அத்தியாயம் 73

நான் சொன்னவுடனேயே எனது வார்த்தைகள் நிறைவேற்றப்படுகின்றன; அவை ஒருபோதும் மாறாது, முற்றிலும் சரியானவை. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! என் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் சொற்றொடரையும் நீங்கள் கவனமாக எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் இழப்பைச் சந்தித்து, என்னுடைய நியாயத்தீர்ப்பு, எனது கடுங்கோபம் மற்றும் எனது அழிவு ஆகியவற்றை மட்டும் பெறாதபடி, கூடுதல் கவனத்துடன் இருங்கள். எனது கிரியை தற்போது மிகத் துரிதமாக நடந்து வருகிறது, இருப்பினும் இது திட்டவட்டமாக இல்லை; இது யதார்த்தத்தில் வெறும் கண்ணுக்குப் புலப்படாத மற்றும் மனிதக் கரங்களால் பிடிக்க முடியாத வகையில் மிகவும் நுட்பமாகச் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக அதிக கவனமுள்ளதாக இருக்கிறது. நான் ஒருபோதும் வெறும் வார்த்தைகளைப் பேசுவதில்லை; நான் சொல்வது அனைத்தும் உண்மையானது. என்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது மற்றும் மிகச் சரியானது என்பதை நீ விசுவாசிக்க வேண்டும். கவனக்குறைவாக இருக்காதே; இது ஒரு முக்கியமான தருணம்! நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்களா அல்லது சாபத்தைப் பெறுவீர்களா என்பது இந்த நொடியில் தீர்மானிக்கப்படும், மேலும் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. நீ பரலோகத்திற்குச் செல்வாயா அல்லது பாதாளத்திற்குச் செல்வாயா என்பது முற்றிலும் எனது கட்டுப்பாட்டில் உள்ளது. பாதாளத்தை நோக்கிச் செல்பவர்கள் தங்களின் கடைசி மரணப் போராட்டத்தில் உள்ளனர், அதே சமயம் பரலோகத்திற்குச் செல்பவர்கள் தங்கள் இறுதிக்கட்ட துன்பத்தில் ஈடுபட்டு கடைசி நேரத்தில் எனக்காக அர்ப்பணிக்கிறார்கள். வருங்காலத்தில், ஜனங்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் அனைத்து அற்ப விஷயங்களும் இல்லாமல் (திருமணம், வேலை, தொந்தரவான செல்வம், அந்தஸ்து மற்றும் பல) அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியும் துதியும் இருக்கும். இருப்பினும், பாதாளத்திற்குச் செல்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் வேதனை நித்தியமானது (இது அவர்களின் ஆவிகள், ஆத்துமாக்கள் மற்றும் சரீரங்களைக் குறிக்கிறது); எனது ஆக்கினைத்தீர்ப்பின் கரத்திலிருந்து அவர்களால் ஒருபோதும் தப்ப முடியாது. இந்த இரண்டு பக்கங்களும் நெருப்பும் தண்ணீரும் போல இணக்கமில்லாதவை. அவை ஒன்று சேராது: சாபத்தை அனுபவிப்பவர்கள் சாபத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள், அதே சமயம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தங்கள் இருதயத்தின் நிறைவினால் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

எல்லா நிகழ்வுகளும் விஷயங்களும் என்னால் கட்டுப்படுத்தப்படுகின்றன, அதைக் காட்டிலும், நீங்கள்—எனது குமாரர்கள், எனக்குப் பிரியமானவர்கள்—எனக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. எனது ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் புடமிடப்பட்டவர்கள் நீங்களே; நீங்கள் எனது பொக்கிஷங்கள். நான் நேசிக்கும் அனைவரும் என் கண்களுக்குப் பிரியமானவர்கள், ஏனென்றால் அவர்கள் என்னை வெளிப்படுத்துகிறார்கள்; நான் வெறுக்கும் அனைவரையும், நான் ஏறிட்டும் பார்க்காமல் வெறுத்து ஒதுக்குகிறேன், ஏனென்றால் அவர்கள் சாத்தானின் சந்ததியினராகவும் சாத்தானுக்குச் சொந்தமானவர்களாகவும் இருக்கிறார்கள். இன்று, ஜனங்கள் அனைவரும் தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும்: உன்னுடைய நோக்கங்கள் சரியாக இருந்தால், நீ என்னை உண்மையாக நேசித்தால், நீ நிச்சயமாக என்னால் நேசிக்கப்படுவாய். நீ என்னை வஞ்சிக்காமல் மெய்யாக நேசிக்க வேண்டும்! ஜனங்களின் உள்ளான இருதயத்தை ஆராய்ந்து பார்க்கும் தேவன் நானே! உன்னுடைய நோக்கங்கள் தவறாக இருந்தால், நீ குளிராகவும், என் மீது விசுவாசம் இல்லாமலும் இருந்தால், நீ என்னாலே வெறுத்து ஒதுக்கப்படுவாய்; நான் உன்னைத் தெரிந்தெடுக்கவோ அல்லது உன்னை முன்குறிக்கவோ மாட்டேன். நீ நரகத்திற்குச் செல்ல காத்துக் கொண்டிரு! மற்றவர்களால் இவற்றைப் பார்க்க முடியாமல் போகலாம், ஆனால், மனிதர்களின் உள்ளான இருதயங்களைப் பார்க்கும் தேவனாகிய எனக்கும் உனக்குமே அவை தெரியும். அவை அனைத்தும் குறித்த நேரத்தில் வெளிப்படுத்தப்படும். கபடற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை, கபடானவர்கள் பயப்படத் தேவையில்லை. இவை அனைத்தும் எனது ஞானமுள்ள ஏற்பாட்டின் ஒரு பகுதியாகும்.

கையில் உள்ள பணி உடனடியாகச் செய்ய வேண்டியதாகவும் பாரமானதாகவும் இருக்கிறது, மேலும் இந்த இறுதி கிரியையை முடிக்க நீங்கள் கடைசியாக ஒரு முறை எனக்காக அர்ப்பணம் செய்ய வேண்டும். உண்மையில் எனது கோரிக்கைகள் மிகவும் கடினமானவை இல்லை: எல்லாவற்றிலும் என்னைத் திருப்திப்படுத்தவும், நான் உனக்குள் இருந்து உனக்குக் கொடுக்கும் வழிநடத்துதலைப் பின்பற்றவும், நீங்கள் என்னுடன் ஒன்றிணைந்து ஒரு நல்ல வேலையைச் செய்வதையே உங்களிடம் விரும்புகிறேன். குருட்டுத்தனமாக இருக்காதீர்கள்; ஒரு குறிக்கோளைக் கொண்டிருங்கள், எல்லா அம்சங்களிலும் எல்லாவற்றிலும் எனது நோக்கங்களை உணருங்கள். ஏனென்றால், நான் இனி உங்களுக்கு மறைத்து வைக்கப்பட்ட தேவன் அல்ல, மற்றும் என்னுடைய நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு இதைக் குறித்து நீங்கள் இன்னும் தெளிவாக இருக்க வேண்டும். மிகக் குறுகிய காலத்தில், நீங்கள் மெய்யான வழியைத் தேடும் வெளிநாட்டினரை சந்திப்பதோடு, மிக முக்கியமாக, நீங்கள் அவர்களை மேய்க்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். அதுவே எனது அவசரமான நோக்கம்; உங்களால் இதைப் பார்க்க முடியாவிட்டால், இதைச் செய்ய முடியாது. இருப்பினும், என்னுடைய சர்வவல்லமையை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். ஜனங்கள் சரியாக இருக்கும் வரை, நான் நிச்சயமாக அவர்களை நல்ல படைவீரர்களாக இருக்கப் பயிற்றுவிப்பேன். அனைத்தும் என்னால் சரியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீங்கள் எனக்காகத் துன்பத்தை அனுபவிக்க ஆசைப்பட வேண்டும். இது முக்கியத் தருணமாகும். அதைத் தவறவிட்டு விடாதீர்கள்! நீங்கள் கடந்த காலத்தில் செய்த காரியங்களில் நான் வாசம் செய்ய மாட்டேன். நீ அடிக்கடி எனக்கு முன்பாக ஜெபித்து மன்றாட வேண்டும்; உனது மகிழ்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காக நான் போதுமான கிருபையை உனக்கு அருளிச் செய்வேன். கிருபையும் ஆசீர்வாதமும் ஒரே விஷயம் அல்ல. நீங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பது எனது கிருபையாகும், மேலும் எனது பார்வையில், அது குறிப்பிடத் தகுதியற்றது, அதே சமயம் ஆசீர்வாதங்களை நீங்கள் வருங்காலத்தில் முடிவில்லாமல் அனுபவிப்பீர்கள். அவை ஜனங்ளுக்கு ஏற்படாத மற்றும் அவர்களால் கற்பனை செய்ய முடியாத ஆசீர்வாதங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நான் சொல்லுவதற்கு இதுவே காரணம், மேலும் இந்த ஆசீர்வாதங்கள் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து மனிதனால் அனுபவிக்கப்படவில்லை.

நான் ஏற்கனவே என்னுடைய அனைத்தையும் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளேன். நீங்கள் என் இருதயத்துக்கு ஏற்றவர்களாகவும், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்கள் எண்ணங்களை எனக்காக அர்ப்பணிப்பவர்களாகவும், எல்லா வகையிலும் எனக்கு ஏற்றவர்களாக இருக்கவும் முடியும் என்பதை மட்டும் நான் நம்புகிறேன், மேலும் நான் எப்போதும் பார்ப்பது உங்களின் சிரித்த முகங்களைத்தான். இனிமேல், முதற்பேறான குமாரர்கள் என்ற நிலையைப் பெறுபவர்களே என்னுடன் இராஜாக்களாக அரசாளுவார்கள். அவர்கள் எந்த சகோதரராலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள், அவர்கள் என்னால் சிட்சிக்கப்படவோ அல்லது கையாளப்படவோ மாட்டார்கள், ஏனென்றால் நான் செயல்படும் கொள்கை இதுவே: முதற்பேறான குமாரர்களின் குழுவில் உள்ளவர்கள் மற்றவர்களால் இழிவாகப் பார்க்கப்பட்டவர்கள் மற்றும் துன்புறுத்தப்பட்டவர்கள், மற்றும் வாழ்க்கையின் அனைத்து இடர்பாடுகளையும் அனுபவித்தவர்கள். (அவர்கள் முன்கூட்டியே என்னால் கையாளப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் முன்கூட்டியே முழுமையாக்கப்பட்டுள்ளனர்.) இந்த ஜனங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களை முன்கூட்டியே என்னுடன் அனுபவித்திருக்கிறார்கள். நான் நீதியுள்ளவர், யாரிடமும் பட்சபாதம் காட்டாதவர்.

முந்தைய: அத்தியாயம் 72

அடுத்த: அத்தியாயம் 74

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக