல், உன் எலும்புகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. உன் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக நீ காத்திருக்க வேண்டும் என்பதே இன்னும் மீதமிருக்கிறது. நீ உன் தேவனாக இருக்கும்படி என்னை மன்றாட வேண்டியதில்லை, ஏனென்றால் நீ மரணத்திற்குத் தகுதியான பாவத்தை, மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்துள்ளாய். நான் உன்மீது இரக்கம் காட்ட முடிந்தாலும், பரலோகத்தில் உள்ள தேவன் உன் ஜீவனை எடுக்கும்படி வலியுறுத்துவார், ஏனென்றால் தேவனின் மனநிலைக்கு எதிரான உன் குற்றம் சாதாரண பிரச்சினை அல்ல, ஆனால் மிகவும் கடுமையான இயல்புடையது. நேரம் வரும்போது, உன்னிடம் முன்பே சொல்லாததற்காக என்னைக் குறை கூற வேண்டாம். நீ பூமியிலுள்ள தேவனான கிறிஸ்துவுடன் ஒரு சாதாரண மனிதனாக இணைந்திருக்கும்போது, அதாவது, இந்த தேவன் ஒரு நபரைத் தவிர வேறில்லை என்று நீ விசுவாசிக்கும்போது, அப்போது நீ அழிந்துவிடுவாய் என்ற கருத்துக்கே இது மீண்டும் வருகிறது. இது உங்கள் அனைவருக்குமான எனது ஒரே புத்திமதியாகும்.

முந்தைய: தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது

அடுத்த: மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக