அத்தியாயம் 38

மனுக்குலத்தின் உள்ளார்ந்த பண்புகளை, அதாவது மனுக்குலத்தின் உண்மையான முகத்தைக் கருத்தில்கொண்டு, இதுவரை தொடர முடியும் என்பது உண்மையில் எளிதான காரியம் அல்ல, மேலும் இதன் மூலம் மட்டுமே தேவனின் மாபெரும் வல்லமை உண்மையிலேயே வெளிப்படையாகத் தெரிய வந்திருக்கிறது. மாம்சத்தின் சாராம்த்தையும் அதுமட்டும் அல்லாமல் இதுவரை மனிதன் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தினால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறான் என்பதையும் கருத்தில் கொண்டு, தேவ ஆவியானவரின் வழிநடத்துதல் இல்லாமல் இருந்திருந்தால் அவனால் எப்படி இந்நாள் மட்டும் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்? மனிதன் தேவனுக்கு முன்பாக வரத்தகுதியற்றவனாக இருந்தாலும் தமது நிர்வாகத்தின் பொருட்டும், தமது மாபெரும் கிரியையை விரைவிலேயே பலனைத் தருவதற்காகவும், தேவன் மனுக்குலத்தின் மீது அன்புசெலுத்துகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், மனுக்குலத்தின் மீது தேவனுக்குள்ள அன்பை ஒரு மனிதனும் தன் ஜீவித காலத்துக்குள் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது. ஒருவேளை, தங்கள் ஜீவனைத் தியாகம் செய்து தேவனுடைய கிருபையைத் திருப்பிச் செலுத்த விரும்புவோர் ஒரு சிலர் இருக்கலாம், ஆனால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: தேவனுக்கு முன்பாக சாவதற்கும் மனிதனுக்குத் தகுதி இல்லை, ஆகவே அவனது மரணமும் வீணானதாக இருக்கும். இது ஏனென்றால், தேவனுக்கு, மனிதனின் மரணம் குறிப்பிட்டுச் சொல்வதற்குக்கூட தகுதியுள்ளது அல்ல, தரையிலுள்ள ஓர் எறும்பின் சாவைப் போல ஒரு காசுக்குக் கூட மதிப்பற்றது. மனுக்குலம் தங்கள் மேல் மிக அதிகமான மதிப்பை வைக்க வேண்டாம் என நான் ஆலோசனை கூறுகிறேன், மேலும் தேவனுக்காகச் சாவது தாய் மலையைப் போல பெரும் கனமான காரியம் என்று எண்ண வேண்டாம். உண்மையில் ஒரு மனிதனின் மரணம் ஓர் இறகைப் போல இலகுவானது, குறிப்பிடத் தகுதி வாய்ந்தது அல்ல. ஆனால் மீண்டும் சொல்வதென்றால், மனுஷனின் மாம்சம் இயற்கையாகவே இறந்துபோகக் கூடியது, மற்றும் இதனால் இறுதியாக பூத உடல் பூமியின் மேல் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது யாராலும் மறுக்க முடியாத ஒரு மெய்யான உண்மை. இது நான் மனித வாழ்க்கை அனுபவத்தின் முழுமையில் இருந்து பெற்ற ஒரு “இயற்கை விதி” ஆகும், அதனால் மனிதனுடைய முடிவை ஒருவரும் அறியாவண்ணம் தேவன் இவ்விதம் வரையறுத்திருக்கிறார். நீ புரிந்துகொள்ளுகிறாயா? “நான் மனுக்குலத்தின் கீழ்ப்படியாமையை வெறுக்கிறேன். ஏனென்று எனக்குத் தெரியவில்லை; ஆரம்பத்தில் இருந்தே நான் மனுஷனை வெறுத்து வந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது, ஆனாலும் அவனுக்காக ஆழமாகப் பரிதாபத்தை உணர்கிறேன். இப்படியே ஜனங்கள் எப்போதும் என்னிடம் இரண்டு சிந்தைகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்—ஏனெனில் நான் மனிதனில் அன்புகூருகிறேன், மேலும் நான் அவனை வெறுக்கிறேன்.” என்று தேவன் கூறுவதில் வியப்பில்லை.

தேவனை அவரது பிரசன்னம் அல்லது அவரது தோற்றத்துக்காகத் துதிக்காதவர் யார்? இந்த நேரத்தில், மனுஷனுக்குள் இருக்கும் அசுத்தத்தையும் அநீதியையும் நான் முற்றிலுமாக மறந்துவிட்டது போல இருக்கிறது. மனுக்குலத்தின் சுயநீதி, சசுயமுக்கியத்துவம், கீழ்ப்படியாமை, அடங்காமை மற்றும் அவர்களின் அனைத்துக் கலகத்தன்மையையும் எடுத்து என் மனதின் பின்புறமாகப் போட்டுவிட்டு அதை மறந்துவிடுகிறேன். மனுக்குலம் எப்படிப்பட்டது என்ற இந்த நிகழ்வுகளினால் தேவன் கட்டுப்படுத்தப்படவில்லை. தேவனைப் போல நானும் “அதே துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதால்”, நானும் இந்த உபத்திரவத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ளுகிறேன், இல்லையென்றால் நானும் மனுஷனால் கட்டுப்படுத்தப்படுவேன். இந்த உபத்திரம் எல்லாம் எதற்கு? என்னோடு தேவனின் குடும்பத்தில் மனுஷன் சேர விரும்பாததால், என்னால் எப்படி அவர்களைக் கட்டாயப்படுத்த என் வல்லமையை உபயோகிக்க முடியும்? மனுஷனை ஒடுக்கும் விஷயங்களை நான் செய்வதில்லை, மேலும் நான் தேவனுடைய குடும்பத்தில் பிறந்ததால், அதனால் நிச்சயமாக மனுஷனும் நானும் எப்போதும் வெவ்வேறாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இன்று அவன் இருக்கும் இழிவான தோல்வி நிலைக்கு இது அவனை வழிநடத்தியிருக்கிறது. ஆனால் நான் தொடர்ந்து மனிதனுடைய பலவீனத்துக்குப் பரந்த இடத்தைக் கொடுக்கிறேன்; எனக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது? இது நான் வல்லமையற்றவன் அல்ல என்றாகிவிடாதா? மனிதனுக்கான “பணித்தலத்தில்” இருந்து “ஓய்வுபெறுவதைத்” தேவன் நாடுகிறார், மேலும் ஒரு “ஓய்வூதியத்தை” கோருகிறார் என்பதில் ஆச்சரியமில்லை. நான் மனிதனுடைய கண்ணோட்டத்தில் இருந்து பேசும்போது, மனிதன் கேட்பதில்லை, ஆனால் நான் தேவனுடைய கண்ணோட்டத்தில் இருந்து பேசும்போது மனிதன் எப்போதாவது தன் கீழ்ப்படியாமையை விட்டுவிட்டிருக்கிறானா? ஒருவேளை தேவன் திடீரென மனிதனுக்கான “பணித்தலத்தில்” இருந்து “ஓய்வுபெறும்” நாள் வரலாம், மேலும் அந்த நாள் வரும்போது, தேவனுடைய வார்த்தைகள் இன்னும் கடுமையாகும். இன்று, என் நிமித்தமாகவே தேவன் இந்த வகையில் பேசுகிறார், மேலும் அந்த நாள் வரும்போது, மென்மையாகவும் பொறுமையாகவும் ஒரு “மழலையர்ப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கதை சொல்லும்” என்னைப் போல் தேவன் இருக்க மாட்டார். ஒருவேளை நான் சொல்லுவது பொருத்தமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனுவுருவான தேவனின் நிமித்தமாகவே தேவன் மனிதனின் மேலுள்ள தன் பிடியைக் கொஞ்சம் தளர்த்த விரும்புகிறார்; இல்லாவிட்டால் விளைவு நினைக்க முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கும். தேவன் சொன்னது போல, “ஒருமுறை, அவர்கள் தங்கள் மாம்சீக இன்பங்களில் சுதந்திரமாகத் திளைக்க அனுமதித்து ஓரளவுக்கு நான் ஜனங்களின் மேல் இருந்த என் பிடியைத் தளர்த்தினேன்—இதன் காரணமாக அவர்கள் கட்டுக்கடங்காத முறையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடந்துகொள்ளத் துணிந்தார்கள். இதில் இருந்து அவர்கள் என்னை உண்மையிலேயே நேசிக்கவில்லை என்பதைக் காணலாம், ஏனெனில் அவர்கள் எல்லோரும் மாம்சத்தில் வாழ்கிறார்கள்.” தேவன் ஏன் “தங்கள் இன்பங்களில் திளைக்க” என்றும் “மாம்சத்தில் வாழ” என்றும் கூறுகிறார்? உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்த மாதிரி வார்த்தைகளை மனிதன் நான் விளக்காமலேயே இயல்பாகப் புரிந்துகொள்வான். எங்களுக்குப் புரியவில்லை என்று சொல்லும் சிலர் இருக்கலாம், இது ஏற்கெனவே ஒருவருக்கு பதில் தெரிந்திருந்தும் சிலர் தெரியாது என்று சொல்லி நடிப்பதுபோல் இருக்கிறது என்று நான் கூறுகிறேன். நினைவூட்டும் சில வார்த்தைகள்: “என்னோடு ஒத்துழையுங்கள் என்பதுதான் நான் மனுஷனிடம் கேட்பதெல்லாம்” என்று தேவன் ஏன் கூறுகிறார்? மனித சுபாவத்தை மாற்றுவது கஷ்டம் என்றும் தேவன் ஏன் கூறுகிறார்? மனித சுபாவத்தை தேவன் ஏன் வெறுக்கிறார்? மேலும் மனித சுபாவத்தின் விஷயங்கள் சரியாக என்னென்ன? மனித சுபாவத்துக்கு வெளியே இருக்கும் விஷயங்கள் என்னென்ன? இந்தக் கேள்விகளைச் சிந்தித்துப் பார்த்த யாராவது ஒருவன் இருக்கிறானா? ஒருவேளை இது மனிதனுக்குப் புதிய விஷயமாக இருக்கலாம், இருந்தாலும் இதைத் தகுந்தவாறு சிந்திக்குமாறு இன்னும் நான் மனிதனைக் கேட்டுக் கொள்கிறேன், இல்லாவிட்டால் மனுஷன் “மனித சுபாவம் மாற்றுவதற்குக் கடினமானது” போன்ற சொற்றொடர்களால் எப்போதும் தேவனைக் காயப்படுத்துவான். இவ்விதமாக அவருக்கு எதிராகப் போவதால் என்ன நன்மையை அது செய்யும்? முடிவில், இது உபத்திரவத்தைக் கேட்பது போன்றது அல்லவா? கல்லின் மேல் எறியப்பட்ட ஒரு முட்டையின் முடிவையே அதுவும் அடையாதா?

உண்மையில், மனிதன் உட்படுத்தப்படும் எல்லா உபத்திரவங்களும் சோதனைகளும் மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் எண்ணும் பாடங்களே. தேவனின் நோக்கத்தின் படி, மனிதன் அவன் விரும்புகின்றவற்றை தியாகம் செய்வதாக இருந்தாலும் கூட, இந்த விஷயங்களை அடையலாம், ஆனால் மனிதன் எப்போதும் தன்னையே நேசிப்பதால், அவன் தேவனோடு உண்மையிலேயே ஒத்துழைக்கத் தவறிவிடுகிறான். தேவன் மனிதனிடம் அதிகமாகக் கேட்பதில்லை. அவர் மனிதனிடம் கேட்பதெல்லாம் எளிதாகவும் மகிழ்ச்சியுடனும் அடையக்கூடியவையாகவே இருக்கின்றன; இது மனிதன் கஷ்டங்களை அனுபவிக்க விரும்புவதில்லை என்பது போலவே இருக்கிறது. யாரோ ஒருவரின் குழந்தையாக இருக்கும் ஒருவன் சிக்கனமாக வாழ்ந்து தன் பெற்றோரைக் கவனிக்கும் அளவுக்குச் சேமிக்கலாம் என்பதைப் போல இது இருக்கிறது. இருந்தாலும் தங்களால் சரியாகச் சாப்பிட முடியாதோ, அல்லது தங்கள் சொந்த ஆடைகள் சாதாரணமாக இருக்குமோ என அவர்கள் பயப்படுகின்றனர், அதனால் ஏதோ ஒரு காரணத்தால், குழந்தைக்கு ஒரு வசதி ஏற்படும்வரை பெற்றோர்களைக் கவனிக்கும் கடமை காத்திருக்கலாம் என்பது போலத் தங்களை அன்பாக பராமரித்ததற்காகத் தங்கள் பெற்றோருக்குச் செய்யும் கடமைகளை முற்றிலுமாக மறந்துவிடுகின்றனர். மனிதர்களின் இருதயங்களில் பெற்றோரிடம் காட்ட வேண்டிய பாசம் இல்லை என்பதைத்தான் நான் பார்க்கிறேன்—அவர்கள் எல்லாரும் பெற்றோர் பாசம் இல்லாத பிள்ளைகள். ஒருவேளை நான் கூறுவது மிகத் தீவிரமானதாக இருக்கலாம், ஆனால் உண்மைகளுக்கு எதிராக என்னால் பொருளற்றவைகளைப் பேச முடியாது. என்னைத் திருப்திப்படுத்துவதற்காக தேவனை எதிர்ப்பதில் நான் “மற்றவர்களோடு போட்டிபோட” முடியாது. தேவன் சொன்ன பெற்றோர் பாசம் கொண்ட இருதயம் உடையவர்கள் உலகில் யாருமில்லை என்பதுதான் இதற்குக் காரணம்: “பரலோகத்தில் சாத்தானே என் எதிரி; பூமியில் மனிதனே என் எதிரி. பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையின் காரணத்தால், ஒன்பதாம் தலைமுறை மட்டும் நான் அவர்கள் எல்லோரையும் குற்றவாளிகளாகத் தீர்க்கிறேன்.” சாத்தான் தேவனுடைய ஓர் எதிரி; தேவன் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்னவென்றால், தேவனுடைய பெரும் உதவிக்கும் அன்பிற்கும் அது திருப்பிச் செலுத்துவதில்லை, ஆனால் மாறாக “நீரோட்டத்துக்கு எதிராகத் துடுப்பு வலிக்கிறது”, மற்றும், இவ்வாறு செய்வதன் மூலம், தேவனுக்கு உகந்த பக்தியைக் காட்டும் அதன் கடமையை நிறைவேற்றுவதில்லை. ஜனங்களும் இவ்வாறுதானே இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் தங்கள் “பெற்றோர்களுக்கு” உரிய மரியாதையைக் காட்டுவதில்லை தங்களை அன்பாக பராமரித்ததற்காகச் செலுத்த வேண்டிய கடமையைத் திருப்பிச் செலுத்துவதில்லை. இது பூமியில் இருக்கும் மக்கள் வானத்தில் இருக்கும் சாத்தானுக்கு உறவினனாக இருக்கிறான் என்பதைக் காட்டப் போதுமானதாகும். தேவனை எதிர்ப்பதில் மனிதனும் சாத்தானும் ஒரே இருதயமும் மனமும் கொண்டவர்கள் ஆகவேதன் அவர்களை தேவன் ஒன்பதாம் தலைமுறை வரை குற்றவாளிகளாகத் தீர்க்கிறார் மற்றும் ஒருவரையும் மன்னிப்பதில்லை என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கடந்த காலத்தில், தேவன் மனுக்குலத்தை நிர்வாகிப்பதற்கு வானத்தில்தமது பணிவுள்ள ஊழியக்காரர்களைக் கொண்டிருந்தார், ஆனால் அது கீழ்ப்படியவில்லை, அதற்குப் பதில் தன் சொந்த மனநிலையில் மூழ்கிக் கலகம் செய்தது. கலக மனுஷர்கள் இந்தப் பாதையின் வழியாக முன்னேறி நடந்து போகவில்லையா? தேவன் “கடிவாளத்தை” எவ்வளவு தூரம் இறுக்கிப் பிடித்தாலும், ஜனங்கள் அசைந்து கொடுப்பதில்லை மற்றும் அவர்களது பாதையில் இருந்து அவர்களைத் திருப்ப முடிவதில்லை. என்னுடைய பார்வையில், மனுக்குலம் இந்த வழியிலேயே தொடர்ந்தால், தங்கள் சொந்த அழிவை அவர்களே ஏற்படுத்திக் கொள்வார்கள். இப்போது நீ ஒருவேளை தேவனுடைய இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளலாம்: “ஜனங்கள் தங்களது விடாப்பிடியான கட்டுகளைத் தங்கள் பழைய சுபாவத்தில் இருந்து வெட்டிவிட முடியாமல் இருக்கிறார்கள்.” தேவன் பல சந்தர்ப்பங்களில் மனிதனுக்கு ஞாபகப்படுத்தியிருக்கிறார்: “மனிதனுடைய கீழ்ப்படியாமை காரணமாக நான் அவனை விட்டுப்போகிறேன்.” தேவன் இதை ஏன் மீண்டும் மீண்டும் கூறுகிறார்? தேவனால் உண்மையிலேயே இவ்வளவு தூரம் இருதயமில்லாதவராக இருக்க முடியுமா? “நான் மனித இனத்தைச் சேர்ந்த ஒருவர் இல்லை” என்றும் தேவன் ஏன் கூறுகிறார்? ஓய்வாக இருந்த பல நாட்களில் இந்த விரிவான பிரச்சினைகள் பற்றி யாராவது கவனமாக சிந்தித்ததுண்டா? தேவனுடைய வார்த்தைகளில் அதிக உற்சாகத்துடன் ஈடுபடவேண்டும் என்றும் நான் மனுக்குலத்திடம் வலியுறுத்துகிறேன், ஏனோதானோவென்று அல்ல; இப்படி செய்தால் உனக்கும் பிறருக்கும் எந்த நன்மையும் கொண்டுவராது. சொல்லத் தேவை இல்லாததை சொல்லாமல் இருப்பது நல்லது, சிந்திக்கத் தேவையில்லாததைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதும் நல்லது. இது எளிதானதாக இல்லையா? இதுபோன்ற நடைமுறையால் என்ன தீங்கு வரும்? பூமியில் தேவன் தமது கிரியையின் முடிவை அறிவிக்காததற்கு முன், “நகர்வதை” ஒருவராலும் நிறுத்த முடியாது; ஒருவராலும் தங்கள் கடமையைக் கைகழுவ முடியாது. இப்போது அந்த நேரம் இல்லை; தேவனுக்கு ஒரு வழிகாட்டியாக அல்லது ஒரு முன்னோடியாக நடிக்கத் துணியாதே. இப்போது நிறுத்துவதற்கும் முன்னேறிச் செல்லாமல் இருப்பதற்கும் நேரம் மிகவும் முன்கூட்டியதாக இருக்கிறது—நீ என்ன நினைக்கிறாய்?

தேவன் மனுக்குலத்தைச் சிட்சையின் மத்தியில் கொண்டு வருகிறார், மற்றும் அவர்களை ஒரு மரணச் சூழலுக்குள்ளும் கொண்டுவருகிறார், இருப்பினும், நேர்மாறாக, பூமியில் மனிதன் செய்வதற்கு தேவனிடம் என்ன இருக்கிறது? நிச்சயமாக, தேவனுடைய வீட்டில் ஓர் ஆடை அலமாரியாக இருப்பது மனுஷனுடைய நோக்கம் அல்ல—பார்ப்பதற்கே தவிர உண்ணவோ அல்லது அணியவோ முடியாத ஒன்று. இது இப்படியாக இருந்தால், மாம்சத்தில் வெகுவாகத் துன்பப்படும்படி இவ்வளவு சிக்கலான செயல்முறைகளை ஏன் கையாளவேண்டும்? தேவன் கூறுகிறார், “நான் மனுஷனைக் ‘கொலைக் களத்திற்குக்’ கொண்டுசெல்கிறேன், ஏனெனில் என் சிட்சையை நியாயப்படுத்த மனிதனின் குற்றமே போதுமானதாக உள்ளது.” இந்த நேரத்தில் மனிதர்கள் தாங்களாகவே கொலைக் களத்திற்கு நடந்துசெல்ல தேவன் விட்டுவிட்டாரா? ஏன் ஒருவரும் “தங்கள் இரக்கத்திற்காகக் கெஞ்சவில்லை”? ஆகவே, மனிதன் எப்படி ஒத்துழைப்பான்? தேவன் நியாயத்தீர்ப்பு செய்யும் போது உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் தேவன் செயல்படுவதுபோல் மனிதனால் உண்மையில் செயல்பட முடியுமா? இந்த வார்த்தைகளின் பலன் முக்கியமாக மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்பதைச் சார்ந்துள்ளது. தான் சம்பாதித்தப் பணத்தை ஒரு தந்தை வீட்டுக்குக் கொண்டு வரும்போது, அவரோடு எப்படி ஒத்துழைப்பது அல்லது வீட்டுக்காரியங்களை எப்படி நிர்வகிப்பது என்று தாய் அறியாவிட்டால் அந்த வீட்டின் நிலை என்னவாக இருக்கும்? இப்போது சபையின் நிலையைப் பாருங்கள்: தலைவர்களான நீங்கள் அதைப் பற்றி என்ன உணர்கிறீர்கள்? உங்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சிந்தனைகளையும் பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தலாம். வீட்டுக் காரியங்கள் தாயால் சீர்குலைக்கபப்ட்டது என்றால், அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைகள் எப்படி இருப்பார்கள்? அனாதைகள் போலவா? அல்லது பிச்சைக்காரர்களைப் போலவா? தேவன் கூறியதில் ஆச்சரியமில்லை: “என்னுடைய தெய்வீகச் சுபாவத்தில் ‘அறிவின் தரம்’ இல்லை என்று எல்லா ஜனங்களும் நினைக்கிறார்கள், ஆனால் என்னுடைய மனிதத்தன்மையில் நான் எல்லாவற்றையும் ஊடுறுவிப்பார்க்க முடியும் என்பதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?” இத்தகைய ஒரு வெளிப்படையான சூழலில், தேவன் தமது தெய்வீகத்தில் இருந்து பேசவேண்டும் என்ற தேவை ஒன்றும் இல்லை. தேவன் சொன்னது போல, “ஓர் ஆணியை அடிக்க சம்மட்டியைப் பயன்படுத்த வேண்டிய” அவசியம் இல்லை. ஒருவேளை, இந்த நேரத்தில், தேவனின் பழமொழியான, “மனிதர்களின் மத்தியில் என்னில் அன்புகூருகிறவன் ஒருவனும் இல்லை” என்பதில் நடைமுறை அனுபவம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில், தேவன் கூறி இருப்பது போலவே இருக்கிறது: “எல்லா ஜனங்களும் இப்போதைய நிலையை அடைந்ததனால் மட்டுமே தயக்கத்துடன் தலை வணங்குகிறார்கள்—ஆனால் தங்கள் இருதயங்களில் அவர்கள் நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கிறார்கள்.” இந்த வார்த்தைகள் ஒரு தொலைநோக்கியைப் போல் இருக்கிறது. மனிதன் இன்னொரு சூழ்நிலைக்குள் சென்றடைந்திருப்பான் என்பது எதிர்காலத்தில் வெகுதூரத்தில் இல்லை. இது திருத்த முடியாத தன்மை என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்கான தேவனுடைய பதில் அதுதான்: “நான் போய்விடுவேன் என்ற பயத்தாலா மக்கள் பாவம் செய்யாமல் இருக்கிறார்கள்? அவர்கள் சிட்சைக்குப் பயப்படுகிறார்கள் என்பதனால் மட்டும்தானே அவர்கள் குறைகூறவில்லை என்பது உண்மை அல்லவா?” உண்மையில், களைப்புக்குள்ளானவர்கள் போல இந்தக் கட்டத்தின் மக்கள் ஓரளவுக்குத் தொய்வாக இருக்கிறார்கள். தேவனுடைய கிரியையைக் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை, ஆனால் தங்கள் சொந்த மாம்சத்துக்காக ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்வதைப் பற்றி மட்டுமே அக்கறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தானே, இல்லையா?

முந்தைய: அத்தியாயம் 36

அடுத்த: அத்தியாயம் 39

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக