உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்

உங்களிடையே நான் செய்த கிரியையை நீங்கள் அனைவரும் உங்கள் கண்களால் பார்த்திருக்கிறீர்கள், நான் பேசிய வார்த்தைகளை நீங்களே கேட்டிருக்கிறீர்கள், உங்கள் மீதான எனது மனப்பான்மையை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீர்கள். எனவே, நான் உங்களில் இந்தக் கிரியையை ஏன் செய்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மிகவும் நேர்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கடைசிக் காலத்தில் ஜெயங்கொள்வதற்கான எனது கிரியையின் கருவிகளே தவிர வேறொன்றுமில்லை. அதாவது, நீங்களே புறஜாதி தேசங்களிடையே எனது கிரியையை விரிவுபடுத்துவதற்கான கருவிகளாக இருக்கிறீர்கள். எனது கிரியையை புறஜாதி தேசங்களிடையே சிறப்பாக விரிவுபடுத்துவதற்கும், எனது நாமத்தைப் புறஜாதியினரிடையே பரப்புவதற்கும், அதாவது இஸ்ரவேலுக்கு வெளியே உள்ள எந்த தேசங்களிடையேயும் அதைப் பரப்புவதற்கும் நான் உங்களது அநீதி, இழிநிலை, எதிர்ப்பு மற்றும் கலகம் ஆகியவற்றின் மூலமாகப் பேசுகிறேன். இதன் காரணமாகத்தான் எனது நாமம், எனது கிரியைகள் மற்றும் எனது சத்தம் ஆகியவை புறஜாதி தேசங்கள் முழுவதும் பரப்பப்பட்டு, இஸ்ரவேல் அல்லாத அந்தத் தேசங்கள் அனைத்தும் என்னால் ஜெயங்கொள்ளப்பட்டு என்னை வணங்கி, இஸ்ரவேல் மற்றும் எகிப்து தேசங்களுக்கு வெளியே இருக்கும் தேசங்கள் எனது பரிசுத்த தேசங்களாகின்றன. எனது கிரியையை விரிவுபடுத்துவது என்பது உண்மையில் எனது ஜெயங்கொள்ளுதல் கிரியையை விரிவுபடுத்துவதும், எனது புனித தேசத்தை விரிவுபடுத்துவதும் ஆகும்; இது பூமியின் மீது எனது காலடியின் விரிவாக்கம் ஆகும். நான் ஜெயங்கொள்ளும் புறஜாதி தேசங்களிடையே சிருஷ்டிக்கப்பட்டவர்கள்தான் நீங்கள் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். முதலில், பயன்படுத்தப்படுவதற்கு உங்களிடம் அந்தஸ்தோ, எந்தவொரு மதிப்போ இருக்கவில்லை, உங்களால் எந்தப் பயனும் இருக்கவில்லை. முழு தேசத்தையும் நான் ஜெயங்கொண்டதற்கான மாதிரிகளாக இருப்பதற்கு முழு தேசத்தையும் நான் ஜெயங்கொண்டதற்கான ஒரே “குறிப்புப் பொருட்கள்” ஆக இருப்பதற்கு, குப்பையில் புழுக்களாக இருந்த உங்களை நான் உயர்த்தியதால்தான், நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டு, இப்போது என்னுடன் ஒன்றுகூடி இருப்பதற்கு அதிர்ஷ்டசாலியாக இருக்கிறீர்கள். உங்களது குறைவான அந்தஸ்தின் காரணமாகவே, எனது ஜெயங்கொள்ளும் கிரியைக்கான மாதிரிகள் மற்றும் விளக்க மாதிரிகளாக இருக்க நான் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறேன். இந்தக் காரணத்தினால்தான் நான் உங்களிடையே கிரியை செய்து, பேசி, உங்களுடன் ஜீவிக்கிறேன், உங்களுடன் தங்கியிருக்கிறேன். இது எனது நிர்வாகத்தின் காரணமாகவும், குப்பையிலுள்ள புழுக்களை நான் கடுமையாக வெறுப்பதன் காரணமாகவுமே நான் உங்களிடையே பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்—இது நான் கோபம் கொண்டிருக்கும் நிலையை எட்டியிருக்கிறது. உங்களிடையே நான் கிரியை செய்வது யேகோவா இஸ்ரவேலில் கிரியை செய்ததைப் போன்றது அல்ல, குறிப்பாக, யூதேயாவில் இயேசு செய்த கிரியையைப் போன்றதும் அல்ல. நான் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் பேசுகிறேன் மற்றும் கிரியை செய்கிறேன், மேலும் கோபத்தோடும் நியாயத்தீர்ப்போடும்தான் சீர்கெட்டுப்போன இவர்களை நான் ஜெயங்கொள்கிறேன். இது இஸ்ரவேலில் யேகோவா தமது ஜனங்களை வழிநடத்துவதைப் போன்றது இல்லை. இஸ்ரவேலில் அவர் செய்த கிரியையானது, ஆகாரம் மற்றும் ஜீவத்தண்ணீரை வழங்குவதாகும், மேலும் அவர் தம் ஜனங்களுக்கு வழங்கும்போது மிகுந்த இரக்கமும் அன்பும் நிறைந்தவராக இருந்தார். இன்றைய கிரியையானது தெரிவு செய்யப்படாத ஒரு சபிக்கப்பட்ட தேசத்தினுடைய ஜனங்களின் மத்தியில் செய்யப்படுகிறது. அங்கு ஏராளமான ஆகாரமும் இல்லை, தாகத்தைத் தணிக்கும் ஊட்டமுள்ள ஜீவத்தண்ணீரும் இல்லை, மேலும் போதுமான அளவு பொருட்களும் வழங்கப்படுவதில்லை; அங்கு போதுமான அளவு நியாயத்தீர்ப்பு, சாபம் மற்றும் ஆக்கினைத்தீர்ப்பு ஆகியவை மட்டுமே வழங்கப்படுகின்றன. குப்பையில் வாழும் இந்தப் புழுக்கள், நான் இஸ்ரவேலுக்கு அளித்ததைப் போன்று, கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகள் நிறைந்த மலைகள், பெரும் செல்வம் மற்றும் எல்லா தேசங்களில் இருக்கும் குழந்தைகளைவிட மிக அழகான குழந்தைகளைப் பெறுவதற்கு முற்றிலும் தகுதியற்றவையாக இருக்கின்றன. சமகால இஸ்ரவேலானது, அதன் ஜனங்களுக்கு ஆகாரமளிப்பதற்கு நான் கொடுத்த கால்நடைகள், செம்மறி ஆடுகள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தனது பலிபீடத்தின் மீது காணிக்கையாக்குகிறது, இது நியாயப்பிரமாணத்தின்கீழ் யேகோவாவிற்குத் தேவைப்படுவதில் பத்தில் ஒரு பங்கைவிட அதிகமாக இருக்கிறது. ஆகவே, நான் அவர்களுக்கு இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்கிறேன்—நியாயப்பிரமாணத்தின்கீழ் இஸ்ரவேல் ஆதாயம் செய்ய வேண்டியதைவிட நூறு மடங்கிற்கும் மேலாக கொடுத்திருக்கிறேன். இஸ்ரவேலுக்கு நான் ஆகாரமளிப்பது ஆபிரகாம் பெற்றுக்கொண்ட அனைத்தையும், ஈசாக்கு பெற்றுக்கொண்ட அனைத்தையும்விட அதிகமானதாக இருக்கிறது. நான் இஸ்ரவேல் குடும்பத்திற்குப் பலனளிப்பேன், அவர்களைப் பெருகப் பண்ணுவேன், மேலும், என் இஸ்ரவேல் ஜனங்களை நான் பூமியெங்கும் பரவ வைப்பேன். நான் ஆசீர்வதித்து கவனித்துக்கொள்பவர்கள் இன்னும் இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாகவே இருக்கிறார்கள்—அதாவது, இவர்கள் எல்லாவற்றையும் என்னிடம் அர்ப்பணிக்கும், என்னிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளும் ஜனங்களாக இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் எனது பலிபீடத்தின் மீது தங்களது புதிதாகப் பிறந்த கன்றுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் பலியிட்டு, எனக்கு முன்பாக அவர்கள் வைத்திருக்கும் அனைத்தையும் எனக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள், எனது வருகையை எதிர்பார்த்துத் தங்களுக்குப் பிறந்த முதற்பேறான குமாரன்களை பலி கொடுக்கும் அளவிற்குகூட அவர்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள். சரி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எனது கோபத்தைத் தூண்டுகிறீர்கள், என்னிடம் கோரிக்கை வைக்கிறீர்கள், பிறர் எனக்காகப் பலிகொடுப்பனவற்றை நீங்கள் திருடுகிறீர்கள், மேலும் நீங்கள் என்னைப் புண்படுத்துகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால், நீங்கள் அந்தகாரத்தில் அழுகையையும் தண்டனையையும்தான் பெறுகிறீர்கள். நீங்கள் எனது கோபத்தைப் பல முறை தூண்டிவிட்டிருக்கிறீர்கள், சிலர் துயரம் நிறைந்த முடிவை சந்தித்திருக்கும் அளவிற்கும், மகிழ்ச்சியான வீடுகளும் பாழடைந்த கல்லறைகளாக மாறியிருக்கும் அளவிற்கும் காரணமான எனது எரியும் அக்கினியை நான் மழைபோல் பொழிந்திருக்கிறேன். இந்தப் புழுக்களுக்கு என்னிடம் இருப்பதெல்லாம் எல்லையற்ற கோபம் மட்டுமே, அவற்றை ஆசீர்வதிக்கும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. எனது கிரியையின் பொருட்டு மட்டுமே நான் ஒரு விதிவிலக்காக உங்களை உயர்த்தியிருக்கிறேன், மிகுந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு உங்களிடையே கிரியை செய்திருக்கிறேன். எனது பிதாவின் சித்தத்திற்காக இல்லாவிட்டால், குப்பையில் உருளும் புழுக்களுடன் நான் ஒரே வீட்டில் எவ்வாறு ஜீவிக்க முடியும்? உங்களது செயல்கள் மற்றும் வார்த்தைகள் அனைத்திற்கும் நான் மிகுந்த வெறுப்பை உணர்கிறேன். எப்படியிருந்தாலும், உங்களது இழிநிலை மற்றும் கலகத்தன்மை ஆகியவற்றில் எனக்குச் சற்று “ஆர்வம்” இருப்பதால், இது எனது வார்த்தைகளின் சிறந்த தொகுப்பாகிவிட்டது. இல்லையெனில், நான் உங்களிடையே இங்கு இவ்வளவு காலம் இருந்திருக்க மாட்டேன். ஆகையால், உங்களுக்கான எனது அணுகுமுறையானது வெறும் அனுதாபத்தினாலும் பரிதாபத்தினாலும் இருக்கின்ற ஒன்றுதான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்; உங்களுக்கான ஒரு துளி அன்பு கூட என்னிடம் இல்லை. நான் உங்களிடம் கொண்டிருப்பது வெறும் சகிப்புத்தன்மைதான், ஏனென்றால் நான் இதை எனது கிரியையின் பொருட்டு மட்டுமே செய்கிறேன். நீங்கள் எனது கிரியைகளைப் பார்த்திருக்கிறீர்கள், ஏனென்றால், நான் அசுத்தத்தன்மையையும் கலகத்தன்மையையும் “மூலப்பொருட்களாக” தெரிந்தெடுத்திருக்கிறேன்; இல்லையெனில், நான் இந்தப் புழுக்களுக்கு எனது கிரியைகளை வெளிப்படுத்தியிருக்க மாட்டேன். நான் விருப்பமில்லாமல் மட்டுமே உங்களில் கிரியை செய்கிறேன், இஸ்ரவேலில் நான் எனது தயார்நிலை விருப்பத்தோடு கொண்டு கிரியை செய்தது போல் உங்களுக்குச் செய்யவில்லை. உங்களிடையே பேசும்படி என்னை நானே கட்டாயப்படுத்தும் போது நான் எனது கோபத்தைத் தாங்கிக்கொள்கிறேன். எனது பெரிய கிரியைக்காக இல்லாவிட்டால், இதுபோன்ற புழுக்களின் தொடர்ச்சியான பார்வையை நான் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்? எனது நாமத்துக்காக இல்லாவிட்டால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே மிக உயரமான இடங்களுக்கு ஏறி, இந்தப் புழுக்களை அவற்றின் குப்பையோடு சேர்த்து முழுமையாக எரித்திருப்பேன்! எனது மகிமைக்காக இல்லாவிட்டால், இந்தப் பொல்லாத பிசாசுகள் எனது கண்களுக்கு முன்பாகத் தங்களது தலையை அசைத்து என்னை வெளிப்படையாக எதிர்க்க என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? சிறிதளவு தடங்கலும் இன்றி எனது கிரியை சுமூகமாக செய்யப்படாவிட்டால், இந்தப் புழுக்களைப் போன்ற ஜனங்கள் என்னை வேண்டுமென்றே துஷ்பிரயோகம் செய்ய என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? இஸ்ரவேலில் ஒரு கிராமத்தில் நூறு பேர் என்னை இப்படி எதிர்க்க முன்வந்தால், அவர்கள் எனக்குப் பலிகளைக் கொடுத்திருந்தாலும், மற்ற நகரங்களில் உள்ள ஜனங்கள் மீண்டும் கலகம் செய்வதைத் தடுப்பதற்காக நான் இவர்களை அழித்து நிலத்தில் இருக்கும் விரிசல்களுக்குள் தள்ளுவேன். நான் எல்லாவற்றையும் விழுங்கும் நெருப்பு, இடறலை நான் பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். மனுஷர் அனைவரும் எம்மால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதால், நான் என்ன சொன்னாலும் செய்தாலும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும், அவர்கள் கலகம் செய்யக்கூடாது. எனது கிரியையில் தலையிட ஜனங்களுக்கு உரிமை இல்லை, எனது கிரியையிலும் எனது வார்த்தைகளிலும் எது சரி எது தவறு என்பதை ஆராய அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். நான்தான் சிருஷ்டிப்பின் கர்த்தர், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் எனக்குத் தேவையான அனைத்தையும் பயபக்தியுடனான இருதயத்துடன் அடைய வேண்டும்; அவர்கள் என்னுடன் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடாது, குறிப்பாக, அவர்கள் எதிர்க்கக்கூடாது. எனது அதிகாரத்தினால் நான் எனது ஜனங்களை ஆளுகிறேன், எனது சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அனைவரும் எனது அதிகாரத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். இன்று நீங்கள் எனக்கு முன்பாக தைரியமாகவும், அகந்தையோடும் இருந்தாலும், நான் உங்களுக்குப் போதிக்கும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவில்லை என்றாலும், உங்களிடம் எந்த பயமும் இல்லை என்றாலும், நான் உங்களது கலகத்தன்மையை சகிப்புத்தன்மையுடன் மட்டுமே எதிர்கொள்கிறேன்; சிறிய, அற்பமான புழுக்கள் குப்பையில் உள்ள அசுத்தத்தைக் கிளறிவிட்டிருந்தாலும், நான் கோபப்பட்டு எனது கிரியையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டேன். நான் வெறுக்கிற எல்லாவற்றின் இருப்பையும் நான் தாங்கிக்கொள்கிறேன், எனது பிதாவின் சித்தத்திற்காக நான் வெறுக்கிற எல்லாவற்றையும் நான் பொறுத்துக்கொள்கிறேன், எனது வெளிப்பாடுகள் நிறைவடையும் வரை, எனது கடைசி தருணம் வரை நான் இதைச் செய்வேன். கவலைப்படாதே! நாமமிடப்படாத புழுக்கள் இருக்கும் அதே மட்டத்திற்கு என்னால் மூழ்க முடியாது, மேலும் எனது திறமையின் அளவை உன்னுடன் ஒப்பிடவும் மாட்டேன். நான் உன்னை வெறுக்கிறேன், ஆனாலும் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது. நீ எனக்குக் கீழ்ப்படிவதில்லை, ஆனால் உன்னை நான் தண்டிக்கும் நாளில் உன்னால் தப்பித்துக்கொள்ள முடியாது, இது எனது பிதாவினால் எனக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டது. சிருஷ்டிக்கும் கர்த்தருடன் சிருஷ்டிக்கப்பட்ட புழுவை ஒப்பிட முடியுமா? இலையுதிர்காலத்தில், உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்புகின்றன; நீ உனது “பிதாவின்” வீட்டிற்குத் திரும்பிச் செல்வாய், நான் எனது பிதாவின் பக்கமாகத் திரும்பிச் செல்வேன். நான் அவருடைய கனிவான பாசத்துடன் இருப்பேன், நீ உனது தகப்பனின் நடையை பின்பற்றுவாய். எனது பிதாவின் மகிமை எனக்கு இருக்கும், நீ உன்னுடைய தகப்பனின் அவமானத்தைப் பெறுவாய். நான் நீண்ட காலமாக என்னிடம் வைத்திருந்த உனக்குக் கொடுக்க வேண்டிய சிட்சையைப் பயன்படுத்துவேன், மேலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீர்கெட்டுப் போயிருக்கும் உன்னுடைய கெட்டுப்போன மாம்சத்துடன் நீ எனது சிட்சிப்பை எதிர்கொள்வாய். சகிப்புத்தன்மையுடன் உனக்குள் எனது வார்த்தைகளின் கிரியையை நான் முடித்திருப்பேன், எனது வார்த்தைகளிலிருந்து பேரழிவை அனுபவிக்கும் பங்கினை நீ நிறைவேற்றத் தொடங்குவாய். நான் இஸ்ரவேலில் மிகுந்த சந்தோஷத்துடன் கிரியை செய்வேன்; நீ அழுது பற்களை நறநறவென கடித்து, ஜீவித்து அப்படியே சேற்றில் விழுந்து இறந்துபோவாய். நான் எனது சுயமான வடிவத்தை மீண்டும் பெறுவேன், இனியும் உன்னுடன் அசுத்தத்தில் இருக்க மாட்டேன், அதே நேரத்தில் நீ உனது சுயமான அருவருப்பான தோற்றத்தை மீண்டும் பெற்று குப்பைக்குள் தொடர்ந்து புதையுண்டு போவாய். எனது கிரியையும் வார்த்தைகளும் நிறைவடைந்தவுடன், அது எனக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உனது எதிர்ப்பும் கலகமும் முடிவிற்கு வரும்போது, அது நீ அழுகிற நாளாக இருக்கும். நான் உன்னிடம் அனுதாபப்பட மாட்டேன், நீ என்னை மீண்டும் ஒருபோதும் பார்க்கவும் மாட்டாய். நான் இனி உன்னுடன் உரையாடலிலும் ஈடுபட மாட்டேன், நீ என்னை மீண்டும் ஒருபோதும் சந்திக்கவும் மாட்டாய். உனது கலகத்தனத்தை நான் வெறுப்பேன், மேலும் நீ எனது சௌந்தரியத்தை இழப்பாய். நான் உன்னை அடிப்பேன், நீ எனக்காக வருந்துவாய். நான் உன்னிடமிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் செல்வேன், எனக்கான உன்னுடைய கடனை நீ அறிந்து கொள்வாய். நான் உன்னை மீண்டும் பார்க்க மாட்டேன், ஆனால் நீ எப்போதும் எனக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பாய். நான் உன்னை வெறுப்பேன், ஏனென்றால் நீ தற்போது என்னை எதிர்க்கிறாய், நீ என்னை இழக்க நேரிடும், ஏனெனில் நான் தற்போது உன்னை சிட்சிக்கிறேன். நான் உன்னுடன் ஜீவிக்க விரும்பவில்லை, ஆனால் நீ அதற்காகக் கடுமையாக ஏங்கி நித்தியமாக அழுவாய், ஏனென்றால் நீ என்னிடம் செய்த எல்லாவற்றிற்கும் நீ வருந்துவாய். உனது கலகத்தன்மை மற்றும் எதிர்ப்பிற்காக நீ வருந்துவாய், நீ வருத்தத்துடன் தரையில் முகங்குப்புற எனது முன் விழுந்து, மீண்டும் ஒருபோதும் எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வாய். இருப்பினும், உனது இருதயத்தில், நீ என்னை நேசிக்க மட்டுமே செய்வாய், ஆனாலும் உன்னால் ஒருபோதும் எனது சத்தத்தைக் கேட்க முடியாது. உன்னை எண்ணி நீயே வெட்கங்கொள்ளச் செய்வேன்.

இப்போது என்னை நயங்காட்டி ஏமாற்றும் உனது மென்மையான மாம்சத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், மேலும் உனக்கு ஒரு சிறிய எச்சரிக்கையை மட்டுமே விடுக்கிறேன், இருப்பினும் நான் உனக்கு சிட்சையைக் கொண்டு “சேவையை” செய்ய மாட்டேன். எனது கிரியையில் நீ என்ன பங்கு வகிக்கிறாய் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும், அதன் பின்னரே நான் திருப்தி அடைவேன். இதற்கு அப்பாற்பட்ட விஷயங்களில், நீ என்னை எதிர்த்தால் அல்லது எனது பணத்தைச் செலவிட்டால், அல்லது யேகோவாவாகிய எனக்கான பலிகளைப் புசித்தால், அல்லது புழுக்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் கடித்துக்கொண்டால், அல்லது நாய் போன்ற ஜீவன்களான உங்களுக்குள் மோதல்கள் இருந்தால் அல்லது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டால்—இப்படி எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் நான் கவலைகொள்வதில்லை. நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருக்க வேண்டும், அதன்மூலம் நான் திருப்தி அடைவேன். இவை அனைத்தையும் தவிர, நீங்கள் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அல்லது ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் சண்டையிட விரும்பினால், அது ஒன்றும் பெரிய விஷயமல்ல; இதுபோன்ற விஷயங்களில் தலையிட எனக்கு விருப்பமில்லை, மேலும் மனுஷ விஷயங்களில் சிறிதளவிலும் நான் ஈடுபடுவதும் இல்லை. நான் இப்படி இருப்பதற்கு உங்களுக்கிடையேயான மோதல்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று அர்த்தமில்லை; நான் உங்களில் ஒருவன் இல்லை என்பதால் உங்களிடையே நடக்கும் விஷயங்களில் பங்கேற்பதில்லை என்று அர்த்தமாகும். நான் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் இல்லை, நான் உலகத்தைச் சேர்ந்தவனில்லை, எனவே ஜனங்களின் பரபரப்பான வாழ்க்கையையும் அவர்களுக்கு இடையேயான குழப்பமான, முறையற்ற உறவுகளையும் நான் வெறுக்கிறேன். நான் குறிப்பாகக் கூச்சலிடும் கூட்டங்களை வெறுக்கிறேன். இருப்பினும், ஒவ்வொரு ஜீவனின் இருதயங்களிலும் இருக்கும் அசுத்தங்களைப் பற்றி எனக்கு ஆழமான அறிவு உள்ளது, நான் உங்களை சிருஷ்டிப்பதற்கு முன்பு, மனுஷ இருதயத்தில் ஆழமாக இருந்த அநீதியை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன், மேலும் மனுஷ இருதயத்தில் இருக்கும் எல்லா ஏமாற்றுத்தனங்களையும் வஞ்சகத்தையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால், ஜனங்கள் அநீதியான காரியங்களைச் செய்யும்போது எந்தத் தடயங்களும் காணப்படுவதில்லை என்றாலும், உங்கள் இருதயங்களுக்குள் அடங்கியுள்ள அநீதியானது நான் உருவாக்கிய எல்லாவற்றின் செழுமையையும் மிஞ்சும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் பெருந்திரளான ஜனங்கள் என்னும் உச்சத்திற்கு உயர்ந்திருக்கிறீர்கள்; நீங்கள் வெகுஜனங்களின் மூதாதையர்களாக இருக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் தன்னிச்சையானவர்கள், மேலும் நீங்கள் எல்லாப் புழுக்களிடையேயும் வெறிகொண்டு ஓடுகிறீர்கள், எளிதான இடத்தைத் தேடுகிறீர்கள், உங்களை விட சிறியதாக இருக்கும் புழுக்களை விழுங்க முயற்சிக்கிறீர்கள். உங்கள் இருதயங்களில் நீங்கள் தீங்கிழைப்பவராகவும் மற்றும் கெட்டவராகவும் இருக்கிறீர்கள், சமுத்திரத்தின் அடிப்பகுதியில் மூழ்கியிருக்கும் பிசாசுகளைக் கூட மிஞ்சிவிடுகிறீர்கள். நீங்கள் குப்பையின் அடிப்பகுதியில் வசிக்கிறீர்கள், புழுக்களுக்கு அமைதி இல்லாமல் போகும்வரை உச்சி முதல் அடி வரை தொந்தரவு செய்கிறீர்கள், ஒருவருக்கொருவர் சிறிது நேரம் சண்டையிட்டுவிட்டுப் பின்னர் அமைதியடைகிறீர்கள். உங்களுக்கு உங்கள் இடம் எதுவென்று தெரிவதில்லை, ஆனாலும் நீங்கள் குப்பையில் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறீர்கள். அத்தகைய போராட்டத்திலிருந்து உங்களால் எதை ஆதாயமாகப் பெற முடியும்? உங்கள் இருதயங்களில் நீங்கள் உண்மையிலேயே என்னிடம் பயபக்தியுடன் இருந்தால், என் முதுகிற்குப் பின்னால் நீங்கள் எப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட முடியும்? உங்கள் அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் இன்னும் குப்பையில் துர்நாற்றம் வீசும் சிறிய புழு தான், இல்லையா? உங்களால் இறக்கைகள் முளைத்து வானத்தில் புறாவாகப் பறக்க முடியுமா? துர்நாற்றம் வீசும் சிறிய புழுக்களான நீங்கள், யேகோவாவாகிய எனது பலிபீடத்திலிருந்து காணிக்கைகளைத் திருடுகிறீர்கள்; அவ்வாறு செய்யும்போது, உனது கெட்டுப்போன, தோல்வியுற்ற நற்பெயரை மீட்டு இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாக மாற முடியுமா? நீங்கள் வெட்கமே இல்லாத மோசமானவர்கள்! பலிபீடத்தின் மீது இருக்கும் அந்தக் காணிக்கைகள் என்னை வணங்குபவர்களின் தர்ம சிந்தனைகளின் வெளிப்பாடாக எனக்கு செலுத்தப்பட்டவை. அவை எனது கட்டுப்பாட்டிற்காகவும் எனது பயன்பாட்டிற்காகவும் உள்ளன, எனவே ஜனங்கள் எனக்குக் கொடுத்த சிறிய காட்டுப்புறாக்களை உன்னால் எப்படிக் கொள்ளையடிக்க முடியும்? யூதாஸாக மாறுவதற்கு நீ பயப்படவில்லையா? உனது தேசம் இரத்தக் களமாக மாறக்கூடும் என்று நீ பயப்படவில்லையா? வெட்கமில்லாத அற்பனே! ஜனங்கள் வழங்கும் காட்டுப்புறாக்களானது புழுவான உனது வயிற்றை வளர்ப்பதற்குத்தான் என்று நீ நினைக்கிறாயா? நான் உனக்குக் கொடுத்தது நான் மனநிறைவுடனும் விருப்பத்துடனும் உனக்கு கொடுத்ததாகும்; நான் உனக்குக் கொடுக்காதது எனது வசம் உள்ளது. நீ எனது காணிக்கைகளைத் திருடக்கூடாது. யேகோவாவும், சிருஷ்டிப்பின் கர்த்தருமான நானே கிரியை செய்பவர், ஜனங்கள் எனக்காகப் பலிகளைக் கொடுக்கிறார்கள். நீ செய்யும் எல்லாவற்றுக்கும் இது பிரதியுபகாரம் என்று நீ நினைக்கிறாயா? நீ உண்மையில் வெட்கமில்லாதவன்! நீ யாருக்காக ஓடுகிறாய்? அது உனக்காக அல்லவா? நீ எதற்காக எனது பலிகளைத் திருடுகிறாய்? எனது பணப்பையில் இருந்து பணத்தை ஏன் திருடுகிறாய்? நீ யூதாஸ்காரியோத்தின் குமாரன் இல்லையா? யேகோவாவாகிய எனக்குச் செய்யப்பட்ட பலிகளானது ஆசாரியர்கள் அனுபவிக்க வேண்டியவை. நீ ஓர் ஆசாரியனா? எனக்கான பலிகளை நீ மனநிறைவுடன் புசிக்கத் துணிகிறாய், மேலும் அவற்றை மேசைமீதும் வைக்கிறாய்; நீ எந்த மதிப்பும் இல்லாதவன்! நீ எதற்கும் பயனற்ற மோசமான ஒருவன்! எனது அக்கினி, அதாவது யேகோவாவின் அக்கினி, உன்னை எரித்துப்போடும்!

முந்தைய: விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?

அடுத்த: கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக