அத்தியாயம் 7

மேற்கத்திய கிளைகளில் உள்ள அனைவரும் என்னுடைய சத்தத்தைக் கேட்க வேண்டும்:

கடந்த காலத்தில், நீங்கள் எனக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தீர்களா? எனது சிறந்த அறிவுரைகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? உங்கள் நம்பிக்கைகள் யதார்த்தமானவையா, அவை தெளிவற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இல்லையா? மனுஷரின் விசுவாசம், மனுஷரின் அன்பு, மனுஷரின் நம்பிக்கை—இவை என்னிடமிருந்து வெளிப்படுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை, என்னால் வழங்கப்படுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை. என் ஜனங்களே, நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்கும்போது, என் சித்தத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? நீங்கள் என் இருதயத்தைப் பார்க்கிறீர்களா? கடந்த காலங்களில், நீங்கள் ஊழியப் பாதையில் செல்கையில், நீங்கள் ஏற்றத்தாழ்வுகள், முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள், மற்றும் நீங்கள் கீழே விழும் அபாயம் இருந்த சந்தர்ப்பங்களை, மேலும் எனக்குத் துரோகஞ்செய்யும் சந்தர்ப்பங்களை நீங்கள் சந்தித்தீர்கள் என்ற உண்மை இருந்தபோதிலும், ஒவ்வொரு தருணத்திலும் நான் உங்களைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிஷந்தோறும் நான் உங்களை அழைக்கவும் மீட்கவும் தொடர்ந்து என் சத்தத்தை உச்சரித்துக் கொண்டிருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? அநேக முறை, நீங்கள் சாத்தானின் வலைகளில் விழுந்துள்ளீர்கள்; அநேக முறை, நீங்கள் மனுக்குலத்தின் கண்ணிகளில் அகப்பட்டுள்ளீர்கள்; அநேக முறை நீங்கள் உங்களை விடுவித்துக்கொள்ள தவறவிட்டுள்ளீர்கள், ஒன்றுக்கொன்று முடிவில்லா வாதத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். உங்கள் இருதயங்கள் எங்கும் காணப்படாத நிலையில், அநேக முறை, உங்கள் சரீரங்கள் என் வீட்டில் இருந்துள்ளன. ஆயினும்கூட, அநேக முறை நான் உங்களை ஆதரிக்க என் காக்கும் கரத்தை நீட்டியுள்ளேன், மேலும் அநேக முறை நான் உங்களிடையே கருணையின் தானியங்களை எறிந்துள்ளேன். அநேக முறை துன்பத்திற்குப் பிறகான உங்களது துயரத்தின் பார்வையை என்னால் தாங்க முடியாமல் போயுள்ளது; அநேக முறை…. உங்களுக்கு இது தெரியுமா?

ஆனாலும், இன்று, என் அரவணைப்பினால் நீங்கள் கடைசியில் எல்லா சிரமங்களையும் ஜெயித்துள்ளீர்கள், உங்களுடன் இணைந்து நான் களிகூறுகிறேன்; இதுவே என் ஞானத்தின் படிகமாக்கல். ஆயினும்கூட, இதை நன்றாக நினைவில் வையுங்கள்! நீங்கள் பலமாக இருந்தபோது, யார் விழுந்துள்ளார்கள்? பலவீனமான தருணங்களைக் கொண்டிருக்காமலே, பலமாகவே இருந்துகொண்டிருக்கிறவர் யார்? மனுஷரிடையே, என்னிடமிருந்து வராத எந்த ஆசீர்வாதத்தையும் அனுபவித்திருக்கிறவர் யார்? என்னிடமிருந்து வராத எந்த துரதிர்ஷ்டத்தையும் அனுபவித்திருக்கிறவர் யார்? என்னை நேசிப்பவர்கள் அனைவரும் ஆசியை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்க முடியுமா? யோபு என்னை நேசிக்கத் தவறியதால், அதற்குப் பதிலாக என்னை எதிர்ப்பதைத் தேர்ந்தெடுத்ததால் அவனுக்குத் துரதிர்ஷ்டங்கள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? பவுல் என்னை உண்மையாக நேசிக்க முடிந்ததால்தான் என் பிரசன்னத்தில் விசுவாசத்துடன் எனக்கு ஊழியம் செய்திருப்பானோ? நீங்கள் என் சாட்சியத்தை உறுதியாகப் பிடித்திருந்தாலும், அசுத்தங்களால் கலக்கப்படாத பசும்பொன் போன்ற சாட்சியத்தை உங்களில் யாராவது கொடுக்க முடியுமா? மனுஷர் உண்மையான விசுவாசத்திற்குத் திறனுள்ளவர்களா? உங்கள் சாட்சியம் எனக்கு இன்பத்தைத் தருகிறது என்பது உங்கள் “விசுவாசத்துடன்” முரண்படாது, ஏனென்றால் நான் யாரிடமிருந்தும் அதிகம் எதிர்பார்க்கவில்லை. எனது திட்டத்தின் பின்னால் உள்ள அசல் நோக்கத்தின்படி பார்த்தால், நீங்கள் அனைவரும் “குறைபாடுள்ள பொருட்கள்” ஆக இருப்பீர்கள், எதிர்பார்க்குமளவிற்கு இருக்க மாட்டீர்கள். “கருணையின் தானியங்களை வார்ப்பது” பற்றி நான் உங்களிடம் சொன்னதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு அல்லவா? இதில் என் இரட்சிப்பை நீங்கள் காண்கிறீர்களா?

நீங்கள் அனைவரும் திரும்பிப் பார்த்து நினைவுகூர வேண்டும்: என் வீட்டிற்குத் திரும்பியதிலிருந்து, உங்கள் லாபங்கள் அல்லது இழப்புகள் பற்றி ஏதும் யோசிக்காமல், பேதுரு செய்த விதத்தில் உங்களில் யாராவது என்னை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் வேதாகமத்தின் மேலோட்டமான பகுதிகளைப் பார்த்துள்ளீர்கள், ஆனால் நீங்கள் அதன் சாரத்தை மனதில் கொண்டிருக்கிறீர்களா? எனவே, நீ இன்னும் உன் “மூலதனத்தைப்” பிடித்துக் கொண்டிருக்கிறாய், உண்மையிலேயே உன்னை விடுவிக்க மறுக்கிறாய். நான் ஓர் உரையைச் சொல்லும்போது, நான் உங்களிடம் நேருக்கு நேர் பேசும்போது, நான் வெளிப்படுத்தும் ஜீவ வார்த்தைகளைப் பெறுவதற்காக உங்களது மூடிய சுருள்களை யார் கீழே போட்டிருக்கிறார்கள்? நீங்கள் என் வார்த்தைகளை மதிப்பதும் இல்லை, அவற்றை நீங்கள் சிந்தையில் வைப்பதுமில்லை. மாறாக, உங்கள் சொந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உங்கள் எதிரிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இயந்திர துப்பாக்கியைப் போல அவற்றைப் பயன்படுத்துகிறீர்கள்; என்னை அறிந்து கொள்வதற்காக நீங்கள் என் நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ள சிறிதளவும் முயற்சிக்கவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் மற்றொருவர் முன்பாக ஆயுதத்தைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்; நீங்கள் அனைவரும் “தன்னலமற்றவர்கள்”, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் “மற்றவர்களுக்காக யோசிக்கிறீர்கள்”. இது நேற்று நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதன் துல்லியமான கணிப்பு இல்லையா? மற்றும் இன்று? உங்கள் “விசுவாசம்” ஒரு சில புள்ளிகள் அதிகரித்துள்ளது, மேலும் நீங்கள் அனைவரும் இன்னும் கொஞ்சம் அனுபவமுள்ளவர்களாகவும், இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்; இதன் காரணமாக, என்னைப் பற்றிய உங்கள் “பயம்” ஓரளவு அதிகரித்துள்ளது, யாரும் “இலகுவாகச் செயல்படவில்லை.” நீங்கள் ஏன் இந்த நிரந்தர செயலறு நிலையில் இருக்கிறீர்கள்? நேர்மறையான அம்சங்கள் உங்களில் ஒருபோதும் காணப்படாதது ஏன்? ஓ, என் ஜனமே! கடந்த காலம் எப்போதோ முடிந்துவிட்டது; இனியும் நீங்கள் அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கலாகாது. நேற்று உறுதியாக நின்றதால், இன்று நீ உன் நேர்மையான விசுவாசத்தை எனக்குத் தர வேண்டும்; மேலும், நாளை நீ எனக்கு நல்ல சாட்சி கொடுக்க வேண்டும், மேலும் எதிர்காலத்தில் நீ என் ஆசீர்வாதத்தைப் பெறுவாய். இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் உங்கள் முன் இல்லை என்றாலும், என் ஆவி நிச்சயமாக உங்களுக்குக் கிருபையைத் தரும். நீங்கள் என் ஆசீர்வாதங்களைப் பொக்கிஷமாகக் கருதி, அவற்றை நம்பி, உங்களை அறிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அவற்றை உங்கள் மூலதனமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; மாறாக, உங்களிடம் இல்லாததை நிரப்ப என் சொற்களைப் பயன்படுத்துங்கள், மேலும் இதிலிருந்து உங்கள் நேர்மறையான கூறுகளைப் பெறுவீர்கள். இதுவே நான் உங்களிடம் ஒப்படைக்கும் செய்தி!

பிப்ரவரி 28, 1992

முந்தைய: அத்தியாயம் 6

அடுத்த: அத்தியாயம் 8

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக