ஜெயங்கொள்ளுகிற கிரியையின் இரண்டாவது படியின் பலன்கள் எவ்வாறு அடையப்படுகின்றன
ஊழியம் செய்பவர்களின் கிரியையே ஜெயங்கொள்ளுகிற கிரியையின் முதல் படியாக இருந்தது. இன்று ஜெயங்கொள்ளுகிற கிரியையின் இரண்டாவது படியாக இருக்கிறது. ஜெயங்கொள்ளுகிற கிரியையில் பரிபூரணமாக்கப்படுதலைப் பற்றி ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது? இது எதிர்காலத்திற்கான ஒரு அடித்தளத்தை அமைப்பதாகும். இன்று ஜெயங்கொள்ளுகிற கிரியையின் இறுதிப் படியாக இருக்கிறது; மனிதகுலத்தைப் பரிபூரணப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வமான தொடக்கத்தைக் குறிக்கும் மகா உபத்திரவத்தை அனுபவிக்கும் காலம் அடுத்ததாக வரும். இப்போது முக்கியப் பிரச்சினை ஜெயங்கொள்ளுதலாகும், ஆனால் இப்போதுதான் பரிபூரணமடைதலுக்கான செயல்பாட்டின் முதல் கட்டத்தின் காலமாக இருக்கிறது. இந்த முதல் படியின் பலன் என்னவென்றால், ஜனங்களின் அறிவையும், கீழ்ப்படிதலையும் பரிபூரணப்படுத்துவதாகும், இது நிச்சயமாக, ஜெயங்கொள்ளுதலுக்கான கிரியைக்கு ஓர் அடித்தளத்தை அமைக்கிறது. நீ பரிபூரணமடைய வேண்டுமென்றால், எதிர்காலத்தின் உபத்திரவத்தின் மத்தியில் உன்னால் உறுதியாக நிற்க முடிய வேண்டும்; மேலும், அடுத்த கட்டக் கிரியையைப் பரப்புவதற்கு உன்னை முழுவதுமாகக் கொடுக்க வேண்டும்; இதுதான் பரிபூரணமாக்கப்படுதல் என்று அர்த்தமாகும், மேலும் ஜனங்கள் தேவனால் முற்றிலும் ஆதாயப்படுத்திக்கொள்ளப்படும் காலமும் இதுதான். இன்று நாம் ஜெயங்கொள்ளுதலைப் பற்றிப் பேசுகிறோம், இது பரிபூரணமாக்கப்படுவதைப் பற்றி பேசுவதற்குச் சமமாகும். ஆனால் இன்று செய்யப்படும் கிரியைகள் எதிர்காலத்தில் பரிபூரணப்படுவதற்கான அடித்தளமாகும்; பரிபூரணமடைய, ஜனங்கள் துன்பத்தை அனுபவிக்க வேண்டும், மேலும் இந்தத் துன்பத்தை அனுபவித்தல் ஜெயங்கொள்ளுதலை அதன் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஜனங்களுக்கு இன்றைய அடித்தளம் இல்லாதிருந்தால்—அவர்கள் முற்றிலும் ஜெயங்கொள்ளப்படவில்லை என்றால்—அடுத்த கட்டக் கிரியையின் போது அவர்கள் உறுதியாக நிற்பது கடினம். ஜெயங்கொள்ளுதல் மட்டுமே இறுதி இலக்கு அல்ல. இது சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கான சாட்சியின் ஒரு படி மட்டுமேயாகும். பரிபூரணமடைதலே இறுதி இலக்கு, மேலும் நீ பரிபூரணமடையவில்லை என்றால், நீ அகற்றப்படுவாய். துன்பத்தை எதிர்கொள்ளும்போதுதான், எதிர்காலத்தில் உன்னுடைய உண்மையான வளர்ச்சியைக் காண முடியும்; அதாவது, அப்போதுதான் தேவன் மீதான உன்னுடைய அன்பிற்கான தூய்மையின் அளவு தெளிவாகத் தெரியும். இன்று ஜனங்கள் சொல்வது இதுதான்: “தேவன் என்ன செய்தாலும் நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். எனவே தேவனுடைய மிகப்பெரிய வல்லமையையும் தேவனுடைய மனநிலையையும் நிரூபித்துக் காட்டுகிற ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்க நாம் விரும்புகிறோம். தேவன் நம் மீது தயையுள்ளவராக இருந்தாலும், நம்மை சபித்தாலும், அல்லது அவர் நம்மை நியாயந்தீர்த்தாலும், நாம் இன்னும் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்”. நீ இப்படிக் கூறுவது உன்னிடம் மிகக் குறைந்த அளவிலான அறிவு இருப்பதை மட்டுமே காட்டுகிறது, ஆனால் அத்தகைய அறிவை உண்மையில் பயன்படுத்த முடியுமா என்பது, இந்த அறிவு உண்மையானதா இல்லையா என்பதைப் பொறுத்தது. இன்று ஜனங்களுக்கு இதுபோன்ற நுண்ணறிவுகளும் அறிவும் உள்ளன என்பதே ஜெயங்கொள்ளுகிற கிரியைக்கான பலனாகும். நீ பரிபூரணமாக்கப்பட இயலுமா இயலாதா என்பதை, நீ துன்பங்களை எதிர்கொள்ளும் போது மட்டுமே காண முடியும், அந்த நேரத்தில் தேவனை நீ உன் இருதயத்திலிருந்து உண்மையாக நேசிக்கிறாயா என்பதைக் காண முடியும். உன்னுடைய அன்பு உண்மையிலேயே தூய்மையானதாக இருந்தால், நீ இவ்வாறு கூறுவாய்: “நாங்கள் பிரதிபலிப்புப் படலங்கள், நாங்கள் தேவனுடைய கரத்தில் உள்ள சிருஷ்டிகள்.” நீ புறஜாதி தேசங்களுக்குச் சுவிசேஷத்தைப் பரப்பும் போது, “நான் வெறுமனே ஊழியம் செய்கிறேன். நமக்குள் இருக்கும் சீர்கெட்ட மனநிலையைப் பயன்படுத்தி, தேவன் தம்முடைய நீதியான மனநிலையை நமக்குக் காண்பிப்பதற்காக இவை அனைத்தையும் சொல்லியிருக்கிறார்; அவர் அத்தகைய காரியங்களைச் சொல்லாவிட்டால், நம்மால் தேவனைக் கண்டிருக்கவோ, அவருடைய ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவோ, இவ்வளவு பெரிய இரட்சிப்பையும் அத்தகைய பெரிய ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கவோ முடிந்திருக்காது” என்று நீ சொல்கிறாய். உன்னிடம் உண்மையிலேயே இந்த அனுபவ அறிவு இருந்தால், அது போதுமானது. எவ்வாறாயினும், இன்று நீ கூறுவதில் பெரும்பாலானவை எந்த அறிவையும் கொண்டிருக்கவில்லை, மேலும் அவை அனைத்தும் வெற்று முழக்கங்கள் மட்டுமே: “நாங்கள் பிரதிபலிப்புப் படலங்களாகவும் ஊழியம் செய்பவர்களாகவும் இருக்கிறோம்; நாங்கள் ஜெயங்கொண்டவர்களாய் இருக்கவும், மற்றும் தேவனுக்கு உரத்த சத்தத்துடன் சாட்சி அளிக்க விரும்புகிறோம்….” வெறுமனே கூச்சலிடுவதால் நீங்கள் யதார்த்தமானவர்கள் என்று அர்த்தமல்ல, மேலும் நீ வளர்ச்சியைக் கொண்டிருக்கிறாய் என்று இது நிரூபிக்கவில்லை; நீ உண்மையான அறிவைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் உன்னுடைய அறிவு கட்டாயம் சோதிக்கப்பட வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் தேவன் வெளிப்படுத்திய இந்த வார்த்தைகளை நீ அதிகம் படிக்க வேண்டும், மேலும் உன் செயல்களை ஒப்பிட்டுப் பார்: நீ நல்ல, மெய்யாகவே ஒரு பிரதிபலிப்புப் படலம் என்பது முற்றிலும் உண்மை! இன்று உன் அறிவு எந்த அளவிற்கு இருக்கிறது? உன் யோசனைகள், உன் எண்ணங்கள், உன் நடத்தை, உன் வார்த்தைகள் மற்றும் செயல்கள்—இந்த வெளிப்பாடுகள் அனைத்தும் தேவனுடைய நீதிக்கும் பரிசுத்தத்திற்கும் ஒரு பிரதிபலிப்புப் படலமாகக் கருதப்படாதா? உங்கள் வெளிப்பாடுகள் தேவனுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட்ட சீர்கெட்ட மனநிலையின் வெளிப்பாடுகள் அல்லவா? உன் எண்ணங்கள் மற்றும் யோசனைகள், உன் உந்துதல்கள் மற்றும் உன்னில் வெளிப்படும் சீர்கேடு ஆகியவை தேவனுடைய நீதியான மனநிலையையும், அவருடைய பரிசுத்தத்தையும் காட்டுகின்றன. தேவன் கூட அசுத்த தேசத்தில் பிறந்தார், ஆனாலும் அவர் அசுத்தத்தால் மாசடையவில்லை. அவர் உங்களைப் போலவே அதே அசுத்த உலகில் வாழ்கிறார், ஆனால் அவர் பகுத்தறிவையும் உணர்வையும் கொண்டவராக இருக்கிறார், மேலும் அவர் அசுத்தத்தை வெறுக்கிறார். உன்னுடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் அசுத்தமான எதையும் நீ கண்டுபிடிக்க முடியாமல் போகலாம், ஆனால் அவரால் முடியும், அவற்றை அவர் உன்னிடம் சுட்டிக்காட்டுகிறார். உன்னுடைய பழைய விஷயங்கள்—அதாவது, உன் படிப்பறிவு இல்லாத, ஆழ்ந்த அறிவற்ற மற்றும் பகுத்தறிவற்ற, மற்றும் உன்னுடைய பின்மாற்றமடைந்த வாழ்க்கை முறைகள்—இன்றைய வெளிப்பாடுகளால் இப்போது வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன; தேவன் கிரியை செய்ய பூமிக்கு வருவதன் மூலம் மட்டுமே ஜனங்கள் அவருடைய பரிசுத்தத்தையும் நீதியுள்ள மனநிலையையும் பார்க்கிறார்கள். நீ புத்தியை அடையும்படிக்கு அவர் உன்னை நியாயந்தீர்க்கிறார் மற்றும் சிட்சிக்கிறார்; சில நேரங்களில், உன்னுடைய பேய்த்தனம் வெளிப்படுகிறது, அதை அவர் உனக்கு சுட்டிக்காட்டுகிறார். அவருடைய கையின் பின்புறத்தை அறிவது போல மனுஷனின் சாராம்சத்தை அவர் அறிவார். அவர் உங்கள் மத்தியில் வாழ்கிறார், அவர் உன்னைப் போலவே அதே உணவைச் சாப்பிடுகிறார், அதே சூழலில் அவர் வாழ்கிறார்—ஆனால் அப்படியிருந்தும், அவருக்கு இன்னும் அதிகம் தெரியும்; அவர் உன்னை அம்பலப்படுத்த முடியும் மற்றும் மனிதகுலத்தின் சீர்கெட்ட சாராம்சத்தைப் பார்க்க முடியும். மனுஷனுடைய வாழ்க்கைத் தத்துவங்கள், மாறுபாடு மற்றும் ஏமாற்றுகிற தன்மை ஆகிய இவைகளை விட அதிகமாக அவர் வெறுக்கத்தக்கது எதுவும் இல்லை. அவர் குறிப்பாக ஜனங்களின் மாம்சத் தொடர்புகளை வெறுக்கிறார். மனுஷனின் வாழ்க்கைத் தத்துவங்களில் அவர் பழக்கமில்லாதவராய் இருக்கலாம், ஆனால் ஜனங்கள் வெளிப்படுத்தும் சீர்கெட்ட மனநிலையை அவரால் தெளிவாகக் காண முடியும் மற்றும் வெளிப்படுத்த முடியும். அவர் மனுஷனுடன் பேசுவதற்கும், அவனுக்குப் போதிப்பதற்கும் இவற்றின் மூலம் கிரியை செய்கிறார், ஜனங்களை நியாயந்தீர்க்கவும், தம்முடைய நீதியுள்ள மற்றும் பரிசுத்தமான மனநிலையை வெளிப்படுத்தவும் இவற்றைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு ஜனங்கள் அவருடைய கிரியைக்கு பிரதிபலிப்புப் படலங்களாகிறார்கள். மாம்சமாகிய தேவனால் மட்டுமே மனுஷனின் சீர்கெட்ட மனநிலையையும், சாத்தானின் அனைத்து அவலட்சணமான முகங்களையும் வெளிப்படுத்த முடியும். அவர் உன்னைத் தண்டிக்காமல், அவருடைய நீதி மற்றும் பரிசுத்தத்திற்கான ஒரு பிரதிபலிப்புப் படலமாக உன்னைப் பயன்படுத்தினாலும், நீ வெட்கப்பட்டு, உன்னை மறைத்துக்கொள்ள இடமில்லாதிருக்கிறாய், ஏனென்றால் நீ மிகவும் அசுத்தமாய் இருக்கிறாய். மனுஷனில் வெளிப்படும் விஷயங்களைப் பயன்படுத்தி அவர் பேசுகிறார், இவை வெளிச்சத்திற்கு வரும்போதுதான் தேவன் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். அவர் ஜனங்களில் சிறிதளவு அசுத்தத்தையும் கவனிக்காமல் விட்டு விட மாட்டார், அவர்களின் இருதயங்களில் உள்ள அசுத்த எண்ணங்களைக் கூட விட மாட்டார்; ஜனங்களின் வார்த்தைகளும் செயல்களும் அவருடைய சித்தத்திற்கு முரணாக இருந்தால், அவர் அவர்களை மன்னிக்க மாட்டார். அவருடைய வார்த்தைகளில், மனுஷர்களின் அசுத்தத்திற்கு அல்லது வேறு எதற்கும் இடமில்லை—இவை அனைத்தும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். அப்போது மட்டுமே அவர் உண்மையில் மனுஷனைப் போல அல்ல என்பதை நீ காண்பாய். ஜனங்களிடம் சிறிதளவு அசுத்தம் இருந்தாலும், அவர் அவர்களை முற்றிலும் வெறுக்கிறார். ஜனங்கள் புரிந்து கொள்ள முடியாத நேரங்கள் கூட உள்ளன, “தேவனே, நீர் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்? மனுஷனின் பலவீனங்களை நீர் ஏன் கவனிப்பதில்லை? நீர் ஏன் ஜனங்களைக் கொஞ்சம் மன்னிக்கக் கூடாது? நீர் ஏன் மனுஷன் மீது அக்கறையில்லாதவராக இருக்கிறீர்? ஜனங்கள் எந்த அளவிற்கு சீர்கெட்டுக் காணப்படுகிறார்கள் என்பது உமக்குத் தெளிவாகத் தெரியும், எனவே, இன்னும் நீர் அவர்களை ஏன் இப்படி நடத்துகிறீர்?” என்று சொல்கிறார்கள். அவர் பாவத்தை வெறுக்கிறார், அவர் அதை அருவருக்கிறார், உன்னிடத்தில் கீழ்ப்படியாமையின் ஏதாவது ஒரு தடயம் இருந்தால் கூட அவர் குறிப்பாக வெறுப்படைகிறார். நீ ஒரு கலகத்தனமான மனநிலையை வெளிப்படுத்தும்போது, அவர் அதைப் பார்த்து மிகவும் வெறுப்படைகிறார்—அளவுக்கதிகமாக வெறுப்படைகிறார். இவற்றின் மூலம்தான் அவருடைய மனநிலையும் தேவன் என்னவாக இருக்கிறார் என்பதும் வெளிப்படுகிறது. நீ உன்னை அவருடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவர் மனுஷனைப் போலவே அதே உணவைச் புசிக்கிறார், அதே ஆடைகளை அணிகிறார், அவர்கள் செய்யும் அதே விஷயங்களை அனுபவிக்கிறார், அவர்களோடு கூட வாழ்கிறார் மற்றும் வசிக்கிறார், ஆனாலும் அவர் மனுஷனைப் போன்றவர் அல்ல. இது ஒரு பிரதிபலிப்புப் படலத்தின் முக்கியத்துவம் அல்லவா? இந்த மனித விஷயங்களினால் தான் தேவனுடைய வல்லமை காட்டப்படுகிறது; அந்தகாரமே ஒளியின் விலைமதிப்பற்ற இருப்பை அமைக்கிறது.
நிச்சயமாக, தேவன் உங்களை ஒரு பிரதிபலிப்புப் படலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மட்டும் மாற்றுவதில்லை. மாறாக, இந்தக் கிரியை பலனளிக்கும் போதுதான், மனுஷனின் கலகம் என்பது தேவனுடைய நீதியான மனநிலைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாய் இருக்கிறது என்பது நிரூபணமாகிறது, மேலும் நீங்கள் பிரதிபலிப்புப் படலங்கள் என்பதால் மட்டுமே தேவனுடைய நீதியான மனநிலையின் இயல்பான வெளிப்பாட்டை அறிய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் கலகத்தனத்தின் காரணமாக நீங்கள் நியாயந்தீர்க்கப்படுகிறீர்கள் மற்றும் சிட்சிக்கப்படுகிறீர்கள், ஆனால் உங்கள் கலகத்தனமே உங்களை பிரதிபலிப்புப் படலமாக ஆக்குகிறது, மேலும் உங்கள் கலகத்தனத்தின் காரணமாகவே, தேவன் அளிக்கும் மகத்தான கிருபையை நீங்கள் பெறுகிறீர்கள். உங்கள் கலகத்தனத்தனம் என்பது தேவனுடைய சர்வவல்லமைக்கும் ஞானத்திற்கும் ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்கிறது, மேலும் உங்கள் கலகத்தன்மையின் காரணமாகவே நீங்கள் இவ்வளவு பெரிய இரட்சிப்பையும் ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் என்னால் மீண்டும் மீண்டும் நியாயந்தீர்க்கப்பட்டிருந்தாலும், நீங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் மனுஷன் பெற்றிராத மிகப்பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்தக் கிரியை உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு “பிரதிபலிப்புப் படலமாக” இருப்பது உங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது: நீங்கள் பிரதிபலிப்புப் படலங்கள் என்பதால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும் இரட்சிப்பின் கிருபையைப் பெற்றிருக்கிறீர்கள், எனவே அத்தகைய பிரதிபலிப்புப் படலங்களாக இருப்பது மிக உயர்ந்த மதிப்புமிக்கதல்லவா? இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா? நீங்கள் தேவனைப் போலவே அதே பிரதேசத்தில், அதே அசுத்த தேசத்தில் வாழ்கிறீர்கள், எனவே நீங்கள் பிரதிபலிப்புப் படலங்களாக இருந்து, மிகப்பெரிய இரட்சிப்பைப் பெறுகிறீர்கள். தேவன் மாம்சமாக மாறதிருந்தால், யார் உங்களிடம் இரக்கம் காட்டியிருப்பார்கள், தாழ்ந்த ஜனங்களாகிய உங்களை யார் கவனித்திருந்திருப்பார்கள்? உங்கள் மீது யார் அக்கறை காட்டியிருந்திருப்பார்கள்? உங்கள் மத்தியில் கிரியை செய்யும்படி தேவன் மாம்சமாக மாறாதிருந்திருப்பாராயேனால், உங்களுக்கு முன்பிருந்தவர்கள் பெற்றிறாத இந்த இரட்சிப்பை நீங்கள் எப்போது பெற்றிருந்திருப்பீர்கள்? உங்கள் மீது அக்கறை கொள்வதற்கும், உங்கள் பாவங்களை நியாயந்தீர்ப்பதற்கும் நான் மாம்சமாக மாறாதிருந்தால், நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே பாதாளத்திற்குள் விழுந்திருக்கமாட்டீர்களா? நான் மாம்சமாகி, உங்கள் மத்தியில் என்னைத் தாழ்த்திக் கொள்ளாதிருந்தால், தேவனுடைய நீதியான மனநிலைக்கான பிரதிபலிப்புப் படலங்களாக இருக்க நீங்கள் எவ்வாறு தகுதியுடையவர்களாக இருந்திருக்கக் கூடும்? நீங்கள் மிகப்பெரிய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள உங்களைத் தகுதியாக்குவதற்காக, நான் மனித ரூபத்தை ஏற்றுக்கொண்டு, உங்கள் மத்தியில் வந்ததால், நீங்கள் பிரதிபலிப்புப் படலங்களாக இருக்கிறீர்கள் அல்லவா? நான் மாம்சமாகியிருப்பதால், நீங்கள் இந்த இரட்சிப்பைப் பெறவில்லையா? உங்களுடன் வாழும்படி தேவன் மாம்சமாகாதிருந்திருப்பாரானால், நீங்கள் மனித நரகத்தில் நாய்கள் மற்றும் பன்றிகளை விடத் தாழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் இன்னும் கண்டுபிடித்திருத்திருப்பீர்களா? மாம்சத்தில் என் கிரியைக்கு நீங்கள் பிரதிபலிப்புப் படலங்கள் என்பதால் நீங்கள் சிட்சிக்கப்படாமலும், நியாயந்தீர்க்கப்படாமலும் இருக்கிறீர்களா? பிரதிபலிப்புப் படலத்தின் கிரியையை விட வேறு எந்த கிரியையும் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதல்ல, ஏனென்றால் நீங்கள் பிரதிபலிப்புப் படலங்கள் என்பதால் நியாயத்தீர்ப்பில் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். பிரதிபலிப்புப் படலங்களாகச் செயல்படத் தகுதி அடைவது உங்கள் வாழ்க்கையின் ஆசீர்வாதம் என்பதை நீங்கள் உணரவில்லையா? நீங்கள் வெறுமனே ஒரு பிரதிபலிப்புப் படலத்தின் கிரியையைச் செய்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் முன்பு ஒருபோதும் பெற்றிராத மற்றும் கற்பனை கூட செய்து பார்க்காத, இத்தகைய இரட்சிப்பைப் பெறுகிறீர்கள். இன்று, உங்கள் கடமை ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்க வேண்டும் என்பதாகும், மேலும் உங்களுக்கான வெகுமதி எதிர்காலத்தில் நித்திய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதாகும். நீங்கள் பெறும் இரட்சிப்பு என்பது இன்றைய காலத்திற்கான சில இடைக்கால நுண்ணறிவு அல்லது சில கடந்து செல்லும் அறிவு அல்ல, ஆனால் ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது: நித்திய ஜீவனின் தொடர்ச்சியாக இருக்கிறது. உங்களை ஜெயங்கொள்வதற்காக நான் “பிரதிபலிப்புப் படலத்தைப்” பயன்படுத்தினாலும், உங்களை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காகவே இந்த இரட்சிப்பும் ஆசீர்வாதமும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; இது ஜெயங்கொள்வதற்காகவே, ஆனால் நான் உங்களைச் சிறப்பாக இரட்சிப்பதற்காகவும் இது இருக்கிறது. “பிரதிபலிப்புப் படலம்” என்பது உண்மைதான், ஆனால் நீங்கள் பிரதிபலிப்புப் படலங்களாக இருப்பதற்குக் காரணம் உங்கள் கலகத்தனம்தான், இதன் காரணமாகவே நீங்கள் இதுவரை யாரும் பெறாத ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறீர்கள். இன்று உங்களால் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது; நாளை நீங்கள் பெறுவீர்கள், அதற்கும் மேலாக, நீங்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, பிரதிபலிப்புப் படலம் மிக உயர்ந்த மதிப்புடையது அல்லவா? இன்றைய ஜெயங்கொள்ளுகிற கிரியையின் பலன்கள் பிரதிபலிப்புப் படலங்களாகச் செயல்படும் உங்கள் கலகத்தனமான மனநிலையின் மூலம் அடையப்படுகின்றன. அதாவது, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் இரண்டாவது நிகழ்வின் உச்சகட்டம் என்னவென்றால், உங்கள் அசுத்தத்தையும் கலகத்தனத்தையும் ஒரு பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்துவதே ஆகும், இது தேவனுடைய நீதியான மனநிலையைக் காண உங்களை அனுமதிக்கிறது. நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் இரண்டாவது சம்பவத்தின் போது நீங்கள் மீண்டும் ஒருமுறை கீழ்ப்படிந்தால், தேவனுடைய நீதியுள்ள மனநிலை முழுவதும் உங்களுக்கு வெளிப்படையாகக் காட்டப்படும். அதாவது, ஜெயங்கொள்ளுகிற கிரியையை நீங்கள் ஏற்றுக்கொள்வது முடிவடையும் போது, நீங்கள் ஒரு பிரதிபலிப்புப் படலத்தின் கடமையைச் செய்து முடித்ததாகக் கருதப்படும். உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனது நோக்கம் அல்ல. மாறாக, தேவனுடைய நீதியுள்ள மற்றும் இடறலுண்டாக்க இயலாத மனநிலையைக் காண்பிக்கும், ஜெயங்கொள்ளுகிற கிரியையின் முதல் நிகழ்வைச் செய்ய ஊழியம் செய்பவர்களாக உங்கள் பாத்திரத்தைப் பயன்படுத்துகிறேன். உங்கள் எதிர்ப்பின் மூலம், பிரதிபலிப்புப் படலமாக செயல்படுகிற கலகத்தனத்தின் மூலம், ஜெயங்கொள்ளுகிற கிரியையின் இரண்டாவது நிகழ்வின் பலன்கள் அடையப்படுகின்றன, இது உங்களுக்கு தேவனுடைய நீதியான மனநிலையை முழுமையாக வெளிப்படுத்துகிறது, முதல் நிகழ்வில் அது முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை, மற்றும் தேவனுடைய நீதியுள்ள மனநிலையை முழுவதுமாக உங்களுக்குக் காண்பிக்கிறது, அதாவது அவருடைய கிரியைக்கான ஞானம், அற்புதம் மற்றும் பிரதானமான பரிசுத்தத்தை உள்ளடக்கிய அவர் இவை அனைத்துமாக இருக்கிறார். இத்தகைய கிரியையின் பலனானது வெவ்வேறு காலகட்டங்களில் ஜெயங்கொள்ளுதலின் மூலமும், வெவ்வேறு அளவிலான நியாயத்தீர்ப்பின் மூலமும் பெறப்படுகிறது. நியாயத்தீர்ப்பு எந்த அளவு அதன் உச்சத்தை எட்டுகிறதோ, அந்த அளவு அது ஜனங்களின் கலக மனநிலையை வெளிப்படுத்தும், மேலும் ஜெயங்கொள்ளுதல் அவ்வளவு அதிகமாகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஜெயங்கொள்ளுகிற கிரியையின் போது தேவனின் நீதியுள்ள மனநிலையின் முழுமையானது வெளிப்படுத்தப்படுகிறது. ஜெயங்கொள்ளுகிற கிரியை இரண்டு படிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் வெவ்வேறு கட்டங்கள் மற்றும் அளவுகளைக் கொண்டுள்ளது, எனவே நிச்சயமாக, அது அடையக்கூடிய பலன்களும் வேறுபட்டவை. அதாவது, ஜனங்கள் தங்களை ஒப்புக்கொடுக்கும் அளவு இன்னும் ஆழமாக இருக்கும் என்பதாகும். இதற்குப் பிறகுதான் ஜனங்களை சரியான பாதையில் முழுமையாகக் கொண்டு வர முடியும்; ஜெயங்கொள்ளுதலின் அனைத்து கிரியையும் முடிந்த பின்னரே (நியாயத்தீர்ப்பின் இரண்டாவது நிகழ்வு அதன் இறுதி பலனை எட்டும்போது) ஜனங்கள் அதற்குமேல் நியாயந்தீர்க்கப்படுவதில்லை, மாறாக, வாழ்க்கையை அனுபவிக்கும் சரியான பாதையில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நியாயத்தீர்ப்பு என்பது ஜெயங்கொள்ளுதலுக்கான பிரதிநிதித்துவம், மற்றும் ஜெயங்கொள்ளுதல் என்பது நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் வடிவத்தை எடுக்கிறது.
தேவன் மிகவும் பின்தங்கிய மற்றும் அசுத்தமான இடத்தில் மாம்சமானார், இந்த வழியில்தான் தேவன் தம்முடைய பரிசுத்த மற்றும் நீதியுள்ள மனநிலையை முழுவதுமாக தெளிவாகக் காட்ட முடியும். எந்த வழியில் அவருடைய நீதியுள்ள மனநிலை வெளிப்படுத்தப்படுகிறது? அவர் மனுஷனுடைய பாவங்களை நியாயந்தீர்க்கும்போது, அவர் சாத்தானை நியாயந்தீர்க்கும்போது, அவர் பாவத்தை வெறுக்கும்போது, அவருக்கு விரோதமாகச் செயல்படும் மற்றும் கலகம் செய்யும் சத்துருக்களை அவர் வெறுக்கும்போது இது வெளிப்படுத்தப்படுகிறது. இன்று நான் பேசுகிற வார்த்தைகள் மனுஷனுடைய பாவங்களை நியாயந்தீர்ப்பதற்கும், மனுஷனுடைய அநீதியை நியாயந்தீர்ப்பதற்கும், மனுஷனுடைய கீழ்ப்படியாமையை சபிப்பதற்கும் ஆகும். மனுஷனுடைய மாறுபாடு மற்றும் வஞ்சகம், மனுஷனுடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள்—தேவனுடைய சித்தத்திற்கு முரணான அனைத்தும் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் மனுஷனுடைய எல்லா கீழ்ப்படியாமையும் பாவம் என்று கண்டனம் செய்யப்படுகிறது. அவருடைய வார்த்தைகள் நியாயத்தீர்ப்பின் கொள்கைகளைச் சுற்றி வருகின்றன; மனுஷனின் அநீதிக்கு நியாயத்தீர்ப்பு, மனுஷனின் கலகத்தனத்திற்கு சாபம் மற்றும் மனுஷனின் அசிங்கமான முகங்களை அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுதல் ஆகியவற்றை அவர் தமது சொந்த நீதியுள்ள மனநிலையை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்துகிறார். பரிசுத்தம் என்பது அவருடைய நீதியுள்ள மனநிலையின் பிரதிநிதித்துவமாகும், மேலும், உண்மையில் தேவனின் பரிசுத்தமானது அவருடைய நீதியுள்ள மனநிலையாகும். உங்கள் சீர்கெட்ட மனநிலை இன்றைய வார்த்தைகளின் சூழலாகும். நான் அவற்றைப் பேசுவதற்கும் நியாயத்தீர்ப்பளிப்பதற்கும் ஜெயங்கொள்ளுகிற கிரியையைச் செய்யவும் பயன்படுத்துகிறேன். இது மட்டுமே உண்மையான கிரியை, இது மட்டுமே தேவனுடைய பரிசுத்தத்தை முழுமையாக பிரகாசிக்கச் செய்கிறது. உன்னிடம் ஒரு சீர்கெட்ட மனநிலைக்கான எந்தத் தடயமும் இல்லை என்றால், தேவன் உன்னை நியாயந்தீர்க்கவும் மாட்டார், அவருடைய நீதியுள்ள மனநிலையை அவர் உனக்குக் காண்பிக்கவும் மாட்டார். நீ ஒரு சீர்கெட்ட மனநிலையைக் கொண்டிருப்பதால், தேவன் உன்னை அப்படியே விட்டு விடமாட்டார், இதன் மூலம்தான் அவருடைய பரிசுத்தம் காண்பிக்கப்படுகிறது. மனுஷனுடைய அசுத்தமும் கலகத்தனமும் மிகுதியாக இருப்பதை தேவன் கண்டும், அவர் உன்னுடன் பேசாமலும், நியாயத்தீர்ப்பளிக்காமலும், உன் அநீதிக்காக உன்னை சிட்சிக்காமலும் இருப்பாரானால், அவர் தேவன் அல்ல என்பதை இது நிரூபிக்கும், ஏனென்றால் அவருக்கு பாவத்தின் மீது வெறுப்பு இருந்திருக்காது; அவர் மனுஷனைப் போலவே அசுத்தமாய் இருப்பார். இன்று, உன்னுடைய அசுத்தத்தினால்தான் நான் உன்னை நியாயந்தீர்க்கிறேன், மற்றும் உன்னுடைய சீர்கேடு மற்றும் கலகத்தனத்தினால்தான் நான் உன்னை சிட்சிக்கிறேன். நான் என் வல்லமையை உங்களிடம் காட்டவில்லை அல்லது வேண்டுமென்றே உங்களை ஒடுக்கவில்லை; இந்த அசுத்த தேசத்தில் பிறந்த நீங்கள் அசுத்தத்தால் மிகவும் மோசமாக மாசுபட்டுள்ளதால் நான் இதைச் செய்கிறேன். அசுத்தமான இடங்களில் வாழும் பன்றிகளை ப் போல நீங்கள் வெறுமனே உங்கள் நேர்மையையும் மனிதத்தன்மையையும் இழந்துவிட்டீர்கள். உங்கள் அசுத்தம் மற்றும் சீர்கேட்டினால் தான் நீங்கள் நியாயந்தீர்க்கப்படுகிறீர்கள், நான் என் கோபத்தை உங்கள் மீது கட்டவிழ்த்து விடுகிறேன். இந்த வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு காரணமாகத்தான் நீங்கள் தேவன் நீதியுள்ள தேவன் என்பதையும், தேவன் பரிசுத்தமுள்ள தேவன் என்பதையும் காண முடிந்தது; அவருடைய பரிசுத்தம் மற்றும் நீதியின் காரணத்தினால்தான் அவர் உங்களை நியாயந்தீர்க்கிறார், அவருடைய கோபத்தை உங்கள்மீது கட்டவிழ்த்து விடுகிறார். மனிதகுலத்தின் கலகத்தன்மையை அவர் பார்ப்பதால்தான் அவர் தனது நீதியான மனநிலையை வெளிப்படுத்துகிறார். மனிதகுலத்தின் அசுத்தமும் சீர்கேடும் அவருடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தச் செய்கிறது, அவர் தேவன் தான் என்பதைக் காண்பிக்க இது போதுமானதாக இருக்கிறது, அவர் பரிசுத்தமும் புதுப்பொலிவும் உள்ளவர், ஆயினும் அவர் அசுத்த தேசத்தில் வாழ்கிறார். ஒரு நபர் மற்றவர்களுடன் சேற்றில் புரளுண்டால், அவரைப் பற்றிய பரிசுத்தமானது ஒன்றும் இல்லை, அவருக்கு நீதியுள்ள மனநிலையும் இல்லை, மேலும் அவர் மனிதனுடைய அக்கிரமத்தை நியாயந்தீர்ப்பதற்கு தகுதியுள்ளவர் அல்ல, மனிதனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றவும் அவர் தகுதியற்றவர். ஒருவருக்கொருவர் சமமான நிலையில் அசுத்தமானவர்களாக இருக்கின்றபோது எவ்வாறு ஜனங்கள் தங்களைப்போலவே உள்ள பிறரை நியாயந்தீர்ப்பதற்குத் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்? பரிசுத்த தேவன் ஒருவரால் மட்டுமே முழு மனிதகுலத்தையும் நியாயந்தீர்க்க முடியும். மனிதனின் பாவங்களை மனிதன் எவ்வாறு நியாயந்தீர்க்க முடியும்? மனிதனின் பாவங்களை மனிதன் எவ்வாறு பார்க்க முடியும், இந்தப் பாவங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க மனிதன் எவ்வாறு தகுதி பெற முடியும்? மனிதனின் பாவங்களை நியாயந்தீர்க்க தேவன் தகுதியற்றவராக இருப்பாரானால், அவர் எப்படி நீதியுள்ள தேவனாக இருக்க முடியும்? ஜனங்கள் சீர்கேடான மனநிலையை வெளிப்படுத்துவதால் தான், தேவன் அவர்களை நியாயந்தீர்க்கும் வகையில் பேசுகிறார், அப்போதுதான் அவர் பரிசுத்தமான தேவன் என்பதை அவர்களால் பார்க்க முடியும். மனிதனை அவனுடைய பாவங்களுக்காக அவர் தீர்ப்பளித்து, தண்டிக்கும்போது, மனிதனின் பாவங்களை அம்பலப்படுத்துகையில், எந்தவொரு நபரோ அல்லது காரியமோ இந்தத் தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது; அசுத்தமானவை அனைத்தும் அவரால் நியாயந்தீர்க்கப்படுகின்றன, இவ்வாறு தான் அவருடைய மனநிலை நீதியானது என்று வெளிப்படுகிறது. அது இல்லையெனில், நீங்கள் பெயர் மற்றும் உண்மை இரண்டிலும் பிரதிபலிப்புப்படலங்கள் என்று எப்படி கூற முடியும்?
இஸ்ரவேலில் செய்யப்பட்ட கிரியைகளுக்கும் இன்றைய கிரியைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இஸ்ரவேலர்களின் வாழ்க்கையை யேகோவா வழிநடத்தினார், மேலும் அதிக அளவில் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இருந்ததில்லை, ஏனென்றால் அந்த நேரத்தில் ஜனங்கள் உலகத்தைப் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொண்டனர் மற்றும் அதிக சீர்கேடான மனநிலையைக் கொண்டிருக்கவில்லை. அப்பொழுது, இஸ்ரவேலர் யேகோவாவுக்கு முழுமனதுடன் கீழ்ப்படிந்தனர். பலிபீடங்களைக் கட்டும்படி அவர் சொன்னபோது, அவர்கள் விரைவாகப் பலிபீடங்களைக் கட்டினார்கள்; ஆசாரியர்களுக்குரிய வஸ்திரங்களை அணியும்படி அவர் சொன்னபோது, அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். அந்த நாட்களில், யேகோவா ஓர் ஆட்டு மந்தையை மேய்ப்பவனைப் போல ஒரு மேய்ப்பராக இருந்தார், மேய்ப்பரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் மந்தையைப் போல, அவர்கள் பசும்புல் மேய்ச்சலை அடைந்தனர்; அவர்கள் எப்படிப் புசித்து, உடை அணிந்து, வசித்தனர் மற்றும் பயணம் செய்தனரோ, அவ்வாறுதான் யேகோவா அவர்களின் வாழ்க்கையை வழிநடத்தினார். அது தேவனின் மனநிலையை வெளிப்படுத்துகிற நேரமாக இருக்கவில்லை; ஏனென்றால், அந்தக் காலத்தில்தான் மனிதகுலம் புதிதாகப் பிறந்திருந்தது; கலகக்காரர்களாகவும் விரோதமூட்டுபவர்களாகவும் இருந்தவர்கள் மிகக் குறைவு, மனுஷர்களின் மத்தியில் அதிக அளவு அசுத்தம் இல்லை, எனவே ஜனங்கள் தேவனின் மனநிலைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாகச் செயல்பட முடியவில்லை. அசுத்தமான தேசத்திலிருந்து வரும் ஜனங்கள் மூலம்தான் தேவனுடைய பரிசுத்தம் காட்டப்படுகிறது; இன்று, அவர் இந்த அசுத்தமான தேசத்தின் ஜனங்களால் வெளிப்படுத்தப்படுகிற அசுத்தத்தின் நிமித்தம் அவர் நியாயந்தீர்க்கிறார், இவ்வாறு நியாயத்தீர்ப்பின் மத்தியில் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார். அவர் ஏன் நியாயத்தீர்ப்பளிக்கிறார்? அவர் பாவத்தை வெறுப்பதால் அவரால் நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளைப் பேச முடிகிறது; மனிதகுலத்தின் கலகத்தை அவர் வெறுக்கவில்லையெனில் அவர் எப்படி மிகவும் கோபப்படுவார்? அவருக்குள் எந்த வெறுப்பும் இல்லை, முரண்பாடும் இல்லை, அவர் ஜனங்களின் கலகத்தைக் கண்டுகொள்ளவில்லையெனில், அது அவர் மனுஷனைப் போல அசுத்தமானவர் என்பதை நிரூபிக்கும். அவர் அசுத்தத்தை வெறுக்கிறபடியினாலும், அவர் வெறுக்கிற விஷயங்கள் அவரிடத்தில் இல்லை என்பதாலும், அவரால் மனுஷனை நியாயந்தீர்க்கவும் சிட்சிக்கவும் முடியும். அவரிடத்தில் எதிர்ப்பும் கலகத்தனமும் இருந்திருந்தால், விரோதமும் கலகமும் கொண்டவர்களை அவர் வெறுத்திருக்க மாட்டார். கடைசி நாட்களின் கிரியைகள் இஸ்ரவேலில் நடந்து முடிந்திருந்தால், அதில் எந்த அர்த்தமும் இருந்திருக்காது. எல்லாவற்றிலும் இருண்ட மற்றும் மிகவும் பின்தங்கிய இடமான சீனாவில் கடைசி நாட்களின் கிரியைகள் ஏன் செய்யப்படுகின்றன? அவருடைய பரிசுத்தத்தையும் நீதியையும் காண்பிப்பதற்காகவே. சுருக்கமாகச் சொன்னால், இருண்ட இடத்தில்தான், தேவனுடைய பரிசுத்தத்தை இன்னும் தெளிவாகக் காட்ட முடியும். உண்மையில், இவை அனைத்தும் தேவனின் கிரியைக்காகவே செய்யப்படுகின்றன. உங்கள் அசுத்தத்தாலும், கலகத்தனத்தாலும் முன்னதாகவே காட்டப்பட்டுள்ளபடி, தேவன் உங்கள் மத்தியில் நிற்க வானத்திலிருந்து இறங்கியிருக்கிறார் என்பதை இன்றுதான் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள், இப்போதுதான் நீங்கள் தேவனை அறிந்திருக்கிறீர்கள். இது மிகப் பெரிய உயர்வு அல்லவா? உண்மையில், நீங்கள் சீனாவில் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கூட்ட ஜனங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டு தேவனுடைய கிருபையை அனுபவிப்பதாலும், மேலும் இவ்வளவு பெரிய கிருபையை அனுபவிக்க நீங்கள் தகுதியற்றவர்கள் என்பதாலும், இவை அனைத்தும் உங்களுடைய மிக உயர்ந்த மேன்மை என்பதை இது நிரூபிக்கிறது. தேவன் உங்களிடத்தில் தோன்றியிருக்கிறார், அவருடைய பரிசுத்த மனநிலையை முழுவதுமாக உங்களுக்குக் காட்டியுள்ளார், அவை எல்லாவற்றையும் அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், மேலும் நீங்கள் அனுபவிக்கக்கூடிய எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கும்படி செய்திருக்கிறார். தேவனின் நீதியுள்ள மனநிலையை நீங்கள் ருசித்திருப்பது மட்டுமல்லாமல், இன்னும் அதிகமாக, தேவனின் இரட்சிப்பையும், தேவனின் மீட்பையும், தேவனின் குறைவற்ற, எல்லையற்ற அன்பையும் நீங்கள் ருசித்திருக்கிறீர்கள். எல்லாவற்றிலும் அசுத்தமான நீங்கள் இவ்வளவு பெரிய கிருபையை அனுபவித்திருக்கிறீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா? இது தேவன் உங்களை உயர்த்துவதல்லவா? ஜனங்களாகிய நீங்கள் அனைவரிலும் மிகத் தாழ்ந்த நிலைகளை உடையவர்கள்; இவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை அனுபவிக்க நீங்கள் இயல்பாகவே தகுதியற்றவர்கள், ஆனாலும் தேவன் உன்னை உயர்த்துவதன் மூலம் ஒரு விதிவிலக்கை உண்டாக்கியுள்ளார். உனக்கு வெட்கமில்லையா? நீ உன் கடமையைச் செய்ய இயலாது என்றால், நீ இறுதியில் உன்னைப் பற்றி வெட்கப்படுவாய், மேலும் உன்னை நீயே தண்டித்துக்கொள்வாய். இன்று, நீ சிட்சிக்கப்படவுமில்லை, நீ தண்டிக்கப்படவும் இல்லை என்றால்; உன் மாம்சம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்—ஆனால் இறுதியில், இந்த வார்த்தைகள் உன்னை வெட்கப்படுத்தும். இன்றுவரை, நான் யாரையும் வெளிப்படையாகத் சிட்சித்ததில்லை; என் வார்த்தைகள் கடுமையாக இருக்கலாம், ஆனால் நான் ஜனங்களிடம் எவ்வாறு அப்படி செயல்படக்கூடும்? நான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறேன், அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன், மற்றும் அவர்களுக்கு நினைவூட்டுகிறேன். உங்களை இரட்சிப்பதற்கே தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் நான் இதைச் செய்யவில்லை. உண்மையிலேயே, நீங்கள் என் சித்தத்தைப் புரிந்து கொள்ளவில்லையா? நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அதினால் ஏவப்பட வேண்டும். இப்போதுதான் அநேக ஜனங்கள் புரிந்துகொள்கிறார்கள். இது ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருப்பதற்கான ஆசீர்வாதம் அல்லவா? ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருப்பது என்பது மிகவும் ஆசீர்வாதமான விஷயம் அல்லவா? இறுதியில், நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசித்தம்பண்ணும்படி போகிற போது, நீங்கள் இதைச் சொல்வீர்கள்: “நாங்கள் பொதுவான பிரதிபலிப்புப் படலங்கள்.” அவர்கள் உங்களிடம் கேட்பார்கள், “நீங்கள் ஒரு பொதுவான பிரதிபலிப்புப் படலங்கள் என்பதன் அர்த்தம் என்ன?” நீங்கள் கூறுவீர்கள்: “நாங்கள் தேவனுடைய கிரியைக்கும் அவருடைய மகத்தான வல்லமைக்கும் பிரதிபலிப்புப் படலங்களாக இருக்கிறோம். தேவனுடைய நீதியுள்ள மனநிலை முழுதும் நம் கலகத்தனத்தால் வெளிச்சத்திற்கு வருகிறது; நாங்கள் கடைசி நாட்களில் தேவனுடைய கிரியைக்கான ஊழிய வஸ்துகள், நாங்கள் அவருடைய கிரியையின் பின் இணைப்புகள் மற்றும் அதற்கான கருவிகள்.” அவர்கள் அதைக் கேட்கும்போது, சதி செய்வார்கள். அடுத்து, நீ இவ்வாறு கூறுவாய்: “தேவன் முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் முடித்ததற்கும், எல்லா மனுஷர்கள் மீதும் அவர் ஜெயங்கொண்டதற்கும் நாங்கள் உதாரணங்கள் மற்றும் மாதிரிகளாக இருக்கிறோம். நாங்கள் பரிசுத்தமானவர்களாக இருந்தாலும், அசுத்தமானவர்களாக இருந்தாலும், மொத்தத்தில், உங்களை விட நாங்கள் இன்னும் பாக்கியவான்கள், ஏனென்றால் நாங்கள் தேவனைக் கண்டிருக்கிறோம், அவர் நம்மை ஜெயங்கொள்ளச் செய்கிற வாய்ப்பின் மூலம், தேவனின் மகத்தான வல்லமை காட்டப்படுகிறது; நாம் அசுத்தமானவர்களாகவும் சீர்கெட்டவர்களாகவும் இருப்பதால் மட்டுமே அவருடைய நீதியான மனநிலை செயல்படுத்தப்பட்டுள்ளது. கடைசி நாட்களில் தேவனுடைய கிரியைக்கு நீங்கள் சாட்சியளிக்க முடியுமா? நீங்கள் தகுதி அடையவில்லை! இது தேவன் நம்மை மேன்மைப்படுத்துவதைத் தவிர வேறில்லை! நாம் கர்வமுள்ளவர்களாக இல்லாவிட்டாலும், நாம் பெருமிதத்துடன் தேவனைத் துதிக்கலாம், ஏனென்றால் இவ்வளவு பெரிய வாக்குத்தத்தத்தை யாராலும் சுதந்தரிக்க முடியாது, மேலும் இத்தகைய பெரிய ஆசீர்வாதத்தை யாரும் அனுபவிக்க முடியாது. தேவனின் நிர்வாகத்தின் போது, மிகவும் அசுத்தமானவர்களாகிய நாங்கள் பிரதிபலிப்புப் படலங்களாகச் செயல்பட முடியும் என்பதால் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக உணர்கிறோம்.” அவர்கள், “உதாரணங்கள் மற்றும் மாதிரிகள் என்றால் என்ன?” என்று கேட்கும்போது நீங்கள், “நாங்கள் மனிதகுலத்தின் மிகவும் கலகக்காரர், அசுத்தமானவர்கள்; நாங்கள் சாத்தானால் மிகவும் ஆழமாக சீர்கெட்டுப்போய் இருக்கிறோம், நாங்கள் மாம்சத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் மற்றும் கீழானவர்கள். சாத்தானால் பயன்படுத்தப்பட்டவர்களுக்கு நாங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். இன்று, ஜெயங்கொள்ளப்படும் மனுஷர்கள் மத்தியில் முதன்மையானவர்களாக நாங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம், மேலும் தேவனின் நீதியுள்ள மனநிலையைக் கண்டிருக்கிறோம், அவருடைய வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்திருக்கிறோம்; நாங்கள் அதிகமான ஜனங்களை ஜெயங்கொள்ளப்படுவதற்கு பயன்படுத்தப்படுகிறோம், ஆகவே நாங்கள் மனிதகுலத்தில் ஜெயங்கொள்ளப்பட்டவர்களுக்கு உதாரணங்கள் மற்றும் மாதிரிகளாக இருக்கிறோம்” என்று கூறுகிறீர்கள். இந்த வார்த்தைகளை விட சிறந்த சாட்சிகள் எதுவும் இல்லை, மேலும் இதுவே உங்களது சிறந்த அனுபவம்.