கிரியையும் பிரவேசித்தலும் (5)
ஒவ்வொரு நபரும் சுயாதீனமான ஓர் உலகில் வாழும்படி, இன்று தேவன் ஜனங்களை ஜீவிதத்தின் சரியான பாதையில் வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்பதையும், அவர் மனுஷனை வேறொரு காலத்திற்குள் அடுத்த அடியை எடுத்து வைக்கும்படி வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்பதையும், இந்தப் பழைய இருண்ட காலத்தைக் கடந்து, மாம்சத்திற்கு வெளியே, அந்தகார வல்லமைகளின் அடக்குமுறை மற்றும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விலகும்படி மனுஷனை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்பதையும் நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். ஓர் அழகான நாளையதினத்துக்காகவும், நாளையதினத்தில் ஜனங்கள் தங்கள் படிகளில் தைரியமாக இருப்பதற்காகவும், தேவ ஆவியானவர் மனுஷனுக்காக எல்லாவற்றையும் திட்டமிடுகிறார், மேலும் மனுஷன் அதிக சந்தோஷத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக, மனுஷனுக்கு முன்னாக இருக்கிற பாதையை ஆயத்தப்படுத்துவதற்கு, மனுஷன் ஏங்கும் நாளின் வருகையைத் துரிதப்படுத்தும்படியாக தேவன் தமது எல்லா முயற்சிகளையும் மாம்சத்தில் நிறைவேற்றுகிறார். இந்த அழகான தருணத்தை நீங்கள் அனைவரும் மனதில் வைத்துக்கொள்வீர்களா? தேவனுடன் ஒன்று சேர்ந்து வருவது எளிதான சாதனையல்ல. நீங்கள் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றாலும், நீங்கள் அவருடன் நீண்ட காலமாக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் இந்த அழகான ஆனாலும் குறுகிய நாட்களை என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமானால் மட்டுமே, அவற்றை பூமியில் தங்களது பொக்கிஷ உடைமைகளாக மாற்றலாம். தேவனுடைய கிரியை மனுஷனுக்கு நீண்ட காலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது—ஆனால் ஜனங்களுடைய இருதயங்கள் மிகவும் சிக்கலானவை என்பதாலும், அவர்கள் அதில் ஒருபோதும் எந்த ஆர்வமும் காட்டாததாலும், தேவனுடைய கிரியை அதன் ஆரம்ப அஸ்திபாரத்திலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் மனக் கண்ணோட்டம், காலாவதியானதாகத் தோன்றுகிறது, அவர்களில் பலரின் மனக் கண்ணோட்டம் பண்டைய காலத்தின் பழமையானதை ஒத்திருக்கிறது, சிறிதளவும் மாறியிருக்கவில்லை. இதன் விளைவாக, ஜனங்கள் தேவனுடைய கிரியையைப் பற்றி இன்னும் குழப்பமானவர்களாகவும் தெளிவற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள், மற்றும் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதைக் குறித்து அவர்கள் மிகவும் தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த விஷயங்கள் தேவனுடைய கிரியைக்குப் பெரும் சிரமங்களை அளிக்கின்றன மற்றும் ஜனங்களின் வாழ்க்கை முன்னோக்கி நகர்வதை எப்போதும் தடுக்கின்றன. மனுஷனுடைய சாராம்சம் மற்றும் அவர்களின் மோசமான திறமை காரணமாக, அவர்கள் அடிப்படையில் தேவனுடைய கிரியையை கிரகித்துக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள், மேலும் இந்த விஷயங்களை ஒருபோதும் முக்கியமானதாகக் கருதுவதில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை விரும்பினால், உங்கள் இருப்பு பற்றிய விவரங்களில் நீங்கள் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும், ஜீவனுக்குள் உங்கள் பிரவேசித்தலைக் கட்டுப்படுத்தும்படி, அவைகள் ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டு, உங்கள் ஒவ்வொருவரின் இருதயத்தையும் முழுமையாக மறுரூபப்படுத்தி, உங்கள் இருதயங்களுக்குள் உள்ள வெறுமை மற்றும் உங்களைப் பாதிக்கும் பழைய மற்றும் மந்தமான வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இதனால் நீங்கள் ஒவ்வொருவரும் உள்ளிருந்து புதுப்பிக்கப்பட்டு, உயர்ந்த, ஒப்பற்ற மற்றும் விடுதலையான வாழ்க்கையை உண்மையாக அனுபவிப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஜீவனுடன் வர முடிவதும், உங்கள் ஆவியில் புத்துயிர் அடைவதும், ஒரு ஜீவனுள்ள சிருஷ்டியின் சாயலைப் பெற முடிவதுமே குறிக்கோளாக இருக்கிறது. நீங்கள் தொடர்புகொள்ளும் அனைத்து சகோதர சகோதரிகளில், துடிப்பான மற்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பண்டைய குரங்கு மனுஷர்களைப் போன்றவர்களாகவும், அறிவில்லாதவர்களாகவும் மற்றும் முட்டாள்களாகவும், வெளிப்படையாக வளர்ச்சிக்கான எந்த வாய்ப்பும் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அதைவிட மோசமாக, நான் சந்தித்திருக்கிற சகோதர சகோதரிகள் மலை காட்டுமிராண்டிகளைப் போல் முரட்டுத்தனமானவர்களாகவும் நாகரீகமற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பழக்கவழக்கங்களைப் பற்றியும், எப்படி நடந்துகொள்வது என்பதற்கான அடிப்படைகளைப் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. பல வாலிப சகோதரிகள், புத்திசாலித்தனமாகவும் கண்ணியமாகவும் தோன்றினாலும், அவர்கள் பூக்களைப் போல அழகாக வளர்ந்திருந்தாலும், இன்னும் “மாற்று” பாணியில் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள். ஒரு சகோதரியின்[அ] தலைமுடி, அவள் கண்களுக்கு எதுவும் தெரியாத அளவுக்கு, அவளது முழு முகத்தையும் மறைக்கிறது. அவளுடைய முக அம்சங்கள் சுத்தமாகவும் நற்குணம் மிகுந்ததாகவும் இருந்தாலும், அவளுடைய சிகை அலங்காரம் வெறுப்பூட்டுவதாகவும், ஒரு சிறார் சிறைச்சாலையில் அவள் ஒரு பிரதான குற்றவாளியைப் போல, ஒருவருக்கு வித்தியாசமான ஒரு உணர்வைத் தருவதாகவும் இருக்கிறது. தெளிவான மற்றும் பிரகாசமான, தண்ணீரில் உள்ள மரகதங்களைப் போன்ற அவளது கண்கள் அவளது ஆடை மற்றும் சிகை அலங்காரத்தால் ஈடுசெய்யப்படுகின்றன, ஆண்களின் இருதயத்திற்குள் பயத்தை ஏற்படுத்தும் அளவு, ஒரு இருண்ட இரவில் திடீரெனக் காணப்பட்டு, கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் விட்டு விட்டு ஒளிரும் ஒரு ஜோடி விளக்குகளைப் போல அவைகளைத் தோற்றமளிக்கச் செய்கிறாள். ஆனாலும், அவள் யாரிடமிருந்தோ வேண்டுமென்றே மறைந்திருப்பதைப் போலவும் தோன்றுகிறது. நான் அவளைச் சந்திக்கும் போது, அவள் எப்போதுமே “காட்சியில்” இருந்து தப்பிக்க வழிகளைத் திட்டமிடுகிறாள், ஒருவரை கொன்ற ஒரு கொலைகாரனைப் போல், கண்டுபிடிக்கப்படுவதற்கு பயந்து, தொடர்ந்து ஏமாற்றுகிறாள்; அதனால், அவளும், பல தலைமுறைகளாக அடிமைகளாக இருந்து, மற்றவர்கள் முன் ஒருபோதும் தலையை உயர்த்த முடியாத கருப்பு ஆப்பிரிக்கர்களைப்[1] போன்றவளாவாள். இந்த நடத்தைகளின் வேறுபாடு முதல், இந்த ஜனங்கள் ஆடை அணிவது மற்றும் தங்களை அலங்கரிப்பது வரை, மேம்படுத்தல் கிரியைக்கு பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சீன ஜனங்கள் அடிமைகளின் வாழ்க்கையை வாழ்ந்தனர், இது அவர்களின் எண்ணங்கள், கருத்துக்கள், ஜீவிதம், மொழி, நடத்தை மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தியது, இதனால் அவர்கள் சிறிதளவும் சுதந்திரமும் இல்லாமல் விடப்பட்டிருந்தார்கள். பல ஆயிரம் ஆண்டுகால வரலாறு, ஆவியைக் கொண்டிருந்த உயிருள்ள நபர்களை அழைத்துச் சென்று, ஆவியை இழந்த சடலங்களைப் போன்ற ஏதாவது ஒன்றில் அவர்களை தோய்ந்துபோகச் செய்துவிட்டது. “பாதாள உலகில்” பலர் சாத்தானின் கசாப்புக் கத்தியின் கீழ் வாழ்பவர்களாய் இருக்கிறார்கள், பலர் மிருகங்களின் குகைகள் போன்ற வீடுகளில் வாழ்பவர்களாய் இருக்கிறார்கள், பலர் எருதுகள் அல்லது குதிரைகள் சாப்பிடும் அதே உணவை சாப்பிடுபவர்களாய் இருக்கிறார்கள், மேலும் பலர் பொய் பேசுபவர்களாயும், உணர்ச்சியற்றவர்களாயும் மற்றும் குழப்பமானவர்களாயும் இருக்கிறார்கள். வெளிப்புறத் தோற்றத்தில், ஜனங்கள் பண்டைய கால மனிதனிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல, அவர்கள் இளைப்பாறும் இடம் நரகத்தைப் போன்றது, மற்றும் தோழமைக்கு அவர்கள் எல்லாவிதமான அசுத்த ஆவிகளாலும் பொல்லாத ஆவிகளாலும் சூழப்பட்டிருக்கிறார்கள். வெளிப்புறமாக, மனுஷர்கள் உயர்ந்த “விலங்குகள்” என்று தோன்றுகிறது; உண்மையில், அவர்கள் அசுத்த ஆவிகளுடன் வாழ்கிறார்கள் மற்றும் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிக்க யாருமில்லாமல், சாத்தானின் பதுங்கு குழிக்குள் ஜனங்கள் வாழ்கின்றனர், தப்பிக்க வழியின்றி அதன் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் வசதியான வீடுகளில் கூடி, மகிழ்ச்சியாகவும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொல்வதை விட, மனுஷர்கள் பாதாளத்தில் வாழ்கிறார்கள், பிசாசுகளைக் கையாளுகிறார்கள் மற்றும் பிசாசுகளுடன் தொடர்பு கொள்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். உண்மையில், ஜனங்கள் இன்னும் சாத்தானால் கட்டப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் அசுத்தமான ஆவிகள் கூடும் இடங்களில் வாழ்கிறார்கள், மேலும் அவைகளின் படுக்கைகள் தங்கள் சடலங்கள் தூங்குவதற்கான ஓர் இடம் போலவும், அவைகள் ஒரு வசதியான கூடு போலவும், இந்த அசுத்த ஆவிகளால் அவர்கள் கையாளப்படுகிறார்கள். அவர்களின் வீட்டிற்குள் நுழையும் போது, முற்றத்தில் குளிர்ச்சியாகவும் தனிமையாகவும், உலர்ந்த கிளைகளின் வழியாக ஒரு குளிர்ந்த காற்று வீசுகிறது. “வசிக்கும் இடத்தின்” கதவைத் திறந்தவுடன், அறை முழுவதும் அடர் கருமை நிறத்தில் உள்ளது—நீங்கள் உங்கள் கையை நீட்டினாலும் உங்கள் விரல்களைப் பார்க்க முடியாது. கதவின் விரிசல் வழியாக ஒரு சிறிய ஒளி கசிந்து, அறையை இன்னும் இருண்டதாகவும் பயங்கரமானதாகவும் உணர வைக்கிறது. அவ்வப்போது, வேடிக்கை காட்டுவதைப் போல, எலிகள் விநோதமான சத்தத்தை எழுப்புகின்றன. இப்போதுதான் சவப்பெட்டியில் வைக்கப்பட்ட ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு வீடு போல, அறையில் உள்ள அனைத்தும் வெறுப்பூட்டுவதாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கிறது. அறையில் உள்ள மெத்தை, படுக்கை உறைகள் மற்றும் மிகவும் சிறிய அலமாரி அனைத்தும் தூசியால் மூடப்பட்டிருக்கின்றன, தரையில் பல சிறிய நாற்காலிகள் தங்கள் கோரப்பற்களைத் திறந்துகொண்டும் தங்கள் நகங்களால் பயமுறுத்திக்கொண்டும் இருக்கின்றன, சிலந்தி வலைகள் சுவர்களில் தொங்குகின்றன. மேஜையில் ஒரு கண்ணாடியும், அதற்கு அடுத்ததாக ஒரு மர சீப்பும் இருக்கிறது. கண்ணாடியை நோக்கி நடந்து, நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து ஏற்றுங்கள். கண்ணாடி தூசியால் மூடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள், ஜனங்களின் சிந்தனைகளில்[ஆ] ஒரு வகையான “ஒப்பனையை” உருவாக்குகிறது, அதனால் அவர்கள் ஒரு கல்லறையிலிருந்து இப்போதுதான் வெளியே வந்ததைப் போல தோற்றமளிக்கிறார்கள். சீப்பு முடிகளால் நிறைந்திருக்கிறது. இவை அனைத்தும் பழையதும் மற்றும் ஒழுங்கற்றதுமாகவும், மற்றும் அவை இப்போதுதான் இறந்த யாரோ பயன்படுத்தியது போலவும் தெரிகிறது. சீப்பைப் பார்க்கும்போது, ஒரு சடலம் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளதைப் போல ஒருவர் உணர்கிறார். சீப்பில் உள்ள முடிகள், அவற்றில் இரத்த ஓட்டம் இல்லாமல், இறந்தவர்களின் துர்நாற்றத்துடன் காணப்படுகின்றன. கதவின் விரிசல் வழியாக குளிர் காற்று உள்ளே நுழைகிறது, ஒரு பேய் போல், அறையில் வசிக்கத் திரும்புவது போல், விரிசல் வழியாக நுழைகிறது. அறையில் ஒரு கடுங்குளிர் இருக்கிறது, திடீரென்று, அழுகும் சடலத்தின் துர்நாற்றம் வீசுகிறது, இந்த நேரத்தில் சுவர்களில் பல பொருட்கள் ஒழுங்கற்று தொங்குவதையும், படுக்கை சிதைந்து அழுக்காகவும் துர்நாற்றத்துடனும் இருப்பதையும். மூலையில் தானியங்கள் இருப்பதையும், சிறிய அலமாரி தூசியால் மூடப்பட்டிருப்பதையும், தரையானது கிளைகள், அழுக்குகளால் மற்றும் மூடப்பட்டிருப்பதையும் மற்றும் பலவற்றையும் பார்க்கலாம்—அவை ஒரு மரித்துப்போன நபரால் இப்போதுதான் பயன்படுத்தப்பட்டது போலவும், முன்னோக்கிப் பாய்வது போலவும், பற்களைக் கடித்து நகங்களால் கீறுவுதைப்போலவும் காணப்படுகின்றன. அது உங்களை நடுங்கச் செய்யப் போதுமானதாக இருக்கிறது. அறையில் எங்கும் வாழ்க்கைக்கான அடையாளம் இல்லை, தேவனால் சொல்லப்பட்ட பாதாளம் மற்றும் நரகம் போலவே அனைத்தும் இருட்டாகவும் ஈரமாகவும் இருக்கிறது. இது ஒரு மனுஷனின் கல்லறை போன்றது, வண்ணம் பூசப்படாத அறை, நாற்காலி, ஜன்னல் சட்டங்கள் மற்றும் கதவுகள் ஆகியவை துக்க உடை உடுத்தப்பட்டு மரித்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துவது போலானதாகும். மனுஷன் பல தசாப்தங்களாக, அல்லது பல நூற்றாண்டுகளாக, அல்லது பல ஆயிரம் வருடங்களாக இந்தப் பாதாள உலகில் வாழ்கிறான், சீக்கிரமாகவே வெளியே சென்று தாமதமாகத் திரும்புகிறான். சேவல்கள் கூவும் போது, விடியலின் வெளிச்சத்தில் அவர்கள் தங்கள் “கல்லறையிலிருந்து” வெளிவந்து, வானத்தைப் பார்த்து, நிலத்தைப் பார்த்து, தங்கள் அன்றாட வேலைகளைத் தொடங்குகிறார்கள். சூரியன் மலைகளுக்குப் பின்னால் மறையும்போது, அவர்கள் சோர்வடைந்த உடலை மீண்டும் “கல்லறைக்கு” இழுக்கிறார்கள்; அவர்கள் வயிற்றை நிரப்பியிருக்கும் அந்தச் சமயத்தில், அது அந்திப் பொழுதாகியிருக்கிறது. பின்னர், நாளை மீண்டும் “கல்லறையை” விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தவுடன், அவர்கள் வெளிச்சத்தை அணைக்கின்றனர், இது எரியும் நெருப்பின் பிரகாசத்தை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. இந்த நேரத்தில், நிலவொளியின் கீழ் காணக்கூடிய அனைத்தும் ஒவ்வொரு மூலையிலும் சிறிய மலைகளாக பரவிக்கிடக்கின்ற கல்லறை மேடுகளாக இருக்கின்றன. “கல்லறைகளுக்குள்” இருந்து குறட்டை ஒலி ஏற்ற இறக்கமாக அவ்வப்போது ஒலிக்கிறது. ஜனங்கள் அனைவரும் அயர்ந்து தூங்குகிறார்கள், மேலும் அசுத்தமான பிசாசுகள் மற்றும் ஆவிகள் அனைத்தும் நிம்மதியாக ஓய்வெடுப்பதாகத் தெரிகிறது. அவ்வப்போது, தூரத்திலிருந்து காகங்கள் கத்திக் கொண்டிருப்பதை ஒருவர் கேட்கிறார்—இது போன்ற ஓர் அமைதியான இரவில் இந்தப் பாழடைந்த இடத்தின் சத்தம் உங்கள் முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்தவும் உங்கள் முடியைப் புல்லரிக்கச் செய்யவும் போதுமானது…. மரித்து மரித்து மறுபடியும் பிறக்கும் இத்தகைய அமைப்புகளில் மனுஷன் எத்தனை வருடங்களைக் கழித்தான் என்பது யாருக்குத் தெரியும், ஜனங்களும் பிசாசுகளும் கலந்திருக்கும் மனுஷ உலகில் அவர்கள் எவ்வளவு காலம் தங்கியிருக்கிறார்கள் என்பதும் யாருக்குத் தெரியும், மேலும் என்னவென்றால், அவர்கள் எத்தனை முறை உலகத்திலிருந்து விடைபெற்றார்கள் என்பதும் யாருக்குத் தெரியும். பூமியில் உள்ள இந்த நரகத்தில் மனுஷர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார்கள், அவர்கள் குறைகூற ஒரு வார்த்தை கூட இல்லாமல் இருப்பது போல், அவர்கள் நீண்ட காலமாகப் பாதாளத்தில் வாழ்வதற்குப் பழகிவிட்டனர். எனவே, அசுத்தமான பிசாசுகள் வசிக்கும் இந்த இடத்தால் ஜனங்கள் ஈர்க்கப்படுகிறார்கள், அசுத்தமான பிசாசுகள் தங்கள் நண்பர்கள் மற்றும் தோழர்கள் போலவும், மனுஷ உலகம் ஒரு கொடியவர்களின் குழு[2] போலவும்—மனுஷனின் அசல் சாரமானது நீண்ட காலமாக ஒரு முனுமுனுப்பும் இல்லாமல் மறைந்துவிட்டது, அது ஒரு தடயமும் இல்லாமல் காணாமல்போய்விட்டது. ஜனங்களின் தோற்றம் ஓர் அசுத்தமான பிசாசைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டிருக்கிறது; அதை விட, அவர்களின் செயல்கள் அசுத்தப் பிசாசுகளால் கையாளப்படுகின்றன. இன்று, அவர்கள் அசுத்த பிசாசுளிலிருந்து பிறந்தவர்கள் போல, அசுத்த பிசாசுகளிலிருந்து ஒரு வித்தியாசமும் இல்லாதவர்களாகத் தோற்றமளிக்கிறார்கள். மேலும், ஜனங்கள் தங்கள் முன்னோர்கள் மீது மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கிறார்கள். மனுஷன் நீண்ட காலமாகச் சாத்தானால் ஒடுக்கப்பட்டான் என்பதும் அவர்கள் மலைகளில் மனிதக் குரங்குகளைப் போல ஆகிவிட்டார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர்களின் இரத்தம் தோய்ந்த கண்கள் ஒரு கெஞ்சுகிற பார்வையைக் கொண்டிருக்கின்றன, அவர்களிடமிருந்து பிரகாசிக்கும் மங்கலான ஒளியில் ஓர் அசுத்த பிசாசின் மோசமான தீமையின் மங்கலான அடையாளம் உள்ளது. அவர்களின் முகங்கள் சுருக்கங்களால் மூடப்பட்டுள்ளன, தேவதாரு விருட்சத்தின் மரப்பட்டை போல விரிசல் அடைந்துள்ளன, அவர்களின் வாய்கள் சாத்தானால் வடிவமைக்கப்பட்டவை போல வெளிப்புறமாக நீண்டுள்ளன, அவர்களின் காதுகள் உள்ளேயும் வெளியேயும் தூசி படிந்த அழுக்கால் பூசப்பட்டுள்ளன, அவர்களின் முதுகுகள் வளைந்திருக்கின்றன, அவர்களின் கால்கள் சரீரத்தைச் சுமக்கப் போராடுகின்றன, மற்றும் அவர்களின் எலும்பும் தோலுமான கைகள் ஒரேமாதிரியாக முன்னும் பின்னுமாக ஊசலாடுகின்றன. அவை தோலையும் எலும்பையும் தவிர வேறில்லை என்பதுபோல காணப்படுகிறது, ஆனாலும் அவர்கள் மீண்டும் ஒரு மலைக் கரடியைப் போல கொழுத்தவர்களாய் இருக்கின்றனர். உள்ளும் புறமும், அவர்கள் பழங்காலத்திலிருந்த குரங்கைப் போல அலங்கரிக்கப்பட்டும் உடுத்தியும் இருக்கிறார்கள்—இன்று, இந்தக் குரங்குகள் இன்னும் முழுமையாக நவீன மனுஷனின் பரிணாமமாக[3] வளர்ச்சியடையவில்லை, அதனால் அவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள்!
மனுஷன் விலங்குகளுடன் அருகருகே வாழ்கிறான், அவர்கள் சச்சரவுகள் அல்லது வாய்மொழி கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இணக்கமாகப் பழகுகிறார்கள். மனுஷன் விலங்குகள் மீதான பராமரிப்பிலும் அக்கறையிலும் மிகுந்த சிரத்தையுடன் இருக்கிறான், மேலும் விலங்குகள் மனுஷனின் உயிர்வாழ்வுக்காக, வெளிப்படையாக அவனுடைய நன்மைக்காக, தங்களுக்கு எந்த நன்மையும் இல்லாமல் மற்றும் மனிதனுக்கு முற்றிலுமான மற்றும் முழுமையான கீழ்ப்படிதலுடன் இருக்கின்றன. எல்லா தோற்றங்களுக்கும், மனுஷனுக்கும் மிருகத்துக்கும் இடையிலான உறவு நெருங்கியதாக[4] இருக்கிறது மற்றும் இணக்கமான[5] ஒன்றாக இருக்கிறது—மற்றும் அசுத்த ஆவிகள், மனுஷனுக்கும் மிருகத்திற்கும் சரியான பொருத்தமாகக் காணப்படும். இவ்வாறு, பூமியிலுள்ள மனுஷனும் அசுத்தமான பிசாசுகளும் இன்னும் நெருக்கமானவர்களாகவும் பிரிக்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்: அசுத்தமான பிசாசுகளிடமிருந்து பிரிந்து இருந்தாலும், மனுஷன் அவர்களுடன் இணைந்திருக்கிறான்; இதற்கிடையில், அசுத்தமான பிசாசுகள் மனுஷனிடமிருந்து எதையும் விலக்கி வைக்கவில்லை, தங்களிடம் உள்ள அனைத்தையும் “அர்ப்பணிக்கின்றன”. நாள்தோறும், ஜனங்கள் “நரகத்தின் ராஜாவின் அரண்மனையில்” உற்சாகமாகத் தாவிச் சென்று, “நரகத்தின் ராஜாவின்” (அவர்களின் முன்னோர்) தோழமையில் உல்லாசமாக இருந்து, அதனால் கையாளப்படுகிறார்கள், அதனால், இன்று ஜனங்கள் கறைபடிந்துள்ளனர், மற்றும், பாதாளத்தில் அதிக நேரம் செலவழித்த பிறகு, நீண்ட காலமாக “ஜீவனுள்ள உலகத்திற்கு” திரும்புவதை நிறுத்திவிட்டனர். இவ்வாறு, அவர்கள் ஒளியைக் கண்டவுடன், தேவனுடைய கோரிக்கைகள் மற்றும் தேவனுடைய குணநலன் மற்றும் அவருடைய கிரியையைப் பார்த்தவுடன், அவர்கள் பதட்டமாகவும் கவலையாகவும் உணர்கிறார்கள், ஆனாலும், பாதாள உலகத்திற்குத் திரும்பி பிசாசுகளுடன் வசிக்க ஏங்குகிறார்கள். நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தேவனை மறந்துவிட்டார்கள், அதனால் அவர்கள் எப்போதும் கல்லறைகளில் அலைந்து திரிந்திருக்கிறார்கள். நான் ஒரு நபரைச் சந்திக்கும் போது, நான் அவளுடன் பேச முயற்சி செய்கிறேன், இந்த நேரத்தில்தான் எனக்கு முன் நிற்பவர் மனிதர் அல்ல என்பதை நான் கண்டுபிடிக்கிறேன். அவளுடைய தலைமுடி கலைந்திருக்கிறது, அவள் முகம் அழுக்காக இருக்கிறது, அவள் பற்களைக் காட்டி புன்னகைக்கும் போது ஏதோ ஓநாய் போன்று தெரிகிறது. எனவே, அவளும் கல்லறையிலிருந்து வெளிப்பட்ட மற்றும் ஜீவனுள்ள உலகின் மனுஷனைப் பார்த்த, ஒரு பிசாசின் விகாரமான தன்மையுடையவளைப்போல காணப்படுகிறாள். இவள் எப்போதும் அவளது உதடுகளில் புன்னகையை ஏற்படுத்த முயற்சிக்கிறாள்; இவை இரண்டும் நயவஞ்சகமானதாகவும் கபடமானதாகவும் தோன்றுகிறது. அவள் என்னைப் பார்த்து புன்னகைக்கும்போது, அவள் சொல்வதற்கு ஏதோ கிடைத்தது போல் இருக்கிறது, ஆனால் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடிவதில்லை, அதனால் அவள் செய்யக்கூடியதெல்லாம், வெறுமையாகவும் முட்டாள்தனமாகவும் ஓர் ஓரமாக நிற்க வேண்டியதுதான். பின்னால் இருந்து பார்த்தால், அவள் “உழைக்கும் சீன ஜனங்களின் வலிமையான உருவத்தை” முன்வைப்பதாகத் தெரிகிறது; இந்தத் தருணங்களில் அவள் இன்னும் வெறுக்கத்தக்கவளாகத் தோன்றுகிறாள், ஜனங்கள் பேசும் பழங்காலப்[இ] பழம்பெரும் யான் ஹுவாங்/யான் வாங்கின் சந்ததியினரின் உருவத்தை நினைவுகூரச் செய்தது. நான் அவளிடம் விசாரித்தபோது, அவள் அமைதியாகத் தலையைத் தாழ்த்தினாள். அவள் பதிலளிக்க நீண்ட நேரம் எடுக்கிறது, அவள் அவ்வாறு செய்யும்போது அவள் மிகவும் தடுக்கப்படுகிறாள். அவளால் தன் கைகளை அசைக்காமல் வைத்திருக்க முடியாது, பூனையைப் போலத் தன் இரண்டு விரல்களையும் சூப்புகிறாள். மனுஷனின் கைகள் வெறும் குப்பைகளை எடுப்பது போல் இருப்பதையும், உடைந்த நகங்களாக, அவை வெண்மையாக இருக்க வேண்டியவை என்று ஒருவர் ஒருபோதும் அறிய முடியாத அளவிற்கு, “மெல்லிய” நகங்கள் அடர்த்தியாக அழுக்கால் நிறைந்திருப்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். இன்னும் அருவருப்பானது என்னவென்றால், அவர்களின் கைகளின் பின்புறம் இப்போதுதான் உறிக்கப்பட்ட கோழியின் தோலைப்போல் காணப்படுகிறது. மனுஷனுடைய உழைப்பின் இரத்தம் மற்றும் வியர்வையின் விலைக்கிரயத்தால் அவர்களின் கைகள் முழுவதும் உள்ள ரேகைகள் அனைத்தும் ஏறக்குறைய செறிவூட்டப்பட்டவையாகவும், அவைகள் ஒவ்வொன்றிற்குள்ளும் அழுக்கு போல் தோன்றி, “மண்ணின் நறுமணத்தை” வெளிப்படுத்துவதாகக் காணப்படுகிறது, மனுஷனுடைய துன்பத்தின் ஆவியினுடைய விலைமதிப்பற்ற மற்றும் புகழ்பெற்ற தன்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஏற்றவாறும் இருக்கிறது—அதனால் இந்தத் துன்பத்தின் ஆவி மனுஷனின் கைகளில் உள்ள ஒவ்வொரு வரிகளிலும் கூட ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது. தலை முதல் கால் வரை, மனுஷன் அணிந்திருக்கும் ஆடை எதுவும் விலங்கின் தோலைப்போலத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் எப்போதும் மிகவும் “கௌரவமானவர்களாக” இருந்தாலும், அவர்களின் மதிப்பு உண்மையில் ஒரு நரியின் ரோமத்தை விடக் குறைவாகவும்—இன்னும் மயிலின் இறகைவிடக் குறைவாகவும் உள்ளது, ஏனென்றால் அவர்கள் பன்றி மற்றும் நாயை விட மோசமாகத் தெரியும்படி, அவர்களின் ஆடையே நீண்ட காலமாக அவர்களை மிகவும் அசிங்கமாக்கியது. அவளது இறுக்கமான சிறிய மேல் சட்டை அவளது முதுகில் பாதியிலேயே தொங்குகிறது, மற்றும் அவளது கால்சட்டையின் கால்கள்—கோழியின் குடல்கள் போன்றவை—பிரகாசமான சூரிய ஒளியில் அவளது அசிங்கத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது. அவளுடைய கால்கள் நீண்ட காலமாகக் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன என்பதைக் காண்பிப்பதைப்போல அவை குட்டையானதும் குறுகியதுமாய் இருக்கின்றன: அவை பெரிய பாதங்கள், கடந்த சமுதாயத்தின் “மூன்று அங்குல தங்கத் தாமரைகள்” போல ஒருபோதும் இருப்பதில்லை. இந்த நபரின் உடை மிகவும் மேற்கத்தியமானது, ஆனால் மிகவும் மலிவானது. நான் அவளைச் சந்திக்கும் போது, அவள் எப்பொழுதும் வெட்கப்படுகிறாள், அவளது முகம் சிவந்திருக்கும், மற்றும் அவளால் தன் தலையை உயர்த்த முடியவில்லை, அவள் அசுத்தமான பிசாசுகளால் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறாள், இனி தன் முகத்தால் ஜனங்களைப் பார்க்கும்படி அவர்களின் முன் வர முடியாது. தூசி மனுஷனின் முகத்தை மறைக்கிறது. வானத்திலிருந்து விழுந்த இந்த தூசி மனுஷனின் முகத்தில் அநியாயமாக விழுவது போல் தோன்றுகிறது, இது குருவியின் இறகைப் போல் தோற்றமளிக்கச் செய்கிறது. மனுஷனின் கண்கள் ஒரு குருவியினுடையதைப் போன்றது: சிறியதாகவும் உலர்ந்ததாகவும், எந்த பிரகாசமும் இல்லாமலும் இருக்கின்றன. ஜனங்கள் பேசும்போது, அவர்களின் பேச்சு வழக்கமாக நிறுத்தி நிறுத்தி தயக்கத்துடனும், மலுப்புவதாகவும், மற்றவர்களுக்கு வெறுப்பூட்டுவதாகவும் அருவருப்பானதாகவும் இருக்கிறது. இன்னும் பலர் அத்தகைய ஜனங்களை “தேசத்தின் பிரதிநிதிகள்” என்று புகழ்கிறார்கள். இது நகைச்சுவையாக இல்லையா? ஜனங்கள் பாதாளத்திலும் நரகத்திலும் வாழும் வாழ்க்கையிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படி, தேவன் ஜனங்களை மாற்றவும், அவர்களை இரட்சிக்கவும், மரணத்தின் கல்லறையிலிருந்து அவர்களை மீட்கவும் விரும்புகிறார்.
அடிக்குறிப்புகள்:
1. “கருப்பு ஆப்பிரிக்கர்கள்” என்பது தேவனால் சபிக்கப்பட்ட, தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக இருந்த கருப்பின ஜனங்களைக் குறிக்கிறது.
2. “கொடியவர்களின் குழு” என்பது மனித குலத்தின் சீர்கேட்டையும், மேலும் மனிதகுலத்தில் எவ்வாறு பரிசுத்த மனுஷர்கள் இல்லாதிருக்கிறார்கள் என்பதையும் குறிக்கிறது.
3. “பரிணாமமாக” என்பது இன்றைய மனுஷர்களின் வடிவத்தில் இருக்கும் குரங்கு மனுஷர்களின் “பரிணாம வளர்ச்சியைக்” குறிக்கிறது. இதன் நோக்கம் நையாண்டியானது: உண்மையில், நிமிர்ந்து நடக்கிற மனுஷர்களாகப் பழங்காலக் குரங்குகள் மாறுவது போன்ற ஒரு கோட்பாடு இல்லை.
4. “நெருங்கியதாக” என்பது பரியாசம்பண்ணும் விதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
5. “இணக்கமான” என்பது பரியாசம்பண்ணும் விதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அ. மூல உரை “அவளது” என்று கூறுகிறது.
ஆ. மூல உரை “ஜனங்களின் முகங்களை” என்று கூறுகிறது.
இ. “யான்” மற்றும் “ஹுவாங்” ஆகியவை சீனாவின் முதல் கலாச்சாரத்தை அளித்த இரண்டு புராண பேரரசர்களின் பெயர்கள். “யான் வாங்” என்பது “நரகத்தின் ராஜா” என்பதற்கான சீனப் பெயர். மாண்டரின் மொழியில் உச்சரிக்கப்படும் போது “யான் ஹுவாங்” மற்றும் “யான் வாங்” கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.