பயிற்சி (5)

கிருபையின் காலத்தில், இயேசு சில வார்த்தைகளைப் பேசி, ஒரு கட்ட கிரியையைச் செய்தார். அவை எல்லாவற்றிற்கும் ஒரு சூழல் இருந்தது, அவையெல்லாம் அந்தக் கால ஜனங்களுடைய நிலைகளுக்கு பொருத்தமானவையாக இருந்தன; இயேசு அந்தக் கால சூழலுக்கு ஏற்றவாறு பேசி, கிரியை செய்தார். அவர் சில தீர்க்கதரிசனங்களையும் பேசினார். சத்திய ஆவியானவர் கடைசி நாட்களில் வருவார் என்றும், ஒரு கட்ட கிரியையைச் செய்வார் என்றும் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். அதாவது, அந்தக் காலத்தில் தாம் செய்ய வேண்டிய கிரியைக்கு அப்பால் எதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை. வேறுவிதமாகச் சொல்லுவதென்றால், மாம்சமான தேவன் கொண்டுவந்த கிரியை குறைவானது. இவ்வாறு, அவர் இருக்கும் காலத்துக்கான கிரியையை மட்டுமே அவர் செய்கிறார், அவருடன் எந்த தொடர்பும் இல்லாத பிற கிரியையை அவர் செய்வதில்லை. அந்தக் காலத்தில், இயேசு உணர்வுகள் அல்லது தரிசனங்களின்படி கிரியை செய்யாமல், காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு செய்தார். யாரும் அவரை வழிநடத்தவோ வழிகாட்டவோ இல்லை. அவருடைய கிரியையின் முழுமையும் அவருடைய சுயமாக இருந்தது, இது மாம்சமான தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட வேண்டிய கிரியையாகும், இது மாம்சமாதல் மூலம் செய்யப்பட்ட அனைத்துக் கிரியைகளும் ஆகும். இயேசு தாம் கண்டதற்கும் கேட்டதற்கும் ஏற்ப மட்டுமே கிரியை செய்தார். வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்தார். தேவதூதர்கள் அவரிடம் தோன்றி அவருக்குக் கனவுகளைத் தர வேண்டிய அவசியமில்லை, எந்தப் பெரிய வெளிச்சமும் அவர் மீது பிரகாசிக்கவும் அவரைப் பார்க்க அனுமதிக்கவும் வேண்டியதில்லை. அவர் சுதந்திரமாகவும் தங்குதடையில்லாமலும் கிரியை செய்தார், ஏனென்றால் அவருடைய கிரியை உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், அவர் கிரியை செய்தபோது, அவர் தட்டித் தடவிப் பார்க்கவுமில்லை, யூகிக்கவுமில்லை, ஆனால் தமது சொந்த கருத்துக்களின்படியும், தமது சொந்தக் கண்களால் பார்த்தவற்றிற்கு ஏற்பவும், கிரியைசெய்தும் பேசியும் காரியங்களை எளிதில் நிறைவேற்றினார் அவரைப் பின்பற்றிய ஒவ்வொரு சீஷருக்கும் உடனடி வாழ்வாதாரத்தை வழங்கினார். இதுதான் தேவனுடைய கிரியைக்கும் ஜனங்களுடைய கிரியைக்கும் உள்ள வித்தியாசமாகும்: ஜனங்கள் கிரியை செய்யும் போது, அவர்கள் ஆழமான பிரவேசித்தலை அடைய அடுத்தவர்கள் போட்ட அஸ்திபாரத்தின் அடிப்படையிலேயே தேடுகின்றனர், தடவிப் பார்க்கின்றனர், எப்போதும் பாசாங்கு செய்கின்றனர் மற்றும் சிந்திக்கின்றனர். தேவனுடைய கிரியை என்பது அவர் என்னவாக இருக்கிறார் என்ற ஏற்பாடாகும், மேலும் அவர் தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார். அவர் எந்தவொரு மனுஷனுடைய கிரியையிலுள்ள அறிவைப் பயன்படுத்தியும் திருச்சபைக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதில்லை. அதற்குப் பதிலாக, அவர் ஜனங்களுடைய நிலைகளின் அடிப்படையில் தற்போதைய கிரியையைச் செய்கிறார். ஆகவே, இவ்விதமாகக் கிரியை செய்வது ஜனங்கள் செய்யும் கிரியையை விட ஆயிரக்கணக்கான மடங்கு சுதந்திரமானது. ஜனங்களைப் பொறுத்தவரை, தேவன் தமது கடமைக்குக் கட்டுப்படுவதில்லை, அவர் விரும்பியபடி கிரியை செய்கிறார் என்று தோன்றினாலும் கூட, அவர் செய்யும் கிரியைகள் எல்லாம் புதிதாய் இருக்கின்றன. ஆனாலும், மாம்சமான தேவனுடைய கிரியை ஒருபோதும் உணர்வுகள் அடிப்படையிலானது அல்ல என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில், சிலுவையில் அறையப்படும் தம்டைய கிரியையை இயேசு முடித்த பிறகு, இயேசுவைப் பின்தொடர்ந்த சீஷர்கள் தங்கள் அனுபவத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும், தேவனுடைய நாள் வரப்போகிறது என்றும் தாங்கள் சீக்கிரம் கர்த்தரைச் சந்திப்போம் என்றும் உணர்ந்தனர். அதுதான் அவர்களிடம் காணப்பட்ட உணர்வு, அவர்களுக்கு இந்த உணர்வு மிகவும் முக்கியமானது. ஆனால் உண்மையில், ஜனங்களுக்குள் இருக்கும் உணர்வுகள் நம்பத்தகுந்தவை அல்ல. ஒருவேளை தாங்கள் சாலையின் முடிவை அடையப்போகிறோம் என்றோ அல்லது தாங்கள் செய்த மற்றும் அனுபவித்த அனைத்தும் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கலாம் என்றோ அவர்கள் உணர்ந்தனர். பவுல் தனது ஓட்டத்தை முடித்துக்கொண்டதாகவும், தான் நல்ல போராட்டத்தை போராடியதாகவும், தனக்கு நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னான். அவன் அப்படித்தான் உணர்ந்தான், அவன் இதை நிருபங்களில் எழுதி சபைகளுக்கு அனுப்பினான். இத்தகைய செயல்கள் அவன் சபைகள் மீது கொண்டிருந்த பாரத்தினால் வந்தன, இதனால் இவை பரிசுத்த ஆவியானவரால் புறக்கணிக்கப்பட்டன. பவுல் அந்த வார்த்தைகளைச் சொன்ன போது, அவனுக்கு எவ்விதமான அசெளகரியமான உணர்வோ, இழிவான உணர்வோ இல்லை, ஆகவே இதுபோன்ற காரியங்கள் மிகவும் இயல்பானவை, மிகவும் சரியானவை என்றும், அவை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றும் அவன் நம்பினான். ஆனால் இன்றைய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அவை பரிசுத்த ஆவியானவரிடருந்து வந்ததேயில்லை. அவை ஒரு மனுஷனுடைய மாயைகளே தவிர வேறில்லை. மனுஷருக்குள் பல மாயைகள் உள்ளன, தேவன் அவற்றில் கவனம் செலுத்துவதோ அல்லது அவை நிகழும்போது எந்தக் கருத்தையும் வெளிப்படுத்துவதோ கிடையாது. பரிசுத்த ஆவியானவரின் பெரும்பாலான கிரியையானது ஜனங்களுடைய உணர்வுகள் மூலமாக செய்யப்படுவதில்லை. தேவன் மாம்சமாவதற்கு முந்தைய கடினமான, அந்தகாரமான காலங்களைத் தவிர அல்லது அப்போஸ்தலர்கள் அல்லது ஊழியக்காரர்கள் இல்லாத காலத்தைத் தவிர, பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுடைய உணர்வுகளுக்குள் கிரியை செய்வதில்லை. அந்தக் கட்டத்தில் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையானது ஜனங்களுக்கு சில சிறப்பு உணர்வுகளைக் கொடுக்கிறது. உதாரணமாக: ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கும்போது, அவர்கள் ஜெபிக்கும்போது அவர்கள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி உணர்வைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இன்ப உணர்வைக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் சமாதானத்தோடும் செளகரியத்தோடும் இருக்கின்றனர். ஜனங்கள் வார்த்தைகளின் வழிகாட்டுதலைப் பெற்றதும், தங்கள் ஆவிகளில் ஒரு பிரகாசத்தை உணர்கின்றனர், அவர்கள் தங்கள் செயல்களில் ஒரு நடைமுறைப் பாதையைக் கொண்டிருக்கின்றனர், இயல்பாகவே, அவர்கள் அமைதியான உணர்வுகளைக் கொண்டிருக்கின்றனர் மற்றும் நிம்மதியாக இருக்கின்றனர். ஜனங்கள் ஆபத்தை எதிர்கொள்ளும்போது அல்லது சில காரியங்களைச் செய்வதிலிருந்து தேவன் அவர்களைத் தடுக்கும்போது, அவர்கள் தங்கள் இருதயங்களில் அமைதியிழந்தவர்களாகவும், நிம்மதியற்றவர்களாகவும் உணர்கின்றனர். இவை முற்றிலும் பரிசுத்த ஆவியானவரால் மனுஷனுக்குக் கொடுக்கப்படும் உணர்வுகளாகும். இருப்பினும், ஒரு விரோதமான சூழல் பயச் சூழலை ஏற்படுத்தி, ஜனங்களை மிகவும் கவலையுள்ளவர்களாகவும், பயமுள்ளவர்களாகவும் மாற்றினால், அது மனுக்குலத்தின் இயல்பான வெளிப்பாடாகும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு தொடர்பில்லாததாகும்.

ஜனங்கள் எப்போதும் தங்கள் சொந்த உணர்வுகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர், இவ்வாறே பல ஆண்டுகளாக செய்துள்ளனர். அவர்கள் தங்களுடைய இருதயத்திற்குள் சமாதானமாக இருக்கும்போது, அவர்கள் செயல்படுகின்றனர் (அவர்களுடைய விருப்பமானது ஒரு சமாதான உணர்வாக இருப்பதாக நம்புகின்றனர்), மேலும் அவர்கள் தங்களுடைய இருதயங்களுக்குள் சமாதானமாக இல்லாதபோது, அவர்கள் செயல்படுவதில்லை (அவர்களுடைய விருப்பமின்மை அல்லது வெறுப்பானது ஓர் அசெளகரிய உணர்வாக இருப்பதாக நம்புகின்றனர்). காரியங்கள் சுமூகமாகச் சென்றால், அது தேவனுடைய சித்தம் என்று அவர்கள் நினைக்கின்றனர். (உண்மையில், அது மிகவும் சுமூகமாகச் சென்றிருக்க வேண்டிய ஒன்று, இதுவே காரியங்களின் இயல்பான விதியாகும்.) காரியங்கள் சுமூகமாகச் செல்லாதபோது, அது தேவனுடைய சித்தம் அல்ல என்று அவர்கள் நினைக்கின்றனர். சீராகச் செல்லாத ஒன்றை அவர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்கள் நின்றுவிடுகின்றனர். இத்தகைய உணர்வுகள் துல்லியமானவை அல்ல, அவற்றுக்கு ஏற்ப செயல்படுவது பல தாமதங்களை ஏற்படுத்தும். உதாரணமாக, சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் நிச்சயமாக சிரமங்கள் இருக்கும், தேவனுடைய சித்தத்தைச் செய்வதில் இன்னும் அதிக சிரமங்கள் இருக்கும். பல சாதகமான காரியங்களை உணர்வதற்கு கடினமாக இருக்கும். “நல்ல காரியங்களை அடைவதற்கு முன்னால் பொதுவாகக் கடினமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன” என்ற பழமொழி போல, ஜனங்கள் தங்கள் நடைமுறை ஜீவிதத்தில் பல உணர்வுகளைக் கொண்டுள்ளனர், இது அவர்களைத் தொடர்ந்து இழப்புக்குள்ளாக்குகின்றன மற்றும் பல காரியங்களைப் பற்றி உறுதியாக அறியவிடாமல் செய்கின்றன. ஜனங்களால் சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியாதவரை அவர்களுக்கு எதுவும் தெளிவாகத் தெரியாது. ஆனால் பொதுவாக, அவர்கள் தங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்படும்போது அல்லது பேசும்போது, அது முதன்மைக் கொள்கைகளை மீறும் ஒன்றாக இல்லாத வரை, பரிசுத்த ஆவியானவர் எவ்விதத்திலும் எதிர்வினையாற்றுவதில்லை. இது பவுல் உணர்ந்த “நீதியின் கிரீடம்” போல இருக்கிறது: பல ஆண்டுகளாக, யாரும் அவருடைய உணர்வுகள் தவறானவை என்று நம்பவில்லை, தனது உணர்வுகள் தவறாக இருப்பதாக பவுலும் கூட ஒருபோதும் உணரவில்லை. ஜனங்களுடைய உணர்வுகள் எங்கிருந்து வருகின்றன? உண்மையில், அவை அவர்களுடைய மூளையில் இருந்து வரும் பிரதிபலிப்புகளாகும். பல்வேறு சூழல்கள் மற்றும் பல்வேறு விஷயங்களுக்கு ஏற்ப பல்வேறு உணர்வுகள் உருவாகின்றன. பெரும்பாலான நேரங்களில், ஜனங்கள் மனித பகுத்தறிவைக் கொண்டு ஊகிக்கின்றனர், இதன் மூலம் ஒரு தொகுதி சூத்திரங்களைப் பெறுகின்றனர், இது பல மனித உணர்வுகளை உருவாக்குகிறது. இதை உணராமல், ஜனங்கள் தங்களுடைய சொந்த பகுத்தறிவு ஊகங்களுக்குள் பிரவேசிக்கின்றனர், இதனால் இந்த உணர்வுகள் ஜனங்கள் தங்களுடைய ஜீவிதங்களில் சார்ந்திருப்பதாக மாறுகின்றன. அவை பவுலின் “நீதியின் கிரீடம்” அல்லது விட்னஸ் லீயின் “கர்த்தரைக் காற்றில் சந்தித்தல்” போன்று அவர்களுடைய ஜீவதங்களில் ஓர்உணர்ச்சிகரமான ஆதாரமாகின்றன. அவர்கள் விரும்புகிறபடி உருவாக்க அவர்களை அனுமதிப்பதைத் தவிர மனுஷனுடைய இந்த உணர்வுகளில் குறுக்கிடுவதற்கு தேவனுக்கு கிட்டத்தட்ட எந்த வழியும் இல்லை. இன்று, நான் உன்னிடம் சத்தியத்தைக் குறித்த பல்வேறு அம்சங்களைப் பற்றித் தெளிவாகப் பேசியிருக்கிறேன். நீ தொடர்ந்து உன் உணர்வுகளிலேயே பயணித்துக் கொண்டிருந்தால், நீ இன்னும் தெளிவற்ற நிலையில் ஜீவிக்கவில்லையா? உன்னிடம் தெளிவாக விளக்கிக்கூறப்பட்டுள்ள வார்த்தைகளை நீ ஏற்றுக்கொள்ளவில்லை, எப்போதும் உன் தனிப்பட்ட உணர்வுகளை நம்பியிருக்கிறாய். இதில், நீ குருடன் யானையைத் தடவிப் பார்ப்பது போல இல்லையா? நீ இறுதியில் எதைப் பெறுவாய்?

இன்று மாம்சமான தேவன் செய்யும் சகல கிரியையும் உண்மையானவை. இது நீ உணரக்கூடிய ஒன்றோ அல்லது நீ கற்பனை செய்து பார்க்கக்கூடிய ஒன்றோ அல்ல, இது நீ ஊகிக்கக்கூடிய ஒன்றும் அல்ல. உண்மைகள் உன்னிடம் வரும்போது மட்டுமே உன்னால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக இது இருக்கிறது. சில நேரங்களில், அவைகள் செய்தாலும் கூட, உன்னால் இன்னும் தெளிவாகப் பார்க்க முடியாது, மேலும் என்ன நடக்கிறது என்ற உண்மைகள் குறித்த நல்ல தெளிவைக் கொண்டுவருவதற்கு தேவன் தனிப்பட்ட முறையில் செயல்படாத வரை ஜனங்களால் புரிந்துகொள்ள முடியாது. அந்தக் காலத்தில், இயேசுவைப் பின்பற்றிய சீஷர்களிடையே பல தவறான நம்பிக்கைகள் காணப்பட்டன. தேவனுடைய நாள் வரப்போகிறது என்றும், தாங்கள் சீக்கிரம் கர்த்தருக்காக மரித்துவிடுவோம் என்றும், கர்த்தராகிய இயேசுவைச் சந்திக்க முடியும் என்றும் அவர்கள் நம்பினர். இந்த உணர்வின் காரணமாகப் பேதுரு ஏழு வருடங்கள் காத்திருந்தான், ஆனால் அது அப்போதும் வரவில்லை. அவர்கள் தங்களுடைய ஜீவிதம் முதிர்ச்சியடைந்துவிட்டதாக உணர்ந்தனர். அவர்களுக்குள் இருந்த உணர்வுகள் பெருகின, மேலும் இந்த உணர்வுகள் மிகவும் தீவிரமாகின, ஆனால் அவர்கள் பல தோல்விகளை அனுபவித்தனரே தவிர, வெற்றிபெற முடியவில்லை. என்ன நடக்கிறது என்று அவர்களுக்கே தெரியவில்லை. பரிசுத்த ஆவியானவரிடமிருந்து உண்மையிலேயே வந்தது நிறைவேற்றப்பட முடியாததாக இருக்குமா? ஜனங்களுடைய உணர்வுகள் நம்பத்தகுந்தவையாக இல்லை. ஜனங்கள் தங்களுடைய சொந்த எண்ணங்களையும் கருத்துக்களையும் கொண்டிருப்பதால், அவர்கள் அந்த நேரத்தில் சூழல் மற்றும் நிலைமைகளின் அடிப்படையில் கூட்டுறவுகளின் செல்வத்தை உருவாக்குகின்றனர். குறிப்பாக, ஆரோக்கியமாகச் சிந்திக்கும் முறைகளை உடையவர்களுக்கு ஏதாவது நடக்கும் போது, அவர்கள் மிகுந்த பதற்றமடைந்து, சங்கங்களின் செல்வத்தை உருவாக்க முடிகிறதே தவிர உதவ முடிவதில்லைகுறிப்பாக இது உயர்ந்த அறிவு மற்றும் கோட்பாடுகளைக் கொண்ட “நிபுணர்களுக்கு” பொருந்தும், பல வருடங்கள் உலகத்தைக் கையாண்ட பிறகு இவர்களுடைய சங்கங்கள் இன்னும் ஏராளமாகின்றன. அவர்கள் அதை உணராமலேயே, அவை அவர்களுடைய இருதயங்களைக் கட்டுப்படுத்தி, அவர்களுடைய மிகவும் சக்திவாய்ந்த உணர்வுகளாக மாறுகின்றன, மேலும் அவர்கள் அவற்றைக் குறித்து திருப்தி அடைகின்றனர். ஜனங்கள் ஏதாவது செய்ய விரும்பும்போது, உணர்வுகளும் கற்பனைகளும் அவர்களுக்குள் தோன்றும், அவை சரியானவை என்று அவர்கள் நினைப்பார்கள். பிற்காலத்தில், அவை நிறைவேற்றப்படவில்லை என்பதைப் பார்க்கும்போது, என்ன தவறு நடந்தது என்பதை ஜனங்களால் கண்டறிய முடியாது. ஒருவேளை தேவன் தமது திட்டத்தை மாற்றிவிட்டதாக அவர்கள் நம்பலாம்.

சகல ஜனங்களுக்கும் உணர்வுகள் இருப்பது தவிர்க்க முடியாதது. நியாயப்பிரமாணத்தின் காலத்தில், பலருக்கும் சில உணர்வுகள் இருந்தன, ஆனால் அவர்களுடைய உணர்வுகளில் காணப்பட்ட தவறுகள் இன்றைய ஜனங்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்தன. ஏனென்றால், இதற்கு முன்பு, ஜனங்களால் யேகோவாவின் தோற்றத்தைக் காண முடிந்தது. அவர்களால் தேவதூதர்களைக் காண முடிந்தது, அவர்கள் சொப்பனங்கள் கண்டனர். இன்றைய ஜனங்களால் தரிசனங்களையோ தேவதூதர்களையோ பார்க்க முடிவதில்லை, இதனால் அவர்களுடைய உணர்வுகளில் காணப்படும் தவறுகள் பெருகியிருக்கின்றன. இன்றைய ஜனங்கள் எதையாவது குறிப்பாக சரியானது என்று உணர்ந்து அதை நடைமுறைப்படுத்தும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களை கடிந்துகொள்வதில்லை, மேலும் அவர்கள் உள்ளுக்குள் சமாதானமாக இருக்கின்றனர். ஐக்கியம் அல்லது தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பதன் மூலம் உண்மையை அறிந்த பிறகுதான் தாங்கள் செய்தது தவறு என்பதைக் கண்டுபிடிக்கின்றனர். இதன் ஓர் அம்சம் என்னவென்றால், ஜனங்களிடம் தேவதூதர்கள் யாரும் தோன்றுவதில்லை, கனவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன, மேலும் ஜனங்கள் வானத்தில் எந்த தரிசனங்களையும் காண்பதில்லை. மற்றொரு அம்சம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் தமது கடிந்துகொள்ளுதல்களை அதிகரிப்பதில்லை, ஜனங்களை சிட்சிப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரின் எந்தக் கிரியையும் அவர்களுக்குள் இருப்பதில்லை. இவ்வாறு, ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணவில்லை என்றால், நடைமுறையான வழியில் சத்தியத்தைத் தேடுவதில்லை, நடைமுறையின் பாதையைப் புரிந்துகொள்வதில்லை, அப்போது அவர்கள் எதையும் அறுவடை செய்ய மாட்டார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் கொள்கைகள் பின்வருமாறு: தமது கிரியையோடு தொடர்பில்லாதவற்றில் அவர் கவனம் செலுத்துவதில்லை. தமது அதிகார வரம்பிற்குள் எதுவும் இல்லை என்றால், அவர் முற்றிலுமாக ஒருபோதும் தலையிடுவதோ, குறுக்கிடுவதோ இல்லை, ஜனங்கள் விரும்பும் எந்த பிரச்சனையையும் செய்ய அனுமதிக்கிறார். நீ விரும்பியபடி செயல்படலாம், ஆனால் நீ உன்னையே பயம் நிறைந்தவனாக, நஷ்டமுள்ளவனாக காணும் நாள் வரும். தேவன் தமது சொந்த மாம்சத்தில் மட்டுமே ஒரே மனதுடன் கிரியை செய்கிறார், மனுஷனுடைய கிரியையில் ஒருபோதும் தலையிடுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர் மனுஷனின் உலகத்திற்கு ஒரு பரந்த இடத்தைக் கொடுக்கிறார், மேலும் அவர் தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார். இன்று நீ ஏதேனும் தவறு செய்தால் நீ கடிந்துகொள்ளப்படவும் மாட்டாய், நாளை நீ ஏதாவது நல்லது செய்தால் வெகுமதியும் பெறமாட்டாய். இவை மனுஷ காரியங்களாக இருக்கின்றன, பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் சிறிதளவும் தொடர்பில்லை. இது எனது கிரியையின் எல்லைக்குள் இல்லை.

பேதுரு கிரியை செய்த நேரத்தில், அவன் பல வார்த்தைகளைப் பேசி, அதிக கிரியை செய்தான். எதுவும் மனுஷ கருத்துக்களிலிருந்து வராமலிருப்பதற்குச் சாத்தியமுள்ளதா? அது முற்றிலும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்திருப்பதற்குச் சாத்தியமில்லை. பேதுரு தேவனுடைய ஒரு சிருஷ்டியாக மட்டுமே இருந்தான், அவன் ஒரு சீஷன், அவன் பேதுருவாக இருந்தான், இயேசுவாக அல்ல, அவர்களுடைய சாராம்சங்கள் ஒன்றல்ல. பேதுரு பரிசுத்த ஆவியானவரால் அனுப்பப்பட்டிருந்தாலும், அவன் செய்ததெல்லாம் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரவில்லை, ஏனென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக அவன் ஒரு மனுஷன். பவுலும் பல வார்த்தைகளைப் பேசினான், திருச்சபைகளுக்கு அவன் எழுதிய நிருபங்கள் கொஞ்சநஞ்சமல்ல, அவற்றில் சில வேதாகமத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. பரிசுத்த ஆவியானவர் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை, அந்த நேரத்தில்தான் பவுல் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டான். அவன் சில அனுபவங்களையும் அறிவையும் பெற்றான், அவன் அவற்றை எழுதி கர்த்தருக்குள் உள்ள தனது சகோதர சகோதரிகளுக்கு வழங்கினான். இயேசுவிடம் எந்த எதிர்வினையும் காணப்படவில்லை. அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் ஏன் அவனைத் தடுக்கவில்லை? ஜனங்களுடைய இயல்பான சிந்தனையில் தோன்றும் சில அசுத்தங்கள் இருப்பதுதான் காரணமாக இருந்தது, இது தவிர்க்க முடியாதது. மேலும், அவனுடைய நடவடிக்கைகள் குறுக்கீடான அல்லது தொந்தரவுதரும் நிலையை அடையவில்லை. மனுக்குலத்தின் இந்த வகையான கிரியைகள் சில இருக்கும் போது, ஜனங்களுக்கு அதை ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கிறது. மனுஷனுடைய இயல்பாக சிந்திக்கும் முறையின் அசுத்தங்கள் எதிலும் குறுக்கிடாதபோது அவை இயல்பானவையாகவே கருதப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், சாதாரண சிந்தனை கொண்டவர்கள் எல்லோருமே அவ்விதமாகச் சிந்திக்கும் திறனுள்ளவர்கள். ஜனங்கள் மாம்சத்தில் ஜீவிக்கும்போது, அவர்களுடைய சொந்த சிந்திக்கும் முறை அவர்களிடம் உள்ளது, ஆனால் இவற்றைக் களைவதற்கு எந்த வழியுமில்லை. இருப்பினும், தேவனுடைய கிரியையை சிறிது நேரம் அனுபவித்து, சில சத்தியங்களைப் புரிந்துகொண்ட பிறகு, இந்த சிந்திக்கும் முறைகள் குறைவாகவே இருக்கும். அவர்கள் அதிகமான காரியங்களை அனுபவிக்கும் போது, அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியும், இதனால் அவர்கள் காரியங்களில் குறைவாக குறுக்கிடுவார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், ஜனங்களுடைய கற்பனைகள் மற்றும் தர்க்கரீதியான ஊகங்கள் தவறானதாக நிரூபிக்கப்படும் போது, அவர்களுடைய அசாதாரண உணர்வுகள் குறையும். மாம்சத்தில் ஜீவிக்கிற எல்லோரும் தங்களுடைய சொந்த சிந்திக்கும் முறையைக் கொண்டிருக்கின்றனர், ஆனால் இறுதியில், அவர்களுடைய சிந்திக்கும் முறை தங்களைத் தொந்தரவு செய்யாத அளவிற்கு தேவன் கிரியை செய்வார், அவர்கள் தங்களுடைய ஜீவிதங்களில் இனிமேல் உணர்வுகளைச் சார்ந்திருக்க மாட்டார்கள், அவர்களுடைய உண்மையான உயரம் வளரும், மேலும் அவர்களால் தேவனுடைய வார்த்தை மூலம் யதார்த்தத்திற்குள் ஜீவிக்க முடியும், தெளிவற்ற மற்றும் வெறுமையான காரியங்களை அவர்கள் இனிமேல் செய்ய மாட்டார்கள், அதன்பின் இடையூறுகளை உண்டாக்கும் காரியங்களையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். இவ்வாறு, அவர்களுடைய மாயைகள் இனிமேல் இருக்காது, இந்த நேரத்திலிருந்து அவர்களுடைய செயல்கள் அவர்களுடைய உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

முந்தைய: பயிற்சி (4)

அடுத்த: ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக