அத்தியாயம் 38

உன்னுடைய விசுவாசம் நல்லது அல்லது தூய்மையானது என்பதால் அல்ல, மாறாக, எனது கிரியை அதிசயமானது என்பதால்தான் ஆகும்! அனைத்தும் என் இரக்கத்தினாலேயே இருக்கின்றன! சுயநலம் அல்லது அகந்தை உள்ள சீர்கெட்ட மனநிலையை நீ சிறிதளவும் பெற்றிருக்கக் கூடாது, இல்லையெனில், நான் உன்னில் கிரியை செய்ய மாட்டேன். மனுஷர்கள் விழுந்துபோனாலும் அல்லது உறுதியாக நின்றாலும், அது அவர்களால் அல்ல; அது என்னால் தான் என்பதை நீ தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று, இந்தக் கட்டத்தை நீ தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், நீ நிச்சயமாகவே ராஜ்யத்தில் பிரவேசிக்கத் தவறிவிடுவாய்! இன்று செய்யப்படுவது தேவனுடைய அதிசயமான கிரியை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கும் மனுஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனுஷனின் செயல்கள் எதற்காகக் கணக்கிடப்படுகின்றன? அவர்கள் சுயநலம், அகந்தை மற்றும் பெருமையுடையவர்களாக இல்லாதபோது, அவர்கள் தேவனுடைய நிர்வாகத்தில் தலையிட்டு, அவருடைய திட்டங்களை அழிக்கிறார்கள். ஓ, சீர்கெட்டவர்களே! இன்று நீங்கள் என்னை நம்பி வர வேண்டும்; நீ வராவிட்டால், நீ ஒருபோதும் எதையும் சாதிக்க மாட்டாய் என்று இன்று நான் உனக்குச் சொல்லுவேன்! அனைத்தும் வீணாகிவிடும், மற்றும் உன்னுடைய முயற்சிகள் பயனற்றதாக இருக்கும்!

கலக்கமடையவோ தயக்கங்கொள்ளவோ வேண்டாம்; இன்று என்னை நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீது செய்யப்படுகிற எனது அதிசயமான கிரியைகளைப் பெற்றிருப்பார்கள். தங்களைத் தாழ்த்தாதவர்களால் எனக்கு எந்தப் பயனும் இல்லை, இன்று தங்களை முற்றிலுமாகத் தாழ்த்தியவர்களை மட்டுமே நான் பயன்படுத்துகிறேன். உங்களில் உண்மையான இருதயத்துடன் என்னை நேசிப்பவர்களுக்கு, பிறரால் அற்பமாகப் பார்க்கப்பட்டவர்களுக்கு, மற்றும் தங்களை முழுமையாக எனக்கு வெளிப்படுத்தக் கூடியவர்களுக்கு மட்டுமே நான் முற்றிலும் வெளிப்படையாக இருப்பேன். எனது நோக்கங்களைப் புரிந்து கொள்ள நான் உன்னை அனுமதிப்பேன், மேலும் நீ எல்லா நேரங்களிலும் என் ஆசீர்வாதங்களைப் பெற்று எனக்கு முன்பாக இருப்பாய். இன்று எனக்காகத் தங்களையே அர்ப்பணித்து, இன்று எனக்காகத் தங்களையே காணிக்கையாக்கி, இன்று எனக்காகப் பாரங்களை சுமப்பவர்களை நான் நிச்சயமாக துன்புறுத்தமாட்டேன்—இவ்வாறு என் நீதி வெளிப்படுத்தப்படுகிறது. என்னைப் பற்றி குறை கூறாதே; என் கிருபை உனக்குப் போதும். அதோடு கூட, நீ ஒப்பற்ற இனிமையை ருசிக்கும்படி, நீ வந்து அதை எடுத்துக் கொள்ளலாம். இது உனக்குள் என்மீதான அன்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், இது உன்னுடைய இந்த அன்பை அதிகரிக்கும்.

எனது கிரியையானது படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது, அது முற்றிலும் கவனக்குறைவாகவோ அல்லது குழப்பமுள்ளதாகவோ இருப்பதில்லை. என்னைப் பின்பற்றுவதற்கு, நீங்களும் இவ்வாறு விஷயங்களைச் செய்ய வேண்டும். என் நடத்தையைப் பார்த்து என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்; இவ்வாறு, நீங்கள் என் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால், நீங்கள் ராஜ்யத்தின் வெளிப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவீர்கள். ஏகமாய் ஆர்ப்பரியுங்கள்! என் குமாரர்களே! தேவனுடைய கிரியை உங்கள் மீது, இந்த ஜனக்கூட்டத்தின் மீது நிறைவேற்றப்படும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதை உணர்வதில்லையா?

உண்மையில் இது புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கிறது! என்னுடைய அதிசயமான கிரியையை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, இன்று நான் உங்களை இங்கு அழைத்து வந்திருக்கிறேன்!

முந்தைய: அத்தியாயம் 37

அடுத்த: அத்தியாயம் 39

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக