அத்தியாயம் 63

உன்னுடைய சொந்த நிலைமையை நீ உணரவேண்டும். மேலும் நீ செல்ல வேண்டிய பாதையைப் பற்றிய தெளிவுடன் இருக்க வேண்டும். நான் உன் காதுகளைப் பிடித்துத் தூக்கி விஷயங்களைச் சுட்டிக் காண்பிப்பதற்காக இனிமேலும் எனக்காக நீ காத்திருக்க வேண்டாம். மனிதனின் இதயத்தின் அடியாழத்தையும் உற்றுநோக்கும் தேவன் நான் தான். உன்னுடைய ஒவ்வொரு சிந்தனையையும் யோசனையையும் நான் அறிவேன். அதற்கும் மேலாக, நான் உன்னுடைய செயல்களையும் நடத்தையையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் இவையனைத்தும் என்னுடைய வாக்குத்தத்தத்தில் அடங்கியிருக்கின்றனவா? அவையனைத்திலும் என்னுடைய சித்தம் அடங்கியிருக்கிறதா? இவற்றையெல்லாம் முன்னெப்போதாவது உண்மையிலேயே தேடியிருக்கிறாயா? நிஜமாகவே இவற்றுக்காக ஏதாவது நேரத்தைச் செலவிட்டிருக்கிறாயா? உண்மையில் ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறாயா? உன்னை நான் விமர்சிக்கவில்லை; நீங்கள் இந்தக் கருத்தை வெறுமனே அலட்சியப்படுத்தியிருக்கிறீர்கள்! நீங்கள் எப்போதும் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள். மேலும் உங்களால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று உனக்குத் தெரியுமா? உங்கள் சிந்தனைகள் தெளிவற்று இருப்பதும், உங்கள் கருத்துக்கள் வலுவாகப் பிணைக்கப்பட்டிருப்பதும்தான் காரணம்; மேலும் என்னுடைய சித்தத்துக்கான எந்தவித அக்கறையையும் நீ காண்பிக்கவில்லை. சில மக்கள் கேட்கலாம்: “உன்னுடைய சித்தத்துக்கான எந்த அக்கறையையும் நாங்கள் காண்பிக்கவில்லை என்று எப்படி நீ கூறலாம்? நாங்கள் தொடர்ந்து உனது சித்தத்தைப் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. எனவே நாங்கள் என்ன செய்யவேண்டும்? நாங்கள் முயற்சிக்கவேயில்லை என உன்னால் சொல்ல முடியுமா?” நான் உன்னிடம் இதைக் கேட்கிறேன்: உண்மையிலேயே எனக்கு விசுவாசமாய் நீ இருப்பதாக உன்னால் தைரியமாகச் சொல்ல முடியுமா? மேலும் பரிபூரணமான விசுவாசத்துடன் தங்களை ஒப்புகொடுத்ததாக யாராலாவது உறுதியாகச் சொல்ல முடியுமா? உங்களில் ஒருவரால் கூட அப்படிச் சொல்ல முடியாது என நான் அஞ்சுகிறேன். ஏனென்றால், உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானத் தேர்வுகள் இருக்கின்றன, சொந்த விருப்பங்கள் இருக்கின்றன. அதை விட, ஒவ்வொருவருக்கும் சொந்தமான நோக்கங்கள் இருக்கின்றன என்பதை நான் சொல்லத் தேவையில்லை. வஞ்சகராக இருக்காதீர்கள்! நீண்ட காலத்துக்கு முன்பாகவே உங்கள் எல்லாருடைய அனைத்து ஆழ்மனதின் சிந்தனைகளையும் துல்லியமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். இன்னும் இதை நான் தெளிவுபடுத்த வேண்டுமா? உங்களுடையை ஒவ்வொரு அம்சத்தில் இருந்தும் (சிந்தனைகள் மற்றும் யோசனைகளில் இருந்தும், நீங்கள் பேசும் அனைத்தில் இருந்தும், ஒவ்வொரு வார்த்தை மற்றும் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொரு நோக்கம் மற்றும் செயற்காரணம் ஆகிய ஒவ்வொன்றில் இருந்தும்) கூடுதலாக நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் நுழைவைப் பெறுவீர்கள். அதற்கும் மேலாக, உங்களால் பரிபூரணமான சத்தியத்துடன் ஆயத்தப்பட இயலும்.

நான் உங்களிடம் இது போன்ற விஷயங்களைச் சொல்லாவிட்டால், நாள் முழுக்க, சரீர இச்சையில் மோகம் கொண்டும் எனது சித்தத்தில் எந்த விதமான அக்கறையையும் காட்டாமலும் இருப்பீர்கள். உங்களை இரட்சிப்பதற்காகத் தொடர்ச்சியாக என்னுடைய அன்பான கையைப் பயன்படுத்துகிறேன். உங்களுக்கு அது தெரியுமா? இதை உணர முன்வந்திருக்கிறீர்களா? நான் மனப்பூர்வமாக உன்னை நேசிக்கிறேன். என்னை மனப்பூர்வமாக நேசிப்பதாக உன்னால் உறுதியாகச் சொல்ல முடியுமா? உனக்குள்ளாகவே இதை அடிக்கடி கேட்டுக்கொள்: உன்னுடையை ஒவ்வொரு காரியத்தையும் எனது சோதனைக்குச் சமர்ப்பிப்பதற்காக, உன்னால் எனக்கு முன்பாக உண்மையிலேயே வர இயலுமா? உன்னுடைய ஒவ்வொரு காரியத்தையும் நான் ஆராய, ஊக்கத்துடன் என்னை அனுமதிப்பாயா? நீ ஒழுக்ககேடுள்ளவன் எனவும் உன்னுடைய சொந்தத் தற்காப்புக்குள் தாவுகிறாய் எனவும் நான் கூறுகிறேன். உன் மீதான என்னுடைய நியாயத்தீர்ப்பு வருகிறது. இப்போது நீ சத்தியத்துக்குள் விழித்தெழு! நான் சொல்வதெல்லாம் சத்தியம்; உனக்குள் இருக்கும் உண்மையான நிலைமையை எனது வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன. மனிதகுலமே! உன்னைச் சமாளிப்பது மிகவும் சிரமம். உன்னுடைய உண்மையான நிலைமையை நான் சுட்டிக் காட்டும்போது மட்டும்தான், நான் சொல்வதை நீங்கள் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள முடியும். இதை நான் செய்யாவிட்டால் நீங்கள் காலாவதியாகிவிட்ட உங்களது யோசனைகளின் தொகுப்பை இறுகப் பற்றிக் கொண்டு, உங்களுடையை சிந்திக்கும் வழிமுறைகளையே பிடித்துக் கொண்டு, இந்த பூமியிலேயே உங்களைவிட புத்திசாலி யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். இதில் நீங்கள் வெறுமனே சுய நீதிமான்களாக இல்லையா? சுய திருப்தியில் ஈடுபடவில்லையா? மனநிறைவு அடையவில்லையா? திமிரும், கர்வமும் கொண்டவராக இல்லையா? இதை நீ இப்போது உணர்ந்தாக வேண்டும்! உன்னை நீயே புத்திசாலி எனவும் அசாதாரணமானவன் என்றும் நினைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, உன்னுடைய குறைபாடுகளையும், பலவீனமான விஷயங்களையும் எப்போதும் உணர்ந்தவனாக இருக்க வேண்டும். இப்படியான நிலையில், என்னை நேசிக்கும் உனது உறுதித்தன்மை குறையாது. குறைவதற்கு பதில் மேன் மேலும் வலுவானதாக மாறும். உன்னுடையை சொந்த நிலைமையும் முன்னேறும். அதை விட முக்கியமாக, உன்னுடைய வாழ்க்கையானது நாளுக்கு நாள் முன்னெப்போதையும் விட முன்னேறும்.

என்னுடைய சித்தத்தை நீ புரிந்து கொள்ள முன்வரும் போது, நீ உன்னையே அறிந்து கொள்ள முடியும். அதன் மூலம் என்னைப் பற்றிய கூடுதல் புரிதல் உனக்குக் கிடைக்கும்; என்னைப் பற்றிய, உனது நிச்சயத்தன்மையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும். தற்போது என்னைப் பற்றிய நிச்சயத்தன்மையில் தொண்ணூறு சதவீதத்தை யாராலாவது அடைய முடியாமல், ஆனால் அதற்குப் பதிலாக நிமிடத்துக்கு நிமிடம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அலைபாயும் மனோநிலையில் இருப்பாரேயானால், அந்த மனிதர் நிச்சயமாக ஒதுக்கிவைக்கப்படுவார் என நான் கூறுவேன். மீதமிருக்கும் பத்து சதவீதம் பேர் என்னுடைய ஞானம் மற்றும் ஒளியினுள் பரிபூரணமாக அடங்குவார்கள். இதன் மூலமாக, மக்கள் என்னைப் பற்றிய நூறு சதவீதம் நிச்சயத்தன்மையை அடைவார்கள். தற்போது, அதாவது தற்போது என்றால் இன்றே எத்தனை பேரால் இந்த வகையான நிலையை அடைய முடியும்? என்னுடைய சித்தத்தையும், உனக்குள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையின் உணர்வுகளையும் உன்னிடம் நான் திரும்பத் திரும்ப வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். பிறகு ஏன் நீ ஆவியானவரின் பாதையில் செயல்படாமல் இருக்கிறாய்? தவறுகளைச் செய்ய அஞ்சுகிறாயா? அப்படியானால் ஏன் பயிற்சியில் எவ்விதக் கவனமும் செலுத்தாமலிருக்கிறாய்? மக்களால் என்னுடைய விருப்பத்தை வெறுமனே ஒன்று அல்லது இரண்டு முறைகள் முயற்சித்து, புரிந்து கொள்ள முடியாது என்று நான் கூறுகிறேன். அவர்கள் ஒரு செயல்முறைக்கு ஆளாக வேண்டும். இதை நான் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். பிறகு ஏன் நீ அதை நடைமுறைப்படுத்தவில்லை? கீழ்ப்படிதல் அற்றவனாக இருக்கிறாய் என்பதை நீ உணரவில்லையா? நீ எதையும் உடனடியாக முடிக்க விரும்புகிறாய். அதோடு எதற்காகவும் எந்த விதமான முயற்சியையும் மேற்கொள்ளவோ, நேரம் செலவிடவோ எப்போதும் விரும்பவில்லை. எவ்வளவு முட்டாள்தனமுடையவனாகவும், மேலும் அறியாமை கொண்டவனாகவும் நீ இருக்கிறாய்!

நான் எப்போதும் வார்த்தைகளை மறைக்காமல் பேசுகிறேன் என்பதை நீங்கள் உணரவில்லையா? ஏன் நீங்கள் தொடர்ந்து மழுங்கிப் போனவர்களாய், உணர்ச்சியற்றவர்களாய், மந்த புத்திக்காரர்களாய் இருக்கிறீர்கள்? உங்களை நீங்களே மேலும் ஆரய்ந்து பார்க்க வேண்டும். உங்களால் எப்போதாவது எதையாவது புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், எனக்கு முன்பாக இன்னும் அடிக்கடி வரவேண்டும். உனக்கு இதை நான் சொல்கிறேன்: உங்களிடம் இதைப் போலவெல்லாம் நான் பேசுவதன் நோக்கம் உங்களை எனக்கு முன்பாக வழிநடத்திக் கொண்டுவருவதற்குத்தான். இவ்வளவு காலமாகியும் ஏன் நீங்கள் இன்னும் இதை உணரவில்லை? என்னுடைய வார்த்தைகள் உங்களை மொத்தமாகத் திகைக்க வைக்கின்றனவா? அல்லது என்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் தீவிரமானதாகப் பொருட்படுத்தவில்லையா? நீங்கள் அவற்றை வாசிக்கிறபொழுது, உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு நல்ல அறிவு கிடைக்கிறது. நீங்கள் எனக்குக் கடன்பட்டவர்கள் என்றும் என் சித்தத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதைப் போலவும் சொல்ல ஆரம்பிப்பீர்கள். இருப்பினும், அதன் பிறகு என்னவாகும்? இந்த விஷயங்களுடன் உங்களுக்குச் சம்பந்தமில்லை என்பதைப் போன்ற நிலை உருவாகும்; தேவனை நம்புகிற யாராவது ஒருவரைப்போல மட்டுமே நீ இல்லை என்பதைப் போன்ற நிலை ஏற்படும். செரிமானம் ஆவதற்கு உரிய நேரம் அளிக்காமல், தகவல்களை அவசரமாக அள்ளித் தின்பவரல்லவா நீங்கள்? என்னுடைய வார்த்தைகளை நீங்கள் அனுபவிப்பது என்பது, ஒரு குதிரையின் முதுகில் ஏறி, விரைவாக நீங்கள் சவாரி செய்யும்போது, கண்ணில் தென்படும் மலர்களைப் பார்ப்பதைப் போன்றது தான். என்னுடைய வார்த்தைகளில் இருந்து, என்னுடைய சித்தம் என்னவென்று நிஜமாகவே நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இப்படித்தான் மக்கள் இருக்கிறார்கள்; அவர்கள் எப்போதும் தாழ்மையானவர்களாகத் தோற்றம் அளிக்க விரும்புகிறார்கள். அவர்கள் தான் மிகவும் வெறுக்கப்படவேண்டிய வகையான மக்கள். மற்றவர்களோடு அவர்கள் கலந்து பழகும்போது, தங்களின் அறிவை மற்றவர்கள் முன் பகிர்ந்து கொள்ள எப்போதும் விரும்புவார்கள். என்னுடைய பாரத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடியவர்கள் தாங்கள் என்று மற்றவர்கள் நினைக்கும்படி நடப்பார்கள். ஆனால் உண்மையில் முட்டாள்களிலேயே அடிமுட்டாள்கள் அவர்கள்தான். (என்னைப் பற்றிய தங்களுடைய உண்மையான அக ஞானம் அல்லது அறிவைத் தங்களது சகோதர சகோதரிகளுடன் அவர்கள் பகிர்வதில்லை; மாறாகத் தங்களை வெறுமனே முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு முன் தங்களைப் பகட்டாகக் காண்பித்துக்கொள்கிறார்கள். என்னை இழிவுபடுத்துவதாலும், அவமதிப்பதாலும் அவர்களை நான் மிகவும் வெறுக்கிறேன்.)

நான் அடிக்கடி என்னுடைய மிகச் சிறப்பான அற்புதங்களை உங்களுக்குள் பகிரங்கப்படுத்துகிறேன். அவற்றை நீங்கள் பார்க்க முடியவில்லையா? “உண்மை” என்று அழைக்கப்படுவது என்னை உண்மையாக நேசிப்பவர்களால் வாழ்ந்து காண்பிக்கப்படுகிறது. அவற்றை நீங்கள் பார்த்ததில்லையா? என்னை அறிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த சான்று இதுவல்லவா? எனக்கான சிறந்த சாட்சியை இது கொண்டிருக்கவில்லையா? இருப்பினும் என்னை நீங்கள் அடையாளம் காணவில்லை. சொல்லுங்கள்: சாத்தானால் மிகவும் அழுக்குப் படிந்ததாகவும், அருவருப்பானதாகவும், சீர்கேடானதாகவும் ஆக்கப்பட்டுள்ள இந்த ஒழுக்கக்கேடான பூமியில் உண்மையான வாழ்க்கையை யாரால் வாழ இயலும்? எல்லா மனிதர்களும் சீர்கேடானவர்களாகவும், வெறுமையானவர்களாகவும் இல்லையா? எப்படியாயினும் என்னுடைய வார்த்தைகள் அவற்றினுடைய உச்சத்தை அடைந்திருக்கின்றன. இவற்றைத் தவிர வேறு எந்த வார்த்தைகளையும் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. ஒரு பேதை கூட என்னுடைய வார்த்தைகளை வாசித்து, அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். இதிலிருந்து நீங்கள் போதுமான அளவு முயற்சிக்கவில்லை என்பது எளிதில் தெரிகிறதல்லவா?

முந்தைய: அத்தியாயம் 62

அடுத்த: அத்தியாயம் 64

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக