ராஜ்யத்தின் காலத்தில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டிய பத்து நிர்வாகக் கட்டளைகள்

1. மனிதன் தன்னைத்தானே மகிமைப்படுத்தவோ, தன்னைத்தானே பெருமைப்படுத்தவோ கூடாது. அவன் தேவனையே தொழுதுகொண்டு அவரையே உயர்த்தவேண்டும்.

2. தேவனின் கிரியைக்கு நன்மையாக இருக்கும் எல்லாவற்றையும் செய்வாயாக மற்றும் தேவனுடைய கிரியையின் நலன்களுக்குப் பாதகமான எதையும் செய்யாதே. தேவனுடைய நாமம், தேவனின் சாட்சி, மற்றும் தேவனின் கிரியை ஆகியவற்றைப் பாதுகாப்பாயாக.

3. பணம், பொருட்கள், மற்றும் தேவனின் வீட்டில் இருக்கும் அனைத்துச் சொத்துக்களும் மனிதனால் கொடுக்கப்பட வேண்டிய காணிக்கைகள் ஆகும். மனிதனின் காணிக்கைகள் தேவன் அனுபவிப்பதற்கானவை, ஆதலால் இந்தக் காணிக்கைகளை ஆசாரியன் மற்றும் தேவன் மட்டுமே அனுபவிக்கலாம். தேவனே இந்தக் காணிக்கைகளை ஆசாரியனுக்குப் பகிர்ந்தளிக்கிறார்; அவற்றில் எந்த ஒரு பகுதியையும் அனுபவிக்க வேறு யாரும் தகுதியுள்ளவர்களோ அல்லது உரிமையுள்ளவர்களோ அல்ல. மனிதனின் எல்லா காணிக்கைகளும் (பணம் மற்றும் அனுபவிக்கக் கூடிய பொருட்கள்) தேவனுக்கு அளிக்கப்படுகின்றன, மனிதனுக்கு அல்ல, ஆகவே இந்தப் பொருட்களை மனிதன் அனுபவிக்கக் கூடாது; மனிதன் அவற்றை அனுபவித்தால், அது காணிக்கையைத் திருடுவது என்பதாகும். இதைச் செய்கிற எவன் ஒருவனும் யூதாஸே, ஏனெனில், யூதாஸ் ஒரு துரோகி மட்டுமல்லாமல், பணப் பையில் போட்டவற்றைத் தனக்காகவும் பயன்படுத்திக்கொண்டான்.

4. மனிதன் ஒரு சீர்கெட்ட மனநிலையைக் கொண்டவன் மற்றும் உணர்ச்சிகளால் ஆட்டிப்படைக்கப்படுகிறவன். இவ்வாறிருக்க, தேவனைச் சேவிக்கும் வேளையில் உடன் யாரும் இல்லாதபோது ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக வேலை பார்க்கக்கூடாது. அவ்வாறு செய்வதாகக் கண்டுபிடிக்கப்படும் யார் ஒருவரும் விதிவிலக்கின்றி வெளியேற்றப்படுவார்.

5. தேவனைக் குறித்து நியாயந்தீர்க்கவோ அல்லது தேவன் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் குறித்து சாதாரணமாக விவாதிக்கவோ கூடாது. மனிதன் செய்யவேண்டியது போல் செய்யுங்கள், மேலும் மனிதன் பேசவேண்டியது போல் பேசுங்கள், மற்றும் வரம்புகளை மீறவோ எல்லைகளைக் கடக்கவோ வேண்டாம். தேவனின் மனநிலையைப் புண்படுத்தும் எதையும் தவிர்க்க உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள் மற்றும் எங்கு அடியெடுத்து வைக்கும்போதும் கவனமாக இருங்கள்.

6. மனிதனால் செய்யப்பட வேண்டியவற்றைச் செய், உன் கடமைகளை நிறைவேற்று, உன் பொறுப்புகளை நிறைவேற்று, மற்றும் கடமையைக் கடைப்பிடி. நீ தேவனை விசுவாசிக்கிறபடியால் நீ தேவனின் கிரியைக்கு உன் பங்களிப்பை வழங்க வேண்டும்; இல்லையென்றால், தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும், பானம் பண்ணவும் உனக்குத் தகுதி இல்லை, மேலும் தேவனுடைய வீட்டில் வாழ்வும் தகுதியற்றவன்.

7. சபையின் கிரியை மற்றும் காரியங்களில், தேவனுக்குக் கீழ்ப்படிவதோடல்லாமல், ஒவ்வொன்றிலும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் மனிதனின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். இலேசான மீறுதல் கூட ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஆகும். கீழ்ப்படிதலில் முழுமையுள்ளவர்களாக இருங்கள், மேலும் சரியா தவறா என்று பகுத்தாரய வேண்டாம்; எது சரி அல்லது தவறு என்பது உங்களுக்குச் சம்பந்தம் இல்லாதது. நீங்கள் முழுமையான கீழ்ப்படிதலிலேயே அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

8. தேவனை விசுவாசிக்கிறவர்கள் தேவனுக்குக் கீழ்படிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்; யாரொருவரையும் பெருமைப்படுத்தாதே அல்லது நோக்கிப்பார்க்காதே; தேவனை முதலாவதாகவும், நீ நோக்கிப்பார்ப்பவரை இரண்டாவதாகவும், உன்னை மூன்றாவதாகவும் வைக்காதே. உன் இருதயத்தில் யாரொருவரும் இடம்பெறக் கூடாது, மற்றும் நீ ஆட்களை தேவனோடு வைத்தோ அல்லது அவருக்கு இணையாகவோ—குறிப்பாக நீ போற்றுபவர்களைக்—கருதக் கூடாது. இது தேவனால் பொறுத்துக்கொள்ள முடியாதது ஆகும்.

9. சபையின் கிரியையில் உன் சிந்தனைகளை வை. உன் சொந்த மாம்சத்தின் கண்ணோட்டங்களை ஒதுக்கி வை, குடும்ப விஷயங்கள் குறித்துத் தீர்க்கமாக இரு, தேவனின் கிரியைகளுக்கு முழு இருதயத்தோடு உன்னை அர்ப்பணி, தேவனின் கிரியைக்கு முதலிடம் கொடுத்து உன் சொந்த வாழ்க்கையை இரண்டாம் பட்சமாக வை. இதுவே ஒரு பரிசுத்தவானுக்குரிய கண்ணியமாகும்.

10. விசுவாசத்தில் இல்லாத உறவுகளை (உன் குழந்தைகள், உன் கணவன் அல்லது மனைவி, உன் சகோதரிகள் அல்லது உன் பெற்றோர்கள், போன்றோர்) கட்டாயப்படுத்தி சபைக்குள் கொண்டுவரக் கூடாது. தேவனின் வீட்டில் உறுப்பினர்களுக்குப் பஞ்சமில்லை, மேலும் பயனற்ற மக்களால் அதன் எண்ணிக்கையை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. சந்தோஷமாக விசுவாசிக்காத எவரையும் சபைக்குள் வழிநடத்தக்கூடாது. இந்தக் கட்டளை எல்லா மக்களுக்குமானது. நீங்கள் சரிபார்த்து, கண்காணித்து, இந்த விஷயம் குறித்து ஒருவருக்கொருவர் நினைவூட்ட வேண்டும்; யாரும் இதை மீறக்கூடாது. விசுவாசத்தில் இல்லாத உறவினர் யாரும் தயக்கத்தோடு சபைக்குள் வந்தாலும், அவர்களுக்குப் புத்தகங்களோ அல்லது ஒரு புதுப் பெயரோ கொடுக்கக் கூடாது; இத்தகையவர்கள் தேவனின் வீட்டார் இல்லை, மேலும் தேவைப்படும் எந்த வழியிலும் அவர்கள் சபைக்குள் நுழைவது தடுக்கப்பட வேண்டும். பிசாசுகளின் ஆக்கிரமிப்பால் சபைக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நீதான் வெளியேற்றப்படுவாய் அல்லது உன் மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மொத்தத்தில், இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு, நீ பொறுப்பற்றும் நடந்துகொள்ளக் கூடாது அல்லது அதை பயன்படுத்தித் தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக்கொள்ளவும் கூடாது.

முந்தைய: சர்வவல்லவரின் பெருமூச்சு

அடுத்த: பிற்சேர்க்கை 1 தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக