பின்னுரை
இந்த வார்த்தைகள் தேவனுடைய வெளிப்படுத்தல்களின் முழுமையைக் கொண்டிராவிட்டாலும், ஜனங்கள் தேவனை அறிதல் மற்றும் மனநிலையில் ஒரு மாற்றத்துக்கு உட்படுதல் ஆகிய நோக்கங்களை அடைவதற்கு இவை போதுமானவை ஆகும். சீனாவின் முக்கிய நிலத்தில் தேவனுடைய கிரியை முடிந்துவிட்டதனால், அவர் சொல்ல வேண்டிய எல்லா வார்த்தைகளையும் சொல்லி முடித்துவிட்டதாகவும், புதிதாகச் சொல்ல அவரிடம் ஒன்றும் இருக்க சாத்தியம் இல்லை என்றும், இதனால் இந்த வார்த்தைகளையே தேவனால் பேச முடியும் என்பதையே காட்டுகிறது என்றும் சிலர் ஒருவேளை நினக்கலாம். மேலும், ராஜ்யத்தின் காலத்தில் தேவனுடைய எல்லா வெளிப்பாடுகளையும் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை கொண்டிருக்கிறது என்றும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளுவது என்பது தேவனின் எல்லாவற்றையும் பெற்றுகொள்வதற்குச் சமமானது அல்லது இந்தப் புத்தகம் வேதாகமம் செய்தது போல் மனுக்குலத்தை எதிர்காலத்துக்குள் வழிநடத்திச் செல்லும் என்றும் நம்புகிறவர்கள் சிலர் இருக்கின்றனர். இப்படிப்பட்ட பார்வைகளை வைத்திருப்பவர்கள் சிறுபான்மையாக இருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் ஜனங்கள் எப்போதும் தேவனுக்கு மேல் வரம்புகளைத் திணிக்க விரும்புகிறார்கள். அவர்கள் யாவரும் தேவன் சர்வவல்லமையுள்ளவர் என்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர் என்றும் அறிவித்தாலும், தேவனை ஒரு நோக்கெல்லைக்குள் வரையறுப்பதை அவர்களுடைய சுபாவம் அவர்களுக்கு எளிதாக்குகிறது. ஒவ்வொருவரும் தேவனை அறிகிறார்கள், ஆனால் அதேசமயத்தில் ஒவ்வொருவரும் அவரை எதிர்த்து ஓர் எல்லைக்குள் வரையறுக்கிறார்கள்.
தேவனின் ராஜ்ய கால கிரியை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அக்காலத்தில் அவரைப் பின்பற்றியவர்களை நோக்கி மட்டுமே இந்தப் புத்தகத்தில் உள்ள உரைகள் பேசப்பட்டிருக்கின்றன, மேலும் அவை அவரது தற்போதைய மனுவுருவெடுத்தலின் போது வெளிப்படுத்தப்பட்டவைகளின் ஒரு பகுதி மட்டுமே ஆகும்; அவை தேவனின் எல்லாவற்றையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. மேலும், இந்த மனுவுருவெடுத்தலின் போது தேவன் செய்யப்போகும் எல்லாக் கிரியைகளையும் இது உள்ளடக்குகிறது என்று சொல்ல முடியாது. பல்வேறு இனங்களையும் பின்புலங்களையும் கொண்ட ஜனங்களை நோக்கி தேவன் தம் வார்த்தைகளைப் பேசுவார். அவர் முழு மனுகுலத்தையும் ஜெயங்கொண்டு பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவார். இது இப்படி இருக்க, தமது வார்த்தைகளின் இதுபோன்ற ஒரு சிறு பகுதியை மட்டும் வெளிப்படுத்திய பின் அவர் எப்படி எல்லாவற்றையும் முடித்துக்கொள்வார்? அவரது கிரியை வெவ்வேறு கால அளவுகளாகவும் வெவ்வேறு கட்டங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன; அவர் தமது திட்டத்தின் படி கிரியை செய்கிறார் மேலும் அவரது படிநிலைகளுக்கு ஏற்ப தமது வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார். மனுஷன் எவ்வாறு தேவனின் சர்வவல்லமையையும் ஞானத்தையும் அளப்பது சாத்தியமாகும். நான் இங்கு விளக்க விரும்பும் உண்மை இதுவாகும்: தேவன் என்னவாக இருக்கிறார் என்ன கொண்டிருக்கிறார் என்பது நித்தியமாய் வற்றாததும் முடிவற்றதும் ஆகும். தேவனே ஜீவனுக்கும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறார்; சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றால் அவரை அளந்தறிய முடியாது. கடைசியாக, நான் அனைவருக்கும் தொடர்ந்து ஞாபகப்படுத்த வேண்டும்: புத்தகங்களில், வார்த்தைகளில் அல்லது அவரது கடந்தகால பேச்சுக்களில் இனி தேவனை ஒருபோதும் மட்டுப்படுத்தாதீர்கள். தேவனுடைய கிரியையின் தன்மையை விளக்க புதிது என்ற ஒரே ஒரு வார்த்தைதான் இருக்கிறது. அவர் பழைய பாதைகளைப் பின்பற்றவோ தம்முடைய கிரியையை மீண்டும் செய்யவோ விரும்புவதில்லை; மேலும், ஒரு குறிப்பிட்ட நோக்கெல்லைக்குள் அவரை மட்டுப்படுத்துவதன் மூலம் ஜனங்கள் அவரை ஆராதிப்பதை அவர் விரும்புவதில்லை. இதுவே தேவனின் மனநிலை.