அத்தியாயம் 35

தற்போது, அனைத்து மனுஷர்களும், வெவ்வேறு கோணங்களில் சிட்சைக்குள் நுழைந்துள்ளனர். “நான் மனுஷருடன் கூடவே செல்கிறேன்.” என்று தேவன் சொன்னது போல், இது முற்றிலும் உண்மை, ஆனால் ஜனங்களால் இன்னும் இந்த விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதன் விளைவாக, அவர்கள் செய்த கிரியையின் ஒரு பகுதி தேவையற்றதாகிவிட்டது. “அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நான் அவர்களுக்கு ஆதரவளித்து வழங்குகிறேன். எனது முழு நிர்வாகத் திட்டத்தின் மையக் கதாபாத்திரங்கள் மனுஷர்கள் என்பதால், ‘மனுஷன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நியமிக்கப்பட்டவர்களுக்கு, நான் அதிக வழிகாட்டுதலை வழங்குகிறேன், அதனால் அவர்கள் முழு மனதுடனும் அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு சிறப்பாகவும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்,” அதோடு கூட, “எப்படியாயினும், அவர்களின் மனசாட்சியை நேரடியாக விமரிசிக்க மறுக்கிறேன்; மாறாக, நான் அவர்களை பொறுமையாகவும் முறையாகவும் தொடர்ந்து வழிநடத்துகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர்கள் பலவீனமானவர்களும், எந்தக் கிரியையும் செய்ய இயலாதவர்களுமாய் இருக்கிறார்கள்.” என்று தேவன் சொன்னார். தேவனுடைய எண்ணம் இதுதான்: இறுதியில் இந்த மனுஷர்கள் அனைவரையும் அவர் அழிக்க வேண்டியிருந்தாலும், பூமியில் அவருடைய கிரியை அவருடைய அசல் திட்டத்திற்கு ஏற்றவாறு இன்னும் தொடரும். தேவன் பயனற்ற கிரியையைச் செய்வதில்லை; தேவன் செய்யும் அனைத்தும் நல்லது. பேதுரு சொன்னது போல், “மனுஷர்கள் பொம்மைகளாக இருப்பதைப்போல தேவன் அவர்களுடன் விளையாடியிருந்தாலும், மனுஷர்களுக்குக் குறைகூற என்ன இருக்கும்? அவர்களுக்கு என்ன உரிமை இருக்கும்?” தற்போதைய நாட்களில், தேவன் மனிதகுலத்தின் மூலம் சாதித்துக்கொண்டிருப்பது இதுவல்லவா? மனுஷர்கள் அப்படிப்பட்ட பார்வையை உண்மையில் கொண்டிருக்க முடியுமா? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பேதுருவால் இப்படிப்பட்ட விஷயத்தை எப்படிச் சொல்ல முடிந்தது, இந்த உயர்தொழில்நுட்ப, நவீனமயமான காலகட்டத்தில் வாழும் இன்றைய “பேதுருக்களால்” ஏன் சொல்ல முடியவில்லை? வரலாறு முன்னேறுகிறதா அல்லது பின்நோக்கிச் செல்கிறதா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை, மேலும், விஞ்ஞானம் முன்னோக்கி நகர்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்ற கேள்விக்கு இதுவரை யாராலும் பதிலளிக்க முடியவில்லை. மனிதத்தன்மையில் தேவன் செய்த அனைத்தும் அவர்களை நேர்மறையானவர்களாக ஆக்குவதற்கும் அவர்களின் வாழ்க்கையை முதிர்ச்சியடைய அனுமதிப்பதற்குமே ஆகும். இதை ஜனங்களால் புரிந்து கொள்ள முடியாதா? நீ எதிர்மறையாக இருக்க காரணமான அனைத்தும் உன்னுடைய பலவீனம் ஆகும், இது சாத்தான் தாக்கும் பாதிப்பின் முக்கிய புள்ளியாகும். இதை நீ தெளிவாகப் பார்க்கிறாயா? தேவன் ஏன் இப்படிப் பேசினார்? “நான் மனுக்குலத்திடம் முழு ஆர்வத்துடனும் உண்மையுடனும் மன்றாடுகிறேன். நான் கேட்பதை அவர்கள் உண்மையிலேயே செய்ய இயலாதவர்களாய் இருக்கிறார்களா?” இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? தேவன் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டார்? மனிதத்தன்மையானது பல எதிர்மறை அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது, மேலும் மனுஷர்கள் தடுமாற ஓர் எதிர்மறைக் காரணி போதுமானதாகும். நீ ஒரு பார்வையிட்டு, எதிர்மறையாக இருப்பது எதைக் கொண்டுவரும் என்பதைப் பார்க்கலாம். தேவன் செய்கிற அனைத்தையும், அவர் மனிதகுலத்தைப் பரிபூரணப்படுத்துவதற்காகவே செய்கிறார். இந்த வார்த்தைகளுக்கு மேலும் விளக்கம் தேவையா? இல்லை—நான் பார்க்கிறபடி, தேவையில்லை! மனுஷர்கள் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்படலாம், ஆனால் மனுஷர்கள் எதிர்மறையான தன்மையால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர் என்று கூறுவது மிகச் சரியாக இருக்கும். இது மனிதகுலத்தின் ஒரு வெளிப்பாடாகவும், மனுஷனுடைய மாம்சத்தின் ஒரு கூடுதல் இணைப்பாகவும் இருக்கிறது. எனவே, எல்லா ஜனங்களும் அறியாமலேயே எதிர்மறையிலும், பின்னர் சிட்சையிலும் விழுகின்றனர். இது மனிதகுலத்திற்காக தேவன் ஏற்படுத்திய பொறியாக இருக்கிறது, மேலும் இந்த நேரத்தில்தான் மனுஷர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் எதிர்மறையில் வாழ்வதால், அவர்கள் சிட்சையிலிருந்து தப்பிப்பது கடினம். இந்த நாட்களில் விஷயங்கள் மிகச்சரியாக இப்படித்தானே இருக்கின்றன? ஆனால், “இந்நாட்களிலெல்லாம், சாத்தான் அதிதீவிரமாகத் தலைவிரித்து ஆடுகிறான். எனது கிரியையின் நோக்கத்தைக் காட்டவும், எனது வல்லமையை வெளிப்படுத்தவும் இந்த வாய்ப்பை நான் ஏன் பயன்படுத்தக்கூடாது?” என்ற தேவனுடைய வார்த்தைகளை மனுஷர்களால் எப்படிப் புறக்கணிக்க முடிகிறது. நான் சில நினைவுபடுத்தும் வார்த்தைகளைச் சொல்கிறேன், உடனடியாக, திருச்சபைகளைச் சேர்ந்த ஜனங்கள் சிட்சைக்குள் நுழைகிறார்கள். ஏனென்றால், தேவனுடைய கிரியை செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும், ஜனங்கள் இன்னும் தங்களுக்குள் கணிசமாக மாறியிருக்கவில்லை. அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் மனதில் வெறுமென அலசி ஆராய்கிறார்கள், ஆனால் அவர்களின் நிலை உண்மையில் கொஞ்சம் கூட மாறியிருக்கவில்லை. அவை எதிர்மறையாகவே இருக்கின்றன. இப்படியிருக்க, சிட்சையின் காலம் நெருங்கிவிட்டதாக தேவன் குறிப்பிடும்போது: “நான் தேவனால் முன்குறிக்கப்பட்டிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை, இந்தச் சிட்சையின் கீழ் என்னால் உறுதியாக நிற்க முடியுமா என்றும் எனக்குத் தெரியவில்லை. மனுஷர்களைச் சிட்சிக்க தேவன் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்துவார் என்பதை அறிவது இன்னும் கடினம்” என்று நினைத்து ஜனங்கள் உடனடியாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மனுஷர்கள் அனைவரும் சிட்சைக்கு பயப்படுகிறார்கள், ஆனாலும் அவர்கள் மாற முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே அமைதியாகத் துன்பப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் உறுதியாக நிற்க முடியாது என்றும் பயப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், சிட்சை அவர்களின் மீது வைக்கப்படாமலேயே, வார்த்தைகளின் வேதனை இல்லாமலேயே, மனுஷர்கள் அறியாமலேயே சிட்சைக்குள் நுழைந்துள்ளனர். இதனால், அவர்கள் அனைவரும் பதற்றமடைந்து அமைதியின்றி காணப்படுகின்றனர். இதுவே “அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடை செய்திருக்கிறார்கள்” என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால், மனுஷர்கள் தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்வதில்லை. உண்மையில், தேவன் இந்த ஜனங்கள் மீது மேலும் வார்த்தைகளை வீணடிக்க விரும்பவில்லை; தேவன் அவர்களைக் கையாள்வதில் ஒரு வித்தியாசமான வழியைத் தெரிந்துகொண்டதாகத் தோன்றுகிறது, அது உண்மையான சிட்சைக்கான வழி அல்ல. ஒருவன் கோழிக்குஞ்சைப் பிடிக்கும்போது, அது கோழியா அல்லது சேவலா என்று பார்ப்பதற்கு அதை எடுப்பது போல இருக்கிறது; இது எந்த முக்கியத்துவமும் இல்லாத விஷயமாகத் தோன்றலாம், இருப்பினும், சிறிய கோழிக்குஞ்சு மிகவும் பயந்துவிடும், அதன் உரிமையாளர் அதைக் கொன்று சாப்பிடப் போகிறார் என்பதைப்போல பயந்து, அது தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடும். கோழிக்குஞ்சுக்கு தன்னைப் பற்றிய அறிவு இல்லாததே இதற்குக் காரணமாகும். ஒரு சில இராத்தல் எடை மட்டுமே உள்ள கோழிக்குஞ்சுகளை யாராவது ஏன் கொன்று சாப்பிடுவார்கள்? அது முட்டாள்தனமாக இருக்காதா? இது: “அப்படியானால், ஜனங்கள் ஏன் தொடர்ந்து என்னை விலக்கி வைக்கிறார்கள்? பிடிபட்டவுடனே கொல்லப்பட இருக்கும் கோழிக் குஞ்சுகளைப் போல நடத்துவேன் என்பதற்காகவா?” என்று தேவன் சொன்னது போலவே இருக்கிறது. எனவே, மனுஷீக துன்பங்கள் அனைத்தும் “தன்னலமற்ற” பக்தியாகும், மேலும் அது பயனற்ற விலைக்கிரயம் செலுத்துவது என்று அழைக்கப்படலாம். ஜனங்கள் தங்களை அறியாததால்தான் அவர்கள் பயப்படுகிறார்கள்; இதன் விளைவாக, அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க முடியாது. இது மனுஷகுலத்தின் பலவீனமாகும். “இறுதியில், மனுஷர்கள் தங்களைத் தாங்களே தெரிந்துகொள்ளட்டும். இதுவே எனது இறுதி இலக்கு,” என்று தேவன் சொன்ன வார்த்தைகள் காலாவதியானவையா? உண்மையில் தங்களைத் தாங்களே அறிந்தவர்கள் யார்? ஒருவன் தன்னை அறியவில்லை என்றால், சிட்சிக்கப்படுவதற்கான உரிமையை அவர்களுக்கு எது அளிக்கிறது? உதாரணமாக, ஆட்டுக்குட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். செம்மறி ஆடுகளாக வளரவில்லை என்றால் எப்படி வெட்டுவது? கனி தராத மரத்தை மனுஷர்களால் எப்படி அனுபவிக்க முடியும்? ஒவ்வொருவரும் “தடுப்பூசி” க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் ஜனங்கள் உபவாசித்துப் பட்டினியில் வாடுகின்றனர். இது அவர்கள் விதைத்ததை அறுவடை செய்வதற்கும், தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவிப்பதற்குமான ஓர் எடுத்துக்காட்டேயல்லாமல், தேவன் கொடுமைப்படுத்துகிறார் என்பதற்கோ, மனிதாபிமானமற்ற செயல்களை உடையவராய் இருக்கிறார் என்பதற்கோ எடுத்துக்காட்டு அல்ல. ஒரு நாள், மனுஷர்கள் திடீரென்று தங்களைத் தாங்களே அறிந்துகொண்டு, தேவனுக்கு முன்பாகப் பயந்து நடுங்கினால், தேவன் அவர்களைச் சிட்சிக்கத் தொடங்குவார். இந்த வழியில் மட்டுமே மனுஷர்கள் மனப்பூர்வமாகக் கஷ்டங்களைத் தழுவுவார்கள், இருதயத்திலும் பேச்சிலும் கீழ்ப்படிவார்கள். ஆனால் இன்றய நாளைக் குறித்த நிலை என்ன? குழந்தைகளை உணவு சமைக்க வைப்பதைப் போல, ஜனங்கள் அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு எதிராக சிட்சிக்கப்படுகிறார்கள். இப்படியிருக்கையில், அவர்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? எல்லோரும் நினைக்கிறார்கள், “அட! நான் சிட்சிக்கப்படும் வரை, நான் தலை குனிந்து குற்றத்திற்காக மன்றாடலாம்! என்னால் என்ன செய்ய முடியும்? நான் அழுதாலும், நான் இன்னும் தேவனைத் திருப்திப்படுத்த வேண்டும், அதனால் என்னால் என்ன செய்ய முடியும்? நல்லதோ கெட்டதோ, நான் இப்போது செல்லும் பாதை இதுதான். அப்படியா நல்லது! நான் அதை என் துரதிர்ஷ்டத்திஷ்டமாக ஏற்றுக்கொள்கிறேன்!” ஜனங்கள் நினைப்பது இப்படித்தான் அல்லவா?

தேவன் சொன்னது போல், “மனிதகுலம் நன்றாக நடந்து கொள்கிறது; யாரும் என்னை எதிர்க்கத் துணிவதில்லை. அனைவரும் எனது வழிகாட்டுதலின் கீழ், நான் நியமித்திருக்கிற ‘வேலையைச்’ செய்கிறார்கள்.” ஒரு தனி மனுஷன் கூட விருப்பத்துடன் சிட்சிக்கப்படவில்லை, மேலும், இந்தச் சிட்சை தேவனிடமிருந்து வருகிறது, ஏனென்றால், மனுஷர்கள் அனைவரும் கொந்தளிப்பிலும் குழப்பத்திலும் வாழ்வதை விட இளைப்பாறுகிற நேரத்தில் வாழ விரும்புகிறார்கள் என்பதைக் காட்ட இது போதுமானதாகும். “மரணத்தைக் கண்டு அஞ்சாதவன் யார்? ஜனங்கள் உண்மையிலேயே தங்கள் வாழ்க்கையைத் துணிவுடன் ஆபத்தில் வைக்க முடியுமா?” என்று தேவன் சொன்னார். இது முற்றிலும் சரிதான்; கோபம் அல்லது விரக்தியால் நசுக்கப்படும்போது தவிர, நிச்சயமாக, எல்லோரும் மரிப்பதற்கு பயப்படுகிறார்கள். இது மனிதகுலத்தின் சாராம்சமாகும், இதைச் சரிசெய்வது மிகவும் கடினமானதாகும். இன்று, துல்லியமாக இந்த இக்கட்டான நிலையைத் தீர்க்க தேவன் வந்திருக்கிறார். மனுஷர்கள் அனைவரும் பெலனற்றவர்கள், எனவே தேவன் அவர்கள் மத்தியில் ஒரு சிறப்பு மருத்துவமனையை நிறுவியுள்ளார், அங்கு அவர்கள் இந்த நோயிலிருந்து குணமடையலாம். இந்த நோயின் கண்ணிகளிலிருந்து ஜனங்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள முடியாது, அதனால்தான், அவர்களின் வாய் புண்ணாகி அவர்களின் வயிறு வீங்குகிற அளவிற்கு அவர்கள் அனைவரும் மிகவும் கவலைப்படுகிறார்கள். காலப்போக்கில், அவர்களின் அடிவயிற்றில் வாயு அளவு அதிகரிக்கிறது, இதன் விளைவாக அழுத்தம் அதிகரிக்கிறது, இறுதியாக, அவர்களின் வயிறு சிதைந்து, அவர்கள் அனைவரும் மரித்துவிடுகின்றனர். எனவே, தேவன் இந்தக் கடுமையான மனித நோயைக் குணப்படுத்தியிருப்பார், ஏனென்றால், எல்லோரும் மரித்துவிடுவார்கள். இதுவே மனுஷனுடைய நிலைமைக்கு மருந்தல்லவா? தேவன் வேண்டுமென்றே இந்தக் கிரியையைச் செய்ய வந்திருக்கிறார். ஜனங்கள் மரணத்தைக் கண்டு பெரிதும் பயப்படுவதால், தேவனே மனுஷர்களுடன் சேர்ந்து இந்தக் கிரியையைச் செய்ய வந்துள்ளார்; அவர்களுக்கு தைரியம் மிகக் குறைவாக இருப்பதால், அவர் முதலில் அவர்களுக்குக் காணும்படியாக ஒரு காட்சியைக் கொடுத்திருக்கிறார். தேவனுடைய முன்னுதாரணத்தைப் பார்த்த பிறகுதான் ஜனங்கள் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறார்கள். இந்தக் காரணத்தினால்தான், “எனது கிரியையை யாராலும் நிறைவேற்ற முடியாததால், சாத்தானுடன் வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் ஈடுபட நான் நேரில் போர்க்களத்தில் கால் பதித்துள்ளேன்” என்று தேவன் கூறினார். இது ஒரு கடைசி யுத்தம், ஆகவே, ஒன்று மீன் இறந்துவிடும் அல்லது வலை கிழிந்துவிடும். இது அந்த அளவிற்கு நிச்சயமானது. இறுதியில் ஆவி வெற்றி பெறும் என்பதால், மாம்சமானது கட்டாயமாக மரணத்தால் வாரிக்கொள்ளப்பட வேண்டும். இதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? இருப்பினும், அதிக உணர்ச்சிவசப்பட வேண்டாம். மேலே உள்ள வாக்கியம் எளிமையானதாக இருக்கலாம், அல்லது சிக்கலானதாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், மனுஷர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது—அது அந்த அளவிற்கு நிச்சயமானதாகும். துன்பத்தில், மனுஷர்கள் தேவனுடைய வார்த்தையின் சுத்திகரிப்பை ஏற்றுக்கொள்ளலாம், அதை ஒருவர் தங்கள் அதிர்ஷ்டம் என்று அழைக்கலாம் அல்லது ஒருவர் தங்கள் துரதிர்ஷ்டம் என்றும் அழைக்கலாம். ஆயினும்கூட, எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய நோக்கம் சரியானது என்பதையும்—தங்கள் சொந்த நலனுக்காக எப்போதும் திட்டங்களையும் ஏற்பாடுகளையும் வகுக்கிற மனுஷர்களின் நோக்கங்களைப் போல அல்ல என்பதையும் நான் இன்னும் நினைவூட்டுவேன். இது மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்; முடிவில்லாத ஆழ்ந்த சிந்தனையில் விழுந்துபோக வேண்டாம். இது துல்லியமாக மனுஷர்களின் பலவீனம் இல்லையா? அவர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறார்கள்; தேவன் மீது மிகுந்த அன்பைக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அவர்கள் தங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். அவர் மனுஷன் மீது எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறார், எனவே அவர் எப்போதும் அவர்களிடம் கோரிக்கைகளை வைக்கிறார். ஜனங்கள் தங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக தேவன் அவர்கள் தம்மை நேசிக்க வேண்டும் என்று கோருகிறார், மேலும் அவர்களுக்கான அவரது கோரிக்கைகளும் அவ்வளவு கடுமையானதாகிறது. தேவன் வேண்டுமென்றே ஜனங்களைச் சீண்டுவது போல் உள்ளது. ஜனங்கள் அவரை உண்மையாக நேசித்தால், அவர் அவர்களை அங்கீகரிப்பதில்லை என்பது போல் தெரிகிறது. இதன் காரணமாக, ஜனங்கள் தலையைச் சொறிந்துகொண்டு, ஆழ்ந்த சிந்தனையில் விழுகின்றனர். இது ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைப் பற்றிய சுருக்கமான குறிப்புகளுடன் கூடிய, தேவனுடைய மனநிலையின் வரையறையாகும். இதுவே தேவனுடைய சித்தமாகும். இது ஜனங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தேவனுடைய கோரிக்கையாக இருக்கிறது, மேலும் இது கட்டாயமானதாகும். இது ஒரு புதிய கிரியை, அதை முறியடித்து புதிய முன்னேற்றத்தை அடைய, ஜனங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இது உனக்குப் புரிகிறதா? இந்த விஷயம் குறித்து நான் மேலும் சொல்ல வேண்டிய தேவை உனக்கு இருக்கிறதா?

முந்தைய சகாப்தங்களில், தேவன் கூறினார், “ஒரு நபர் கூட என்னால் தெரிந்துகொள்ளப்படவில்லை; எனது மௌன கடிதத்தால் அனைவரும் நிராகரிக்கப்பட்டனர். ஏனென்றால், கடந்த காலத்தில் ஜனங்கள் எனக்குப் பிரத்தியேகமாக ஊழியம் செய்யவில்லை, அதனால் பதிலுக்கு, நான் அவர்களைப் பிரத்தியேகமாக நேசிக்கவில்லை. அவர்கள் சாத்தானின் ‘பரிசுகளை’ எடுத்துக்கொண்டு திரும்பி வந்து என்னிடம் கொடுத்தார்கள். இது எனக்கு எதிரான அவமதிப்பு அல்லவா?” இந்த வார்த்தைகளை எவ்வாறு விளக்குவது? இது: “எல்லா வரங்களும் சாத்தானிடமிருந்து தோன்றுகின்றன” என்று தேவன் கூறுவதைப்போல இருக்கிறது. கடந்த தலைமுறையைச் சேர்ந்த அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் தங்கள் கிரியையைச் செய்ய வரங்களை முழுவதுமாக நம்பியிருந்தனர், மேலும், காலங்காலமாக, தேவன் தம் கிரியையை நடப்பிக்க அவர்களின் வரங்களைப் பயன்படுத்தினார். இதனாலேயே வரங்களுடன் கூடிய ஜனங்களின் ஊழியம் சாத்தானிடமிருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும், தேவனுடைய ஞானத்தின் நிமித்தமாக, “நான் சாத்தானின் சூழ்ச்சியை என் பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்துகிறேன்.” இவ்வாறு, வரங்களைப் பெற்றிருக்கிற ஜனங்களின் ஊழியத்தை தேவன் “சாத்தானிடமிருந்து வருகிற வரங்கள்” என்று அழைத்திருக்கிறார், மேலும் அவர்கள் சாத்தானுக்குச் சொந்தமானவர்கள் என்பதால் மட்டுமே தேவன் இந்தச் செயலை “அவமதிப்பு” என்று அழைக்கிறார். இது மனுஷர்களுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டு அல்ல; மாறாக, இது நன்கு நிரூபிக்கப்பட்ட மற்றும் பொருத்தமான விளக்கமாகும். இவ்வாறு, “நான் என் வெறுப்பை வெளிப்படுத்தவில்லை; மாறாக, எனது நிர்வாகத்தின் பொருட்களில் இந்தப் ‘பரிசுகளை’ சேர்ப்பதன் மூலம் அவர்களின் திட்டத்தை எனது சொந்தப் பயன்பாட்டிற்கு மாற்றினேன். பின்னர், அவை இயந்திரம் மூலம் செயலாக்கப்பட்டவுடன், நான் உள்ளே இருக்கும் கழிவை எரித்துவிடுவேன்.” இதுவே தேவனுடைய கிரியையில் மிகவும் அற்புதமானது. இந்தக் கருத்து மனுஷீகக் கருத்துக்களுடன் மிகக் குறைந்த அளவிலேயே ஒத்துப்போகிறது, ஏனென்றால், ராஜாக்களாக ஆட்சி செய்பவர்கள் வரங்களைக் கொண்டவர்கள் அல்ல, அல்லது அவர்கள் தேவன் நேசிக்கும் வரம் பெற்றிராத ஜனங்கள் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். காணக்கூடியதைப் போல, விட்னஸ் லீ மற்றும் வாட்ச்மேன் நீ ஆகியோரின் கருத்துக்கள் அல்லது நம்பிக்கைகள் அனைத்தும் சாம்பலாக மாறிவிட்டன, வரங்களைப் பெற்றிருக்கும் இன்றைய ஜனங்களுக்கும் இதுவே உண்மையாகும். இப்போது தேவன் இந்தக் கிரியையைத் தொடங்கியுள்ளார், மேலும் அவர் தமது கிரியைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாக ஊழியம் செய்யும் மனுஷர்களில் பரிசுத்த ஆவியானவரின் அனைத்து கிரியைகளையும் படிப்படியாகத் திரும்பப் பெறுகிறார். தேவனுடைய கிரியை முழுமையாக முடிவடைந்ததும், இந்த ஜனங்கள் அனைவரும் தங்கள் சரியான இடத்திற்குத் திரும்புவார்கள். இருப்பினும், என் வார்த்தைகளின் நிமித்தமாக மனுஷர்கள் பொறுப்பற்ற முறையில் செயல்பட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தேவனுடைய கிரியையின் படிகளுக்கு ஏற்ப நீங்கள் இயல்பான போக்கைப் பின்பற்ற வேண்டும், அதைப்போலவே அதைத் தடை செய்யவும் கூடாது. இந்த விஷயம் உங்களுக்குப் புரிகிறதா? ஏனெனில், இவையே தேவனுடைய கிரியையின் படிகள் மற்றும் வழிமுறைகளாக இருக்கின்றன. தேவன் இந்தப் “பரிசுகளை” “முடிக்கப்பட்டத் தயாரிப்புகளாக” “செயல்படுத்தும்” போது, அவருடைய அனைத்து நோக்கங்களும் தெளிவாகிவிடும், மேலும் அவருக்கு ஊழியம் செய்யும் பரிசுகள் அனைத்தும் அகற்றப்படும்; இருப்பினும், தேவன் அனுபவிப்பதற்காக முழுமையடைந்த தயாரிப்புகளை வைத்திருப்பார், மனுஷர்கள் வழங்கும் ஏராளமான பரிசுகளை அல்ல. உனக்கு இது புரிகிறதா? தேவன் விரும்புவது முடிக்கப்பட்ட பொருட்களையே தவிர, மனுஷர்கள் அவருக்கு அளிக்கும் ஏராளமானப் பரிசுகளை அல்ல. ஒவ்வொருவரும் தங்களுக்குரிய இடத்தைப் பெற்றவுடன், அதாவது தேவன் தனது உண்மையான நிலைக்குத் திரும்பியதும், பிசாசும் அதன் சொந்த இருக்கையில் அமர்ந்ததும், தேவதூதர்களும் கூட விதிவிலக்கு இல்லாமல் அமர்ந்ததும்—அப்போதுதான் தேவனுடைய முகத்தில் மகிழ்ச்சியான புன்னகை தோன்றும். ஏனெனில், அவரது நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டு, அவரது இலக்கு அடையப்படும். தேவன் இனி “பிசாசிடமிருந்து” “உதவியை” நாட மாட்டார், ஏனென்றால், தேவனுடைய நோக்கங்கள் மனுஷர்களுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும், மேலும் ஒருபோதும் மனுஷர்களுக்கு அவை மறுபடியும் தெரிவிக்கப்படாது. இந்த நேரத்தில், ஜனங்களின் மாம்சீக சரீரங்கள் அவர்களின் ஆவிகளுடன் ஒன்றாக மாறும். இதைத்தான் தேவன் மனுஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார்; இதுவே ஆவி, ஆத்துமா மற்றும் சரீரமானது இறுதியாக சென்றடையும் இடமாகும். இது “மனிதத்தன்மை” என்பதன் உண்மையான அர்த்தத்தின் சுருக்கமாகும். இதை விரிவாக ஆராய வேண்டிய அவசியமில்லை; இதைப் பற்றிய ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொண்டால் போதுமானது. உங்களுக்குப் புரிகிறதா?

முந்தைய: அத்தியாயம் 33

அடுத்த: அத்தியாயம் 36

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக