அத்தியாயம் 71

நான் உங்கள் அனைவருக்கும் என்னைக் குறித்த எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருக்கிறேன், ஆனால் உங்களால் ஏன் என் வார்த்தைகளை உங்கள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் சிந்திக்க முடிவதில்லை? என் வார்த்தைகளை ஏன் குப்பை என்று எடுத்துக்கொள்கிறீர்கள்? நான் சொல்வது தவறா? எனது வார்த்தைகள் உங்கள் பெலவீனங்களைத் தாக்கியிருக்கின்றனவா? நீங்கள் தொடர்ந்து தாமதப்படுத்துகிறீர்கள் மற்றும் தயங்குகிறீர்கள். நீங்கள் ஏன் இப்படி செயல்படுகிறீர்கள்? நான் தெளிவாகப் பேசியிருக்கவில்லையா? என் வார்த்தைகள் கவனமாகச் சிந்திக்கப்பட வேண்டும், நீங்கள் அவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். உங்களில் யாராவது கீழ்ப்படிதல் மற்றும் அர்ப்பணிப்பு உள்ள பிள்ளைகளாக இருக்கிறீர்களா? என் வார்த்தைகள் வீணாகப் போய் விட்டனவா? அவற்றால் எந்தப் பயனும் இருந்ததில்லையா? உங்களில் எத்தனை பேர் எனது சித்தத்திற்கு இணங்கிச் செல்ல முடியும்? ஒரு கணம் கூட, உன்னிடம் பேசாமல் சென்றுவிட்டால், நீ நீர்த்துப்போய், கட்டுப்பாடற்றவனாக ஆகிவிடுவாய். எப்படிச் செயல்படுவது மற்றும் பேசுவது என்பதை நான் தெளிவாக கூறவில்லை என்றால், உள்ளத்தின் ஆழத்தில் உனக்கு எந்த யோசனையும் இருந்திருக்க முடியாது அல்லவா? நான் உனக்குச் சொல்கிறேன்! கீழ்ப்படியாதவனும், அடிபணியாதவனும், முட்டாள்தனமாக நம்புபவனுமே இழப்புகளைச் சந்திப்பவன் ஆவான்! நான் சொல்வதைக் கவனிக்காதவர்களும், விவரங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்களும் என்னுடைய நோக்கங்களைப் புரிந்து கொள்ள முடியாது, அவர்களால் எனக்கு ஊழியம் செய்யவும் முடியாது. இவர்களைப் போன்றவர்கள் என்னால் கையாளப்பட்டு என்னுடைய நியாயத்தீர்ப்பை சந்திப்பார்கள். விவரங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் அகந்தையானதும், அதே போல் வேண்டுமென்றே மூர்க்கமாக இருப்பதும் ஆகும்; எனவே நான் அத்தகையவர்களை வெறுக்கிறேன், அவர்களை எளிதில் விட்டுவிடமாட்டேன். நான் அவர்களுக்கு இரக்கம் காட்டமாட்டேன்; நான் அவர்களுக்கு என் மகத்துவத்தையும் நியாயத்தீர்ப்பையும் மட்டுமே காட்டுவேன். அப்படியானால், நீ இன்னும் என்னை ஏமாற்றத் துணிந்தால், பார்த்துக் கொள். மனுஷனுடைய உள்ளத்தின் ஆழத்தை ஆராய்ந்து அறியும் தேவனாக நான் இருக்கிறேன். இந்த விஷயம் அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும்; இல்லையெனில், அவர்கள் சாதாரணமான முறையில் தங்கள் கிரியையைச் செய்துவிட்டு, என்னுடன் அலட்சியமாக நடந்து கொள்ளுவார்கள். சிலர் அறியாமலேயே என்னால் தாக்கப்படுவதற்கு இதுவே காரணமாகும். நான் யாரையும் அநியாயமாக நடத்த மாட்டேன், நான் எந்தத் தவறும் செய்வதில்லை, என் செயல்கள் அனைத்தும் என் கரத்தின் புத்திசாலித்தனமான ஏற்பாடுகளால் செய்யப்படுகின்றன என்று சொல்லியிருக்கிறேன்.

என்னை உண்மையாக நேசிக்காத ஜனங்கள் அனைவரின் மீதும் எனது நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது. நான் யாரை ஏற்கனவே முன்குறித்துத் தெரிந்தெடுத்துள்ளேன், யார் புறம்பாக்கப்பட வேண்டும் என்பது துல்லியமாக இந்த நேரத்தில்தான் தெளிவாகிறது. இவை அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிப்படும், எதுவும் மறைந்திருக்காது. எல்லா மனுஷர்களும், நிகழ்வுகளும், விஷயங்களும் என் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக நிற்கின்றன மற்றும் வாழ்கின்றன, மேலும் என் வாயிலிருந்து உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளை உண்மையாக்குவதில் மும்முரமாக இருக்கின்றன. பிரபஞ்சமும் பூமியின் எல்லைகளும் என்னால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகின்றன. என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாத அல்லது என் செயல்களைச் செய்ய மறுக்கத் துணியும் எவரையும், அந்த நபரை பாதாளத்தில் மூழ்கடித்து, வாழ்வதைத் தடை செய்வதன் மூலம், நான் அடிக்க வேண்டும். எனது வார்த்தைகள் அனைத்தும் பொருத்தமானவையாகவும் சரியானவையாகவும், மேலும் முற்றிலும் களங்கமில்லாதவையாகவும் இருக்கின்றன. நீங்கள் பேசும் விதமானது என்னுடையதைப் போல இருக்க முடியுமா? நீ மிகவும் சலிப்படையச் செய்கிறவனாய் இருக்கிறாய்; நீ எதையும் புரிந்து கொள்வதில்லை, உனக்கு நீயே தெளிவாக விளக்கிக் கொள்வதில்லை—ஆனாலும், நீ சில விஷயங்களைப் பெற்றிருப்பதாகவும், கிட்டத்தட்ட அதைப் பெற்று விட்டதாகவும் இன்னும் நினைக்கிறாய். நான் உனக்குச் சொல்கிறேன்! சுய திருப்தி கொண்டவர்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் எனது தரத்தை அடைகிறார்கள். அவர்கள் என் சித்தத்திற்கு எந்த அக்கறையும் காட்டுவதில்லை, அவர்கள் என்னை ஏமாற்றி, என் நாமத்தை மிகக் கடுமையாக அவமதிக்கிறார்கள்! எவ்வளவு வெட்கக் கேடானது! நீ என்ன மாதிரியான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறாய் என்பதை நீயே பார்ப்பதில்லை. நீ எவ்வளவு முட்டாள்தனமானவனும் மற்றும் அறியாமையில் உள்ளவனுமாய் இருக்கிறாய்!

எனது வார்த்தைகள் தொடர்ந்து, எல்லா வகையிலும் விஷயங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. நீ இன்னும் அதைப் பெறவில்லையா? உனக்கு இன்னும் புரியவில்லையா? என்னை ஏமாற்றுவதே உன்னுடைய நோக்கமாக இருக்கிறதா? உற்சாகமடைந்து, உன் தைரியத்தைப் பறை சாற்று. என்னை நேசிக்கும் ஒரு தனி நபரை நான் கேவலமாக நடத்துவதில்லை. நான் மனுஷனுடைய இருதயத்தின் உள் ஆழங்களைப் பரிசோதிக்கிறேன், மேலும் அனைத்து ஜனங்களின் இருதயங்களிலும் இருக்கிற அனைத்தையும் நான் அறிகிறேன். இவை அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தப்படும், மேலும் அவைகள் அனைத்தும் என்னால் பரிசோதிக்கப்படும். என்னை உண்மையாக நேசிப்பவர்களில் ஒருவரையும் நான் ஒருபோதும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடமாட்டேன்; அவர்கள் அனைவரும் ஆசீர்வாதங்களைப் பெறுபவர்களாவர், மேலும் நான் ராஜாக்களாக இருக்கும்படி முன்குறித்த முதற்பேறான குமாரர்களின் கூட்டத்தினரும் ஆவர். என்னை உண்மையாக நேசிக்காதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் சொந்தத் தந்திரங்களுக்கு இலக்காகிறார்கள், மேலும் துரதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்; இதுவும் என்னால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கவலைப்படாதே; நான் அவற்றை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவேன். நான் இந்தக் கிரியையை முன்கூட்டியே ஆயத்தப்படுத்தியிருக்கிறேன், நான் ஏற்கனவே அதைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன் இவை அனைத்தும் ஒரு ஒழுங்கும் கிரமமுமான முறையில் செய்யப்பட்டிருக்கின்றன; அது ஒருபோதும் குழப்பமாக இல்லை. யாரைத் தெரிந்துகொள்வது, யாரை புறம்பாக்குவது என்பதை நான் ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன். ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் அனைவரும் உங்கள் பார்வைக்காக வெளிப்படுத்தப்படுவார்கள். இந்த நேரத்தில், என் கரம் என்ன செய்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். என்னுடைய நீதியும் மகத்துவமும் யாரிடமும் எந்தக் குற்றத்தையும் எதிர்ப்பையும் அனுமதிக்காது என்பதையும், யார் குற்றம் செய்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் எல்லா ஜனங்களும் காண்பார்கள்.

ஒவ்வொருவருடைய இருதயத்தின் ஆழத்தையும் தொடர்ந்து தேடுபவர் நானே. என்னை வெளியில் இருந்து மட்டும் பார்க்காதே. குருட்டுத்தனமான ஜனங்களே! நான் மிகத் தெளிவாகப் பேசியிருக்கிற வார்த்தைகளை நீங்கள் கேட்பதில்லை, மேலும் நீங்கள் பரிபூரணமான தேவனாகிய என்னை வெறுமனே நம்புவதில்லை—என்னை ஏமாற்றவோ அல்லது என்னிடமிருந்து எதையும் மறைக்கவோ துணிந்தவர்களை நான் நிச்சயமாக பொறுத்துக் கொள்ள மாட்டேன்.

என்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் நீ நினைவில் வைத்திருக்கிறாயா? “என்னைப் பார்ப்பது என்பது மறைந்திருக்கும் ஒவ்வொரு இரகசியத்தையும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பார்ப்பதற்கு சமமாகும்.” இந்த அறிக்கையை நீ கவனமாகச் சிந்தித்திருக்கிறாயா? நான் தேவனாக இருக்கிறேன், நீங்கள் பார்க்கும்படி எனது இரகசியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றைப் பார்த்திருக்கவில்லையா? நீங்கள் ஏன் எனக்குக் கவனம் செலுத்துவதில்லை? உன் மனதில் இருக்கும் தெளிவற்ற தேவனை நீ ஏன் ஆராதிக்கிறாய்? ஒன்றான மெய்த் தேவனாகிய என்னால் எப்படி தவறு செய்ய முடியும்? இதை உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளுங்கள்! அதில் உறுதியுள்ளவர்களாக இருங்கள்! என் ஒவ்வொரு சொல்லும் செயலும், என் ஒவ்வொரு செய்கையும், ஒவ்வொரு அசைவும், என் சிரிப்பு, என் புசித்தல், என் உடை உடுத்துதல், என்னுடைய அனைத்தும் தேவனாலேயே செய்யப்படுகின்றன. நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்: நான் வருவதற்கு முன்பே நீங்கள் தேவனைப் பார்த்திருக்க முடியுமா? இல்லையென்றால், நீங்கள் ஏன் எனக்கும் உங்கள் தேவனுக்கும் இடையே எப்போதும் மனதளவில் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்? இது முழுவதுமாக மனுஷீக சிந்தனைகளின் விளைவே ஆகும்! எனது செயல்களும் நடத்தைகளும் உனது கற்பனைகளுக்கு இணங்குவதில்லை, இல்லையா? எனது செயல்கள் மற்றும் நடத்தைகள் சரியானவையா இல்லையா என்று எந்த நபரும் கருத்து தெரிவிக்க நான் அனுமதிப்பதில்லை. நானே ஒன்றான மெய்த் தேவனாக இருக்கிறேன். இது மாற்ற முடியாத, மறுக்க முடியாத உண்மையாகும்! உன்னுடைய சொந்த தந்திரங்களுக்குப் பலியாக வேண்டாம். எனது வார்த்தைகள் இதை முற்றிலும் தெளிவுடன் சுட்டிக் காட்டியிருக்கின்றன. என்னில் ஒரு துளியளவுகூட மனிதத்தன்மை இல்லை; நான் முழுவதுமாக தேவனாகவே இருக்கிறேன், அவற்றில் ஒரு விஷயமும் மறைக்கப்படாமல் உங்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

முந்தைய: அத்தியாயம் 70

அடுத்த: அத்தியாயம் 72

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக