அத்தியாயம் 112

“வார்த்தைகளும் யதார்த்தமும் அருகருகே செல்கின்றன” என்பது என் நீதியான மனநிலையின் பகுதியாகும். இந்த வார்த்தைகளில் இருந்து, என் மனநிலையின் முழுமையை ஒவ்வொருவரையும் நான் பார்க்க நிச்சயமாக அனுமதிப்பேன். இதை அடைய முடியாது என்று ஜனங்கள் நினைக்கிறார்கள், ஆனால் எனக்கு இது லேசானதும் மகிழ்ச்சியானதுமாகும், இதற்கு முயற்சியும் தேவை இல்லை. என் வாயில் இருந்து என் வார்த்தைகள் புறப்பட்டதுமே, எல்லோரும் உடனடியாகப் பார்க்கக் கூடிய ஒரு உண்மை இருக்கிறது. இதுவே என் மனநிலை. சில விஷயங்களைப் பற்றி நான் பேசியதுமே அந்த விஷயங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும். இல்லாவிட்டால், நான் பேச மாட்டேன். மனுஷனுடைய கருத்துக்களில் “இரட்சிப்பு” என்பது எல்லா ஜனங்களுக்காகவும் பேசப்படுகிறது, ஆனால் இது என்னுடைய எண்ணத்துக்குப் பொருந்தவில்லை. “அறியாமையில் இருக்கிறவர்களையும் வைராக்கியத்தோடு தேடுகிறவர்களையும் நான் எப்போதும் இரட்சிப்பேன்” என்று கடந்த காலத்தில் கூறினேன். இங்கு, “இரட்சிப்பு” என்பது எனக்கு ஊழியம் செய்பவர்களைப் பற்றி பேசப்பட்டது, மேலும் நான் எனக்கு ஊழியஞ்செய்பவர்களைச் சிறப்பான முறையில் நடத்துவேன் என்று அதற்கு அர்த்தம். வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், இவர்களின் தண்டனையை நான் குறைப்பேன். இருந்த போதிலும், இவர்களுள் நயவஞ்சகர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கும் ஊழியக்காரர்கள் அழிவின் பொருட்களுக்கு நடுவில் இருப்பார்கள். அதாவது, அவர்களை நான் கடுமையான தண்டனைக்கு உட்படுத்துவேன் (அவர்கள் அழிக்கப்படும் பொருட்களுக்கு நடுவில் இருந்தாலும், அழிக்கப்படப் போகிறவர்களில் இருந்து இவர்கள் மிகவும் வேறுபட்டவர்கள்: அவர்கள் நித்திய தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் பிசாசாகிய சாத்தானின் தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியார் என்று நான் சொன்னதற்கான அர்த்தம் இதுவுமாகும்.) ஆனால் இந்த வகையான வார்த்தைகளை என் முதற்பேறான குமாரர்கள் குறித்து நான் பயன்படுத்தவில்லை; என் முதற்பேறான குமாரர்களைப் பற்றி நான் கூறும்போது, அவர்களை மீட்பேன் என்றும் அவர்கள் மீண்டும் ஒருமுறை சீயோனுக்குத் திரும்பி வருவார்கள் என்றும் கூறுகிறேன். ஆகையினால், என் முதற்பேறான குமாரர்கள் தான் என்னால் முன்குறிக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று நான் எப்போதும் சொல்லியிருக்கிறேன். என்னுடைய முதற்பேறான குமாரர்கள் ஆதியில் எனக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் என்னில் இருந்து வந்தவர்கள். ஆகவே அவர்கள் என்னிடம் இங்கு வந்தாக வேண்டும். குமாரர்களையும் ஜனங்களையும் முதற்பேறான குமாரர்களோடு ஒப்பிடும்போது—இது உண்மையில் வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான வித்தியாசம்: குமாரர்களும் ஜனங்களும் ஊழியம் செய்பவர்களை விடச் சிறந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த வகையிலும் எனக்குச் சொந்தமானவர்கள் அல்ல. குமாரர்களும் ஜனங்களும் மனுக்குலத்தின் மத்தியில் இருந்து கூடுதாலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று கூறலாம். ஆகவே நான் எப்போதும் என் ஆற்றலை முதற்பேறான குமாரர்களின் மேல் செலுத்தினேன். அதன் பின் இந்த குமாரர்களையும் ஜனங்களையும் முழுமைப்படுத்த முதற்பேறான குமாரர்களை அனுமதிப்பேன். இவைகளே என் எதிர்காலக் கிரியையின் படிநிலைகள். இப்போது இதை உங்களிடம் கூறுவதால் பயனில்லை, ஆகவே இதை நான் குமாரர்களிடமும் ஜனங்களிடமும் மிக அரிதாகவே குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால் முதற்பேறான குமாரர்களிடம் மட்டுமே நான் இந்த விஷயங்களைத் திரும்பத் திரும்ப பேசியிருக்கிறேன் மற்றும் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறேன். இந்த வகையிலேயே நான் பேசி, கிரியை செய்கிறேன். இதை ஒருவராலும் மாற்ற முடியாது—எல்லாவற்றையும் குறித்து என் ஒருவரின் முடிவே இறுதியானது.

ஒவ்வொரு நாளும், நான் உங்களுடைய கருத்துக்களுக்கு எதிராகப் போராடுகிறேன், மேலும் நாளுக்கு நாள், உங்கள் ஒவ்வொருவரையும் நான் பகுத்தாராய்கிறேன். ஒரு கட்டத்துக்கு நான் பேசியவுடன், நீங்கள் பின்வாங்கி மீண்டும் என் மனிதத் தன்மையை தெய்வீகத் தன்மையில் இருந்து பிரிக்கிறீர்கள். இந்தக் கட்டத்தில் ஜனங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது: நான் இன்னும் மாம்சத்தில் ஜீவிக்கிறேன் என்றும் நான் தேவனானவர் இல்லை என்றும், அதாவது நான் இன்னும் மனுஷனாக இருக்கிறேன் மேலும் தேவன் தேவனாக இருக்கிறார், மேலும் தேவனுக்கும் மனுஷனாக இருக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் ஜனங்கள் நினைக்கின்றனர். இந்த மனுக்குலம் எவ்வளவு சீர்கெட்டிருக்கிறது! நான் முன்னர் பல வார்த்தைகளைப் பேசினேன், ஆனால் நீண்ட காலமாக நீங்கள் அவை இல்லை என்பது போல் அவற்றைக் கருதினீர்கள், இது என் எலும்புகளுக்குள் பதிந்திருக்கும் உங்கள் மீதான வெறுப்பால் என்னை நிரப்புகிறது! உண்மையில் இதுவே என்னை உங்களை வெறுக்கச் செய்கிறது! சர்வ சாதாரணமாக யாரால் என்னை அவமதிக்க முடியும், நான் நானே பரிபூரணமான தேவன் தாமாக இருக்கிறேன், நான் மனிதத் தன்மையையும் முழுமையான தெய்வீகத் தன்மையையும் கொண்டிருக்கிறேன். யார் தங்கள் நினைவுகளில் என்னை எதிர்க்கத் துணிவார்கள்? என்னுடைய பேரழிவான பேரிடர்கள் கீழே இறங்கத் தொடங்கிய பிறகு, நான் அவர்களை ஒவ்வொருவராகத் தண்டிப்பேன், ஒருவரையும் விட மாட்டேன், மாறாக அவர்கள் அனைவரையும் கடுமையாகத் தண்டிப்பேன். என்னுடைய ஆவி தனிப்பட்ட முறையில் கிரியை செய்கிறது. இதற்கு நான் தேவன் இல்லை என்பது பொருளல்ல; மாறாக, நான் தான் சர்வவல்லமையுள்ள தேவன் தாமாக இருக்கிறேன் என்பது இன்னும் அதிகமாக அர்த்தமாகிறது. ஜனங்களுக்கு என்னைத் தெரியவில்லை—அவர்கள் எல்லோரும் என்னை எதிர்க்கிறார்கள். என்னுடைய வார்த்தைகளில் இருந்து என்னுடைய சர்வவல்லமையை அவர்கள் பார்க்கவில்லை, ஆனால் அதற்குப் பதில் எனக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவும் என்னில் தவறைக் கண்டுபிடிப்பதற்காகவும் அவர்கள் என் வார்த்தைகளில் எதையாவது தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு நாள் நான் என் முதற்பேறான குமாரர்களுடன் சீயோனில் தோன்றும்போது, நான் இந்த இழிவான ஜந்துக்களைக் கையாளத் தொடங்குவேன். இந்தக் கால கட்டத்தில், நான் முக்கியமாக இந்த வேலையையே செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு கட்டம் வரை பேசிய பின், ஊழியம் செய்பவர்களில் பலர் பின்வாங்கிப் போயிருப்பார்கள், முதற்பேறான குமாரர்களும் எல்லா வகையான கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள். கிரியையின் இந்த இரு கட்டங்களும் முன்னேறும்போது, என் கிரியையின் ஒரு கட்டம் முடிவுக்கு வரும். அதே நேரத்தில், நான் என் முதற்பேறான குமாரர்களைச் சீயோனுக்கு மீண்டும் கொண்டு செல்வேன். இவையே என் கிரியையின் படிநிலைகள்.

என்னுடைய முதற்பேறான குமாரர்கள் என்னுடைய ராஜ்யத்தின் இன்றியமையாத ஓர் அங்கம். இதில் இருந்து உண்மையில் என் ஆள்தத்துவமே ராஜ்யம் என்று தெரிகிறது—என் முதற்பேறான குமாரர்களின் பிறப்பில் இருந்து என்னுடைய ராஜ்யத்தின் பிறப்பும் தொடர்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், உலகத் தோற்றத்தில் இருந்தே என்னுடைய ராஜ்யம் இருந்து வருகிறது, மேலும் என்னுடைய முதற்பேறான குமாரர்களை அடைவது என்பது (என் முதற்பேறான குமாரர்களைத் மீட்பது என்று அர்த்தம்) என் ராஜ்யத்தைத் திரும்பப் பெறுவது ஆகும். இதில் இருந்து, முதற்பேறான குமாரர்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை நீங்கள் காணலாம். ராஜ்யம் உருவாகும், அதிகாரத்துடன் ஆளுகை செய்யும் யதார்த்தம் உருவாகும், புதிய ஜீவிதம் உருவாகும், மேலும் பழைய யுகம் அதன் முழுமையோடு முடிவடையும்படி எனது முதற்பேறான குமாரர்கள் இருப்பது ஒரு முறை மட்டுமே. இதுவே தவிர்க்க முடியாத போக்கு. முதற்பேறான குமாரர்கள் இந்த நிலையில் இருப்பதனால், அவர்கள் உலகத்தின் அழிவிற்கும், சாத்தானின் நாசத்துக்கும், ஊழியம் செய்பவர்களின் உண்மை இயல்பை வெளிப்படுத்துவதற்கும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு சந்ததி யாரும் இருக்க மாட்டார்கள் மற்றும் அவர்கள் அக்கினியும் கந்தகமும் எரியும் கடலுக்குள் இறங்குவார்கள் என்கிற உண்மைக்கும் குறியீடாய் இருக்கிறார்கள்—ஆகவே, அதிகாரத்தை பயன்படுத்துபவர்களும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியாய் இருப்பவர்களும் மீண்டும் மீண்டும் தடைசெய்வது, எதிர்ப்பது மற்றும் அழிப்பதிலும் ஈடுபடுகிறார்கள். அதே நேரத்தில், நான் தொடர்ந்து என்னுடைய முதற்பேறான குமாரர்களை உயர்த்தி, சாட்சி கொடுத்து, வெளிப்படுத்துகிறேன்; என்னிடம் இருந்து வந்தவர்கள் மட்டுமே எனக்கு சாட்சி அளிக்கத் தகுதியுடையவர்கள்; அவர்கள் மட்டுமே என்னைப் போல ஜீவித்திருக்க முடியும், மேலும் யுத்தத்தில் போர் செய்து அந்த அழகிய வெற்றியை எனக்காக ஜெயங்கொள்ளும் ஆதாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். என்னிடம் இருந்து பிரிந்தவர்கள் என் கையில் இருக்கும் ஒரு துண்டுக் களிமண்ணே தவிர வேறல்லர்—அவர்களில் ஒவ்வொருவரும் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். குமாரர்களும் ஜனங்களுமாய் இருப்பவர்கள் சிருஷ்டிக்கபப்ட்ட சிருஷ்டிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டச் சிறந்தவர்களே தவிர அதை விட அதிகமல்ல, ஆனால் அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள் அல்லர். ஆகவே முதற்பேறான குமாரர்களுக்கும் குமாரர்களுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. குமாரர்கள் முதற்பேறான குமாரர்களோடு ஒப்பிட சற்றும் தகுதியானவர்கள் அல்லர்—அவர்கள் முதற்பேறான குமாரர்களால் ஆளுகை செய்யப்பட்டு மேலாதிக்கம் செலுத்தப்படுகிறார்கள். இப்போது இவற்றைப் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானவை, எந்த வகையிலும் தவறானது அல்ல. இவை எல்லாம் என் ஆள்தத்துவத்தின் வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகும், மேலும் இது என்னுடைய பேச்சாகும்.

நான் வெற்று வார்த்தைகளைப் பேசுவதில்லை என்று கூறியிருக்கிறேன், மேலும் நான் தவறுகளைச் செய்வதில்லை; என் மகத்துவத்தைக் காட்ட இதுவே போதுமானதாகும். ஆனால் ஜனங்களால் மோசமானதில் இருந்து நல்லதைப் பிரித்துச் சொல்ல முடிவதில்லை. என் சிட்சை நேரும் போது தான் அவர்கள் முற்றிலுமாக நம்புகிறார்கள்; இல்லையெனில், அவர்கள் கலகக்காரர்களாகவும் முரட்டுப் பிடிவாத குணமுடையவர்களாகவுமே இருக்கிறார்கள். அதனால் தான் நான் அனைத்து மனுக்குலத்திற்கும் எதிராகத் திருப்பி அடிப்பதற்காக சிட்சையைப் பயன்படுத்துகிறேன். ஒரே தேவன் இருக்கும் போது என்னிடமிருந்து ஏன் பல முதற்பேறானவர்கள் வரவேண்டும் என்பது மனுஷக் கருத்துக்களாகும். இதை நான் இப்படிக் கூற முடியும்: என்னுடைய சொந்தக் காரியங்களில், நான் விரும்புகிறபடியெல்லாம் அவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். எனக்கு மனிதனால் என்ன செய்ய முடியும்? நான் இப்படியும் கூட கூற முடியும்: நானும் என் முதற்பேறான குமாரர்களும் ஒரே சாயலில் இல்லாவிட்டாலும், நாங்கள் ஒரே ஆவியோடு இருக்கிறோம். அதனால் அவர்கள் என்னோடு ஒத்துழைக்கும் போது அவர்களால் என்னோடு ஒரே மனதுள்ளவர்களாக இருக்க முடியும். நாங்கள் ஏன் ஒரே சாயல் உள்ளவர்களாக இல்லை என்பதற்கு என்ன காரணம் என்றால் எல்லா ஜனங்களும் என் ஆள்தத்துவத்தின் ஒவ்வொரு பகுதியையும் அசாதாரணமான தெளிவோடு பார்க்க முடியும் எனபதற்குத் தான். இதனால் தான் என் முதற்பேறான குமாரர்களை என்னோடு சேர்ந்து எல்லாத் தேசங்கள் மற்றும் ஜனங்கள் மீது அதிகாரம் செலுத்த நான் அனுமதிக்கிறேன். இதுவே என் ஆட்சிமுறை ஆணைகளின் இறுதிக் குறிப்பு (நான் பேசுகிற “இறுதிக் குறிப்பு” என்பதற்கு என் தொனி இலேசானதாக உள்ளது மேலும் நான் குமாரர்கள் மற்றும் ஜனங்களிடம் பேச ஆரம்பித்திருக்கிறேன் என்று அர்த்தம்). இந்த அம்சம் குறித்து பல ஜனங்களுக்கு சந்தேகங்கள் இருக்கின்றன, ஆனால் இவ்வளவு சந்தேகங்களைக் கொண்டு அவர்கள் தங்களை நிரப்பிக் கொள்ள அவசியமில்லை. இதனால் ஒளிந்து கொள்ள இடம் இல்லாமல் அவர்கள் வெட்கம் அடையும் வகையில், நான் எல்லா ஜனங்களுடைய கருத்துக்களையும் ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவேன். நான் பிரபஞ்சம் முழுதும் பூமியின் கடையாந்தரங்கள் மட்டும் சென்று, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த முகபாவத்தையும் ஆராய்வேன். ஒவ்வொரு வகையான நபரையும் ஆராய்வேன்—என்னுடைய கரத்தில் இருந்து ஒருவனும் தப்பிப் போக முடியாது. நான் ஒவ்வொரு வகையான விஷயங்களிலும் பங்கு பெறுகிறேன், என்னால் தனிப்பட்ட முறையில் கையாள முடியாதது ஒன்றுமில்லை. என் சர்வவல்லமையை மறுக்க யார் துணிவார்கள்? என்னை முற்றிலுமாக நம்பாமல் இருக்கத் துணிவுள்ளவன் யார்? என் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து பணியத் துணியாமல் இருப்பவன் யார்? என்னுடைய முதற்பேறான குமாரர்ளால் வானங்கள் எல்லாம் மாறும், அதற்கும் மேலாக, என் நிமித்தமாகவும் என் முதற்பேறான குமாரர்கள் நிமித்தமாகவும் பூமி முழுவதும் கடுமையாகக் குலுங்கும். என் ஆள்தத்துவத்தின் முன்னால் எல்லா ஜனங்களும் முழங்கால்படியிடுவார்கள், மேலும் எல்லாம் என் கரங்களின் கட்டுப்பாட்டுக்குள் நிச்சயமாக வரும்—இதில் கொஞ்சம் கூட தவறு இருக்காது. ஒவ்வொருவரும் முற்றிலுமாக நம்பி ஒவ்வொரு பொருளும் என் வீட்டுக்கு வந்து எனக்கு ஊழியம் செய்யும். இதுவே என் ஆட்சிமுறை ஆணைகளின் கடைசிப் பகுதி. இப்போதில் இருந்து, பல்வேறு ஜனங்களை இலக்காகக் கொண்ட என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளின் பல்வேறு பிரிவுகள் அனைத்தும் முடிவுகளை உருவாக்கத் தொடங்கும் (ஏனெனில் என்னுடைய ஆட்சிமுறை ஆணைகள் பகிரங்கமாக்கப்படுகின்றன, மற்றும் ஒவ்வொரு வகையான ஜனங்களுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஜனங்களும் அவர்களுக்குரிய இடத்தில் இருப்பார்கள். ஒவ்வொரு வகையான மக்களின் உண்மை இயல்புகளும் என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளினால் வெளிப்படுத்தப்படும்). மெய்யான, உண்மையான ஆட்சிமுறை ஆணைகளின் வருகை இவ்வாறு தான் இருக்கும்.

இப்போது, என் கிரியையின் படிநிலைகளின்படி, நான் சொல்ல விரும்பியதைச் சொல்லுகிறேன், மேலும் எல்லோரும் என்னுடைய வார்த்தைகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். காலங்கள் தோறும், ஒவ்வொரு பரிசுத்தவான்களும் “புதிய எருசலேம்” பற்றி பேசியுள்ளனர், எல்லோருக்கும் அதைப் பற்றித் தெரியும். ஆனால் அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. இன்றைய கிரியை இந்தக் கட்டத்திற்கு வந்து விட்டதால், நான் உங்களுக்கு இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துவேன். இதனால் அதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் என் வெளிப்படுத்தலுக்கு ஒரு வரையறை உள்ளது—நான் அதை எப்படி வெளிப்படுத்தினாலும், நான் அதை எவ்வளவு தெளிவாகக் கூறினாலும், உங்களால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாது, ஏனெனில் மனுஷன் ஒருவனும் இந்த வார்த்தையின் யதார்த்தத்தை நெருங்க முடியாது. கடந்த காலத்தில், பூமியில் என் வாசஸ்தலத்தை எருசலேம் குறித்தது, அதாவது, நான் நடக்கும் மற்றும் நகரும் இடம். ஆனால் “புதிய” என்ற வார்த்தை இந்தச் சொல்லை மாற்றுகிறது, மேலும் அதில் வழக்கமாக இருப்பது போல் எதுவும் இல்லை. ஜனங்களால் கொஞ்சம் கூட அதைப் புரிந்து கொள்ள முடியாது. அது என் ராஜ்யத்தைக் குறிப்பதாக சிலர் நினைக்கிறார்கள்; சிலர் அது நானாகிய என்னைக் குறிப்பதாக நினைக்கிறார்கள்; சிலர் அதைப் புதிய வானம் புதிய பூமியாக நினைக்கிறார்கள்; மேலும் சிலர் நான் இந்தப் பூமியை அழித்த பின்னர் வரும் புதிய பூமி என்று அதை நினைக்கிறார்கள். ஒரு நபரின் மனம் மிகவும் சிக்கலாக மற்றும் மிகவும் கற்பனை வளமானதாக இருந்தாலும், இதைப் பற்றி அவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. காலங்கள் தோறும், இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை அறிய அல்லது பார்க்க ஜனங்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை—அவர்கள் எல்லோரும் ஏமாற்றம் அடைந்து மேலும் அவர்கள் தங்கள் பேராவலை விட்டுவிட்டு இறந்து போய்விட்டார்கள்; ஏனெனில் என் நேரம் இன்னும் வரவில்லை, யாரிடமும் என்னால் எளிதாகக் கூற முடியாது. என் கிரியை இந்தக் கட்டம் வரை செய்யப்பட்டு விட்டதால், நான் உங்களிடம் எல்லாவற்றையும் கூறுவேன். புதிய எருசலேமில் இந்த நான்கு விஷயங்களும் அடங்கி இருக்கின்றன: என்னுடைய கோபம், என்னுடைய ஆட்சிமுறை ஆணைகள், என்னுடைய ராஜ்யம் மற்றும் நான் என் முதற்பேறான குமாரர்களுக்கு நான் வழங்கும் முடிவற்ற ஆசீர்வாதங்கள். “புதிய” என்ற பதத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணம் என்னவென்றால் இந்த நான்கு பகுதிகளும் மறைந்திருக்கின்றன. என் கோபம் யாருக்கும் தெரியாத காரணத்தால், யாரும் என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளை அறிய மாட்டார்கள், என்னுடைய ராஜ்யத்தை யாரும் பார்த்ததில்லை, மேலும் யாரும் என்னுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கவில்லை, “புதிய” என்பது மறைந்திருப்பதைக் குறிப்பிடுகிறது. நான் கூறி இருப்பதை யாராலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது, ஏனெனில் புதிய எருசலேம் பூமிக்கு இறங்கி வந்து விட்டது ஆனால் புதிய எருசலேமின் யதார்த்தத்தை யாரும் தனிப்பட்ட முறையில் அனுபவிக்கவில்லை. நான் எவ்வளவு தூரம் முழுமையாகப் பேசினாலும், ஜனங்கள் முழுமையாக புரிந்து கொள்ள மாட்டார்கள். யாராவது புரிந்து கொண்டாலும், இந்தப் புரிதல் என்பது அவர்களது வார்த்தைகளும், அவர்கள் மனமும், அவர்களது எண்ணங்களும் மட்டுமே ஆகும். இதுவே தவிர்க்க முடியாத போக்கு; இதுவே முன்னேறிச் செல்லும் ஒரே பாதை, மேலும் யாராலும் அதில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது.

முந்தைய: அத்தியாயம் 111

அடுத்த: அத்தியாயம் 113

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக