சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்

சரியான திருச்சபை வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் பிரசங்கங்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் ஏன் இன்னும் திருச்சபை வாழ்க்கை முன்னேறாமல், இன்னும் அதே பழையதாகவே இருக்கிறது? அங்கே ஏன் இன்னும் முற்றிலும் புதிய மற்றும் வேறுபட்ட வாழ்க்கை வழிமுறை இல்லை? தொண்ணூறுகளில் பிறந்த ஒருவர் கடந்த சகாப்தத்தின் பேரரசரைப்போல் வாழ்வது இயல்பாக இருக்க முடியுமா? முந்தின சகாப்தங்களில் அரிதாய் ருசிக்கப்பட்ட அருஞ்சுவை உணவுகளாக இருந்தவற்றை ஜனங்கள் இப்போது புசித்தும் குடித்தும் வருகின்ற போதிலும், திருச்சபை வாழ்க்கையில் எதிர்பாராத பெரும் மாற்றங்கள் எதுவும் இல்லை. இது பழைய திராட்சைரசத்தைப் புதிய புட்டிகளில் ஊற்றி வைப்பதைப் போல் இருக்கிறது. பிறகு தேவன் இவ்வளவு கூறியும் என்ன பிரயோஜனம்? பெரும்பாலான இடங்களில் உள்ள திருச்சபைகள் இன்னும் மாறவே இல்லை. இதை நான் என் சொந்தக் கண்களினால் பார்த்திருக்கிறேன், மேலும் இது என் இருதயத்தில் தெளிவாக இருக்கிறது; எனக்குத் திருச்சபை வாழ்க்கை பற்றிய உள்ளனுபவம் இல்லாதபோதிலும், திருச்சபைக் கூட்டங்களின் நிலைகளை உள்ளங்கையைப் போல நான் நன்கு அறிந்திருக்கிறேன். அவர்கள் அதிகமான முன்னேற்றமடையவில்லை. முன்பு சொன்ன அதே முதுமொழி தான்—பழைய திராட்சைரசத்தைப் புதிய புட்டிகளில் ஊற்றி வைப்பதைப் போல் இது இருக்கிறது. எதுவுமே மாறவில்லை! யாரோ ஒருவர் அவர்களை மேய்க்கும்போது அவர்கள் அக்கினியைப் போல் எரிகிறார்கள், ஆனால் அவர்களை ஆதரிப்பதற்கு யாரும் இல்லை என்றால், அவர்கள் ஒரு பனிக்கட்டியைப் போல் இருக்கிறார்கள். நடைமுறைக்குரிய காரியங்களை அநேகரால் பேசமுடிவதில்லை, மேலும் யாராலும் மிக அரிதாகவே பொறுப்பை எடுத்துக்கொள்ள முடிகிறது. பிரசங்கங்கள் மேன்மையாக இருந்தாலும், எவராலும் உள்ளே பிரவேசிக்க முடிவதில்லை. தேவனுடைய வார்த்தையை சில ஜனங்கள் மட்டுமே மனதார நேசிக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது கண்ணீர் விட்டு அழுகிறார்கள், அதை ஒதுக்கி வைக்கும்போது மனமகிழ்ச்சியாய் இருக்கிறார்கள், மேலும் அதை விட்டு விலகும்போது உற்சாகமற்று பிரகாசம் இழந்தவர்களாக இருக்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்வதென்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை வெறுமனே மனதார நேசிப்பதில்லை, மற்றும் அவருடைய வாயின் வார்த்தைகளை இன்று ஒரு பொக்கிஷமாக நீங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை. நீங்கள் அவருடைய வார்த்தையை வாசிக்கும்போது மட்டுமே கவலைப்படுகிறவர்களாக மாறுகிறீர்கள் மேலும் அதை மனப்பாடம் செய்யும் போது கடினமாக உணர்கிறீர்கள், ஆனால் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்கும்போது, குதிரையின் வாலிலிருந்து ஒரு முடியை எடுத்து கிணற்றின் நீர்வாங்கும் குழாயின் கைப்பிடியை சுழற்ற முயற்சி செய்வது போல் இருக்கிறது—நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், உங்களால் போதுமான சக்தியுடன் சுழற்ற முடியாது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது எப்போதும் ஊக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்கள், ஆயினும் அதைக் கடைபிடிக்க மறந்துபோகிறவர்களாக இருக்கிறீர்கள். உண்மையிலேயே, இந்த வார்த்தைகளை வெகு சிரமத்துடனும் மற்றும் பொறுமையாகவும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கடைபிடிக்காதவர்கள் அவருடைய கிரியைக்கு ஒரு தடையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. என்னால் அதைக் கொண்டுவராமல் இருக்கமுடியாது, என்னால் அதைப் பற்றி பேசாமலும் இருக்கமுடியாது. நான் அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறேன்; மற்றவர்களின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. உங்கள் நடத்தை கிட்டத்தட்ட போதுமான அளவு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்—உங்கள் வெளிப்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது உங்கள் பிரவேசமும் உச்சக்கட்டத்தில் இருக்கிறது? இது அவ்வளவு எளிதானதா? உங்கள் அனுபவங்கள் எந்த அஸ்திபாரத்தின் மேல் இறுதியில் கட்டப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் ஒருபோதும் ஆராய்வதில்லை! இந்த நேரம் வரைக்கும், உங்கள் கூடுகைகளை முற்றிலும் சரியான திருச்சபை வாழ்க்கை என்று அழைக்கவோ, குறைந்தது அவற்றால் சரியான ஆவிக்குரிய வாழ்க்கையை உண்டாக்கவோ முடியாது. அது வெறுமனே அரட்டை அடிப்பதிலும் பாடுவதிலும் மகிழ்ச்சி அடையும் திரளான ஜனங்களின் கூடுகையாக மட்டுமே இருக்கிறது. கண்டிப்பாகச் சொல்வதென்றால், இதில் அதிகப்படியான யதார்த்தம் இல்லை. நீ சத்தியத்தின்படி நடக்கவில்லை என்றால், மேலும் தெளிவுபடுத்துவதற்கு யதார்த்தம் எங்கே உள்ளது? உன்னிடம் யதார்த்தம் உள்ளது என்று சொல்லுவது தற்புகழ்ச்சி அல்லவா? யாரெல்லாம் எப்போதும் செயலைச் செய்கிறார்களோ அவர்கள் ஆணவமும் இறுமாப்பும் உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆனால் யாரெல்லாம் எப்போதும் கீழ்ப்படிந்திருக்கிறார்களோ அவர்கள் அமைதியாகவும் தங்கள் தலைகளைத் தாழ்த்துகிறவர்களாகவும், எந்தப் பயிற்சியும் செய்ய வாய்ப்பு கொடுக்கப் படாதவர்களாகவும் இருக்கிறார்கள். வேலை செய்யும் ஜனங்கள் பேசுவது தவிர வேறெதுவும் செய்வதில்லை, உரத்த குரலில் மேலும் மேலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், மேலும் பின்பற்றுகிறவர்கள் கேட்க மட்டுமே செய்கிறார்கள். சொல்லுவதற்கு எந்த மாற்றமும் இல்லை; இவை எல்லாமே வெறும் கடந்த கால வழிமுறைகளாக இருக்கின்றன! இன்று, தலையிடுவதற்கு அல்லது உங்கள் விருப்பப்படி செய்யத் துணியாமல் கீழ்ப்படிய முடிவதற்கு தேவனின் நிர்வாகக் கட்டளைகளின் வருகையே காரணமாகும்; இது அனுபவங்களின் வாயிலாக நீ பெற்ற மாற்றங்கள் அல்ல. இன்று நிர்வாகக் கட்டளைகளை மீறும் சில காரியங்களைச் செய்வதற்கு நீ இனிமேல் துணிவதில்லை என்ற உண்மைக்கு தேவனுடைய வார்த்தைகளின் கிரியை தெளிவான விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் ஜனங்களை ஜெயங்கொண்டிருக்கிறது என்பதே காரணமாகும். நான் யாராவது ஒருவரிடம் கேட்கிறேன்: உன்னுடைய இன்றைய சாதனையில் எவ்வளவை உனது சொந்தக் கடினமான உழைப்பினால் வியர்வை சிந்தி சம்பாதித்திருக்கிறாய்? இதில் எவ்வளவு தேவனால் நேராக உன்னிடம் சொல்லப்பட்டது? நீ எப்படிப் பதிலளிப்பாய்? நீ திகைப்படைந்தவனாகவும் மற்றும் பேச்சற்றவனாகவும் இருப்பாயா? நீ மற்றவர்கள் சமைத்த உணவை வெறுமென உட்கொண்டு அனுபவிக்கிற அதே வேளையில், மற்றவர்களால் எப்படி உனக்கு ஆகாரம் கொடுப்பதற்காக தங்களுடைய அநேக உண்மையான அனுபவங்களைப் பற்றி பேச முடிகிறது? உனக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் ஓர் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தலாம், மிகவும் நல்லவர்களை சோதித்துப் பார்க்கலாம்: எவ்வளவு சத்தியத்தை நீ புரிந்துகொண்டிருக்கிறாய்? இறுதியில் நீ எவ்வளவு கடைபிடிக்கிறாய்? நீ யாரை அதிகமாக நேசிக்கிறாய், தேவனையா அல்லது உன்னையா? நீ அதிகமாக அடிக்கடி கொடுப்பாயா அல்லது அதிகமாக அடிக்கடி பெறுவாயா? எத்தனைத் தருணங்களில் உன் உள்நோக்கம் தவறாக இருந்தது என்று உன் பழைய சுயத்தைக் கைவிட்டுவிட்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றியிருக்கிறாய்? வெறும் இந்தச் சில கேள்விகளே அநேக ஜனங்களைக் குழப்பமடையச் செய்யும். அநேக ஜனங்கள், தங்களுடைய உள்நோக்கம் தவறாக இருக்கிறது என்று உணர்ந்தாலும், இன்னும் அறிந்தே தவறு செய்கிறார்கள், அவர்கள் எப்போதும் தங்களுடைய சொந்த மாம்சத்தை கைவிடுவதில் கொஞ்சம் கூட அருகே செல்லவில்லை. அநேக ஜனங்கள் பாவத்தைத் தீவிரமாகத் தங்களுக்குள் தாறுமாறாகச் செல்ல அனுமதித்து, பாவம் அவர்களுடைய எல்லாச் செயல்களையும் இயக்க அனுமதிக்கிறார்கள். அவர்களால் தங்களுடைய பாவத்தில் இருந்து மீளமுடிவதில்லை, அவர்கள் பாவத்திலேயே தொடர்ந்து வாழ்கிறார்கள். தற்போதைய கட்டத்திற்கு வந்தடைந்ததும், அவர்கள் எவ்வளவு தீமையான கிரியைகளைச் செய்திருக்கிறார்களென்று யாருக்குத்தான் தெரியாது? உனக்குத் தெரியாது என்று நீ சொல்வாயானால், நீ உன் வாயினால் பொய் சொல்லுகிறாய். வெளிப்படையாகச் சொல்வதானால், நீ உன் பழைய சுயத்தைக் கைவிடுவதற்கு விருப்பமில்லாதவனாக இருக்கிறாய். தகுதியற்ற அநேக மனந்திரும்புதலின் “வார்த்தைகளை இருதயத்திலிருந்து” சொல்லுவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? இது உன் வாழ்க்கையில் வளர உனக்கு உதவுமா? உன்னைப் பற்றி நீ அறிவதே உன்னுடைய முழு நேர வேலையாக இருக்கிறது என்று சொல்லலாம். ஜனங்களுடைய கீழ்ப்படிதலிலும் தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் கடைபிடிப்பதன் மூலமாகவும் நான் அவர்களைப் பரிபூரணப்படுத்துகிறேன். வெறும் சாமர்த்தியமாகவும் ஆடம்பரமாகவும் தோன்றுவதற்கு உன் உடைகளை அணிந்துகொள்வதைப் போல் நீ தேவனுடைய வார்த்தையை அணிந்துகொண்டால், நீ உன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றுகிறாய் அல்லவா? உன்னிடம் பேச்சு மட்டுமே இருந்து அதை நீ கடைபிடிக்கவில்லை என்றால், நீ எதை அடைவாய்?

அநேக ஜனங்களால் நடைமுறையைப் பற்றி கொஞ்சம் பேசமுடியும் மற்றும் அவர்களால் அவர்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயங்களைப் பற்றி பேசமுடியும் ஆனால் அதில் பெரும்பாலானது மற்றவர்களுடைய வார்த்தைகளிலிருந்து பெற்ற பிரகாசமாக இருக்கிறது. இதில் அவர்களுடைய தனிப்பட்ட நடத்தைகளில் உள்ள எதுவும் உள்ளடங்கவில்லை, அல்லது அவர்களுடைய அனுபவங்களிலிருந்து பார்ப்பவைகளும் உள்ளடங்கவில்லை. முன்னர் நான் இந்தப் பிரச்சினையைப் பகுத்தாய்ந்திருக்கிறேன்; எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்காதீர்கள். நீ வெறும் காகிதப்புலி, ஆயினும் சாத்தானை வெல்வதைப் பற்றியும், வெற்றிகரமான சாட்சிகளைக் கொண்டிருப்பது பற்றியும், மற்றும் தேவனுடைய சாயலில் வாழ்வதைப் பற்றியும் பேசுகிறாய்? இதெல்லாம் முட்டாள்தனம்! இன்று தேவனால் பேசப்படும் எல்லா வார்த்தைகளும் நீ பாராட்டுவதற்காகப் பேசப்படுகின்றன என்று நீ நினைக்கிறாயா? உன் வாய் உங்களுடைய பழைய சுயத்தைக் கைவிட்டுவிட்டு சத்தியத்தின்படி நடப்பதைப் பற்றி பேசுகிறது, ஆயினும் உங்கள் கைகள் மற்ற கிரியைகளைச் செய்கின்றன மற்றும் உங்கள் இருதயம் மற்ற திட்டங்களைத் தீட்டி சதி செய்கிறது—எந்த மாதிரியான ஒரு நபர் நீங்கள்? உங்கள் இருதயமும் உங்கள் கைகளும் ஏன் ஒன்றாக மற்றும் ஒரே மாதிரியாக இல்லை? இவ்வளவு பிரசங்கங்களும் வெறுமையான வார்த்தைகளாகிவிட்டன; இது மனதை நொறுக்கவில்லையா? உன்னால் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்க இயலவில்லை என்றால், நீ பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் பாதைக்குள் இன்னும் பிரவேசிக்கவில்லை, பரிசுத்த ஆவியானவருடைய கிரியை உன்னிடம் இன்னும் இல்லை மற்றும் அவருடைய வழிநடத்துதலை இன்னும் நீ பெறவில்லை என்பதை இது காட்டுகிறது. உன்னால் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள மட்டுமே இயலும் ஆனால் அதைக் கடைப்பிடிக்க இயலவில்லை என்று நீ சொன்னால், நீ சத்தியத்தை நேசிக்காத ஒரு நபராக இருக்கிறாய். தேவன் இதைப்போன்ற நபரை இரட்சிக்க வரமாட்டார். பாவிகளை இரட்சிப்பதற்கு, ஏழைகளை இரட்சிப்பதற்கு மற்றும் தாழ்மையான அனைத்து ஜனங்களையும் இரட்சிப்பதற்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவர் மிகப்பெரும் வேதனையை அனுபவித்தார். அவருடைய சிலுவை மரணம் ஒரு பாவநிவாரணப்பலியாக அமைந்தது. உன்னால் தேவனுடைய வார்த்தையின்படி நடக்க முடியவில்லை என்றால், நீ முடிந்த அளவு சீக்கிரமாக விலகிச் செல்லவேண்டும்; தேவனுடைய வீட்டில் ஓர் ஒட்டுண்ணியாகத் தொடர்ந்து இருக்காதே. தேவனைத் தெளிவாக எதிர்க்கும் காரியங்களைச் செய்வதை நிறுத்துவது அநேக ஜனங்களுக்குக் கடினமாகத் தோன்றுகிறது. அவர்கள் மரணத்தைக் கேட்கிறார்கள் இல்லையா? அவர்களால் தேவன் தம்முடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பற்றி எப்படிப் பேச முடியும்? தேவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கு அவர்களுக்குத் துணிவு இருக்கிறதா? தேவன் கொடுக்கிற உணவைச் சாப்பிட்டு, தேவனை எதிர்க்கும் நேர்மையற்ற காரியங்களைச் செய்து, கெட்டவனாக, நயவஞ்சகனாக மற்றும் சதிசெய்கிறவனாக இருந்து, ஆயினும் தேவன் உனக்கு அளித்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க அவர் அனுமதிக்கும்போது—இவற்றைப் பெறும்போது உன் கரங்கள் எரிவதைப்போல் நீ உணரவில்லையா? உன் முகம் சிவப்பாக மாறுவதை நீ உணரவில்லையா? தேவனை எதிர்க்கும் எதையாவது செய்து, “முரட்டாட்டம் பண்ணுவதற்கு” சதி செய்துகொண்டு செல்வது, உனக்கு அச்சுறுத்தலாக இல்லையா? நீ ஒன்றையும் உணரவில்லை என்றால், உன்னால் எந்த எதிர்காலத்தையும் பற்றி எப்படி பேச முடியும்? நீண்ட காலத்திற்கு முன்பே உனக்கு ஏற்கனவே எதிர்காலம் இல்லாமல் போய்விட்டது, அதனால் உனக்கு இன்னும் மேலான எதிர்பார்ப்புகள் எப்படி இருக்க முடியும்? நீ வெட்கங்கெட்ட முறையில் எதையாவது சொன்னாலும், எந்த நிந்தனையையும் உணராவிட்டால் மற்றும் உன் இருதயம் விழிப்புடன் இல்லாவிட்டால், இது நீ தேவனால் ஏற்கனவே கைவிடப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தம் அல்லவா? பேசுவதிலும் நடப்பதிலும் அதீத விருப்பத்துடனும் கட்டுப்பாடுகள் இன்றியும் இருப்பது உனது சுபாவமாகியிருக்கிறது, உன்னால் இதைப்போல் தேவனால் எவ்வாறு பரிபூரணமாக்கப்பட முடியும்? உலகத்தில் உன்னால் நடமாட முடியுமா? உன்னால் யாரை நம்பச் செய்ய முடியும்? உன்னுடைய உண்மையான சுபாவத்தை அறிந்தவர்கள் தள்ளியே இருப்பார்கள். இது தேவனுடைய தண்டனை அல்லவா? மொத்தத்தில், பேச்சு மட்டும் இருந்து நடத்தை இல்லையென்றால், அங்கே வளர்ச்சி இல்லை. நீங்கள் பேசும்போது பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் கிரியை செய்து கொண்டு இருந்தாலும், நீங்கள் அதன்படி நடக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதை நிறுத்துவார். இதை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தால், உங்களால் எப்படி எதிர்காலத்தைப் பற்றி ஏதாவது பேசவோ அல்லது உங்களுக்குரிய அனைத்தையும் தேவனுடைய கிரியைக்குக் கொடுக்கவோ முடியும்? உன்னை முழுவதுமாக அர்பணிப்பதைப் பற்றி மட்டுமே பேச முடியும், ஆனாலும் நீ உன்னுடைய உண்மையான அன்பை தேவனுக்கு இன்னும் கொடுக்கவில்லை. அவர் உன்னிடம் இருந்து பெறுவது வெறும் உதட்டளவிலான பக்தி மட்டுமே; சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான உன்னுடைய உள்நோக்கத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. இதுவே உன்னுடைய உண்மையான வளர்ச்சியாக இருக்கக்கூடுமா? இதை நீ தொடர்ந்து செய்துகொண்டு இருந்தால், நீ தேவனால் எப்பொழுது பரிபூரணமாக்கப்படுவாய்? உன்னுடைய இருண்ட மற்றும் துயர் மிகுந்த எதிர்காலத்தைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா? தேவன் உன்மீது நம்பிக்கையை இழந்துவிட்டதை நீ உணரவில்லையா? அநேகரை மற்றும் புதிய ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் விரும்புகிறார் என்பதை நீ அறியவில்லையா? பழைய காரியங்கள் அவற்றின் பழையவற்றைப் பற்றிக்கொள்ளலாமா? இன்று நீங்கள் தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்தவில்லை: நீங்கள் நாளைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்களா?

முந்தைய: நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதன்படி நடக்க வேண்டும்

அடுத்த: ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக