அத்தியாயம் 21

தேவனுடைய பார்வையில், ஜனங்கள் விலங்கு உலகில் உள்ள விலங்குகளைப் போன்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள், ஒருவரையொருவர் படுகொலை செய்கிறார்கள், ஒருவருக்கொருவர் வழக்கத்துக்கு மாறான தொடர்புகளைக் கொண்டுள்ளனர். தேவனுடைய பார்வையில், அவர்கள் வயது அல்லது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் சதி செய்யும் குரங்குகளைப் போன்றவர்களாய் இருக்கிறார்கள். அதுபோல, முழு மனிதகுலமும் செய்யும் மற்றும் வெளிப்படுத்தும் அனைத்தும் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதாக ஒருபோதும் இருந்ததில்லை. தேவன் தம் முகத்தை மறைக்கும் நேரமே, துல்லியமாக உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் சோதிக்கப்படும் நேரமாகும். எல்லா ஜனங்களும் வேதனையில் முணுமுணுக்கிறார்கள், அவர்கள் அனைவரும் பேரழிவின் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கிறார்கள், அவர்களில் ஒருவர் கூட தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பவில்லை. உண்மையில், மாம்சமாவதில் தேவனுடைய பிரதான நோக்கம் மனுஷனை நியாயந்தீர்ப்பதும், அவனது மாம்சத்தில் அவனைக் கண்டனம் செய்வதும் ஆகும். தேவனுடைய மனதில், அவர்களின் சாராம்சத்திற்கு ஏற்ப, யார் இரட்சிக்கப்படுவார்கள் அல்லது அழிக்கப்படுவார்கள் என்பது நீண்ட காலத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது, மேலும், இது இறுதி கட்டத்தின்போது படிப்படியாக தெளிவாக்கப்படும். நாட்கள் மற்றும் மாதங்கள் செல்லச் செல்ல, ஜனங்கள் மாறுகிறார்கள் மற்றும் அவர்களின் உண்மையான தன்மை வெளிப்படுகிறது. முட்டையை உடைக்கும் போது அதில் கோழி இருக்கிறதா அல்லது வாத்து இருக்கிறதா என்பது தெளிவாகிறது. முட்டை உடையும் நேரமே பூமியில் ஏற்படும் பேரழிவுகள் முடிவுக்கு வரும் நேரமாகும். இதிலிருந்து, உள்ளே “கோழி” இருக்கிறதா அல்லது “வாத்து” இருக்கிறதா என்பதை அறிய, “முட்டை” உடைக்கப்பட வேண்டும் என்பதைப் பார்க்கலாம். இது தேவனுடைய இருதயத்தில் உள்ள திட்டம், மேலும், அது நிறைவேற்றப்பட வேண்டும்.

“ஏழ்மையான, பரிதாபகரமான மனுஷர்களே! என் ஆவியின் நோக்கங்களைப் பின்பற்ற முடிவதில்லை, ஆனாலும் எதற்காக மனுஷன் என்னை நேசிக்கிறான்?” மனுஷனின் இந்த நிலையின் காரணமாக, தேவனுடைய சித்தத்தைத் நிறைவேற்ற அவன் தேவனால் நடத்தப்படுவதற்கு உட்பட வேண்டும். மேலும் மனிதகுலத்தின் மீது தேவன் வெறுப்படைந்ததன் காரணமாக, அவர் பலமுறை இவ்வாறு அறிவித்தார்: “ஓ சகல மனுஷரின் கலகக்காரரே! அவர்கள் என் பாதங்களுக்கு அடியில் நசுக்கப்பட வேண்டும்; என் தண்டனையின் மத்தியில் அவர்கள் மறைந்து போக வேண்டும், என் பெரிய கிரியை முடியும் நாளில், அவர்கள் மனுஷர்களிடத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும், இதனால் எல்லா மனுஷரும் அவர்களின் அசிங்கமான முகத்தை அறிந்து கொள்வர்.” தேவன் மாம்சத்தில் உள்ள முழு மனிதகுலத்துடனும் பேசுகிறார், மேலும் அவர் முழு பிரபஞ்சத்திற்கும் மேல் காணப்படுகிற ஆவிக்குரிய உலகத்தில் சாத்தானிடமும் பேசுகிறார். இது தேவனுடைய சித்தமாகும், இதுவே தேவனுடைய 6,000 ஆண்டுகாலத் திட்டத்தால் அடையப்பட வேண்டும்.

உண்மையில், தேவன் குறிப்பாகச் சாதாரணமானவர், மேலும், அவர் நேரடியாகச் செயல்படுத்தி, அவைகளைத் தமது சொந்தக் கண்களால் பார்த்தால் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும் என்பது போன்ற சில விஷயங்கள் உள்ளன. இது ஜனங்கள் நினைப்பது போல் இல்லை, தேவன் பொய் சொல்லமாட்டார், அதேசமயத்தில், அவர் விரும்பியபடி எல்லாம் நடக்கிறது; இதுவே ஜனங்களிடத்தில் காணப்படுகிற சாத்தானுடைய இடையூறுகளின் விளைவாகும், இது தேவனுடைய உண்மையான முகம் பற்றி ஜனங்களைத் தெளிவற்றவர்களாய் மாற்றிவிடுகிறது. அதுபோல, இறுதி காலத்தின்போது, எதையும் மறைக்காமல், மனுஷனுக்கு வெளிப்படையாகத் தம்முடைய யதார்த்தத்தை வெளிப்படுத்த தேவன் மாம்சமாகியிருக்கிறார். தேவனுடைய மனநிலையின் சில விளக்கங்களானது, அதாவது தேவன் ஒரு வார்த்தை அல்லது சிறிய சிந்தனையால் உலகை அழிக்க முடியும் என்று கூறப்படுவது போன்றவை முற்றிலும் மிகைப்படுத்தப்பட்டவையாகும். இதன் விளைவாகப் பெரும்பாலான ஜனங்கள் இதைப் போன்ற காரியங்களைக் கூறுகின்றனர், தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இருக்கிறார், ஆனால் சாத்தானை ஒரேடியாக அழிக்க முடியாதது ஏன்? இந்த வார்த்தைகள் முட்டாள்தனமானது, மேலும் ஜனங்கள் இன்னும் தேவனை அறியவில்லை என்பதைக் காட்டுகின்றன. தேவன் தமது சத்துருக்களை அழித்தொழிக்க ஒரு செயல்முறை தேவைப்படுகிறது, ஆனாலும் தேவன் எல்லாவற்றிலும் ஜெயங்கொண்டவர் என்று சொல்வதே உண்மை: தேவன் தமது எதிரிகளை இறுதியில் தோற்கடிப்பார். ஒரு வலிமையான நாடு பலவீனமான ஒன்றைத் தோற்கடிப்பது போல், அது படிப்படியாக, சில சமயங்களில் பலத்தைப் பயன்படுத்தியும், சில சமயங்களில் யுக்தியைப் பயன்படுத்தியும் ஜெயம் பெற வேண்டும். ஒரு செயல்படுத்தும் முறை உள்ளது, ஆனால் வலிமையான நாடு புதிய தலைமுறை அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாலும், பலவீனமான நாடு மிகவும் கீழ்ப்பட்ட நாடு என்பதாலும், பலவீனமான நாடு சண்டையின்றி கைவிட்டுவிடும் என்று கூற முடியாது. அது ஒரு முட்டாள்தனமான வாதமாகும். வலிமையான நாடு வெற்றி பெறுவது உறுதி, பலவீனமான நாடு தோற்றுப் போவது உறுதி என்று கூறுவது நியாயம்தான், ஆனால் வலிமையான நாடு பலவீனமான நாட்டைத் தனிப்பட்ட முறையில் படையெடுக்கும் போதுதான் அதை வலிமை மிகுந்த நாடு என்று சொல்ல முடியும். எனவேதான், தேவன் மனுஷன் தம்மை அறிவதில்லை என்பதாக எப்போதும் கூறியிருக்கிறார். அப்படியானால், மேலே உள்ள வார்த்தைகள் மனுஷனுக்கு ஏன் தேவனைத் தெரியாது என்பதன் ஒரு பக்கத்தைக் குறிக்கின்றனவா? இவையெல்லாம் மனுஷனின் கருத்தாக இருக்கிறதா? இவ்வாறு ஆள்தத்துவத்தில் மாம்சமாக மாறிய, தமது யதார்த்தத்தை அறிய வேண்டும் என்று தேவன் மனுஷனிடம் மட்டுமே ஏன் கேட்கிறார்? இவ்வாறு, பெரும்பாலான ஜனங்கள் பரலோகத்தைப் பக்தியுடன் வணங்கினர், ஆனாலும் “மனுஷனின் செயல்களால் பரலோகம் ஒருபோதும் சிறிதளவுகூட பாதிக்கப்படவில்லை, மேலும் மனுஷன் மீதான எனது கிரியைகள் அவனின் ஒவ்வொரு செயலையும் அடிப்படையாகக் கொண்டிருந்தால், என் தண்டனையின் மத்தியில்தான் அனைத்து மனுஷரும் வாழ்வார்கள்.”

தேவன் மனுஷனின் சாராம்சத்தின் வழியாகப் பார்க்கிறார். தேவனுடைய வார்த்தைகளில், தேவன் மனுஷனிடம் இனி கவனம் செலுத்துவதில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லாத அளவிற்கும், அவன் மீது சிறிதளவு நம்பிக்கையும் இல்லாத அளவிற்கும், மனுஷனால் மிகவும் “துன்பப்படுத்தப்படுகிறார்” என்பதாய்த் தோன்றுகிறது; மனுஷன், இரட்சிப்புக்கு அப்பாற்பட்டவன் என்று தோன்றுகிறது. “கன்னங்களில் கண்ணீர் வழிய நிற்கும் அநேக ஜனங்களை நான் கண்டிருக்கிறேன், மேலும் அநேகர் எனது செல்வங்களுக்கு ஈடாக தங்கள் இருதயங்களை ஒப்புக்கொடுப்பதை நான் கண்டிருக்கிறேன். இத்தகையப் ‘பக்தி’ இருந்தபோதிலும், மனுஷனுக்கு இதெல்லாம் திடீரென தூண்டப்பட்டதன் விளைவாக நான் ஒருபோதும் அவனுக்கு அனைத்தையும் வெறுமனே கொடுக்கவில்லை, ஏனென்றால் மனுஷன் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் எனக்கு முன்பாகத் தன்னை நேர்ந்துகொள்ளத் தயாராக இல்லை.” தேவன் மனுஷனின் சுபாவத்தை வெளிப்படுத்தும் போது, மனுஷன் தன்னைப் பற்றி வெட்கப்படுகிறான், ஆனால் இது மேலோட்டமான அறிவு மட்டுமேயாகும், மேலும் தேவனுடைய வார்த்தைகளில் அவனது சுபாவத்தை உண்மையாக அறிய இயலாதவனாய் இருக்கிறான்; எனவே, பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்வதில்லை, தேவனுடைய வார்த்தைகளில் தங்கள் வாழ்க்கைக்கான பாதையை அவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை, எனவே அவர்கள் எவ்வளவு மந்தப் புத்தியுள்ளவர்களாக இருக்கிறார்களோ, அவ்வளவு கடுமையாக தேவன் அவர்களைப் பரியாசம் பண்ணுகிறார். இவ்வாறு, தங்களை அறியாமலேயே அருவருப்பான பங்கை ஆற்றுவதில் பிரவேசிக்கிறார்கள்—அதன் விளைவாக, அவர்கள் “மென்மையான பட்டயத்தால்” குத்தப்பட்டதால் அவர்கள் தங்களை அறிந்து கொள்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் மனுஷனின் செயல்களைப் பாராட்டுவதாகவும், மனுஷனின் செயல்களை ஊக்கப்படுத்துவதாகவும் தோன்றுகின்றன—இருப்பினும் தேவன் தங்களைப் பரியாசம் பண்ணுவதாக ஜனங்கள் எப்போதும் உணர்கிறார்கள். அதனால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, அவர்களின் முகத்தில் உள்ள தசைகள், அவர்களுக்கு வலிப்பு ஏற்பட்டது போல, அவ்வப்போது துடிக்கும். இது அவர்களின் மனசாட்சியின் அசுத்தம், இதன் காரணமாக அவர்களுக்கு விருப்பமின்றி வலிப்பு ஏற்படுகிறது. அவர்களின் வலியானது அவர்கள் சிரித்தால் சிரிக்கவோ அழுதால் அழவோ முடியாத ஒரு வகையாக இருக்கிறது, ஏனென்றால் “விசிஆர்” தொலையியக்கியில் ஜனங்களின் கேலிக்குரிய விதம் போட்டுக் காட்டப்படுகிறது, அவர்களால் அதை நிறுத்திவிட முடியாது, ஆனால் தாங்கிக்கொள்ள மட்டுமே முடியும். “தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்துதல்” குறித்து அனைத்து உடன் ஊழியர் கூட்டங்களிலும் பிரசங்கிக்கப்பட்டாலும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தினுடைய முட்டையின் தன்மை பற்றி யாருக்குத் தெரியாது? நேருக்கு நேர், அவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் போலக் கீழ்ப்படிகிறவர்கள், ஆனால் முதுகுப்புறமாகத் திரும்பும்போது அவர்கள் ஓநாய்களைப் போல காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள், இதை தேவனுடைய வார்த்தைகளில் காணலாம், “நான் என் வார்த்தைகளை வழங்கும்போது பலர் என்னை உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனாலும் என் வார்த்தைகளை அவர்களின் ஆவிகளில் சிந்தையில் வைக்க மறுக்கின்றனர், அதற்குப் பதிலாகச் சாதாரணமாக அவற்றைப் பொதுச் சொத்து போலப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் விரும்பும் போதெல்லாம் அவை எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பத் தூக்கி எறிகிறார்கள்.” தேவன் ஏன் எப்போதும் மனுஷனை அம்பலப்படுத்தியிருக்கிறார்? மனுஷனின் பழைய சுபாவம் ஓர் அங்குலம் கூட மாறியிருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. தை என்ற மலை போல், அது கோடிக்கணக்கான ஜனங்களின் இருதயங்களில் உயர்ந்து நிற்கிறது, ஆனால் யு காங் அந்த மலையை நகர்த்தும் நாள் வரும்; இதுவே தேவனுடைய திட்டமாகும். அவருடைய வார்த்தைகளில், தேவன் மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்காத, மனுஷனை எச்சரிக்காத, அவனுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற, மனுஷனின் சுபாவத்தைச் சுட்டிக் காட்டாத தருணமே இல்லை. “மனுஷன் என்னிடமிருந்து விலகி இருக்கும்போது, அவன் என்னைச் சோதிக்கும்போது, அவனிடமிருந்து என்னை நான் மேகங்களுக்கிடையில் மறைக்கிறேன். இதன் விளைவாக, அவனால் என்னைப் பற்றிய எந்தத் தடயத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது, துன்மார்க்கரின் கையால் மட்டுமே வாழும் நிலைக்கு ஆளாகி, அவர்கள் கேட்கும் அனைத்தையும் செய்பவனாகிறான்.” உண்மையில், ஜனங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்வதற்கான வாய்ப்பை அரிதாகவே பெறுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேடுவதில் மிகக் குறைந்த விருப்பத்தைக் கொண்டுள்ளனர்; இதன் விளைவாகப் பெரும்பாலான ஜனங்கள் தேவனை நேசித்தாலும், அவர்கள் பொல்லாங்கனுடைய கரத்தின் கீழ் வாழ்கிறார்கள், மேலும் அவர்கள் செய்யும் அனைத்தும் பொல்லாங்கனால் வழிநடத்தப்படுகின்றன. ஜனங்கள் உண்மையாகவே தேவனுடைய ஒளியில் வாழ்ந்தால், ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணமும் தேவனைத் தேடினால், தேவன் இப்படிப் பேச வேண்டிய அவசியமே இருக்காது அல்லவா? ஜனங்கள் வாக்கியங்களை ஒதுக்கி வைக்கும்போது, அவர்கள் உடனடியாக தேவனையும் புத்தகத்துடன் சேர்த்து ஒதுக்கி வைக்கிறார்கள், எனவே அவர்கள் தங்கள் சொந்த வியாபாரத்தில் தங்கள் அக்கறையைச் செலுத்துகிறார்கள், அதன் பிறகு தேவன் அவர்களின் இருதயங்களிலிருந்து மறைந்து விடுகிறார். ஆனால் அவர்கள் மீண்டும் புத்தகத்தை எடுக்கும்போது, அவர்கள் மனதில் தேவனைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று திடீரென்று அவர்களுக்குத் தோன்றுகிறது. “ஞாபக மறதியுள்ள” மனுஷனின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். தேவன் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறாரோ, வார்த்தைகளும் அவ்வளவு உயர்ந்தவைகளாக இருக்கின்றன. அவர்கள் தங்களது உச்சத்தை அடைந்ததும், அனைத்து கிரியைகளும் முடிவடைகின்றன, அதன் விளைவாக, தேவன் தமது வார்த்தைகளை நிறுத்திக்கொள்கிறார். அவரது கிரியையை அதன் உச்சத்தை அடையும் போது, அது முடிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின்படிதான் தேவன் கிரியை செய்கிறார்; அதன் உச்சத்தை அடைந்தவுடன் அவர் கிரியை செய்வதைத் தொடர்வதில்லை, மாறாக, உடனடியாக நிறுத்துகிறார். தேவையில்லாத கிரியையை அவர் ஒருபோதும் செய்வதில்லை.

முந்தைய: அத்தியாயம் 20

அடுத்த: அத்தியாயம் 22 மற்றும் 23

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக