அத்தியாயம் 37

காலங்கள்தோறும், நான் செய்த எல்லாக் கிரியைகளிலும், அதனுடைய ஒவ்வொரு கட்டமும் என்னுடைய தகுந்த கிரியை முறையை உள்ளடக்கியுள்ளன. இந்தக் காரணத்தால், என்னுடைய அன்பிற்குரிய ஜனங்கள் தூய்மைக்கு மேல் தூய்மையடைந்து என்னுடைய பயன்பாட்டுக்காக அதிக அதிகமாய்ப் பொருத்தம் உள்ளவர்கள் ஆகியிருக்கிறார்கள். இருப்பினும், அதே காரணத்துக்காகத்தான், என்னுடைய கிரியை முறைகள் அதிகரிக்கும்போது, ஜனங்களின் எண்ணிக்கை குறைகிறது, மேலும் இது அவர்களை ஆழ்ந்த சிந்தனைக்குள் ஆழ்த்துகிறது என்பது “துரதிர்ஷ்டவசமான விஷயம்” ஆகும். நிச்சயமாக, இன்றைய இந்தக் கிரியையும் கூட அதற்கு விதிவிலக்கல்ல, மேலும் பெரும்பானமையான ஜனங்கள் மீண்டும் ஒருமுறை சிந்தனைக்குள் ஆழ்ந்துவிட்டனர்; இது இப்படி இருக்க, என்னுடைய முறைகளின் மாற்றத்தால், இன்னும் கூட பின்வாங்கிப் போக வேண்டியவர்கள் சிலர் இருக்கின்றனர். இதை இப்படி விவரிக்கலாம்: இது என்னால் முன்தீர்மானிக்கப்பட்ட ஏதோ ஒரு விஷயம், ஆனால் நான் செய்த ஏதோ ஒன்றல்ல. சிருஷ்டிப்பில் இருந்து, என் கிரியையின் முறைகளின் விளைவாகப் பல ஜனங்கள் விழுந்திருக்கிறார்கள், மேலும் பலர் தங்கள் வழியை இழந்திருக்கிறார்கள். இருந்தாலும், ஜனங்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்—நான் அன்பாக இல்லை என்றோ அல்லது மிகக் கொடூரமானவர் என்றோ அவர்கள் உணர்ந்தாலும்—அவர்களது புரிதல் சரியாக இருந்தாலும் சரி அல்லது தவறாக இருந்தாலும் சரி, நான் ஒரு விளக்கத்தைக் கொடுப்பதைத் தவிர்க்கிறேன். நாம் முதலில் இந்த விவாதத்தின் முக்கியக் கருத்தைப் பற்றி ஐக்கியம் கொள்ளுவோம். இதன் மூலம், அவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதைத் தவிர்த்து, எல்லோரும் ஒரு முழுப் புரிதலை அடைவார்கள். ஊமைகள் போன்ற மௌனத்தில் துன்பப்படுமாறு நான் ஜனங்களை வற்புறுத்த மாட்டேன்; மாறாக. எனக்கு எதிராகக் குறை சொல்வதில் இருந்து அவர்களைத் தவிர்க்க அவர்களுக்கு நான் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குவேன். ஒரு நாள், அவர்களின் சிட்சையின் நடுவில் ஒவ்வொருவரும் உண்மையாகத் துதி சொல்லும்படி வைப்பேன். இந்த முறையை நீ ஒத்துக்கொள்கிறாயா? இது ஜனங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா?

சிட்சையின் யுகத்தின் முன்னுரையில், நான் முதலில் ஜனங்களுக்கு “யுகம்” என்பதன் பின்னணியில் இருக்கும் பொதுவான அர்த்தத்தைக் கூறுவேன். இதனால் அவர்கள் என்னை அவமதிக்க மாட்டார்கள். அதாவது, என் கிரியைக்கு ஏற்பாடுகளைச் செய்வேன், அது யாராலும் மாற்றப்பட மாட்டாது, மேலும் அவற்றை யாராவது மாற்றினால் அவர்களை நிச்சயமாக சும்மா விடமாட்டேன்: நான் அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பேன். நீ அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுவாயா? இவை எல்லாம் “தடுப்பூசிகள்.” புதிய முறைகளில் எல்லா ஜனங்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், அடைய வேண்டிய முதலும் முக்கியமானதுமான இலக்கு தங்களது உண்மையான நிலைகளைப் பற்றிய ஒரு புரிதலைப் பெறுவதே ஆகும். தன்னைப்பற்றிய புரிதலைப் பெறும் முன்னர், சபையில் ஒருவரும் கவனக் குறைவாகப் பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள், மேலும் இந்த விதியை மீறும் எவரையும் நான் நிச்சயமாகச் சிட்சிப்பேன். இந்த நாளில் இருந்து எல்லா அப்போஸ்தலர்களும் சபையில் பட்டியலிடப்பட்டு அவரவர் இஷ்டப்படி அங்கும் இங்கும் அலைவது தடுக்கப்படும்—அது குறைந்த கனியையே கொடுக்கும். அவர்கள் யாவரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதுபோல் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் என்னை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். நடந்தது என்னவாக இருந்தாலும், இன்று அவையெல்லாம் இறந்தகாலத்தில் இருக்கின்றன, மேலும் அவற்றை மீண்டும் கொண்டுவரக் கூடாது. இனிமேல், “அப்போஸ்தலர்” என்ற சொல் ஒழிக்கப்படும் மேலும் ஒருபோதும் பயன்படுத்தப்படாது, ஆகவே எல்லா ஜனங்களும் தங்கள் “பதவிகளில்” இருந்து கீழே வந்து தங்களை அறிந்துகொள்ளலாம். இது, நிச்சயமாக, அவர்களுடைய இரட்சிப்பிற்காகவே. “பதவி” என்பது கிரீடம் அல்ல; அது அழைப்பதற்கான ஒரு சொல்லே. நான் சொல்லுவதின் அர்த்தம் உனக்குப் புரிகிறதா? சபைகளை வழிநடத்துகிறவர்கள் இன்னும் தங்கள் சொந்த சபைகளுக்குள் சபை வாழ்க்கையையே வாழ்கிறார்கள், ஆனால் நிச்சயமாக இது ஒரு மாற்றமுடியாத விதி அல்ல. தேவைப்படும்போது, பிற முந்தைய அப்போஸ்தலர்களுடன் இணைந்து சபைகளுக்குச் செல்லலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் சபையின் ஐக்கியம் அதிகரிக்க வேண்டும்—அவர்களின் உறுப்பினர்கள் எவரும் உண்மையிலேயே சபை வாழ்க்கையை வாழவில்லை. இருந்தபோதிலும், நீங்கள் எல்லோரும் சுய அறிவிலும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு எதிரான கலகத்திலும் இணைந்திருக்க வேண்டும். இதுவே என் சித்தம். எத்தனை பேர் சொல்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை; மாறாக, என்னுடைய ஜனங்கள் யாவரும் ஒன்றாக இணைந்து வருவதே மிகவும் முக்கியமானது, ஏனெனில் உண்மையாகச் சாட்சி அளிப்பதற்கு அது ஒன்றுதான் வழி. கடந்த காலத்தில், தங்களைத் தாங்களே அறிந்திருப்பதாக ஜனங்கள் எல்லோரும் கூறினார்கள், ஆனால் நான் எண்ணற்ற வார்த்தைகளைப் பேசியிருக்கிறேன்—மேலும் உங்களை நீங்களே எவ்வளவு புரிந்துகொண்டு இருக்கிறீர்கள். ஒருவனுடைய பதவி எவ்வளவு உயர்வாக இருக்கிறதோ, ஒருவன் தன்னை தள்ளி வைப்பது அவ்வளவு கடினமாக இருக்கும், ஒருவனுடைய நம்பிக்கை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, சிட்சிக்கப்படும்போது அதிகமாக அவன் அவ்வளவு அதிகமாகத் துன்பப்படுவான். இதுவே என் மனுக்குலத்தின் இரட்சிப்பு. நீ புரிந்து கொள்கிறாயா? இதை வெறுமனே முகமதிப்பாக மட்டும் எடுத்துக்கொள்ளாதே; அப்படி செய்வது மிக ஆழமற்றதாக இருக்கும் மேலும் மதிப்பு ஒன்றும் இருக்காது. இங்கு அடிப்படை அர்த்தங்களை நீ புரிந்து கொள்ளுகிறாயா? சபையின் அங்கத்தினர்கள் தங்களைத் தாங்களே புரிந்துகொள்ள முடிந்தால், பின் இது அந்த வகையான ஜனங்களை உண்மையிலேயே என்னில் அன்புகூருவதை எடுத்துகாட்டும். அதாவது, நீ ஜனங்களோடு அப்பம் பிய்க்காவிட்டால், அவர்களுடைய கஷ்டத்தை உன்னால் புரிந்துகொள்ள மாட்டாய். இப்படிச் சொல்வதை நீ எவ்வாறு விளக்குகிறாய்? முடிவில், அவர்களுடைய சிட்சையின் சமயத்தில் நான் எல்லா ஜனங்களையும் தங்களைத் தாங்களே அறியும்படி வைப்பேன். அது நிகழும் போது அவர்களைப் பாடிச் சிரிக்க வைப்பேன். என்னைத் திருப்திப்படுத்தும்படி உன்னிடம் உண்மையில் விசுவாசம் உள்ளதா? அப்படியானால், நீங்கள் நடைமுறையில் என்ன செய்ய வேண்டும்? இப்போதில் இருந்து, ஒவ்வொரு சபையின் விவகாரங்களும் அந்தந்த சபையில் இருக்கும் தகுந்த நபர்களால் கையாளப்படும். மேலும் அப்போஸ்தலர்கள் சபை வாழ்க்கையை மட்டுமே வாழ்வார்கள். இதுதான் “அனுபவ வாழ்க்கை” என அழைக்கப்டுகிறது. நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?

மனுக்குலத்தின் மீது சிட்சை அதிகாரபூர்வமாக வருவதற்கு முன், நான் முதலில் மக்களிடம் “வரவேற்கும் கிரியையைச்” செய்ய வேண்டும். இதானல், இறுதியில் அவர்கள் எல்லோரும் என்னைத் திருப்திப்படுத்துவார்கள். விலகப் போகிறவர்கள் கூட செல்வதற்கு முன் துன்பப்படவும் சாட்சி அளிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் நான் அவர்களை இலகுவாக விட மாட்டேன். ஜனங்களின் குற்றங்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்ற என் மனநிலையையும், மேலும் சொல்வதைச் செய்யும் என் மனநிலையையும் இது காட்டுகிறது. இது இப்படி இருக்க, “நான் சொல்வதுதான் அதன் அர்த்தம், நான் சொல்வது செய்யப்பட வேண்டும், நான் செய்வது என்றென்றைக்கும் நிலைநிற்கும்” என்ற என் வாக்குத்தத்தத்தை நான் நிறைவேற்றுவேன். வார்த்தைகள் என் வாயில் இருந்து புறப்படுவது போல, என்னுடைய ஆவியாவர் அவருடைய கிரியையை ஆரம்பித்துவிடுகிறார். தங்கள் கைகளில் வைத்திருக்கிற “பொம்மைகளுடன்” வேண்டுமென்றே விளையாட யார் துணிவார்கள்? என்னுடைய சிட்சையை எல்லோரும் மரியாதையுடனும் கீழ்ப்படிதலுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரால் அதில் இருந்து தப்பிக்க முடியும்? என்னுடையதைத் தவிர வேறு பாதை இருக்க முடியுமா? இன்று உன்னை நான் உலகில் இருக்க அனுமதித்திருக்கிறேன், மற்றும் நீ களிகூறுகிறாய்; நாளை நான் உன்னைப் பரலோகத்திற்குள் அனுமதிப்பேன், நீ என்னைத் துதிப்பாய். அதற்கு அடுத்த நாள், நான் உன்னை நிலத்திற்குக் கீழ் போடுவேன், அங்கு நீ சிட்சிக்கப்படுவாய். இவையெல்லாம் என்னுடைய கிரியையின் தேவைகள் அல்லவா? என்னுடைய தேவைகளுக்காக துரதிர்ஷ்டத்தால் துன்புறாமலும் ஆசீர்வாதங்களை அடையாமலும் இருப்பவன் யார்? நீங்கள் விதிவிலக்காக இருக்க முடியுமா? பூமியின் மீதுள்ள என் மக்களாக, என்னுடைய தேவைகளுக்காகவும் சித்தத்திற்காகவும் நீங்கள் என்ன செய்யவேண்டும்? உங்கள் இருதயங்களில் என்னை வெறுக்கிற அதே வேளையில் உங்கள் வாயால் என் பரிசுத்த நாமத்தைத் துதிப்பதாக இருக்க முடியுமா? எனக்கான கிரியை செய்து என் இருதயத்தைத் திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல் உங்களை நீங்களே புரிந்துகொள்வதும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு எதிராகக் கலகம் செய்வதும்—இவைகள் எல்லாம் எளிய பணிகள், மேலும் அவற்றைச் செய்வதற்கு நீங்கள் விலைக்கிரயம் கொடுக்க வேண்டும். நான் “விலைக்கிரயம்” என்று சொல்லும்போது எதை அர்த்தப்படுத்துகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் இப்போது இதை விவாதிக்க மாட்டேன் மேலும் நான் ஜனங்களுக்கு நேரடியான பதில்களைக் கூறமாட்டேன். மாறாக, அவர்கள் தாங்களாகவே சிந்தித்துப் பார்க்கவும், அதன் பின்னர் அவர்கள் என் கேள்விகளுக்குத் தங்கள் செயல்கள் மற்றும் நடத்தைகள் மூலம் நடைமுறையில் பதில்சொல்ல வைப்பேன். உங்களால் அதைச் செய்ய முடியுமா?

ஏப்ரல் 27, 1992

முந்தைய: அத்தியாயம் 36

அடுத்த: அத்தியாயம் 38

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக