அத்தியாயம் 31

தேவனுடைய மனநிலையானது தேவனுடைய அனைத்து வாக்கியங்களிலும் நிரம்பியிருக்கிறது, ஆனால் அவரது வார்த்தைகளின் முக்கியப் பகுதி முழு மனிதகுலத்தின் கலகத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் அவர்களின் கீழ்ப்படியாமை, ஒப்புக்கொடுக்க முடியாத தன்மை, மாறுபாடு, அநீதி மற்றும் தேவனை உண்மையாக நேசிக்க இயலாத தன்மை போன்ற விஷயங்களை வெளிப்படுத்துகிறது. மனுஷர்களின் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு நுண்துளைகளும் தேவனுக்கு விரோதமான எதிர்ப்பைக் கொண்டிருக்கின்றன, அவர்களின் இரத்த நாளங்கள் கூட தேவனுக்கு விரோதமான எதிர்ப்பைக் கொண்டிருக்கின்றன என்று அவர் கூறும் நிலையை தேவனுடைய வார்த்தைகள் அடைந்திருக்கின்றன. இந்த விஷயங்களை ஜனங்கள் ஆராய முயற்சிக்கவில்லை என்றால், அவர்கள் எப்போதும் அவற்றை அறிய முடியாதவர்களாகவும், அவற்றை ஒருபோதும் தூக்கி எறிந்துவிட முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதாவது, தேவனுக்கு எதிரான வைரஸ் அவர்களுக்குள் பரவி, இறுதியில், அவர்களின் இரத்த வெள்ளை அணுக்கள் அவர்களின் இரத்த சிவப்பணுக்களை விழுங்கி, அவர்களின் சரீரம் முழுவதும் இரத்தச் சிவப்பணுக்கள் இல்லாமல் போகும்படி செய்துவிட்டதைப் போலும் ஆகிவிடும்; இறுதியில், அவர்கள் இரத்தப் புற்றுநோயால் மரித்துவிடுவார்கள். இதுதான் மனுஷனின் உண்மையான நிலை, இதை யாராலும் மறுக்க முடியாது. சிவப்பான பெரிய வலுசர்ப்பமானது சுருண்டு கிடக்கக்கூடிய நிலத்தில் பிறந்திருப்பதால், ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் குறைந்தபட்சம் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் விஷத்தை மாதிரியாகக் காட்டுகிற மற்றும் எடுத்துக்காட்டுகிறதுமான ஒரு விஷயம் காணப்படுகிறது. இவ்வாறு, கிரியையின் இந்தக் கட்டத்தில், தேவனுடைய வார்த்தைகள் முழுவதிலும் உள்ள முக்கியப் பகுதியானது, தன்னைத்தான் அறிவது, தன்னைத்தானே மறுதலிப்பது, தன்னைத்தானே விட்டுக்கொடுப்பது மற்றும் சுயத்திற்கு மரிப்பது போன்றவையாக இருக்கிறது. கடைசி நாட்களில் இது தேவனுடைய பிரதானமான கிரியை என்று கூறப்படலாம், மேலும் இந்தச் சுற்று கிரியையானது எல்லாவற்றையும் விட மிகவும் விரிவானதும் முழுமையானதுமாக இருக்கிறது என்று கூறலாம்—இது தேவன் காலத்தை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறார் என்பதைக் காட்டுகிறது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதே நேரத்தில், இது அவர்களின் உணர்வுகளில், அவர்கள் எதிர்பார்த்த ஒன்றாகும். தேவன் மிகவும் தெளிவாகக் கூறவில்லை என்றாலும், ஜனங்களின் உணர்வுகள் மிகவும் கூர்மையாக இருக்கின்றன—அவர்கள் எப்போதும் காலம் குறுகி இருப்பதாக உணர்கிறார்கள். ஒருவன் இதை எவ்வளவு அதிகமாக உணர்கிறனோ, அந்த அளவுக்கு அவன் காலத்தைப் பற்றிய தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறான் என்று என்னால் சொல்ல முடியும். இது உலகத்தைச் சாதாரணமாகப் பார்த்து, இதனால் தேவனுடைய வார்த்தைகளை மறுப்பது அல்ல; மாறாக, தேவன் கிரியை செய்யும் வழிமுறையின் மூலம் தேவனுடைய கிரியையின் உள்ளடக்கத்தை அறிவதாகும். இது தேவனுடைய வார்த்தைகளின் தொனியால் தீர்மானிக்கப்படுகிறது. தேவனுடைய வாக்கியங்களின் தொனியில் யாராலும் கண்டுபிடிக்கப்படாத ஓர் இரகசியம் உள்ளது, மேலும் துல்லியமாக, இதற்குள் பிரவேசிப்பதும் ஜனங்களுக்கு மிகவும் கடினமாகும். தேவனுடைய வார்த்தைகளை ஜனங்கள் ஏன் புரிந்து கொள்ள முடியாது என்பதன் முக்கிய அம்சம் என்னவென்றால், அவர்கள் தேவன் பேசும் தொனியைக் குறித்த அறியாமையிலேயே இருக்கிறார்கள்—அவர்கள் இந்த ரகசியத்தில் தேறினவர்களானால், அவர்களால் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய ஓரளவு அறிவைப் பெற்றிருக்க முடியும். தேவனுடைய வார்த்தைகள் எப்பொழுதும் ஒரு கொள்கையைப் பின்பற்றியிருக்கின்றன: தேவனுடைய வார்த்தைகள்தான் எல்லாமே என்பதை ஜனங்களை அறியச் செய்கிறது, மேலும் தேவனுடைய வார்த்தைகள் மூலம் மனுஷனின் அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கிறது. ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து, தேவன் தமது கிரியைகளைத் தெளிவாக்குகிறார்; மனுஷனின் கண்ணோட்டத்திலிருந்து, அவர் ஜனங்களின் கருத்துக்களை அம்பலப்படுத்துகிறார்; ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து, மனுஷன் அவரது சித்தத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார்; மேலும், மனுஷனின் கண்ணோட்டத்திலிருந்து, அவர் மனுஷ அனுபவத்தின் இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் காரமான சுவைகளை ருசித்திருப்பதாகவும், அவர் காற்றில் வந்து மழையுடன் செல்கிறார் என்றும், குடும்பத்தின் துன்புறுத்தலை அனுபவித்திருப்பதாகவும், வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்திருப்பதாகவும் கூறுகிறார். இவையெல்லாம் வெவ்வேறு கோணங்களில் பேசப்படும் வார்த்தைகளாகும். அவர் தேவனுடைய ஜனங்களிடம் பேசும்போது, அது ஒரு வீட்டுப் பணிப்பெண் அடிமைகளிடம் சொல்வது போல அல்லது ஒரு நகைச்சுவை ஓவியம் போன்றதாய் இருக்கிறது; கடந்த ஆட்சியின் நிலப்பிரபுத்துவ அதிகாரிகளால் கடும் சித்திரவதைக்கு உள்ளாகி வாக்குமூலம் அளிக்க அவர்களை காவலில் வைத்தது போல், தங்களது அவமானத்திலிருந்து தங்களை மறைத்துக்கொள்ள இடமின்றி, அவரது வார்த்தைகள் ஜனங்களை முகம்-சிவக்க வைக்கின்றன. அவர் தேவனுடைய ஜனங்களிடம் பேசும்போது, மத்திய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துகிற, எதிர்த்துப் போராடுகிற பல்கலைக்கழக மாணவர்களைப்போல, தேவன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவராய் இருக்கிறார். தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் பரியாசத்திற்குரியதாக இருந்தால், அவைகளை ஜனங்கள் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும்; ஆகவே, தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைகள் நேரடியானவை; அவை மனுஷனுக்கான மறைக்குறியீடுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் மனுஷனின் உண்மையான நிலையை நேரடியாகச் சுட்டிக்காட்டுகின்றன—இது மனுஷன் மீதான தேவனுடைய அன்பு வெறும் வார்த்தைகள் அல்ல, மாறாக, அது உண்மையானது என்பதைக் காட்டுகிறது. ஜனங்கள் உண்மைத்தன்மையை மதிக்கிறார்கள் என்றாலும், தேவன்மீது அவர்கள் கொண்ட அன்பில் எதுவும் உண்மையானது அல்ல. இதுதான் மனுஷனிடம் உள்ள குறைபாடு ஆகும். தேவன் மீதான ஜனங்களின் அன்பு உண்மையானதாக இல்லாவிட்டால், இதன் நிமித்தமாக அனைத்தும் மறைந்துபோவதைப் போல, எல்லாமே வெறுமையாகவும் மாயையாகவும் இருக்கும். தேவன் மீதான அவர்களின் அன்பு பிரபஞ்சங்களை மிஞ்சினால், அவர்களின் நிலையும் அடையாளமும் உண்மையானதாக இருக்கும், வெறுமையாக இருக்காது, மேலும், இந்த வார்த்தைகள் கூட உண்மையானவையாக இருக்கும், வெறுமையாக இருக்காது—இதை நீங்கள் பார்க்கிறீர்களா? மனுஷனுக்கான தேவனுடைய கோரிக்கைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மனுஷன் வெறும் அந்தஸ்தின் பலனை மட்டும் அனுபவிக்காமல், அந்தஸ்தின் உண்மைத்தன்மையை வாழந்துகாட்ட வேண்டும். தேவனுடைய ஜனங்களிடமும் மற்றும் அனைத்து மனுஷர்களிடமும் தேவன் கோருவது இதுதான், இது ஒரு பெரிய வெற்றுக் கோட்பாடு அல்ல.

“நான் செய்வது அனைத்தும் அவர்களைப் பிரியப்படுத்துவதற்கான முயற்சியைப் போலவும், அதன் விளைவாக அவர்கள் எப்போதும் என் செயல்களால் வெறுக்கத்தக்கவர்களாகிறார்கள் என்பது போலவும்” என்று தேவன் ஏன் இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறுகிறார்? மனுஷன் தேவனை வெறுப்பதன் உண்மையான வெளிப்பாடுகளை உன்னால் பேச முடியுமா? ஜனங்களின் கருத்துக்களைப் பொருத்தவரை, மனுஷனும் தேவனும் “உணர்ச்சியுடன் நேசிக்கிறார்கள்”, இன்று, தேவனுடைய வார்த்தைகளுக்காக ஜனங்கள் ஏங்குவது, தேவனை ஒரே மூச்சில் விழுங்குவதற்கு ஆவலுடன் விரும்பும் நிலையை எட்டியுள்ளது—இருப்பினும், தேவன் பின்வரும் வகையான வார்த்தைகளை கூறுகிறார்: “மனுஷன் என்னை வெறுக்கிறான். என் அன்பு ஏன் மனுஷனின் வெறுப்பாகத் திருப்பிக் கொடுக்கப்படுகிறது?” இது ஜனங்களுக்குள் இருக்கும் இயற்கையான இயல்பு அல்லவா? தோண்டி எடுக்கப்பட வேண்டியது இதுவல்லவா? இதுவே ஜனங்களின் பின்தொடர்தலில் உள்ள குறைபாடாக இருக்கிறது; இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது, மேலும் தேவனைப் பற்றிய மனுஷனின் அறிவின் பாதையில் நிற்கும் சிங்கமும் மனுஷனுக்காக அகற்றப்பட வேண்டியதும் இதுவே—செய்யப்பட வேண்டியது இது அல்லவா? ஏனெனில், பன்றியைப் போலவே, மனுஷன் நினைவாற்றலைப் பெற்றிருக்கவில்லை, மேலும் எப்போதும் இன்பங்களை இச்சிக்கிறான், தேவன் மறதி நோய்க்கு மருந்தை மனுஷனுக்குக் கொடுக்கிறார்—அவர் அதிகம் பேசுகிறார், அதிகமாகக் கூறுகிறார், மேலும் அவர் ஜனங்களுடைய காதைப் பிடித்து இழுத்து, அவர்களை உற்று கவனிக்கும்படி செய்கிறார், மேலும் அவர் காதுகேட்கும் கருவிகளை அவர்களுக்குப் பொருத்துகிறார். அவருடைய சில வார்த்தைகளைப் பொறுத்தவரை, ஒரே ஒருமுறை பேசினால் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது; அவை மறுபடியுமாகத் திரும்பத் திரும்ப சொல்லப்பட வேண்டும், ஏனென்றால், “ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் எப்போதும் ஞாபக மறதியால் அவதிப்படுகிறார்கள், மேலும் முழு மனிதகுலமும் வாழ்நாட்களில் குழப்பத்தில் காணப்படுகிறது.” இவ்வாறு, “நேரம் கிடைக்கும்போது படிப்பார்கள், ஓய்வு கிடைக்கும்போது கேட்பார்கள், அவர்களுக்கு நேரமில்லாதபோது அவைகளை விட்டுவிடுவார்கள்; வார்த்தைகள் இன்று பேசப்பட்டால், அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் நாளை அவைகள் பேசப்படாவிட்டால், அவர்கள் அதைத் தங்கள் மனதில் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள்” என்ற நிலையிலிருந்து ஜனங்கள் இரட்சிக்கப்பட முடியும். ஜனங்களின் சுபாவத்தைப் பொறுத்த வரையில், இன்று தேவன் அவர்களின் உண்மையான நிலையைப் பற்றிப் பேசி, அவர்கள் அதைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றிருந்தால், அப்போது அவர்கள் வருத்தத்தால் நிறைந்திருப்பார்கள்—ஆனால் பின்னர், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் காற்றில் பறக்கவிட்டு, தங்கள் பழைய வழிகளுக்குத் திரும்பிச் செல்வார்கள், மற்றும் நினைவுபடுத்தப்படும் போது மட்டுமே மேலே விவரிக்கப்பட்ட காட்சியை மீண்டும் நடத்துகிறார்கள். இவ்வாறு, நீங்கள் கிரியை செய்கிறீர்களோ அல்லது பேசுகிறீர்களோ, மனுஷனின் இந்த சாராம்சத்தை மறந்துவிடாதீர்கள்; கிரியை செய்யும் போது இந்த சாராம்சத்தை ஒதுக்கி வைப்பது தவறாகிவிடும். எல்லா கிரியைகளையும் செய்வதில், நீங்கள் பேசும்போது ஜனங்களின் கருத்துக்களைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக, தேவனுடைய வார்த்தைகளுடன் உங்கள் சொந்த நுண்ணறிவுகளைச் சேர்த்து அவைகளைப் பேச வேண்டும். இதுவே ஜனங்களுக்கு வழங்குவதற்கும், அவர்கள் தங்களை அறிந்து கொள்வதற்குமான வழியாகும். தேவனுடைய வார்த்தைகளின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஜனங்களுக்கு வழங்குவதில், அவர்களின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்வது நிச்சயமாகவே சாத்தியமாகும். தேவனுடைய வார்த்தைகளில், மனுஷனின் உண்மையான நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வழங்குவது போதுமானதாகும்—மேலும் அதேபோல், “பூமியில் ஒரு விருந்து மேசையில் அமருவதற்கான அழைப்பை தேவன் ஏற்றுக்கொண்டார்” என்று சுட்டிக்காட்டும் தேவனுடைய வார்த்தைகளை நான் இனி ஒருபோதும் கூறமாட்டேன்.

முந்தைய: அத்தியாயம் 30

அடுத்த: அத்தியாயம் 32

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக