அத்தியாயம் 12

எல்லா ஜனங்களும் கவனம் செலுத்தும்போது, அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் உயிரடையும்போது, ஒவ்வொரு நபரும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, மனக் கவலை இல்லாமல், தேவனுடைய பாரமான பொறுப்பைச் சுமக்கத் தயாராக இருக்கும்போது—கிழக்கத்திய மின்னல் வெளிவந்து, கிழக்கில் இருந்து மேற்குவரை அனைத்தையும் ஒளிரச் செய்கிறது, இந்த ஒளியின் வருகையால் முழு பூமியையும் பயமுறுத்துகிறது; மேலும், இந்த நேரத்தில், தேவன் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். அதாவது, இந்த நேரத்தில், முழு பிரபஞ்சத்தின் ஜனங்களுக்கும் அறிவிக்கும்படிக்கு தேவன் பூமியின் மீது ஒரு புதிய கிரியையைத் தொடங்குகிறார், “கிழக்கிலிருந்து மின்னல் வெட்டும் சமயம், நான் என் வார்த்தைகளைப் பேசத் தொடங்கும் தருணமும் அதுவே—மின்னல் வெட்டும்போது, முழு பிரபஞ்சமும் ஒளிர்கிறது, அனைத்து நட்சத்திரங்களிலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது.” எனவே, கிழக்கிலிருந்து மின்னல் வெளிவரும் நேரம் எப்போது? வானங்கள் இருளடைந்து, பூமி மந்தாரமடையும் போதான நேரமே, தேவன் தமது முகத்தை உலகிற்கு மறைக்கும் நேரமும், மேலும் வானத்தின் கீழ் உள்ள அனைத்தும் ஒரு வலிமையான புயலால் சூழப்படவிருக்கும் தருணமும் ஆகும். ஆனாலும் இந்த நேரத்தில், எல்லா ஜனங்களும் பீதியில், இடிக்குப் பயப்படுகிறார்கள், மின்னலின் பிரகாசத்திற்குப் பயப்படுகிறார்கள், மேலும் பிரளயத்தின் தாக்குதலுக்குப் பயப்படுகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் தங்கள் கண்களை மூடிக்கொண்டு தம்முடைய கோபத்தைக் கட்டவிழ்த்து தங்ளைத் தாக்கும்படிக்கு தேவனுக்காகக் காத்திருக்கிறார்கள். பல்வேறு நிலைகள் முடிவுக்கு வரும்போது, கிழக்கத்திய மின்னல் உடனடியாக வெளிவருகிறது. அதாவது, உலகத்தின் கிழக்குப் பகுதியில், தேவனுக்கு சாட்சிப் பகரத் தொடங்கும் போது, அவர் கிரியை செய்யத் தொடங்கும் போது, தெய்வீகத்தன்மை பூமி முழுவதும் ராஜரீகத்தைப் பயன்படுத்தத் தொடங்கும் வரை—இது முழு பிரபஞ்சத்தின் மீதும் எப்போதும் பிரகாசிக்கிற, கிழக்கத்திய மின்னலின் ஒளிரும் ஒளிக்கதிராக இருக்கிறது. பூமியின் நாடுகள் கிறிஸ்துவின் ராஜ்யமாக மாறும் போதுதான் முழு பிரபஞ்சமும் பிரகாசிக்கப்பட்டிருக்கும். இப்போது கிழக்கத்திய மின்னல் வெளிவரும் நேரமாகும். மனுவுருவான தேவன் கிரியை செய்யத் தொடங்குகிறார், மேலும், தெய்வீகத்தன்மையில் நேரடியாகப் பேசுகிறார். தேவன் பூமியில் பேசத் தொடங்கும் போது கிழக்கத்திய மின்னல் வெளிப்படுகிறது என்று கூறலாம். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால், சிங்காசனத்தில் இருந்து ஜீவத் தண்ணீர் பாயும் போது—சிங்காசனத்திலிருந்து வார்த்தைகள் வெளிப்படத் தொடங்கும் போதுதான்—துல்லியமாக ஏழு ஆவிகளின் வார்த்தைகள் முறையாக வெளிப்படத் தொடங்குகின்றன. இந்த நேரத்தில், கிழக்கத்திய மின்னல் வெளிவரத் தொடங்குகிறது, அதன் கால அளவு காரணமாக, வெளிச்சத்தின் அளவும் மாறுபடும், மேலும் அதன் பிரகாசத்தின் எல்லைக்கு ஒரு வரம்பு உள்ளது. இருப்பினும், தேவனுடைய கிரியையின் இயக்கத்துடன், அவருடைய திட்டத்தில் மாற்றங்களுடன்—தேவனுடைய குமாரர்கள் மற்றும் ஜனங்கள் மீதான கிரியையில் வேறுபாடுகளுடன்—அதாவது, பிரபஞ்சம் முழுவதும் உள்ள எல்லாம் ஒளியூட்டப்பட்டிருக்கவும், எந்தக் மாசும் கசடும் அதில் இல்லாதபடிக்கும், மின்னல் அதன் இயல்பான செயல்பாட்டை அதிகதிகமாகச் செய்கிறது. இது தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் வடிவமாகும் மற்றும் தேவன் அனுபவிக்கும் பலனும் ஆகும். “நட்சத்திரங்கள்” என்பது வானத்தில் உள்ள நட்சத்திரங்களைக் குறிப்பதில்லை, மாறாக, தேவனுக்காகக் கிரியை செய்யும் அவரது அனைத்து குமாரர்களையும் ஜனங்களையும் குறிக்கிறது. அவர்கள் தேவன் தம்முடைய ராஜ்யத்தில் தேவனுக்கு சாட்சிப் பகருவதாலும், அவருடைய ராஜ்யத்தில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாலும், மேலும் அவர்கள் சிருஷ்டிகளாக இருப்பதால், அவர்கள் “நட்சத்திரங்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். “மறுரூபமாவது” என்பது அடையாளம் மற்றும் அந்தஸ்தில் ஏற்படும் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது: ஜனங்கள் பூமியில் உள்ள ஜனங்களிலிருந்து ராஜ்யத்தின் ஜனங்களாக மாறுகிறார்கள், மேலும், தேவன் அவர்களுடன் இருக்கிறார், தேவனுடைய மகிமை அவர்களுக்குள் காணப்படுகிறது. இதன் விளைவாக, அவர்கள் தேவனுக்குப் பதிலாக ராஜ்யபாரத்தின் வல்லமையைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் இறுதியில் அவர்கள் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கும் தேவனுடைய இதயத்திற்கு ஏற்றவர்களாய் இருப்பதற்கும், அவர்களில் உள்ள விஷம் மற்றும் அசுத்தங்கள் தேவனுடைய கிரியையால் சுத்திகரிக்கப்படுகின்றன—இது இந்த வார்த்தைகளின் அர்த்தத்தின் ஒரு அம்சமாகும். தேவனிடமிருந்து வரும் ஒளிக்கதிர் அனைத்து தேசத்தையும் ஒளிரச் செய்யும் போது, வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் வெவ்வேறு அளவுகளில் மாறும், மேலும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களும் மாறும், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும், அதைத் தொடர்ந்து பூமியில் உள்ள ஜனங்கள் புதுப்பிக்கப்படுவார்கள்—இது வானத்திற்கும் பூமிக்கும் இடையேயான தேவனுடைய கிரியையாகும், மேலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

தேவன் ஜனங்களை இரட்சிக்கும் போது—இது இயற்கையாகத் தேர்ந்தெடுக்கப்படாதவர்களைக் குறிக்காது—அதாவது, தேவன் ஜனங்களைச் சுத்திகரித்து, நியாயந்தீர்க்கும்போது, தேவனுடைய வார்த்தைகளின் நிமித்தம், எல்லாரும் மனங்கசந்து அழுகிறார்கள், அல்லது படுக்கையில் விழுந்து, அடிபட்டு மரண நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். தேவனுடைய வார்த்தைகளால் மட்டுமே ஜனங்கள் தங்களை அறியத் தொடங்குகிறார்கள். காரியங்கள் அப்படி இல்லை என்றால், அவர்களின் கண்கள் ஒரு தேரையைப் போல் பார்க்கும் கண்களாக இருக்கும்—யாரும் நம்பாதவர்களாகவும், அவர்களில் யாரும் தங்களைத் தாங்களே அறியாதவர்களாகவும், எவ்வளவு எடையுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதை அறியாதவர்களாயும் இருக்கிறார்கள். ஜனங்கள் உண்மையிலேயே சாத்தானால் அதிக அளவில் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தேவனுடைய சர்வவல்லமையின் காரணமாகவே, மனுஷனின் அசிங்கமான முகம் இவ்வளவு தெளிவான விவரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது, அதைப் படித்த பிறகு, மனுஷனை தனது சொந்த முகத்துடன் அதை ஒப்பிட்டுப் பார்க்கச் செய்கிறது. அவர்களின் தலையில் எத்தனை மூளை செல்கள் உள்ளன என்பதை தேவன் மிகத் தெளிவாக அறிந்திருப்பதையும், ஜனங்கள் அவர்களின் அசிங்கமான முகங்கள் அல்லது உள்ளார்ந்த எண்ணங்களைப் பற்றி தேவன் அறிந்திருப்பது எதையும் சொல்ல முடியாது என்பது ஜனங்கள் அனைவருக்கும் தெரியும். “மனித இனம் முழுவதும் நிவர்த்தி செய்யப்பட்டதைப் போல் இருக்கிறது. கிழக்கிலிருந்து வரும் இந்த வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ், மனுஷர் அனைவரும் அவர்களது உண்மையான வடிவத்தில் வெளிப்படுகின்றனர், அவர்களின் கண்கள் என்ன செய்வது என்று தெரியாமல்,” என்ற வார்த்தைகளில், ஒரு நாள், தேவனுடைய கிரியை முடிவடையும் போது, எல்லா மனுஷர்களும் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்பதைக் காணலாம். ஒருவரும் தப்பிச்செல்ல முடியாது; தேவன் முழு மனிதகுலத்தின் ஜனங்களையும் ஒருவரையும் தப்பவிடாமல், ஒவ்வொருவரையும் கையாளுவார், அப்போதுதான் தேவனுடைய இருதயம் திருப்தி அடையும். எனவே, தேவன் கூறுகிறார், “அவர்கள் என் வெளிச்சத்திலிருந்து தப்பி மலைக் குகைகளில் தஞ்சம் புகும் விலங்குகளைப் போல இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட என் வெளிச்சத்திலிருந்து வெளியேற முடியவில்லை.” ஜனங்கள் கீழான மற்றும் தாழ்ந்த விலங்குகளாய் இருக்கிறார்கள். சாத்தானின் கைகளில் வாழ்வது, மலைகளுக்குள் இருக்கிற ஆழமான பழங்காலக் காடுகளில் தஞ்சம் புகுந்தது போல் இருக்கிறது—ஆனால், சாத்தானுடைய வல்லமையின் “பாதுகாப்பிற்கு” கீழ் இருந்தாலும், தேவனுடைய தீப்பிழம்புகளால் எரிந்து சாம்பலாக்கப்படுவதிலிருந்து எதுவும் தப்ப முடியாது என்பதால், தேவனால் அவர்கள் எப்படி மறக்கப்பட முடியும்? தேவனுடைய வார்த்தைகள் வெளிப்படுவதை ஜனங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, அனைத்து ஜனங்களுடைய பல்வேறு வகையான வினோதமான வடிவங்களும் கோரமான நிலைகளும் தேவனுடைய பேனாவால் சித்தரிக்கப்படுகின்றன; மனுஷனின் தேவைகளுக்கும், மனநிலைக்கும் ஏற்றவாறு தேவன் பேசுகிறார். எனவே, ஜனங்களுக்கு, தேவன் உளவியலில் நன்கு தேறினவராகத் தோன்றுகிறார். தேவன் ஒரு உளவியலாளர் என்பது போலவும், ஆனால் தேவன் உள் மருத்துவத்தின் நிபுணராக இருப்பது போலவும் காணப்படுகிறது—“சிக்கலான” மனுஷனைப் பற்றி அவருக்கு அத்தகைய புரிதல் இருப்பது ஆச்சரியமில்லை. ஜனங்கள் எவ்வளவு அதிகமாக நினைக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக தேவனுடைய விலைமதிப்பற்ற தன்மையைப் பற்றிய அவர்களின் உணர்வு அதிகரிக்கிறது, மேலும் தேவன் ஆழமானவர் மற்றும் புரிந்துகொள்ள முடியாதவர் என்று அவ்வளவு அதிகமாக அவர்கள் உணர்கிறார்கள். மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையே, கடக்க முடியாத வானத்தின் எல்லை இருப்பதைப் போலவும், இருவரும் சூ நதியின்[அ] எதிர் கரையில் இருந்து ஒருவரையொருவர் பார்ப்பது போலவும், மற்றவரைப் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்பதைப் போலவும் இருக்கிறது. அதாவது, பூமியில் உள்ள ஜனங்கள் தேவனைத் தங்கள் கண்களால் மட்டுமே பார்க்கிறார்கள்; அவர்கள் அவரை நெருக்கமாக அறியும் வாய்ப்பை ஒருபோதும் பெற்றிருந்ததில்லை, மேலும் அவர்மீது அவர்கள் கொண்டிருப்பதெல்லாம் ஒரு பற்றுதல் உணர்வு மட்டுமே ஆகும். அவர்களின் இருதயங்களில், தேவன் அழகானவர், ஆனால் தேவன் மிகவும் “இருதயமற்றவராகவும் உணர்ச்சியற்றவராகவும்” இருக்கிறார் என்ற உணர்வு எப்போதும் இருப்பதால், அவருக்கு முன் தங்கள் இருதயங்களில் உள்ள வேதனையைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பை அவர்கள் ஒருபோதும் பெற்றிருந்ததில்லை. கணவனின் நன்னடத்தை காரணமாக, அவர்கள் தன் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பே இல்லாத, தன் கணவனுக்கு முன் உள்ள அழகான இளம் மனைவி போல அவர்கள் இருக்கிறார்கள். ஜனங்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக்கொள்ளும் மோசமானவர்கள், எனவே, அவர்களின் பலவீனத்தின் நிமித்தமாகவும், அவர்களின் சுயமரியாதையின்மையின் நிமித்தமாகவும், மனுஷன் மீதான என் வெறுப்பு வளர்ந்து, அறியாமலே, சற்றே தீவிரமடைந்து, என் இருதயத்தில் உள்ள கோபம் வெடிக்கிறது. என் மனதில், நான் ஓர் அதிர்ச்சியை அனுபவித்தது போல் உள்ளது. நான் நீண்ட காலமாக மனுஷன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன், ஆனால் “மீண்டும், என் நாள் அனைத்து மனுஷரையும் நெருங்குகிறது, மீண்டும் மனுஷ இனத்தைத் தூண்டி மனுஷருக்கு மற்றொரு புதிய தொடக்கத்தை அளிக்கிறது.” சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைக் கைப்பற்றி தோற்கடிக்கும்படிக்கு, நான் மீண்டும் ஒருமுறை மனிதகுலத்தை ஜெயங்கொள்ளும் தைரியத்தைப் பறை சாற்றுகிறேன். தேவனுடைய உண்மையான நோக்கம் பின்வருமாறு இருந்தது: சீனாவில் உள்ள சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் முட்டையை வெல்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டாம்; இதை மட்டுமே சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தோல்வியாகவும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் மீதான வெற்றியாகவும் கருத முடியும். தேவன் பூமி முழுவதும் ராஜாவாக ஆட்சி செய்கிறார் என்பதை நிரூபிக்கவும், தேவன் பூமியில் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டு, பூமியில் மகிமையைப் பெற்றிருக்கிறதான தேவனுடைய மாபெரும் திட்டத்தின் நிறைவேற்றத்தை நிரூபிக்கவும் இது போதுமானதாக இருக்கும். இறுதியான, அழகான காட்சியின் காரணமாக, தேவன் தமது இருதயத்தில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது: “என் இருதயம் துடிக்கிறது, என் இருதய துடிப்பின் தாளங்களைப் பின்பற்றி, மலைகள் மகிழ்ச்சியுடன் குதிக்கின்றன, கடல் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது, அலைகள் கற்பாறைகள் மீது மோதுகின்றன. என் இருதயத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது கடினம்.” இதிலிருந்து, தேவன் திட்டமிட்டதை, அவர் ஏற்கனவே நிறைவேற்றியிருக்கிறார் என்பதை அறியலாம்; இது தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டது, மேலும் தேவன் இதைத்தான் துல்லியமாக ஜனங்களை அனுபவிக்கவும் பார்க்கவும் செய்கிறார். ராஜ்யத்திற்கான நம்பிக்கை அழகானது; ராஜ்யத்தின் ராஜா ஜெயங்கொண்டவர், அவரது தலை முதல் பாதம் வரை மாம்சம் அல்லது இரத்தத்தின் சுவடு எதுவும் ஒருபோதும் இல்லாமல், முற்றிலும் தெய்வீகத்தன்மையின் கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவரது முழு சரீரமும் மனுஷீகக் கருத்துக்களால் முற்றிலும் கறைபடாமல், பரிசுத்த மகிமையால் பிரகாசிக்கிறது; அவரது முழு சரீரமும், மேலிருந்து கீழ் வரை, நீதியுடனும், பரலோகத்தின் ஒளியுடனும், வசீகரிக்கும் நறுமணத்தை வெளிப்படுத்துகிறது. உன்னதப் பாடல்களில் உள்ள நேசரைப் போலவே, அவர் இன்னும், எல்லா பரிசுத்தர்களையும் விட மிக அழகானவராகவும், பண்டைய பரிசுத்தர்களை விட உயர்ந்தவராகவும் இருக்கிறார்; அவர் எல்லா ஜனங்களுக்கும் முன்மாதிரியாகவும், மனுஷனோடு ஒப்பிடப்பட முடியாதவராகவும் இருக்கிறார்; ஜனங்கள் அவரை நேரடியாகப் பார்க்கத் தகுதியற்றவர்கள். தேவனுடைய மகிமையான முகத்தையோ, தேவனுடைய தோற்றத்தையோ, தேவனுடைய சாயலையோ யாராலும் அடைய முடியாது; அவைகளுடன் யாராலும் போட்டியிட முடியாது, யாராலும் அவைகளை எளிதில் தங்கள் வாயால் துதிக்கவும் முடியாது.

தேவனுடைய வார்த்தைகளுக்கு முடிவே இல்லை—நீரூற்றில் இருந்து வெளியேறும் தண்ணீரைப் போல, அவை ஒருபோதும் வறண்டு போவதில்லை, இதனால் தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் இரகசியங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இன்னும் தேவனைப் பொறுத்தவரை, அத்தகைய இரகசியங்கள் முடிவில்லாதவைகள். வெவ்வேறு வழிமுறைகள் மற்றும் மொழியைப் பயன்படுத்தி, தேவன் தமது புதுப்பித்தல் மற்றும் முழு பிரபஞ்சத்தின் முழு மறுரூபப்படுத்துதலையும் பற்றி பல முறை பேசியுள்ளார், ஒவ்வொரு முறையும் கடந்ததை விட ஆழமாகப் பேசியிருக்கிறார்: “அசுத்தமான எல்லாவற்றையும் என் பார்வையினால் சாம்பலாக எரிக்க விரும்புகிறேன்; கீழ்ப்படியாமையின் மகன்கள் அனைவரும் என் கண்களுக்கு முன்பாக மறைந்து போக நான் விரும்புகிறேன், ஒருபோதும் காலம் தாழ்த்தப்போவதில்லை.” தேவன் ஏன் திரும்பத் திரும்ப இத்தகைய காரியங்களைச் சொல்கிறார்? ஜனங்கள் அவைகளால் சோர்ந்து போவார்கள் என்று அவர் பயப்படுகிறார் அல்லவா? ஜனங்கள் தேவனை இந்த வழியில் அறிய விரும்பி, வெறுமனே தேவனுடைய வார்த்தைகளுக்கு நடுவே தடுமாறுகிறார்கள், ஆனால் தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஆகவே, தேவன் அவர்களுக்கு நினைவூட்டவும், அவர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளவும், அதனால், மனுஷனின் கீழ்ப்படியாமையை அவர்களிடமிருந்தே தெரிந்துகொள்ளவும், இவ்வாறு, தேவனுக்கு முன்பாக உள்ள அவர்களுடைய கீழ்ப்படியாமையை ஒழிக்கவும், தேவன் இந்த முறையைப் பயன்படுத்துகிறார். தேவன் “வகைப்படுத்த” விரும்புகிறார் என்பதை வாசிக்கும் போது, ஜனங்களுடைய மனநிலை உடனடியாகக் கவலையடைகிறது, மேலும் அவர்களின் தசைகளும் கூட அசைவதை நிறுத்திக்கொள்வதைப்போல தெரிகிறது. தங்களைத் தாங்களே விமர்சிக்க அவர்கள் உடனடியாக தேவனுக்கு முன்பாகத் திரும்பி வருகிறார்கள், அதனால் தேவனை அறிந்து கொள்கிறார்கள். இதற்குப் பிறகு—அவர்கள் தங்கள் மனதை திடப்படுத்திக்கொண்ட பிறகு—சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சாராம்சத்தைக் காட்ட தேவன் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்; இவ்வாறு, ஜனங்கள் நேரடியாக ஆவிக்குரிய உலகில் பங்கேற்கிறார்கள், மேலும் அவர்களின் மன உறுதி ஆற்றியிருக்கும் பங்கின் காரணமாக, அவர்களின் மனமும் ஒரு பங்கை ஆற்றத் தொடங்குகிறது, இது மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையிலான உணர்வை அதிகரிக்கிறது—இது மாம்சத்தில் தேவனுடைய கிரியைக்கு அதிக நன்மைபயக்கக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறு, ஜனங்கள் அறியாமலேயே கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்கும் மனநிலையைக் கொண்டுள்ளனர்: கடந்த காலத்தில், ஜனங்கள் ஒரு தெளிவற்ற தேவனைப் பல ஆண்டுகளாக நம்பினர்; பல ஆண்டுகளாக, அவர்கள் ஒருபோதும் தங்கள் இருதயங்களில் விடுவிக்கப்படவில்லை, மகத்தான இன்பத்தை அனுபவிக்க இயலாதவர்களாய் இருந்தார்கள், மேலும், அவர்கள் தேவனை விசுவாசித்தாலும், அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒழுங்கும் இல்லாதிருந்தது. அது விசுவாசத்துக்கு வருவதற்கு முன்பு இருந்ததைப் போலவே தோன்றியது—அவர்களின் வாழ்க்கை இன்னும் வெறுமையாகவும் நம்பிக்கையற்றதாகவும் இருந்தது, அந்த நேரத்தில் அவர்களின் விசுவாசம் ஒரு வகையான சிக்கலாகத் தோன்றியது, அது அவிசுவாசமே தவிர வேறில்லை. இன்றைய நாளின் நடைமுறை தேவனையே அவர்கள் பார்த்திருப்பதால், வானமும் பூமியும் புதுப்பிக்கப்பட்டது போல் இருக்கிறது; அவர்களின் வாழ்க்கை பிரகாசமாகிவிட்டது, அவர்கள் நம்பிக்கை இல்லாமல் இல்லை, மேலும், நடைமுறை தேவனுடைய வருகையின் நிமித்தமாக, அவர்கள் தங்கள் இருதயங்களில் உறுதியையும், தங்கள் ஆவிகளுக்குள் சமாதானத்தையும் உணர்கிறார்கள். இனி அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும், அவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, செவிவழி ஆதாரங்களில் பேசுவதில்லை; இனி அவர்களின் பின்தொடர்தல் நோக்கமற்றதாக இருப்பதில்லை, மேலும் அவர்கள் ஒழுங்குமுறையற்றுத் திரிவதில்லை. இன்றைய வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கிறது, ஜனங்கள் எதிர்பாராத விதமாக ராஜ்யத்தில் பிரவேசித்து தேவனுடைய ஜனங்களாகிவிட்டார்கள், பின்னர்…. அவர்களின் இருதயத்தில், ஜனங்கள் இதைப் பற்றி எவ்வளவு அதிகமாக நினைக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக இனிமையானதாக இருக்கிறது; அவர்கள் இதைப் பற்றி எவ்வளவு அதிகமாக நினைக்கிறார்களோ, அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் அவ்வளவு அதிகமாக தேவனை நேசிக்க ஏவப்படுகிறார்கள். இதனால், அவர்களை அறியாமலேயே, தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான நட்பு மேம்பட்டிருக்கிறது. ஜனங்கள் தேவனை அதிகம் நேசிக்கிறார்கள், மேலும் தேவனை அறிந்திருக்கிறார்கள், மேலும் மனுஷனில் தேவனுடைய கிரியை மிகவும் எளிதாகிறது, அது ஜனங்களை வற்புறுத்துவதோ அல்லது கட்டாயப்படுத்துவதோ இல்லை, ஆனால், இயற்கையின் போக்கைப் பின்பற்றுகிறான், மேலும் மனுஷன் தனது சொந்த, தனித்துவமான செயல்பாட்டைச் செய்கிறான்—இவ்வாறுதான் ஜனங்கள் படிப்படியாக தேவனை அறிந்துகொள்ளக் கூடியவர்களாக மாறுவார்கள். இதுதான் தேவனுடைய ஞானம்—இது சிறிதளவு முயற்சியும் செய்யாது, மேலும் இது மனுஷனின் சுபாவத்திற்குத் தகுந்தாற்போல் கொண்டு வரப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில், தேவன் கூறுகிறார், “மனித உலகில் நான் அவதரித்த போது, மனுஷர் என் வழிகாட்டுதலின் கீழ், அவர்கள் அறியாமலேயே இன்றுவரை வந்துள்ளனர், அவர்கள் அறியாமலேயே என்னை அறிந்துகொண்டுள்ளனர். ஆனால், முன்னோக்கிச் செல்லும் பாதையில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றி யாருக்கும் சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை—மேலும் அந்தப் பாதை எந்தத் திசையில் செல்லும் என்பது பற்றி யாருக்கும் எந்தத் துப்பும் தெரிந்திருக்கவில்லை. சர்வவல்லவர் அவர்களைக் கவனிப்பதன் மூலம் மட்டுமே எவரும் இறுதியை நோக்கிச் செல்லும் பாதையில் நடக்க முடியும்; கிழக்கில் வெட்டும் மின்னலால் வழிநடத்தப்பட்டால் மட்டுமே என் ராஜ்யத்திற்கு வழிவகுக்கும் வாசலை யாராலும் கடக்க முடியும்.” மனுஷனின் இருதயத்தில் உள்ளவற்றை நான் மேலே விவரித்தவற்றின் சுருக்கம் இது அல்லவா? தேவனுடைய வார்த்தைகளின் இரகசியம் இதில் உள்ளது. மனுஷன் தன் இருதயத்தில் எதை நினைக்கிறானோ அதைத்தான் தேவன் துல்லியமாக அவரது வாயிலிருந்து பேசுகிறார், மேலும் அவர் தமது வாயிலிருந்து பேசுவதைத்தான் மனுஷனும் துல்லியமாக விரும்புகிறான். மனுஷனின் இருதயத்தை வெளிப்படுத்துவதில் தேவன் மிகவும் திறமையானவராக இருப்பது இங்குதான்; இல்லையென்றால், எப்படி அனைவராலும் உண்மையாக நம்ப முடியும்? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை ஜெயங்கொள்ளுவதன் மூலம் தேவன் அடைய விரும்பும் விளைவு இதுவல்லவா?

உண்மையில், பல வார்த்தைகள் உள்ளன, அவற்றின் மேலோட்டமான அர்த்தங்களைக் குறிப்பிடுவது தேவனுடைய நோக்கம் அல்ல. அவருடைய பல வார்த்தைகளில், தேவன் வேண்டுமென்றே ஜனங்களுடைய எண்ணங்களை மாற்றவும் அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவும் விரும்புகிறார். தேவன் இந்த வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை, இதனால் பல வார்த்தைகள் விளக்கத்திற்கு தகுதியற்றவையாக இருக்கின்றன இன்று அவர்கள் இருக்கும் அளவிற்கு, தேவனுடைய வார்த்தைகளால் மனுஷன் ஜெயங்கொள்ளப்பட்டிருக்கும்போது, ஜனங்களுடைய பலம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைகிறது, எனவே தேவன் மேலும் எச்சரிக்கையின் வார்த்தைகளை உச்சரிக்கிறார்—சட்டவிதிகளை அவர் தேவனுடைய ஜனங்களுக்கு வெளியிடுகிறார்: “பூமியை நிரப்பும் மனுஷர், நட்சத்திரங்களைப் போல் ஏராளமானவர்கள் என்றாலும், அவர்கள் அனைவரையும் என் சொந்த உள்ளங்கையைப் போல் நான் தெளிவாக அறிவேன். மேலும், என்னை ‘நேசிக்கும்’ மனுஷரும் கடற்கரை மணலத்தனையாய் எண்ணற்றவர்களாக இருந்தாலும், ஒரு சிலரே என்னால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்: என்னை ‘நேசிப்பவர்களை’ விடுத்து, பிரகாசமான வெளிச்சத்தைப் பின்தொடர்பவர்களை மட்டுமே நான் தேர்ந்தெடுக்கிறேன்.” உண்மையில், தேவனை நேசிப்பதாகச் சொல்பவர்கள் பலர் உள்ளனர், ஆனால் தங்கள் இருதயத்தில் அவரை நேசிப்பவர்கள் மிகச் சிலரே உள்ளனர். மூடியிருக்கும் கண்களால் கூட இதைத் தெளிவாகப் பகுத்தறிய முடியும் என்று தோன்றுகிறது. தேவனை விசுவாசிப்பவர்களின் முழு உலகமும் உண்மையில் இப்படித்தான் இருக்கிறது. இதில், இப்போது தேவன் “ஜனங்களை வகைப்படுத்தும்” கிரியைக்குத் திரும்பியிருப்பதைக் காண்கிறோம், இது தேவன் விரும்புவதும், தேவனைத் திருப்திப்படுத்துவதும் இன்றைய திருச்சபை அல்ல, மாறாக வகைப்படுத்தப்பட்ட பின்பு இருக்கும் ராஜ்யமே என்பதைக் காட்டுகிறது. இந்த நேரத்தில், அவர் அனைத்து “ஆபத்தை விளைவிக்கும் நபர்களுக்கும்” மேலும் ஓர் எச்சரிக்கையைக் கொடுக்கிறார்: தேவன் செயல்படுவாரானால், தேவன் செயல்பட ஆரம்பித்தவுடன், இந்த ஜனங்கள் ராஜ்யத்திலிருந்து அழிக்கப்படுவார்கள். தேவன் ஒருபோதும் காரியங்களைக் கடமைக்காகச் செய்வதில்லை. அவர் எப்போதும் “சரியானது சரிதான், தவறு தவறுதான்” என்ற கொள்கையின்படி செயல்படுகிறார், மேலும் அவர் பார்க்க விரும்பாதவர்கள் இருந்தால், எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தாமல் அவர்களைத் தடுக்கும்படிக்கு, அவர் அவர்களை முற்றிலும் அழிக்க முடிந்த அனைத்தையும் செய்கிறார். இது “குப்பையை அகற்றி முழுமையாகச் சுத்தம் செய்தல்” என்று அழைக்கப்படுகிறது. தேவன் மனுஷனுக்கு ஆட்சிமுறை ஆணைகளை அறிவிக்கும் தருணமே, அவர் தமது அற்புதமான செயல்களையும் அவருக்குள் உள்ள அனைத்தையும் முன்வைக்கும் தருணமாக இருக்கிறது, பின்னர் அவர் கூறுகிறார்: “மலைகளில் எண்ணற்ற காட்டு மிருகங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் எனக்கு முன்பாக நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஆடுகளைப் போலவே உள்ளன. புரிந்துகொள்ள முடியாத மர்மங்கள் அலைகளுக்கு அடியில் உள்ளன, ஆனால் அவை பூமியின் முகத்தின் மீதுள்ள எல்லாவற்றையும் போலத் தெளிவாகத் தங்களை என்னிடம் வெளிப்படுத்துகின்றன; மேலேயுள்ள வானத்தில் மனுஷனால் ஒருபோதும் அடைய முடியாத பகுதிகள் உள்ளன, ஆனாலும் அணுக முடியாத அந்தப் பகுதிகளில் நான் சுதந்திரமாக நடக்கிறேன்.” தேவனுடைய அர்த்தம் இதுதான்: மனுஷனின் இருதயம் எல்லாவற்றைப்பார்க்கிலும் திருக்குள்ளதாக இருந்தாலும், ஜனங்களுடைய எண்ணங்களின் நரகம் போல முடிவில்லாத இரகசியமாகத் தோன்றினாலும், தேவன் மனுஷனின் உண்மையான நிலைகளை அவரது கரத்தின் மறுபுறத்தைப்போல நன்கு அறிந்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷன் ஒரு மிருகம் மற்றும் ஒரு காட்டு மிருகத்தை விட மிகவும் கொடூரமானவனாக இருக்கிறான், ஆனாலும் யாரும் எழுந்து எதிர்க்கத் துணியாத அளவிற்கு தேவன் மனுஷனை ஜெயங்கொண்டிருக்கிறார். உண்மையில், தேவன் எண்ணுகிறபடி, ஜனங்கள் தங்கள் இருதயங்களில் என்ன நினைக்கிறார்கள் என்பது எல்லாவற்றிலும், எல்லாவற்றை விடவும் சிக்கலானது; இது புரிந்து கொள்ள முடியாதது, ஆனால் தேவன் மனுஷனின் இருதயத்தைக் கருத்தில் கொண்டிருக்கவில்லை. அவர் தமது கண்களுக்கு முன்பாக அதை ஒரு சிறிய புழுவாக மட்டுமே கருதுகிறார். அவருடைய வாயிலிருந்து வருகிற ஒரு வார்த்தையால், அவர் அதை ஜெயங்கொள்கிறார்; அவர் விரும்பும் எந்த நேரத்திலும், அவர் அதை தாக்குகிறார்; அவரது கரத்தின் சிறிய அசைவால், அவர் அதைச் சிட்சிக்கிறார்; விரும்புகிறபடி, அவர் அதைக் கண்டிக்கிறார்.

இன்று, எல்லா ஜனங்களும் இருளுக்குள் இருக்கிறார்கள், ஆனால், இறுதியாக தேவனுடைய வருகையால், அவர்கள் அவரைப் பார்த்ததால் ஒளியின் சாராம்சத்தை அறிந்துகொள்கிறார்கள். உலகம் முழுவதும், யாராலும் மூச்சு விட முடியாதபடிக்கு, ஒரு பெரிய கருப்பு பானை பூமியின் மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருப்பதைப் போல் உள்ளது; அவர்கள் அனைவரும் நிலைமையை மாற்றியமைக்க விரும்புகிறார்கள், ஆனால் ஒருவரும் பானையை ஒருபோதும் தூக்கவில்லை. தேவனுடைய மனுவுருவாதலின் காரணமாக மட்டுமே ஜனங்களுடைய கண்கள் திடீரென்று திறக்கப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் நடைமுறை தேவனைப் பார்த்திருக்கிறார்கள். எனவே, தேவன் அவர்களிடம் ஒரு கேள்வித் தொனியில் கேட்கிறார்: “மனுஷன் என்னை ஒருபோதும் வெளிச்சத்தில் அடையாளம் காண்பதில்லை, ஆனால் என்னை இருண்ட உலகில் மட்டுமே பார்க்கிறான். இன்று நீங்கள் அதே சூழ்நிலையில் இல்லையா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வெறித்தனங்களின் உச்சக்கட்டத்தில்தான் நான் என் கிரியையைச் செய்ய மாம்சத்தை முறையாக அணிந்துக்கொண்டேன்.” தேவன் ஆவிக்குரிய உலகின் உண்மையான சூழ்நிலைகளை மறைக்கவில்லை, மனுஷனின் இருதயத்தின் உண்மையான நிலையையும் அவர் மறைக்கவில்லை, இதனால்தான் அவர்: “நான் மனுஷரூபமெடுத்த தேவனை அறிந்துகொள்ள என் ஜனங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களை நான் தூய்மைப்படுத்துவதும் தெளிவாகத் தெரிகிறது. எனது நிர்வாகக் கட்டளைகளின் தீவிரத்தினால், அநேக ஜனங்கள் இன்னும் என்னால் புறம்பாக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். உங்களைச் சமாளிக்க, உங்கள் சொந்த சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்யாவிட்டால்—நீங்கள் இதைச் செய்யாவிட்டால், பவுல் என் கைகளிலிருந்து தப்பிக்கவே முடியாத சிட்சையைப் பெற்றதைப் போல, நரகத்தினுள் தள்ளும்படிக்கு நான் வெறுக்கும், நிராகரிக்கும் பொருளாக நீங்கள் நிச்சயம் மாறிப்போவீர்கள்.” என்று ஜனங்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறார். தேவன் அநேக காரியங்களைச் சொல்கிறார், அப்போதுதான் ஜனங்கள் தங்கள் வழிகளை அதிகமாகக் காத்து, தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளுக்கு மிகவும் பயப்படுகிறார்கள்; அப்போதுதான் தேவனுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும் மற்றும் அவருடைய மகத்துவத்தை வெளிப்படுத்த முடியும். இங்கே, பவுல் மீண்டும் ஒருமுறை குறிப்பிடப்படுகிறான், அதனால் ஜனங்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வார்கள்: அவர்கள் தேவனால் தண்டிக்கப்படுபவர்களாக இருக்கக்கூடாது, ஆனால் தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இது மட்டுமே ஜனங்களை, அவர்களின் பயத்தின் மத்தியில், தேவனுக்கு முன்பாகத் தங்கள் கடந்தகாலத் தீர்மானத்தின் இயலாமையைத் திரும்பிப் பார்க்க வைக்கும், இது அவரை முழுமையாக திருப்திப்படுத்துகிறது, இது அவர்களுக்கு இன்னும் பெரிய வருத்தத்தையும் நடைமுறை தேவனைப் பற்றிய அதிக அறிவையும் அளிக்கிறது. எனவே, அப்போதுதான் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளில் சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியும்.

“மனுஷன் என் மாம்சத்தில் என்னை அறிந்திருக்கவில்லை; அதற்கும் மேலாக, அவன் மாம்ச சரீரத்தில் வசிக்கும் தனது சுயத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டான். அநேக ஆண்டுகளாக, மனுஷர் என்னை ஏமாற்றி வருகிறார்கள், என்னை வெளியில் இருந்து வரும் விருந்தினராக நடத்துகிறார்கள். அநேக முறை….” இந்த “அநேக முறை” என்பது தேவனுக்கு விரோதமான மனுஷனுடைய எதிர்ப்பின் யதார்த்தங்களைப் பட்டியலிடுகிறது, சிட்சைக்கான உண்மையான உதாரணங்களைக் காட்டுகிறது; இது பாவத்தின் நிரூபணமாக இருக்கிறது, அதை யாரும் மறுபடியும் மறுக்க முடியாது. எல்லா ஜனங்களும் தேவனை, தாங்கள் விரும்பியபடி பயன்படுதக்கூடிய வீட்டிற்கு உபயோகமான சில பொருட்களைப் போன்றதான, ஏதோ ஓர் அன்றாடப் பொருளைப் போலவே பயன்படுத்துகிறார்கள். தேவனை யாரும் நேசிப்பதில்லை; தேவனுடைய அழகையோ அல்லது அவரது மகிமையான முகத்தையோ அறிய யாரும் முயற்சி செய்திருக்கவில்லை, மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை. எவரும் தேவனைத் தங்கள் இருதயத்தில் பிரியமான நபராகப் பார்த்ததுமில்லை; அவர்கள் அனைவரும் அவர்களுக்குத் தேவைப்படும்போது அவரை வெளியே இழுத்து வருகிறார்கள், அவர்களுக்குத் தேவைப்பாடாதபோது ஓரத்தில் தூக்கி எறிந்துவிட்டு, அவரைப் புறக்கணிக்கிறார்கள். மனுஷனைப் பொறுத்தவரை, அவன் தன் விருப்பப்படி கையாளத்தக்க, ஒரு கைப் பொம்மையாக தேவன் இருப்பதைப் போலவும், மேலும் அவன் ஆசைப்படுகிறபடி அல்லது விரும்புகிறபடியெல்லாம் கோரிக்கை வைக்கலாம் என்பது போலவும் இருக்கிறது. ஆனால் தேவன் கூறுகிறார், “என் மனுஷ அவதரிப்புக் காலகட்டத்தில், நான் மனுஷரின் பலவீனத்திற்கு அனுதாபம் காட்டவில்லை என்றால், மனுஷர் அனைவரும், என் அவதரிப்பின் காரணமாக மட்டுமே, அவர்களின் புத்தி பேதலிக்கும் அளவிற்குப் பயந்து, அதன் விளைவாகப் பாதாளத்தினுள் விழுவர்,” இது தேவனுடைய மனுவுருவாதலின் முக்கியத்துவம் எவ்வளவு பெரியது என்பதைக் காட்டுகிறது. முழு மனிதகுலத்தையும் ஆவிக்குரிய உலகிலிருந்து அழிப்பதற்குப் பதிலாக, அவர் மாம்சத்தில் மனிதகுலத்தை ஜெயங்கொள்ள வந்திருக்கிறார். இவ்வாறு, வார்த்தை மாம்சமானபோது, யாரும் அறியவில்லை. தேவனுக்கு மனுஷனின் பலவீனத்தில் அக்கறை இல்லை என்றால், அவர் மாம்சமாக மாறியபோது வானமும் பூமியும் தலைகீழாக மாறியிருந்தால், எல்லா ஜனங்களும் அழிக்கப்பட்டிருப்பார்கள். புதியதை விரும்புவதும், பழையதை வெறுப்பதும் மனுஷர்களின் இயல்பில் உள்ளதாலும், விஷயங்கள் நன்றாக நடக்கும் போது கெட்ட காலங்களை மறந்து விடுவதாலும், தாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது யாருக்கும் தெரியாததாலும், இன்று அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஜெயித்தார்கள் என்பதைப் பொக்கிஷமாகக் கருத வேண்டும் என்று தேவன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறார்; நாளைய தினத்திற்காக, அவர்கள் இன்னும் அதிகமாக இன்று பொக்கிஷமாக நினைவில் வைத்திருக்க வேண்டும், மேலும், எஜமானரை அடையாளம் காணாமல் உயரத்தில் ஏறும் ஒரு மிருகத்தைப் போல இருக்கக் கூடாது, மேலும் அவர்கள் எந்த ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் வாழ்கிறார்களோ அந்த ஆசீர்வாதங்களைப் பற்றி அறியாமல் இருக்கக்கூடாது. இதனால், ஜனங்கள் நன்னடத்தை உடையவர்களாகி, இனித் தற்பெருமை அல்லது அகந்தை கொள்ள மாட்டார்கள், மேலும் மனுஷனின் சுபாவம் நல்லது அல்ல, தேவனுடைய இரக்கமும் அன்பும் மனுஷன் மீது வந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்; அவர்கள் அனைவரும் தண்டனைக்குப் பயப்படுகிறார்கள், ஆகவே, மேற்கொண்டு எதையும் செய்யத் துணிவதில்லை.

அடிக்குறிப்பு:

அ. “சூ நதி” என்பது எதிர்க்கும் வல்லமைகளுக்கு இடையிலான எல்லையை உருவகப்படுத்திக் கூறுவதைக் குறிக்கிறது.

முந்தைய: பிற்சேர்க்கை: அத்தியாயம் 2

அடுத்த: அத்தியாயம் 13

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக