வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்

தேவனை இன்று நீ எவ்வளவு நேசிக்கிறாய்? தேவன் உன்னிடத்தில் செய்த எல்லாவற்றைப் பற்றியும் நீ எவ்வளவு அறிந்திருக்கிறாய்? இவையெல்லாம்தான் நீ கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களாகும். தேவன் பூமிக்கு வரும்போது, அவர் மனுஷனில் செய்த விஷயங்கள் மற்றும் மனுஷனைப் பார்க்க அனுமதித்த விஷயங்கள் அனைத்தும் மனுஷன் அவரை நேசிப்பான், அவரை உண்மையாக அறிந்துகொள்வான் என்பதற்காகவே செய்யப்பட்டன. மனுஷன் தேவனுக்காகத் துன்பப்பட்டு, அவனால் இதுவரை வர முடிந்திருக்கிறது என்பதற்கு, ஒரு வகையில், தேவனின் அன்பு காரணமாகவும், மற்றொரு வகையில் தேவனின் இரட்சிப்பு காரணமாகவும் இருக்கின்றன; மேலும், இதற்கு நியாயத்தீர்ப்பு மற்றும் தேவன் மனுஷனில் மேற்கொண்ட சிட்சைக்கான கிரியை ஆகியவையும் காரணங்களாக இருக்கின்றன. நீங்கள் தேவனின் நியாயத்தீர்ப்பு, சிட்சை மற்றும் உபத்திரவங்கள் ஆகியவற்றைச் சந்திக்காமல் இருந்திருந்தால், தேவன் உங்களைத் துன்பப்படுத்தியிருக்கவில்லை என்றால், நீங்கள் உண்மையிலேயே தேவனை நேசிப்பதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும். மனுஷனில் தேவனின் கிரியை எவ்வளவு அதிகமாக உள்ளதோ மற்றும் மனுஷன் துன்பப்படுவது எவ்வளவு அதிகமாக உள்ளதோ, தேவனின் கிரியை எவ்வளவு அர்த்தமுள்ளது என்பதும் அவ்வளவு தெளிவாகத் தெரிகிறது, மேலும் மனுஷனின் இருதயத்தால் தேவனை அவ்வளவு அதிகமாக உண்மையாக நேசிக்கவும் முடிகிறது. தேவனை நேசிப்பது எப்படி என்பதை நீ எவ்வாறு கற்றுக்கொள்கிறாய்? தேவன் மனுஷனுக்கு அளித்தவை அனைத்தும் கிருபை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவையாக இருந்து, கடும்வேதனை மற்றும் புடமிடுதல் ஆகியவையும், வேதனைமிகுந்த உபத்திரவங்களும் இல்லாமல் இருந்தால், தேவனை உண்மையாக நேசிக்கும் ஒரு நிலையை உன்னால் அடைய முடியுமா? ஒருபுறம், தேவன் தரும் சோதனைகளின் போது மனுஷன் அவனது குறைபாடுகளை அறிந்துகொள்வதோடு, அவன் அற்பமானவனாகவும், இழிவானவனாகவும், தாழ்ந்தவனாகவும் இருப்பதைக் காண்கிறான், தன்னிடம் எதுவுமே இல்லை, தான் ஒன்றுமேயில்லை என்பதையும் உணர்கிறான்; மறுபுறம், அவனது உபத்திரவங்களின் போது தேவன் மனுஷனுக்கு வெவ்வேறு சூழல்களை உருவாக்குகிறார், அவை தேவனின் சௌந்தரியத்தை மனுஷனை அதிகமாக அனுபவிக்க வைக்கிறது. வேதனையானது மிகப் பெரிதாகவும், சில சமயங்களில் தீர்க்கமுடியாததாகவும் இருந்தாலும், அதை அனுபவித்ததனால் அது கடுமையான துக்க நிலையை எட்டினாலும், தன்னுள் தேவன் எவ்வளவு அழகாகக் கிரியை செய்கிறார் என்பதை மனுஷன் காண்கிறான், இந்த அஸ்திபாரத்தில்தான் மனுஷனுக்கு தேவன்மீது உண்மையான அன்பு பிறக்கிறது. இன்று தேவனின் கிருபையுடனும், அன்புடனும், இரக்கத்துடனும் மட்டுமே, தன்னை உண்மையாக அறிந்துகொள்ள முடியாது என்பதை மனுஷன் காண்கிறான், மேலும் மனுஷனின் சாராம்சத்தையும் அவனால் அறிந்துகொள்ள முடியாது. தேவனின் புடமிடுதல் மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகிய இரண்டின் மூலமாகவும், மேலும் புடமிடுதல் செயல்பாட்டின் போதும் மட்டுமே, மனுஷன் தனது குறைபாடுகளை அறிந்துகொள்ளவும், மேலும் தன்னிடம் எதுவும் இல்லை என்பதையும் அறிந்துகொள்ள முடியும். ஆகவே, தேவன் மீதான மனுஷனின் அன்பானது தேவனின் புடமிடுதல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்னும் அஸ்திபாரத்தின் மீது கட்டப்படுகிறது. நீ தேவனின் கிருபையை மட்டுமே அனுபவித்து, அமைதியான குடும்ப வாழ்க்கை அல்லது பொருள் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்து, நீ தேவனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தேவன் மீதான உனது விசுவாசத்தை வெற்றிகரமானதாகக் கருத முடியாது. தேவன் ஏற்கெனவே மாம்சத்தில் ஒரு கட்ட கிருபையின் கிரியையை மேற்கொண்டுள்ளார், ஏற்கெனவே மனுஷனுக்குப் பொருள் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார், ஆனால் மனுஷனைக் கிருபை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றால் மட்டுமே பரிபூரணமாக்க முடியாது. மனுஷனின் அனுபவங்களில், அவன் தேவனின் சிறிதளவு அன்பை எதிர்கொள்கிறான், தேவனின் அன்பையும் இரக்கத்தையும் காண்கிறான், ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றை அனுபவித்திருப்பதால், தேவனின் கிருபை அவருடைய அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றால் மனுஷனை பரிபூரணமாக்க இயலாது என்பதையும், அவற்றால் மனுஷனுக்குள் எது சீர்கெட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்த முடியாது என்பதையும், அவற்றால் மனுஷனை அவனது சீர்கெட்ட மனநிலையிலிருந்து விடுவிக்கவோ, அல்லது அவனது அன்பையும் விசுவாசத்தையும் பரிபூரணமாக்கவோ இயலாது என்பதையும் அவன் காண்கிறான். தேவனுடைய கிருபைக்கான கிரியையானது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கிரியையாகத்தான் இருக்கிறது, மேலும் தேவனை அறிந்து கொள்வதற்காக மனுஷன் தேவனின் கிருபையை அனுபவிப்பதை சார்ந்திருக்க முடியாது.

மனுஷனை தேவன் பரிபூரணமாக்குவது எவ்வாறாக நிறைவேற்றப்படுகிறது? இது அவருடைய நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், கடுங்கோபமும், மகத்துவமும், நியாயத்தீர்ப்பும், சாபமும் கொண்டது, மேலும் அவர் மனுஷனை முதன்மையாக அவருடைய நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணமாக்குகிறார். சிலர் புரிந்துகொள்ளாமல், ஏன் தேவனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சாபத்தின் மூலம் மட்டுமே மனுஷனைப் பரிபூரணமாக்க முடிகிறது என்று கேட்கிறார்கள். அவர்கள், “தேவன் மனுஷனை சபிப்பதாக இருந்தால், மனுஷன் இறந்துபோக மாட்டானா? தேவன் மனுஷனை நியாயந்தீர்ப்பதாக இருந்தால், மனுஷன் கண்டிக்கப்படமாட்டானா? பின்னர் எப்படி அவன் இன்னும் பரிபூரணமாக்கப்பட முடியும்?” என்கிறார்கள். தேவனின் கிரியையை அறியாத ஜனங்களின் வார்த்தைகள் அப்படியாக இருக்கின்றன. தேவன் மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் சபிக்கிறார், அவர் மனுஷனின் பாவங்களைத்தான் நியாயந்தீர்க்கிறார். அவர் கடுமையாக இரக்கமின்றி பேசினாலும், மனுஷனுக்குள் உள்ள அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார், மனுஷனுக்குள் இருக்கும் பிரத்தியேகமானவற்றை இந்தக் கடுமையான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், ஆனாலும் அத்தகைய நியாயத்தீர்ப்பின் மூலம், அவர் மாம்சத்தின் சாராம்சத்தைப் பற்றிய ஆழமான அறிவை மனுஷனுக்கு அளிக்கிறார், இதனால் தேவன் முன்பாக மனுஷன் கீழ்ப்படிகிறான். மனுஷனின் மாம்சமானது பாவத்தாலும் சாத்தானாலும் ஆனது, அது கீழ்ப்படியாதது, அது தேவனுடைய சிட்சைக்கான பொருளாகவும் இருக்கிறது. ஆகவே, மனுஷன் தன்னைத் தெரிந்துகொள்ள அனுமதிக்க, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அவனுக்கு நேரிட வேண்டும், மேலும் எல்லா வகையான புடமிடுதலையும் பயன்படுத்த வேண்டும்; அப்போதுதான் தேவனின் கிரியையானது பயனுள்ளதாக இருக்கும்.

தேவன் பேசிய வார்த்தைகளின் மூலம் அவர் ஏற்கெனவே மனுஷனின் மாம்சத்தைக் கண்டித்துள்ளார் என்பதைக் காணலாம். அப்படியானால், இந்த வார்த்தைகள் சபிக்கும் வார்த்தைகள் இல்லையா? தேவன் பேசும் வார்த்தைகள் மனுஷனின் உண்மையான சுபாவங்களை வெளிப்படுத்துகின்றன, அத்தகைய வெளிப்பாட்டின் மூலம் அவன் நியாயந்தீர்க்கப்படுகிறான், மேலும் அவனால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற இயலாது என்பதை அவன் காணும்போது, தனக்குள் அவன் துக்கத்தையும் வருத்தத்தையும் உணர்கிறான், அவன் தேவனுக்குக் கடன்பட்டிருப்பதாகவும், தேவனுடைய சித்தத்தை அடைய முடியாது என்றும் உணர்கிறான். பரிசுத்த ஆவியானவர் உன்னை உள்ளிருந்து தண்டித்து திருத்தும் காலங்களும் உள்ளன, இந்த தண்டித்து திருத்துதல் தேவனின் நியாயத்தீர்ப்பிலிருந்து வருகிறது; தேவன் உன்னை நிந்தித்து, அவரது முகத்தை உன்னிடமிருந்து மறைக்கும் காலம், அவர் உனக்கு செவிசாய்க்காமல், உன்னுள் கிரியை செய்யும் காலம், உன்னை சுத்திகரிப்பதற்காக உன்னை சத்தமில்லாமல் சிட்சிக்கும் காலம் ஆகிய காலங்களும் இருக்கின்றன. மனுஷனில் தேவனின் கிரியையானது முதன்மையாக அவருடைய நீதியான மனநிலையைத் தெளிவுபடுத்துவதற்காகவே செய்யப்படுகிறது. மனுஷன் இறுதியில் தேவனுக்கு என்ன சாட்சியம் அளிக்கிறான்? தேவன் நீதியுள்ள தேவன் என்று மனுஷன் சாட்சிக் கொடுக்கிறான், அவருடைய மனநிலை நீதியும், கடுங்கோபமும், சிட்சையும், நியாயத்தீர்ப்பும் கொண்டதாக சாட்சிக் கொடுக்கிறான்; தேவனின் நீதியான மனநிலைக்கு மனுஷன் சாட்சிக் கொடுக்கிறான். மனுஷனைப் பரிபூரணமாக்க தேவன் தமது நியாயத்தீர்ப்பைப் பயன்படுத்துகிறார், அவர் மனுஷனை நேசித்திருக்கிறார், மனுஷனை இரட்சித்திருக்கிறார்—ஆனால் அவருடைய அன்புக்குள் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன? நியாயத்தீர்ப்பு, மகத்துவம், கடுங்கோபம் மற்றும் சாபம் ஆகியவை இருக்கின்றன. கடந்த காலத்தில் தேவன் மனுஷனை சபித்த போதிலும், அவர் மனுஷனைப் பாதாளக்குழிக்குள் முழுமையாகத் தள்ளிடவில்லை, ஆனால் மனுஷனின் விசுவாசத்தைச் சுத்திகரிக்க அவ்வழியைப் பயன்படுத்தினார்; அவர் மனுஷனைக் கொல்லவில்லை, ஆனால் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகவே செயல்பட்டார். மாம்சத்தின் சாராம்சம் சாத்தானிடமிருந்து வந்தது—தேவன் அதைச் சரியாகச் சொன்னார்—ஆனால் தேவனால் மேற்கொள்ளப்பட்ட உண்மைகள் அவருடைய வார்த்தைகளின்படி முடிக்கப்படவில்லை. நீ அவரை நேசிப்பதற்காகவும், நீ மாம்சத்தின் சாராம்சத்தை அறிந்து கொள்வதற்காகவும் அவர் உன்னைச் சபிக்கிறார்; நீ விழித்துக் கொள்ளவும், உனக்குள் இருக்கும் குறைபாடுகளை நீ அறிந்துகொள்ள மற்றும் மனுஷனின் முழு தகுதியற்ற தன்மையை அறிய உன்னை அனுமதிக்கவும் அவர் உன்னை சிட்சிக்கிறார். ஆகவே, தேவனின் சாபங்கள், அவருடைய நியாயத்தீர்ப்பு, அவருடைய மகத்துவம் மற்றும் கடுங்கோபம்—இவை அனைத்தும் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகத்தான். இன்று தேவன் செய்கிற எல்லாவற்றையும், அவர் உனக்குள் தெளிவுபடுத்தும் நீதியான மனநிலையும்—இவை அனைத்தும் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகத்தான். இதுவே தேவனின் அன்பு.

மனுஷனின் பாரம்பரியக் கருத்துக்களில், தேவனின் அன்பு என்பது அவருடைய கிருபை, இரக்கம் மற்றும் மனுஷனின் பலவீனத்திற்கான அனுதாபம் ஆகியவைதான் என்று அவன் விசுவாசிக்கிறான். இந்த விஷயங்களும் தேவனின் அன்புதான் என்றாலும், இவை ஒருதலைப்பட்சமானவை, மேலும் தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்கான முதன்மை வழிமுறையாக இது இருப்பதில்லை. சிலர் உடல்நலக்குறைவு காரணமாக தேவனை விசுவாசிக்கத் தொடங்குகிறார்கள். இந்த உடல்நலக் குறைவானதுதான் உனக்கான தேவனின் கிருபை; அது இல்லாமல், நீ தேவனை விசுவாசிக்க மாட்டாய், நீ தேவனை விசுவாசிக்கவில்லை என்றால் நீ இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டாய்—ஆகவே இந்தக் கிருபை கூட தேவனின் அன்புதான். இயேசுவை விசுவாசித்த காலத்தில், ஜனங்கள் தேவனுக்குப் பிடிக்காததைச் செய்தார்கள், ஏனென்றால் அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவில்லை, ஆனாலும் தேவனிடம் அன்பும் இரக்கமும் இருக்கிறது, மேலும் அவர் மனுஷனை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார். மனுஷனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், மனுஷன் தம்மைப் பின்பற்ற தேவன் அனுமதிக்கிறார், மேலும், அவர் இன்றைய நாள் வரை மனுஷனை வழிநடத்தியிருக்கிறார். இது தேவனின் அன்பு இல்லையா? தேவனின் மனநிலையில் வெளிப்படும் விஷயங்களே தேவனின் அன்பாகும்—இது முற்றிலும் சரியானது! திருச்சபைக் கட்டிடம் அதன் முடிவடையும் நிலையை எட்டியபோது, தேவன் ஊழியம் செய்பவர்களின் கிரியைகளைச் செய்து, மனுஷனைப் பாதாளக்குழிக்குள் தள்ளினார். ஊழியம் செய்பவர்களின் காலத்தின் வார்த்தைகள் அனைத்தும் சாபங்களாக இருந்தன: உனது மாம்சத்தின் சாபங்கள், உனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையின் சாபங்கள் மற்றும் தேவனின் சித்தத்தை நிறைவேற்றாத உனது விஷயங்களின் சாபங்கள் ஆகியவைதான் அந்த சாபங்கள். அந்தக் கட்டத்தில் தேவன் செய்த கிரியைகள் மகத்துவம் மிக்கதாக வெளிப்பட்டன, அதன்பிறகு தேவன் சிட்சைக்கான கிரியையை மேற்கொண்டார், மேலும் மரண உபத்திரவமும் வந்தது. அத்தகைய கிரியையில், மனுஷன் தேவனின் கோபத்தையும், மகத்துவத்தையும், நியாயத்தீர்ப்பையும், ஆக்கினைத்தீர்ப்பையும் கண்டான், மேலும் தேவனின் கிருபையையும், அவருடைய அன்பையும், இரக்கத்தையும் அவன் கண்டான். தேவன் செய்த அனைத்தும், மற்றும் அவருடைய மனநிலையாக வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும், மனுஷன் மீதான தேவனின் அன்பாக மட்டுமே இருந்தது. தேவன் செய்த அனைத்தும் மனுஷனின் தேவைகளைப் பூர்த்தி செய்தன. மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்காகவே அவர் அதைச் செய்தார், மேலும் அவர் மனுஷனின் வளர்ச்சிக்கு ஏற்ப அவனுக்கு வழங்கினார். தேவன் இதைச் செய்திராவிட்டால், மனுஷனால் தேவனுக்கு முன்பாக வர முடிந்திருக்காது, மேலும் தேவனின் உண்மையான முகத்தை அறிய வழி இருந்திருக்காது. மனுஷன் முதன்முதலில் தேவனை நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை, மனுஷனின் வளர்ச்சிக்கு ஏற்ப தேவன் படிப்படியாக மனுஷனுக்கு வழங்கியிருக்கிறார், இதனால், தனக்குள் மனுஷன் படிப்படியாக அவரை அறிந்துகொண்டான். இன்றைய நாளுக்கு வந்திருப்பதால் மட்டுமே தேவனின் நியாயத்தீர்ப்பு எவ்வளவு அற்புதமானது என்பதை மனுஷன் உணருகிறான். சிருஷ்டிப்பின் காலத்திலிருந்து இன்று வரை சபிக்கும் கிரியையின் முதல் நிகழ்வுதான் ஊழியம் செய்பவர்களின் கிரியையின் படியாக இருந்தது. மனுஷன் பாதாளக்குழிக்குள் போக சபிக்கப்பட்டான். தேவன் அதைச் செய்திருக்கவில்லை என்றால், இன்று மனுஷனுக்கு தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருந்திருக்காது; தேவனுடைய சாபத்தின் மூலம்தான் மனுஷன் அதிகாரப்பூர்வமாக அவரது மனநிலையை எதிர்கொண்டான். ஊழியம் செய்பவர்களின் உபத்திரவம் மூலம் மனுஷன் வெளிப்பட்டான். அவனது விசுவாசம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவனது வளர்ச்சி மிகச் சிறியது என்றும், தேவனின் சித்தத்தை அவனால் நிறைவேற்ற இயலாது என்றும், எல்லா நேரங்களிலும் தேவனைத் திருப்திப்படுத்துவதாக அவன் கூறியது வெறும் வார்த்தைகளைத் தவிர வேறில்லை என்றும் அவர் கண்டார். ஊழியம் செய்பவர்களின் கிரியையின் படியில் தேவன் மனுஷனை சபித்த போதிலும், இப்போது திரும்பிப் பார்க்கும்போது, தேவனுடைய கிரியையின் அந்தப் படியானது அற்புதமானதாக இருக்கிறது: இது மனுஷனுக்கு ஒரு சிறந்த திருப்புமுனையைக் கொண்டு வந்தது, மேலும் அவனது ஜீவித மனநிலையில் ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஊழியம் செய்பவர்களின் காலத்திற்கு முன்பு, மனுஷன் ஜீவிதத்தைப் பின்தொடர்வது என்றால் என்ன, தேவனை விசுவாசிப்பது என்றால் என்ன, அல்லது தேவனுடைய கிரியையின் ஞானம் ஆகியவற்றைப் பற்றி எதுவும் புரிந்துகொள்ளவில்லை, மேலும் தேவனின் கிரியையானது மனுஷனைச் சோதிக்க முடியும் என்பதையும் அவன் புரிந்துகொள்ளவில்லை. ஊழியம் செய்பவர்களின் காலம் முதல் இன்று வரை, தேவனின் கிரியை எவ்வளவு அதிசயமானது என்பதை மனுஷன் கண்டுவருகிறான்—இது மனுஷனால் புரிந்துகொள்ள முடியாதது. மனுஷன் தனது மூளையைப் பயன்படுத்தி அதன்மூலம் தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் கற்பனை செய்ய முடிவதில்லை, மேலும் தனது வளர்ச்சி எவ்வளவு சிறியது என்பதையும், தான் அதிகம் கீழ்ப்படியாமல் இருப்பதையும் அவன் காண்கிறான். தேவன் மனுஷனை சபித்தபோது, அது ஒரு விளைவை அடைவதற்காகவே செய்யப்பட்டது, அவர் மனுஷனைக் கொல்லவில்லை. அவர் மனுஷனை சபித்த போதிலும், அவர் வார்த்தைகளால்தான் அவ்வாறு செய்தார், அவருடைய சாபங்கள் உண்மையில் மனுஷனுக்கு ஏற்படவில்லை, ஏனென்றால் தேவன் மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் சபித்திருக்கிறார், ஆகவே மனுஷனைப் பரிபூரணமாக்குவதற்கும் அவருடைய சாபங்களின் வார்த்தைகள் பேசப்பட்டன. தேவன் மனுஷனை நியாயந்தீர்த்தாலும் சபித்தாலும், இரண்டுமே மனுஷனைப் பரிபூரணமாக்குகின்றன: இவை இரண்டும் மனுஷனுக்குள் தூய்மையற்றதைப் பரிபூரணமாக்கவே செய்யப்படுகின்றன. இதன் மூலம் மனுஷன் சுத்திகரிக்கப்படுகிறான், மேலும் மனுஷனுக்குள் இல்லாத விஷயங்கள் அவருடைய வார்த்தைகள் மற்றும் கிரியையின் மூலம் பரிபூரணமாக்கப்படுகின்றன. கடுமையான வார்த்தைகள் அல்லது நியாயத்தீர்ப்பு அல்லது சிட்சை என எதுவாக இருந்தாலும், தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியும் மனுஷனைப் பரிபூரணமாக்குகிறது, மேலும் அது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கிறது. யுகங்கள் முழுவதும் தேவன் இதுபோன்ற கிரியையைச் செய்ததில்லை; இன்று, நீங்கள் அவருடைய ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் உங்களுக்குள் கிரியை செய்கிறார். உங்களுக்குள் சில வேதனைகளை நீங்கள் அனுபவித்திருந்தாலும், உங்கள் இருதயங்கள் உறுதியும் சமாதானமும் அடைகின்றன; தேவனுடைய இந்தக் கட்ட கிரியையை உங்களால் அனுபவிக்க முடிகிறது என்பது உங்களது ஆசீர்வாதமாக இருக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் எதை ஆதாயமாக்கிக்கொள்ள முடியும் என்பதைப் பொருட்படுத்தாமல் பார்த்தால், இன்று தேவனின் கிரியையில் நீங்கள் காண்பது அன்பு மட்டுமாகத்தான் இருக்கிறது. தேவனின் நியாயத்தீர்ப்பையும் புடமிடுதலையும் மனுஷன் அனுபவிக்காவிட்டால், அவனுடைய செயல்களும் ஆர்வமும் எப்போதும் மேற்பரப்பு மட்டத்திலேயே இருக்கும், மேலும் அவனது மனநிலையும் எப்போதும் மாறாமல் இருக்கும். இது தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறதா? இன்று, ஆணவமும் அகந்தையும் நிறைந்த மனுஷனுக்குள் இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், மனுஷனின் மனநிலை முன்பை விட மிகவும் நிலையானதாக இருக்கிறது. தேவன் உன்னைக் கையாளுவது உன்னை இரட்சிப்பதற்காகச் செய்யப்படுகிறது, மேலும் அந்த நேரத்தில் நீ சிறிது வலியை உணர்ந்தாலும், உனது மனநிலையில் மாற்றம் ஏற்படும் நாள் வரும். அந்த நேரத்தில், நீ திரும்பிப் பார்த்து, தேவனின் கிரியை எவ்வளவு ஞானமானது என்பதைக் காண்பாய், அந்த நேரத்தில் உன்னால் தேவனின் சித்தத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று, சிலர் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்கள், ஆனால் அது மிகவும் யதார்த்தமானதாக இல்லை. உண்மையில், அவர்கள் பொய்யைப் பேசுகிறார்கள், ஏனென்றால் தேவனின் சித்தம் மனுஷனை இரட்சிப்பதா அல்லது மனுஷனை சபிப்பதா என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவேளை உன்னால் இப்போது அதைத் தெளிவாகக் காண முடியாமல் இருக்கலாம், ஆனால் தேவன் மகிமை அடையும் நாள் வந்துவிட்டது என்பதை நீ பார்க்கும் நாள் வரும், மேலும் தேவனை நேசிப்பது எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை நீ காண்பாய், இதன்மூலம் நீ மனுஷ ஜீவிதத்தை அறிந்து கொள்ளுவாய், உனது மாம்சம் தேவனை நேசிக்கும் உலகில் ஜீவிக்கும், இதன்மூலம் உனது ஆவி விடுவிக்கப்படும், உனது ஜீவிதம் மகிழ்ச்சியாக இருக்கும், மேலும் நீ எப்போதும் தேவனுக்கு நெருக்கமாக இருப்பாய், அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பாய். அந்த நேரத்தில், தேவனின் இன்றைய கிரியை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நீ உண்மையிலேயே அறிந்துகொள்வாய்.

இன்று, பெரும்பாலான ஜனங்களுக்கு அந்த அறிவு இருப்பதில்லை. துன்பப்படுவதற்கு மதிப்பில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள், அவர்கள் உலகத்தால் கைவிடப்படுகிறார்கள், அவர்களின் குடும்ப வாழ்க்கை கலக்கமடைகிறது, அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாக இருப்பதில்லை, அவர்களின் வாய்ப்புகள் இருண்டவையாக இருக்கின்றன. சிலரின் துன்பம் ஒரு தீவிரத்தை அடைகிறது, அவர்களின் எண்ணங்கள் மரணமாக மாறுகின்றன. இது தேவன் மீதான உண்மையான அன்பு அல்ல; அத்தகையவர்கள் கோழைகள், அவர்களுக்கு விடாமுயற்சி இருப்பதில்லை, அவர்கள் பலவீனமானவர்கள், சக்தியற்றவர்கள்! மனுஷன் தன்னை நேசிக்க வேண்டுமென தேவன் ஆவலாக உள்ளார், ஆனால் மனுஷன் எவ்வளவு அதிகமாக தேவனை நேசிக்கிறானோ, அந்தளவிற்கு அவன் துன்பப்படுகிறான், மனுஷன் எவ்வளவு அதிகமாக தேவனை நேசிக்கிறானோ, அந்தளவிற்கு அவனுக்கு உபத்திரவங்கள் இருக்கின்றன. நீ அவரை நேசிக்கிறாய் என்றால், ஒவ்வொரு விதமான துன்பமும் உனக்கு ஏற்படும்—நீ அவரை நேசிக்காவிட்டால், உனக்கு எல்லாமே சுமுகமாக நடக்கும், உன்னைச் சுற்றி அனைத்தும் அமைதியாக இருக்கும். நீ தேவனை நேசிக்கும்போது, உன்னைச் சுற்றியுள்ளவை வெல்ல முடியாதவை என்பதை நீ உணருவாய், மேலும் உனது வளர்ச்சி மிகச் சிறியதாக இருப்பதால் நீ சுத்திகரிக்கப்படுவாய்; மேலும், உன்னால் தேவனை திருப்திப்படுத்த இயலாது, மேலும் தேவனின் சித்தம் மிக உயர்ந்தது, அதை மனுஷனால் எட்ட முடியாது என்பதை நீ எப்போதும் உணருவாய். இவை அனைத்தின் காரணமாகவும் நீ சுத்திகரிக்கப்படுவாய்—உனக்குள் அதிக பலவீனம் இருப்பதாலும், மேலும் தேவனுடைய சித்தத்தை உன்னால் நிறைவேற்ற முடியாது என்பதாலும், நீ உனக்குள் சுத்திகரிக்கப்படுவாய். ஆயினும் புடமிடுதல் மூலம் மட்டுமே தூய்மையானது அடையப்படுகிறது என்பதை நீ தெளிவாகக் காண வேண்டும். எனவே, இந்தக் கடைசிக் காலத்தில் நீ தேவனுக்கு சாட்சி கொடுக்க வேண்டும். உனது துன்பம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீ இறுதி வரை நடக்க வேண்டும், உனது கடைசி மூச்சிலும் கூட, நீ தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மேலும் தேவனின் திட்டமிடலுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்; இதுதான் உண்மையிலேயே தேவனை நேசிப்பதாகும், இது மட்டுமே வலுவான மற்றும் உறுதியான சாட்சியம் ஆகும். நீ சாத்தானால் சோதிக்கப்படும்போது, நீ, “என் இருதயம் தேவனுக்குச் சொந்தமானது, தேவன் ஏற்கெனவே என்னை ஆதாயப்படுத்தியிருக்கிறார். என்னால் உன்னைத் திருப்திப்படுத்த முடியாது—தேவனைத் திருப்திப்படுத்துவதற்காக நான் என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்,” என்று கூற வேண்டும். நீ எவ்வளவு அதிகமாக தேவனை திருப்திப்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், மேலும் தேவன் மீதான உனது அன்பின் வலிமையும் அதிகமாகும்; ஆகவே, நீ விசுவாசத்தையும் மனவலிமையையும் பெறுவாய், மேலும் தேவனை நேசிப்பதால் கழிந்த ஜீவிதத்தை விட வேறு எதுவும் தகுதியானதாகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ இல்லை என்று உணருவாய். மனுஷன் தேவனை நேசிக்கும் வரை, அவன் துக்கம் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறலாம். உனது மாம்சம் பலவீனமடைந்து, பல உண்மையான கஷ்டங்களில் நீ சிக்கித் தவிக்கும் காலநேரங்கள் இருந்தாலும், இப்படிப்பட்ட காலங்களில் நீ உண்மையிலேயே தேவனை நம்பியிருப்பாய், உனது ஆவிக்குள் நீ ஆறுதலடைவாய், மேலும் நீ சார்ந்திருக்க ஏதோ இருக்கிறதென்று உறுதியாக உணருவாய். இவ்வாறாக, உன்னால் பல சூழல்களை வெல்ல முடியும், எனவே நீ அனுபவிக்கும் வேதனையின் காரணமாக நீ தேவனைப் பற்றி குறைகூற மாட்டாய். அதற்குப் பதிலாக, நீ பாடுவதற்கும், நடனமாடுவதற்கும், ஜெபிப்பதற்கும், ஒன்றுகூடுவதற்கும், தொடர்புகொள்வதற்கும், தேவனைப் பற்றி சிந்தனை செய்யவும் விரும்புவாய், மேலும் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உன்னைச் சுற்றியுள்ள எல்லா ஜனங்களும், காரியங்களும், விஷயங்களும் பொருத்தமானவை என்பதை நீ உணருவாய். நீ தேவனை நேசிக்காவிட்டால், நீ பார்க்கும் அனைத்தும் உனக்குத் தொந்தரவாக இருக்கும், மேலும் உனது கண்களுக்கு எதுவுமே மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்காது; உனது ஆவியில் நீ விடுதலையோடு இருக்க மாட்டாய் அதற்குப்பதிலாக ஒடுக்கப்படுவாய், உனது இருதயம் எப்போதும் தேவனைப் பற்றி குறைசொல்லும், மேலும் நீ இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாய், அது மிகவும் அநியாயமானது என்பதை நீ எப்போதும் உணருவாய். நீ மகிழ்ச்சிக்காகக் கடைப்பிடிக்காமல் தேவனைத் திருப்திப்படுத்தவும், சாத்தானால் குற்றம் சாட்டப்படாமலும் இருக்க வேண்டும் என்பதற்காகக் கடைப்பிடித்தால், அத்தகைய கடைப்பிடித்தலானது தேவனை நேசிக்க உனக்கு பெரும் பலத்தைத் தரும். தேவனால் பேசப்படும் அனைத்தையும் மனுஷனால் செயல்படுத்த முடிகிறது, மேலும் அவன் செய்யும் அனைத்து விஷயங்களாலும் தேவனை திருப்திப்படுத்த முடிகிறது—இதுதான் யதார்த்தத்தை வைத்திருப்பதன் அர்த்தமாக இருக்கிறது. தேவனின் திருப்தியைக் கடைப்பிடிப்பது என்றால் தேவன் மீதான உனது அன்பைப் பயன்படுத்தி அவருடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும்; நேரத்தைப் பொருட்படுத்தாமல்—மற்றவர்கள் பலமில்லாமல் இருக்கும்போதும் கூட—உனக்குள்ளே தேவனை நேசிக்கும் ஒரு இருதயம் இன்னும் இருக்கிறது, அந்த இருதயமானது தேவனுக்காக ஆழமாக ஏங்குகிறது மற்றும் தவிக்கிறது. இதுவே உண்மையான வளர்ச்சியாகும். உனது வளர்ச்சி எவ்வளவு பெரியது என்பது தேவனுக்கான உனது அன்பு எவ்வளவு பெரியதாக இருக்கிறது, சோதனை செய்யப்படும்போது உன்னால் உறுதியாக நிற்க முடிகிறதா, ஒரு குறிப்பிட்டச் சூழல் உன் மீது வரும்போது நீ பலவீனமாக இருக்கிறாயா, உனது சகோதர சகோதரிகள் உன்னை நிராகரிக்கும்போது உன்னால் நிலையாக நிற்க முடிகிறதா என்பதைப் பொறுத்ததாக இருக்கிறது; உண்மைகளின் வருகை தேவன் மீதான உனது அன்பு எப்படி இருக்கும் என்பதைக் காண்பிக்கும். மனுஷனுடைய ஆவிக்குரிய கண்கள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை என்றாலும், தேவனின் பெரும்பாலான கிரியைகளையும், அவருடைய சித்தத்தையும், அல்லது தேவனைப் பற்றிய பல அழகான விஷயங்களையும் அவனால் தெளிவாகக் காண முடியவில்லை என்றாலும், தேவன் உண்மையிலேயே மனுஷனை நேசிக்கிறார் என்பதை தேவனின் பெரும்பாலான கிரியைகளிலிருந்து காணமுடிகிறது; தேவன் மீதான மனுஷனின் உண்மையான அன்பு மிகக் குறைவாக இருக்கிறது. நீ இவ்வளவு காலமாக தேவனை விசுவாசித்திருக்கிறாய், இன்று தேவன் நீ தப்பிப்பதற்கான எல்லா வழிகளையும் துண்டித்துவிட்டிருக்கிறார். யதார்த்தமாகச் சொல்வதானால், சரியான பாதையை தெரிந்துகொள்வதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை, இந்தச் சரியான பாதையானது கடுமையான நியாயத்தீர்ப்பு மற்றும் தேவனின் உயர்ந்த இரட்சிப்பால் உன்னை வழிநடத்திய பாதையாகும். கஷ்டத்தையும் புடமிடுதலையும் அனுபவித்த பின்னரே தேவன் அழகானவர் என்பது மனுஷனுக்குத் தெரிகிறது. இன்று வரை அனுபவித்த நிலையில், தேவனுடைய சௌந்தர்யத்தின் ஒரு பகுதியை மனுஷன் அறிந்திருக்கிறான் என்று கூறலாம், ஆனால் இது இன்னும் போதாது, ஏனென்றால் மனுஷன் மிகவும் குறைபாடுள்ளவனாக இருக்கிறான். தேவனின் அற்புதமான கிரியையை மனுஷன் அதிகம் அனுபவிக்க வேண்டும், மேலும் தேவன் ஏற்பாடு செய்த துன்பங்களின் புடமிடுதலையும் மனுஷன் அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் மனுஷனின் ஜீவித மனநிலை மாறும்.

முந்தைய: பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்

அடுத்த: தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக