அத்தியாயம் 65

என் வார்த்தைகள் எப்போதும் உங்களுடைய பாதிப்புகளைக் குத்திக் காண்பிக்கின்றன, அதாவது உங்களுடைய அபாயகரமான பெலவீனங்களை அவை சுட்டிக்காட்டுகின்றன; இல்லையெனில் நீங்கள் இன்னும் செய்ய வேண்டியதைத் தாமதப்படுத்திக் கொண்டு, இப்போது எந்தக் காலம் என்பதைப் பற்றி கூட அறியாமல் இருப்பீர்கள். இதை அறிந்து கொள்ளுங்கள்! உங்களை இரட்சிக்க நான் அன்பின் வழியைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டாலும், நான் ஒப்புதல் அளித்த காரியங்களை நிச்சயமாக நான் செய்து முடிப்பேன், எந்தத் தவறும் அறவே செய்ய மாட்டேன். நீதியுள்ள சர்வவல்லமையுள்ள தேவனாகிய நான் ஏதாவது தவறு செய்ய முடியுமா? அது மனிதக் கருத்து அல்லவா? எனக்குச் சொல்லுங்கள்: நான் செய்யும் மற்றும் சொல்லும் அனைத்தும் உங்களுக்கு உதவி செய்யும் பொருட்டல்லவா? சிலர் தாழ்மையுடன், “ஓ தேவனே! நீர் செய்யும் அனைத்தும் எங்களுக்காகத்தான், ஆனால் உம்முடன் இணைந்து எப்படிச் செயல்படுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று சொல்கின்றனர். எத்தகைய அறியாமை! என்னுடன் எப்படி ஒத்துழைப்பது என்று தெரியாது என்று சொல்லும் அளவிற்குக் கூட நீங்கள் செல்கிறீர்கள்! இவையெல்லாம் வெட்கக்கேடான பொய்கள்! இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் வெளிப்படுத்தியிருக்க, உண்மையில், ஏன் நீங்கள் மீண்டும் மீண்டும் மாம்சத்தைக் கருத்தில் கொள்கிறீர்கள்? உங்கள் வார்த்தைகள் நன்றாகத் தெரிகின்றன, ஆனால் நீங்கள் எளிதாகவும் இனிமையாகவும் செயல்படுவதில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இன்று உங்களிடமிருந்து நான் அதிகம் கேட்கவுமில்லை, என்னுடைய கோரிக்கைகள் உங்களுடைய புரிதலைத் தாண்டியும் இல்லை; மாறாக அவை மனிதர்களால் அடையக் கூடியவையாக இருக்கின்றன. நான் உங்களை மிகக்குறைவாக மதிப்பிடவில்லை. மனிதர்களுடைய திறன்களின் அளவு எனக்குத் தெரியாதா? அதைக் குறித்த முழுமையான புரிதல் எனக்கு உள்ளது.

என் வார்த்தைகள் தொடர்ந்து உங்களுக்கு அறிவூட்டுகின்றன, ஆனாலும் உங்கள் இருதயங்கள் மிகவும் கடினமடைந்துள்ளன, மேலும் என்னுடைய சித்தத்தை உங்களுடைய ஆவிகளுக்குள் உங்களால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்குச் சொல்லுங்கள்: எத்தனை முறை உணவு, உடை அல்லது உங்கள் தோற்றத்தின் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக, உங்களுடைய உள்ளான வாழ்க்கைகளின் மேல் கவனத்தைச் செலுத்துங்கள் என்று உங்களுக்கு நினைவூட்டியிருக்கிறேன்? நீங்கள் கேட்கவே மாட்டீர்கள். நான் பேசுவதற்கே சலித்துப் போய் விட்டேன். நீங்கள் இப்படி உணர்ச்சியற்றவர்களாய் மாறி விட்டீர்களா? நீங்கள் முற்றிலும் புத்தியில்லாதவர்களா? என் வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டிருக்க முடியுமா? நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா? என் குமாரர்களே! என்னுடைய அக்கறையான நோக்கங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்தவுடன், அதற்குமேல் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது, எல்லா காரியங்களும் உங்களுக்கு வழங்கப்படும். இப்போது அந்த காரியங்களில் கவனம் செலுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. என்னுடைய ராஜ்யம் முழுமையாக உணரப்பட்டுள்ளது, மேலும் அது பகிரங்கமாக இந்த உலகத்திற்கு இறங்கி வந்து விட்டது; இது என்னுடைய நியாயத்தீர்ப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முழுமையாக வந்து விட்டது என்பதைக் குறிக்கிறது. நீங்கள் அதை அனுபவித்திருக்கிறீர்களா? உங்களை நியாயந்தீர்க்க எனக்கு மனமில்லை, ஆனால் நீங்கள் என்னுடைய இருதயத்தை அறவே கருத்தில் கொள்ளவில்லை. இரக்கமற்ற நியாயத்தீர்ப்புக்கு மாறாக, என்னுடைய அன்பான கவனிப்பையும், பாதுகாப்பையும் நீங்கள் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். நீங்கள் ஒருவேளை நியாயத்தீர்ப்படைய வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படி இல்லையென்றால், நீங்கள் ஏன் அடிக்கடி என்னிடம் நெருங்கி வருவதில்லை, என்னுடன் ஐக்கியம் கொள்வதில்லை, என்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை? நீங்கள் என்னை மிகவும் அன்பற்று நடத்துகிறீர்கள், ஆனாலும் சாத்தான் உனக்கு யோசனைகளைத் தருகிறபோது, நீ மிக உற்சாகமாக உணர்கிறாய், அவை உன் சொந்தச் சித்தத்துடன் ஒத்திருப்பதாக நினைத்துக் கொள்கிறாய், ஆனாலும் நீ செய்வது எதுவுமே எனக்காக அல்ல. எப்போதும் என்னை இப்படி கொடூரமாக நடத்தவே விரும்புகிறீர்களா?

நான் உனக்குக் கொடுக்க விரும்பவில்லை என்பதல்ல, ஆனால் நீங்கள் கிரயத்தைச் செலுத்தத் தயாராக இல்லை. அப்படியே நீங்கள் எதுவும் இல்லாமல் வெறுங்கையுடன் இருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவருடைய கிரியை எவ்வளவு விரைவாக வளர்ச்சியடைகிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என் இதயம் பதட்டத்துடன் எரிவதை நீங்கள் காணவில்லையா? நீங்கள் என்னுடன் ஒத்துழைக்கும்படி நான் உங்களிடம் கேட்கிறேன், ஆனால் நீங்கள் விருப்பமின்றி இருக்கிறீர்கள். எல்லாவிதமான பேரழிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும்; எல்லா நாடுகளும், எல்லா இடங்களும் பேரிடர்களை அனுபவிக்கும்: கொள்ளைநோய், பஞ்சம், வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. இந்தப் பேரழிவுகள் ஏதோ ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும் நடப்பதில்லை, அவை ஓரிரு நாட்களுக்குள் முடிவடைவதுமில்லை; மாறாக அவை இன்னும் அதிகதிகமான பகுதிகளுக்கு விரிவடைந்து, மேலும் மேலும் கடுமையானதாகிவிடும். இந்த நேரத்தில் எல்லா விதமான பூச்சிகளால் உண்டாகும் கொள்ளை நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பும், நரமாமிசத்தை உண்ணும் நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நிகழும். இதுவே எல்லா தேசங்கள் மற்றும் ஜனங்கள் மீதான என்னுடைய நியாயத்தீர்ப்பாகும். என் குமாரர்களே! நீங்கள் பேரழிவுகளின் வேதனையையோ கஷ்டத்தையோ அனுபவிக்கக்கூடாது! நீங்கள் விரைவில் முதிர்ச்சியடைந்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக, என் தோள்களின் மேல் உள்ள பாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும். என் விருப்பத்தை நீங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை? இன்னும் வருங்காலக் கிரியை மேலும் மேலும் கடினமாய் மாறும். நானே கஷ்டப்பட்டுக் கிரியை செய்யும்படியாய், வேறெதையும் நான் செய்யாதபடி என்னை விட்டுவிட, நீங்கள் இவ்வளவு கடின இருதயங்களுடன் இருக்கிறீர்களா? நான் இதை இன்னும் தெளிவாகக் கூறுகிறேன்: தங்கள் வாழ்க்கை முதிர்ச்சியடைந்தவர்கள் அடைக்கலம் அடைவார்கள், வேதனையையோ கஷ்டத்தையோ அனுபவிக்க மாட்டார்கள்; யாருடைய வாழ்க்கை முதிர்ச்சி அடையவில்லையோ அவர்கள் வேதனையையும், தீங்கையும் அனுபவிக்க வேண்டும். என்னுடைய வார்த்தைகள் மிகத்தெளிவாக உள்ளன, அப்படித்தானே?

ஒவ்வொருவரும் என்னுடைய பரிசுத்த நாமத்தை அறிந்து கொள்ளும்படி, என்னை அறிந்து கொள்ளும்படி, என்னுடைய நாமம் எல்லாத் திசைகளிலும், எல்லா இடங்களுக்கும் சென்றடைய வேண்டும். அமெரிக்கா, ஜப்பான், கனடா, சிங்கப்பூர், சோவியத் யூனியன், மக்கா மற்றும் பிற தேசங்களில் உள்ள அனைத்துத் தரப்பு ஜனங்களும் உடனடியாக சீனாவுக்குள் திரண்டு, உண்மையான வழியைத் தேடுவார்கள். என்னுடைய நாமம் ஏற்கனவே அவர்களுக்கு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள காரியங்கள் என்னவென்றால், நீங்கள் சீக்கிரமாக முதிர்ச்சி அடைய வேண்டும், இதனால் நீங்கள் அவர்களை மேய்க்கவும், வழிநடத்தவும் முடியும். இதனாலேயே, இன்னும் பல கிரியைகள் செய்யப்பட வேண்டும் என்று நான் சொல்கிறேன். பேரழிவுகளை அடுத்து, என்னுடைய நாமம் பரவலாகப் பரவும், நீங்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், உங்களுடைய நியாயமான பங்கை இழப்பீர்கள். உங்களுக்குப் பயமாக இல்லையா? என்னுடைய நாமம் எல்லா மதங்களுக்கும், வாழ்வின் எல்லா சூழ்நிலைகளுக்கும், எல்லா தேசங்களுக்கும் மற்றும் எல்லா பிரிவுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது நெருங்கிய இணைப்பில், ஒழுங்கான வழியில் செய்யப்படுகிற என்னுடைய கிரியையாகும்; இது என்னுடைய ஞானமுள்ள ஏற்பாட்டால் நடக்கிறது. எனது அடிச்சுவடுகளைக் கவனத்துடன் பின்பற்றி, ஒவ்வொரு அடியிலும் நீங்கள் முன்னேற வேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன்.

முந்தைய: அத்தியாயம் 64

அடுத்த: அத்தியாயம் 66

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக