அத்தியாயம் 54

ஒவ்வொரு திருச்சபையின் சூழ்நிலையும் எனக்கு நன்றாகத் தெரியும். எனக்குப் புரியாது என்றோ அல்லது அவற்றைப் பற்றிய தெளிவு இல்லை என்றோ நினைக்க வேண்டாம். திருச்சபைகளின் பல்வேறு ஜனங்களைப் பொறுத்தவரை, எனக்கு இன்னும் தெளிவானப் புரிதலும் அறிவும் உள்ளது. இப்போது உனக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது என் அவசரச் சித்தமாகும், எனவே நீ விரைவில் முதிர்நிலைக்கு வளர்ச்சியடைவாய்; எனவே நீ எனக்குப் பயனுள்ளவனாய் இருக்கும் நாள் விரைவில் வரக்கூடும்; மேலும், அதனால் உங்களின் செயல்கள் என் ஞானத்தால் நிறைந்திருக்கும், நீங்கள் எங்கிருந்தாலும் உங்களால் தேவனை வெளிப்படுத்த முடியும். இந்த வழியில், எனது இறுதி நோக்கம் நிறைவேறும். என் குமாரர்களே! என் சித்தத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நான் உங்களுக்குக் கற்பிக்கும்போது நான் உங்களின் கைகளைப் பிடிக்கும்படி செய்ய வேண்டாம். என் சித்தத்தைப் புரிந்து கொள்ளவும், விஷயங்களின் அடிப்படை அம்சத்தைப் பார்க்கவும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இது, நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும், விரல்களின் சொடக்கு போல் எளிதாகக் கையாள உங்களுக்கு உதவும். உங்களின் பயிற்சியில், முதல் முறையில் உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம்—ஆனால், இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை மற்றும் பல முறைகளுக்குப் பின், இறுதியில் உங்களால் என் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

உங்களின் வார்த்தைகள் எப்போதும் புரிந்து கொள்ள முடியாத இயல்பு கொண்டவை ஆகும். இதை நீங்கள் ஞானம் என்று நம்புகிறீர்கள், இல்லையா? சில நேரங்களில், உங்களின் வார்த்தைகள் கீழ்ப்படியாததாய் இருக்கின்றன; சில நேரங்களில், நீங்கள் கேலியான முறையில் பேசுகிறீர்கள்; மற்றும் சில நேரங்களில், நீங்கள் மனிதக் கருத்துகள் மற்றும் பொறாமையின் கூறுகளுடன் பேசுகிறீர்கள்…. மொத்தத்தில், மற்றவர்களுக்கு வாழ்க்கையை வழங்குவது எப்படி அல்லது அவர்களின் நிலைமைகளைப் புரிந்து கொள்வது எப்படி என்று தெரியாமல், ஆனால் நீங்கள் ஏனோ தானோவென்று தொடர்பு கொண்டு நிலையில்லாமல் பேசுகிறீர்கள். உங்களின் சிந்தனை தெளிவில்லாமல் இருக்கிறது, எது ஞானம் மற்றும் எது ஏமாற்றுவது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் எப்படிக் குழப்பத்துடன் இருக்கிறீர்கள்! நீங்கள் ஏமாற்றுதலையும், ஒழுங்கின்மையையும் ஞானம் என்று கருதுகிறீர்கள்; இது என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவருகிறது அல்லவா? இது எனக்கு எதிரான தூஷணம் அல்லவா? இது எனக்கு எதிராக ஒரு பொய்யான குற்றச்சாட்டைக் கொண்டுவருகிறது அல்லவா? எனவே, நீங்கள் தேடும் இலக்கு என்ன? நீங்கள் அதைப் பற்றிக் கவனமாகச் சிந்தித்தீர்களா? இந்த விஷயத்தில் நீங்கள் ஏதாவது தேடுதலை மேற்கொண்டீர்களா? நான் உன்னிடம் கூறுகிறேன், என் சித்தம் தான் நீங்கள் தேடும் திசை மற்றும் குறிக்கோளாகும். இது அவ்வாறு இல்லை என்றால், அனைத்தும் வீணாகிவிடும். என் சித்தத்தைப் பற்றி அறியாதவர்கள் எப்படித் தேடுவதென்று தெரியாதவர்கள், கைவிடப்படுபவர்கள், புறம்பே தள்ளப்படுவார்கள்! தெளிவாக, என் சித்தத்தைப் புரிந்து கொள்வது தான் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் ஆகும். பணிகளில் மிகவும் அவசரமானது இதுவாகும், அது எந்தவொரு தாமதத்தையும் ஏற்றுக் கொள்ளாது! பணிக்கு உங்கள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக நான் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம்! முழு நாட்களையும் மந்தமான உணர்வின்மையின் ஒரு மங்கலான நிலையில் நீங்கள் செலவிடுகிறீர்கள். எவ்வளவு கேலிக் கூத்தானது! உங்களின் குழப்பம் மிகுந்த மனது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது; நீங்கள் என் சித்தத்தைக் கருத்தில் கொள்ளவில்லை! உங்களை நீங்களே கேளுங்கள்: நடவடிக்கை எடுக்கும்போது நீங்கள் எத்தனை முறை நீங்கள் என் சித்தத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டீர்கள்? இப்போது உங்களை நீங்களே பயிற்றுவிப்பதற்கான நேரம் ஆகும்! நான் உங்களை ஒவ்வொருவராகச் சமாளிப்பது சாத்தியமற்றது! நீங்கள் செயல்படும்போது, அனுபவத்தைப் பெறவும், நுண்ணறிவு மற்றும் ஞானத்தைப் பெறவும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நன்றாகவும், நல்லதாகவும் உள்ளன, ஆனால் யதார்த்தம் என்ன? நீங்கள் யதார்த்தத்தை எதிர்கொள்ளும்போது, அது குறித்து உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நீங்கள் கூறும் எதுவும் யதார்த்தத்துடன் பொருந்துகிறதில்லை. உண்மையில், நீங்கள் செய்வதை பார்க்க எனக்கு முற்றிலும் பிடிக்கவில்லை; நான் பார்க்கும்போது, நான் மிகவும் சோகமாக உணர்கிறேன். இதை நினைவில் கொள்ளவும்! எதிர்காலத்தில், எனது சித்தத்தைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்!

முந்தைய: அத்தியாயம் 53

அடுத்த: அத்தியாயம் 55

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக