அத்தியாயம் 55

இயல்பான மனிதத்தன்மை என்பது ஜனம் கற்பனை செய்வது போல் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. மாறாக, அனைத்து மனிதர்கள், நிகழ்வுகள், மற்றும் பொருட்களின் பிணைப்பு, மற்றும் ஒருவரின் சுற்றுப்புறத்திலிருந்து எழும் துன்புறுத்தல்களை இதனால் தாண்டிச் செல்ல முடியும். அது எந்த இடத்திலும் அல்லது சூழ்நிலையிலும் என்னிடம் நெருங்கவும் என்னுடன் கூடி இருக்கவும் முடியும். மனிதர்களான நீங்கள் என் நோக்கங்களை எப்போதும் தவறாகப் பொருள் கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு இயல்பான மனிதத்தன்மையின்படி வாழ வேண்டும் என்று நான் சொல்லும்போது, நீங்கள் சுயக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, உங்களின் மாம்சத்தை அடக்குகிறீர்கள், ஆனால் உங்களின் ஆவிக்குள் கவனமாகத் தேடுவதில் நீங்கள் எந்தவொரு கவனத்தையும் செலுத்தவில்லை. நீ உன் வெளிப்புறத் தோற்றத்தில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறாய், நான் உனக்கு ஏற்படுத்தும் வெளிப்பாடுகள் மற்றும் தூண்டுதல்களைப் புறக்கணிக்கிறாய். நீ எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறாய்! மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய்! இது, நான் உன்னிடம் ஒப்படைத்ததை நிறைவேற்றுவதை நீ ஏதோ பெரிய சாதனையாகக் கருதுவதனால் இருக்குமோ? நீ முட்டாள்! ஆழமாக வேரூன்றுவதில் நீ கவனம் செலுத்துவதில்லை! “ஒரு மரத்தில் உள்ள ஒரு இலையாக இருக்க வேண்டாம், ஆனால் மரத்தின் வேராக இருக்கவும்”—என்பது தான் உண்மையில் உன் குறிக்கோளா? சிந்தனையற்றவன்! கவனக்குறைவானவன்! நீ சிறிதளவு ஆதாயங்களைப் பெற்றதாக எண்ணிய உடனேயே நீ திருப்தியடைகிறாய். என் சித்தத்தைக் குறித்து நீ எவ்வளவு குறைவாகக் கவனம் செலுத்துகிறாய்! இப்போதிருந்து, கவனத்தில் கொள்ளவும், செயலற்றவனாக இருக்க வேண்டாம், மற்றும் எதிர்மறையாக இருக்க வேண்டாம்! நீ ஊழியம் செய்யும்போது, அடிக்கடி நீ என்னிடம் நெருங்கி வா, மற்றும் என்னுடன் அதிகம் தொடர்பு கொள்: இது தான் உன்னுடைய ஒரே வழியாகும். உன்னை நீயே ஏற்கனவே மறுத்துவிட்டாய், உன் சொந்தக் குறைபாடுகளை அறிந்திருக்கிறாய், மற்றும் உன் சொந்தப் பலவீனங்களைத் தெரிந்து வைத்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். எனினும், அறிந்து கொள்வது மற்றும் போதாது. நீ என்னுடன் ஒத்துழைக்க வேண்டும், மற்றும் நீ என் நோக்கங்களைப் புரிந்துகொண்ட உடனேயே, அவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். என் பாரத்தின் மீது அக்கறை செலுத்தவும், அடங்கியிருக்கவும் இதுவே சிறந்த வழி ஆகும்.

நீ என்னை எப்படி நடத்தினாலும் பரவாயில்லை, உன்னிலும், அனைத்துப் பரிசுத்தவான்களிலும் என் சித்தத்தை நிறைவேற்ற நான் விரும்புகிறேன், மேலும், தேசம் முழுவதிலும் எந்தவொரு தடையுமின்றி இது மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது குறித்து முழுவதுமாக அறிந்து கொள்ளுங்கள்! இது என் ஆட்சிமுறை ஆணைகளைப் பற்றியது! நீ சிறிதும் பயப்படவில்லையா? உன்னுடைய சொந்தச் செயல்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நீ பயத்தில் நடுங்கவில்லையா? பரிசுத்தவான்கள் அனைவரின் மத்தியிலும், எனது நோக்கங்களை உணரக் கூடியவர்கள் எவரும் இல்லை. என் சித்தம் குறித்து உண்மையான அக்கறையுள்ள ஒரு நபராகத் தனித்து நிற்க நீ விரும்பவில்லையா? உனக்குத் தெரியுமா? என் சித்தம் குறித்து முழுமையான அக்கறையுடன் இருக்கும் திறன் கொண்ட ஜனக்குழுவைத் தேடுவது தான் தற்போது என் அவசரத் திட்டம் ஆகும். நீ அவர்களில் ஒருவனாக இருக்க விரும்பவில்லையா? எனக்காக உன்னை நீயே ஒப்புக் கொடுக்கவும், எனக்காக உன்னை அர்ப்பணிக்கவும் நீ விரும்பவில்லையா? சிறு விலையைக் கூடச் செலுத்த அல்லது மிகச்சிறிய முயற்சியைக் கூடச் செய்ய நீ தயாராக இல்லை! இப்படியே தொடர்ந்தால், எனது கடின முயற்சிகள் உங்கள் மீது வீணடிக்கப்படும். இப்போது நான் உனக்கு இதைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையா?

“எனக்காக மனமார ஒப்புக் கொடுப்பவர்களுக்கு, நான் நிச்சயமாக உன்னைப் பெரிதும் ஆசீர்வதிப்பேன்.” நீ பார்! இதை நான் உன்னிடம் பல முறை கூறியுள்ளேன், இருப்பினும், இன்னும் உன் குடும்பச் சூழ்நிலைகள் மற்றும் வெளிப்புறச் சூழலுடன் தொடர்பான பல சந்தேகங்கள் மற்றும் பயங்கள் உன்னிடம் உள்ளன. உனக்கு எது நல்லது என்று உண்மையில் உனக்குத் தெரியவில்லை! நேர்மையுள்ள, எளிமையான மற்றும் வெளிப்படையான ஜனங்களை மட்டும் தான் நான் பயன்படுத்துகிறேன். நான் உன்னைப் பயன்படுத்துவது குறித்து நீ மகிழ்ச்சியாகவும் மனமுவந்தும் இருக்கிறாய்—ஆனால் நீ ஏன் இன்னும் கவலையுடன் இருக்கிறாய்? இது, என் வார்த்தையானது உன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவே இல்லை என்பதாலா? நான் உன்னைப் பயன்படுத்துவதாகக் கூறினேன், எனினும், உன்னால் அதில் உறுதியான நம்பிக்கையுடன் இருக்க முடியவில்லை. நான் உன்னைக் கைவிட்டு விடுவேன் என்று நீ எப்போதும் சந்தேகப்பட்டு அஞ்சுகிறாய். உன் எண்ணங்கள் மிகவும் வேரூன்றியுள்ளன! நான் உன்னைப் பயன்படுத்துவதாகக் கூறும்போது, நான் உன்னைப் பயன்படுத்துகிறேன் என்பது அதன் அர்த்தமாகும். நீ ஏன் எப்போதும் சந்தேகத்துடன் இருக்கிறாய்? நான் போதுமான அளவு தெளிவாகப் பேசவில்லையா? நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானதாகும்; ஒரு பேச்சு கூடப் பொய்யானதல்ல. என் குமாரனே! என்னை விசுவாசி. என் சார்பில் உறுதியுடன் இரு, மற்றும் நான் நிச்சயமாக உன்னுடன் உறுதியுடன் இருப்பேன்!

முந்தைய: அத்தியாயம் 54

அடுத்த: அத்தியாயம் 56

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக