அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிச்செல், அப்பொழுது நீ தேவனால் ஆதாயப்படுத்தப்படுவாய்

அந்தகாரத்தின் ஆதிக்கம் என்றால் என்ன? “அந்தகாரத்தின் ஆதிக்கம்” என்று அழைக்கப்படுவது: சாத்தானின் வஞ்சனை, சீர்கேடு, கட்டுகள் மற்றும் ஜனங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் ஆதிக்கமாகும்; சாத்தானின் ஆதிக்கம் என்பது மரணத்தின் நிழல் கொண்ட ஒரு ஆதிக்கம். சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழ் வாழ்பவர்கள் அனைவரும் அழிந்து போகும்படி தண்டிக்கப்படுகிறார்கள். தேவனிடத்தில் விசுவாசத்தைப் பெற்ற பின்பு அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து நீ எப்படித் தப்பித்துக் கொள்ள முடியும்? நீ தேவனிடத்தில் உண்மையாக ஜெபித்தவுடன், உன்னுடைய இருதயத்தை முழுவதுமாக அவரிடம் திருப்புகிறாய், அந்தச் சமயத்தில் உன்னுடைய இருதயம் தேவனுடைய ஆவியானவரால் உந்தப்படுகிறது. உன்னை முழுமையாக அவருக்குக் கொடுக்கும் விருப்பத்துடன் வளர்கிறாய், இந்த நேரத்தில், நீ அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்திருப்பாய். மனுஷன் செய்யும் அனைத்தும் தேவனைப் பிரியப்படுத்துவதாகவும் அவருடைய தேவைகளுக்கு ஏற்பவும் இருந்தால், அப்போது அவன் தேவனுடைய வார்த்தைகளுக்குள்ளும், அவருடைய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் வாழும் ஒருவனாகவும் இருப்பான். தேவனுடைய வார்த்தைகளை ஜனங்கள் நடைமுறைப்படுத்த முடியாத பட்சத்தில், அவர்கள் எப்போதும் அவரை முட்டாளாக்க முயற்சிப்பார்களானால், அவரிடத்தில் அக்கறையில்லாதபடி நடந்து கொண்டால், அவர் வாழ்கிறார் என்பதை நம்பவில்லை என்றால்—இவர்கள் அனைவரும் அந்தகார ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறவர்கள். தேவனுடைய இரட்சிப்பைப் பெறாத மனுஷர்கள் சாத்தானுடைய ஆளுகையின் கீழ் வாழ்கிறார்கள்; அதாவது, அவர்கள் அனைவரும் அந்தகார ஆதிக்கத்தின் கீழ் வாழ்கின்றனர். தேவனை விசுவாசிக்காதவர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கின்றனர். தேவன் வாழ்கிறார் என்று விசுவாசிக்கிறவர்கள் கூட, அவருடைய வெளிச்சத்தில் வாழ வேண்டும் என்ற அவசியமில்லை; ஏனென்றால், அவரை விசுவாசிக்கிறவர்கள் உண்மையில் அவருடைய வார்த்தைகளில் வாழ முடியாமலும், அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியாமலும் இருக்கலாம். மனுஷன் தேவனை விசுவாசிக்க மட்டுமே முடியும்; அவனுக்கு தேவனைப் பற்றிய அறிவு இல்லாததால், அவன் இன்னும் பழைய விதிகளுக்கு உட்பட்டு, ஜீவனற்ற வார்த்தைகளுக்கு மத்தியில், தேவனால் முழுமையாகச் சுத்திகரிக்கப்படாத, அவரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத இருண்ட மற்றும் நிச்சயமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். ஆகையால், தேவனை விசுவாசிக்காதவர்கள் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்று சொல்லாமலே தெரியும்போது, தேவனை விசுவாசிப்பவர்கள் கூட அதன் ஆதிக்கத்தின் கீழ் இருக்கக்கூடும்; ஏனென்றால், அவர்களிடத்தில் பரிசுத்த ஆவியானவருடைய கிரியை இல்லாமலிருக்கிறது. தேவனுடைய கிருபை அல்லது இரக்கத்தைப் பெறாதவர்கள் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் காண முடியாதவர்கள் அனைவரும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கின்றனர்; ஆகவே, பெரும்பாலான நேரத்தில், ஜனங்கள் தேவனுடைய கிருபையை வெறுமனே அனுபவிக்கிறார்கள்; ஆனால் இன்னும் அவரை அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு மனுஷன் தேவனை விசுவாசித்தும், அவன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தால், இந்த மனுஷனின் வாழ்வு அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது என்பதாகும். மேலும், தேவன் இருக்கிறார் என்று விசுவாசிக்காதவர்களைப் பற்றிக் குறிப்பிட என்ன தேவை இருக்கிறது?

தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அல்லது தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்டும், அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதவர்கள் அனைவரும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் ஜனங்களாவர். சத்தியத்தைத் தொடர்ந்து பின்பற்றுபவர்கள் மற்றும் தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடியவர்கள் மட்டுமே அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். மேலும் அவர்கள் மட்டுமே அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பார்கள். விடுவிக்கப்படாதவர்கள், குறிப்பிட்ட விஷயங்களால் எப்போதும் ஆட்கொள்ளப்படுபவர்கள், மற்றும் தங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்க முடியாதவர்கள் அனைவரும் சாத்தானுடைய கட்டின் கீழ், மரணத்தின் நிழலுக்குள் வாழ்பவர்களாவர். தங்கள் சொந்தக் கடமைகளில் உண்மையில்லாதவர்கள், தேவனுடைய கட்டளைக்கு உண்மையில்லாதவர்கள், சபையில் தங்கள் காரியங்களைச் செய்யத் தவறியவர்கள் அனைவரும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் ஜனங்களாவர். சபை வாழ்க்கையை வேண்டுமென்றே தொந்தரவு செய்பவர்கள், வேண்டுமென்றே தங்கள் சகோதர சகோதரிகளிடையே கருத்து வேறுபாட்டை விதைப்பவர்கள் அல்லது குழுக்களை உருவாக்குபவர்கள் சாத்தானின் கட்டுகளில் இன்னும் ஆழமாக அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்பவர்களாவர். தேவனுடன் வேண்டா வெறுப்பாக உறவு வைத்திருப்பவர்கள், எப்போதும் ஆடம்பரமான ஆசைகளைக் கொண்டவர்கள், எப்போதும் ஒரு லாபத்தைப் பெற விரும்புவோர், ஒருபோதும் தங்கள் மனநிலையில் மறுரூபத்தைப் பெற விரும்பாதவர்கள் அனைவரும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் ஜனங்களாவர். சத்தியத்தை நடைமுறைப்படுத்துவதில் எப்போதும் மந்தமானவர்களாகவும், ஒருபோதும் தீவிரமானவர்களாக இல்லாமலும், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முற்படாதவர்களும், தங்கள் மாம்சத்தை மட்டுமே திருப்திப்படுத்த முயற்சிப்பவர்கள் அனைவரும் மரணத்தினால் போர்த்தப்பட்டு, அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து வருபவர்களாவர். தேவனுக்காகக் கிரியை செய்யும் போது, சூது மற்றும் வஞ்சகத்தில் ஈடுபடுபவர்கள், சரியான முறையில் தேவனைக் கையாளாதவர்கள், தேவனை ஏமாற்றுபவர்கள், எப்போதும் தங்களுக்குத் தாங்களே திட்டமிடுவோர் அனைவரும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் ஜனங்களாவர். தேவனை உண்மையாக நேசிக்க முடியாதவர்கள், சத்தியத்தைப் பின்தொடராதவர்கள், தங்கள் மனநிலையை மாற்றுவதில் கவனம் செலுத்தாதவர்கள் அனைவரும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் ஜனங்களாவர்.

தேவனால் புகழப்பட விரும்பினால், முதலில் நீங்கள் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து தப்பித்து, உன்னுடைய இருதயத்தைத் திறந்து தேவனுக்கு நேராக அதை முழுவதுமாக திருப்ப வேண்டும். இப்போது நீ செய்கிற காரியங்களை தேவன் புகழ்வாரா? உன்னுடைய இருதயத்தை தேவனிடத்திற்குத் திருப்பியிருக்கிறாயா? நீ செய்திருக்கிற காரியங்கள் தேவன் உன்னிடம் எதிர்பார்த்ததாக இருக்கின்றனவா? அவை உண்மைக்கு ஏற்றதாக இருக்கின்றனவா? எல்லா நேரங்களிலும் உங்களைச் சோதித்துப் பார்த்து, தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்; உங்கள் இருதயத்தை முழுமையாக அவருக்கு முன்பாக வைத்து, அவரை உண்மையுடன் நேசிக்கவும், தேவனுக்காக உங்களையே பக்தியுடன் அர்ப்பணியுங்கள். இதைச் செய்கிறவர்கள் நிச்சயமாக தேவனால் புகழப்படுவார்கள். தேவனை விசுவாசிக்கிறவர்கள், இன்னும் சத்தியத்தைப் பின்பற்றாதவர்களாக இருப்பார்களானால், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க வழி இல்லை. தங்கள் வாழ்க்கையை நேர்மையுடன் வாழாதவர்கள், மற்றவர்களுக்கு முன்பாக ஒரு விதமாகவும், ஆனால் அவர்களின் முதுகுக்குப் பின்னால் வேறு விதமாகவும் நடந்துகொள்பவர்கள், அவர்களின் சாராம்சம் நயவஞ்சகமாகவும், தந்திரமாகவும், தேவனுக்கு நம்பிக்கைக்குரிய நபராக இல்லாமலும் இருக்கும் பட்சத்திலும், தாழ்மை, பொறுமை மற்றும் அன்பின் தோற்றத்தைத் தருபவர்கள்; இப்படிப்பட்ட அனைவரும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்பவர்களுடைய பொதுவான பிரதிநிதிகளாவர். அவர்கள் சர்ப்பத்தைப் போன்றவர்களே. தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமே தேவனை விசுவாசிக்கிறவர்கள், சுயநீதியுள்ளவர்கள், கர்வமுள்ளவர்கள், பகட்டாக நடந்துகொள்பவர்கள், தங்கள் சொந்த அந்தஸ்தைப் பாதுகாப்பவர்கள், இவர்கள் அனைவரும் சாத்தானை நேசிப்பவர்கள் மற்றும் சத்தியத்தை எதிர்ப்பவர்களாவர். இந்த ஜனங்கள் தேவனை எதிர்க்கிறார்கள், மற்றும் முற்றிலும் சாத்தானுக்குச் சொந்தமானவர்களாவர். தேவனுடைய பாரத்தைக் கண்டுகொள்ளாதவர்கள், முழு மனதுடன் தேவனுக்கு ஊழியம் செய்யாதவர்கள், எப்போதும் தங்கள் சுய நலன்களிலும், தங்கள் குடும்ப நலன்களிலும் அக்கறை கொண்டவர்கள், தேவனுக்காக தங்களை அர்ப்பணிக்கும்படி, எல்லாவற்றையும் கைவிட முடியாதவர்கள், அவருடைய வார்த்தைகளின்படி ஒருபோதும் வாழாதவர்கள், இவர்கள் அனைவரும், அவருடைய வார்த்தைகளுக்குப் புறம்பே உள்ளவர்களாவர். அத்தகையவர்கள் தேவனுடைய புகழைப் பெற முடியாது.

தேவன் மனுஷர்களைப் படைத்தபோது, அவர்கள் அவருடைய நிறைவை அனுபவித்து, அவரை உண்மையாக நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இருந்தது; இந்த வழியில், மனுஷர்கள் அவருடைய வெளிச்சத்தில் வாழ்வார்கள். இன்று, தேவனை நேசிக்க முடியாதவர்கள், அவருடைய பாரங்களில் கவனம் செலுத்தாதவர்கள், தங்கள் இருதயங்களை முழுமையாக அவருக்குக் கொடுக்க இயலாதவர்கள், அவருடைய இருதயத்தைத் தங்களுடையதாக எடுத்துக் கொள்ள இயலாதவர்கள், அவருடைய பாரங்களைத் தங்களுடையது என்று தோள்கொடுக்க முடியாதவர்கள்—தேவனுடைய வெளிச்சம் அத்தகைய மனுஷர்கள் மீது பிரகாசிக்கிறதில்லை. எனவே அவர்கள் அனைவரும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கின்றனர். அவர்கள் தேவனுடைய விருப்பத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு பாதையில் இருக்கிறார்கள்; மேலும் அவர்கள் செய்யும் எந்தவொரு விஷயத்திலும் சத்தியம் துளியளவும் இல்லை. அவர்கள் சாத்தானுடன் உளையான சேற்றில் புரளுகிறவர்கள்; இவர்கள் அனைவரும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் ஜனங்களாவர். நீ அடிக்கடி தேவனுடைய வார்த்தைகளைப் புசித்து, குடிக்க முடியுமானால், அவருடைய சித்தத்தைக் கவனித்து அவருடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவர முடியுமானால், நீ தேவனுக்குச் சொந்தமானவன், மற்றும் நீ அவருடைய வார்த்தைகளின்படி வாழ்கிற ஒரு நபர். சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்து தேவனுடைய வெளிச்சத்தில் வாழ நீ ஆயத்தமா? நீ தேவனுடைய வார்த்தைகளுக்குள் வாழ்ந்தால், பரிசுத்த ஆவியானவருக்கு அவருடைய கிரியையை நடப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்; நீ சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தால், பரிசுத்த ஆவியானவருக்கு அத்தகைய வாய்ப்பை வழங்க மாட்டாய். மனுஷர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் நடப்பிக்கிற கிரியை, அவர் அவர்கள் மீது பிரகாசிக்கச் செய்கிற ஒளி, அவர் அவர்களுக்குக் கொடுக்கும் நம்பிக்கை ஆகியவை ஒரு கணம் மட்டுமே நீடிக்கும்; ஜனங்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், கவனம் செலுத்தவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களைக் கடந்து சென்றுவிடும். மனுஷர்கள் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்ந்தால், பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இருப்பார், அவர்கள் மீது கிரியை செய்வார். மனுஷர்கள் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழவில்லை என்றால், அவர்கள் சாத்தானின் கட்டுகளில் வாழ்கிறார்கள். மனுஷர்கள் சீர்கெட்ட மனப்பான்மையுடன் வாழ்ந்தால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் சமுகம் அல்லது கிரியையை பெற்றிருப்பதில்லை. நீ தேவனுடைய வார்த்தைகளின் எல்லைகளுக்குள் வாழ்ந்தால், தேவன் எதிர்பார்க்கிற நிலையில் நீ வாழ்ந்தால், அப்பொழுது நீ அவருக்கே சொந்தமான ஒருவன், அவருடைய கிரியை உன் மீது நிகழும்; நீ தேவன் எதிர்பார்க்கிற எல்லைகளுக்குள் வாழாமல், மாறாக, சாத்தானின் ஆளுகையின் கீழ் வாழ்ந்தால், நீ சாத்தானின் சீர்கேட்டிற்குள் நிச்சயமாக வாழ்கிறாய். தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்வதன் மூலமும், உங்கள் இருதயத்தை அவருக்குக் கொடுப்பதன் மூலமும் மட்டுமே அவருடைய தேவைகளை உன்னால் பூர்த்தி செய்ய முடியும்; தேவனுடைய சொற்களை உன்னுடைய உயிர் வாழ்வதற்கான அடித்தளமாகவும், உன்னுடைய வாழ்க்கையின் யதார்த்தமாகவும் ஆக்க வேண்டும் என்று தேவன் கூறுவது போல் நீ கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நீ தேவனுக்குச் சொந்தமானவன். நீ உண்மையில் தேவனுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி பயிற்சி செய்தால், அவர் உன்னில் கிரியை செய்வார். மேலும் நீ அவருடைய முகத்தின் வெளிச்சத்தில், அவருடைய ஆசீர்வாதங்களின்கீழ் வாழ்வாய்; பரிசுத்த ஆவியானவர் நடப்பிக்கும் கிரியையை நீ புரிந்துகொண்டு, தேவனுடைய பிரசன்னத்தின் சந்தோஷத்தை உணருவாய்.

அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க, நீங்கள் முதலில் தேவனிடம் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும், மற்றும் சத்தியத்தைப் பின்தொடர இருதயத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் சரியான நிலையைக் கொண்டிருக்க முடியும். சரியான நிலையில் வாழ்வது அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான முன்நிபந்தனை ஆகும். சரியான நிலையைக் கொண்டிராமல் இருத்தல் என்பது, தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாக இல்லாமல் போவது, சத்தியத்தைத் தேட இருதயத்தில் ஆர்வம் காட்டாதது ஆகும். இப்படிப்பட்டவர்கள் அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து மனுஷன் தப்பிப்பதற்கான அடிப்படையே எனது வார்த்தைகள், என் வார்த்தைகளுக்கு ஏற்றபடி நடக்க முடியாதவர்கள் அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்ப முடியாது. தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்தல், தேவனுக்கு உண்மையுள்ள நிலையில் வாழ்தல், சத்தியத்தைத் தேடும் நிலையில் வாழ்தல், தேவனின் நிமித்தம் தன்னை உண்மையாக அர்ப்பணிக்கும் யதார்த்தத்தில் வாழ்தல், மற்றும் தேவனை உண்மையாக நேசிக்கும் நிலையில் வாழ்தல் ஆகியவற்றை சரியான நிலையில் வாழ்தல் எனலாம். இந்த நிலைகளிலும் இந்த யதார்த்தத்திற்குள்ளும் வாழ்பவர்கள் சத்தியத்தின் ஆழத்திற்குள் பிரவேசிக்கும்போது மெதுவாக மறுரூபமடைவார்கள், மேலும் கிரியை ஆழமாகச் செல்லும்போது அவர்கள் மாற்றமடைவார்கள்; இறுதியில், அவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவும், தேவனை உண்மையாக நேசிப்பவர்களாகவும் மாறுவார்கள். அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்தவர்கள் படிப்படியாக தேவனுடைய சித்தத்தைக் கேட்டறிந்துகொண்டு படிப்படியாக அதைப் புரிந்துகொண்டு, இறுதியில் தேவனின் நம்பிக்கைக்குரியவர்களாக மாறுவார்கள். அவர்கள் தேவனைப் பற்றி எந்த மாற்றுக் கருத்தையும் கொண்டிருப்பதில்லை, அவருக்கு எதிராகக் கலகம் செய்யவதுமில்லை, ஆனால், அதற்கு முன் அவர்கள் பெற்றிருந்த கருத்துக்களையும், கலகத்தனத்தையும் வெறுக்கிறார்கள், மேலும் தேவன் மீதான உண்மையான அன்பு அவர்களின் இருதயங்களில் எழுகிறது. அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க முடியாத ஜனங்கள் அனைவரும் மாம்சத்தினால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, கலகத்தால் நிறைந்தவர்களாவர்; அவர்களின் இருதயங்கள் மனுஷீக எண்ணங்கள் மற்றும் வாழ்க்கைக்கான தத்துவங்கள் மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த நோக்கங்கள் மற்றும் ஆழ்ந்த சிந்தனைகளால் நிரப்பப்பட்டுள்ளன. தேவன் எதிர்பார்ப்பது மனிதனிடமிருந்து ஒரு தனி அன்பு மட்டுமே; அவர் எதிர்பார்ப்பது என்னவென்றால், மனுஷன் அவருடைய வார்த்தைகளாலும், அவருக்காக அன்பு நிறைந்த இருதயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தைகளில் வாழ்வது, அவர்கள் தேட வேண்டியவற்றிற்காக அவருடைய வார்த்தைகளில் தேடுவது, தேவனை அவருடைய வார்த்தைகளின் நிமித்தம் நேசிப்பது, அவருடைய வார்த்தைகளுக்காக ஓடுவது, அவருடைய வார்த்தைகளுக்காக வாழ்வது—மனுஷன் அடைய முயற்சிக்க வேண்டிய குறிக்கோள்கள் இவையே. அனைத்தும் தேவனுடைய வார்த்தைகளின் மீது கட்டப்பட வேண்டும்; அப்போதுதான் மனுஷனால் தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். மனுஷன் தேவனுடைய வார்த்தைகளைத் தரித்துக்கொள்ளவில்லை என்றால், அவன் சாத்தானிடம் அகப்பட்டிருக்கும் ஒரு புழு தவிர வேறில்லை! இதை சீர்தூக்கிப்பாருங்கள்: தேவனுடைய வார்த்தை உனக்குள் எந்த அளவு வேரூன்றியுள்ளது? அவருடைய வார்த்தைகளின்படி நீ எந்த விஷயங்களில் வாழ்கிறாய்? எந்த விஷயங்களில் நீ அவற்றுக்கு ஏற்ப வாழவில்லை? தேவனுடைய வார்த்தைகள் உன்னை முழுமையாக ஆட்கொள்ளவில்லை என்றால், உன்னுடைய இருதயத்தை சரியாக ஆக்கிரமிப்பது வேறு எது? உன் அன்றாட வாழ்க்கையில், நீ சாத்தானால் கட்டுப்படுத்தப்படுகிறாயா, அல்லது தேவனுடைய வார்த்தைகளால் நீ நிறைந்திருக்கிறாயா? அவருடைய வார்த்தைகள் உன்னுடைய ஜெபங்களுக்கு ஆதாரமாக உள்ள அடித்தளமாக இருக்கிறதா? தேவனுடைய வார்த்தைகளின் பிரகாசம் மூலம் நீ உன்னுடைய எதிர்மறை நிலையிலிருந்து வெளியே வந்திருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகளை உன்னுடைய வாழ்வின் அடித்தளமாக எடுத்துக்கொள்ள, எல்லோரும் இதற்குள்ளாகவே நுழைதல் வேண்டும். அவருடைய வார்த்தைகள் உன்னுடைய வாழ்க்கையில் இல்லாவிட்டால், நீ அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறாய், நீ தேவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறாய், நீ அவரை எதிர்க்கிறாய், மற்றும் அவருடைய நாமத்தை கனவீனப்படுத்துகிறாய். இத்தகைய ஜனங்களுடைய தேவன் மீதான நம்பிக்கை, முற்றிலும் தீங்கு மற்றும் உபத்திரவமுமாய் இருக்கிறது. அவருடைய வார்த்தைகளுக்கு ஏற்றபடி உன்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு வாழ்ந்திருக்கிறாய்? அவருடைய வார்த்தைகளுக்கு ஏற்றபடி உன்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு வாழவில்லை? உன்னிடம் இருந்து தேவனுடைய எந்த வார்த்தை, எவ்வளவு உனக்குத் தேவைப்பட்டதோ அவ்வளவு உனக்குள் நிறைவேறியிருக்கிறதா? உன்னில் இழந்துபோனவை எவ்வளவு? இதுபோன்ற விஷயங்களை நீ கூர்ந்து கவனித்தாயா?

அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க, பரிசுத்த ஆவியானவரின் கிரியை மற்றும் மனுஷனின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பு இரண்டுமே தேவை. மனுஷன் சரியான பாதையில் இல்லை என்று நான் ஏன் சொல்கிறேன்? சரியான பாதையில் செல்லும் நபர்கள் முதலில் தங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்க முடியும். இது பிரவேசிப்பதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும் ஒரு பணியாகும், ஏனென்றால் மனித இனம் எப்போதும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது, மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானின் கட்டுகளின் கீழ் வாழ்ந்து வருகிறது. எனவே, இந்தப் பிரவேசத்தை வெறும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அடைய முடியாது. இந்தக் கேள்வியை நான் இன்று எழுப்பினேன், ஆகவே, மனுஷர்கள் தங்கள் சொந்த நிலையைப் பற்றிய உணர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்; அந்தகாரத்தின் ஆதிக்கம் என்ன என்பது, மற்றும் வெளிச்சத்தில் வாழ்வது என்றால் என்ன என்பதை மனிதனால் உணர முடிந்தவுடன், பிரவேசம் மிகவும் எளிதாகிறது. ஏனென்றால், நீ அதிலிருந்து தப்பிப்பதற்கு முன்பு சாத்தானின் ஆதிக்கம் என்ன என்பதை நீ அறிந்திருக்க வேண்டும்; அதற்குப் பிறகுதான் அதைத் தூக்கி எறிய உங்களுக்கு ஒரு வழி இருக்கும். அதன்பிறகு செய்ய வேண்டியது, அதுதான் மனுஷர்களின் சொந்தத் தொழில். நேர்மறையான பார்வையிலிருந்து எல்லாவற்றிலும் பிரவேசியுங்கள், ஒருபோதும் செயலற்ற முறையில் காத்திருக்க வேண்டாம். இந்த வழியில் மட்டுமே நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட முடியும்.

முந்தைய: மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு

அடுத்த: விசுவாசத்தில் ஒருவர் யதார்த்தத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும்—மதச்சடங்குகளில் ஈடுபடுவது விசுவாசமல்ல

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக