அத்தியாயம் 49

ஒன்றிணைந்து ஊழியம் செய்வதற்கு, ஒருவன் ஆற்றலுடனும் சரியாகவும், தெளிவாகவும் ஒன்றிணைய வேண்டும். மேலும், ஒருவன் உற்சாகத்தையும், பெலத்தையும் பெற்றிருக்க வேண்டும், மேலும் தன்னம்பிக்கையால் நிரம்பியிருக்க வேண்டும், அதனால் மற்றவர்கள், அவர்களுக்கு வழங்கப்படுவதைப் பார்க்கும்போது, அவர்கள் நிறைவாக இருப்பார்கள். எனக்கு ஊழியம் செய்வதானால், நீ என் நோக்கத்திற்கு ஏற்ப ஊழியம் செய்ய வேண்டும், என் இருதயத்திற்கு இணங்குவது மட்டுமல்லாமல், மேலும் அதிகமாக எனது நோக்கங்களை நிறைவேற்றவும் வேண்டும், அதனால் நான் உன்னிடத்தில் நிறைவேற்றுவதன் மூலம் திருப்தி அடைகிறேன். உன்னுடைய வாழ்க்கையை என் வார்த்தையால் நிரப்பு, உன்னுடைய பேச்சை எனது வல்லமையால் நிரப்பு—இதைத்தான் நான் உன்னிடம் கேட்டுக் கொள்கிறேன். உன்னுடைய சொந்த விருப்பங்களைப் பின்பற்றுவது என் சாயலை வெளிப்படுத்துகிறதா? அது என் இருதயத்தைத் திருப்திப்படுத்துமா? எனது நோக்கங்களை உண்மையாக கவனித்திருக்கிற ஒருவனா நீ? என் இருதயத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள முயற்சித்திருப்பவனா நீ? நீ உண்மையிலேயே உன்னை எனக்கு அர்ப்பணித்திருக்கிறாயா? நீ உண்மையிலேயே உன்னை எனக்காக ஒப்புக் கொடுத்திருக்கிறாயா? என் வார்த்தைகளை நீ சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா?

ஒருவன் ஒவ்வொரு அம்சத்திலும் ஞானத்தை உபயோகப்படுத்த வேண்டும் மற்றும் எனது நேர்த்தியான பாதையில் நடக்க ஞானத்தை உபயோகப்படுத்த வேண்டும். என் வார்த்தையின்படி செயல்படுபவர்கள் எல்லோரை விடவும் ஞானமுள்ளவர்களாய் இருக்கிறார்கள், என் வார்த்தையின்படி செயல்படுபவர்கள் மிகவும் கீழ்ப்படிந்தவர்களாய் இருக்கிறார்கள். நான் சொல்வது என்னவென்றால், நீ என்னுடன் விவாதிக்கவோ அல்லது என்னுடன் தர்க்கம் செய்ய முயற்சிக்கவோ தேவையில்லை. நான் சொல்வதெல்லாம், உன்னை மனதில் வைத்துத்தான் சொல்கிறேன் (நான் கண்டிப்பானவராக இருந்தாலும் சரி, மென்மையானவராக இருந்தாலும் சரி). நீ கீழ்ப்படிதலில் கவனம் செலுத்தினால் அதுவே நலமாக இருக்கும், மேலும் இதுவே உண்மையான ஞானத்திற்கான வழியாகும் (மேலும் இது தேவனுடைய நியாயத்தீர்ப்பு உன் மீது வருவதைத் தடுப்பதற்கான வழியாகும்). இன்று, என் வீட்டில், என் முகத்திற்கு முன்பாக பண்பாக நடந்து கொண்டு, என் முதுகுக்குப் பின்னால் வேறு விஷயங்களைச் சொல்லாதே. நீ நடைமுறையானவனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நீ வனப்புள்ள சொற்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. நடைமுறையில் இருப்பவர்களுக்கு அனைத்தும் இருக்கிறது. நடைமுறையில் இல்லாதவர்களுக்கோ ஒன்றும் இருப்பதில்லை. அவர்களின் சரீரங்கள் கூட அவர்களுடன் இல்லாத நிலைக்குத் திரும்பும், ஏனென்றால், நடைமுறை இல்லாமல், வெறுமை மட்டுமே காணப்படுகிறது; வேறு எந்த விளக்கமும் இல்லை.

தேவன் மீதான உங்களது விசுவாசத்தில், நீங்கள் ஆர்வத்துடன் இருக்கவும், நீங்கள் எதை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம் அல்லது இழந்து போகலாம் என்பதில் சிந்தை வைக்காமலும் அல்லது நீங்கள் பெற்றிருக்கிற அனைத்தையும் பற்றிச் சிந்திக்காமலும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் உங்கள் கால்களை மெய்யான வழியில் மட்டுமே வைக்க நாட வேண்டும், யாராலும் ஆளப்படவோ அல்லது யாராலும் கட்டுப்படுத்தப்படவோ கூடாது. இதுவே திருச்சபையின் தூணாக இருப்பதையும், ராஜ்யத்தில் ஜெயங்கொண்டவனாக இருப்பதையும் குறிக்கிறது; அப்படிச் செய்யவில்லையெனில், நீங்கள் என் முன் வாழத் தகுதியற்றவர்கள் என்பது தான் அர்த்தமாகும்.

வெவ்வேறு சூழ்நிலைகளில், என்னுடன் நெருக்கமாக இருப்பதற்கான வழியும் வேறுபட்டதாக இருக்கிறது. சிலர் எனக்கு முன்பாக அழகான வார்த்தைகளைச் சொல்லவும் பக்தியுடன் நடந்து கொள்ளவும் விரும்புகிறார்கள். இருப்பினும், திரைக்குப் பின்னால், அவர்கள் முழுவதும் சீர்குலைந்து காணப்படுகின்றனர், மேலும் எனது வார்த்தைகள் அவர்களுக்குள் இல்லாதிருக்கின்றன. அவர்கள் அருவருப்பானவர்களும் எரிச்சலூட்டுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்; அவர்கள் யாரையாவது பக்திவிருத்தி அடையச் செய்ய முடியும் அல்லது யாருக்காவது வழங்க முடியும் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. நீங்கள் என்னுடன் அதிக நெருக்கத்தையோ அல்லது ஐக்கியத்தையோ கொண்டிருக்க முடியாத காரணத்தினால் மட்டுமே நீங்கள் என் இருதயத்தைக் கருத்தில் கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறீர்கள். என்னை நீங்கள் உங்களுக்காகத் தொடர்ந்து கவலைப்படவும், உங்களுக்காகத் தொடர்ந்து உழைக்கவும் செய்கிறீர்கள்.

முந்தைய: அத்தியாயம் 48

அடுத்த: அத்தியாயம் 50

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக