அத்தியாயம் 110

எல்லாம் வெளிப்படுத்தப்பட்ட பின்னர், அது தான் நான் ஓய்வெடுக்கும் காலம், மேலும், அப்போது எல்லாம் ஒழுங்கு முறையில் இருக்கும் காலம். நான் தனிப்பட்ட முறையில் என் சொந்தக் கிரியைகளைச் செய்கிறேன்; நானே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி ஏற்பாடு செய்கிறேன். நான் சீயோனில் இருந்து வெளியே வரும்போதும், மேலும் நான் திரும்பி வரும்போது, மேலும் என் முதற்பேறான குமாரர்கள் எல்லாம் பரிபூரணப்படுத்தப்படும் போது, நான் என் மாபெரும் கிரியையை முடித்திருப்பேன். ஜனங்களின் எண்ணங்களில், செய்யப்படும் ஒன்று புலப்பட வேண்டும் மற்றும் தெளிவாகத் தெரிய வேண்டும், ஆனால் நான் அதைப் பார்க்கும் விதம் என்னெவென்றால், நான் திட்டமிடும் அந்தக் கணத்தில் எல்லாம் நிறைவடைகிறது. சீயோன் என் வாசஸ்தலம், மேலும் அதுவே எனது இலக்கு; அங்குதான் நான் என் சர்வவல்லமையை வெளிப்படுத்துகிறேன், மேலும் அங்கு தான் நானும் என் முதற்பேறான குமாரர்களும் ஒரு குடும்பமாக எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுவோம். அங்கு தான் நான் அவர்களோடு நித்தியமாய் ஜீவிப்பேன். ஜனங்கள் ஏங்கும் சீயோன் என்னும் அழகிய இடம். காலங்காலமாக எண்ணற்ற ஜனங்கள் சீயோனுக்காக ஏங்கி வந்திருக்கின்றனர், ஆனால் ஆதியில் இருந்தே, ஒருவர் கூட அதில் பிரவேசிக்கவில்லை. (கடந்த காலங்களிலிருந்து எந்தப் பரிசுத்தவான்களும் தீர்க்கதரிசிகளும் ஒருவர் கூட சீயோனில் பிரவேசித்ததில்லை; இது ஏனென்றால் நான் கடைசி நாட்களில் முதற்பேறான குமாரர்களை நான் தெரிந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன், மேலும் அவர்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் பிறக்கின்றனர்; இதன் மூலம், நான் ஏற்கனவே பேசிய என் இரக்கமும் என் கிருபையும், இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.) இப்போது முதற்பேறான குமாரராகப் இருக்கும் ஒவ்வொருவரும் என்னோடு சீயோனில் பிரவேசித்து அந்த ஆசீர்வாதத்தை அனுபவிப்பார்கள். என் முதற்பேறான குமாரர்கள் என் திறனையும் என்னுடைய மகிமையான சாயலையும் கொண்டிருப்பதாலும், அவர்கள் எனக்கு சாட்சியாக நிற்கக் கூடியவர்களாதலாலும், என்னை மகிமைப்படுத்தவும், என்னைப் போல ஜீவித்திருக்கக் கூடியவர்களாதலாலும், நான் ஓர் அளவிற்கு அவர்களை உயர்த்துகிறேன். மேலும் சாத்தானைத் தோற்கடிக்கவும் பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தை அவமானப்படுத்தவும் அவர்கள் திறன்கொண்டவர்கள். இது ஏனென்றால் என் முதற்பேறான குமாரர்கள் அனைவரும் பரிசுத்தமான கன்னிகைகள்; அவர்களைத் தான் நான் நேசிக்கிறேன் மேலும் அவர்களைத் தான் நான் தெரிந்தெடுத்து முன்னுரிமை அளிக்கிறேன். அவர்கள் தங்கள் சொந்த நிலையில் நிற்க முடிவதாலும், தெளிவற்ற நிலையில் கூட எனக்குத் தாழ்மையோடு ஊழியம் செய்வதாலும், எனக்கு வலிமையான சாட்சியாக விளங்குகின்ற காரணத்தாலும், நான் அவர்களை உயர்த்துகிறேன். நான் என் முழு ஆற்றலையும் என் முதற்பேறான குமாரர்கள் மேல் செலவழித்திருக்கிறேன் மேலும் நான் கவனமாக அனைத்து வகையான ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்களை அவர்களின் சேவைக்காக ஏற்பாடு செய்திருக்கிறேன். முடிவில், என் முதற்பேறான குமாரர்கள் மூலம் என்னுடைய முழு மகிமையையும் ஒவ்வொரும் காண வைப்பேன், மேலும் அவர்களால் ஒவ்வொருவரையும் என்னை நம்பும்படியாகச் செய்வேன். நான் எந்தப் பிசாசையும் கட்டாயப்படுத்த மாட்டேன், அவர்கள் கட்டற்று ஓடுவதால் அல்லது அவர்களது முரட்டுத்தனத்தால் பயப்பட மாட்டேன், ஏனெனில் என்னிடம் சாட்சி இருக்கிறது மேலும் என் கரங்களில் அதிகாரம் உள்ளது. சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்த ஜனங்களே, இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள்! நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் பின்னாலும் மற்றும் நான் செய்யும் எல்லாவற்றின் பின்னாலும் இருக்கும் நோக்கம் என் முதற்பேறான குமாரர்களைப் பரிபூரணப்படுத்துவதே. ஆகையால் நீ என் கட்டளைகளைக் கேட்டு என் முதற்பேறான குமாரர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்; இல்லையெனில் உடனடியான அழிவில் துன்பப்பட வைத்து உன்னை நான் கையாளுவேன். என்னுடைய முதற்பேறான குமாரர்கள் என் ஆட்சிமுறை ஆணைகளை ஏற்கனவே நிறைவேற்றத் தொடங்கிவிட்டார்கள், ஏனெனில் என் சிங்காசனத்தை நிலை நிறுத்துவதற்கு அவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்; அவர்களை நான் ஏற்கனவே அபிஷேகம் செய்துவிட்டேன். என்னுடைய முதற்பேறான குமாரர்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள் நிச்சயமாக நல்லவர்கள் இல்லை, அவர்கள் பெரிய சிவப்பு வலுசர்ப்பத்தால் என் நிர்வாகத் திட்டத்தைக் கவிழ்க்க அனுப்பப்பட்டவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட தீயவர்கள் என் வீட்டிலிருந்து உடனடியாக வெளியே தள்ளிவிடப்படுவார்கள். அத்தகையப் பொருள் எனக்காக ஊழியம் செய்வதை நான் விரும்பவில்லை; அவர்கள் நித்திய அழிவை எதிர்கொள்வார்கள்—மேலும் அதை அவர்கள் தாமதம் இல்லாமல் வெகு சீக்கிரமாகவே எதிர்கொள்வார்கள்! என்னுடைய ஊழியத்தில் இருப்பவர்கள் ஏற்கெனவே என் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்; அவர்கள் செலுத்த வேண்டிய கிரயத்தைப் பற்றி கவலைப்படாமல் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கலகக்காரர்களாக இருந்தால், எனக்கு ஊழியம் செய்ய அவர்களுக்குத் தகுதி இல்லை; அத்தகைய ஜந்துக்கள் எனக்குத் தேவை இல்லை. அவர்கள் துரிதமாக இங்கிருந்து போய்விட வேண்டும்; நிச்சயமாக அவர்கள் எனக்குத் தேவை இல்லை! இப்போது நீ இதில் தெளிவாக இருக்க வேண்டும்! எனக்கு ஊழியம் செய்பவர்கள் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாமல் அதைச் சரியாகக் செய்யவேண்டும். உனக்கு நம்பிக்கை எதுவும் இல்லை என்று உணர்ந்து பிரச்சினையைக் கிளப்பத் தொடங்கினால், பின் நான் தயக்கம் இன்றி உனக்கு முடிவு கட்டுவேன்! என் ஊழியத்தில் இருக்கும் நீங்கள் அதைப் பற்றி இப்போது தெளிவாக இருக்கிறீர்கள் அல்லவா? இது என் ஆட்சிமுறை ஆணையாகும்.

எனக்குச் சாட்சிப் பகர்வது என் முதற்பேறான குமாரர்களின் கடமையாகும். அதனால் நீங்கள் எனக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை; உங்கள் கடமைகளைத் தகுந்த முறையில் செய்து நான் அளிக்கும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் வரை நான் திருப்தியாக இருப்பேன். நான் பிரபஞ்சத்தின் வழியாக மற்றும் பூமியின் கடையாந்தரங்கள் மட்டும் பயணித்த போது, நான் என் முதற்பேறான குமாரர்களைத் தெரிந்துகொண்டு அவர்களைப் பூரணப்படுத்தினேன். இது நான் பூமியைச் சிருஷ்டிக்கும் முன்னரே செய்த ஒன்று; மனுஷர்களுக்கு மத்தியில் யாருக்கும் இது தெரியாது, ஆனால் என் கிரியை அமைதியாக நிறைவேற்றப்பட்டது. இந்த உண்மை மனுஷ எண்ணங்களோடு ஒத்து வராது! இருந்த போதிலும், உண்மைகள் உண்மைகளே, மேலும் அவற்றை யாராலும் மாற்ற முடியாது. பெரியதும் சிறியதுமான பிசாசுகள், தங்கள் பாசாங்குகளின் மூலமாக, தங்கள் உண்மையான வடிவங்களைக் வெளிப்படுத்தின, மேலும் பல அளவிலான என் சிட்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. என் கிரியையில் படிநிலைகள் இருக்கின்றன, என் வார்த்தைகளில் ஞானம் இருக்கிறது. என் நடவடிக்கைகள் மற்றும் வார்த்தைகளில் இருந்து, நீங்கள் எதையாவது பார்த்திருக்கிறீர்களா? நான் வெறுமனே விஷயங்களைச் செய்கிறேனா, பேசுகிறேனா? என் வார்த்தைகள் வெறுமனே கடுமையாக, நியாயந்தீர்ப்பதாக அல்லது ஆறுதல் அளிப்பதாக உள்ளனவா? அது மிகவும் எளிமையானது, ஆனால் மனுக்குலத்துக்கு, இது எளிமையானதல்ல. என் வார்த்தைகளில் ஞானம், நியாயத்தீர்ப்பு, நீதி, மகத்துவம், மற்றும் ஆறுதல் மட்டுமல்லாமல், ஆனால் அதை விட, அவை என்னிடம் இருப்பதையும், என்னவாக இருக்கிறேனோ அதையும் கொண்டிருக்கின்றன. என் வார்த்தைகளில் ஒவ்வொன்றும் மனுக்குலத்தால் வெளிப்படுத்த முடியாத ஒரு இரகசியம்; என் வார்த்தைகள் முற்றிலுமாக புரிந்து கொள்ள முடியாதது, மற்றும் அந்த இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் அவை மனுக்குலத்தின் கற்பனைக்கும் மனுக்குலத்தின் திறமைகளை அடிப்படையாகக் கொண்ட புரிதலுக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கின்றன. எனக்கு எளிமையான சொல்லாக இருப்பது ஜனங்களுக்குப் புரிந்து கொள்ள மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது, அதனால் எனக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தைப் போல் இருக்கிறது. இதனால் தான் நான் என் முதற்பேறான குமாரர்களின் வடிவங்களை முற்றிலுமாக மாற்ற விரும்புகிறேன் மற்றும் அவர்களை முழுவதுமாக சரீரத்தில் பிரவேசிக்கச் செய்கிறேன். எதிர்காலத்தில், அவர்கள் மாம்சத்தில் இருந்து சரீரத்துக்குப் பிரவேசிப்பது மட்டுமல்லாமல், அதற்குள் இருக்கும்போது அவர்கள் தங்கள் வடிவங்களைப் பல்வேறு அளவுகளில் மாற்றுவார்கள். இது என் திட்டம். இது மனுஷனால் செய்யக் கூடாத ஒன்று; அவர்களுக்கு அதைச் செய்ய முற்றிலுமாக வழி இல்லை. இவ்வாறு, நான் விளக்கமாக இதை உங்களுக்குக் கூறினாலும், நீங்கள் அதன் பின்னும் புரிந்து கொள்ள மாட்டீர்கள்; நீங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட உணர்வில் மட்டுமே பிரவேசிப்பீர்கள். இது ஏனெனில் நானே ஞானமுள்ள தேவன்.

நீங்கள் இரகசியங்களைப் பார்க்கும் போது, ஏதோ ஒருவகையில் பதில்வினை ஆற்றுவீர்கள். இருந்தாலும், ஆழமாக, இந்த இரகசியங்களை ஏற்றுக் கொள்ள அல்லது அங்கீகரிக்க மாட்டீர்கள், வாயளவில் நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் மிகவும் ஏமாற்றுக்காரர்கள், மேலும் நான் இரகசியங்களை வெளிப்படுத்தும்போது, நான் அவர்களை ஒவ்வொருவராக புறம்பாக்கிக் கைவிட்டு விடுவேன். இருப்பினும், நான் செய்யும் எல்லாமே படிப்படியாக செய்யப்படும். நான் விஷயங்களை அவசரகதியில் செய்ய மாட்டேன், மேலும் நான் குருட்டுத்தனமாகவும் ஒரு முடிவுக்கு வரமாட்டேன்; இதற்குக் காரணம் நான் தெய்வீக மனநிலையைக் கொண்டிருக்கிறேன். நான் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் அல்லது அடுத்த படியாக நான் என்ன செய்வேன் என்பது பற்றிய ஒரு தெளிவான பார்வையை ஜனங்களால் நிச்சயமாக அடைய முடியாது. ஒரு படிநிலையின் வார்த்தைகளை நான் பேசும்போது மட்டுமே, நான் கிரியை செய்யும் விதம் ஒரு படிநிலை முன்னேறிச் செல்கிறது. எல்லாம் என் வார்த்தைகளுக்குள் நிகழ்கின்றன, எல்லாம் என் வார்த்தைகளுக்குள் வெளிப்படுத்தப்படுகின்றன, ஆகவே ஒருவரும் பொறுமை இழக்க வேண்டாம்; எனக்கு உகந்த முறையில் ஊழியம் செய்வது ஒன்றே போதுமானதாகும். காலங்களுக்கு முன்னால், ஓர் அத்தி மரத்தைப் பற்றி நான் ஒரு தீர்க்கதரிசனம் உரைத்தேன், கடந்து வரும் காலங்களில், ஒருவரும் ஓர் அத்தி மரத்தைப் பார்க்கவில்லை மேலும் ஒருவராலும் அதனை விளக்க முடியவில்லை, முந்தைய துதிகளில் இந்த வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான அர்த்தத்தை ஒருவரும் அறியவில்லை. “பெரும் பேரழிவு” என்ற சொற்றொடரைப் போலவே இந்த வார்த்தைககளும் ஜனங்களைக் குழப்பின, மேலும் இது நான் ஒரு போதும் மனுகுலத்துக்கு வெளிப்படுத்தாத ஓர் இரகசியத்தை முன்வைத்தது. அத்தி மரம் என்பது ஒரு நல்ல வகையான பழ மரமாக இருக்கலாம் என்று ஜனங்கள் நினைத்தனர். அல்லது ஒருவேளை, இன்னும் ஒரு படி அதை மேலே கொண்டு சென்று, பரிசுத்தவான்களைக் குறிப்பிட்டனர்—இருந்தாலும், அவர்கள் இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தில் இருந்து இன்னும் வெகு தூரத்திலேயே இருக்கிறார்கள். கடைசி நாட்களில் நான் என் புஸ்தகச்சுருளைத் திறக்கும் போது அதை நான் உங்களுக்குக் கூறுவேன். (நான் பேசியிருக்கும் அனைத்து வார்த்தைகளையும் “புஸ்தகச்சுருள்” குறிக்கிறது—கடைசி நாட்களில் என் வார்த்தைகள்; எல்லாவற்றையும் அது கொண்டிருக்கிறது.) “அத்தி மரம்” என் ஆட்சிமுறை ஆணைகளை, அவற்றின் ஒவ்வொன்றையும் குறிக்கிறது—ஆனால் இது அது குறிப்பதில் வெறும் ஒரு பகுதியே. நான் மாம்சத்தில் இருந்து கிரியை செய்யத் தொடங்குவதையும் பேசுவதையும் அத்தி மரம் துளிர்விடுதல் குறிக்கிறது, மேலும் என் ஆட்சிமுறை ஆணைகள் இன்னும் ஒருவருக்கும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இது ஏனென்றால், அந்த நேரத்தில், என் நாமத்துக்கு சாட்சி இன்னும் கொடுக்கப்படவில்லை மற்றும் என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளை யாரும் அறியவில்லை. என் நாமம் சாட்சி கொடுக்கப்பட்டுப் பரவும்போது, எல்லோராலும் அது துதிக்கப்படும்போது, மேலும் என் ஆட்சிமுறை ஆணைகள் முடிவான பலனைப் பெறும் போது, அதுவே அத்திமரம் கனி கொடுக்கும் காலமாகும். இதுவே முழு விளக்கம், இதில் ஒன்றும் தவிர்க்கப்படவில்லை; எல்லாம் இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளன; (இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னுடைய முந்திய வார்த்தைகளில் நான் இன்னும் முற்றிலும் வெளிப்படுத்தாத ஒரு பகுதி இருந்தது; அதனால் நீங்கள் காத்திருந்து பொறுமையோடு தேடவேண்டும்.)

நான் முதற்பேறான குமாரர்களை முழுமையாக்கும்போது, நான் என் முழு மகிமையையும் முழு தோற்றத்தையும் பிரபஞ்ச உலகத்துக்கு வெளிப்படுத்துவேன். இது சரீரத்தில் செய்யப்படும், அது என் சொந்த உடலில் எல்லா மக்களுக்கும் மேலானதாக இருக்கும்; அது என் சீயோன் மலையில், என் மகிமையில், குறிப்பாக, துதிகளின் ஆரவாரத்தின் மத்தியில் செய்யப்படும். மேலும் என்னைச் சுற்றிலும் என் பகைவர்கள் பின்வாங்கி ஓடி, பாதாளத்துக்குள்ளும் நெருப்பும் கந்தகமும் எரிகின்ற கடலிலும் விழுவார்கள். இன்று மக்களின் கற்பனை செய்யும் திறன் குறைவானதாகும், அது என் உண்மையான நோக்கத்துடன் பொருந்தவில்லை; நான் பேசுவதற்கு முன்னால் மக்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஒவ்வொரு நாளும் குறிவைப்பதற்குக் காரணம் இதுதான். ஒரு நாள் வரும் (சரீரத்தில் பிரவேசிக்கும் நாள்) அப்போது நான் கூறுவதெல்லாம் முழுமையாக உங்களுக்குப் பொருந்தும், மேலும் நீங்கள் எந்த ஓர் எதிர்ப்பையும் அளிக்க மாட்டீர்கள். அப்போது, உங்களுக்கு அதற்கு மேலும் உங்கள் சிந்தனைகள் இருக்காது, மேலும் நான் பேசுவதை நிறுத்தி விடுவேன். உங்களுக்கு உங்களுடைய சொந்த சிந்தனை அதற்கு மேலும் இல்லாமல் இருக்கும் போதும், நான் உங்களை நேரடியாகப் பிரகாசிப்பிப்பேன்—இதுவே முதற்பேறான குமாரர்களால் அனுபவிக்கப்படும் ஆசீர்வாதம் ஆகும், என்னோடு கூட அவர்கள் இராஜாக்களாக அரசாளும்போது இது நிகழும். தங்களால் கற்பனை செய்ய முடியாத விஷயங்களை மனிதர்கள் நம்ப மாட்டார்கள், மேலும் அப்படி நம்புபவர்கள் ஒரு சிலர் இருந்தாலும் கூட, என்னால் குறிப்பாகப் பிரகாசிக்கப்பட்டதால் மட்டுமே அவர்கள் நம்புவார்கள். அல்லது, ஒருவரும் விசுவாசிக்க மாட்டார்கள், மற்றும் இது அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். (இந்தக் கட்டத்தின் வழியாகச் செல்லாமல், என்னுடைய பேராற்றலை வெளிப்படுத்த முடியாது. என் வெறும் பேச்சுக்களைக் கொண்டே என்னால் ஜனங்களை அவர்களது எண்ணங்களை விட்டு விடச் செய்ய முடியும் என்பது இதற்கு அர்த்தமாகும். இந்தக் கிரியையை வேறு ஒருவராலும் செய்ய முடியாது. என்னை ஒருவராலும் பதிலீடு செய்ய முடியாது. அதை என்னால் மட்டுமே முடிக்க முடியும்; இருப்பினும், அது முழுமையானது அல்ல. நான் இந்தக் கிரியையை மனுக்குலத்தின் மூலமாகவே செய்ய வேண்டும்.) என் வார்த்தைகளைக் கேட்ட பின்னர் ஜனங்கள் உற்சாகம் அடைகின்றனர், ஆனால் முடிவில், அவர்கள் எல்லோரும் பின்வாங்கிப் போகிறார்கள். அவர்களால் அப்படிச் செய்யாமல் இருக்க முடியாது. அதேநேரத்தில், மனுஷர்களால் புரிந்து கொள்ள முடியாத இரகசியங்கள் இருக்கின்றன. என்ன நடக்கும் என்று யாராலும் கற்பனை செய்ய முடியாது, மேலும் நான் வெளிப்படுத்துவதில் இதை உங்களைப் பார்க்க அனுமதிப்பேன், அதன் மூலம், என்னுடைய இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் வெளிப்படையாகத் தெரியும்: “எனக்குப் பயன்படத் தகுதி இல்லாதவர்கள் எல்லோரையும் நான் வேரறுப்பேன்.” என்னுடைய முதற்பேறான குமாரர்களுக்குப் பல்வேறு வகையான வெளிப்பாடுகள் இருக்கும், எனது எதிரிகளுக்கும் கூட. அவர்கள் யாவரும் ஒவ்வொருவராக உங்களுக்கு வெளிப்படுத்தப்படுவார்கள். நினைவில் வைத்திருங்கள்! முதற்பேறான குமாரர்களைத் தவிர, எவருக்கும் அசுத்த ஆவிகளின் கிரியை இருக்கும்; அவர்கள் எல்லோரும் சாத்தானின் பணியாளர்கள் ஆவர். (அவர்கள் சீக்கிரத்தில் ஒவ்வொருவராக வெளிப்படுத்தப்படுவார்கள், ஆனால் முடிவுபரியந்தம் ஊழியம் செய்யவேண்டிய சிலர் இருக்கின்றனர், மற்றும் பிறர் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஊழியம் செய்தால் போதுமானது.) என் வார்த்தைகளின் கிரியையின் கீழ், எல்லோரும் தங்கள் சுயரூபத்தைக் காட்டுவார்கள்.

ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு இடமும், மற்றும் ஒவ்வொரு சபைப்பிரிவும் என் நாமத்தின் வளங்களை அனுபவிக்கின்றன. பேரழிவு தற்போது பெருகிக் கொண்டிருக்கிறது, மேலும் அது என் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் படிப்படியாக அதைக் கீழே பொழிய வைப்பதற்கான ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன், எல்லோரும் உண்மையான வழியை அவசரமாக நாடிக் கொண்டிருக்கிறார்கள். அதைச் செய்வதன் விலை எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்றாலும் அதைத் தேட வேண்டும். எல்லாவற்றிலும் எனக்கு என்னுடைய சொந்த நேரம் இருக்கிறது. அது முடிக்கப்படும் என்று நான் சொல்லும் போதெல்லாம், அது உடனே அந்த நிமிடம் வரை, இன்னும் அந்த நொடி வரை முடிக்கப்படும். ஒருவராலும் அதைத் தடை செய்யவோ நிறுத்தவோ முடியாது. மொத்தத்தில் எப்படியிருந்தாலும், பெரிய சிவப்பான வலுசர்ப்பம் என்னுடைய தோற்கடிக்கப்பட்ட எதிரி; அது எனக்கு ஒரு ஊழியன், நான் சொல்வதை எல்லாம் சற்றும் தயக்கமின்றி செய்கிறது. உண்மையில் அது எனக்கு பாரம் சுமக்கும் விலங்கு. என்னுடைய கிரியை முடிந்ததும், அதைப் பாதாளத்திலும் அக்கினியும் கந்தகமும் எரிகின்ற கடலிலும் தள்ளுவேன் (அழிக்கப்பட்டவர்களை நான் குறிப்பிடுகிறேன்). அழிக்கப்பட்டவர்கள் வெறும் மரணத்தை மட்டுமே ருசிபார்ப்பதில்லை, ஆனால் அவர்கள் என்னைத் துன்புறுத்தியதால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். ஊழியம் செய்பவர்களைக் கொண்டு இந்தக் கிரியையை நான் தொடர்ந்து செய்வேன். பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் சந்ததியாரை முற்றிலுமாக அழிக்கும்படியாக நான் சாத்தான் தன்னையே படுகொலை செய்து அழித்துக் கொள்ளும்படி செய்வேன். இது என்னுடைய கிரியையின் ஒரு பகுதி; அதன் பிறகு, நான் புறஜாதியார் தேசத்தை நோக்கித் திரும்புவேன். இதுவே என்னுடைய கிரியையின் படிநிலைகள்.

முந்தைய: அத்தியாயம் 109

அடுத்த: அத்தியாயம் 111

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக